பகுதி – 29.
காரை சாலையில் ஓட்டிக் கொண்டிருந்த கார்முகில், மனைவி சொன்னதைக் கேட்டு காரை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தி விட்டான். அவள் அப்பொழுதும் அவன் முகம் பாராமல் அமர்ந்திருக்க, பின்னால் வரும் வாகனங்கள் ஹாரனை ஒலிக்கவிட, காரைக் கிளப்பிச் சென்றான்.
அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றவன், “என்ன சொன்ன? மறுபடியும் சொல்லு?” தங்கள் அறைக்குள் அவளை அழைத்துச் சென்றவன் கேட்டான்.
“நான்தான் எதுக்குமே லாயக்கு இல்லாமல் இருக்கேன்னு சொன்னேன். ஏன்? இல்லைன்னு சொல்லுவீங்களா? என்னாலதானே உங்களை…” என்றவள் முகத்தை மூடிக்கொண்டு அழ, தவித்துப் போனான்.
“லூசா நீ? இங்கே பார்… இப்படி…” என்றவன் தன்னை உணர்த்தி இன்னும் என்னென்னவோ பேச, முகத்தை தன் கரத்தால் மூடிக் கொண்டாள். அவனது பேச்சும் செய்கையும் அவளை என்னவோ செய்தது.
“ஐயோ… ஆப்பிரிக்கா க*த… என்னடா பண்ற?” அவளது அழுகை எங்கே ஓடிப் போனது எனத் தெரியாமல் ஓடி ஒளிந்து கொள்ள, அவன் செய்கையில் முழுதாக வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது. அவனைப் பார்க்கவே முடியாமல் முகத்தை மூடினாள்.
“ஏலியன்… என்னைப் பாரு… ம்ச்… பாரேன்…” அவன் அவள் அருகே அமர, “ம்ஹும்… மாட்டேன்…” மறுத்தாலும், கண்கள் கள்ளத்தனம் செய்யவே செய்தது.
“நான் ‘இப்படி’ இருந்தால் நீயும் என்னதான் செய்வ? அதென்னவோ உன்னை கஷ்டப்படுத்தி எதையும் சாதிச்சுக்க நான் தயாரா இல்லை, அதனாலதான் அப்படி ஆகுது. அதுக்கு நீ உன்னையே குற்றம் சொல்லிப்பியா?” அவன் நியாயம் கேட்க, அவன் நெஞ்சில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
தேகம் ஒரு மாதிரி சிலிர்த்து அடங்க, “முதல்ல நீங்க உங்களை… ச்சீ… கொஞ்சம் கூட உங்களுக்கு வெட்கமே இல்லையா? யூ… யூ…” தன் அருகே இருந்தவனைக் குத்தினாள். முகத்தை இன்னும் அழுத்தமாக அவன் நெஞ்சில் புதைத்தாள்.
“எனக்கு எதுக்கு வெட்கம் எல்லாம்? உன்னை இப்படி வெட்கப்படுத்திப் பார்க்கத்தான் பிடிச்சிருக்கு” என்றவன் சின்னக் குரலில் கிசுகிசுக்க, அவளுக்கு என்னென்னவோ ஆனது.
“முகி… முகி…” அவள் ஒரு மாதிரி தவிக்க, அவள் வெட்கத்தை ரசித்தவாறே, அவள் வெட்கத்தை திருடினான். அவன் செய்கையில் அவளது கரங்கள் முகத்தில் இருந்து விடைபெற, அவனிடம் அடைக்கலமாகி இருந்தது.
அவள் செவிகளுக்குள் அவன் தன் ஆசையை, தாபத்தைச் சொல்ல, அவன் கேட்டதைச் செய்ய முடிவெடுத்தாள். அவன் இதழ்கள் அவளை விழுங்கத் துவங்கி இருக்க, அவளோ தன்னை மறக்கத் துவங்கி இருந்தாள்.
அவர்கள் தங்களை மறந்த நிலையில் இருக்க, சுமித்ராவின் அலைபேசி இசைத்து அவர்களைக் கலைத்தது. “ம்ச்ச்… இந்த நேரம் யாரு…?” சலித்துக் கொண்டவள், அவனை விட்டு விலக மறுத்தாள்.
“நேரம்கெட்ட நேரத்தில் ஆரம்பிச்சது நான்… நீ எதுக்கு கூப்பிடறவங்க மேலே கோபப்படற? முதல்ல ஃபோனை எடுத்துப் பேசு” என்றவன் அவள் அலைபேசியை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
அதை வாங்கியவள், “அம்மா…” என்றவாறு அழைப்பை ஏற்றாள்.
“குழலிக்கு குழந்தை பிறந்ததை நீ சொல்லி இருக்கணும். யார் மூலமாகவோ எங்களுக்குத் தெரிய வருது. என்ன சுமி இது?” தாய் கேட்க, தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
“சாரிம்மா… இங்கே இருந்த பரபரப்பில் நான் அதை சுத்தமா மறந்துட்டேன். அண்ணிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும்மா” அவள் உற்சாகமாகச் சொல்ல, அந்த சந்தோஷம் அவரையும் தொற்றிக் கொண்டது.
பிறகு அனிதா செல்வத்தோடு சென்று குழந்தையைப் பார்த்துவிட்டு, மகளையும் கொஞ்சிவிட்டு வீட்டுக்குப் போனார். செல்லும் முன்னர், மகளை தங்கள் வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்துவிட்டு சென்றார்.
“ஒரு ரெண்டு நாள் கழிச்சு வர்றேன்ம்மா…” அவள் சொல்ல, அதற்கு மேலே அவர் எதுவும் சொல்லவில்லை. அனிதாவுக்கோ மகள் இன்னும் எந்த நல்ல செய்தியும் சொல்லவில்லையே என மனதுக்கு வருத்தமாக இருந்தது.
சுபிதாவுக்கு ஆறு வருடங்களாக பிள்ளை இருக்கவில்லை. எத்தனையோ மருத்துவர்களைச் சென்று பார்த்த பிறகும் அவர்கள் சொன்னது ஒன்றுதான். ‘அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை, குழந்தை பிறக்கும்’ அந்த நம்பிக்கையில் மட்டுமே காத்திருந்தார்கள்.
எத்தனையோ விரதங்கள், பூஜை என ஒரு குழந்தைக்கென அவர்கள் ஏங்கிய ஏக்கம் பெரிது என்பதால் அனிதாவுக்கு கவலையே. தாயின் கவலை சுமித்ராவுக்கும் புரிய, கார்முகிலிடம் வந்து கண் கலங்கிவிட்டாள்.
“என்னால்தானே உனக்கு இந்த கஷ்டம், வேற யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தால்… இந்த நேரத்துக்கு உனக்குன்னு ஒரு குழந்தை வந்திருக்கும் தானே?” அவன் கேட்டு முடிக்கும் முன்பு அவனை அறைந்து தள்ளிவிட்டாள்.
“உங்களுக்கு என்ன பைத்தியமா? எவனையோ கல்யாணம் பண்ணி, குழந்தை வரைக்கும் என்னை வச்சு யோசிக்க உங்களால் எப்படி முடியுது? ச்சீ… எனக்கு நினைக்கவே அசிங்கமா, அருவருப்பா இருக்கு.
“எனக்கு மனசுக்கு கஷ்டமா இருந்தால் அதை நான் உங்ககிட்டே சொல்லாமல், வேற யார்கிட்டேதான் சொல்லட்டும்? எனக்கு ஆறுதலா சொல்லாமல், இப்படி பேசறீங்க? போங்க நீங்க… என்கிட்டே பேசாதீங்க” என்றவள் அடுத்து வந்த நாட்களில் அவனை விலக்கி வைத்து விரதம் காத்தாள்.
அவளது கோபத்தை குறைக்க வேண்டியே, குழலி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த அன்று, அவளை அழைத்துக் கொண்டு அவள் வீட்டுக்குச் சென்றான். அங்கேயும் தாயோடு செல்லம் கொஞ்சிக் கொண்டு, தகப்பனோடு சீராடிக் கொண்டு அவனை ஏங்க வைத்தாள்.
“அத்த… எப்படி அத்த என்னை இவளுக்கு கணவனா உங்களால் யோசிக்க முடிந்தது? நீங்க இவகிட்டே இந்த கருவாயன் உனக்கு வேண்டாம்னு சொல்லலையா?” அவள் முகத்தை திருப்பிக் கொண்டே இருக்க, அவளை பேச வைக்க வேண்டியே கேட்டான்.
“அம்மா, நீங்க எதுவுமே சொல்லாதீங்க. முகி… என்கிட்டே நீ அடிதான் வாங்கப் போற?” தாயைத் தடுத்தவள், அவனிடம் பாய்ந்தாள்.
“என்னை நீ அடிச்சதே இல்லையா?” அவன் தன் இரு கன்னத்தையும் பொத்திப் பிடித்தவாறு கேட்டு வைக்க, நிஜத்தில் மிரண்டு போனாள். அவள் அவனிடம் கண்களை உருட்டி மிரட்ட, அனிதாவும் செல்வமும் மகளைத்தான் பார்த்தார்கள்.
“ஐயோ அம்மா… அதெல்லாம் சும்மா…” அவளுக்குப் பொய் சொல்ல வாராது என்பதால், சின்னக் குரலில் தலை கவிழ்ந்தவாறு முனகினாள். அப்படியும் அவனை ஓரவிழியில் முறைக்க மறக்கவில்லை.
அதைப் பார்த்தவன், “இப்போகூட என்னை முறைக்கறா அத்த…” அவன் போட்டுக் கொடுக்க, காலை உதறியவாறு அங்கே இருந்து எழுந்து சென்றுவிட்டாள். அவள் அப்படிச் செய்வாள் என்பதை அவன் எதிர்பார்க்கவே இல்லை.
“அவ வெளிப் பார்வைக்கு எப்படி அழகா இருக்காளோ, அதைவிட அவ மனசு ரொம்பவே அழகானது மாப்ள. கல்யாணம்னு சொன்ன உடனேயே அவ சொன்னது ஒன்றே ஒன்றுதான்.
‘எனக்கு நீங்க எப்படியோ, அப்படி அவனுக்கு நான் இருக்கணும். நீங்க என்னை நேசிக்கற மாதிரி, நான் உங்களை நேசிக்கற மாதிரி எங்களுக்குள் அன்பு இருக்கணும். என்னோட ஆசை அவ்வளவுதான்…’ அவள் சொன்னதை இவர்கள் அப்படியே சொல்ல, அவன் எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை.
“அத்த…” அவன் உருகிப் போய் அழைக்க,
“அது மட்டும் இல்லை, ‘அவன் வாழ்க்கையில் நான் முக்கியமானவளா இருக்கணும்’ன்னு அவ சொன்னப்போ, எங்களுக்கு பதில் பேசவே முடியலை. அவ குழந்தையா இருக்கும்போது, அவ தனியா உணர்ந்த அந்த ஒரு வாரப் பிரிவு அவளை பலமா உள்ளுக்குள் தாக்கி இருக்குன்னு எனக்குப் புரிந்தது.
“பாலான்னு ஒருத்தன்… அவளை விரும்பறேன்னு சொல்லி, இவளை கல்யாணம் பண்ணிக்க அவ்வளவு பிரஷ்ஷர் போட்டான். இவ அவனை திரும்பிக் கூட பார்க்கலை. ஆனா உன்னைப்பற்றி அவங்க அப்பா சொன்னப்போ, ஒரு சின்ன மறுப்பு கூட அவ சொல்லலை.
“அவருக்கு நான் அவரை விட அழகா இருக்கேன்னு காம்ப்ளக்ஸ் எதுவும் வந்துடக் கூடாது. அது மட்டும்தான் என்னோட கன்செர்ன்’னு சொன்னப்போ… எங்களுக்கு எல்லாம் சந்தோஷமாகத்தான் இருந்தது. உன்னை எங்களுக்கு இன்றைக்கு நேற்றா தெரியும்?” அனிதா கேட்க, தன்னவளிடன் அன்பில் திளைத்துதான் அமர்ந்திருந்தான்.
அவளைப்பற்றி கேட்க, கேட்க… அவள்மேல் நேசம் இன்னும் பெருகிற்று. அதே நேரம்… தங்களுக்குள் இருக்கும் அந்தரங்க பிரச்னையை எப்படி தீர்ப்பது என அவனுக்கு எதுவும் புரியவே இல்லை.
அவளோடான ஊடலில் ஒன்று இரண்டு நாள், அவளது மாதாந்திர பிரச்சனை இடையில் வந்து போக என அவனது முயற்சிக்கு தடை ஏற்பட்டது. இந்த நேரத்தில்தான் குழலியின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவும் வந்தது.
அதற்கு முந்தின நாள் அங்கே வந்த குமார்… என்னென்ன செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தான். அதே நேரம்… மாடிப்படிக்கு அருகில் அங்கே இருந்த சின்ன குளவிக் கூடு அவன் கண்ணில் பட்டுவிட்டது.
“என் பொண்டாட்டியும், குழந்தையும் இருக்கற வீட்டுக்குள் குளவிக் கூடு இருக்கு. தெரியாமல் அது அவர்களை கொட்டிவிட்டால், என்ன ஆகறது?” என குதிக்க, பெரியவர்கள் அதைப் பார்ப்பதாகச் சொன்னார்கள்.
‘மறுநாள் அது அங்கே இருக்கவே கூடாது’ என அவன் உறுதியாகச் சொல்லிச் செல்ல, இருக்கும் வேலைகளை கவனிப்பதா? அதை எடுப்பதா? எப்படி எடுப்பது? எனத் தெரியாத நிலைதான்.
“அத்த… நான் பார்த்துக்கறேன்…” என சுமித்ரா சொல்ல, சுதா பதறிப் போனார்.
“அம்மாடி, அதை ஏதாவது ஆள் வச்சு எடுத்துக்கலாம். நீ எதுவும் செய்யாதே” அவள் ஏணியை தூக்கிக் கொள்ள முயல அவளைத் தடுத்தார்.
“அந்த குளவி எல்லாம் ரொம்ப பாய்சன் கிடையாது அத்த. அந்த கூட்டை நெருப்பால் சின்னதா பொசுக்கிட்டு, அதில் ஹிட் அடிச்சு விட்டா மறுபடியும் அதில் கூடு கட்டாது. நான் பார்த்து பதமா ஏறிக்கறேன்…” சுதாவும் இரண்டு மூன்றுபேரை தொடர்பு கொண்டு அழைத்தும் யாரும் வராமல் போகவே அவளே களத்தில் இறங்கிவிட்டாள்.
ஏணியைக் கொண்டுபோய் அங்கே வைத்துவிட்டு வந்தவள், “கொஞ்சம் இருட்டின பிறகு போனால்தான் அந்த குளவியை எல்லாம் அழிக்க முடியும். இல்லைன்னா எல்லாம் தப்பிச்சு போய்ட்டு, மறுபடியும் அதே இடத்தில் கூடு கட்ட ட்ரை பண்ணும் அத்த. அதனால் இப்போ வந்துட்டேன்” அவள் சொல்ல, சுதா நிம்மதியாக மூச்சு விட்டார்.
“நீ எதுவுமே செய்ய வேண்டாம்மா… ஏணியில் ஏறி வைக்காதே” அவளை எச்சரித்தார்.
நேரம் மாலை கடந்து இரவை நெருங்கவே, அவர்களிடம் சொல்லாமலே மாடிக்குச் சென்றுவிட்டாள். அந்த நேரம் குழலி குழந்தைக்கு பசியாற்றப் போயிருக்க, சுதா உள்ளே ஏதோ வேலையாக இருந்தார்.
சுமித்ரா அந்த ஏணியில் ஏறி, ஹிட்டை ஸ்ப்ரே செய்து, நெருப்பை பற்ற வைக்க, நெருப்பு குப்பென பற்றிக் கொண்டது. ஒரு நொடி ஏணியில் இருந்து அவள் தடுமாறி விழப் போன அந்த நொடி, சரியாக அவளைப் பிடித்தான் கார்முகில்.
“முகி… ஹப்பா… நல்ல வேளை…” அவள் மூச்சுவிட, அவனோ அவளை கோபமாக முறைத்தான்.
“நான் வந்த பிறகு, என்கிட்டே சொல்லி இந்த வேலை எல்லாம் செய்யச் சொல்லக் கூடாதா? இப்போ நான் வராமல் போயிருந்தால் என்ன ஆகி இருக்கும்?” நிஜத்தில் அவன் பயந்தே போனான். அவளுமே இப்படி ஆகும் என எதிர்பாராமல் மொத்தமாக பதறித்தான் போயிருந்தாள்.
“நீ இறங்கு… நான் பார்க்கறேன்” அவன் சொல்ல,
“இல்ல… இல்ல… நானே முடிச்சுடறேன்… இப்போ நெருப்பு எப்படி பத்திக்கும்னு எனக்கு ஒரு ஐடியா கிடைச்சுடுச்சு” அவள் சொல்ல, அதற்கு மேலே அவளிடம் அவனால போராட முடியவில்லை.
“சரி செய்… பார்த்து… பத்திரம்” என்றவன் ஏணியில் இருந்து கொஞ்சம் இறங்கி, ஏணியின் காலை கெட்டியாக பற்றிக் கொண்டான். அவளும் இரண்டு படி இறங்கியவள், தன் வேலையைத் தொடர, அவளைப் பார்த்தவன் பார்த்தபடி இருந்தான்.
அவள் அணிந்திருந்த பைஜாமா சட்டை லூசாக இருக்கவே, அவள் கையைத் தூக்கி வேலையில் ஈடுபட, அவள் தேகத்தை அவன் ரசித்தான். நேரம் செல்லச் செல்ல, அவன் பார்வையும் மாறிப் போக, அவள் எப்பொழுது ஏணியில் இருந்து இறங்குவாள் என தவித்துப் போனான்.
அவளோ வேலையில் முழு கவனமாக இருந்தவள், “ஹப்பாடா… சுத்தமா சோலியை முடிச்சாச்சு. கீழே இருக்கும் குப்பையை மட்டும் கிளீன் பண்ணச் சொன்னா வேலை முடிஞ்சது” என்றாள்.
தான் சொன்னதற்கு அவனிடம் பதில் இல்லாமல் போகவே, அவனைப் பார்த்தவள், அவன் பார்வை சென்ற இடம் கண்டு சற்று தடுமாறிப் போனாள்.
“முதல்ல ஏணியில் இருந்து இறங்கு…” அவன் இமைக்காமல் அவளைப் பார்த்தவாறே சொல்ல, அவன் நிலை அவளுக்குப் புரிந்தது.
ஏணியில் இருந்து இறங்கியவள், “முகி…” என அழைத்து முடிக்கும் முன்னர், அவள் இதழ்களை சிறை செய்து இருந்தான். அவன் கரங்களோ அவள் இரவு உடையின் சட்டன் பட்டன்களை அத்தனை வேகமாக விடுவிக்க, அவன் கரத்தை அடக்க முடியாமல் மொத்தமாக சிவந்தாள்.
அவன் பார்வை பதிந்த இடங்களை அவன் இதழ்கள் அத்தனை வேகமாக கொள்ளையிடத் துவங்க, அவள் அணிந்திருந்த சட்டையோ மொத்தமாக அவன்வசம் ஆகி இருந்தது. அங்கே அவள் வேலை செய்யப் போகிறேன் எனச் சொல்லி இருந்ததால், மாடியில் அந்த நேரம் விளக்கு போட்டிருக்கவில்லை.
அந்த இருள் அவனுக்குச் சாதகமாகிப் போக, அவள் தேகத்தில் பல்த்தடம் பதிய போராடத் துவங்கி இருந்தான். தன் நிலை அவளுக்கு பெரும் பதட்டத்தை அளிக்க, “முகி… மொட்டை மாடிக்குப் போற வழியில் நிக்கறோம்… இங்கே வச்சு என்ன வேலை பார்க்கறீங்க? ம்மா… கடிக்காதீங்க…” உணர்வுகள் கொந்தளிக்க, அவனைக் கலைக்க முயன்றாள்.
ஆனால் அவனோ முழு வேகத்தில் இருக்க, திருமணத்துக்கு முன்னர் ஒரு நாள் அவன் புயல் வேகத்தை உணர்ந்தாளே, அதே வேகத்தை அவனிடம் கண்டாள். அடுத்த நிமிடம் அவளை அருகே இருந்த விருந்தினர் அறைக்குள் இடையில் கை கோர்த்து தூக்கிச் சென்றவன், அத்தனை வேகமாக இருந்தான்.
“ஏலியன்… என்னை தவிக்க விட்டுட்ட… சுத்தமா முடியலை” முத்தங்களுக்கு இடையில் அவன் பிதற்ற, அறைக்குள் வந்துவிட்ட நிம்மதியில் அவனை அவன் போக்கில் விட்டுவிட்டாள். அவன் பல்த்தடம் வலித்தது. அவன் வேகம் தேகத்தில் அனலை மூட்டியது. அவன் முத்தங்கள் இனித்தது.
அவன் தன் தடைகள் கடந்து… வெற்று தேகங்களின் உரசலில் தேகத்துக்குள் நெருப்பு பற்றிக்கொண்ட உணர்வு. அவனிடம் அவள் இதுவரைக் கண்டிராத வேகத்தில் அவன் இருக்க, அவளை முத்தமிட்டுக் கொண்டாடி திளைத்தவன்… அவள் எதிர்பாராத நொடியில் அவளுக்கு நெருக்கமாக மாறினான்.
மெல்லியதாக அவள் அலறிவிட, “ஏலியன்…” என்றவன் அவளது அலறலில் திகைத்து விலக முயல, அவனை விலக விடாமல் இழுத்து இறுக கட்டிக் கொண்டாள். அவன் முகம் முழுக்க முத்தமிட்டவள், “நீங்க எனக்*** இருக்கீங்க முகி…” அவள் சொல்ல, அவன் முகத்திலும் ஒரு பரவசம்.
அதையும் மீறி அவள் கஷ்டப்படுவது புரிய, “ஏலியன் கஷ்டமா இருக்கா? விலகிடவா?” அவள் உதட்டோடு உதட்டை உரசியவாறு கேட்டு வைத்தான்.
அவளோ, ‘எங்கே விலகித்தான் பாரேன்’ என ஒரு பார்வையை பாவனையைக் கொடுக்க, சில பல நிமிடங்கள் அவளைத் தேற்றி, அவள் தேகத்தில் முட்டி என அவளைச் சற்று இலகுவாக்கியவன், தன் செய்கையைத் துவங்கினான்.
முதலில் மொத்தமாக திணறிப் போனவள், நேரம் செல்லச் செல்ல அவன் வேகத்தில் தேகம் அதிர, மனம் இறகாக… அவனோடான நெருக்கம் தகிக்க… அவனை முத்தமிட்டுக் கொண்டாடினாள். அவன் வெற்று முதுகில் தன் நகக்கண்களைப் பதிக்க, அவனோ நிதானம் இழக்க அவளோடு முழு மூச்சாக கலந்தான்.
அவளை முதல் உச்சம் புரட்டிப் போட, தேகம் அதிர, மனம் சிலிர்க்க தானும் அவனோடு கலந்து களைத்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அப்படியே படுத்துவிட, விலகும் எண்ணம் அவனுக்கும் இல்லை, அவனை விலக்கும் எண்ணம் அவளுக்கும் இல்லை.
அவன் தன் உணர்வுகளை அவளிடம் வார்த்தையில் வடிக்க, மொத்தமாக சிவந்து போனாள். “யோ… முகி… போதும்…” அவள் வெட்கத்தில் முனக, அவளை அத்தனையாக ரசித்தான்.
“நீ ஓகேயா?” சிறு கவலையும், பெரும் அக்கறையுமாகக் கேட்டான்.
“உங்களுக்கு எப்படித் தெரியுதாம்?” அவன் கன்னம் வருடி, இதழில் சின்னதாக முத்தமிட்டு அவள் கேட்டு வைத்தாள். நிச்சயம் அவள் கொஞ்சம் சிரமப்படுகிறாள் எனப் புரிந்தாலும், அவளோடு ஒன்றாக கலந்துவிட்ட நிறைவும், பூரிப்பும் அவனிடமும் அவளிடமும் நிறையவே இருந்தது.
“ஏலியன்… சொல்லல…?” அவன் சீண்ட, அவன் எதைச் சொல்கிறான் எனப் புரிய அவன் முகம் காண முடியாமல் சிவந்து போனாள். “ஆப்பிரிக்கா க*த…” அவள் முனக, அவனோ வாய்விட்டு சிரித்தான். அதில் அவள் இதழ்களிலும் மென்னகை பூக்க, “முகி… ஐ கேன்… எனக்கு… ரொம்ப சந்தோஷமா இருக்கு…” அவள் சொல்ல, அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.