ஆதர்ஷினி மிகவும் இயல்பான அமைதி மற்றும் குறும்பு குணம் கொண்டவள். அனைவரிடமும் எளிதாக பழகி விடுவாள் ஆனால் எக்காரணம் கொண்டும் யாரையும் புண்படுத்தும் வகையில் பேசமாட்டாள். அதேபோல கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதவள் கிடையாது ஆனாலும் மூடநம்பிக்கைகளை நம்ப மாட்டாள்.
அவள் வீட்டின் மூத்த வாரிசு அவளுக்கு அடுத்து கார்த்திகா என்ற தங்கையும் கார்த்திக் என்ற தம்பியும் உள்ளனர். அவளுடைய தாய் தந்தை பாண்டியன் மற்றும் ராஜலட்சுமி இவர்கள் வசித்து இருப்பது ஆதவன் வீட்டின் அருகில் தான்.
சிறுவயது முதலே அனைவரையும் உறவுமுறை வைத்து உரிமையோடு பழகும் குணம் கொண்ட ஆதர்ஷினி ஆதவன் பெற்றோரிடமும் பெரியம்மா பெரியப்பா என்று பாசமாக பழகுவாள். தங்கவேல் மற்றும் சுஜாதா ஆகிய அவர்கள் இருவருக்கும் ஆதவன் ஒரே பிள்ளையாகி போனான் அதனால் பெண் குழந்தை இல்லாத ஏக்கத்தை ஆதர்ஷினி வைத்து தீர்த்துக் கொண்டனர்.
எப்பொழுதும் ஆதவன் வீட்டிற்கு வரும் போது அவனுடன் வரும் சமரை தர்ஷினி பார்த்து இருக்கிறாள். அவன் ஏன் அடிக்கடி இங்கு வருகிறான் என்ற எண்ணம் தர்ஷினி மனதில் எப்பொழுதுமே இருக்கும் ஆனால் அவள் அதை கேட்டதும் கிடையாது தன்னுடைய முகத்தில் காட்டிக் கொண்டதும் கிடையாது.
ஆதவனும் அவன் குடும்பமும் சமரிடன் மிகவும் நெருக்கமாக இருப்பதை பார்த்த பொழுதே ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்பதனை சிறுவயதிலேயே யூகித்து கொண்டாள் ஆதர்ஷினி. அப்பொழுதுதான் அவனை பற்றி விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். ஆனால் அப்போது அவளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
ஆனால் தர்ஷினி மனதில் எப்பொழுதுமே சமருக்கு பாசம் கொடுக்க வேண்டும் அன்பு காட்ட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனாலும் ஏதோ ஒன்று அவளை தடுக்க அவனிடம் நெருங்காமல் இருந்து கொண்டாள். ஆதர்ஷினி பெரிய பெண்ணாக வளர்ந்த பிறகு தன் தாயிடம் சென்று சமரைப் பற்றி விசாரித்தாள்.
அப்போதுதான் அவள் தாய் ராஜலட்சுமி அவனுடைய மொத்த கதையையும் கூறிவிட்டு "பாவம் புள்ள சின்ன வயசுல இருந்தே அவ்வளவு கஷ்டத்தையும் அனுபவிச்சு முடிச்சாச்சு இனியாவது அதோட வாழ்க்கையில சந்தோசமா இருக்கணும் ஊர்ல இருக்குற எல்லாருக்கும் அந்த புள்ள நல்லதை மட்டும் தான் செய்யுது ஆனா வீட்ல உள்ள ஒரு சிலர் தான் அந்த பிள்ளையை ஒதுக்கி வைக்கிறார்கள் பாசமாக இருபவர்களையும் பேச விடாமல் தடுத்து இந்த பையன் முகத்துக்கு நேரா ரொம்ப மோசமா பேசுறாங்க அதனால இவனே ஒதுங்கி வந்து விடுகிறான்.
அவனுக்கு சொந்தம் அப்படின்னு சொல்லி அவனோட சித்தப்பா தம்பி தங்கச்சி எல்லாரும் இருக்காங்க ஆனாலும் இவன் கிட்ட பாசமா நடந்துக்கிட்டா அவங்க எல்லாருக்கும் திட்டு கிடைக்கிறத பார்த்து அவங்க எல்லாரையும் விட்டு ஒதுங்கி வந்துட்டான்.இப்போ அவனோட உலகம் மொத்தமும் ஆதவனும் அவன் குடும்பமும் தான். ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா அவங்களுக்கு விருப்பப்பட்டதை படிச்சுகிட்டு இருக்காங்க எப்படி இருந்தாலும் அந்த பிள்ளைங்க வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமா இருக்கணும்" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
அனைத்தையும் கேட்டது முதல் தர்ஷினி மனதில் எப்படியாவது அவனது கவலையை போக்க வேண்டும். அவன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் அதெல்லாம் என்ன என்று தெளிவாக புரிந்து கொள்ளும் வயதில்லை அவளுக்கு ஏனென்றால் அவள் இருந்ததோ பருவ வயதில் அதனால் யோசனைகளை விட்டுவிட்டு அமைதியாக நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்ப்பாள்.
இவள் இப்படி வேடிக்கை பார்ப்பதையும் சமரை கவனிப்பதையும் அவள் வீட்டில் மட்டுமல்லாமல் ஆதவன் வீட்டிலும் பலமுறை கவனித்து இருக்கிறார்கள் ஆதவனும் சமரும் கூட கவனித்து இருக்கிறார்கள். சமர் அவளிடம் பேசி பழக்கம் இல்லாத காரணத்தினால் அப்படியே ஒதுங்கி இருக்க ஆரம்பித்தான். ஆனால் மற்றவர்கள் முகத்தில் ஒரு கேள்வி வந்தது இதை அவளிடம் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் அவர்களுக்கும் அவளுடைய வயது தான் பெரிதாகத் தெரிந்தது அதனால் சில காலம் கழித்தே அனைத்தையும் பேசி புரிய வைத்துவிடலாம் என்று நினைத்து கொண்டனர்.
ஏனென்றால் இன்றைய பல இளைஞர்கள் பருவ வயதில் தன்னுடைய பெற்றோர் தங்களுக்கு நல்லது கூறினாலும் அதற்கு எதிராக செய்து பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். இப்படி ஏதாவது பிரச்சினையில் தங்களுடைய பிள்ளைகள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று தான் அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் நினைத்து அமைதி காத்தனர். உண்மையில் ஆதர்ஷினி சமரை விரும்பினாள் என்றால் நிச்சயமாக இரண்டு வீட்டிலும் அவனை அவளுக்கு திருமணம் செய்து வைப்பார்கள்.
ஏனென்றால் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு நிச்சயம் இவளால் சமரின் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் அதேபோல் அவனுக்கு கிடைக்காத சொந்தங்கள் அத்தனையையும் இவள் கிடைக்க வைத்து விடுவாள். யாரெல்லாம் அவனை அவசொல் பேசி ஒதுக்கி வைத்தார்களோ அவர்களையே இவனை ஏற்றுக் கொள்ளும்படி ஏதாவது செய்து விடுவாள் என்பது அவர்கள் அனைவருக்கும் தெரியும் அதனால் அவர்கள் பேசி முடிவு செய்ய நினைத்தனர்.
ஆனால் அதற்கு வேலையே வைக்காமல் தன்னுடைய வீட்டிற்கு வந்த பவானியை பிடித்த ஆதர்ஷினி "அடியே பானிபூரி எனக்கு அந்த சமரை பார்த்தா என்னமோ உள்ளுக்குள்ள ஜில்லுன்னு இருக்கு ரெக்கை கட்டி பறக்கிற மாதிரி பீல் ஆகுது. இது வரைக்கும் அவன் வாழ்க்கையில அவன் பட்ட கஷ்டம் எல்லாமே சரி பண்ணனும்னு ஆசை வருது. அவன் கூடவே இருந்து அவனோட முகத்தில் எப்போதுமே சந்தோஷத்தையும் சிரிப்பையும் மட்டுமே பாக்கணும்னு ஏக்கம் வருது.
அதுபோல யாரெல்லாம் அவனுடைய பாசத்தை அவனுடைய அருகாமையை வெறுத்து ஒதுக்கிகினார்களோ அவங்க எல்லாம் அவன் கிட்ட இருந்து பாசம் அருகாமை கிடைக்கிறதுகாக காத்து கிடைக்கிற மாதிரி பண்ணனும்னு தோணுது இதுக்கெல்லாம் காரணம் என்ன? அந்த சமர் கிட்ட போய் பேசினாலும் கண்டிப்பா மதிக்கவே மாட்டாங்க அது பார்த்தாலே தெரியுது ஏதாவது ஐடியா கொடேன்" என்று கேட்டாள்.
அவள் கூறியதைக் கேட்ட பவானி நெஞ்சில் கை வைத்துக்கொண்டு "அடியே ஆத்திச்சூடி என்னடி இப்படி சொல்ற அந்த அண்ணா யார்கிட்டயும் பேசவும் செய்யாது யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காது இதுல கொஞ்ச நாளா உன்னை பார்த்தா முறைத்துக் கொண்டு வேற திரிகிறது. இதுல அந்த அண்ணாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு வேற சொல்ற எனக்கு தெரிஞ்சு உங்க ரெண்டு பேர் வீட்லயும் இதற்கு எந்தவித எதிர்ப்பும் இருக்காது ஏன்னா சமர் அண்ணா மொத்தமாவே ஆதவன் வீட்டில தான் இருக்காங்க அந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இருக்காது.
ஆனா உனக்கு மொத்த பிரச்சனையும் சமர் அண்ணா தான் அந்த அண்ணாவை ஒத்துக்க வைக்கிறது ரொம்ப கஷ்டமான காரியம் இந்த விஷயத்துல அவன் பக்கத்திலேயே யார் சொன்னாலும் அவன் காது கொடுத்து கேட்கிறது கஷ்டம்தான் அதனால ஒழுங்கா அமைதியாய் இரு. ஏன்னா உன் கூட சேர்ந்து அடி வாங்குற அளவுக்கு எனக்கு தெம்பு கிடையாது. நீ ஏதாவது பண்ணா நிச்சயமா எனக்கும் சேர்த்து தான் அடி விழும் அதனால தெய்வமே உன் கைய கால நினைச்சு செஞ்சி கேட்கிறேன் இந்த மாதிரி விபரீத ஆசை எல்லாம் படாதே" என்று கூறினாள்.
ஆதர்ஷினி சிரித்துக்கொண்டே தன் தோழியின் கழுத்தோடு கைகோர்த்து "அதெல்லாம் முடியாது நான் பண்ண போற எல்லா விஷயத்துக்கும் நீ என் கூடவே இருந்து தான் ஆகணும் அப்படி மட்டும் வரலைன்னு வச்சுக்கோ அதுக்கு வேற ஏதாவது வழி பண்ணி செமத்தியா வீட்டில் வாங்க வச்சுருவேன். எப்படியாவது அரும்பாடு பட்டாவது அந்த சமர் மனதை மாத்தணும் இல்லனா ஏதாவது கோல்மால் வேலை பண்ணியாச்சும் கல்யாணம் பண்ணனும் இதுக்கு எதிரா யார் வந்தாலும் நீ அவர்களை சமாளிச்சுகோ பானி பூரி" என்று அசால்டாக பவானி தலையில் ஒரு ஆட்டோ பாமை தூக்கி போட்டாள்.
இதற்கு மேல் விட்டால் பவானி பதறி விடுவாள் என்பதை உணர்ந்த பெரியவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அனைவரின் முகத்தையும் பார்த்து பவானி பயந்துபோய் எழும்ப எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக எழுந்தாள் ஆதர்ஷினி.
ஆதர்ஷினியின் அமைதியான முகத்தை பார்த்த பாண்டியன் மற்றும் தங்கவேல் இருவரும் அவளை தோளோடு அணைத்துக் கொண்டு "நீ நினைக்கிற விஷயம் நடக்கிறது அவ்வளவு சுலபம் கிடையாது. அதுக்கு நீ நிறையவே போராட வேண்டியிருக்கும் எப்பவுமே இந்த விஷயத்துல இருந்து பின்வாங்க மாட்டேன் அப்படின்னு நீ எங்களுக்கு சத்தியம் பண்ணி கொடுத்தா உனக்கு நாங்க எல்லாரும் ஆதரவாக இருப்போம். இல்லன்னா இப்பவே இந்த விஷயத்தை மறந்து விடு ஏன்னா இன்னொரு வருத்தம் இழப்பு சமருக்கு வேண்டாம்" என்று கூறினார்கள்.
பவானி முதலில் இவர்கள் வரும்போது என்ன பேசுவார்களோ என்று பயத்தில் நின்று கொண்டு இருந்தவள். இப்போது இவர்கள் பேசியதை கேட்டு மயக்கம் வராத குறையாக நின்று கொண்டு இருந்தாள். தன்னுடைய பெற்றோர் தன்னுடைய முடிவில் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர் என்பதை அறிந்த ஆதர்ஷினி அவர்கள் கேட்கும் உறுதியை கொடுக்க முடிவு செய்தாள்.
ஆதர்ஷினி"அப்பா அம்மா எனக்கு முதல்ல இது என்ன அப்படி என்கிற விஷயம் தெளிவா புரியல அதனாலதான் இதுநாள் வரைக்கும் உங்ககிட்ட சொல்லாம இருந்தேன். ஆனா சமரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவனோட முகத்துல உண்மையான சிரிப்பை வர வைக்கணும்னு தோணுது முதல்ல இது ஆதவன் அண்ணா போல ஏதோ ஒரு அண்ணன் பாசமோ அப்படின்னு தான் நினைச்சேன். ஆனா போகப்போக தான் எனக்கு எல்லா விஷயமும் புரிய ஆரம்பிச்சது நான் பேசின எல்லாத்தையும் நீங்க கேட்டு இருப்பீங்க அப்படின்னு எனக்கு புரியுது கண்டிப்பா என்னோட வாழ்க்கையில நான் சாதிப்பேன். ஆனா ஒரு விஷயம் மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க கண்டிப்பா என்னால சமர சமாளிக்க முடியல அப்படின்னு வரும்போது உங்க கிட்ட தான் வந்து நிற்பேன். ஏதாவது ஒரு கோல்மால் திட்டத்தோடு தான் வருவேன் அத நீங்க என் கூட இருந்து வெற்றிகரமாக முடித்து தரணும் சரியா" என்று கேட்டாள்.
அவர்களும் ஏற்கனவே அறிந்து தான் இருந்தனர் சமர் வாழ்க்கையில் யாரையும் அவ்வளவு எளிதில் உள்ளே நுழைய வைக்க முடியாது. அதை மீறி அவன் உள்ளே நுழைக்க நினைத்த நபரும் அவனை ஏமாற்றி விட்டு சென்றுவிட்டார். அதனால் மொத்தமாக அவன் யாரையும் உள்ளே நுழைக்க அனுமதிக்க மாட்டான் என்ற விஷயத்தை நன்கு உணர்ந்து கொண்டனர்.
ஆனால் சமரின் வாழ்வில் விளையாடிய அந்த நபரை பற்றி இப்போது ஆதர்ஷினி தெரிந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்து பொதுவாக அவளுடைய பெற்றோர் மற்றும் ஆதவனின் பெற்றோர் அனைவரும் சேர்ந்தே "நிச்சயமாக உனக்கு ஆதரவாக இருப்போம் எப்போது என்ன பிரச்சினை என்றாலும் எங்களிடம் வந்து கூறிவிடு உன்னால் முடிவெடுக்க முடியாத சமயங்களில் எங்களிடம் வந்து கூறி அனைத்தையும் தெளிவு படுத்திக் கொள்" என்று கூறினார்கள்.
பவானி "என்ன கொடுமைடா இது பொண்ணு லவ் பண்றேன் அப்படின்னு சொல்றா அந்த விஷயத்தை கேட்டு கோபப்படாமல் என்ன திட்டம் போட்டாலும் உனக்கு கூடவே இருந்து நாங்க ஹெல்ப் பண்றேன்னு சொல்ற குடும்பம் கிடைச்சா யாருமே ஓடிப்போய் கல்யாணம் பண்ண மாட்டாங்க ஆனால் இத்தனை பேரு உதவி செய்தாலும் இவளால் அந்த அண்ணாவை கரெக்ட் பண்ண முடியுமா அது என்னமோ சந்தேகந்தான்" என்று தன் போக்கில் புலம்பிக்கொண்டு இருந்தாள்.
அனைவரும் பவானி புலம்புவதை கேட்டு தங்களுக்குள் சிரித்துக் கொண்டே "சரி வாங்க எல்லாரும் போய் சாப்பிடலாம் நேரமாச்சு" என்று அழைத்து சென்றனர்.
இந்த விஷயம் முழுவதும் ஆதவன் காதிருக்கும் சென்றது அவனுக்கு எப்படியாவது தன்னுடைய நண்பன் நல்லபடியாக இருந்தால் போதும் என்ற நிலைமை அதிலும் தன்னுடைய தங்கையாக நினைக்கும் ஒருத்தி அவன் வாழ்வில் வந்தால் நிச்சயமாக அவன் மகிழ்ச்சியாக இருப்பான் என்று எண்ணிக்கொண்டான். ஆனால் அவனால் பெரியதாக எந்தவித உதவியும் செய்ய முடியாது என்பதையும் கூறி விட்டான்.
ஏனென்று அவனுடைய பெற்றோர் கேட்டபோது "இல்லம்மா அதாவது நான் வந்து உங்களுக்கு உதவி செஞ்சா சமர் இப்ப இருக்கிற நிலைமையிலே எல்லாரையுமே மொத்தமாக வெறுப்பதற்கு வாய்ப்பு இருக்கு. இது முழுக்க முழுக்க ஆதர்ஷினி மட்டுமே செய்யணும் நீங்க ஏதாவது கொஞ்சம் கொஞ்சம் உதவி பண்ணலாம் ஆனா கொஞ்சமாச்சும் தர்ஷினி சமர் மனதில் வந்து விட்டால் அதை வைத்தே எல்லாத்தையும் சிறப்பா செஞ்சிடலாம். அதுவரைக்கும் நான் எந்தவித உதவியும் செய்ய முடியாது ஆனா என்னோட நண்பன் வாழ்க்கை நல்லா இருக்கணும் அப்படின்னு நானும் ஆசைப் படுகிறேன்.
ஆனா அதுக்கு எப்படியும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும் இன்னும் கொஞ்ச நாள்ல எங்களோட படிப்பு முடிஞ்சு நாங்க ஊருக்கு வந்து விடுவோம். அதன் பிறகு எங்கேயும் வெளியே போற மாதிரி இருக்காது. ஊரிலேயே கொஞ்சம் நிலத்தை வாங்கி விவசாயம் தான் செய்யப் போறோம் நாங்கள் படித்த படிப்பு அத்தனையும் அதில் இறக்கி சோதனை செய்து பார்க்கப் போகிறோம். ஆதர்ஷினி இப்போதுதானே கல்லூரியில் காலடி எடுத்து வைத்திருக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் செய்யலாம் ஆனால் ஆதர்ஷினி என்றுமே அவளுடைய நிலையிலிருந்து மாறக்கூடாது" என்று தெளிவாகக் கூறினான்.
அவர்களும் "ஆதர்ஷினி தெளிவாகத்தான் இருக்கிறா அதை நாங்கள் ஏற்கனவே அவளிடம் பேசி தெளிவுபடுத்தி விட்டோம். அதனாலே நீ அதை நினைத்து கவலைப் படாதே பத்திரமா ஊர் வந்து சேருங்க அதுவே எங்களுக்குப் போதும்" என்று கூறினார்கள்.
அதைப்போல் அதன் பிறகு வந்த காலங்களும் அப்படியே சென்றது சமர் மற்றும் ஆதவன் இருவரும் வெற்றிகரமாக தங்களுடைய படிப்பை முடித்து விட்டு ஊர் வந்து சேர்ந்தனர். கல்லூரியில் நடந்த சில கசப்பான சம்பவங்களை கல்லூரியிலேயே விட்டுவிட்டு தங்கள் ஊரில் கிடைக்கும் சிறு நிம்மதியை மட்டும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் சமர் கிளம்பி வந்தான். அதுமட்டுமல்லாமல் அவன் செய்ய வேண்டிய அனைத்தையும் ஏற்கனவே யோசித்து வைத்து இருந்ததால் எந்த வித குழப்பம் யோசனையும் இல்லாமல் அமைதியாகவே ஊருக்கு வந்து சேர்ந்தான்.
இருவரும் ஊருக்கு வந்தபோது அவர்களை எதிர்கொண்டது என்னவோ ஆதர்ஷினியும் அவளருகில் தலை மேல் கை வைத்து பாவமாக அமர்ந்து இருந்த பவானியும் தான். இவர்கள் இருவரையும் முற்றிலும் எதிர்பார்க்காத சமர் ஆதவன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவர்கள் வருகையை கண்டும் காணாததுபோல் பவானி அமர்ந்து இருக்க அவளை இழுத்துக் கொண்டு அவர்கள் முன்னே சென்று நின்றாள் ஆதர்ஷினி.
தங்கள் முன்னே வந்து நின்ற உடனேயே எதற்கு என்று ஓரளவுக்கு யூகித்துக் கொண்ட ஆதவன் நடப்பவற்றை பார்க்க ஆரம்பித்தான். ஆனால் எதற்காக இந்த பெண் தன் முன்னே வந்து நிற்கிறாள் என்று யோசனையாக பார்த்துக்கொண்டு இருந்தான் சமர். இருவரின் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு சமர் முகத்தை நேரடியாக பார்த்து ஆதர்ஷினி தன்னுடைய காதலை கூறினாள் அதைக் கேட்டு சமர் ஆதவன் மட்டுமல்ல பவானி கூட அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
இனி என்ன நடக்கப் போகிறது என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.