• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் செய்யடா காந்தர்வா...

ஹரிணி அரவிந்தன்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 5, 2023
25
28
13
Manalmedu
காதல் செய்யடா காந்தர்வா - 1

பச்சை பசேல் என்று மரங்களும் கொடிகளும் சூழப்பட்டு குளிர் நிறைந்த அந்த வனாந்தரத்தில் உள்ள சில் வண்டுகள் மற்றும் பெயர்த் தெரியாப் பறவைகளின் கீச் கீச் சப்தம், கர்நாடகப் பதிவெண் கொண்ட அந்த டூரி்ஸ்ட் பேருந்து அந்த சிக்மகளூர் வனப்பகுதியில் நுழையும் போதே அந்த பேருந்தில் இருப்பவர்களை சூழ்ந்துக் கொண்டது.

"ஹே…ரண்டி ரண்டி…பிளேஸ் ஓச்சிந்தி…",

யாரோ ஒரு இளம் பெண் தெலுங்கில் உற்சாகமாக கத்திக் கொண்டு செல்வதும்,

"இங்கே இருந்து பக்கத்தில் தான் திங்கள் நாதர் கோயில் இருக்கு, அது பக்கத்திலே யாழிசை அருவி இருக்கு….அதை தூர நின்னுப் பார்க்க முடியும்…ஆனால் குளிக்க கர்நாடக அரசு தடை சொல்லி இருக்கு…",

யாரோ ஒரு சுற்றுலா வழிகாட்டி சொல்லிக் கொண்டே இறங்கிப் போவது அந்த பேருந்தில் இறங்க மனமில்லாது அப்படியே சன்னலில் சாய்ந்துக் கொண்டு கண் மூடி இருக்கும் ஆருத்ராவின் காதுகளில் நன்றாக விழுந்தது.

"யாழிசை அருவி……!!!!",

ஒருமுறை சிவனை மகிழ்விக்க கயிலாயித்தில் காந்தர்வர்கள் யாழ் மீட்டினார்களாம், அதன் இசை வெள்ளத்தில் சிவன் மயங்கி விட்டாராம், அதில் அவரது தலையில் இருந்த கங்கை பொங்கி வழிந்ததில் அதன் பகுதி பூமியில் பட்டு அது அருவியாக கொட்டுவதாக ஒரு செவி வழி செய்தி உண்டு. அது உண்மை தான் என்பது போல் யாழிசை அருவி அருகே இசைப் பாறை உண்டு. வரிசையாக உள்ள அந்த ஏழு பாறைகள் மீதும் காற்று படும் போதெல்லாம் ச ரி க ம ப த நி என்று ஏழு ஸ்வரங்களின் சப்தம் கேட்கும், தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் கூட திங்கள் நாதர் சன்னதிக்கு வருவது இந்த இசைப் பாறையை காணத் தான்.

இப்படியேப்பட்ட இயற்கையின் ஆச்சிரிய அதிசியங்களை தன்னுள்ளே கொண்டு இருக்கும் அந்த சிக்மகளூர் வனப் பகுதியை கர்நாடகா அரசு சுற்றுலாத்தளமாக அறிவித்து வருமானம் ஈட்டுவதில் என்ன ஆச்சிரியம் இருக்கப் போகிறது?







"அம்மா….அம்மா.!!!!",

தன் அருகே கேட்ட அந்த ஆண் குரலில் கண் விழித்த ஆருத்ரா நிமிர்ந்துப் பார்த்தாள். அவள் அமர்ந்து இருந்த அந்த சுற்றுலா பேருந்தின் ஓட்டுநர் தான் அவளை அழைத்துக் கொண்டு இருந்தான்.

"சொல்லுங்க சார்…",

என்பதுப் போல் அவள் நிமிர்ந்துப் பார்த்தாள்.

"நீங்க கேட்ட சிக்மகளூர் வந்துட்டு…இறங்குங்க.. பஸ் டவுனுக்கு பெட்ரோல் போடப் போகுது…",

என்றவன் குரலில் நீங்க கொஞ்சம் இறங்கினால் நான் என் வண்டியை கிளப்பிக் கொண்டு போய் விடுவேன் என்ற செய்தி புதைந்து இருந்ததில் அவள் இதற்கு மேல் இங்கே அமர்ந்து இருந்தால் நன்றாக இருக்காது என்று உணர்ந்துக் கொண்டு இறங்கினாள் அவள்.

"பாத்தும்மா…!! இந்தாங்க…!!!",

தடுமாறிக் கொண்டே இறங்கியவளுக்கு அவளின் பையை எடுத்துக் கொடுத்தான் அந்த டிரைவர்.

"நன்றிப்பா…!!",

என்றப்படி நடக்க ஆரம்பித்த ஆருத்ராவின் உடலை அந்த வனப்பகுதியில் சூழ்ந்து குளிர்ச்சி தழுவிக் கொண்டது. அந்த டிராவல் பேக்கை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தவள் முகத்தில் ஐம்பது வயதுக்கான சாயல் தெரிந்தது. அதை அவளின் காதோரம் இருந்த காற்றில் பறந்த நரை முடி உறுதி செய்தது. எளிமையான மஞ்சள் நிற காட்டன் புடவைக்கு பொருத்தமாக சிவப்பு நிற
முழங்கை வரை நீண்டிருந்த அந்த ரவிக்கை பொருத்தமாக இருந்தது. தலைமுடியை கொண்டை போட்டு அதில் ஒரே ஒரு சிவப்பு ரோஜா இருந்தது. மஞ்சள் மினுமினுத்த அவள் முகத்தை ஒரே ஒரு ஸ்டிக்கர் பொட்டு அலங்கரித்து கொண்டு இருந்தது. ரவிக்கை மறைத்தப் முழங்கைப் பகுதிக்கு கீழே உள்ள கைப்பகுதியை கண்ணாடியில் வளையல்களால் அலங்கரித்து இருந்தாள். மண்ணை உரசி கொண்டு இருந்த அவளின் புடவையில் பாதம் தெரியவில்லை, ஆனால் வெறும் மெல்லிய செயின் அணிந்து இருந்த அவளின் கழுத்தும், கண்ணாடி வளையல்கள் அணிந்து இருந்த அவளின் கைகளும் அவள் முகம் காட்டிக் கொண்டு இருந்த முதுமையை சந்தேகப்படும் படி செய்தது.

"ரொம்ப உயரமான அருவி அது…அங்கே போனால் உயிர் மிஞ்சாது, அதனால் தான் கவர்மெண்ட் அங்கே டூரிஸ்ட்டை அலவ் பண்ணல…"

தன்னைக் கடந்துப் போகும் யாரோ ஒருவர் சொல்லிக் கொண்டு போனது அவள் காதில் நன்றாக விழுந்தது.

"எத்தனை உயரமாக இருந்தால் என்ன? திங்கள் நாதனை தரிசனம் செய்து விட்டு அந்த கோயில் காவலாளிக்கு எப்படியாவது டிமிக்கி கொடுத்து விட்டு
அந்த அருவிக்கு சென்று தற்கொலை செய்துக் கொள்ள வேண்டியது தான்….",

அவள் மனதில் பேசிக் கொண்டாள்.

காலையில் இருந்து சாப்பிடாத வயிறு அவளுக்கு பசியை சொல்லியது. எதோ ஒரு நினைவில் பையை பிரித்தவள் அதில் மின்னிய வைரங்கள், தங்க நகைகளை கண்டு நாக்கை கடித்துக் கொண்டு மூடி விட்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள். அந்த இடத்தில் சிலர் செல்ஃபோன் பேசிக் கொண்டும் உணவு அருந்திக் கொண்டும் அந்த இடத்தின் அழகை ரசித்துக் கொண்டு இருந்ததில் அவளை யாரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை தான்.

"உங்க காதல் உண்மை தான்…. நான் ஒத்துக் கொள்கிறேன்…ஆனால் அதை விட என் அப்பாவின் பாசம் பெரிது பரத்…",

அவள் அருகே செல்போனில் தலைக் கவிழ்ந்து நின்றுக் கொண்டு இருந்த ஒரு இளைஞனின் செல்ஃபோன் திரை தான் வசனம் பேசிக் கொண்டு இருந்தது.

"ப்பா….!! சான்சே இல்லை.. ஆல் இந்தியன் பியூட்டி ஆருத்ரா ஆருத்ரா தான்டா…!! என்ன அழகு….என்ன முகவெட்டு…",

அந்த செல்ஃபோன் திரையை பார்த்து விட்டுச் அவன் சிலாகித்தான்.

"என்ன ஒரு ஆக்டிங்….அப்புறம் சும்மாவா நேஷனல் அவார்ட்டை தூக்கி கொடுத்து இருக்காங்க….!!",

என்று இன்னொருத்தி சொன்னாள்.

"இப்போ இருக்கிற நடிகையில் யாருக்கு இப்படி குடும்ப பாங்கான பேஸ்கட் இருக்கு…இவங்களுக்கு மட்டும் தான் இருக்கு…இந்த பியூட்டி பக்கத்தில் ஒரே ஒருமுறை நின்று விட்டால் போதும்…என் வாழ்க்கைக்கு பாக்கியம் கிடைக்கும்….",

அந்த இளைஞன் தன் கூட்டத்துடன் ரசித்துக் சொல்லிக் கொண்டே நடந்தான். அவர்கள் எல்லாரும் கொண்டாடும் தன் ஆல் இந்தியன் பியூட்டி ஆருத்ரா அவர்கள் பக்கத்தில் தான் நிற்கிறாள் என்று அறியாமல். அதைக் கேட்டுக் கொண்டு இருந்த ஆருத்ராவுக்கு அந்தப் போன்ற பேச்சுக்கள் புதிது அல்ல, இதுப் போன்ற ரசிக, ரசிகைகள் தன்னைக் கண்டுக் கொண்டு விடக் கூடாது என்பதால் தான் இருபது வயது ஆருத்ரா ஐம்பது வயது போல் மேக்கப் செய்துக் கொண்டு வந்து இருக்கிறாள். ஹிந்தி திரை உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டு இருக்கும் அவள் தொண்ணூறு வயது பாட்டி வேடத்தில் நடித்து அசதி தேசிய விருதை அள்ளியவள். அப்படி இருக்கையில் ஐம்பது வயது போல் ஒப்பனை இட்டு அவளுக்கு மக்களோடு மக்களாக தன் மனதுக்குப் பிடித்த இடத்திற்கு வரத் தெரியாதா என்ன?

ஆனால் அவள் மற்றவர்கள் போல் அந்த சிக்மகளூர் சுற்றுலா தளத்தை ரசிக்க வரவில்லை. திரையில் பார்த்து எத்தனையோ கோடி பேர் புகழ்ந்த, ஏங்கிய, ரசித்த அந்த உடலை கிட்டத்தட்ட ஆயிரம் அடி பள்ளத்துக்கு கொடுத்து விட்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறாள்.

அதை எண்ணும் போதே அவள் கண்களில் நீர் வழிந்தது.

- தொடரும்

Screenshot_20230105-192132_Gallery.jpg
 
Last edited:

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
330
93
43
Tanjur
அழகான ஆரம்பம் ம்மா,
ஆருத்ரா 😍
வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு ஆருத்ராவின் வாழ்வில் என்ன நடந்தது 🙄
ஆவலைத் தூண்டும் அத்தியாயம்..
வாழ்த்துக்கள் மா
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
281
446
63
Madurai
அருமையான ஆரம்பம்....

வாழ்த்துக்கள் 💐💐💐💐