• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

22. திவ்யதுர்ஷி - மன்னிப்பாயா என்னவனே...

திவ்யதுர்ஷி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 28, 2022
461
14
43
Sri Lanka
மன்னிப்பாயா என்னவனே…..

வீட்டின் திண்ணையில் இருந்து இரவு நேர வானத்தை பார்த்துக்கொண்டிருந்த காவ்யாவை கலைத்தது தமக்கையின் குரல்

"என்னடி யோசிச்சிட்டு இருக்கிற?"

"ஒண்ணுமில்லை அக்கா.."

"அதுசரி நீயாவது எதையாவது யோசிக்கிறதாவது.. அப்பிடி நீ யோசிச்சி நடந்திருந்தா இப்பிடி வந்து உட்கார்ந்து இருப்பியா?"

"இப்போ நீ எதுக்கு அக்கா தேவையில்லாததை பேசிட்டு இருக்கிற?"

"அப்பிடி நான் என்ன பண்ணிட்டன்"

" என்னடி அக்காவையே எதுத்து பேசுற என்றவாறு வந்தார் கமலம்.

"நான் சும்மாதான் இருந்தன் அம்மா அக்காதான் வந்து தேவையில்லாம பேசிட்டு இருக்கிறாங்க"

"சும்மா இருந்தா பேசத்தானே செய்வாங்க. நீயும் எத்தனை நாளைக்குத்தான் சும்மாவே இருப்ப.. வீட்ல எதுவும் செய்யாமல் சும்மா இருந்து சாப்பிடுறமே என்று உனக்கு தோணலையா?"

"அவளுக்கு எப்பிடி மா தோணும்.. நாம வேளா வேளைக்கு சமைச்சுப் போடுறம் மகாராணி மாதிரி இருந்து சாப்பிடுறா. இப்பவே அக்கம்பக்கத்தில லேசாக பேசுறாங்க கமலத்தோட கடைசிப்பொண்ணு அம்மா வீட்டுக்கு வந்து ரெண்டு மாசமாச்சி இன்னும் புருஷன் வீட்டுக்கு போகல.. ஒருவேளை வாழாவெட்டியா இருக்கோ தெரியல்லைனு பேசுறாங்க"

" சரி நீ எப்போ உன் புருஷன் வீட்டுக்கு போற? "

" நா.. ன் அங்க.. போகல அம்மா"

" ஏய் என்னடி சொல்ற? "

" ஆமா அக்கா.. நான் போகல"

" நெனச்சேன் நீ இப்பிடி தான் சொல்லுவனு. உனக்கு புத்திகெட்டுப்போச்சா? ஒழுங்கா புருஷன் வீட்டுக்கு போற வழிய பாரு"

" நான் போகமாட்டன்.. இங்கதான் இருப்பன்.. சும்மாதானே இருக்க கூடாது.. வேலைக்கு போறேன்.. சம்பள பணத்தை உங்ககிட்டையே தர்றேன். "

"அப்பிடி.. "

" அம்மா அதுதான் காவ்யா சொல்றாதானே சம்பளத்தை நம்மகிட்டையே தர்றேன்னு.. பிறகு நமக்கென்ன இருக்கட்டும்"

" சரி இருந்திட்டு போகட்டும்"

இருவரும் சென்றதும் தனது அறைக்கு வந்த காவ்யா அவளது உயிர் தோழியான தமிழுக்கு போன் பண்ணி அவள் வேலை பார்க்கும் இடத்தில் தனக்கும் ஒரு வேலை வாங்கித் தரும்படி கூற அவளும் ஒரு வேலைக்கு ஆள் தேவை அதற்கு நீ வா என்றாள். காவ்யாவும் வருவதாக கூறிவிட்டு படுத்தாள்.

கடற்கரையில் கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தான் பிருந்தகன். "ஏன் கண்ணம்மா என்ன விட்டுட்டு போன?? என்னோட அன்பு புரியலையா உனக்கு? சந்தோசமா தானே கண்ணம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டம்.. இந்த மூணு மாசம் சந்தோசமாதானே வாழ்ந்தம் அப்புறம் எதுக்காக என்ன விட்டுட்டு போன?? என்ன வந்து கூட்டிட்டுப்போங்க அத்தான்னு ஒரு வார்த்தை சொல்லு கண்ணம்மா. இல்லைனா ஒரு மெசேஜ் போடு உன்னை கூட்டிட்டு வந்து என் உயிருக்குள்ள வச்சி பார்த்துப்பன் பிளீஸ் கண்ணம்மா..

நான் இல்லாம உன்னால இருக்க முடியாதேடி. காலைல எழுந்ததில இருந்து தூங்குற வரைக்கும் நான் வேணுமே கண்ணம்மா…

அத்தான்… அத்தான்…. என்று என் பின்னாடியே சுத்தும் நீ எனக்கு வேணும்டி…

தூக்கத்தில நான் விலகி போனாலும்.. நீயா தேடிவந்து என் நெஞ்சில படுத்து தள்ளிப்போகாதீங்கனு சொல்லுவியே கண்ணம்மா.. இப்படி நான் இல்லாம உன்னால இருக்க முடியுதாடி.. எனக்கு உயிரே போற மாதிரி இருக்குடி… எனக்கு நீ வேணும்டி கண்ணம்மா…
என்று தன் மனதோடு பேசியவாறு நின்றவன் கண்கள் உடைப்பெடுத்த கண்ணீரோடு வானத்தில் இருந்து முகத்தில் விழுந்த மழைத்துளியும் இணைந்து பயணிக்க உணர்வுக்கு வந்தவன் தனது வீட்டை நோக்கி சென்றான்..

அடுத்த நாள் விடிந்ததும் காவ்யா தனது அம்மாவிடமும் அக்காவிடமும் சொல்லிவிட்டு வேலைக்கு சென்றாள்.. அவளது வாடிய முகத்தைப் பார்த்த தமிழ் அவளிடம் எதையும் கேட்காது காவ்யாவுடன் சேர்ந்து வேலைய செய்தாள்..

தனக்கு பழக்கமில்லாத வேலையை செய்வதற்கு மிகவும் கஸ்ரப்பட்டாள் காவ்யா.. ஆம் காவ்யா புடவை நெசவு செய்யும் வேலையினையே செய்தாள்..

மாலை வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற காவ்யா தனது அக்காவிடம் ஒரு கப் டீ கேட்டாள். அதற்கு அவளோ டீ போட பால் இல்லை என்று முகத்தில் அடித்தவாறு கூறினாள்.. காவ்யாவிற்கு ஒருமாதிரி போய்விட்டது தனது அறைக்குச் சென்று குளித்து விட்டு வந்து கட்டிலில் இருந்த காவ்யாவிற்கு அவள் அனுமதி இன்றி அவளவனின் ஞாபகம் வந்தது..

கல்யாணம் நடந்து கொஞ்சநாட்களுக்கு பிறகு அவளுக்கு காய்ச்சல் வந்தது அப்போது தாயாக அவளுக்கு அருகில் இருந்து பார்த்துக்கொண்டான்.. என்ன குறைதான் அவளுக்கு வைத்தான்.. எதுவுமே வைக்கவில்லை..

அவள் தலைவலி என்று முகம் சுளித்தாலும் கூட அவனால் தாங்கிக்கொள்ள முடியாது..

ஒருநாள் அவள் சமைக்கும் போது தெரியாமல் கையை சுட்டுக்கொண்டாள். அதற்கு அவளை விட அவனே துடித்தான்.. அப்படிப்பட்டவன் இப்போ அவளது கையைப் பார்த்தானானால் உயிரையே விட்டுடுவான்… அப்படிப்பட்டவனைதான் விட்டுட்டு வந்தாள்.. தனது வீண் கோபத்தால்… அதுவும் அவள் அம்மா வீட்டிற்கு போனால் அவனும் பின்னாடியே வந்துவிடுவான் என்று தெரிந்து.. என்னை தேடி நீங்க வரக்கூடாது.. மீறி என்னை தேடி வந்தீங்க.. நான் உயிரோடவே இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.. அதுதான் அவளைத் தேடி பிருந்தகன் வரவில்லை..

அவனை நினைத்தவாறே தூங்கிப் போனாள். அடுத்த நாள் காலை அவள் எழுந்த போது அக்காவின் கணவன் ராசு வீட்டில் இருந்தான்..

"வாங்க மாமா.."

"ம்.. என்ன இப்பதானா எழும்பின?"

"ஆமா மாமா. தலைவலி அதுதான்.."

"ரெண்டு நாளைக்கு வேலைக்கு போனதும் உடனே வருத்தம் வந்திரும்.."

"இல்லை அக்கா கதையெல்லாம் காச்சிப் போய் இருக்கு.. அதுதான் போகல.. நாளைக்கு போயிருவன்"

"ம்.." என்றாள் அவ்வளவுதான்.. சாப்பிடக்கூட அவளை யாரும் அழைக்கவில்லை.. அவளும் அறையை விட்டு வரவில்லை…

தமிழ் வந்து அவளை கூப்பிடவும்தான் வெளியே வந்தாள்.. அப்போது அவளுடைய அக்காவும் மாமாவும் ரொமான்ஸ் செய்துகொண்டிருந்தனர். இவளைப் பார்த்ததும் அவளது மாமா விலகிச் சென்றார்.. அவளது அக்கா "ஏன்டி உனக்கு நான் ரொமான்ஸ் பண்ணினா மூக்குல வேர்த்திடுமா? உடனே வந்திருவ… உனக்குதான் அதுக்கு கொடுப்பனை இல்லை.. இங்க வந்து என் வாழ்க்கையையும் கெடுத்திட்டு இருக்க என்று பேச காவ்யாவுக்கு ஒரு மாதிரியாகிவிட எதுவும் பேசாது தமிழுடன் பேச சென்றாள்.

தமிழுடன் பேசிக்கொண்டிருக்கும் போது உள்ளே சத்தம் கேட்டது. உடனே தமிழும் காவ்யாவும் உள்ளே ஓடினர்.. அங்கே காவ்யாவின் அக்கா கீழே விழுந்து கிடந்தாள். உடனே காவ்யா அக்காவை மடியில் வைத்துக்கொண்டு தமிழை தண்ணீர் கொண்டு வரச் சொன்னாள். சத்தம் கேட்டு ராசுவும் வந்திருந்தான்..

"என்னாச்சி காவ்யா கண்மணிக்கு? "

"தெரியல்லை மாமா அக்கா மயக்கம் போட்டு விழுந்திட்டாள்." என்றவள் தமிழ் கொண்டுவந்த தண்ணீரை அவளது முகத்தில் தெளித்தாள். தமிழும் பக்கத்தில் இருந்த மருத்துவிச்சியை அழைத்து வந்தாள்.

அவர் கண்மணியின் கையை பிடித்து நாடி பிடித்து பார்த்துவிட்டு" பயப்படாதீங்க எல்லாம் நல்ல விசயம் தான் கண்மணி உண்டாகியிருக்கா" என்றார். எல்லோருக்கும் சந்தோசமா இருந்தது.. சிறிது நேரத்தில் கண்மணி கண்விழிக்க அவளுடன் இந்த சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்..

தமிழும் அவர்களுடன் இருந்து விட்டு சென்றபின் காவ்யா அக்காவின் அருகில் வந்து அவளது வயிறை தொட்டுப்பார்த்து அக்கா பாப்பா எப்போ வரும் என்றாள். உடனே கண்மணி அவளது கையை தட்டிவிட்டாள்... "என்ன அக்கா.?"

எதுவும் பேசாது இருந்தாள் கண்மணி. காவ்யா தனது அறைக்குச் சென்றுவிட்டாள். அப்போது வெளியே கண்மணியும் அவளது அம்மாவும் பேசிக்கொண்டிருந்தது அவளுக்கு கேட்டது..

"அம்மா அவளை போகச்சொல்லு"

"எங்க போகச்சொல்லடி"

"எங்கையாவது போகச் சொல்லுமா"

"ஏன் கண்மணி? "

" அம்மா இவ ஒரு ராசி கெட்டவ.. அவளே புருஷனை விட்டுட்டு வந்து இங்க இருக்கா. என்ன பாவம் பண்ணினாளோ.. இவ என் வயித்தில கையை வச்சிப் பார்க்கிறாள். இவ கைபட்டு என் பிள்ளைக்கு எதுவும் ஆகிரும்னு பயமா இருக்கு அம்மா.."

" சரிடி காலைல அவள போகச் சொல்லிடுவம் " என்றார் அம்மா.

இதைக் கேட்ட காவ்யாவுக்கு நெஞ்சமெல்லாம் உடைந்து விட்டது.

" நீ என்னோட அதிர்ஷ்ட தேவதை கண்ணம்மா.. நீ என்கூட இருந்தாலே எனக்கு எல்லாம் தானா வரும். கண்ணம்மா.. " என்று அடிக்கடி அவளை கொண்டாடும் கணவன் எங்கே.. அவளை தூற்றும் குடும்பத்தினர் எங்கே?.. சாதாரண ஊடலுக்காக அவனை பிரிந்து வந்தாளே இவள்.

பிரிவின் போதுதான் கணவனின் அருமை புரிகிறது.. அவனது தோள் சாய மனம் ஏங்கியது.. கணவனது மடியில் படுத்து அழுவதற்கு கண்கள் ஏங்கியது.. அன்பானவனது அணைப்பில் புகுந்து கொள்ள ஏக்கம் வந்தது.. அவளது உணர்வை உணர்த்தும் வகையில் பக்கத்து டீ கடையில் இருந்து வந்த பாடல் ஒலித்தது..

"உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு தேக்கி வைத்த வலிகள் தீரும்…"

உடனே அவளவனுக்கு போன் பண்ண எண்ணினாள்.. பிரிந்திருக்கும் போது அவனது எத்தகைய அன்பினை தூக்கியெறிந்துவிட்டு வந்துள்ளோம் என்று புரிந்தது… இணைந்திருக்கும் போது அவன் மீது கொண்ட காதலின் அளவு புரியவில்லை அவனை பிரிந்து இருக்கும் போதே அவன் மீது எத்தகைய அன்பை கொண்டிருக்கிறோம். அவனது உண்மையான அன்பினை சந்தேகப்பட்டு விட்டு வந்துவிட்டோம் என்று நினைத்து அழுதவள் போன் பண்ணினாள் அவனுக்கு…..

அங்கே காவ்யாவின் போட்டோவைப் பார்த்துக்கொண்டு அவளோடு பேசிக்கொண்டிருந்தான் பிருந்தகன்

"உன்னை அடிச்சிட்டன் என்று என்னை விட்டுட்டு போயிட்டியே கண்ணம்மா.. ஏன் அடிச்சன்னு யோசிக்கலையா நீ? "

" நீ எப்பிடி டி நான் உன்னை விட்டுட்டு வேற ஒரு பொண்ணுகூட போவன்னு நினைக்கலாம்.. அவ என்கூட வேலை செய்ற பொண்ணுடி.. அவளோட ஒரு நண்பன் மாதிரி பழகுறன்டி நீ அதை தப்பா பேசவும் என்னால தாங்கிக்க முடியல்லை அதுதான் அடிச்சிட்டன். "

" அதுக்காக உன்னோட அத்தானை விட்டுட்டு எப்பிடி போகலாம் கண்ணம்மா வந்திருடி எங்கிட்ட… ரொம்ப கஸ்ரமா இருக்குடி.. " என்று பேசிக்கொண்டிருக்கும் போது அவனது கண்ணம்மாவிடம் இருந்து போன் வந்தது.. உடனே போனை எடுத்தான்.

" கண்ணம்மா " என்றான் தனது காதல் கவலை அத்தனையும் சேர்த்து.. அவனது குரலை கேட்ட காவ்யாவிற்கு அழுகை வந்தது..

" பேசு கண்ணம்மா நீ நல்லாதானே இருக்கிற.. பேசுடி" அவனது அன்பான வார்த்தையில் உடைந்தாள் காவ்யா..

" அத்தான்… வாங்க…"

"என்னாச்சிடி அழுறியா? என் கண்ணம்மாக்கு அழக்கூட தெரியுமா? கண்ணம்மா எங்கடி இருக்கிற? சொல்லு நான் உடனே வர்றன்.." ஆம் பிருந்தகனுடன் இருக்கும் போது காவ்யாவின் கண்களில் கண்ணீர் வந்ததேயில்லை.. அப்படி பார்த்துக்கொண்டான் அவன்.. அத்தகையவனையா சந்தேகப்பட்டோம் என்று மேலும் அழுதாள்.

"அத்..தான்…நீங்க வேணும்… வாங்க… வீட்டுக்கு வாங்க…. இப்போ… வாங்க… " என்று அழுதபடி பேசினாள். அவளது அழுகை அவனை உயிரோடு கொன்றது.

"கண்ணம்மா அழுறத நிறுத்துமா"

"என்ன மன்.. னிச்"

"வேண்டாம் கண்ணம்மா நீ எங்கிட்ட போய் மன்னிப்பு எல்லாம் கேக்கணுமாடி அந்தளவுக்கு தூரமா போய்டனா நான்? "

" இல்லை அத்தான்…அத்தான் உங்களை பார்க்கணும் வாங்க" என்று மீண்டும் அழுதாள்.

"கண்ணம்மா இனிமேல் நீ அழுறதா இருந்தா அது நான் செத்ததுக்கு பிறகுதான்… " என்றான்..

" இல்லை அத்தான் நான் அழலை அப்பிடி எல்லாம் சொல்லாதீங்க"

" சரி நான் சொல்லலை.. நீ இரு நான் கொஞ்ச நேரத்தில அங்க இருப்பன் சரியா? "

" ம்.. சீக்கிரமா வாங்க அத்தான்"

பிருந்தகன் ஊரிலிருந்து காவ்யாவின் ஊருக்கு செல்வதற்கு நான்கு மணிநேரமாகும்.. ஆனால் பிருந்தகன் இரண்டரை மணி நேரத்தில் அவனவளின் வீட்டிற்கு வந்திருந்தான்.. வெளியில் நின்று காவ்யாவுக்கு போன் பண்ணி வெளியே வரச் சொன்னான்.

அவளும் வேகமாக அவனிடம் வந்தாள்.. அவனைப் பார்த்தாள்.. என்றும் அவளிடம் காதல் பேசும் அழகிய கண்களில் கருவளையம்… கன்னம் வற்றி.. முகத்தில் தாடியுடன்.. உடல் மெலிந்து தன்னவன் அடையாளம் தெரியாதவாறு நின்றவனை பார்த்த காவ்யாவிற்கு உயிரே போய்விட்டது..

பிருந்தகனும் தனது கண்ணம்மாவை மேலிருந்து கீழாக பார்த்தான்.. அவன் ஆசையுடன் முத்தமிடும் அவளது பப்பாளி கன்னங்களை காணவில்லை.. விழிகள் பத்தடி ஆழத்தில் இருந்தது.. உடல் மெலிந்து பார்ப்பதற்கு பல நாட்கள் பட்டினி கிடந்தவள் போல் இருந்தாள்.. தனது கண்ணம்மாவை அப்படி பார்த்ததும் இன்னும் உயிரோடு நான் இருக்கணுமா என்று நினைத்தவன் அனுமதியின்றி விழிநீர் வடிந்தது…

பைக்கை விட்டு இறங்கிய பிருந்தகன் தனது கண்ணம்மாவை நோக்கி தனது கைகளை விரித்து கண்களால் வா.. என்று அழைத்தான்..

அவனையே பார்த்தவாறு நின்றிருந்தாளே தவிர அவனிடம் செல்லவில்லை அவனின் ஆருயிர் மனைவி.. மெல்லிய சிரிப்போடு..

"வாடி" என்றான்.. அவ்வளவுதான் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக சென்று அவனை அணைத்துக் கொண்டாள். அவனும் அவளை இறுக்கி அணைத்தான்.. இருவரும் எதுவும் பேசவில்லை… மௌனம்…ஊடலின் பின் இணையும் போது அவர்கள் பேசும் அற்புதமான மொழி. மௌனமே… இருவரும் அந்த நிமிடத்தை இரசித்தனர்.. சிறிது நேரத்தில் அவளை விட்டு விலகிய பிருந்தகன் வீட்டில் இருந்தவர்களை அழைத்தான்.

"உள்ள வாங்க மாப்பிள்ளை"

"எதுக்கு?"

"என்ன மாப்பிள்ளை இப்பிடி பேசுறீங்க?"

"அப்புறம் எப்படி பேசுற?


" என்னாச்சி மாப்பிள்ளை "

" இன்னும் என்ன நடக்கணும்.. என் பொண்டாட்டிக்கு அழத் தெரியும் என்று எனக்கு இன்னைக்கு தான் தெரியும்… அவள் அழும் போது நான் எதுக்கு உயிரோட இருக்கனும்னு தோணிச்சி… இங்க என்ன நடந்திச்சினு எனக்கு தெரியாது ஆனால் அவ மனசு உடைஞ்சி போறளவுக்கு ஏதோ நடந்திருக்கு.. ஆனால் அது என்னனு கேட்டு அவள மேலும் கஸ்ரப்படுத்தமாட்டன்… அவ என்னோட அதிர்ஷ்டம்… என் வாழ்க்கையில எனக்கு கிடைச்ச ஒரு பொக்கிஷம்.. அப்படிப்பட்டவளை அழ வச்ச வீட்டுல நான் எப்பிடி கால் எடுத்து வைப்பன்னு நீங்க நினைப்பீங்க.. இனிமேல் உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… காவ்யா வா போகலாம்… "

" ம்… " என்றவள் அவனுடன் சென்றுவிட்டாள்….பைக்கில் செல்லும் போது காவ்யா அவனது தோளினை பிடிக்க வருவதும் தயங்குவதுமாக இருந்தாள்.. இதனை தனது பைக் கண்ணாடி மூலம் பார்த்த பிருந்தகன்" நான் எப்பவும் உன்னோட அத்தான்தான் கண்ணம்மா.. இந்த கொஞ்ச நாள் நாம விலகி இருந்திருந்தது உண்மைதான்.. ஆனால் நம்மளோட மனசு.. நம்மளோட காதல் இதெல்லாம் அப்படியேதானே இருக்கு.. இந்த இடைவெளி நம்ம காதலை அதிகரிச்சிருக்கு… நாம ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற காதலோட ஆழத்தை புரிஞ்சிக்க வச்சிருக்கு….. கண்ணம்மா நம்மளோட உறவுக்கு எப்பவும் பிரியவில்லை.. சரியா நீ தாராளமாக என் தோளை பிடிச்சிக்கலாம்… வேணும்னா கட்டிக்கூட பிடிச்சிருக்கலாம்… நான் எப்பவும் உனக்கு மட்டும் தான் சொந்தம்… நமக்கு இடையில யாருக்கும் இடமில்லை… கண்ணம்மா.. " என்றவனின் காதலில் கரைந்த காவ்யா" அத்தான் உங்களை விட்டுட்டு நான் போனதுக்கு என்னை மன்னிப்பீங்களா?? "

" கண்ணம்மா தப்பு உன்மேல இல்லைடா..நானும் அன்னைக்கு வார்த்தைய விட்டிருக்க கூடாதுதான்.. சரியா… இனிமேல் மன்னிப்பெல்லாம் கேட்கக் கூடாது என் கண்ணம்மா"

சரி அத்தான்.. எந்த ஜென்மத்தில நான் செய்த புண்ணியமோ நீங்க எனக்கு கணவனா கிடைச்சிருக்கிறங்க"

"நான் தான் புண்ணியம் செய்திருக்கன்.. நீ எனக்கு கிடைக்க.."

"இல்லை..நான் தான் "

"சரி விட்டா மாறி மாறி சொல்லிக்குவம்… முதல்ல வீட்டுக்கு போகலாம்" என்றான்..

காவ்யாவும் பின்னிருந்து அவளவனை அணைத்துக்கொண்டு அவனது முதுகில் சாய்ந்து கொண்டான்.. பிருந்தகனும் அவனை அணைத்திருந்த அவளது கைகளை பிடித்து முத்தம் வைத்தவன் பைக்கை வேகமாக ஓட்டினான்….

இருவரும் தமது ஊடலை மறந்து மனது நிறைந்த காதலுடன் பயணித்தனர்.. இவர்கள் காதல் பயணம் தொடரட்டும்……

💞💞முற்றும்💞💞

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் அன்புத்தோழி
✒️✒️திவ்யதுர்ஷி. ✒️✒️
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
40
18
Deutschland
அழகான கதை ❤️
வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
மன்னிப்பாயா என்னவனே…..

திவ்யதுர்ஷி

கணவன் மனைவி ஊடல்
மனைவி கணவனின்
மனதை புரிந்து கொள்ளாமல்
முறுக்கி கொண்டு தாய்வீடு வர
அக்காவின் பிடித்தமின்மை
அப்பட்டமாய் தெரிய
கணவனின் அன்பில்
காதலில் திளைத்த நாட்களை
காவ்யா எண்ணி தவிக்க....
மனதை வதைக்கும் செயல்கள்
மனையில் நடந்தேற
மன்னவன் நினைவு வந்து
கண்கள் கண்ணீரில் கரைய
கணவனுக்கு அழைத்து
கூட்டிச் செல்ல கூற
கண்ணம்மாவின் குரலில்
காதல் நெஞ்சம் பதற
பறந்து வந்து தன்னவளை
தன்னுடன் அழைத்துக் கொண்டு
பரிதவிக்கும் மனைவியை
அணைத்து செல்லும் பிருந்தகன்..

சின்ன சின்ன ஊடலகள்
நம்மை பிரிக்க இல்ல கண்ணம்மா _ நம்
காதல் வளர்ப்பதற்கு.....
ஊடலுடன் காதல்
உள்ளத்திற்க்கும்
உறவுக்கும் பலமே .....

வாழ்த்துக்கள் சகி 💐👏👏👏💐🤩🤩🤩👍👍👍👍
 

திவ்யதுர்ஷி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 28, 2022
461
14
43
Sri Lanka
மன்னிப்பாயா என்னவனே…..

திவ்யதுர்ஷி

கணவன் மனைவி ஊடல்
மனைவி கணவனின்
மனதை புரிந்து கொள்ளாமல்
முறுக்கி கொண்டு தாய்வீடு வர
அக்காவின் பிடித்தமின்மை
அப்பட்டமாய் தெரிய
கணவனின் அன்பில்
காதலில் திளைத்த நாட்களை
காவ்யா எண்ணி தவிக்க....
மனதை வதைக்கும் செயல்கள்
மனையில் நடந்தேற
மன்னவன் நினைவு வந்து
கண்கள் கண்ணீரில் கரைய
கணவனுக்கு அழைத்து
கூட்டிச் செல்ல கூற
கண்ணம்மாவின் குரலில்
காதல் நெஞ்சம் பதற
பறந்து வந்து தன்னவளை
தன்னுடன் அழைத்துக் கொண்டு
பரிதவிக்கும் மனைவியை
அணைத்து செல்லும் பிருந்தகன்..

சின்ன சின்ன ஊடலகள்
நம்மை பிரிக்க இல்ல கண்ணம்மா _ நம்
காதல் வளர்ப்பதற்கு.....
ஊடலுடன் காதல்
உள்ளத்திற்க்கும்
உறவுக்கும் பலமே .....

வாழ்த்துக்கள் சகி 💐👏👏👏💐🤩🤩🤩👍👍👍👍
தங்களின் பொன்னான நேரத்தில் எனக்காக நேரம் ஒதுக்கி எனது சிறுகதையை வாசித்து ரிவ்யூ வழங்கியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் அக்கா.😍😍😍 இதுபோன்றவையே எங்களை மென்மேலும் எழுத ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.... மிக்க நன்றி அக்கா ❤️❤️❤️❤️❤️
 

வித்யா வெங்கடேஷ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 8, 2022
239
209
63
USA
காதலும் கோபமும்,கட்டியவனிடம் மட்டுமே காட்ட வேண்டும் என்று உணர்த்தும் அழகான கதை💕💕

பிறந்த வீட்டில் அவளை ஏன் மதிக்கவில்லை என்பதை குறிப்பிட்டு சொல்லிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் நட்பே. அக்கா டூ மச் வாய்😀😀
 

திவ்யதுர்ஷி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 28, 2022
461
14
43
Sri Lanka
காதலும் கோபமும்,கட்டியவனிடம் மட்டுமே காட்ட வேண்டும் என்று உணர்த்தும் அழகான கதை💕💕

பிறந்த வீட்டில் அவளை ஏன் மதிக்கவில்லை என்பதை குறிப்பிட்டு சொல்லிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் நட்பே. அக்கா டூ மச் வாய்😀😀
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அக்கா 😍😍😍