• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

14.ஆண்டாள் வெங்கட்ராகவன் - ஆறாவடுவோ ஔஷதமோ?

  • Thread starter Aandal Venkatraghavan
  • Start date
A

Aandal Venkatraghavan

Guest
பெயர்: ஆண்டாள் வெங்கட்ராகவன்

கதைப் பெயர்: ஆறாவடுவோ ஔஷதமோ?

கண்களில் வழியும் கண்ணீருடன் அந்த கடலை வெறித்துக் கொண்டிருந்தாள், மூரலழகி. பேரில் பொதிந்த புன்சிரிப்பு பாவம் அவள் வாழ்க்கையில் இல்லை போலும். தன் கண்ணீர் கொண்டு கடல் நீரை அதிகப்படுத்தும் முயற்சியில் இருந்தாள்.

அந்த மாலை வேளையிலும் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அவள் அருகில் யாரோ அமரும் அரவம் கேட்க திரும்பி பாராமலே யாரென அறிந்து கொண்டவளுக்கு மேலும் மனம் கனத்தது.

அவன் வந்து‌ அமர்ந்த பின்பும் மௌனமே நிலவியது. அவள் அருகில் பனியாய் குளுகுளுத்த பொழுதுகளின் நினைவுகள் எல்லாம் தொலைவில் நின்று அவனைக் கண்டு கைகொட்டி சிரித்தன, தற்போது தீயாய் சுடுமிந்த அருகாமையால்.

மனதில் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தான்‌ போலும். பாவம் ஆயிரம் காளைகளையும் அடக்கும் வல்லமையுடையானுக்கு பூவவள் விழிகளை நேருக்கு நேராக பார்த்து பேச முடியவில்லை.

அதிலும் காதல் கசிந்த விழிகளில் இப்போது கசியும் கண்ணீர் அவன் மனதை குறுதி கசிய செய்கிறதல்லவா! "மூரல்" என்றவன் அழைப்பில் அவள் இதழில் ஒரு விரக்தி புன்னகை விருந்தாளியாக வந்தது. ஆசையும் காதலும் ததும்பும் 'முகி' என்ற ‌அழைப்பு இன்று‌ 'மூரல்' என்றான விதியை எண்ணி உதித்தது போலும்.

அவனை திரும்பி பார்க்கும் தெம்பற்று கடலை வெறித்தபடியே "ம்ம்" என்றாள். "இ..இது சரிவராது. இரு உயிர்கள் மட்டுமே போதும்னு காதல் செய்யலாம். ஆனா கல்யாணம் அப்படி இல்ல. அது ரெண்டு குடும்பம் இணையும் விஷயம். உனக்கு நான் விளக்கம் கொடுக்கும் அவசியமில்லைனு நம்புறேன்" என கதிர் கூற மீண்டும் அதே‌ புன்னகை.

காதல் என்றதுமே அவளது தகப்பனார் மறுத்து சண்டையிட வாத பிரதிவாதங்கள் முத்தி பெரியவர் விஷமுண்டு மருத்துவமனையில் எமனுடன் போராடி வந்திருக்க மீண்டும் எப்படி அவளால் காதல் பேச்சை எடுக்கமுடியும்? கதிரவன் வீட்டிலும் அவனது தாய் தனது அண்ணன் மகளை தான் மருமகளாக ஏற்பேன் என விடா பிடியாக இருக்கவே அவனும் என்ன செய்வான்?

காதலுக்காக ஒன்றல்ல இரண்டல்ல, ஆறு மாத காலமாக வீட்டில் போராடிக் கொண்டிருக்கும் இந்த காதல் புறாக்கள் இன்று‌ கண்ணீருடன் பிரவெனும் பிரம்மாஸ்திரம் கொண்டு உயிர்ப்பை உடைத்துக் கொண்டு செல்ல அல்லவா வந்துள்ளனர்!

"புரியுது" என்ற ஒற்றை வார்த்தையில் மொத்த உயிர்ப்பையும் கரையவிட்டு கூறியவளை அள்ளி அணைத்து ஆறுதல் கூற அவன் கைகள் பரபரத்தன.

இங்கு முக்கால் சதவிகிதம் காதல் வலியில் தான் முடிகின்றது என கேட்ட பேச்சுக்கள் எல்லாம் தற்போது வலிக்க வலிக்க உணர்த்தி உணரச் செய்தது இருவரையும். "எனக்கு என்ன சொல்லனு தெரியலை" என அவன் முடிந்தமட்டும் குரலை கொண்டு வந்து கூற "சொல்ல ஒன்னுமில்லையே! நம்ம பண்ண தப்புக்கு இப்போ அனுபவிக்குறோம்" என்றாள்.

"தப்பா?" என அவன் புரியாமல் வினவ "ம்ம்.. எனக்கு பாட்டு புடிச்சது தப்பு, நீங்க காலேஜ்ல ஆர்கிஸ்ட்ரா ஹெட்னு தெரியும்போதே உங்க மேல உண்டான க்ரேஸ் தப்பு, உங்க கிட்ட பேசினது தப்பு, நீங்க என் குரல் நல்லா இருக்குனு பாட வச்சது தப்பு, ஒருத்தர் மேல ஒருத்தர் வச்ச அக்கறை காதலா கசிந்தது தப்பு, அதை நம்ம உணர்ந்தது எல்லாத்திலும் பெரிய தப்பு. இத்தனை தப்புகளுக்கும் தண்டனை வேண்டாமா?" என அழுகையுடனே கூறினாள்.

தமிழில் பலகோடி வார்த்தைகளிருந்தும் அவளுக்கு பதில் கூற அவனுக்கு ஒரு வார்த்தையும் கிடைக்கவில்லை! மௌனமாக இருந்தவனை பார்த்தவள் "கதிர்" என்க அவளை திரும்பி பார்த்தான்.

"உங்கள மறந்துடுவேன், நீங்க எனக்கு வேணாம் இப்படிலாம் பேசி இனிக்க இனிக்க காதலிச்ச காதல்ல வெண்ணீர கொட்டி அறுத்துப்போட நா விரும்பலை. நம்ம காதல் ரொம்ப தூய்மையானது. ஆனா எல்லா காதலுமே கல்யாணத்துல முடியறதில்லையே! நா திகட்ட திகட்ட காதலிச்ச காதல் எனக்கு இல்லைனு ஆகிடுச்சு. ஆனா அதோட தித்திப்பான நினைவுகளாவது விஷமில்லாம என்கிட்ட இருக்கணும். நிச்சயம் உங்கள நினைச்சுட்டு கல்யாணம் பண்ணாம என்னால இருக்க முடியாதுங்குறது தான் நிதர்சனம். அப்படியிருக்க வருங்காலத்துல வரப்போறவர்கிட்ட சொல்லும்போது கண்ணுல கண்ணீர் இல்லாம நிதர்சனம் உணர்ந்து பேசி பிரிஞ்சோம்னு ஒரு பெருந்தன்மை இருக்கணும். ப்ளீஸ் நம்ம காதல் பொய்ச்சு போச்சுனு சொல்லாதிங்க. அதுக்கு கைசேரும் குடுப்பன இல்லை. இதை நம்ம ஏத்துக்கிட்டு தான் ஆகணும்" என நீலமாக பேசியவளை இமைக்காமல் பார்த்தான்.

'இப்படி ஒரு தேவதையை அந்த கடவுள் தன்னிடமிருந்து பிடுங்குகின்றானே‌' என்ற வேதனை தாளவில்லை அவனுக்கு. கண்களில் கண்ணீருடன் "ஐ லவ் யூ முகி" என்றவனை கண்களில் கண்ணீரும் இதழில் புன்னகையுமாக பார்த்தவள் "வலிக்கும் கதிர். ரொம்பவே வலிக்கும். ஆனா தாங்கிப்பேன். இந்த ஜென்மத்துக்கு உங்களுடனான பந்தம் கிடைக்குற பாக்கியம் எனக்கில்லை" என கூறி கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு முகம் கொள்ளா புன்னகையுடன் கை நீட்டி "ஹாய் சீனியர். நா உங்க பாட்டுக்கான ரசிகை. அன்றும் இன்றும் என்றும்" என கூறி வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்தோடினாள்.

செல்பவளை கண்டவன் கண்கள் கண்ணீர் திரையிட்டு அவளை மறைக்க, அவள் தன் பார்வை யிலிருந்து மறையும் வரையாவது விழிகளில் நிரப்பிக் கொள்ள வேண்டி இமை சிமிட்டி கண்ணீரை துறத்தினான்.

அவள் சென்ற பின் கடலை வெறித்தவனுக்கு மனம் ரணமாகத் துடித்தது. திருமணம் தானும் ஒரு பெண்ணும் உடன்பட்டு வாழ வேண்டியது. அதை அற்ப காரணங்களுக்காக நிராகரிப்பவர்களிடம் பேசிப் பேசி வார்த்தைகள் தான் வீணாகின்றன என்பதை அவன் மனம் உணர்த்தியது.

தங்கள் காதல் காவியத்தை அழியா ஓவியமாக மனதில் தீட்டிய தூரிகையவள் இனி‌ இல்லை என்ற உண்மையை ஏற்க அவன் மனம் சண்டித்தனம் செய்தது. மௌனமே உருவாக வீடு வந்தான்.

முன்னறையில் சிவந்த விழிகளுடன் சோகமே உருவாக இருந்த மகனை கண்ட தாயவள் உள்ளம் ஒரு நொடியேனும் முனுக்கென்றதோ? இறைவனுக்கே வெளிச்சம்!

"தம்பி" என்றவர் வார்த்தை அக்கறையுடன் அவனிடம் அவன் சோகம் பற்றி வினவ பரிவாக ஒலிக்கவே, தலைநிமிர்த்தி தாயை பார்த்தவன் "அ..அவ இல்லை ம்மா. ந.. நாங்க பேசி ப்..பிரிஞ்சுட்டோம். காதல் வேணும்னா நாங்க இருவரா பண்ணிருக்கலாம். கல்யாணம் இரண்டு குடும்பமும் இணையுறது. அது அமையாத பட்சத்துல நாங்க கல்யாணமே பண்ணிகிட்டாலும் அது தோல்வி தான்" என்று விட்டு தன்னறை நோக்கிச் சென்றான்.

இரண்டே எட்டில் மீண்டும் திரும்பி தாயை பார்த்தவன் "உங்களுக்கு விருப்பமில்லைனு என் உயிர்ப்பையே வேணாம்னு வந்திருக்கேன். எனக்காக ஒரே ஒரு‌ உதவி ம்மா. உங்க ஆசைபடி உங்க அண்ணன் மகளை அவளுக்கு சம்மதம்னா நா கல்யாணம் பண்ணிக்குறேன். ஆனா சத்தியமா இப்ப முடியாது ம்மா. எ.. என் முகி இங்க ஆலமா பதிஞ்சிருக்கா" என தனது இடதுபுற மார்பை சுட்டிக் காட்டி கூறிச் சென்றான்.

தனது அக்கறையான அழைப்பு அவனை சென்றடையாத விதம் அவன் மனம் இறுகியுள்ளதை தாயவள் மனம் வலிக்க வலிக்க உணர்ந்தது.

கடிகாரம் நேரத்தை செவ்வனே கடத்துவதுபோல் அவனது மனமும் இயந்திரமாய் நாட்களை கடத்தியது. சங்க இலக்கியங்களில் ஆண்களை கருத்தில் கொள்ளவில்லை போலும்! காதலனை பிரிந்து வாடும் பெண்களுக்கு பசலை நோய் வருமென்றால், காதலியின் பிரிவில் வாடும் ஆண்களுக்கு என்ன நோயென கூறுவது?

அப்படி ஒரு பெயரற்ற நோயில் தான் அவன் தவித்துக் கொண்டிருந்தான். 'தித்திப்பான விஷமற்ற நினைவுகள் போதும்' என தன்னிடம் யாசகம் வேண்டி நின்ற தன்னவளின் முகம் வந்து வந்து போனது.

'வலியற்ற காதலெல்லாம் கதைகளிலும் படங்களிலும் தான் போலும்' என்ற விரக்தி அவனை கொலையாய் கொன்றது.

'கன்று முண்ணாது கலத்தினும் படாது

நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்

கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது

பசலை யுணீஇயர் வேண்டும்

திதலை யல்குலென் மாமக் கவினே'

என்ற வெள்ளிவீதியாரின் குறுந்தொகை பாடலில் கன்றும் உண்ணாத கலத்திலும் சேராது நிலத்தில் வீணாக வடியும் பாலைப் போல் தனக்கும் ஆகாது தன்னவனுக்கும் ஆகாத என்னழகை பசலை நோய் உரிஞ்சுகிறது என்ற கருத்துக்கு ஏற்றார்போல் மனதின் வெம்மையில் முகம் வெளிறி காணப்பட்டாள், பெண்.

அவளவனை போலவே தானும் வீடுவந்து தன் காதலை துறந்ததை கூறிவிட்டாள். பழையதை மறக்க வேண்டி எடுக்கும் முயற்சி வெற்றியடையும் வரை காக்கவேண்டி கெஞ்சிய மகளை காண பெற்றவர் மனம் வெந்து குளிர்ந்தது என தான் கூற வேண்டும்.

இப்படி உயிர்ப்பற்று திரியும் மகளை காண சகிக்காத தாயின் ஆதங்கம் அவ்வப்போது இருதுளி கண்ணீரோடு கணவனை சென்றடைவது வழமையானது.

அப்படியே ஆறு மாத காலமும் பறந்தோடியது!

எப்போதும் போல் அன்றைய நாளையும் துவங்கிய மூரலழகி தன்னறை விட்டு வர "மூரு குட்டி" என்ற தந்தையின் குரல் நிறுத்தியது.

"சொல்லுங்கப்பா" என திரும்பியவளிடம் "உனக்கு ஒரு வரன் முடிவாகிருக்குடா‌" என்றார். 'வரன் வந்திருக்கு என்றெல்லாமில்லை. முடிவாகிவிட்டது' என்ற விரக்தியுடன் புன்னகைத்தவளது சிரிப்பில் அத்தனை வேதனை இருந்தது. காலம் கடந்தும் காயமாறவில்லையே!

"ம்ம் சரிப்பா" என்றவள் ஒரு வார்த்தையும் மாப்பிள்ளையை பற்றி கேட்காமல் செல்ல "யாரு என்னனு ஒரு வார்த்தையும் கேட்டுக்காம போனா என்னடி அர்த்தம்?" என அன்னை கடிந்தார். அன்னையை திரும்பி பார்த்தவளது பார்வையின் வீச்சு அவர் உள்ளத்தில் ஊடுருவியிருக்க வேண்டும்!

"அப்பா எது செஞ்சாலும் என் நல்லதுக்கா தானே ம்மா இருக்கும்? அப்பறம் எதுக்கு அதுலாம் கேட்டுகிட்டு" என்றுவிட்டு சென்றவளை கண்ட தந்தையவர் மனம் நொந்து கண்கள் ஊற்றெடுத்தது.

தன் வேலையிடம் வந்து வண்டியை நிறுத்தியவள் திரும்பவே அத்தனை நாள் அவள் கண்ணில் படாதிருந்தவன் நின்றிருந்தான்.

அவனை கண்டதும் மனதில் திடீரென்று புயல் ஒன்று வந்து மோதியது போல் ஸ்தம்பித்து நின்றாள். ஒரு நொடியேனும் தன் காதல் காலத்திற்கு சென்று அவள் வாழ்ந்துவிட்டு மீண்டதை அவள் முகம் காட்டிய உணர்வில் புரிந்து கொண்டான்.

கதிர் அவளை நெருங்கி வரவே தன்னை சமன் செய்து கொண்டவள் "வ..வாட் அ சர்பிரைஸ் சீனியர்?" என்றாள். அதில் 'உன்னை நான் கண்டு கொண்டேன்' என்பது போன்ற புன்னகையை சிந்தியவன் "எப்படியிருக்கனு கேக்க தோனலைல்ல முகி?" என கூற அவனது 'முகி' என்ற அழைப்பிலேயே தேங்கி நின்றுவிட்டாள்.

"என்ன முகி?" என அவன் கேட்க "அ..அது.. என்ன சி..சீனியர்?" என தடுமாறினாள். "ரொம்ப நாள் கழிச்சு பாக்குறது எப்படி இருக்கு?" என அவன் காதலாக கேட்க பாவை பாவம் குழம்பி தான் போனாள்.

தனக்கானவனாக கருதப்பட்டவன் தனக்கில்லை என்ற பட்சத்தில் காதல் ததும்பும் அவனது அழைப்பும் பேச்சும் அவளை ஆயிரம் முறையேனும் பொசுக்கித் தீர்த்திருக்கும். "எ..என்ன சீனியர்? நி.. நீங்க இங்க எதுக்கு வந்தீங்க?" என அவள் தயங்கி தயங்கி கேட்க "ரொம்ப நாள் கழிச்சு பாக்கும்போது எப்படியிருக்க என்ன பண்றனு கேக்காம ஏன் வந்தேன்னு தான் கேப்பியா?" என்றான்.

அவளது இமைகள் படபடத்தது. 'ஏன்டா என்ன சோதிக்குற?' என வேதனையின் விளிம்பில் நின்றவளை அதற்கு மேல் வாட்ட மனமின்றி போனது அவனுக்கு. "முகி" என்று அவன் அழைக்க சட்டென திரும்பி நின்று கொண்டாள். அவனை கண்ணீரின்றி எதிர்கொள்ள அவளால் முடியாத கோபம் எரிமலையாய் அவளையே சுட்டெரித்தது. அதே கோபத்துடன் திரும்பியவள் முன் அத்தனை நேரம் இருந்தவனது சுவடே இல்லை!

'இதென்ன? மாயையில் மட்டுமே நிகழ்வதெல்லாம் எனக்கு நிஜமாகி வருகின்றதோ?' என்ற பிரம்மிப்புடன் அப்படியே நின்றவள் முன் வந்த அவளது தோழி "ஏ.. என்னடி பேயறஞ்ச மாதிரி நிக்குற?" என கேட்க "அ..ஆங்?" என்றாள்.

"மெண்டல்.. என்னாச்சு?" என்ற தோழியை பார்த்து ஒன்னுமில்லை என தலையாட்டி சென்றாள். செல்லும் அவளையே சுவரோர சித்திரமாய் ஒளிந்திருந்தவன் விழிகள் குறும்புடன் வட்டமிட்டன.

வேலை முடித்து வீடு திரும்பியவள் விறுவிறுவென சென்று புத்துணர்வு பெற்றுவிட்டு மாடிக்கு செல்ல அவளது எண்ணத்தின் நாயகன் அங்கே ஊஞ்சலில் அவளுக்கான தேனீருடன் இருந்தான்.

ஒரு நாளில் இரண்டாம் முறையாக உடைந்து போனாள். இத்தனை நாளில்லாமல் திருமணம் பற்றிய பேச்சு வந்ததும் அவனது நினைவுகளுடன் உருவமும் வந்து இம்சிக்கிறதோ என பிரம்மிப்பாக உணர்ந்தாள். ஆனால் நிதர்சனத்தை பற்றி யோசித்தவளுக்கு ஒரு தெளிவு கிடைத்தது.

அவன் முன் வந்தமர்ந்தவள் "நா ஒன்னும் சின்னப்பிள்ளை இல்ல.. ஃபேரி டெய்ல்ஸ், ஹாரி பாட்டர் போல மாயாஜாலத்தை கதையோட விட்டுச் செல்லும் மனப்பக்குவம் உள்ள பெரிய பொண்ணு. அதனால மறுபடியும் மாயமா மறைய வேணாம்" என்க தேனீரை அருந்தியபடி "ம்ம் ம்ம்" என தலையாட்டினான்.

அப்போதே அதை கவனித்தவள் "நீங்க எப்படி இங்க?" என கேட்க அவளை நக்கல் சிரிப்புடன் பார்த்தான். "மாப்பிள்ள" என்றபடி அங்கு வந்த மூரலின் தாய் "இந்தாங்க மாப்பிள்ள" என ஒரு தட்டில் பஜ்ஜியை வைத்துவிட்டு செல்ல இங்கே பாவை புரியாத புதிரில் திகைப்புடன் கிடந்தாள்.

முந்தைய வாரம் மூரல் வீட்டில் இல்லாத அந்த மாலை பொழுது..

கூடத்தில் எதிரெதிரே மௌனமாக அமர்ந்திருந்தனர் அவளது தந்தையும் காதலனும். "நா சுத்தி வளைச்சு பேச விரும்பலை மாமா. முகிய நான் எவ்வளவு ஆழமா காதலிச்சேன்னு அவ கூட இருந்த நிமிடங்கள விட அவ இல்லாத இந்த ஆறு மாசம் தான் அணு அணுவா உணர்த்திச்சு. எல்லாம் இருந்தும் தாய்வாசம் இல்லாம தவிக்குற குழந்தையோட நிலைபோல தான் நானும் இருந்தேன். முகி எனக்காக கடவுள் கொடுத்த தேவதை. நா வேலையில்லாம ஊதாரித்தனமா சுத்துறேன்னா கூட நீங்க யோசிக்கலாம்‌ மாமா. ஆனா நா, நீங்க எதிர்பாக்குற தகுதிகளோட தானே இருக்கேன்?" என்றவன் அவரை நிமிர்ந்து பார்த்து "தயவு செஞ்சி திருப்பி ஜாதி அது இதுனு அதே அற்ப காரணங்கள சொல்லி எங்க காதல்ல அமிலத்த வீசாதீங்க. என்கிட்ட நீங்க ஏதும் ஒரு குறை சுட்டி காட்டிருந்தா திருத்திக்க முடியாத பட்சத்தில் அப்படி ஒரு தேவதைக்கு குறையுள்ள நான் வேண்டாம்னு மனச தேத்திட்டு போகிருப்பேன். எங்க தெய்வீகமான காதல இப்படி அற்ப காரணங்களுக்காக நிராகரிக்கும்போது தான் மனசு ரொம்ப வலிக்குது மாமா" என்றான்.

அவன் விழிகளிலிருந்து கண்ணீர் நில்லாமல் பொழிந்தது. "எங்க காதலுக்காக என் முகிய உங்க கிட்டருந்து யாசகமா பெற கூட நான் தயாரா இருக்கேன் மாமா" என்றவன் அப்படியே மண்டியிட்டு அமர சட்டென எழுந்து நின்றவர் "தம்பி" என பதறினார்.

அவரை கண்ணீருடன் பார்த்தவன் "என்னை வேணாம்னு நிராகிக்கணும்னு செஞ்சுட்டு நாளை உங்க ஆசை பொண்ணு ஒரு உயிர்ப்பற்ற வாழ்க்கை வாழுறானு வருத்தப்படும் நிலை உங்களுக்கு வேண்டாம் மாமா" என கரகரத்த குரலில் கெஞ்சினான்.

தன் சேலை தலைப்பில் கண்ணீரை துடைத்துக் கொண்ட அவளது தாய் "உங்க வீட்ல ஒத்துக்க மாட்டேங்குறாங்களே ப்பா" என்க "எங்கம்மா ஏத்துகிட்டாங்க அத்த" என்றான்.

ஆம்! உயிர்ப்பற்று திரியும் மகனை காண மனம் சகிக்காத தாயுள்ளம் அண்ணன் மகள் தன் பிள்ளையை வேண்டாம் என்றதும் அத்தனை ஆனந்தத்துடன் அவனிடம் அவன் காதலுக்கு சம்மதம் கூறியிருந்தார்.

அவன் தோள் பற்றி தூக்கிய பெரியவர் "எம்மகள என்னவிட நல்லா பாத்துக்குற ஒரு பையன இனியும் வேண்டாம்னு சொல்ல மனமில்ல ப்பா" என கூற கண்ணீருடன் அவரை அணைத்துக் கொண்டான்.

ஆடவன் இவற்றை கூறி முடிக்கவே "கதிர்.." என்ற கதறலுடன் அவனை தாவி அணைத்தவள் ஆறு மாதமாக மனதில் தேக்கி வைத்த பாரம் அத்தனையும் தீரத்தீர அழுது தீர்த்தாள். ஆராத வடுவாக மாற இருந்த காதலே ஔஷதமாக வந்து இருவரையும் மகிழ்வித்திருக்க தொலைந்து போன பொக்கிஷம் கைசேர்ந்த திருப்தியில் மனம் நிறைந்த காதலை அவ்வணைப்பில் பகிர்ந்து கொண்டனர்.
 
Chitradevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 21, 2023
21
4
3
India

Kathir and mugi ❤️❤️ azhaganadhoru sirukadhai sakii
Vetri pera vazhthugal
 
A

Aandal Venkatraghavan

Guest
அருமை மா..
வாழ்த்துக்கள் :love: 🌹
உங்கள் பொன்னான கருத்துக்களுக்கு மிக்க நன்றி அக்கா 🥰🥰❤️
 
Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
27
18
Deutschland
காதலியை பார்ப்பதா இல்ல பெற்ற அன்னையின் மனதை பார்ப்பதா என்று தடுமாறும் காதலன் கதிர் ....😞
வலியுடன் கூடிய புரிதலுடன் பிரிவு ...😢அதனை கடந்து தங்களின் வாழ்க்கையை தனி தனியா
வாழ்ந்தார்களா ..?????
மாமனாரிடம் தனது காதலியை யாசகமா கேட்டான் பாருங்கள் அங்கே நிற்கிறான் கதிர் 😍செம
சூப்பர் ❤️
வெற்றிபெற வ வாழ்த்துக்கள் 💐
 
Wow.. such a lovely comments ❤️.. thank you so much akka 🥰❤️
 
  • Love
Reactions: Thani

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
கடலின் நீரில் கன்னியின் கண்ணீரும் கரைந்து சேருகிறதோ....
காதலர்களின் இனிமையான காதல் தருணங்களை எண்ணி
கரையின் ஓரம் கண்ணீரால்
கரைந்து போகும் கண்கள்....
காதலர்களாய் பிரிய நினைத்தாலும் காதல் பிரிய போவதில்லை....
காலமெல்லாம்
காதல் நினைவோடு
குடும்பத்திற்காக பிரியும் காதலர்கள்...
காலம் கடந்து சென்றாலும்
காதலை கடக்க முடியவில்லை....
கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்து
காத்திருக்கும் இரு காதல் உள்ளங்கள்.....
காதல் கொண்ட
காதலர்களை பிரித்த குடும்பம் காதலே சேர்த்து வைக்குது காதலர்களை....
காதலால் கவலை கொள்ளும் காதலர்களுக்கு மருந்தே காதல்...... 🤩🤩🤩💐💐💐💕💕💕💕
 
Last edited:
A

Aandal Venkatraghavan

Guest
கடலின் நீரில் கன்னியின் கண்ணீரும் கரைந்து சேருகிறதோ....
காதலர்களின் இனிமையான தருணங்களை எண்ணி
கரையின் ஓரம் கண்ணீரால்
கரைந்து போகும் கண்கள்....
காதலர்களாய் பிரிய நினைத்தாலும் காதல் பிரிய போவதில்லை....
காலமெல்லாம்
காதல் நினைவோடு
குடும்பத்திற்காக பிரியும் காதலர்கள்...
காலம் கடந்து சென்றாலும்
காதலை கடக்க முடியவில்லை....
கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்து
காத்திருக்கும் இரு காதல் உள்ளங்கள்.....
காதல் கொண்ட
காதலர்களை பிரித்த குடும்பம் காதலே சேர்த்து வைக்குது காதலர்களை....
காதலால் கவலை கொள்ளும் காதலர்களுக்கு மருந்தே காதல்...... 🤩🤩🤩💐💐💐💕💕💕💕
எப்போதுமே உங்கள் வரிகளுக்கு நான் பித்தான காதலி அக்கா.. உங்க கிட்டருந்து இப்படியொரு அழகான விமர்சனம் பெற்றதுல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியடைகிறேன் அக்கா ❤️🥰💕
 
வித்யா வெங்கடேஷ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 8, 2022
239
209
63
USA
பாட்டால் இணைந்த காதல்,
பிடிவாதமாய் எதிர்த்த பெற்றவர்களிடம்,
படாதப்பட்டு போராடி,
புரியவைக்க முடியாமல் தோற்று,
பகல்கனவு என்று மனத்தைத் தேற்றிக்கொண்டு,
பாதை வேறு என்று பக்குவமாகச் சிந்தித்து,
பிரியவிருந்த தருணத்தில்,
பாசமும் பொறுமையும் வென்றது!

அருமையான கதை தோழி!!!
💕💕💕💕💕💕💕
 
A

Aandal Venkatraghavan

Guest
பாட்டால் இணைந்த காதல்,
பிடிவாதமாய் எதிர்த்த பெற்றவர்களிடம்,
படாதப்பட்டு போராடி,
புரியவைக்க முடியாமல் தோற்று,
பகல்கனவு என்று மனத்தைத் தேற்றிக்கொண்டு,
பாதை வேறு என்று பக்குவமாகச் சிந்தித்து,
பிரியவிருந்த தருணத்தில்,
பாசமும் பொறுமையும் வென்றது!

அருமையான கதை தோழி!!!
💕💕💕💕💕💕💕
மிக்க நன்றி அக்கா.. மனம் குளிர்ந்தது உங்கள் விமர்சனத்தில்❤️...