அத்தியாயம் -20
பெண்ணாய் பிறந்து விட்டாளே பிறந்த வீடு நிரந்தரமில்லை.பாசமும் நேசமும் நெஞ்சுக்குள் இருந்தாலும் பகிர்ந்திட நினைக்கையில் தாலி கட்டியவன் துணை இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.பதியம் போட்ட செடியை வேறு இடத்தில் பிடுங்கி நடும்பொழுது அது புது மண்ணில் வேர்பிடிக்க சில காலம் ஆகும்.சரியான முறையில் பராமரித்தால் அந்த இடத்தில் அது வேர்பிடித்து செழிப்பாக வளரும்.அதை தான் புகழும் செய்கிறான் . ஆனால் செடியை பிடுங்கியவன் தாய் மண்ணை உதறியது எவ்விதத்தில் நியாயம்.ஒருவேளை அக்னியில் மலரும் மலர் என்றால் இப்படிதானோ ?
அவன் அறைக்குள் நுழையவும் அவள் அழுது கொண்டே படுத்திருக்க ஏனோ அவனுக்கும் மனம் உறுத்த அவளை தொந்தரவு செய்யாமல் படுத்துவிட்டான்.மறுநாள் எப்போதும் போல் வேலைகள் தொடர ஆனால் பூரணியின் முகம் வாடி இருப்பதை பார்த்ததும் பேச்சியும் இன்று அவளை ஒன்றும் சொல்லவில்லை.அதிகாலையில் வயலுக்கு சென்றவன் காலை உணவிற்கு வீட்டிற்கு வர அப்போதுதான் பூரணி வேலை முடித்துவிட்டு முற்றத்தில் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
உள்ளே நுழைந்ததும் அவள் அமர்ந்திருந்த கோலத்தை பார்த்தவன் மனம் வலிக்க மெதுவாக அவள் அருகில் சென்றவன் “பூரணி” என அழைக்கவும் திடுகென்று கண் விழித்தவள் அவனை பார்த்ததும் வேகமாக எழுந்து உள்ளே செல்ல முயற்சிக்க
அவன் அவள் கையை பிடித்து தடுக்க....அவன் கை அவள் உடலில் பட்டதும் சற்று நடுக்கம் வர ஏனோ பதட்டமாக அவள் கையை உதற
அதை அறிந்தும் அறியாதவன் போல் “உங்க அம்மாகிட்ட பேசணுமா வேண்டாமா” என எடுத்தவுடன் தனது அஸ்த்திரத்தை வீசவும்
“ஆமாமா நான் பேசணும்...அம்மா பேசுனாங்களா?” ....என்றபடி வேகமாக அவன் அருகில் வந்தாள் பூரணி.இதுபோன்ற சந்தர்ப்பங்கள் சில நேரங்களில் தான் கிடைக்கும் என்பதாலும் மேலும் ஏனோ இன்று புகழும் சந்தோஷ மனநிலையில் இருக்க அவள் அருகில் நெருங்கி நின்றான். ஆனால் பூரணியோ அதை எல்லாம் உணரும் மனநிலையில் இல்லை.
“ம்ம்ம் பேசுனாங்க ...பாரியும் லீவுக்கு வந்து இருக்களாம்” என அவன் சொன்னதும்
“என்னங்க மச்சான் நீங்க பேசிகிட்டே இருக்கீங்கலே தவிர போனையே கொடுக்க மாட்டேங்கிறிங்க என்றபடி அவன் இருக்கும் உயரத்திற்கு அவள் எம்பி குதித்து அவனது சட்டையில் இருந்து அலைபேசியை எடுக்க அப்போது அவள் உடலின் உராய்வில் அவன் தேகம் சிலிர்க்க அப்படியே உறைந்து போய் நின்றான் புகழ்.ஆனால் பூரணியோ அம்மாவிடம் பேசவேண்டும் என்ற உற்சாகத்தில் எதையும் கவனிக்கவில்லை.
“என்னங்க மச்சான் போன்ல நம்பர் வரலை என சொல்லவும் அவன் லாக் விடுவித்து கொடுக்க தன் தாயை அழைத்தவள் எதிர்புறத்தில் “ஹலோ”என்ற மணியம்மையின் குரல் கேட்டதும் “அம்மாஆஆஅ” என்ற ஒரு வார்த்தை மட்டும் சொன்னவள் அதற்கு பிறகு அழுகை மட்டுமே தொடர எதிர்புறத்தில் இருந்தும் அதே போல் சில வினாடிகள் அழுத மணியம்மை பின்னர் கண்ணு பூரணி நல்லா இருக்கியா சாமி......அழுகாத கண்ணு.....சாப்ட்டியா.....உன்னை நல்லா பார்த்துகிறாங்களா?”..... என பல கேள்விகள் கேட்க இங்கோ அழுகை மட்டுமே பதிலாக வந்து கொண்டு இருந்தது.
சிறிது நேரம் கவனித்த புகழ் வேகமாக அவள் கையில் இருந்து அலைபேசியை வாங்கியவன் “இங்க பாருங்க அத்தை உங்க பொண்ணு பேசறமாதிரி எனக்கு தெரியலை அவ அழுது முடிச்சதும் நான் மறுபடியும் கூப்பிட்றேன் ...இப்போ போன வைக்கிறேன்” என சொல்லவும்
வேகமாக அவன் கையில் இருந்து அலைபேசியைப் பிடுங்கிய பூரணி “போங்க மச்சான் நான் எங்க அம்மாகூட பேசுவேன்...நீங்க என்ன சொல்றது என சிறுபிள்ளை போல முகத்தை தூக்கி வைத்துகொண்டு அவனிடம் இருந்து தள்ளிச் சென்றவள் அம்மா எப்படி இருக்கீங்க?..அப்பா எப்படி இருக்கார்? என நலம் விசாரிக்க...எல்லாரும் நல்லா இருக்கோம் என அவரும் பதில் சொல்ல சிறிது நேரம் பேசிகொண்டிருந்தவர் நீ எப்படி இருக்க பூரணி ? என கேட்ட உடன் “அம்மா நீங்க வந்து என்னை கூட்டிட்டு போங்கம்மா ...எனக்கு இங்க பிடிக்கவே இல்லை” என அவள் வாய் திறப்பதற்கு முன் மீண்டும் மணியம்மை “கண்ணு பூரணி உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்குதுமா.......இருபது நாளுக்குள்ள என்னனன்மோ நடந்து போச்சு....கம்பீரமா வாழ்ந்த மனுஷன் எங்க தலை குனிஞ்சு நின்னுருவாரோன்னு பயந்திட்டு இருந்தேன்..... உயிர் போனாலும் உன்ற அப்பா மானம் மரியாதையை விட்டு கொடுக்க மாட்டாரு......ஊருக்கே உங்க அப்பா நியாயம் சொல்ல இப்போ நம்ம குடும்பத்துக்கே அப்படி ஒரு நிலைமை வந்திடுச்சேன்னு கவலைப்பட்டு கிடந்தேன்.... என் குடும்ப குலசாமிடி நீ.....நம்ம குடும்ப மானம் மரியாதை எல்லார்த்தையும் இந்த கல்யாணம் மூலமா நீ காப்பாத்திட்ட.... ஒருவாரமா இந்த ஊரே உன் கண்ணாலத்த பத்தி தான் பேசிகிட்டு இருந்தாங்க...உங்க அப்பாவுக்கு பெருமை பிடிபடலை போ......இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு”..... என அவர் பெருமையுடன் சொல்ல....அதற்கு பின்பும் பூரணி அந்த வார்த்தையை சொல்வாளா என்ன ?வார்த்தைகளை தனக்குள்ளேயே விழுங்கி கொண்டவள் “அப்புறம் எல்லாம் நல்லா இருக்காங்களா?” என பொதுப்படையாக விசாரித்தாள்.
மணியம்மையும் “நல்லா இருக்காங்க பூரணி.....நீ நல்லா இருக்கிறதான...அப்புறம் நேரமே எழுந்திரிகிறியா...வீட்டு வேலை எல்லாம் கொஞ்சம் செய் பூரணி......நங்கை திட்ற அளவுக்கு வெச்சுகாத...உன் வால்தனத்தை எல்லாம் கொஞ்சம் சுருட்டி வச்சுட்டு அடக்க ஒடுக்கமா நடந்துக்கோ பூரணி” என தாயாக அவர் அறிவுரை சொல்லவும்
பூரணியிடம் இருந்து “ம்ம்ம்” என்ற பதில் மட்டுமே வந்தது.
“ஏன் பூரணி ...என்ன கண்ணு ” என கேட்கும்போதே மணியம்மையின் குரல்ததும்ப
“ அம்மா அது வந்து எனக்கு உங்களை பார்க்கணும்போல இருக்கு” என அவள் சொல்லவும்
அதை கேட்டதும் பெற்றவளின் மனம் துடித்து போக “கண்ணு பூரணி......நீ நல்ல இருக்கீல” என பாசத்தையும் பரிதவிப்பையும் வார்த்தையில் கொண்டு வந்தவர் “தம்பி ஏதோ மஞ்சகாட்டுல வேலை இருக்குனு சொல்லுச்சு கண்ணு......அத முடிச்சதும் நீங்க ஊருக்கு புறப்பட்டு வாங்க.....அதுக்கு முன்னாடி நாங்க அங்க வரது முறை இல்ல கண்ணு......வேணா பரீட்சை முடிஞ்சதும் பாரிய அனுப்பி வைக்கட்டுமா?”... என கேட்டார்.
“வேண்டாம்மா அவ படிக்கட்டும்...நான் பார்த்துகிறேன்” என அவள் சோர்ந்த குரலில் சொல்லவும் அவளின் நிலை மணியம்மைக்கு புரிந்தாலும் புகழ் சொல்வதிலும் நியாயம் இருப்பது போல் தோன்ற கடவுளே என் பொண்ணை ஏன் இப்படி சோதிக்கிற என மனதிற்குள் மருகியவர் ஆனால் அவளிடம் “ நான் சொல்றத கேளு கண்ணு ..........வேலை முடிஞ்சா உடனே கிளம்பி வந்திடுங்க ...இன்னும் கறிவிருந்தும் போடல ...எல்லாம் சேர்த்து செஞ்சிடலாம்... ஒரு பத்து நாள் இருந்திட்டு போலாம் அதுக்குள்ள நீ ஏதாவது அங்க பேசிவைக்காத” என தன் மகளை பற்றி தெரிந்ததனால் மனதை கல்லாக்கி கொண்டு அவர் அதட்டல் போடவும் பூரணி அதற்கு பின் ஏதும் பேசவில்லை.மாணிக்கம் வெளியே சென்று இருந்ததால் பாரியுடன் மட்டும் பேசிவிட்டு போனை அவனிடம் கொடுத்தாள் பூரணி.
“என்ன பேசி முடிச்சாச்சா” என அவன் சிரித்துகொண்டே கேட்க
அவளோ முகத்தை உர்ரென்று வைத்துகொண்டு “ம்ம்ம்ம்” என பதில் சொல்ல
“என்ன சொன்னாங்க?” என அவன் சாதரணமாக கேட்க
அவனை பார்வையாலேயே எரித்தவள் பின்னர் சட்டென்று “ ஏனுங்க மச்சான் மஞ்சாக் காட்டு வேலை எல்லாம் முடிஞ்சிருச்சுனா கண்டிப்பா என்னை ஊருக்கு கூட்டிட்டு போவீங்களா “ என வாய் பேச அவன் என்ன சொல்வானோ என்ற எதிர்பார்ப்புடன் அவன் கண்களை பார்க்க
அவள் முகத்தில் தெரிந்த ஆர்வம் மற்றும் அவள் உரிமையுடன் ஏனுங்க மச்சான் என அவன் வெகுநாட்களாக காத்திருந்த அந்த அழைப்பு அனைத்தும் அவன் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்க அவளின் பேச்சை ரசித்துக்கொண்டிருந்தவன் “ம்ம்ம் போலாம் போலாம்....என தலையாட்டியவன் அந்த மகிழ்ச்சியான மனநிலையுடனே கிளம்பி சென்றான்.
.அவன் கிளம்பியதும் ஏனோ பூரணிக்கு வீட்டின் நியாபகமாவே இருக்க .அப்போது அழகனின் நினைவும் வரஅதே நேரத்தில் புகழின் நினைவும் வர ஐயோ வேண்டாம்...இப்படி நினைச்சுதான் அன்னைக்கு சண்டை வந்துச்சு என தனக்குதானே சொல்லிகொண்டவள் அதற்கு பின் தன் வேலையை கவனிக்க சென்றாள்.
இப்படியாக பத்து நாட்கள் செல்ல பேச்சியம்மாளின் வசவும்,கனகாவின் அசட்டுத்தனமான பேச்சுகளும் அவ்வப்போது பாண்டியின் கிண்டலான சிரிப்பும் வயலில் வேலை இருந்ததால் காலை சென்றால் இரவு வீடு திரும்பும் புகழ் என அவளுடைய வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது.
ஒரு நாள் அவள் கேணியில் நீர் இறைத்து கொண்டு இருக்க அங்கு வந்த பேச்சி “பூரணி இந்த சொம்புல கோமயம் இருக்கு...கருப்பன் வேணும்னு சொன்னான் ...வந்தா எடுத்து கொடுத்திரு...நான் மிளகாய் தோட்டம் வரைக்கும் போய் பார்த்திட்டு வந்திடறேன்” என சொல்லிவிட்டு அந்த சொம்பை கல் திட்டில் வைத்துவிட்டு அவர் செல்லவும்” சரிங்க அத்தை” என்றபடி அவள் வேலையை தொடர்ந்தாள்.
சில மணி நேரத்தில் பாண்டி அம்மா அம்மா என கத்திகொண்டே பின்புறம் வந்தவன் பூரணியை பார்த்ததும் “எங்க அம்மா எங்க போனாங்க “ என அதிகார குரலில் கேட்கவும்
அவளோ கண்டுகொள்ளாமல் தனது வேலையை தொடர
அவளை முறைத்தபடி அங்கு இருக்கும் தொட்டியின் அருகில் சென்றவன் சுற்றிலும் தேடிவிட்டு “ ச்சே இந்த வீட்ல தண்ணீ மொண்டு ஊத்தறதுக்கு கூட ஒரு குவளை இல்லை” என சலித்துகொண்டே சொன்னவன் திரும்பி பார்க்க அங்கு கல் திட்டில் சொம்பு இருக்கவும்...”இத யாரு கொண்டுவந்து இங்க வைச்சது” என கேட்டபடி அந்த சொம்பை எடுக்க போக
“ஏய் ஏய் அத தொடாத” என பூரணி வேகமாக சொல்லவும்
“என்னது ஏயா...இங்க பாருங்க இதெல்லாம் பள்ளிகூடத்தோட முடிஞ்சு போய்டுச்சு......ஏதோ எங்க அண்ணன் சொன்னாருன்னு உங்களுக்கு மரியாதை கொடுத்துகிட்டு இருக்கேன்....எங்க வீட்டுக்கு வந்து என்னை அதிகாரம் பண்றீங்களா? ...உங்க வேலையை மட்டும் பாருங்க” என்றபடி அவன் சொம்பை நோக்கி செல்ல
அதுவரை அவனிடம் அது கோமயம் என சொல்ல வேண்டும் என நினைத்தவள் சட்டென்று முடிவை மாற்றி “இங்க பாரு பாண்டி அது நான் முக கழுவ வெந்நீர் பிடிச்சு வச்சிருக்கேன்...நீ அதை தொடாத” என அவள் வேகமாக சென்று அவனை தடுக்க
அவனோ “ஏன் ஏன் நாங்க வெந்நீர்ல முகம் கழுவ மாட்டமா” என அவன் அவளை தள்ளிக்கொண்டு அந்த சொம்பை எடுக்க
“வேண்டாம் பாண்டி சொன்னா கேளு...அது எனக்குன்னு வச்சிருக்கேன்.....அதை தொடாத...அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வரும்” என அவள் அவனை மிரட்டுவது போல நடிக்கவும்
அவள் நினைத்தது போலவே “நீ இப்படி சொல்றதுனால நான் அதுலதான் முகம் கழுவப்போறேன்” என்றபடி அவளிடம் பேசிக்கொண்டே சொம்பில் என்ன இருக்கிறது என பார்க்காமல் கைகளில் ஊற்றி முகம் கழுவினான்.
அடுத்த வினாடி பூரணி அங்கிருந்து வேகமாக ஓட
இவ எதுக்கு ஓடறா என அவன் யோசிக்கவும் அப்போது கோமயத்தின் வாடை அவனுக்கு அடிக்கவும்
“என்னது மாட்டு மூத்திரம் மாதிரி வாடை அடிக்குது” என சொல்லிகொண்டே சொம்பை பார்த்தவன் அதில் கோமயம் இருக்க
“பூரணிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ” என அவன் கத்த அவளோ வீட்டின் தலைவாசல் தாண்டி வெளியே ஓடிவந்தவள் அப்போது என்று உள்ளே நுழைந்த புகழின் மேல் முட்டி நின்றாள்.
“ஏய் பூரணி என்ன ஆச்சு எதுக்கு இப்படி கண்ணுமண்ணு தெரியாம ஓடிவர” என அவன் கேட்கவும்
“அவளோ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டே அது வந்துங்க மச்சான்.....அது வந்து ...பாண்டி” என அவள் மூச்சு விட்டு விட்டு சொல்ல
அதற்குள் பாண்டி கத்திகொண்டே முற்றத்திற்க்கு வரவும்
“டேய் பாண்டி என்னடா இது......இங்க இருக்க...டவுனுக்கு போகலையா ...என்ன இது வீட்டுக்குள்ள கோமயம் வாடை அடிக்குது” என புகழ் முகம் சுளித்தான்.
“எல்லாம் இவளால வந்தது” என அவன் பின்னால் மறைந்திருந்த பூரணியை பார்க்க
“புகழோ என்னடா உளற...ஆமா நீ ஏன் கோமயத்தை மேல ஊத்திகிட்டு வந்து நிக்கிற” என நிலைமை தெரியாமல் சிரித்து கொண்டே கேட்கவும்
“அண்ணேஏஏஏஏ” என அவனிடமும் கோபத்தை காட்டியவன் “எல்லாம் உன் அருமை பொண்டாட்டிய கேளு” என்றான்.
“என்ன பூரணி என்ன ஆச்சு”...எனவும்
“அவளோ நான் ஒன்னும் பண்ணலைங்க மச்சான்...அவன்தான் நான் வேண்டாம்னு சொல்லச் சொல்ல எடுத்து ஊத்திகிட்டான்”.....என அப்பாவி போல சொல்லவும்
“அவ பொய் சொல்றாண்ணா...நீ நம்பாத ..ஏய் நீதான சொன்ன” என சொல்லிகொண்டே அவளை நோக்கி வர
“மச்சான் இங்க பாருங்க அவனை பிடிங்க” என அவன் தோள்களை பிடித்துகொண்டு இவள் சுற்றி சுற்றி ஓட புகழோ குழந்தைதனமான அவர்களின் விளையாட்டை ரசித்து கொண்டு நின்றான்.
“பிள்ளை இல்லாத வீட்ல கிழவி துள்ளி குத்திச்சளாம் ..இது என்ன வீடா இல்லை சந்தக்கடையா ...நடுவீட்டுக்குள்ள சடுகுடு ஆடிட்டு இருக்கீங்க” என கேட்டுகொண்டே பேச்சியம்மாள் உள்ளே வரவும் பாண்டி பேச்சை நிறுத்த புகழின் தோளைபிடித்து தொங்கி கொண்டிருந்த பூரணி வேகமாக நகர்ந்து நிற்க புகழோ ஏதும் பேசாமல் நின்றான்.
“ஏன்டா சின்னவனே என்னடா சத்தம்... என்னடா முகம் எல்லாம்...வாடை அடிக்குது என்றவர் சொம்பை பார்த்ததும் அட நீ எதுக்குடா கருப்பனுக்கு வச்சிருந்த கோமயத்தை என நிறுத்தி அவன் முகத்தை பார்த்தவர் அதை எதுக்குடா முகத்தில் ஊத்திகிட்டு நிக்கிற” என கேட்கவும்
“எல்லாம் இவளாலதான்” என அவன் கோபத்துடன் பூரணியை நோக்கி கை நீட்ட
“டேய் அண்ணன் பொண்டாட்டிய அவ இவனு சொல்ற.....இதான் நீ கத்துகிட்ட மரியாதியா” என அவர் கண்டிக்கவும்
புகழோ “விடுங்கம்மா இரண்டு பேருக்கும் ஒரே வயசுதான ... ...சொல்லிட்டு போறான்...மரியாதை எல்லாம் வெளியே பேசும்போது இருந்தா போதும்”என அவன் தகுமானம் சொன்னான்.
“எல்லாம் உங்கனாலதானுங்க அண்ணா...நான் தான் முதல்லையே சொன்னேன்ல...இவளுக்கும் எனக்கும் ஆகாதுன்னு...இப்ப பாருங்க கோமயத்தை சுடு தண்ணீனு சொல்லி என்னை முகம் கழுவ வச்சுட்டா” என அவன் எரிச்சலுடன் சொல்லவும்
“என்னது கோமயத்துல முகம் கழுவுனியா...ஏன்டா அது கூடவா தெரியலை” என சொல்லும்போதே புகழுக்கு சிரிப்பு வர .
அதற்குள் “பூரணி இங்க பாரு பாண்டி ...நான் வேண்டாம்னு தான சொன்னேன்...நீ தான் எடுத்த...என் மேல ஏன் பழிபோடற என ஒன்றும் தெரியாதவள் போல் பேசவும்
“ஏய் நீ என்ன சொன்ன...சுடு தண்ணீனு தான சொன்ன...அதான்” என அவன் கோபமாக கேட்க
“ம்ம்ம்ம்ம்ம் கேப்பையில நெய் வடியுதுனா கேட்கிறவனுக்கு எங்க போச்சு புத்தி...ஏண்டா ...உனக்கு கோமயத்துக்கும் தண்ணீக்கும் வித்தியாசம் தெரியாதா........ ஆள் தான் வளர்ந்து இருக்க போடா போய் முகத்தை நல்லா கழுவு”...என பேச்சி அதட்டல் போடவும்
“எல்லாரும் என்னையே சொல்லுங்க....அதை விட்ருங்க” என அவன் புலம்பிகொண்டே செல்ல
பூரணியோ “யாருகிட்ட....என்கிட்டயா உன் வேலைய காட்ற ....இருடி இது ஆரம்பம்தான்.....இப்பதான் கோமயத்துல தொடக்கி இருக்கேன்...இன்னும் இருக்கு” என அவள் ஏளன புன்னகையுடன் அவனை பார்த்து கொண்டிருக்க இருக்கும்போதே .
அப்போது “பழம் பழுத்தால் கொம்பிலே தங்காதுன்னு சொல்வாங்க............இருக்கிறவன் இடம் கொடுத்தா எருக்கலம்செடியும் கொடில படறேன்னு சொல்லுமாம்.... சொன்னதுக்கு எல்லாம் தலை ஆட்டிட்டு நிக்க கூடாது...விளையாட்டு வினையில போய் முடிஞ்சா அப்புறம் எல்லாருக்கும் சிரமம்”என சந்தடி சாக்கில் புகழுக்கும் பூரணிக்கும் சேர்ந்து பேச்சியம்மாவிடம் திட்டு விழவும் பயத்தில் அடுத்த நிமிடம் அங்கிருந்து காணாமல் போனாள் பூரணி.புகழோ என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழித்தவன் போன் பேசுவது போல் அங்கிருந்து நகர்ந்தான்.
அதற்கு பின் பாண்டி பஞ்சாயத்து வைக்க நடந்த விபரங்களை கேட்ட புகழுக்கோ சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி கொண்டு “நீ ஏண்டா அவகிட்ட வம்புக்கு போற.....அவளை பத்தி தான் தெரியும்ல...சரி நான் சொல்லி வைக்கிறேன்...இனி உன்கிட்ட வம்பு பண்ண மாட்டா” என அவனை சமாதானம் செய்து அனுப்பினான்.
அவன் சென்ற பின் புகழ் மனதிலும் மெல்லிய சந்தோஷ சாரல் அடித்து கொண்டு இருந்தது. வெகுநாட்களுக்கு பிறகு குறும்பு தனம் நிறைந்த பூரணியை பார்த்தவன் அதுவும் அவள் உரிமையோடு அவன் தோளில் மறைந்து விளையாடியதை நினைத்தவன் அந்த உற்சாகத்துடனே பேச்சியிடம் செல்ல அவரோ “புகழு உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்....வர ஞாயிறு நீங்க கொடுமுடி கோவிலுக்கு போயிட்டு வந்திடுங்க” என்றார்.
“சரிங்கம்மா போயிட்டு வந்திடறோம்....நாங்க இரண்டு பேரு மட்டும் தான” என கேட்கவும்
“இல்ல தம்பி கண்ணாலம் முடிஞ்சு முதல் தடவை வெளியே போறீங்க...தனியா போகவேண்டாம்.....நான் வேணா கனகாவை கேட்கிறேன்” என அவர் சொல்லவும்
“ஐயோ கனகா அண்ணியா” என அவன் அலற
“டேய் கூட அவ புருஷன் வரதனும் வருவாண்டா...அதனால அதிகம் பேசமாட்டா என்றவர் நீ பூரணிகிட்ட சொல்லிடு” என்றார்.
முதலில் கோவிலுக்கு வர மறுத்த பூரணி.”எங்க அம்மா வீட்டுக்கு மட்டும் வர மாட்டேங்கிறீங்க ...நானும் கோவிலுக்கு வர மாட்டேன்” என அவனுடன் மல்லுக்கு நிற்க
அவனோ “சரி நீ வரலைன்னு அம்மாகிட்ட சொல்லிடு” என அவன் சாதாரணமாக சொல்லவும்
“ என்னது என அதிர்ந்தவள் சரி சரி இப்ப எதுக்கு உங்க அம்மாகிட்ட இத கொண்டு போறீங்க.....அவங்க ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாங்க நான் வரேன்”என அவள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சொல்ல புகழுக்கோ அதை பார்த்து சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டு சென்று விட்டான்.
கோவிலுக்கு செல்லும் நாள் அன்று விடியலில் “அம்மா... ஒரு எட்டு வயல பாத்துட்டு அப்படியே நம்ம செல்வத்தோட கார எடுத்திட்டு வந்திடறேன்.....நீங்க வரதன் அண்ணாவை கிளம்பி இருக்க சொல்லுங்க” என பேச்சியம்மாவிடம் சொல்லிவிட்டு பூரணியையும் சீக்கிரம் கிளம்ப சொல்லி சென்றான்.
.பின்னர் வேலை முடித்து விட்டு காரை எடுத்துகொண்டு வீட்டிற்கு வந்தவன் “என்னமா எல்லாரும் கிளம்பியாச்சா என கேட்க ....ம்ம்ம்ம் என்னை கேட்டா என இழுத்த பேச்சி கோவிலுக்கு வீட்டு புடவை கட்டாத பட்டு புடவை கட்டுன்னு சொன்னேன்....எனக்கு இதான் வசதியா இருக்குனு சொன்னா...இல்ல பட்டு புடவைதான் கட்டணும்னு சொன்னேன்....அதுக்கு முகத்தை தூக்கி வச்சுகிட்டு உள்ள போன உன் பொண்டாட்டி இன்னும் வெளியே வரலை....... கூப்பிட்டா வந்திடறேன் அத்தைனு சத்தம் தான் வருது...ஆளு இன்னும் வெளியே வந்த பாட்ட காணோம்....அப்படி என்னதான் அந்த அறைக்குள்ள இருக்கோ” என நீட்டி முழக்கி முடித்தார்.
புகழோ “அப்படியா இவ்ளோ நேரம் என்ன பண்றா?” என கேட்டபடி அறையயை நோக்கி சென்றவன் ஒருவேளை அம்மா சொன்னதால கோவிச்சுகிட்டு உள்ளே இருக்காளோ என்னமோ என மனதில் தோன்றவும் .....”பூரணி பூரணி” என கதவைத் தட்ட உள்ளே இருந்து பதில் இல்லாமல் போக