• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 8

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
சமரிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த செல்வராஜ் அங்கு அவருடைய வருகையை ஆசையாக எதிர் பார்த்தபடி காத்துக்கொண்டு இருந்த அருளை பார்த்து சிரித்துவிட்டு



"போன காரியம் நல்ல படியா முடிஞ்சது.
உன்னோட அண்ணன் ஞாயிற்றுக்கிழமை வர்றதுக்கு சரின்னு சொல்றான், ஆனா அவன் மனசுல வேற ஏதோ ஒரு திட்டம் இருக்கிற மாதிரி தெரியுது. ஆனா அவன் என்ன திட்டம் போட்டாலும் எதுவுமே நடக்காது அப்படின்னு நமக்கு தானே தெரியும்.
இப்ப நாம நம்ம வீட்ல இருக்க பூதங்கள் எல்லாத்தையும் ஞாயிற்றுக்கிழமை அங்க வர வைக்கணும். உனக்கும் சேர்த்துதான் பொண்ணு பார்க்கிறோம் அப்படின்னு சொன்னா அமைதியா வருவாங்க தான், இருந்தாலும் அதே வீட்ல அவனுக்கும் பொண்ணு எடுக்க போற விஷயம் தெரிஞ்சா கண்டிப்பா ஏதாவது சொல்வாங்க உள்ள போய் சண்டை போட்டு நாம நினைச்சதை சாதிப்போம்" என்று கூறி அவனையும் அழைத்துச் சென்றார்.



தன் சித்தப்பா வீட்டில் உள்ளவர்களை பூதம் என்று கூறியதை நினைத்து சிரித்துக் கொண்டே உள்ளே வந்தான் அருள். தங்களுடைய பேரன் முகத்திலிருந்த சிரிப்பைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக அவன் அருகில் சென்றனர் செல்லையா மற்றும் பரிபூரணம்.



புனிதா, விஜயா, ராதிகா மற்றும் அந்த வீட்டிலுள்ள வாண்டுகள் அனைவரும் செல்வராஜ் முகத்திலும் சிரிப்பு இருப்பதை பார்த்து நடந்த காரியம் அனைத்தும் வெற்றி என்று நினைத்துக் கொண்டனர். புனிதா முகத்தில் ஒரு பெரிய நிம்மதி தெரிந்ததை பார்த்து சிரித்த செல்வராஜ் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைக் காணும் ஆவலில் தன்னுடைய தாய் தந்தையை பார்த்தார்.



செல்லையா அருள் அருகில் சென்று அவனுடைய முகத்தை வாஞ்சையாக தடவிக்கொண்டு "என்னப்பா ராசா உன்னோட மனசுக்கு புடிச்ச பொண்ணு வீட்ல சம்மதம் சொல்லிட்டாங்களா முகம் இவ்வளவு சந்தோஷமா இருக்கு" என்று கேட்டார்.



அருள் மனதில் 'நீங்க என்கிட்ட பாசமா இருக்கற மாதிரி சமர் அண்ணா கிட்டயும் பாசமா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். தேவையில்லாத மூடநம்பிக்கை எல்லாத்தையும் நம்பி அவங்கள தனியா வச்சு இருக்கீங்க, அந்த விஷயத்துல உங்கள என்னால மன்னிக்கவே முடியல தாத்தா. எவ்வளவு பாசம் எங்க எல்லாருக்கும் சமர் அண்ணா மேல இருந்தாலும் நீங்க அப்புறம் அப்பா சித்தப்பா இருக்கிற காரணத்தினாலே நாங்க எல்லாரும் அமைதியா அவங்க மேலே பாசம் காட்ட முடியாம பயந்து போக வேண்டியது இருக்கு. உங்க எல்லாருக்கும் அண்ணி தான் சரி அதனாலதான் இந்த வீட்டுக்கு அவங்கள சீக்கிரம் கூட்டிட்டு வர போறோம்.' என்று எண்ணிக் கொண்ட அவருடைய முகத்தைப் பார்த்தான்.



"தாத்தா நான் காதலிக்கிற பொண்ணு ஓட அக்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகல, அதனால சமர் அண்ணாக்கு அந்த பெண்ணை கல்யாணம் பண்ணித்தர அவங்க வீட்ல தயாரா இருக்காங்க, அவங்க எல்லாருக்குமே சமர் அண்ணா பத்தி தெரிஞ்சு இருக்கு அவங்களுக்கு பொண்ணு குடுக்க அவங்க எல்லாரும் தயாரா இருக்காங்க, நாங்களும் சரின்னு சொல்லிட்டோம். அதனால ஞாயிற்றுக்கிழமை ஒரே வீட்ல தான் ரெண்டு பேருக்கும் பொண்ணு பார்க்க போறோம்.
நீங்க எல்லாரும் அமைதியா வந்து கலந்துப்பீங்க அப்படின்னு நினைக்கிறேன் இல்ல ஏதாவது பிரச்சனை பண்ணுவீங்க அப்படின்னு எனக்கு தெரிஞ்சா நிச்சயமா நான் இந்த வீட்டை விட்டு வெளியே போக தயங்கமாட்டேன். ஏற்கனவே ஒரு பேரனை வீட்டைவிட்டு வெளியே அனுப்பின உங்களுக்கு நான் போனாலும் பெருசா தெரியாது அப்படின்னு எனக்கு தெரியும்" என்று எப்படி பேசினால் அவர்கள் அமைதியாக இருப்பார்களோ அப்படி பேசினான்.



அருள் கூறுவதில் துளியும் விருப்பம் இல்லாமல் நின்றுக்கொண்டிருந்த முருகன், தங்கதுரை இருவரும் அவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே இடையில் பேச வந்தனர். ஆனால் அவன் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்த காரணத்தினால் அமைதி காத்தனர். இறுதியில் அருள் கூறியதை கேட்டவர்கள் என்ன பதில் கூறுவது இதை என்ன செய்து தடுப்பது என்று புரியாமல் முழிக்க ஆரம்பித்தனர்.



தங்கதுரை "அப்ப கல்யாணம் முடிஞ்சி அவன் அவன் பொண்டாட்டியோட இந்த வீட்டில்தான் இருப்பான் அப்படின்னு சொல்ல வரியா? இல்ல என்னதான் சொல்ல வர்ற? உன்னோட முடிவை தெளிவா சொல்லு" என்று சிறிது கடுப்பாகவே கேட்டார்.



இதற்கு அருள் பதில் சொல்வதற்கு வாயைத் திறப்பதற்கு முன்பாக செல்வராஜ் "ஆமா அதுல என்ன சந்தேகம், அதுமட்டுமில்லாம இன்னைக்கு நம்ம வீட்டுல பொறந்த வாரிசு பிறந்த நேரம் தான் சரி இல்ல அப்படின்னு இவ்வளவு வருஷம் ஒதுக்கிவைத்த நீங்க வீட்டுக்கு மருமக வந்த உடனே ஏதாவது நடந்தால் அவளையும் ஒதுக்கி வைக்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்.



அதனாலதான் அவங்க ரெண்டு பொண்ணயுமே ஒரே வீட்ல கொடுக்க ஆசை படுறாங்க. ரெண்டு பேரும் ஒரே வீட்டில் காலடி எடுத்து வைக்கும்போது ஏதாவது பிரச்சனை வந்தாலும் யார் காரணம் அப்படின்னு தெரியாம ரெண்டு பேரையும் நீங்க கஷ்டப்படுத்த முடியாது. அதை மீறி கஷ்டப்படுத்த நினைத்தால் கண்டிப்பா உங்களோட செல்லப் பேரன் அவன் பொண்டாட்டிய கஷ்டப்படுத்தும் போது சும்மா இருக்க மாட்டான்.



அதே மாதிரி சமர் பொண்டாட்டி அமைதியா போவா அப்படின்னு சொல்ல முடியாது, அவ அக்காவா சொல்லும்போது அருள் பொண்டாட்டியும் அமைதியாய் இருப்பா அப்படின்னு யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆகமொத்தம் பார்க்கும்போது அவங்க சொல்றது சரியாத்தான் இருக்கும். ஆனா இந்த சமர் பையன் இந்த வீட்டுக்கு வர்றதுக்கு ஆசை படல அதனால அவங்க அவனோட வீட்டுக்கு போகலாம்.



ஆனா ஞாயிற்றுக்கிழமை ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் பொண்ணு பார்த்து உறுதி பண்ண போறோம். எல்லாரும் ஒழுங்கா கிளம்பி வந்து அமைதியா பெரியவங்க மாதிரி நடந்து இதை முடிச்சி கொடுத்துட்டு உங்க மரியாதையே நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள், இல்ல அப்படின்னு சொன்னா நாங்க ஒண்ணுமே பண்ண முடியாது" என்று தெளிவாகவும், அழுத்தமாகவும், தீர்க்கமாகவும் கூறினார்.



அவர் கூறியதில் உள்ள உண்மை அங்கே இருந்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் புரிய ஆரம்பித்தது. ஆனால் புரிய வேண்டிய ஜீவன்களுக்கு செல்வராஜ் தங்களை தவறாக பேசுவதாகவே தோன்றியது. ஆனால் அருள் ஒருவனுக்காக ஞாயிற்றுக்கிழமை வருவதற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி இல்லாமல் ஒருவித வெறுப்பு இருப்பதை கண்டு கொண்ட அருள் மற்றும் செல்வராஜ் சிரித்துக் கொண்டு தங்களுடைய வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர்.



அனைவரும் எதிர்பார்த்த ஞாயிற்றுக்கிழமையும் அழகாக விடிந்தது. சமர் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தாத்தா, பாட்டி சமரின் தந்தை மற்றும் சித்தப்பா நால்வருக்கும் ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் சமர் வருவதை நினைத்துப் கடுப்பாகவும் இருந்தது. ஆனால் அதை கண்டுகொள்ள தான் அங்கு யாருமே இல்லை.



இங்கே ஞாயிற்றுக்கிழமை விடிந்தவுடன் வழக்கமான வேலைகளை செய்து முடித்தனர் இன்று தனக்கு பார்க்கப்போகும் பெண்ணிடம் என்னவெல்லாம் பேசி இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று யோசித்தான்.



'நம்மளோட நிலைமை எல்லாத்தையும் மொத்தமா அந்த பொண்ணு கிட்ட சொல்லணும், அப்போ கூட அந்த பொண்ணு புரிஞ்சுக்கல அப்படின்னு சொன்னா நாம வேற ஒரு பொண்ணு மனசார விரும்புவதை சொல்லி இந்த கல்யாணத்தை எப்படியாச்சும் தடுக்கணும், ஆனால் சித்தப்பா நம்மள பத்தி எதுவுமே அந்த பொண்ணு கிட்ட பேசாம இருந்தா நம்ம வேலை இன்னும் சுலபமா இருக்கும். யாரு பொண்ணு அப்படின்னு கூட இப்ப வரைக்கும் சித்தப்பா சொல்லல, அதுவே ஒரு நிமிஷம் பயமாத்தான் இருக்கு, எதுவா இருந்தாலும் இந்த கல்யாணத்தை நடக்க விடவே கூடாது எப்படியாச்சும் தடுத்து நிறுத்தனும்' என்று எண்ணி கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தான்.



ஆதவன் காலை முதல் சமரை சந்திக்க வரவில்லை முந்தைய நாளே "மச்சான் நாளைக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்கு அதனால எங்கேயும் வெளியே போகக் கூடாது அப்படின்னு அம்மா சொல்லிட்டாங்க, என்ன விஷயம் அப்படின்னு கேட்டதுக்கு அது எனக்கு சர்ப்ரைஸ் அப்படின்னு முடிச்சுட்டாங்க, அதுக்கு மேல ரொம்ப வற்புறுத்தி கேட்கவும் தோனல, அதனால நாளைக்கு என்னால வர முடியாது நீ சித்தப்பா கூட போயிட்டு வந்து பொண்ணு வீட்ல என்ன நடந்துச்சு அப்படின்னு தெளிவா சொல்லு" என்று கூறினான்.


சமர் தனக்கு இருந்த குழப்பத்தில் ஆதவனுக்கு என்ன சர்ப்ரைஸ் வைத்திருப்பார்கள் என்று மேலோட்டமாக யோசித்துவிட்டு அவனிடம் "சரிடா நீ வீட்ல என்ன சர்ப்ரைஸ் அப்படின்னு பாரு. நான் நாளைக்கு போய் அங்க என்ன நடந்துச்சு அப்படின்னு சாயங்காலம் வந்து தெளிவா சொல்றேன்" என்று தன்னுடைய நண்பன் வராமல் இருப்பதற்கு தனக்கு பிரச்சனை எதுவும் இல்லை என்று சம்மதம் அளித்தான்.



ஆதர்ஷினி வீட்டில் மிகவும் பரபரப்பாக அனைவரும் இயங்கிக் கொண்டிருந்தனர். ஒரு பெண்ணை பெண் பார்க்க வந்தாலே ஒவ்வொரு வீடும் மிகவும் பரபரப்பாக இருக்கும். இங்கே இரண்டு பெண்களையும் பெண் பார்க்க வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் என்று நிச்சயமாக உறுதி செய்து விடுவார்கள் என்ற விஷயம் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் ஏதோ ஒரு பரபரப்பு அனைவரிடமும் இருந்தது.


காலையிலேயே ஆதர்ஷினி கார்த்திகா இருவரும் குளித்துவிட்டு தங்கள் அன்னை தங்களுக்கென எடுத்து வைத்து இருந்த உடை மற்றும் நகைகளில் தயாராக ஆரம்பித்து இருந்தனர். பவானியும் காலையிலேயே தன் தோழியின் இல்லம் வந்து விட்டால் அவள் தான் இருவருக்கும் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு உதவி செய்து கொண்டு இருந்தாள்.


காலை 10 மணி அளவில் அனைவரும் வருவதாக கூறி இருந்த காரணத்தினால் சமையல் அறையில் இனிப்பு காரம் தயாராகிக் கொண்டு இருக்க பாண்டியன் தங்கவேல் இருவரிடமும் பேசிக்கொண்டு இருந்தான் ஆதவன். என்னதான் அவர்கள் இருவரிடமும் பேசிக்கொண்டு இருந்தாலும் அவனுடைய கண்கள் அவ்வப்போது பவானி இருக்கும் புறம் செல்வதை கவனித்த பெரியவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.


முழுதாக பெண்கள் இருவரும் தயாராகிய முடித்தவுடன் அவர்கள் இருவரையும் பார்த்த பவானி "அவ்வளவு அழகா இருக்க ரெண்டு பேரும் இவ்வளவு நாள் இந்த அழகை எங்க ஒளிச்சு வச்சு இருந்தீங்களோ தெரியல, உங்கள பார்க்கும் போது எனக்கே கண்ணு வைக்கணும்னு தோணுது. கண்டிப்பா அவங்க எல்லாரும் வந்து போன பிறகு ரெண்டு பேருக்கும் திருஷ்டி சுத்தி போடணும். இப்போ என்னால முடிஞ்ச ஒரு சின்ன திருஷ்டி எடுக்கிறேன்" என்று தன் கைகளைக் கொண்டு இருவருக்கும் திருஷ்டி கழித்தாள்.


இருவரும் அவளை இருபுறம் பிடித்துக்கொண்டு அவளது கண்ணத்தில் முத்தம் வைத்தனர்.


"அடியே பானிபூரி வா நாம மூணு பேரும் சேர்ந்து செல்பி எடுக்கலாம்" என்று கூறி போட்டோ எடுக்க அழைத்தாள் ஆதர்ஷினி. அதன் பிறகு அவர்கள் மூவரும் ஒன்றாக விதவிதமான போட்டோக்களை எடுத்து தள்ள, அந்தப் பக்கமாக வந்த கார்த்திக் இவர்களுடன் சேர்ந்து அவனும் போட்டோ எடுக்க ஆரம்பித்தான்.



இவர்களுடைய இந்த உற்சாகமான முகத்தை பார்த்த பெரியவர்களுக்கு மனதில் நிறைந்து போனது. அப்போதுதான் பவானியை கவனித்துக் கொண்டிருந்த ஆதவனை பார்த்த ஆதர்ஷினி "அண்ணா இங்க வா ஒரு போட்டோ எடுக்கலாம்" என்று கூறி அழைத்தாள்.


அவன் மனதில் 'இவ நம்ம போட்டோ எடுக்க போகாம இருந்தா விடமாட்டா, அதேசமயம் போனாலும் ஏதாவது வில்லங்கமா பண்ணுவா சரி ஏதோ சமாளிப்போம்" என்று நினைத்துக் கொண்டு வந்தான். அவன் நினைத்தது போல அவன் அருகில் வரும்போது தன் அருகில் நின்ற பவானியை அவன் மேல் தள்ளிவிட்டாள். பவானி கீழே விழுந்து விடக்கூடாது என்று ஆதவன் பிடிக்க அதை விதவிதமான போஸ்களாக ஃபோட்டோ எடுத்து விட்டனர்.


தன்னை அவள் தள்ளி விடுவாள் என்று யோசித்து அதை பவானி நிலை தடுமாறி விழுவதற்கு முன்பு ஆதவன் தாங்கிப் பிடித்து விட இருவரும் சிறிது நேரம் மெய் மறந்து இருந்த அந்த நேரத்தில் இவர்கள் போட்டோ எடுத்து விட்டனர். போட்டோ எடுத்ததில் தன்னுணர்வு வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க இயலாமல் வெட்கம் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டனர்.


அதை பார்த்து இவர்கள் ஏதாவது கலாய்க்கலாம் என்று யோசிக்கும் நேரத்திற்கு முன்பு சமர் குடும்பத்தில் உள்ள அனைவரும் அங்கு வந்து சேர்ந்து இருந்தனர்.


அவர்கள் வந்து விட்டார்கள் என்பதை உணர்ந்த பெண்கள் மூவரும் உள்ளே செல்ல ஆயத்தமானார்கள். போவதற்கு முன்பு அங்கு குழப்பம், கோபம், ஏமாற்றம் மகிழ்ச்சி என்று அனைத்தும் கலந்த கலவையாக நின்று கொண்டு இருந்த அவரை பார்த்து ஒற்றை கண் அடித்து விட்டு உள்ளே சென்று விட்டாள் ஆதர்ஷினி.


அனைவரும் வெளியே நிற்பதை பார்த்து தங்கவேல் பாண்டியன் இருவரும் வாசலுக்கு சென்று வரவேற்றனர் அவர்களும் அவர்கள் வரவேற்பை ஏற்றுக் கொண்டு உள்ளே வந்து அமர்ந்தனர்.


அருள் தன் அண்ணனை எங்கும் செல்ல விடாமல் கை பிடித்து இழுத்து வந்து தன் அருகில் நடுநாயகமாக அமர வைத்து விட்டான். அவர்களது இருபுறமும் தம்பி தங்கைகள் என அனைவரும் நிறைந்திருக்க வேறு எங்கு அமரவும் முடியாமல் எழுந்து செல்ல முடியாமல் அமர்ந்து இருந்தான்.
உள்ளே வரும்போதே தங்களுடைய அண்ணிகளை பார்த்த அந்த வாண்டுகள் அனைவருக்கும் அவர்கள் இருவரையும் மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் பெரியவர்கள் இருப்பதால் தங்களுடைய சேட்டைகளை காட்டாமல் அமைதி காத்தனர்.



செல்லையா பெரிய மனிதராக "நாங்க உங்க பொண்ணுங்க கிட்ட இருந்து எந்த ஒரு வரதட்சணையை எதிர்பார்க்கல, அதே மாதிரி எங்க பசங்க விருப்பம் தான் எங்களுக்கு முக்கியம் அவங்க வாழ்க்கைல சந்தோஷமா இருந்தா அதுவே எங்களுக்கு சந்தோஷம்தான். இது வெறும் சம்பிரதாயம் மட்டும்தான் உங்களுக்கு ஏதாவது கேட்கணும் சொல்லணும் அப்படின்னு தோணினா சொல்லுங்க" என்று கூறிவிட்டு அமைதி காத்தார்.


தங்கவேல் அமைதியாக "எங்களுக்கும் எங்க பொண்ணுங்களோட ஆசை சந்தோசம் மட்டும் தான் முக்கியம். நாங்க எங்க பொண்ணுங்கள நல்ல பண்புகள், குணங்கள் சொல்லிக்கொடுத்து தான் வளர்த்து இருக்கோம். அதனால எங்க பொண்ணுங்கள உங்க வீட்டில எந்த ஒரு பிரச்சனையும் வராது. அதே மாதிரி எங்க பொண்ணுங்கள வெறுங்கையோடு அனுப்ப எங்களுக்கு இஷ்டம் கிடையாது. எங்களால முடிஞ்ச எல்லாத்தையும் நாங்க செய்றோம். நாங்க வேற யாருக்கும் செய்யப்போவது கிடையாது. எங்க பொண்ணுங்களுக்கு தான் செய்ய போறோம், அதனால எங்களுக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்லை இப்போ பொண்ணுங்க ரெண்டு பேரையும் சொல்றேன் நீங்க பாருங்க" என்று கூறினார்.
ஏற்கனவே ஆதவன் தந்தையாக தங்க வேலை அறிந்திருந்த செல்லையா தாத்தாவிற்கு அவர் இப்போது மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் கூறுவது ஏதோ ஒரு வகையில் தங்களை குத்திக்காட்டுவது போலவே இருந்தது. இருந்தாலும் அருள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி அமைதி காத்தார்.
தங்கவேல் கூறியதை அடுத்து உள்ளே இருந்து பவானி இருவரையும் அழைத்து வந்தாள். இருவரையும் பார்த்த அனைவருக்கும் திருப்தியாக இருந்தது யார் யாருக்கு பெண் என்று தெரியாத காரணத்தினால் அனைவருமே இரண்டு பெண்களையும் பார்த்தனர்.



இவர்கள் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் போட்டோ எடுக்கும் கூத்து நடந்து கொண்டு இருந்த காரணத்தினால் வெளியே சென்று இருந்த ஆதவன் அப்போதுதான் உள்ளே வந்தான். இவ்வளவு நேரம் ஆதவன் இல்லாததை உணர்ந்த சார் இப்போதுதான் தன்னுடைய நண்பன் வருவதை பார்த்து அவனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று நினைத்துக்கொண்டான்.
பரிபூரணம் பாட்டி "எங்களுக்கு பொண்ணுங்கள ரொம்ப புடிச்சிருக்கு வேற ஏதாவது பேசணும் அப்படின்னு சொன்னா சொல்லுங்க பேசலாம் இல்லனா பூ வச்சி தட்டு மாத்தி இந்த சம்பந்தத்தை உறுதிப்படுத்திகலாம்" என்று கேட்டார்.



தங்கவேல் மற்றும் பாண்டியன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு தங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்தனர். அனைவரும் சம்மதமாக தலை அசைக்கவே "எங்க எல்லாருக்கும் பரிபூரண சம்மதம் எங்களுக்கு வேறு எதுவும் கேட்க வேண்டியது இல்லை இப்ப இந்த கல்யாணத்த முடிவு பண்ணிக்கலாம். அதுக்கு பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயம் கல்யாணத்தையும் வச்சுக்கலாம்" என்று பொதுவாக கூறினார்கள்.


சமருக்கு அங்கே இருப்பது மிகவும் கோபமாகவே இருந்தது. ஆனால் தன்னுடைய சித்தப்பா அதனை கண்டிப்பாக பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து அவன் எதுவும் பேசவும் முடியாமல் கூறவும் முடியாமல் அமைதியாக இருந்து கொண்டு இருந்தான். தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் தன்னை கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் ஆதர்ஷினி மேல் தான் அவருடைய கோபம் அதிகரித்துக் கொண்டிருந்தது.



அவன் மனதில் "எத்தனை தடவை சொன்னாலும் நீ கேட்கவே மாட்டேங்குற என்ன தான் கல்யாணம் பண்ணுவேன் அப்படின்னு நிற்கிற, என்னை கல்யாணம் பண்ணி வாழ்க்கையில நீ கஷ்டப்பட தான் போற, அப்போ என்னைக்காவது ஒருநாள் நீ என்கிட்ட வந்து என்ன கல்யாணம் பண்ணது தப்பு அப்படின்கிற வார்த்தையை சொல்ல தான் செய்வ, அன்னைக்கு நான் உன் கிட்ட எல்லாத்தையும் பேசிக்கிறேன்' என்று எண்ணிக்கொண்டு கடுகடுப்பாக அமர்ந்து இருந்தான்.



ஏற்கனவே காலையில் அவனுடைய சித்தப்பா போன் செய்து எங்கே வரவேண்டும் என்று ஒரு பொதுவான இடத்தில் கூறிவிட்டார். அனைவரையும் பார்ப்பதற்கு அவனுக்கு இஷ்டமில்லை என்றாலும் தன்னுடைய தம்பி தங்கைகள் முகத்தை பார்ப்பது அவளுக்கு மிகவும் விருப்பமான ஒன்றாக இருந்த காரணத்தினால் அமைதியாக சென்றான்.


அதுபோல அவனுடைய தாத்தா பாட்டி அப்பா சித்தப்பா அனைவரும் அவனுடைய முகத்தை பார்த்தவுடன் திருப்பிக் கொண்டதைப் பார்த்து அவன் மனம் நொந்து போனது, இருந்தாலும் மற்றவர்கள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி பார்த்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான். இங்கே இப்படி எல்லாம் நடப்பது கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று இருந்தது.


திருமணத்தை உறுதி செய்யும் பொருட்டு சமர் மற்றும் அருள் இருவரின் தங்கை நிலா மற்றும் சரண்யா இருவரும் சென்று ஆதர்ஷினி மற்றும் கார்த்திகா இருவருக்கும் பூ வைத்தனர். அதன் பிறகு இனிப்பு காரணங்கள் அனைத்தும் பரிமாற பட அனைவரும் சாப்பிட்டுவிட்டு நிறைவான புன்னகையை சிந்திவிட்டு வீட்டிற்கு கிளம்பி சென்றனர்.


சமர் வருகையைப் பற்றி எந்தவித பிரச்சனையும் செய்யாமல் அவர்கள் கிளம்பி சென்றது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. இது அனைத்திற்கும் பின்னணியில் அருள் முகத்தில் இருக்கும் புன்னகை இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட ஆதர்ஷினி சிரித்துக் கொண்டாள்.


ஆனால் மிகவும் கோபமாக சென்ற தாமரை பார்த்து அனைவருக்கும் கஷ்டமாகத் தான் இருந்தது. அந்த கோபத்தை யாரிடம் வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தன்னுடைய இல்லத்தில் அமர்ந்து இருந்தான்.
அவனுடைய கோபத்தை எப்படி தணிக்க என்று எண்ணிக்கொண்டு ஆதவன் வர அவனை இன்னும் கோபப்படுத்தும் எண்ணத்தோடு வந்து சேர்ந்தாள் ஆதர்ஷினி.


இது என்ன நடக்கும் என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
  • Like
Reactions: Maheswari