• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி..... பாகம் -14

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
291
43
43
Maduravoyal
ரகசிய கொலையாளி.....
பாகம் -14
ரவி ஸ்டேஷனிற்கு வந்த பிறகு மணிகண்டன் மற்றும் ராஜேஷ் இருவரும் காவேரி வேலை செய்த இடத்திற்கு சென்றனர். மியூசியத்தில் வேலை செய்திருந்தாள் காவேரி.
அனைவரையும் தனித்தனியாக விசாரித்தனர்..... மணிகண்டன் யார் கண்களில் காவேரி இறந்ததிற்கான சோகம் தெரிகிறது, யார் கண்களில் பயம் தெரிகிறது.... யார் கண்களில் பரிதாபம் தெரிகிறது என்று பார்த்தான்.
முதலில் காவேரியுடன் வேலை செய்த கலை என்று அழைக்கப்படும் கலைவாணியிடம் விசாரித்தான்.
மியூசியம் வெளியே இருந்த பார்க் பென்ச்சில் அமர்ந்து விசாரித்தான்.
உங்க பேரு.....
கலைவாணி சார்....
வயசு?
30
எவ்வளவு வருஷமா இங்கு வேலை செய்யறீங்க?
5 வருஷமா.....
காவேரி எத்தனை வருஷமா வேலை செய்யறாங்க....
3 வருஷமா.....
உங்களுக்கும் காவேரிக்கும் பழக்கம் எப்படி?
ஜஸ்ட் கோலீக்ஸ்.... அவ்வளவு தான் சார்.....
உங்களை பார்த்தா காவேரி இறந்ததிற்கான வருத்தம் தெரியலையே..... மூணு வருஷமா ஒண்ணா ஒர்க் பண்றீங்க..... அப்படி இருக்க அவங்க இறந்திட்டாங்க ன்னு சொன்னா அமைதியாக இருக்கீங்க.....
சார்..... நான் எல்லாம் ரொம்ப பிராக்டிக்கல்..... எனக்கு போலீயா நடிக்க எல்லாம் தெரியாது.... எனக்கு அழுகை வரல.... அழனும் எதாவது சட்டம் இருக்கா என்ன?
இல்ல இல்ல..... வருத்தம் கூட இல்லையே.... என்றான் மணிகண்டன்.
நீங்க சந்தோஷப் படுற மாதிரி தெரியுது எங்களுக்கு.... என்றான் ராஜேஷ்.
சார்..... வருத்தம் இருக்கு.... அதுக்காக நான் அதை நினைச்சு ஃபீல் பண்ணிக்கிட்டு இருந்தா..... என்னை என்ன அவ கிளோஸ் ஃபிரெண்டு ரஸீயா ன்னு நினைச்சீங்களா? விஷயம் கேட்டதில் இருந்து அழுதுகொண்டே இருக்கிறதுக்கு.
யாரு ரஸீயா?
அவ இன்னைக்கு வரல.....
அவங்க வீடு எங்கே இருக்கு ன்னு தெரியுமா?
எனக்கு தெரியாது.... ஆஃபீஸ்ல கேளுங்க....
உங்களுக்கும் காவேரிக்கும் எப்போதாவது சண்டை வந்திருக்கா?
அதெல்லாம் ஒண்ணும் இல்லையே..... என்று திக்கி திணறினாள்.
மேடம்..... எதையும் மறைக்காமல் சொல்லுங்க..... என்றான் மணிகண்டன்.
அதெல்லாம் ஒண்ணும் கிடையாது..... என்று சொல்லி விட்டு எழுந்தாள் கலைவாணி.
இருங்க இன்னும் கேள்விகளை கேட்டு முடிக்கவே இல்லை..... அதுக்குள்ள எங்க கிளம்பறீங்க.... என்றான் ராஜேஷ்.
மறுபடியும் அமர்ந்தாள்.
நீங்க காவேரியை கடைசியாக எப்போ பார்த்தீங்க?
ரெண்டு நாள் முன்னாடி இங்கு தான் வேலை செய்யும் போது பார்த்தேன்.
எதாவது பேசனீங்களா?
இல்ல..... அந்த பிரச்சனைக்கு அப்புறம் அவ கிட்ட நான் பேசறது இல்ல.....
என்ன பிரச்சனைக்கு அப்புறம்.....
சார்...... அது ஒரு சாதாரண விஷயம்.....
சொல்லுங்க..... அது சாதாரண விஷயமா இல்ல முக்கியமான விஷயமா ன்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம்..... என்றான் ராஜேஷ்.
எனக்கு நாலு வயசுல ஒரு பையன் இருக்கான்..... அவனுக்கு வரைய ஏ4 பேப்பர், பேனா எல்லாம் வாங்க டைம் இல்லை ன்னு இங்க இருந்து எடுத்து கொண்டு போனேன்..... அதை எனக்கு தெரியாம வீடியோ எடுத்து மேனேஜர் கிட்ட போட்டுக் கொடுத்திட்டா..... அதிலிருந்து நான் அவ கிட்ட பேசறது இல்ல..... என்றாள் கலைவாணி.
அட அல்பமே..... என்று நினைத்து கொண்டான் ராஜேஷ்.
சரி.... நீங்க போகலாம்.... உங்க ஃபோன் நம்பர் கொடுங்க.... வேற எதாவது தேவைப் பட்டா கால் பண்ணுவோம்.....
ஓகே சார்..... என்று சொல்லி விட்டு சென்றாள் கலைவாணி.
தர்மா - வயது 32.
நீங்க எத்தனை வருஷமா வேலை செய்றீங்க....
சார் ஒரு வருஷமா.....
என்னவா இருக்கீங்க.....
பியூன் சார்......
இதுக்கு முன்னாடி எங்க வேலை பார்த்தீங்க.....
CBZ bank ATM செக்கியூரிட்டியா இருந்தேன் சார்.
இந்த வேலை எப்படி கிடைச்சது?
காவேரி மேடத்தால தான் சார்.....
எப்படி?
அவங்க அக்கவுண்ட் இருக்குற பேங்க்ல தான் சார் நான் செக்கியூரிட்டியா வேலை செஞ்சேன்...... அப்போது அடிக்கடி பார்த்து பேசி இருக்காங்க சார்....
அப்போது ஒரு நாள் என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை ன்னு சொல்லிக் கொண்டு இருந்தேன்..... எனக்கு சம்பளம் பத்தல ன்னு புலம்பினேன் சார்..... அப்போ பியூன் வேலைக்கு ஆள் எடுக்குறாங்க ன்னு அவங்க தான் சார் சொன்னாங்க..... அவங்க புண்ணியத்தில தான் நான் இங்கு வேலை செய்யறேன்..... அவங்க இறந்திட்டாங்க ன்னு கேள்வி பட்டதில் இருந்து....... எனக்கு மனசே சரியில்லை......
என்று சொல்லி கண்கள் கலங்கினான்.
என்னைக்கு நீங்க அவங்களை பார்த்தீங்க.
ரெண்டு நாளைக்கு முன்னாடி வேலைக்கு வந்தாங்க..... அப்போது தான் சார் பார்த்தேன்.
உங்க கிட்ட எதாவது பேசினாங்களா?
இல்ல சார்...... ஆனால் ரொம்ப டல்லா இருந்தாங்க..... ஏதோ டென்ஷன் மாதிரி தெரிஞ்சது..... வயிறு சரியில்லை இல்ல வயிறு வலி ன்னு நினைக்கிறேன்.....
ஏன் அப்படி சொல்றீங்க...
இல்ல அன்னைக்கு நிறைய முறை பாத்ரூம் போயிட்டு வந்தாங்க..... அதுவும் இல்லாம கொண்டு வந்த சாப்பாட்டை என் கிட்ட கொடுத்திட்டாங்க.....
அப்போ உங்க கிட்ட பேசினாங்க இல்ல.....
இல்ல சார்..... அவங்க ஃபோன் பேசும் போது என் கிட்ட சைகையால ஜாடைக் காட்டி டிபன் பாக்ஸை கொடுத்து எடுத்துக்க சொன்னாங்க..... நான் லஞ்ச் முடிச்சிட்டு டப்பாவை கொடுக்கலாம் ன்னு நினைச்சேன்..... ஆனா அதுக்குள்ள அவங்க கிளம்பிட்டு இருந்தாங்க.
அவங்களுக்கு இங்கே யாராலேயாவது பிரச்சனை இருக்கா?
இல்ல சார்.... எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அப்படி எதுவும் இல்லை....
ஓகே நீங்க போகலாம்..... நம்பர் கொடுத்திட்டு போங்க.... கூப்பிடும் போதெல்லாம் வரணும்.
ஓகே சார்..... என்றான் தர்மா.
மிஸ்டர் மோஹனை வரச் சொல்லுங்க.... என்றான் மணிகண்டன்.
சரிங்க சார்....... என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான் தர்மன்.
அவன் சென்றதும் சார்.....
அனேகமாக விக்டிம் வாமிட் பண்ண போயிருப்பாங்க ன்னு நினைக்கிறேன் சார்.... பிரெக்னென்டா இருக்கிறதா போஸ்ட் மார்டம் பண்ணின டாக்டர் சொன்னாரு இல்ல..... என்றான் ராஜேஷ்.
நீ சொல்றதைத் தான் நானும் நினைச்சேன்..... என்றான் மணிகண்டன்.
சிறிது நேரத்தில் மோஹன் வந்தான்.
உங்க பேரு....
மோஹன்.....
வாங்க மிஸ்டர் மோஹன்.... உட்காருங்க....
சொல்லுங்க..... நீங்க எத்தனை வருஷமா வேலை செய்றீங்க?
2 வருஷமா.....
என்னவாக இருக்கீங்க.....
அஸிஸ்டென்ட் கிளார்க்.....
உங்களுக்கு காவேரியை எவ்வளவு நாளா தெரியும்.
நான் வேலைக்கு சேர்ந்ததில் இருந்தே தெரியும் சார்.....
அவங்க உங்களுக்கு சுப்பீரியர்ரா?
ஆமாம் சார்.....
நீங்க எப்போ அவங்களை கடைசியா பார்த்தீங்க?
ரெண்டு நாள் முன்னாடி மதியமாகவே ரஸியாவை கூட்டிக்கிட்டு கிளம்பிட்டாங்க.....
எதாவது சொன்னாங்களா?
இல்ல..... என் கிட்ட எதுவும் சொல்லல..... ஆனால் நடந்து போகும் போது அவங்க ரெண்டு பேரும் பேசியது என் காதில் விழுந்துச்சு......
என்ன பேசிக்கிட்டாங்க.....
நான் கூட வரேன்..... ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டு அப்புறமா வீட்டுக்கு போங்க.... என்று ரஸியா மேடம் காவேரி மேடத்திடம் சொன்னாங்க..... அப்போது தான் நான் கரெக்டா அந்த பக்கம் வந்தேன்..... காவேரி மேடம் ரஸியா மேடத்தோட கையை பிடிச்சிடவே அதோட பேசறதை நிறுத்திட்டாங்க..... என்றான் மோஹன்.
இங்கு வேறு எதாவது பிரச்சனை இருந்துச்சா காவேரிக்கு.....
அந்த கலை மேடம் கூட ஒரு நாள் பயங்கர சண்டை.....
என்ன பிரச்சனையால சண்டை ன்னு தெரியுமா?
அந்த கலை மேடம் வீட்டுக்கு போகும் போது பென்சில், பேனா, பேப்பர், ஸ்டேப்லர், குண்டு ஊசி கூட தெரியாம எடுத்துக் கொண்டு போவாங்க..... அது நிறைய முறை காவேரி மேடம் திட்டிருக்காங்க.... அவங்க அதை பொருட்படுத்தல.... ஒரு நாள் ஏ4 ஷீட் நாலு பண்டிலை எடுத்து கொண்டு போனாங்க..... அதை வீடியோ எடுத்து மேனேஜருக்கு காட்டிட்டாங்க காவேரி மேடம்..... அன்னைக்கு மேனேஜர் செம டோஸ் விட்டாரு கலை மேடமை.. அதுவும் இல்லாம ஒரு வாரம் சஸ்பண்ட் பண்ணிட்டாரு மேனேஜர்...
அது வேலைல ஒரு பிளாக் மார்க் இல்ல..... அந்த கோபத்தில வந்து எல்லார் முன்னாடியும் நீ நல்லாவே இருக்க மாட்ட.... உனக்கு நல்ல சாவே வராது..... அப்படி இப்படி ன்னு ரொம்ப லோகல்லா திட்டி பேசினாங்க....
அப்போது காவேரி என்ன சொன்னாங்க?
அவங்க எதுவுமே பேசாம அமைதியாக இருந்தாங்க....
அப்புறம் என்னாச்சு.....
ஒரு வாரம் கழித்து வேலைக்கு வந்த பிறகும் எப்போ காவேரி மேடத்தை பார்த்தாலும் ஜாடை மாடையா திட்டுவாங்க.....
அப்பவும் காவேரி மேடம் அதைக் கண்டுக்காம போயிடுவாங்க.....
ஓ.... ஓகே.... நம்பர் கொடுத்திட்டு போங்க.... எதாவது வேணுமா கால் பண்ணுவோம்.....
சரிங்க சார்.....
ரஸியா அட்ரஸ் கொடுங்க..... என்றான் மணிகண்டன்.
ஓகே சார்.... ஆஃபீஸ் டேட்டால செக் பண்ணி சொல்றேன்..... என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான் .
###########
தொடரும் ......
அ . வைஷ்ணவி விஜயராகவன் .
 
  • Love
Reactions: Sampavi