• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

14.நவிலனின் கோதையானாள்

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
154
106
43
Salem

14.நவிலனின் கோதையானாள்​






மாடியறை அல்லாத கீழ் தளம் மட்டுமே கொண்ட மிகப்பெரிய பங்களா தான் இந்த ஃபார்ம் ஹவுஸ் நவிலனின் முதல் சம்பாத்திய லாபம். தந்தையின் ஆசையும் கூட டேய் எப்ப பாரு மேல ரூம் போட்டு அவங்க அவங்க அங்க அங்க ஒரு டிவி அப்புறம் கிட்சன் ன்னு, மனுசங்களோட இருக்கிறதுக்கு தான் வீடு ஆனா பாரு அவுங்க அவுங்க தனிமையில் இருக்க எதுக்கு இவ்வளவு இடம் ஒரே ஒரு ரூமை கட்டிட்டு போக வேண்டியது தானே என்பார்..

அதற்காகவே மாடி இல்லாமல் கட்டி இருந்தான் நவிலன்..

அம்மு..

ம்ம் அந்த நாலாவது ரூம் நம்முடையது ..

பூம்பனி அவனை இமைக்காமல் பார்க்க..

என்னடி…

ஒன்னு இல்ல

இல்லையே இந்த பார்வைக்கு ஏதோ அர்த்தம் இருக்கே என்று அவள் அருகில் வர..

அப்படி எல்லாம் எதுவும் இல்ல..

மனசு விட்டு பேசு அம்மு பேசினா தீராத பிரச்சினை இல்லை உனக்குள்ளேயே வச்சு புது புது காரணமாக தேடிட்டு இருக்காத

ம்ம்

என்ன அம்மு..

இது மாமா விரும்பின மாதிரியான வீடு தானே..

ஆமா அதே நேரம் இங்க இந்த இடத்தில் இது இப்படி இருந்தா நல்லா இருக்கும் ன்னு ப்ளான் சொன்னது என் பொண்டாட்டி இந்த வீடு என் முதல் சம்பாத்தியம் அதுவும் எங்க அப்பாக்கு பிடிச்ச மாதிரி என் பொண்டாட்டி சொன்ன விதத்தில் கட்டி இருக்கேன் என்று சொன்னதும் அனைத்தையும் மறந்து நவிலனை கட்டிக்கொண்டாள் பூம் பனி..

அம்மு… என்று ஆச்சரியமாக அழைக்க..


நான் இந்த அன்புக்கு தகுதியானவ இல்ல நவிலா

அப்படி எல்லாம் இல்லை அம்மு அன்பை பெறுவதற்கும் கொடுப்பதற்கும் தகுதி தேவை இல்ல மனசு இருந்தா போதும் உன் அன்பை எனக்கு கொடுக்க எது தடுக்குது அம்மு? அந்த வேண்டாத விஷயங்கள் தானே அதை ஓரமா வச்சுட்டு நம்மை சுத்தி இருக்க நமக்கு பிடிச்சதை மட்டும் பாரேன் கண்டிப்பா உனக்கு அந்த எண்ணம் வராது..

ம்ம் ம்ம்..

என்னடா..

கண்டிப்பா என்னைய மாத்திக்க முயற்சி பண்ணுறேன் நவிலா..

அவ்வளவு தான் அதுக்கு மேல எதையும் யோசிக்காத என்றான் நவிலன்..

சரி வா நம்ம ரூம் போகலாம் நீ ரெஸ்ட் எடுக்கனும் அதுக்கு தான் இங்க வந்ததே என்று அவளை அழைத்து கொண்டு செல்ல அறையும் அவளுக்கு பிடித்த நிறத்தில் அவளுக்கு பிடித்த பல புகைப்படங்களுடன் இருக்க நிரம்பவே உருகித்தான் போனாள் பூம்பனி.


ரைட் சைடு ரேக் ல உன்னோட நைட் வியர் இருக்கும் அதுக்கு பக்கத்தில் ரெகுலர் டிரஸ் இருக்கும் எது கம்பர்ட் ன்னு பார்த்து போட்டுக்க என்றவன் நீ இங்க இரு நான் உனக்கு குடிக்க பால் எடுத்துட்டு வரேன்..

எதே…

என்னம்மா..

பாலா…

ஆமா நல்ல தூங்கனும் இல்ல ..

ஏன் என்னை படுத்துறீங்க ஹாஸ்பிடல் ல தான் அப்படி படுத்தினாங்க இங்க நீங்களுமா?

நான் டாக்டர் மா…

அது ஊருக்கு தான்..

அப்ப உனக்கு பனி…

ஏன் உங்களுக்கு தெரியாதா நவிலா…

அதை நீ சொல்லனும் ன்னு நினைக்கிறேன் அம்மு…



…..



என்ன அம்மு…

ஒன்னு இல்ல அது வந்து..


சரி விடு நான் உன்னைய கம்பெல் பண்ணல…

சாரி நவிலா

அம்மு என்ன சாரி எல்லாம் நமக்குள்ள, உனக்கு ஒரு விஷயம் செய்ய நேரம் தேவைப்படும் போது அதை நீ செய்ய நான் உதவனும் ..

நிமிர்ந்து அவனை பார்த்தவள் எப்படி இப்படி ஒரு ஆண்டிக் பீஸா இருக்கீங்க என்று சிரிக்க..

அடியேய் அப்ப என்னைய பழசுன்னு சொல்லுறியா..


….

என்ன பதிலே இல்ல என்றான் நவிலன்

உங்களை போய் பழசுன்னு சொல்ல முடியுமா நீங்க தான் ஆண்டிக் பீஸா ஆச்சே

நவிலன் முறைக்க..

என்ன பார்க்குறீங்க இப்ப எல்லாம் ஆண்டிக் தான் டிரெண்ட் தெரியுமா..

அடியேய் நான் என்ன காலத்துக்கு ஏற்ப மாறுறதுக்கு பொருளா…

ச்சே ச்சே அப்படி எல்லாம் சொல்லுவேனா நான் உண்மையை தான் சொல்லுறேன் பழசுன்னு ஒதுக்கினதை தானே இப்ப கொண்டாடுறாங்க அப்படித்தான் உங்களை நான் நினைக்கிறேன் எப்பவும் மாறாதது இல்லையா உங்க இந்த செயலும் எண்ணமும்..



புல் ஃபார்ம் ல இருப்ப போல…

ஏங்க..

அதான் ஏன் ன்னு கேட்கிறேன்..

சரி ஓகே நான் தூங்கனும் இப்ப போய் டிரஸ் மாத்துறேன் என்றவள் நகர்ந்து விட நவிலன் சிரித்து கொண்டே அவள் அருந்த பால் எடுக்க சென்று விட்டான்

எப்படி இவரால் இப்படி இருக்க முடியுது அதுவும் ஒரு பக்க காதல்ல நாம் அவரை விரும்ப கூட இல்ல. அவள் மனமோ அது தானே அன்பு பனி அன்பு செலுத்த மனசு வேணும் அது அவர்கிட்டே இருக்கு அதான் வாரி வழங்கிட்டு இருக்கார்.

உனக்கு அன்பை தர மனசு இல்லையா பனி…

ஏன் எனக்கு என்ன நான் எல்லார்கிட்டயும் அன்பா தானே இருக்கேன் அப்புறம் ஏன் நவிலனை தவிர்க்குற உனக்காக கடைசி வரை வரப்போற உறவு. இது எல்லா உறவிற்கும் ஒரு எல்லை இருக்கு, ஆனா இந்த உறவுக்கு எல்லையே இல்ல அப்ப நீ அவருக்கு உன் அன்பை பகிரனும் தானே…

நான் இல்லன்னு சொல்லல ஆனா எனக்கு பயமா இருக்கு என்று மனதிடம் சொல்ல


எதுக்கு பயப்படனும் பனி உன் அப்பா ஒரு ஆண் உன் மாமா விக்னேஷ் ஏன் நவியோட அப்பா நவிலன் எல்லாருமே ஆண்கள் தான் அவங்களும் நீ பார்த்த ஆட்கள் மாதிரியா இருக்காங்க..

இல்ல

அப்புறம் ஏன் தயக்கம் சில பிறவிகள் ஈனத்தனமா இருக்கிறதுக்கு எதுக்கு மொத்த சமூகமும் தவறா இருப்பாங்கன்னு நினைக்கிற..

நினைக்கல ஆனா இப்படியான உறவில் என் கண் முன்னாடி அவங்க தானே வராங்க என்று மனதிடம் சொன்னவள் ஆறு வருடங்களுக்கு முன்பு சென்றது..

கடைசி இரண்டு செம்ஸடரில் பனியும் கடைசி செமஸ்டர் முடிந்து ஒரே ஒரு தீசிஸ் மட்டுமே இருந்தது மலருக்கு அது ஒரு டீம்டு யூனிவர்சிட்டி அங்க பல துறைகள் இருக்க கலாட்டாவிற்கும் சலசலப்புக்கும் பஞ்சம் இல்லை.. அப்படித்தான் மலரை மருத்தவம் படிக்கும் மாணவர்கள் தரக்குறைவாக நடத்த மலர் பொது இடத்தில் அவர்களை அடித்து இருந்தாள்..

மலர், “எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா என் உடம்பை அசிங்கமா பேசுவீங்க இதே தான்டா உங்க அம்மாக்களுக்கும் இருக்கு அங்க போய் வரி வரியா வருணிங்க அவங்க சந்தோஷமா கேட்பாங்க என்று படபடவென பேச..

ஏய்…

என்ன ஏய் உங்க அம்மாவை சொன்னா அவ்வளவு வலிக்குதா என்னைய பேச உங்களுக்கு யார் உரிமை தந்தது இதுவே கடைசி இன்னைக்கு கையில் அடிச்சேன் இனி ஒரு முறை இந்த மாதிரி நடந்துக்கிட்டீங்கன்னா செருப்பால் அடிப்பேன் என்று கத்திவிட்டு சென்று விட..

மூர்க்கமாகி போய் இருந்தான் ராஜன்..

எவ்வளவு திமிர் டா அவளுக்கு என்று பேச மச்சி விடு நேரம் பார்த்து தான் முடிச்சி விடனும் இதெல்லாம் ஆறபோட்டு செய்யுற வேலை விடு என்று அவனை இழுத்து கொண்டு சென்று விட..

அதற்கான நேரமும் வந்தது மலருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேம்பஸ் உள்ளே இருந்த ஹாஸ்பிடலில் பார்க்க …வைரல் பீவர் அட்மிசன் போட்டுக்கலாம் யார் கூட இருக்க போறீங்க..

நான் இருக்கேன் சீனியர் கூட என்றாள் பனி

சரி சரி இதெல்லாம் டிஸ்பன்சரி வாங்கிட்டு வாங்க என்று அன்று பகல் முழுவதும் பார்க்க, இரவு பணிக்கு ராஜன் குரூப் வந்து இருந்தது. மருத்துவம் பார்த்தது என்னவோ நவிலன் தான் இடையில் வேற பணி வர வார்டு பார்த்துக்கோங்க டா என்று நவிலன் சென்று விட நால்வரும் பேசி சிரித்து கொண்டு வந்தவர்கள் வாசலில் பனி நின்று இருந்ததை பார்த்து ராஜன் தான் ,டேய் இந்த பொண்ணு அவ கூட இருந்த பொண்ணு தானே என்று வர பனி பட்டென உள்ளே நுழைந்து கொண்டாள்.

ராஜன், “எதுக்கு டா இங்க இருக்கு இந்த பொண்ணு?

இருடா பார்க்கலாம் என்றான் நண்பன் உள்ளே நுழைந்தவன் அங்கே பெட்டில் மலர் இருப்பதை பார்த்து ராஜனுக்கு சிக்னல் தர..

அவனோ அவளை வெறுப்புடன் பார்த்தவன் மச்சான் இவளை எதாவது பண்ணனும் டா என்றான் ராஜன்.

பண்ணலாம் நவிலன் இப்போதைக்கு வரமாட்டான் என்ன ஏதுன்னு கேஸ் டீடெயில் பாரு என்று சொன்னவனை ராஜன் கேள்வியாய் பார்க்க பிராக்டிக்கல் செசென் பார்த்துடலாம் டா..

மச்சி ....


ஆமா டா எவ்வளவு திமிர் இருந்தா என்னவெல்லாம் பேசினா அப்ப அவ உடம்புல இருக்கிற திமிரை பார்த்துடலாம் மச்சான் என்றவன் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் சிஸ்டர் என்று அவளை அனுப்ப மலருக்கும் இங்க சரிபடாது என்று பனியை அழைத்து கொண்டு செல்ல..


வழியில் மடக்கி விட்டனர் மலரை அவள் உடல் எதிர்க்க தெம்பில்லாமல் நால்வருக்கும் இரையாக எதிர்த்த பனியை கட்டி வைத்து உன்ன தொடல டி ஆனா இனி எவனும் உன்னைய தொடனும் ன்னு நினைச்சாலும் எங்க நியாபகம் தான் வரனும் என்று இருவரையும் மொத்தமாக முடித்து விட்டு இருந்தனர்..

இரவு பத்து மணி போல் அந்த பக்கம் வந்தவர் சத்தம் கேட்டு மலரை மீண்டும் ஹாஸ்பிடலில் அனுமதிக்க பனி மொத்தமாக ஸ்தம்பித்து மனநலம் பாதித்து இருந்தாள்.


நாட்கள் ஆக ஆக மலர் மீண்டு கல்லூரி முடிந்து சென்று விட ஆறு மாத இடைவெளி ஆன பிறகே பனி தன் படிப்பை முடித்து இருந்தாள் ..

மூன்று மாதம் மொத்தமாய் பைத்தியம் என்ற பட்டத்தை பெற்றவள் மெல்ல மெல்ல தன் படிப்புக்காய் தன்னை தளர்த்தி படிப்பை முடித்து கொண்டு வெளியேறியவள் மீண்டும் கூட்டுக்குள் ஒடுங்க ஒரு வருடத்திற்கு மீண்டும் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்து இருந்தாள் பூம்பனி…

அதையெல்லாம் நினைத்து பார்த்தவள் மலர் கடந்து வந்தது எப்படி என்று யோசித்தாள் மலரை சந்திக்கலாமா இதை பற்றி பேசலாமா என்று நினைத்து கொண்டு படுத்து இருந்தாள் பனி, அருகில் நவிலன் இருப்பதை மறந்து…



தொடரும்