பகுதி – 19.
பூமிகாவின் நாட்கள் எண்ணப்படுகிறது எனத் தெரிந்த பிறகு, யாருக்குமே நிம்மதி என்பது இருக்கவில்லை. ஏதோ தெரியாத நொடியில் ஒருவர் நம்மளை விட்டுப் போய்விட்டால் கூட, ஏதோ ஒரு விதத்தில் ஏற்றுக் கொள்ளும் மனம், ஒருவரின் கொஞ்சம் கொஞ்சமான மரணத்தை ஏற்குமா என்ன?
அப்படி ஒரு நிலையில்தான் அனைவரும் இருக்க, அங்கே சற்று தெளிவாக இருந்தது ஆகாஷ் மட்டுமே. அவளிடம் சிறு மாற்றம் கூட இன்றி அவன் பழக, மற்றவர்களுக்கு எல்லாம் ஆச்சரியம் தான்.
“எப்படிப்பா உன்னால் மட்டும் முடியுது?” நித்யானந்தம் அவனிடம் அன்று கேட்டுவிட, அமைதியாக அவரைப் பார்த்தான்.
“அவங்க சாகப்போறது இன்னைக்குதான் உங்களுக்குத் தெரியுமா என்ன? அதை விட இன்னைக்கு அவங்க, நாளைக்கு நாம அவ்வளவுதான்” அவன் சொல்லிச் செல்ல, அவனை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவளது பெற்றவர்களும், உடன் பிறந்தவர்களும் பூமிகாவோடு இருக்க, ஆகாஷ் அவளிடம் பேசாமல் சற்று விலகி நின்றிருந்தான். தினமும் அவளை வந்து பார்த்துச் சென்றாலும், அவனுடனே இருக்க வேண்டும் என நினைப்பவளுக்கு அது போதாதே.
அவன் பேசிவிட்டு கிளம்பும் ஒவ்வொரு நாளும், ‘இங்கேயே, என்னோடவே இன்னும் கொஞ்ச நேரம் இருங்களேன்’ அவளது விழிகள் கெஞ்சுவதைக் கண்டும் காணாமல்தான் சென்று கொண்டிருந்தான்.
அவளோடு இருப்பதில் அவனுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்கப் போவதில்லை. ஆனால், அவள் கண்கள் வழியவிடும் காதலையும், அதை அவன் ஏற்காமல் மறுத்து அமர்ந்திருப்பதையும் மற்றவர்கள் பார்வைக்கு கொண்டுவர அவன் விரும்பவில்லை.
அன்று அவளைப் பார்க்க வந்தவன், “இப்படி ரூமுக்குள்ளேயே உக்காந்து இருக்காதே பூமி... அப்பப்போ கொஞ்சம் வெளியேவும் வா... இப்படியே இருந்தா எனக்கே மூச்சடைக்கும்...” அவன் சொல்லிச் செல்ல, அவன் வார்த்தைகளுக்காகவாவது அதைச் செய்ய முடிவெடுத்தாள்.
பூமிகா எந்த அளவுக்கு அவனோடு இருக்க முடியாமல் தவித்தாளோ, ப்ரதிக்கும் தேன்மொழியை தனிமையில் சந்திக்க முடியாமல் அந்த அளவுக்கு தவித்தான்.
இறுதியாக பூமிகாவும், தேன்மொழியும் பின்னால் இருக்கும் தென்னந்தோப்பு பக்கம் செல்வதைக் கண்டவன், அவர்களை வழி மறித்தான்.
“என்னண்ணா...?” பூமி அவனிடம் கேட்க,
“பூமி... ஒரு ரெண்டு நிமிஷம், நான் இவகிட்டே பேசணும்...” அவன் சொல்ல, பூமிகா வேகமாக விலகி நடந்தாள். அவன் இப்படி பூமிகா முன்னாலேயே நடந்துகொள்வான் என்பதை கொஞ்சம் கூட எதிர்பாராத தேன்மொழி திகைத்துப் போனாள்.
பூமிகா தனியாக செல்வதைப் பார்த்த தேன்மொழி, “ஹையோ... என்னங்க நீங்க, அவளை தனியா போகச் சொல்றீங்க... பூமி, இரு நானும் வர்றேன்” சற்று பதறினாள்.
“அவ ரொம்ப தூரம் போக மாட்டா...” அவளை சமாதானப்படுத்தியவன், “சொல்லு, என்ன முடிவு பண்ணி இருக்க?” அவளிடம் கேட்டான்.
“என் முடிவை நான் ஏற்கனவே சொல்லிட்டேன்... இது நடக்காது வேண்டாம்” அவளால் துரோகி என்ற வார்த்தையை தாங்க முடியாது என உறுதியாக இருந்தாள்.
“ஏய்... நான் அம்மாகிட்டே பேசணும்... பூமி இருக்கறப்போவே பேசினாத்தான் சரியா இருக்கும். இல்லன்னா...” அவன் தங்கள் வாழ்க்கையைக் குறித்து வெகுவாக பயந்தான்.
சற்று தூரத்தில் சென்ற பூமிகா, அங்கே இருந்த மாமரத்தின் கிளையில் அமர்ந்துகொண்டு, இவர்களைத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ப்ரதிக் கெஞ்சுவதும், தேன்மொழியின் தவிப்பும், மறுப்பும் என அனைத்தும் அவள் பார்வையில் விழுந்து சிறு சுவாரசியத்தை அளித்தது. ‘அவங்களைப் பாக்காதே...’ உள்மனம் அவளைத் தடுத்தாலும், தன் தோழியை அப்படிப் பார்ப்பது பிடித்திருந்தது.
பொறாமை எல்லாம் கொஞ்சமும் இல்லை, மாறாக ஒரு சுவாரசியம், தன் குழந்தை செய்யும் சேட்டையை ஒரு தாய் ரசித்து சிரிப்பாளே, அப்படி ஒரு மனநிலையில்தான் பூமிகா இருந்தாள். ‘தேன்மொழியின் கண்கள் பேசுமா?’ அவளுக்குப் பார்க்கத் தெவிட்டவில்லை.
அவளுக்கே இப்படி என்றால் எதிரில் இருப்பவனை கேட்கவும் வேண்டுமா? “இது எப்பவுமே நடக்காதுங்க...” தேன்மொழி முனக,
“என்னை ஏண்டி இப்படி கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்கற? மொத்தமா கொன்னுடேன்” அவன் கத்த, அவனை இழுத்து கட்டிக் கொண்டவள், அவன் இதழில் அழுத்தமாக முத்தம் வைக்க, அவன் பேச்சு தடைபட்டது.
முத்தம் என்றால் மென்மையாக அல்ல... அத்தனை வன்மையாக... அவனோடு ஆதியோடு அந்தமாக ஒட்டிக் கொண்டவள், அவன் சிகைக்குள் கை கோர்த்து நெரித்து, தன்னோடு சேர்த்து இழுத்து ஒட்டிக் கொண்டவள், அவன் இதழ்களை மொத்தமாக கொள்ளையிட்டாள்.
அவள் செய்கைக்கு உடன்பட்டு நின்றிருந்தவன், அவள் தன்னைவிட்டுப் பிரியவே, ‘இதற்கு என்ன அர்த்தம்...?’ என்பதுபோல் பார்த்திருக்க, அந்த காதலர்களின் அன்புப் பரிமாற்றத்தைப் பார்த்த பூமி, மெதுவாக பார்வையை விலக்கிக் கொண்டாள்.
“ஐ விஷ் டூ ஹேவ் யுவர் பேபி...” அவள் இப்படிச் சொல்ல முழுதாக அதிர்ந்து போனான்.
“மொழி... நீ என்ன கேட்கறன்னு தெரிஞ்சுதான் கேட்கறியா?” அவன் கத்த,
“நீங்க எனக்கு கிடைக்கலன்னாலும் பரவாயில்லை... உங்க குழந்தையாவது எனக்கு வேணும்” அவள் இன்னும் அழுத்தமாக சொல்ல, அவளை அடிக்க கை ஓங்கியவன், பூமிகா தங்களை நோக்கி வேகமாக வருவதைப் பார்த்தவன், தன் கரத்தை இறக்கினான்.
“பூமி... ஸ்டே கூல்...” அவளைப் பார்த்து ஓடியவன், அவள் கரத்தைப் பற்றி நிறுத்தினான்.
“என்னண்ணா இது? எதுக்கு அவளை அடிக்க கை எல்லாம் ஓங்கற?” பொறுமையாகவே கேட்டாள்.
“அதை நீ இவகிட்டேயே கேள்... காதலுக்காக போராடலாம்... ஆனா காதலிகிட்டேயே போராடறது... ரொம்ப கொடுமையா இருக்கு” அவளிடம் புலம்பியவன், வேகமாக அங்கிருந்து செல்ல, தேன்மொழியை நெருங்கினாள்.
“என்ன தேனு? எதுக்கு அண்ணா இவ்வளவு கோபப்பட்டு போறாங்க?” அவளிடம் கேட்டாள்.
“நீங்க கிடைக்கலன்னாலும் பரவாயில்லை, உங்க குழந்தையாவது எனக்கு வேணும்னு கேட்டேன்... அதான் அவ்வளவு கோபம்” வெறித்த பார்வையாக அவள் சொல்ல, பூமிகா விழித்தாள்.
“என்ன...? குழந்தை... தேனு...” அவளை கண்டிக்கும் குரலில் அழைக்க,
“ஐ மீன் இட் பூமி...” அவள் கண்களில் தெரிந்த ஏக்கம், பரிதவிப்பு, ஏமாற்றம், வலி... பூமிகாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவள் அழுதால், தான் வருத்தப்படுவோம் என்பதாலேயே அவள் தன் கண்ணீரை அடக்குவது பூமிக்குப் புரிய, தோழியை இழுத்து அணைத்துக் கொண்டாள். “உனக்கும்தான் அவனைப் பிடிச்சிருக்கே... பிறகு என்ன? நான் அம்மாகிட்டே பேசறேன்” தோழியை ஆறுதல் படுத்த முயன்றாள்.
“உங்க அம்மாவுக்கு தெரியும்” அவள் சாதாரணமாக சொல்ல,
“என்னடி சொல்ற?” இவள்தான் அதிர்ந்தாள்.
“உங்க அண்ணா என்கிட்டே காதலைச் சொன்ன அன்னைக்கே உங்க அம்மாகிட்டே போய் சொல்லிட்டேன். என்னை அப்போவே வீட்டை விட்டு அனுப்பிடுவாங்கன்னு பார்த்தேன்... ஆனா நடக்கலை” அவள் சொல்ல, பூமிகா விழித்தாள்.
“அவன் லவ்வை சொன்னதைச் சொன்ன சரி... நீ லவ் பண்றதை சொன்னியா?” அவள் கேட்க, தேன்மொழியிடம் ஒரு அழுத்தமான அமைதி நிலவியது.
“கேட்டதுக்கு பதில் சொல்லு தேனு...” அவளை உலுக்கினாள்.
“என் மனசை சொல்ற தைரியம் எனக்கு இல்லை. அதுவும் இப்படித்தான் நடக்கும்னு சொன்ன அவங்ககிட்டே... அதையே செஞ்சு வச்சிருக்கேன்னு எப்படி சொல்லச் சொல்ற?” ஒருவித வலியோடு அவள் கேட்க, அவளையும் அழைத்துக் கொண்டு அந்த மரத்தின் கிளையில் அமர்ந்தாள்.
“இவ்வளவு தெளிவா பேசறவ, நீ எப்போ, எப்படி அவனை லவ் பண்ண?” அவளது காதல் கதையை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டாள்.
“உங்க அண்ணா என்கிட்டே ஒரே வருஷத்தில் காதலைச் சொல்லிட்டார். ஆனா எனக்கு அப்போ எல்லாம் கொஞ்சம் கூட அந்த நினைப்பே இருக்கலை. ஆனா எப்போ எங்க அம்மா அப்பாவுக்கு திவசம் செய்யணும்னு, எனக்கே தெரியாத என் ஒண்ணுவிட்ட பெரியப்பா பையனை தேடித் பிடிச்சு, திவசம் செய்ய வச்சாரோ... அப்போ ஆரம்பிச்சது.
“எங்க அம்மா அப்பாவோட ஒரு போட்டோ கூட இல்லாமல், அவங்க முகமே எனக்கு மறந்துடுமோன்னு நான் பயந்தப்போ, என் பிறந்தநாளைக்கு அவங்க போட்டோவை கொண்டுவந்து கொடுத்தார் பார்... அந்த நிமிஷம்... மொத்தமா நான் விழுந்துட்டேன்” அவள் குரலில் அப்படி ஒரு பரவசம் ஓட, தோழியின் முகம் பார்த்திருந்தாள்.
“பிறகு...?” இப்படிக் கேட்ட தோழியை வருத்தமாக ஏறிட்டாள்.
“உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணக் கூடாது பூமி” அவள் குரலில் இப்பொழுது அத்தனை உறுதி ஏறி இருக்க, பூமிக்கு இதுவும் ஆச்சரியம் தான்.
“நீ இதை விடு... எல்லாம் என் தலைஎழுத்துப்படிதான் நடக்கும்... உனக்கு இப்போ எப்படி இருக்கு? ஏதாவது பண்ணுதா? ஹாஸ்பிடல் போகணும்ன்னா போய்டலாம் பூமி...” சற்று சங்கடமாகவே கேட்டாள்.
“ம்ஹும்... எனக்கு எங்கேயும் போக வேண்டாம்... தேனு... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி... என் அண்ணாவோட நீ இருந்தப்போ உன் முகத்தைப் பார்க்கணுமே... அப்படி ஒரு பிரகாசமா இருந்தது.
“உன்னை அவ்வளவு சந்தோஷமா நான் பார்த்த ஞாபகமே எனக்கு இல்லை. நீ அவனோடவே இருந்தா கண்டிப்பா நிம்மதியா, சந்தோஷமா இருப்ப தேனு” அவள் சொல்ல, தேன்மொழியின் முகத்தில் அத்தனை மென்மை.
“எனக்குத் தெரியும் பூமி... ஆகாஷ் பக்கத்தில் இருக்கும்போது, உன் முகமும் அப்படித்தான் ஜொலிக்கும்...” அவள் சொல்ல,
“ஒன் சைட் லவ்க்கு இதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்தி தானோ?” அவள் கேட்க, அதில் தொனித்த இயலாமையில் நெஞ்சம் நடுங்கியது.
“என்ன பூமி இது?” அவள் வருத்தமாக கேட்க,
“விரும்பறதில் இருக்கற டேஸ்ட் என்னன்னு எனக்குத் தெரிஞ்சுடுச்சு... விரும்பப்படறத்தில் இருக்கற பரவசம் என்னன்னு எனக்குத் தெரியலை. உங்க ரெண்டுபேர் கண்ணுக்குள்ளே நான் அதைப் பார்க்கறப்போ, அவ்வளவு சந்தோஷமா இருக்கு.
“ஆனா அவர் கண்ணுக்குள்ளே அது மிஸ் ஆகுறப்போ...” வருத்தமாக சொல்லிக் கொண்டே வந்தவள்,
“அவர் அப்படி இருக்கறதுதான் ஒரு விதத்தில் எனக்குப் புடிச்சிருக்கு... ஏன் தெரியுமா... சிவா அத்தான் சொன்னாரே... நான் அவளை விரும்பிட்டா, அவ நிம்மதியா போய்டுவா,
“ஆனா மிச்சமிருக்கற என்னோட வாழ்க்கை நரகமா, போராட்டமா போய்டும்னு... அந்த வலி அவருக்கு வேண்டாம்... ரொம்ப சுயநலவாதியா ஆயிட்டே வர்றேன்... ஏன்னு தெரியலை” அவள் சொல்ல, தேன்மொழிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
“பூமி... ப்ரண்டா நான் உனக்குத்தான் சப்போட் பண்ணுவேன்... ஒரே ஒரு விஷயம்... நமக்குப் புடிச்சவங்க நல்லா இருக்கணும், சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறதுதான் உண்மையான அன்பு. அதேநேரம்... நாம கொஞ்சம் சுயநலவாதியா இருக்கலாம் தப்பில்லை” அவள் சொல்ல, மறுப்பாக தலை அசைத்தாள்.
இவர்கள் இங்கே வருவதைப் பார்த்த ஆகாஷ், இவர்களது பேச்சுக்களை கேட்டவன், வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து அகன்றான். மனமோ காரணமின்றியே கிடந்து தவித்தது.
“இதை நீயா சொல்ற?” பூமிகா கேட்க, வாய்விட்டே சிரித்தாள்.
“நான் ரொம்ப ரொம்ப சுயநலவாதி பூமி... உங்க அண்ணா வேண்டாம்... அவர் குழந்தை வேணும்னு கேட்கறதுக்கு அர்த்தம் வேற என்னவாம்?” அவள் திருப்பிக் கேட்க,
“அவன் இல்லாம இருந்துடுவியா?”.
“என் அம்மா அப்பா இல்லாமல் மட்டும் இருப்பேன்னு நினைச்சேனா என்ன?” அந்த கேள்வியில் வாயடைத்துப் போனாள்.
ஆனாலும் தனக்கு நாட்கள் மிகக் குறைவாக இருப்பதைப் பார்த்தவள், தன்னைப் பெற்றவர்களிடம் பேச முடிவெடுத்தாள். தகப்பனைப் பொறுத்த வரைக்கும், அவள் எதைக் கேட்டாலும், இல்லை என மறுக்க மாட்டார். தாய் அப்படி இல்லை என அவளுக்குத் தெரியுமே.
வீட்டுக்கு வந்தவள், தாயிடம் பேசவேண்டும் எனச் சொல்ல, “என்ன... தேன்மொழி விஷயமா?” அவர் கேட்க, நித்தியானந்தம் அவர்களையே பார்த்திருந்தார்.