• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

22.நவிலனின் கோதையானவள்

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
65
59
18
Salem

22.நவிலனின் கோதையானவள்​



வீட்டிற்குள் கார்த்திகேயனும் விக்னேஷ் இருவரும் நுழைய ராணி தான் தன் மகனை இவன் எங்கே இங்கு என்பது போல் பார்த்து வைத்தாள்.

விக்னேஷ், “என்னம்மா மாமா வீட்டுக்கு வந்து இருக்கு என்று எள்ளலாக கேட்க..

விக்னேஷ் என்று அதட்டி இருந்தார் கார்த்திகேயன் ..

ஸாரி மாமா அத்தை டீ போட்டேன் தலைவலிக்கு..

இதோ என்று அம்சா உள்ளே சென்று விட..

வாக்கா எங்க மாமாவும் பாப்பாவும்..

…..

ஏன் க்கா..

…..

பேசுக்கா இப்படி இருந்தா என்ன அர்த்தம்?


என்ன அர்த்தம் ன்னு சொல்லனுமோ நல்லா வருவீங்கடா பெரியவ கோவிச்சுக்கிட்டு போறாளே அவளை சமாதானம் செய்யனும் மன்னிப்பு கேட்கனும் ன்னு எண்ணம் இருந்துச்சா போய்ட்டாளா நல்லதா போச்சு அவ பங்கையும் நாமளே எடுத்துக்கலாம் ன்னு தானே அப்படியே இருந்துட்ட..


ப்ச் என்று தலையில் கை வைத்து அமர்ந்தவன் இப்பவும் சொல்லுறேன் க்கா விக்னேஷ் பார்க்க சொல்லு நான் கையெழுத்து போட்டு ஒதுங்கிடுவேன். இதுக்கு மேல என்ன சொல்ல..

என்னடா அவன் வேணாம் ன்னு சொல்லுவான்னு தானே இந்த வார்த்தையை மட்டும் சொல்லிட்டு இருக்க? உண்மையாவே குடுத்துடலாம் ன்னு மனசு இருந்து இருந்தா இந்தாக்கா ன்னு கையெழுத்து போட்டு குடுத்து இருப்ப அது அவங்க பார்த்தா என்ன பார்க்கலன்னா என்னனு ஆனா உனக்கு தான் அந்த எண்ணமே இல்லையே…

சத்தியமா இல்லக்கா நான் எழுதி தரது பிரச்சினை இல்லை ஆனா அந்த சொத்து வேற யாருக்கும் கை மாறி போறதை நான் விரும்பல அதனால் தான் நீ எடுத்து பார்த்தா சொல்லு இல்லன்னா நான் ஷேர் தந்துடுறேன் ன்னு சொன்னேன்.

அப்படி வா அப்ப உனக்கு தர மனசு இல்ல என்று ராணி கேட்க..

விக்னேஷ், “அம்மா எனக்கு அந்த மால் வச்சு பார்க்கிறது விருப்பம் இல்ல நான் தனியா பிசினஸ் பண்ணனும் ஆனா அதுக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸ் தேவை அதுக்கு தான் நான் வேலைக்கு போறேன் இப்ப எனக்கு வேற நாட்டுக்கு போக வாய்ப்பு கிடைச்சது இருக்கு அதோட நான் பிசினஸ் பண்ண இடம் தேவை அதையும் மாமா பார்த்து வாங்கி தரனேன்னு சொல்லிட்டாங்க அப்ப அந்த வேலையை தான் நான் பார்க்க போறேன் தயவு செஞ்சு இந்த விஷயத்தை பேசிட்டே இருக்காது..

டேய் அது எனக்கு வரவேண்டிய பங்கு…

விக்னேஷ், “ ஓஓஓ அப்ப அதை நீயே கட்டி அழு, மாமா நீங்க எனக்கு கடனா குடுங்க மாமா..

டேய் என்னடா பேசுற உனக்கு தரது எல்லாம் உன்னோட பங்கு தான் எங்க அக்காவோடது அந்த இடத்து பங்கு இல்லாம வரதில் லாபமும் தனியா அவங்களுக்கு போட்டு தான் வச்சு இருக்கேன் அதனால் நீ எதையும் மனசுல போட்டு குழப்பிட்டு இருக்காத

விக்னேஷ் தன் தாயை பார்த்தியா என்பதை போல் ஒரு பார்வை தந்தவன் அத்த டீ ஓகே அப்படியே நைட் டின்னர் குடுத்துடு என்னால பசியோட போய் இன்னொரு சண்டைக்கு நிற்க முடியாது என்றவன் அறைக்குள் சென்றுவிட..

ராணி, “என்னடா என் புருஷன் தான் உன் பேச்சை கேட்டு ஆடினார் இதோ இப்ப இவனையும் உன் பக்கம் இழுத்துட்டியா?

அக்கா என்னக்கா பேச்சு இது நம்ம பிள்ளைங்க க்கா எல்லாரும்

ராணி, “ஓஓஓ அப்படி எல்லாம் நினைக்குறியா நீ..?

அப்ப நான் நினைக்கலை ன்னு சொல்லுறியா..

பின்ன நீ தான் உன் பொண்ணு பேர்ல தனியா இடம் மட்டும் இல்லாம வீடு முதல் கொண்டு வாங்கி வச்சு இருக்கியே..

அக்கா அது எல்லாம் அவளோட சம்பாத்தியம் அதுவும் இல்லாம இதுகூட நான் வேலைக்கு போனதில் வாங்கின வீடு மால் ல இருந்து வர பணம் எல்லாம் அது டெவலப் பண்ணவும் அதோட வர லாபத்தை நாலா தான் பங்கு பிரிச்சு போட்டுட்டு இருக்கேன் இது எல்லாமே மாமா கங்கு தெரியும்..

ஒஒஒ அவருக்கு சொல்லுவ ஆனா அதுக்கு சொந்தக்காரி எனக்கு சொல்ல மாட்ட..

அச்சோ அப்படி எதுவும் இல்லக்கா அந்த அக்கவுன்ட் கூட நீ தானே வந்த ஓபன் பண்ண நான் தான் எல்லாமே சொல்லி தானே அதுல போடுறேன் நீ ஏன் அதை புரிஞ்சுக்கவே மாட்டேங்குற இதுவரை உனக்குன்னு உன் பேர்ல நாலு இடம் வாங்கி போட்டு இருக்கு அதுவும் இல்லாம இப்பவும் நீ சொன்னனு தான் ஒரு இடம் மாமா வாங்கி இருக்காங்க என்று போட்டு உடைக்க..

கார்த்தி…

சொல்லுக்கா..

அது என் குடும்ப விஷயம் நான் மாமா கிட்ட பேசியதை எல்லாம் நீ கேட்டுக்கிட்டு இருக்கலாமா? என்று ஒரே வார்த்தையில் வெட்டி விட , அம்சாவின் பார்வையில் குறுகி தான் போய் இருந்தார் கார்த்திகேயன்.போதுமா என்பது போல் இருந்தது அவரின் பார்வை..கார்த்திகேயன் கசங்கிய முகத்துடன் நிமிர, அவன் கேட்காம வேற யார் கேட்பா என் பிள்ளைங்க முக்கு தாய் மாமன் என்னோட ஒரே மாப்ள என் பொண்டாட்டிக்கு காலம் பூரா தாங்க இருக்க ஒரே ஒரு இரத்த பந்தம் அப்படி இருக்க என் வீட்டில் ஒரு துரும்பு அசைஞ்சா கூட அவனுக்கு தான் முதல்ல தெரியனும் என்று வீட்டிற்குள் சாம்பசிவம் நுழைய..

மாமா என்று நெகிழ்ந்து போய் எழுந்து விட்டார் கார்த்திகேயன்..

விடு மாப்ள எப்பவும் உங்க அக்கா இப்படி ன்னு உனக்கு தெரியாதா அவளுக்கு எப்பவும் தானே முன்ன இருக்கனும் ன்னு எண்ணம் ..


ஏங்க என்று முறைத்தவளை ,ப்ச் போதும் டி உனக்கு சொத்து இருக்கு இல்லன்னு என் மாப்ள எப்பவும் சொல்லல அதை விட்டு வேற என்ன பிரச்சினை உனக்கு அவனை நீ தானே வளர்த்த அவன் கிட்ட என்ன உனக்கு புணக்கு


ஆமா புணங்கிட்டு தான் மறுவேளை ..

இங்க பாரு ராணி மொத்த சொத்தையும் நீயா ஆளப் போற அதை உன் பிள்ளைங்க தான் இனி பார்க்கனும் அப்படி இருக்கும் போது இருக்கிறதை பார்க்கவே இங்க பிள்ளைங்க தயாரா இல்ல அப்புறம் ஏன் உனக்கு அந்த எண்ணம் அப்புறம் உன் பொண்ணுக்கு எந்த குறையும் இலலாம எல்லாமே நிறைவா செய்யலாம் அவளுக்கும் சொத்து சேர்த்து வைக்காமலா இருக்கோம் அப்புறம் ஏன் நீ தேவையில்லாம மனசை அலைபாய விடுற..

என்ன பேச்சே பேசுறீங்க என்னைய பார்த்தா பண பிசாசு மாதிரி இருக்கா என்று எகிற…

……

என்ன எல்லாம் அமைதியா இருக்கீங்க..அப்ப அப்படித்தான் எல்லாரும் நினைச்சுட்டு இருக்கீங்களா என்று தன் தவறை உணராமல் குதிக்க…


உன்னோட தவறை சுட்டி காட்டுறோமே தவிர உன்னை நாங்க குறையா பார்க்கல ராணி.. உன் மனசுல இருக்கிறது ஆசை இல்ல பேராசை சாதாரணமாகவே நிறைய பேர்கள் கிட்ட இந்த எண்ணங்கள் இருக்கு ஆனா நம்ம குடும்பத்தில் யாருக்காவது சுயநலமாக யோசிக்கிற குணம் இருக்கா இருக்கிற சம்பாத்தியம் சொத்து எல்லாம் நம்ம மூணு பிள்ளைங்களுக்கு தான் அப்புறம் எதுக்கு நீ இப்படி நடந்துக்கிட்டு அது தான் எங்களுக்கு கவலை என்று சாம்பசிவம் சொல்ல..அப்போது கூட ராணி மனதில் பனிக்கு செல்லும் பங்கை நினைத்து ஒரு வித எரிச்சல் தான் அவள் மனநிலை சரியில்லை என்று ஆழமாக மனதில் பதித்து விட்டாள் அதை அவளால் மாற்றிக்கொள்ள முடியவில்லை.அது தான் இவ்வளவு பிரச்சினைக்கும் ஒரு காரணம்.


ஒரு வார காலமாக வீட்டில் இப்படி மாற்றி மாற்றி ஏதோ சங்கடம் இன்று சாம்பசிவம் சிலதை பேசியே ஆக வேண்டும் என்று தான் இப்படி சொல்லி விட்டார்.


…………


விக்னேஷ், “போதும் இந்த அமைதி எனக்கு விசா வந்துடும் நான் கிளம்ப இன்னும் பத்து நாள் தான் இருக்கும் எனக்கு எப்ப பொண்ணு பார்க்க போறீங்க என்று பேச்சை மாற்ற..

ராணி படக்கென அதுக்குள்ள என்னடா வினி க்கு கல்யாணம் பண்ணனும் இல்ல…. தாராளமா ஆனா அவளுக்கு டைம் இருக்கு இன்னும் அவ படிப்பு முடியல இல்ல..

அதுக்கு உனக்கு பண்ண முடியுமா ….என்ற் அஞுகசொன்ன வார்த்தையில்
நெஞ்சில் கை வைத்து அமர்ந்தவன் தான்…

இதுக்கு தான் முத பிள்ளையா பிறக்க கூடாது நம்மளை எல்லாம் கண்டுக்கிறது இல்ல அதுவும் நம்ம பாடி பார்ட்ஸ் கழண்டு போற வரைக்கும் எல்லா கடமை எருமையை முடிச்சிட்டு தான் விடுவாங்க.. மாமா இந்த பனிக்கு முன்னாடி ஒரு பொண்ணை பெத்து வச்சு இருக்க கூடாது..

ஏன்டா அவளுக்கு என்ன?

அவளுக்கு ஒன்னுமே இல்ல அதானே பிரச்சினை அவ தான் என்னோட சரிக்கு சமமா சண்டை கட்டிட்டே இருந்தா இல்லன்னா அவளை தானே கட்டி இருப்பேன் அவளை கூடவே வச்சு பார்த்தில் கல்யாண எண்ணமே வரலையே இப்படி என்ன புலம்ப விட்டுட்டு எல்லாம் ஜோடி போட்டு உட்கார்ந்து இருக்கீங்களே உங்களுக்கே இதெல்லாம் அடுக்குமா என்று வராத கண்ணீரை சுண்டி விட..

சோகமா இருக்கியா விக்கி…

ஆமா அத்தை

அப்ப நைட் டின்னர் வேண்டாம் தானே இவ்வளவு சோகத்துல என் பிள்ளை எப்படி சாப்பிடும் என்று சொல்ல..

அட கொலைகார அத்தையே…எப்படி என் வயத்தை காயப் போடலாம் காத்துட்டு இருந்தியா எப்படி இப்படி ஆனா உன்னைய தான் இந்த ராணிக்கிட்ட இருந்து தள்ளி தானே வச்சு இருக்கேன் அப்புறம் எப்படி இப்படி ஆனா என்று தீவிரமாக யோசிப்பது போல் பாவனை செய்ய


அடிங்க… இதான் சாக்குன்னு என் பொண்டாட்டி வம்பு இழுக்குறியா..


ஆமா இவங்க பெரிய மிஸி.. இவங்களை இழுக்குறாங்க என்கறு வழவழக்க… இறுக்கம் தளர்ந்து இருந்தனர் அனைவரும்…


அத்த உன் சோத்துக்காக இவ்வளவு பேசி இருக்கேன் கொஞ்சம் கவனிக்கிறது…


இதோ சாப்பிடலாம் எல்லாம் ரெடி தான் சப்பாத்தி போட வேண்டியது தான்..

என்னது.. சப்பாத்தியா?

ஆமா


அதெல்லாம் இந்த வயசு போனதுங்களுக்கு நீ எனக்கு ஸ்பெஷலா மோக்லா ரைஸ் செய்யு வா நான் ஹெல்ப் பண்ணுறேன் என்று அம்மாவை இழுத்து கொண்டு சென்றான் விக்கி…


அதுவரை எந்த மாற்றமும் இல்லாமல் ராணி இறுக்கமாகக் தான் இருந்தார் அடுத்த என்ன செய்யலாம் என்று தான் ஓடிக்கொண்டு இருந்தது..


தொடரும்