“அண்ணே இப்ப அவ என்ன சொன்னா? அவ வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக வாழ்வேன் என்று தானே சொன்னாள் அப்போ அவ கர்ப்பமா இருக்காளா! என்னை விட்டு போன என்னோட ராகவன் திரும்பி என்னோட பொண்ணோட வயித்துல வந்து பிறக்க போறரா! அண்ணி உங்களுக்கு அவ சொன்னது கேட்டுச்சா!” என்று இருவரையும் பிடித்து கொண்டு சந்தோசத்தில் பிதற்றி கொண்டு இருந்தாள் மகேஷ்வரி.
“ஆமா நம்ம குடும்பத்துல ஒரு நல்ல விஷயம் நடக்க போகுது” என்று சொல்லி கொண்டே அழுதாள் மகேஷ். “என்னமா எதுக்கு அழுற பிள்ளை நல்ல விஷயம் தான் சொல்லி இருக்காளே இப்ப போய் அழுகணுமா!” என்ற விருத்தாச்சலத்திடம் “அதெல்லாம் சந்தோசம் தான் அண்ணா ஆனா அவ இப்படி வாயும் வயிறுமா இருக்கும் போது புருஷனை பிரிந்து வந்துதிருக்காளே! அந்த குழந்தைக்கும் அப்பா பாசம் கிடைக்காமல் போயிடுமோ! என்று எனக்கு பயமா இருக்கு” என்று பதற,
“அப்படியெல்லாம் நடக்காது இப்ப எல்லோருக்கும் உண்மை தெரிந்து இருக்கும் எப்படியும் உன்னையும் சுடரையும் தேடி வந்து மன்னிப்பு கேட்க தான் போறாங்க சும்மா குழம்பிட்டு இருக்காமல் போய் ரெண்டு பேரும் புள்ளைக்கு பிடித்த மாதிரி சமைக்கிற வழியை பாருங்க” என்று பெண்களை அனுப்ப இவ்வளவு நேரமும் வாயை பார்த்து கொண்டு இருந்த கபிலனை தட்டி “உனக்கும் தனியா சொல்லணுமா! போய் படிக்கிற வேலையை பாரு வர பரிச்சையில் மார்க் குறைவா வரட்டும் அப்புறம் இருக்கு உனக்கு!” என்று அவனை விரட்டி விட்டு மீண்டும் சுடரின் அறையை தட்டி “ஏத்தா சுடரு சும்மா சுவற்றை வெறிக்காமல் போயி குளிச்சிட்டு வெளியே வந்து சாப்பிட வா மாமானுக்கும் பசிக்குது நீ பேசினது அப்புறம் எந்த வேலையும் ஓடல சாப்பிடவும் இல்லை சீக்கிரம் வாம்மா” என்று சொல்லி கிளம்பி விட,
அவர் சொன்னது போலவே சுவரை தான் பார்த்தாள் கண்ணை துடைத்து கொண்டு குளிக்க செல்ல, அடுத்த சில நிமிடங்களில் வெளியே வந்தவள் இயல்பாக இருப்பது போல் தன்னை காண்பித்து கொண்டு அனைவருடன் அமர்ந்து சாப்பிட்டாள். “அதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன் அந்த நெட்ட மரம் வேணாம் நானே வளர்ந்து வந்து உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று, யாராவது என்னோட பேச்சை கேட்டீங்களா!” என்று சொன்னதும் சுடர் சிரித்துவிட, கபிலனின் காதை திருகி “சும்மா பேசாமல் சாப்பிடு” என்று சாந்தா சொல்ல எல்லோரும் சிரித்து கொண்டே சாப்பிட்டார்கள். “அம்மா சும்மா கிள்ளாதிங்க நான் பொய் சொல்லல, ஹே சுடர் நீ ஒரு வார்த்தை சரின்னு சொல்லு உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று சொன்னதும் தலையில் ஒரு கொட்டு வைத்து “ஒழுங்கா சாப்பிடுற வேலையை மட்டும் பாரு அப்புறம் பேசுறதுக்கு நாக்கு இருக்காது பார்த்துக்க” என்று அவனை அதட்டினாள் சாந்தா, “விடுங்க அண்ணி சின்ன பையன் ஏதோ விளையாட்டுக்கு சொல்றான் பெருசா எடுத்துக்காதீங்க!” என்று அவளை சமாதானம் செய்ய, “கொஞ்சம் சும்மா இருங்க என்ன கபிலன் மாமா உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணனுமா?” என்று கேட்க ஆமாம் என்பது போல் தலையை அசைத்தான் “அதற்கு அடுத்த ஜென்மம் வரைக்கும் காத்து கொண்டு இருங்க, எனக்கு இந்த ஜென்மத்தில் அகிலன் என்று எழுதியாச்சி வாழ்ந்தாச்சி, உங்களுக்கும் பொண்ணு கண்டிப்பா பிறந்து இருக்கும் சரியான நேரத்துல உங்களுக்கு கிடைப்பாங்க” என்று அந்த சிறுவனுக்கு அறிவுரை வழங்கினாள் அவள்.
(நாமும் சின்ன வயதில் ஒரு பொண்ணை அல்லது ஆணை பார்த்து ஆசைபட்டு இருந்து இருப்போம் அது சைல்ட்உட் கிரஷ் என்று சொல்வோம் அப்படி தான் கபிலனுக்கு சுடர்.)
அகிலன் கேட்டு கொண்டதிற்கு இணங்கி சுடரின் வீட்டை யாரும் பார்க்காத சமயத்தில் எட்டி பார்க்க சந்தோசமாக பேசி கொண்டு இருப்பதை தனது போனில் வீடியோவாக எடுத்து அகிலனுக்கு அனுப்பினான்.
அவள் சாப்பிட்டாள் என்பதை பார்த்த பிறகு தான் சுடர் விட்டு சென்ற போது மேலே எப்படி இருந்தானோ இப்பவும் அப்படியே இருந்தான், ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவன் கலைந்த அறையை ஒழுங்கு படுத்தி விட்டு பிரஷ் ஆகி மீண்டும் அவள் அணிந்த அதே ஆடையை அணிந்து கொண்டான்.
சிறிது நேரத்திற்கு பிறகு அகியின் கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து திறக்க கல்யாணி தான் சாப்பிட உணவை கொண்டு வந்து இருந்தாள், அவளின் முகத்தில் அப்படியொரு சந்தோசம் பல நாட்கள் பட்டினி கிடைக்கும் ஒருவருக்கு விருந்து சாப்பாடு கிடைத்தால் எப்படி மகிழ்ச்சி கொள்வார்களோ அப்படி ஒரு சந்தோசம் முகத்தில் தாண்டவம் ஆடியது! ஆனால் அகியின் முகமோ இருட்டில் தனித்து விடப்பட்ட குழந்தை போல் பேய் அறைந்தார் போல் வெளிறி காணப்பட்டது.
கதவை திறந்த அகில் “என்னம்மா உன்னோட பிரச்சனை! என்னை கொஞ்சம் தனியா விடுங்க!” என்று வெறுத்து பேசிய மகனின் பின்னால் வந்த கல்யாணி, “இப்ப எதுக்கு முகத்தை தொங்க போட்டு நிக்கிற! இந்தா சாப்பிட்டு தூங்கு காலையில் சீக்கிரம் கிளம்பனும்” என்று சொல்ல, “நான் எங்கேயும் வரதா இல்லை என்னை எங்கேயும் கூப்பிடாதீங்க!”என்று உடைந்த குரலில் பேச, கையில் இருந்த உணவு தட்டினை டேபிளில் வைத்து விட்டு “டேய் இப்ப எதுக்கு டா இப்படி சொல்லுற! நானே என்னோட மகேஷை ரொம்ப வருஷம் கழித்து பார்க்க போறேன் என்ற சந்தோசத்தில் இருக்கேன் நீ என்னடா என்றால் வர மாட்டேன் சொல்லி முரண்டு பிடிக்கிற” என்று ஆதங்கமாக பேச,
“ம்மா என்னோட சூழ்நிலையை புரிந்து கொள்ளுங்க! எப்பவும் அவங்களை மரியாதையா பேசி இருந்த நான் திடீரென அடித்து ரொம்ப பேசிட்டேன் எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு! எந்த முகத்தோடு அவங்களை பார்ப்பேன்!” வருத்தமாக பேசி நின்ற மகனை தொட்டு “இந்த முகத்தோட தான் இதற்கென தனியா முகம் வாடகைக்கு கிடைக்குமா என்ன?” என்று வம்பு செய்த தாயை ஏகத்துக்கும் முறைத்தான்.
“சரி முறைக்காதே உன்னோட பொண்டாட்டி என்றால் அடிக்க யார் உரிமை கொடுத்தது, அவளை சந்தோஷமா வைச்சிக்கலாமே தவிர, தாலி கட்டிட்டால் அவ ஒன்னும் உனக்கு அடிமை இல்லையே! உங்க அப்பா கூட என்னை அடிச்சி இருக்காரு எனக்கும் திருப்பி அடித்தால் என்ன! என்ற எண்ணம் வரும், ஆனா என்னோட அம்மு நல்ல தைரியமான பொண்ணு தான், எங்களுக்கு முன்னாடியே உன்னை அடிச்சி இருக்கா!” என்று சொல்லி சிரித்து அவனை இயல்பாக மாற்றினாள்.
“இங்க பாரு அகில் நாளைக்கு அவங்க வீட்டுக்கு போகிறது உறுதி சும்மா யோசிக்காமல் என்னோட மருமக காலில் விழுந்துடு, அது தான் சரி! என்ன புரிந்ததா” என்று சொல்லி சாப்பிட வைத்து கிளம்பினாள். அவள் சொல்லி சென்ற பிறகு ஒரு தெளிவு கிடைத்தது போல உணர்ந்தவன் படுக்கையிலே சுடரின் உடையை போட்டு படுத்து கொண்டான்.
எப்போது விடியும் என்று தூங்காமல் இரவை கடத்தியவனுக்கு இன்று நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்து தன்னையே நொந்து கொண்டான், அங்கு அவளும் படுத்து கொண்டு வயிற்றை தடவி கொண்டே கண்ணீர் வடித்தாள்.
இரவு முழுக்க தூக்கத்தைக் தொலைத்தவர்கள் விடியற்காலையில் தான் தூங்கினார்கள், மகேந்திரன் அருகே சென்றவள் “நான் மகேஷையும் சுடரையும் இஸ்.. இல்ல அம்முவையும் பார்த்து பேசி கூட்டிட்டு வரேன் உங்களுக்கு வேண்டியதை சகு செய்வாள்” என்று சொல்லி திரும்பி நடந்தாள், “நானும் வரேன்!” என்ற தாழ்ந்த குரலில் மகேந்திரன் கேட்க,
“நியாயப்படி நீங்க தான் மன்னிப்பு கேட்டு கூட்டிக்கொண்டு வரணும், என்ன பண்றது உங்களுக்கு தான் அடிப்பட்டு இருக்கே!” என்று சொல்ல, “அதெல்லாம் பார்த்துக்கலாம் எனக்கு மகேஷ்வரியை நேரில் பார்த்து பேசினால் தான் நிம்மதி!” என்று விடாபடியாக பேசி சம்மதம் வாங்கினார்,
அகிலும் கிளம்பி வர வீல் சேரில் மகேந்திரன் அமர்ந்து இருக்க அவரை பார்க்கவே அருவருப்பு கொண்டு தாயிடம் திரும்பி “அம்மா நம்ம போகலாம்” என்றதும் “அகி நானும் வரேன்” என்று காயத்ரி சேர்ந்து கொள்ள குடும்பமாக சுடரின் வீட்டிற்கு கிளப்பினார்கள்.
மகனுக்கு உண்மை தெரிந்துவிட்டது என்பதை அவன் பார்வையிலே புரிந்து போனது இருந்தும் ஏதும் பேசாமல், வண்டியில் ஏற உதவிய மகன் பாரா முகம் வலித்தாலும் தாங்கி கொண்டார்.
காரில் சென்ற அனைவரும் அமைதியாக இருக்க, ருத்ரா கேட்ட கேள்விக்கு பதிலை கல்யாணியும் காயத்ரியும் மாறி மாறி சொல்லி கொண்டு வந்தனர்.
சுடரின் வீட்டிற்கு முன்னால் கார் நின்றதும், மகேந்திரன் இறங்க உதவி செய்த அகிலன் அப்படியே காருக்கு பக்கத்திலே நின்று கொண்டான், நடந்து சென்ற கல்யாணி மகன் வராமல் போக, திரும்பி பார்த்தாள், “நான் வரல நீங்க போங்க!” என்று தயங்கி நின்றான்.”எப்படியும் வந்து தான் ஆக வேண்டும் அகில், கொஞ்ச நேரத்துல வந்திடு” என்று சொல்லி வீட்டை நோக்கி நடந்தனர் மற்றவர்கள்,
வாசலில் பிளாக்கி கத்த வெளியே எட்டி பார்த்தார் மகேஷ்வரி, பார்த்தவர் அப்படியே கதவில் சாய்ந்து உறைந்து நிற்க, “என்னமா பிளாக்கி ரொம்ப நேரமா கத்திகிட்டு இருக்கு” என்று கேட்டுகொண்டே சுடர் நடந்து வந்து வாசலை பார்க்க தொலைவில் அவளின் அவனும், மிக நெருக்கத்தில் மற்றவரும் நிற்க, அவர்களை பார்த்தவள் கண்ணில் கண்ணீர் சட்டென்று வந்துவிட, அவளும் அமைதியாக அவ்விடம் நிற்க, சுடரை பார்த்ததும் “அத்தை” என்று ஓடிவந்து கட்டி கொண்ட ருத்ராவின் உயரத்திற்கு கீழே குனிந்து அணைத்துக் கொண்டாள்.
குழந்தையின் சத்தம் கேட்டு உள்ளே இருந்தவர்கள் ஒவ்வொருத்தராக வெளியே வந்ததும், இந்த முறை அவளின் மாமா நடிக்காமல் “எதுக்கு இங்கே வந்து இருக்காங்க” என்று கோவமாக கேட்டார், சாந்தா மட்டுமே அனைவரையும் பார்த்து உள்ளே வாங்க என்று அழைக்க,
“இப்ப எதுக்கு அவங்களை கூப்பிடுற சாந்தா, போதும் அவங்களால் நாம இழந்தது” என்று கத்த, அவரை கண்டுகொள்ளாத கல்யாணி கணவரை அழைத்து வந்த வீல் சேரோடு வீட்டிற்குள் விட்டவள், வாசலில் நின்ற மகேஷின் கையை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினாள், அதில் சுயத்திற்கு வந்த மகேஷ்வரி ஓ வென்று அழுதாள் பழைய நினைவில்,
அழுத மகேஷை கட்டிக்கொண்டு அழுது தீர்த்தாள் கல்யாணி, இருவரும் நீண்ட நேரம் அழுது கலைத்து போய் இருக்க அவர்களுக்கு தண்ணிரை கொடுத்தாள் சாந்தா, இருவரும் அழுததில் சுடரும் அகிலுமே அவரவர் தாயின் அருகே நின்று கொண்டு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கொண்டனர்.
“எதுக்கு டி என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி வந்த, இத்தனை வருஷம் உன்னை தேடிய என்னை அலைகழிச்சிட்ட நீ, இதோ இந்தா இருக்கிற ஊருக்குள்ளே உன்னை வச்சிக்கிட்டு எங்கேயெல்லாம் தேடினேன் தெரியுமா! ஏன் மகேஷ் இப்படி பண்ண அவரு பண்ண தப்புக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்து இருக்க கூடாது!” என்று அழுது சொன்ன கல்யாணியை பார்த்து
“இல்ல அண்ணி எனக்கு அப்போ என்ன பண்றது என்று தெரியல! யாரை நம்புறது கூட தெரியல உங்ககிட்ட சொன்னால் நீங்க உங்க புருஷன் பக்கம் நிக்க மாட்டீங்க என்பது என்ன நிச்சயம்! எல்லா பொண்ணுக்கும் புருஷனை தாண்டி தானே நேர்மை நியாயம் எல்லாம், இல்ல நான் சொல்றதை நீங்க நம்புவீங்க சொல்லி என்ன உத்திரவாதம்! உங்களோட சண்டை போட்டு பேசினால், என்னோட ராகவ் தான் திரும்பி வந்துடுவானா சொல்லுங்க!” அவள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் இல்லாமல் கண்ணில் கண்ணீர் கோர்க்க நின்றாள் கல்யாணி,
“அம்மா போதும் உள்ளே வாங்க” என்று சுடர் தனது தாயை அழைத்து செல்ல அவளின் பின்னாலே அகிலும் கல்யாணியும் சென்றார்கள், பெரியவர்கள் பேச்சை குழந்தைகள் கேட்கவேண்டாம் என்று எண்ணிய சுடர், “கபிலா இங்கே வா இவங்க பெயரு ருத்ரா! பாப்பாவை கொஞ்ச நேரம் விளையாட கூட்டிக்கொண்டு போயிட்டு வர முடியுமா!” என்று சுடர் கேட்க, அகிலனை முறைத்து கொண்டே “என்ன சுடர் நீ, மாமா இதை செய்யுங்க சொன்னால் செய்ய போறேன், அதுக்கு போய் கெஞ்சிக்கிட்டு நான் என்ன மத்தவங்க மாதிரியா நீ என்னோட முறை பொண்ணு உரிமையா கேளு” என்று தோரணையாக சொல்லி சட்டை காலரை தூக்க, 'நீ தனியா சிக்காமலா போயிடுவ அப்போ இருக்குடி உனக்கு' என்று அகிலன் உள்ளுக்குள்ளே கருவி கொண்டான்.
சுடரும் அகிலை பார்த்து கொண்டே “சரிங்க மாமா பாப்பாவை நல்லா பார்த்துக்குங்க” என்று சொல்லி அனுப்ப அகிலனுக்கு தான் வயிறு எறிந்தது.
கல்யாணியும் காயத்ரியும் ஒரு சோபாவில் அமர, எதிர் எதிரே இருந்த சோஃபாவில் அகிலும் விருத்தாச்சலம் அமர்ந்து இருந்தனர், சாந்தா அனைவருக்கும் தண்ணிரை கொடுத்துவிட்டு தனது கணவருக்கு அருகே நின்று விட, சுடர் மகேஷ் அருகே நின்று அனைவரையும் பார்க்காமல் தனது தாயின் கையை பிடித்து கொண்டு நின்றாள்.
மனைவியும் நண்பனின் மனைவி மகேஷ்வரியும் பேசியதை கேட்ட மகேந்திரனுக்கு குற்ற உணர்வு தாளாமல் தனது வீல் சேரினை லேசாக உருட்டி அவளிடம் வந்தவர், எழுந்து கொள்ள முடியுமா? என்று எல்லாம் யோசிக்காமல் ஒரு உந்துதளில் வேகமாக எழுந்து நின்றவர் தடுமாறிய படியே மகேஸ்வரியின் காலில் விழுந்தார்.