• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 34

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
கண்ணிமைக்கும் நேரத்தில் சட்டென்று விழுந்தவர் அவளின் காலை விடாமல் கெட்டியாக பிடித்து கொண்டு “அம்மாடி இந்த அண்ணனை மன்னிச்சிடு மா! நான் உன்னோட புருஷனை கொல்லனும் நினைக்கல, அது எதிர் பார்க்காமல் நடந்த விபத்து” என்று அழுதவரை விலகி அவள் நிற்க, மற்றவர்கள் ஓடி வந்து அவரை வீல் சேரில் அமர வைத்து இருந்தனர்.

யாரிடமும் வார்த்தைகள் இல்லை ஒரு மாதிரி நிசப்தமாக இருக்க மீண்டும் மகேந்திரனே பேச்சு ஆரம்பித்தார், “என்னோட பேராசை தான் உன்னோட வாழ்க்கையை தொலைத்து நீ நிற்கிற, நானும்.. நானும் என்று வார்த்தையை மென்று முழுங்கினார் அதை விடுமா!

நீ அழுதுட்டு போன நாள் முதல் இதோ இந்த நாள் வரைக்கும் நாங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு, அந்த நரகமே எவ்வளவோ மேல் என்று நினைக்கிற மாதிரி அப்படி ஒரு கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கோம், வெளியே இருந்து பார்க்கும் போது பெருமையா சொல்லலாம், ஆனா ஒரே ரூம்ல இருந்துகிட்டு, மனதளவில் தேள் கொட்டும் வார்த்தையை கேட்டு கொண்டு, இந்த உயிரு இன்னும் இந்த உடம்பில் ஒட்டி கொண்டு இருப்பதெல்லாம் உன்னிடம் மன்னிப்பு கேட்கணும் என்று தான் போல!” என்று சொன்ன கணவரை கண்ணீரோடு நோக்கினாள் கல்யாணி.

'நான் மட்டும் விருப்பட்டு பேசியிருப்பேன் என்று நினைக்கிறீங்களா!' என்று மனதிலே புழுங்கினாள் கல்யாணி அவருக்கு தண்டனை கொடுக்கிறேன் என்று, சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் இவளும் தானே துவண்டு போனாள்.


“அமுதா” என்று மகேந்திரன் அழைக்க இவ்வளு நேரமும் குனிந்த தலையினை நிமிராமல் இருந்தவள் அமுதா என்றதும் அவரை பார்த்தாள், “உன்னை பார்க்கும் போது ஏதோ இனபுரியாத சந்தோசமும் கவலையும் எனக்கு வரும் சில நேரம் உங்க அப்பா ராகவனை போல இருக்கும் உன்னோட பேச்சு, நான் தான் என்னோட பிரம்மை நினைச்சு விட்டுவிடுவேன், ஆனா எதிர்த்து நின்று கேட்டு இருந்தால் உனக்கு எல்லா பதிலும் கிடைச்சி இருக்கும்! நானும் நடந்த அனைத்தையும் சொல்லி உன்னோட காலில் விழுந்து இருப்பேன்,

எனக்கு இப்படி ஒரு நிலைமை வரணும் ஆசைப்பட்டு இருக்க! இப்பவும் உன்னோட மனசுல இருந்த அந்த பழிவாங்கணும் என்ற எண்ணம் தீர்ந்து போகாமல் அப்படியே இருந்தாலும் சொல்லு நான் சாகவும் தயாரா இருக்கேன், நீ இழந்த அனைத்துக்கும் என்னோட உயிர் கொடுத்தால் சரியாகும் என்றால் கண்டிப்பா இந்த மாமன் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறேன் அமுதா” என்று மகேந்திரன் சொல்ல,

ஓடி சென்று தனது தாயை கட்டி கொண்டு அழுதாள் சுடர், “நீ எதுக்கு தாயி அழுகிற இப்ப வந்து வசனம் பேசிட்டு இருக்காரே இந்த பெரிய மனுஷன், உன்னோட குழந்தை பருவத்தில் தொலைத்த, கிடைக்குமா? என்று ஏங்கிய உன்னோட அப்பாவும் அவரோட பாசத்தையும் திருப்பி கொடுக்க முடியுமா? இல்ல வாழ வேண்டிய வயசுல தனிமரமா நின்ற என்னோட தங்கைக்கு தான் அவள் இழந்த அனைத்தும் திரும்பி கிடைத்திடுமா?” என்று கோவத்தில் கத்திய விருதச்சலத்தை தொட்டு சாந்தா அமைதி படுத்த, “ஏங்க போனது போகட்டும் நம்ம சுடர்!” என்றதும் மீண்டும் கோவமாக எழுந்து,

அகிலன் சட்டையை பிடித்து “என்னோட பொண்ணை எவ்வளவு தைரியம் இருந்தால் அடித்து இருப்ப! அதுவும் கர்பமாக இருக்கிற பொண்ணை அடிக்கிற நீயெல்லாம் ஒரு மனுஷனா!” என்று கோவமாக கேட்க, இடைமறைத்தால் சுடர் “அவங்க யாருக்கும் நான் கர்பமாக இருக்கும் விசயத்தை சொல்லவில்லை!” என்று சொன்னதும் அகிலன் சட்டையை விட்டு இருந்தார்.

கல்யாணியும் காயத்ரியும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு சுடரிடம் சென்றனர். “அண்ணி வாழ்த்துக்கள்!” கல்யாணியோ கண்ணம் வழித்து திருஷ்டி கழிக்க கண்ணம் கை பட்டதும் “ஹா” என்று சினுங்க, அவளின் தாடையை பிடித்து பார்க்க,

சிறியதாக ரத்த காயமும் கண்ணமும் வீங்கி இருப்பது பக்கத்தில் நிக்கும் போது தான் தெரிந்தது, அதில் கோபமான கல்யாணி மகனிடம் வந்து “அப்பாவியா இருந்து கொண்டு எப்படி முரடன் மாதிரி அடிச்சி வைச்சி இருக்க!” என்று அவனின் தோலில் அடியை கொடுத்து விட்டு “அம்மு என்னோட செல்லம்!” என்று சிறு வயதில் கொஞ்சியதை போல் கொஞ்சினாள்.

சுடர் அவனை பார்க்க, அவளை எதிர்கொள்ள முடியாமல் தலையை கவிழ்த்து கொண்டான் அகி, “காயத்ரி என்னோட சேர் பின்னாடி இருக்கிற ஃபைல் எடு!” என்று கேட்க அவளும் எடுத்து நீட்டினாள், “இதுல நான் சம்பாதிச்ச அனைத்திலும் ராகவன் குடும்பத்து சேரணும் என்று எழுதிய பத்திரம், ஒருவேளை அவர்கள் கிடக்காமல் போகும் பட்சத்தில் என்னோட காலத்திற்கு பிறகு அறக்கட்டளைகள், ஆசிரமம் என்று பிரித்து கொடுக்கணும் எழுதி இருக்கிறேன் எப்படியோ என்னோட காலம் முடியறதுக்கு முன்னாடியே உங்களை பார்த்துட்டேன்” என்று சொன்னவர் மீண்டும் மன்னிப்பு கேட்க,

“எங்களுக்கு எந்த சொத்தும் பணமும் வேணாம் பணத்தை பார்க்கும் போதெல்லாம் ராகவோட இறப்பு தான் நினைவுக்கு வருது!, ஏன் என்னோட அண்ணாவும் எனக்கு சேரவேண்டியதை கொடுக்கும் போதே நான் வாங்கவில்லை, இப்போவும் எனக்கு வேண்டாம் அவரோட பங்கை என்ன செய்யனும் நினைக்கிறீங்களோ அதையே செய்யுங்க!” என்று சொன்னவள்
சாந்தாவிடம் திரும்பி “அண்ணி ரயிலுக்கு நேரமாச்சி நான்
கிளம்புகிறேன்” என்று பையை எடுத்து கொண்டு கிளம்பும் போது சுடரை கட்டிக்கொண்டு “பத்திரமா இருந்துக்க நான் போனை
போடுகிறேன்!” என்றவள் முதல் முறையாக கையில் போனோடு சென்றாள்.

விருத்தாச்சலம் தங்கையை கொண்டு போய் விட கிளம்ப, சாந்தா அனைவரையும் சாப்பிட வைக்கும் போது மகேஷின் மனதை மாற்ற ஆன்மிகம் உள்ளே நுழைய அதுவே வாழ்க்கையாக அமைத்து கொண்ட விஷயம் சொல்ல கல்யாணிக்கும் மகேந்திரனுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.

வாழ வேண்டிய வயசுல இப்படி சாமியார் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கிறது எல்லாம் என்னோட ஒரு முடிவு ஒரு குடும்பத்தை முழுசா அழிச்சி இருக்கு என்ற எண்ணமே மகேந்திரனை அங்கே இருக்க விடவில்லை, “நான் கிளம்புறேன் கல்யாணி, என்னோட குற்ற உணர்வு என்னை கொள்ளுது” என்று சொன்னதும் அவளும் அவரை அழைத்து கொண்டு கிளம்ப அகிலனை மட்டும் அங்கேயே விட்டு மற்றவர்கள் கிளம்பினார்கள்.

“என்ன செய்வியோ எனக்கு தெரியாது அவள் இல்லாமல் வீட்டுக்கு வர கூடாது” என்று அனைவர் முன்னிலையிலும் சொல்ல, “வண்டியை யார் ஓட்டுவா நானும் வரேன்” என்று அகி கெஞ்ச, “அதெல்லாம் காயத்ரி ஓட்டுவா, என்னோட அம்மு இல்லாமல் வீட்டு பக்கம் வந்தால் காலை வெட்டி விடுவேன் பார்த்துக்க!” என்று சொல்லி விட்டு சுடரிடம் வந்து “அம்மு பிளீஸ் வீட்டுக்கு வாடா அவனுக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் நம்ம வீட்டுல இருந்து கொடுடா! உங்க அம்மாவை தான் என்னால பார்த்துக்க முடியல உன்னை என்னோட கண்ணை போல பத்திரமா பார்த்துக்கிறேன் வாம்மா” என்று கெஞ்சி சென்றாள்.

“உடம்பை பார்த்துக்குங்க அண்ணி, உங்களுக்கு எது சரியென தோணுதோ அதை செய்யுங்க, ஆனால் நீங்க வந்தால் சந்தோஷ படுவேன்” என்று சொல்லி அணைத்து விட்டு சென்றாள்.

“பாய் அத்தை” என்று கையை ஆட்டி விட்டு காரில் ஏறி கொண்டாள் சின்ன வாண்டு,

“வந்துடு மா போதும் இவ்வளவு வருஷ போராட்டம் எல்லாம் இன்னியோட முடியட்டும் இனிமேல் சந்தோசமாக இருக்கலாம்” என்று சொல்லி மகேந்திரன் கிளம்ப, கார் அகிலன் கண்ணை விட்டு மறைய திரும்பி வீட்டை பார்த்தான், அனைவரும் வீட்டுக்குள்ளே சென்று இருக்க கபிலன் மட்டும் அகிலனை முறைத்து பார்த்தான்.

“இவனை வேற நான் சமாளிக்கணுமா! அய்யோ கடவுளே” என்று சொல்லி நடக்க அவனது காலை தட்டிவிட்டு “உனக்கு எவ்வளவு தைரியம்! என்னோட சுடரை அடிச்சி இருப்ப” என்று சொல்ல, தடுமாறி விழ போனவன் அருகில் இருந்த மரத்தை பிடித்து நின்று விட்டான். அவனை திட்டவும் அடிக்கவும் முடியவில்லை அகிலனால் உண்மை தானே அவளை அடித்தது தவறு தானே! ஆனால் 'என்னோட சுடர்' என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாமல், “எங்களுக்குள்ள எத்தனை சண்டை வந்தாலும் அடிச்சிகிட்டாலும் அவ என்னோட சுடர் எனக்கு மட்டும் தான் சொந்தம்” என்று அவனின் தலையை நறுக்கென்று கொட்டி விட்டு வீட்டிற்குள்ளே ஓடி சென்றான் அகிலன்.

ஒரு வேகத்தில் ஓடி வந்தவன் உள்ளே வந்ததும் அமைதியாகி பார்வையை சுழல விட்டு இருந்தான் ஹாலில் யாரும் இல்லாமல் காலியாக இருந்தது, அப்பாடா யாரும் இல்லை என்ற நிம்மதி அவனுள், கிச்சனில் இருந்து வெளியே வந்த சுடரின் அத்தை “தம்பி ஏதாவது சாப்பிடுறீங்களா!” என்று கேட்ட, “ஹான் அது!” என்று தடுமாறியவன் அவளிடம் வந்து “சித்தி என்னை மன்னிச்சிடுங்க, சுடர் மேலே தப்பே இருந்தாலும் அடிச்சி இருந்திருக்க கூடாது, இனிமேல் அவங்களை அடிக்க நினைச்சி கூட பார்க்கமாட்டேன் பிளீஸ் மன்னிச்சிடுங்க சித்தி உங்களையும் சித்தப்பாவையும் பார்க்க குற்ற உணர்ச்சியா இருக்கு!” என்று சொன்னவன் முதுகில் கையை வைத்தார் விருத்தாச்சலம்.

அலறியடித்து திரும்பிய அகியின் முகத்தை பார்த்த அவருக்கு சிரிப்பு வர கடினப்பட்டு மறைத்து “சரி இன்னொரு முறை என்னோட பொண்ணு மேல கையை வைச்ச அப்புறம் என்னை வேற மாறி பார்ப்ப” என்று மீசையை நீவ, சற்று பயந்தவன் “அப்போ என்னை மன்னிச்சிட்டீங்க அப்படி தானே!” என்று சொல்ல, “அதுகூட தெரியல மக்கு!” என்று நெற்றியில் அடித்து கொண்ட கபிலனை திரும்பி பார்த்தான்,

“டேய் இப்போ எதுக்கு வந்த போ போய் டியூஷன் கிளம்புற வழியை பாரு” என்று சாந்தா அவனை விரட்ட, “அதான் இன்னைக்கு ஸ்கூல் தான் போகலையே! அப்போ டியூஷன் எதுக்கு போகணும்” என்ற கபியை முறைக்க “சரி போறேன் முறைககாதே சாந்தா” என்று பெயரை சொல்லி ஓட்டம் பிடித்தான் கபிலன்.

“சாந்தா நானும் வயலு வரை போயிட்டு வரேன்” என்று கிளம்ப, “தம்பி சுடர் உள்ளே தான் இருக்கா போயி பாருங்க” என்று சொல்லி அவளும் இவர்களை தனியே விட்டு வெளியே கிளம்பி விட்டாள்.

அனைவருக்கும் கிளம்பிவிட, யாருமில்லை என்ற எண்ணமே சுடர் அடித்தாலும் பேசினாலும் பார்த்து கொள்ளலாம் என்று கதவை திறக்க, அறையே வெறுமையாக இருந்தது, “வீட்டுல தானே இருந்தாங்க!” அதுக்குள்ள எங்கே போனாங்க என்று யோசனையாக அறையை பார்த்து கொண்டு இருக்க, பின்னாடி இருந்து “ஹுக்கும்!” என்று கணைக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க அவனை முறைத்து கொண்டே சுவற்றில் சாய்ந்து நின்று இருந்தாள்.
 
  • Love
Reactions: shasri