• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 35 ( இறுதி அத்தியாயம்)

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
சில நொடிகள் திடுக்கிட்டு பார்த்தவன் அவள் முன்னோக்கி நடக்க, இவனோ பின்னோக்கி நடந்து கொண்டு இருந்தான், பயமுறுத்தும் பூச்சாண்டிக்கு பயந்து குழந்தை நடப்பது போல் அவளை பிரமிப்பாக பார்த்து கொண்டே நடந்த அகில் சுவரில் மோதி நின்றுவிட, தனது இரண்டு கைகளுக்குள் அவனை சிறை செய்தவள் அகியை பார்த்து “ஹே மிஸ்டர் கண்ணை திற, இப்ப யாரும் உனக்கு முத்தம் கொடுக்க வரல!” என்று சொன்னதும் ஒற்றை கண்ணை லேசாக திறந்து அவளை பார்க்க, பக்கென்று ஆனது அவளின் பார்வை வீச்சை பார்த்ததும், “என்ன புலி! எதுக்கு பதுங்குற, நேற்று அடிச்ச மாதிரி அடிக்க வேண்டியது தானே!, இந்தா என்று தனது முடியை அவனின் கையை பிடித்து கொடுத்துவிட்டு, இப்போ இழுத்து கொண்டு போக வேண்டியது தானே! எதுக்கு சார் அப்படியே பயந்து கொண்டு இருக்கிற மாதிரி நடிக்கிறீங்க!, ஏண்டி சுடர் என்று 'டி' போட்டு கூப்பிடுங்க என்னோட கணவரே, என்ன முதலாளி சார் உங்களோட சொத்துக்கு ஆசைப்பட்டு கொல்ல வந்த கொலைக்காரி வீட்டுக்கு எதுக்கு சார் வந்தீங்க!,

நான் பணத்துக்கு ஆசைப்பட்டு வந்தவ” என்று மீண்டும் மீண்டும் அதையே சொன்னவள் அழுதுகொண்டே மெத்தையில் அமர்ந்துவிட, கண்ணை மூடி கொண்டு இருந்தவன் கண்ணிலும் கண்ணீர் வழிய அவளை பார்க்க, அப்போது தான் அவள் தன்னிடம் நிற்காமல், அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து அவளின் முன்னால் முட்டி போட்டு “என்னை மன்னிச்சிடுங்க சுடர்! ஏதோ அப்பாவை கொல்ல முயற்சி செய்தீங்க என்ற கோவத்தில் யோசிக்காமல் செய்திட்டேன், நான் உங்களை தனியா பார்த்து பேசியிருக்கணும், ஆனா நீங்க பண்ணதும் தப்பு தானே! ஒருத்தர் இறந்ததற்கு இப்படியா பழிவாங்குவது! அவரோட பக்கத்தை நீங்க தெரிந்து இருந்திருக்கலாம் அவரும் இத்தனை வருஷம் தண்டனையை அனுபவிச்சிட்டு தான் இருந்து இருக்காரு! என்ன அது யாருக்குமே தெரியாமல் இருந்து இருக்கு!

அவங்களை விடு சுடர் நம்மளை பத்தி யோசிக்கலாம் நம்ம வீட்டுக்கு எப்போ போகலாம்! நீ இல்லாமல் அந்த ரூம் எனக்கு கொடுமையான சிறை மாதிரி தெரியுது!” என்று சொன்னவன் மெல்ல மெல்ல அவளை நெருங்கி அவளின் வயிற்றில் கையை வைத்து, “நம்ம குழந்தைக்கு அவங்க அம்மா அப்பா சண்டை போட்டா கவலையா இருக்காது! என்னோட பொண்ணு பாவம் அவ எப்போதும் சந்தோசமா வளரனும்” என்றதும், அவன் மேல் இருந்த கோவத்தை மறந்து

“யார் சொன்னா பொண்ணு என்று, என்னோட வயிற்றில் எங்க அப்பா தான் வந்து பிறப்பாரு என்று அம்மா சொன்னாங்க அப்போ கண்டிப்பாக இவங்க ஆண் குழந்தை தான்” என்று இவளும் பதிலுக்கு சொல்ல, சிரித்து கொண்டே “சரி இப்ப பையன் அடுத்து பொண்ணை பெற்றுக்கொள்ளலாம்!” என்று அவளின் வயிற்றில் முத்தம் வைக்க கண்ணை மூடிக் கொண்டு ரசித்து இன்னும் எத்தனை முத்தங்கள் வாங்கினாளோ! கணவன் மனைவி சண்டையை சில சமயங்களில் ஒரு கூடலே தீர்த்து விடும். கூடலின் நடுவே அவனை திட்டுவதும் இவன் மன்னிப்பு கேட்பதும் என்று சமாதானம் ஆகினார்கள் இருவரும்.


ஆனால் உடனே அங்கே செல்ல நெருடலாக உணர்ந்த சுடரை, இயல்பாக மாறும் வரை கொஞ்சம் இடைவெளி கொடுத்து பார்த்து கொண்டனர் அகியின் குடும்பம், அவளுக்காக இங்கேயே தங்கிவிட்டான், ரகுவும் அதே ஊரில் இருப்பது அகிலனுக்கு கொஞ்சம் வசதியாக போனது ரகுவிற்கு மலரோடு திருமணம் செய்து வைக்க நாளும் குறிக்க பட்டு, இருந்தது.

வேலைக்காரர்கள் முன்னாடி அவமானபட்ட சுடரை அவர்களின் முன்னால் கௌரவமாக வரவேற்றனர் மகேந்திரன் கல்யாணி. அகிலன் ஒருபடி மேலே சென்று அவளை கையில் தாங்கியே நின்றான் ஆரத்தி எடுக்கும் போதும், பொட்டு வைத்து முடித்த பின்பும் தூக்கி கொண்டு சென்றான்.

ஆளுக்கு ஆள் சுடரை சொந்தம் கொண்டாடினார் அம்மு என்று கல்யாணி சுற்றி வந்தாள், அமுதா அமுதா என்று அவளுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயமும் ஒரு தகப்பனாக மாறி செய்து கொண்டு இருந்தார் மகேந்திரன். காயத்ரியும் சற்று பொறாமை பட்டு, “அண்ணி அப்பா என்னை இந்த அளவுக்கு பார்த்துக்கொண்டது இல்லை” என்று சொல்ல, “ஹே கண்ணு வைக்காதடி என்னோட அம்மு மேலே!” என்று சொல்லி சுத்தி போட,

“எல்லோரும் தள்ளி போறீங்களா! இவ என்னோட பொண்டாட்டி, எப்பப்பாரு அவளை சூழ்ந்து கொண்டு இருந்தால் நான் எப்போ தான் பேசுறது கொஞ்சுறது, எல்லோரும் போங்க” என்று கத்திவிட்டு அவளை தனது அறைக்கு தூக்கி கொண்டு சென்றான், “டேய் அவ இன்னும் பாலை குடிக்கல” என்று கல்யாணி கத்த, “நானே வந்து எடுத்துகிறேன், பால் கொடுக்குற சாக்குல அப்படியே தங்கிவிடுவீங்க” என்று சொல்லி கதவை அடைத்து கொண்டான்.

பூ போல அவளை மெத்தையில் கிடத்தியவன், அவளின் மடியில் படுத்து கொண்டு முழுவதுமாக வளர்ந்த வயிற்றை தொட்டு குழந்தையோடு கதை பேசி சுடருக்கும் குழந்தைக்கும் மாறி மாறி முத்தம் வைத்து பேசி கொண்டு இருந்தான்.

அவனின் தலையை கோதிய கையை பிடித்து முத்தம் வைத்து, “சுடர்.. சுடர்!”

“ம்ம்”

“சுடர்..!”

“சொல்லுங்க அகில்”

“நீங்க சந்தோசமா இருக்கீங்களா! நான் உங்களை நல்லா பார்த்துகிறேனா?” என்று கேட்க,

“என்னை பாருங்க” என்று அவனை முகம் பார்க்க வைத்தவள் அவனுக்கு முத்தம் கொடுத்து “நான் நல்லா இருக்கேன், மனசு நிறைந்த வாழ்க்கையை வாழுறேன் போதுமா!” என்று அவனை அணைத்து சொல்ல,

அதற்குள் கதவும் தட்ட “ச்சை எங்கேயாவது கொஞ்சம் தனியா விடுறாங்களா!” என்று கடுப்புடனே கதவை திறக்க, கையில் மருதாணியுடன் சகு நின்றாள் “தம்பி அம்மா பாப்பாவுக்கு மருதாணி போட சொன்னாங்க! நாளைக்கு சீமந்தம் பண்ணும் போது பார்க்க அழகா இருக்கும்” என்று சொன்ன சகுவை முறைத்து பார்த்து “நானே போட்டு விடுறேன் போய் பாலை எடுத்து கொண்டு வாங்க அதற்கு பிறகு யாராவது கதவை தட்டினா நான் மனுசனா இருக்க மாட்டேன்” என்று சொன்னதும்,

“இப்ப மட்டும் எப்படி இருக்கீங்க! தம்பி” என சொல்லி சகு சென்று விட, அவனே அவளுக்கு பார்த்து பார்த்து மருதாணி போட்டு இருந்தான். விடிந்ததும் வீடு முழுக்க அனைவரும் ஒன்று சேர்ந்து ஒன்பதாம் மாதம் வளையல் போட்டு பல வகையான கலவை சாதம் அவளுக்கு ஊட்டி விழாவை சிறப்பாக நடத்தினர். பொதுவாக வளைகாப்பு முடிந்ததும் பெண்ணை தாயின் வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம் என்று சாந்தா சுடரை அழைத்து செல்ல வேண்டும் என்று கிளம்பும் போது, அவளை அனுப்பவே முடியாது என்று மொத்த குடும்பமும் போராட்டம் நடத்தாது தான் குறை,

எப்படி சொல்லி இவர்களை சமாளிப்பது என்று விழி பிதுங்கி நின்றனர் சுடரின் குடும்பம். அதற்குள் கபிலன் உள்ளே நுழைந்து “இங்க பாரு சுடர் நம்ம வீட்டுக்கு வந்தால் மாமா உன்னை பத்திரமா பார்த்துக்கிறேன், வயிற்றில் இருக்கும் பாப்பாவுக்கு நான் நிறைய கதை சொல்லுவேன், என்ன மாதிரி தைரியசாலியா இருக்க நிறைய கதை சொல்லுவேன், இங்கே இருந்தால் இவனை மாதிரி பயந்தாங்கொளியா தான் இருக்கும்” என்று சுடரின் கையை பிடித்து கொண்டு சொன்னவன் இப்போதும் அகிலனை முறைத்தான். “குழந்தைக்கு கதை சொல்ற வேலையை நான் பார்த்துக்கிறேன் உனக்கு என்ன தான் பிரச்சனை எப்பப்பாரு என்னோட ரூட்டுல குறுக்க வர” கபிலனை பார்த்து அகில் கேட்டான், “ஹான் நான் பிறந்ததில் இருந்து என்னோட இருந்த சுடரை இவரு வந்து கூட்டிக்கொண்டு போனா நாங்க சும்மா இருக்கணுமா! அவ என்னோட சுடர்” என்று சொன்னதும்

“ஓ இது தான் உன்னோட பிரச்சனையா அப்ப ஒன்னு செய் நீயும் உன்னோட சுடர் வீட்டுலயே இருந்துடு” என்று சொல்ல பேசாமல் அமைதியாக இருந்து “பரவல நான் என்னோட வீட்டுக்கு போறேன் ஆனா என்னோட சுடரை அடிக்காமல் பத்திரமா பார்த்துப்பேன் என்று சத்தியம் பண்ணு” என்று கேட்டதும் 'அடேய் அவ என்னை அடிக்காமல் இருந்தாலே போதும்! ஏதோ ஒரு முறை அவளை அடிச்சிட்டேன் அதுக்கு அழுக்கு துணியை துவைக்கிற மாதிரி ஆளுக்கு ஆள் சும்மா போட்டு வெளுக்கிறிங்க, அவளே மறந்தாலும் நீங்க சொல்லி ஞாபகப்படுத்திட்டு இருங்க' என்று மனதிலே நினைத்தான்.


எல்லோரும் சுடரை அனுப்ப மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்ததால் வேற வழி இல்லாமல் சுடரை மாமியார் வீட்டில் விட்டு விட்டு அடிக்கடி வந்து பார்த்து கொண்டனர். அவளின் அன்னை ஆசைப்பட்டது போலவே ஆண் குழந்தை பிறக்க, ராகவன் என்ற தனது தந்தையின் பெயரை ராகவ் என்று வைக்க வேண்டும் என்று கேட்டதுக்கு அனைவருமே தங்களின் விருப்பமும் இது தான் என்றார்கள், பெயர்சுட்டு விசேஷத்தை திருவிழாவை போல் கொண்டாடினார் விருத்தாச்சலம் மகேந்திரன் தாத்தா ஆனா சந்தோசத்தில்.


சுடர் இனிதே முடிந்தது 💛


இந்த கதையை படித்த அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏

வைகை வலைத்தளத்திலும் முகநூலிலும் விமர்சனம் தந்த அனைவருக்கும் நன்றிகள்🙏

எல்லாவற்றிற்கும் மேலாக என்னோட சீனியர் தர்ஷா அவர்களுக்கு மிக்க நன்றி, நன்றியோடு முடியாது அவர்கள் மிகவும் மனதுக்கு நெருக்கமான சோல் மேட் பிரதிபிலி கொடுத்த பொக்கிஷம்♥️

இந்த கதையை எழுத ஆரம்பித்ததில்இருந்து முடிக்கும் வரை பக்கபலமாக இருக்கும் காமேஷ்வரி அக்கா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியல, உடம்பு சரியில்லாத நேரத்திலும் உதவி செய்ய மனசு வரணும் ஓ மை காட் நீங்க சூப்பர் அக்கா, இந்த வலைத்தளத்தை அறிமுகம் செய்து, ரிஜிஸ்டர் பண்ணி, எப்படி போஸ்ட் போடணும் வரைக்கும் ஒரு குழந்தைக்கு சொல்லி தர மாதிரி ஒவ்வொன்றா எடுத்து சொல்ல பொறுமை வேணும், சின்னதா முகம் சுணுங்காமல் சிரித்து கொண்டே உங்களால் முடியும் முயற்சி செய்து பாருங்கள் என்று ஊக்கம் கொடுத்து கொண்டே இருந்தீங்க! இந்த கதை எத்தனை பேருக்கு பிடித்தது தெரியல, ஆனால் இதை எழுதும் போது கிடைத்த அனுபவம் இதுவே போதும்.






நன்றிகள்
 
  • Like
Reactions: shasri