• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 2

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
பூஞ்சோலை என்ற கிராமத்தின் மிகப்பெரிய செல்வாக்கு மிகுந்த குடும்பம்தான் சமர் செல்வனின் குடும்பம். ஊரில் பண்ணையார் என்று சொல்லும் அளவிற்கு பணம் மரியாதை செல்வாக்கு என்று மிகப் பெரிய பாரம்பரியமான குடும்பமாக இருப்பவர் செல்லையா அவருடைய மனைவி பரிபூரணம் இவர்களுக்கு மூன்று மகன்கள். மூத்தவர் தங்கதுரை அவருடைய மனைவி புனிதா இவர்களுக்கு மட்டுமல்லாமல் அந்த குடும்பத்தில் மூத்த வாரிசு தான் சமர் செல்வன் இவனுக்கு அடுத்து அருள்செல்வன் என்று ஒரு மகன் இருக்கிறான்.

அடுத்தவர் செல்வராஜ் இவருடைய மனைவி விஜயா இவர்களுக்கு கணேஷ் என்ற மகனும் நிலா என்ற மகளும் இருக்கின்றனர். அடுத்தவர் முருகன் இவருடைய மனைவி ராதிகா இவர்களுக்கு சரண் என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர்.

இந்தக் குடும்பம் எந்த அளவுக்கு பாரம்பரியம் வாய்ந்த குடும்பமோ அந்த அளவுக்கு அடுத்தவருக்கு உதவி செய்து நல்ல பெயரும் பெற்றிருந்தனர். ஆனால் அவர்கள் குடும்பத்தில் இருந்த மிகப்பெரிய குறை என்னவென்றால் ஒரு சில மூட நம்பிக்கைகளை முழுதாக நம்பி செயல்படுவார்கள்.

அப்படி அவர்கள் நம்பி செயல்பட்டதன் விளைவு தான் இன்று சமர் செல்வன் அனைவரையும் விட்டு தனியாக இருப்பதற்கான காரணம். ஏனென்றால் சமர் அந்த வீட்டின் மூத்த வாரிசாக பிறந்த போது அனைவரும் அதை கோலாகலமாக கொண்டாடி கொண்டு இருந்தனர். ஆனால் அவன் பிறந்த சிறிது நாட்களில் செல்லையா குடும்பம் ஒரு சொத்திற்காக போட்டிருந்த கேஸ்க்கு தீர்ப்பு வந்தது ஆனால் இவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினருக்கு சாதகமாக வந்தது.

உண்மையை கூற வேண்டும் என்றால் அது நியாயம் பக்கமே ஜெயித்து இருந்தது. அதை உணராத செல்லையா குடும்பத்தில் உள்ள சில சமர் பிறந்த நேரம் தான் தங்களுடைய சொத்து கைமீறிப் போய்விட்டது என எண்ணி அவனை முழுமையாக வெறுக்க ஆரம்பித்தனர்.

ஆனால் பெற்ற மகனை பிரிய முடியாத புனிதா அவனை பத்திரமாக கவனித்துக் கொண்டார். அந்த வீட்டிற்கு வந்த பெண்களை தவிர செல்வராஜ் மட்டுமே இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்ப மாட்டார். மற்றவர்கள் அனைவரும் இதை நம்பிய காரணத்தினால் பெற்ற தந்தையே வெறுத்து ஒதுக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டான் சமர்.

செல்வராஜ் தன் அண்ணியாகிய புனிதாவை பார்த்தவர் "அண்ணி உங்களுடைய மகன் எப்பவுமே நியாயத்தின் பக்கம் நிற்பவன் ஆக இருப்பான் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவன் பிறந்து சரிதா நாட்களில் நியாயம் ஜெயித்து இருக்கிறது யார் என்ன கூறினாலும் மூடநம்பிக்கைகளை நினைத்து நீங்களும் உங்கள் பிள்ளையை வெறுத்து விடாதீர்கள். அப்படி நீங்கள் செய்தீர்கள் என்றால் அந்த சிறு பிஞ்சு நெஞ்சில் தேவையில்லாத கசடுகள் ஒன்று சேர்ந்து அவனை மன அழுத்தத்திற்கு தள்ளிவிடும்" என்று கூறினார்.

புனிதா மனதில் அப்போதுதான் ஒரு நிம்மதி பிறந்தது இந்த வீட்டில் ஒருவராவது தன்னுடைய மகனின் பிறப்பை நல்லவிதமாக புரிந்து நடந்து கொள்கிறாரே என்று நினைத்து மகிழ்ந்து கொண்டார். ஆனால் விதியின் செயலால் அவராலும் பலநேரங்களில் சமரை கவனிக்க இயலவில்லை முடிந்த அளவு தன்னுடைய மகனை கவனித்துக் கொண்டாலும் மற்றவர்களின் திட்டும் தேவையில்லாத பேச்சுக்கள் அனைத்தையும் அவன் கேட்க வேண்டிய நிலைதான் இருந்தது.

சிறுவயதில் எதற்கு என்று புரியாத சமர் தன் வீட்டில் இருக்கும் மற்ற தம்பி தங்கைகளை பாசத்துடன் நடந்து கொள்ளும் தன் தந்தை தன்னை மட்டும் வெறுத்து ஒதுக்குவதன் காரணம் புரியாமல் பல நாள் தனியாக அழுது இருக்கிறான்.

நாட்கள் செல்ல செல்ல அதாவது அவன் வளர வளர அவனுக்கு காரணம் புரிய ஆரம்பித்தது. காரணம் புரிய ஆரம்பித்தவுடன் அவன் அனைவரிடமும் இருந்து விலக ஆரம்பித்தான். புனிதா அவனிடம் பாசமாக இருப்பதை பார்த்து தங்கதுரை அவரை கடுமையாக கண்டித்து அடிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார். அதை கண்கூடாக பார்த்த சமர் அதன் பிறகு புனிதா அவனை நெருங்க நினைத்தாலும் அவரை நெருங்க விடவில்லை.

அதை புனிதா புரிந்துகொண்டார் இருந்தாலும் அவன் மறுத்தாலும் ஒரு சில விஷயங்களை அவர் அவனுக்கு செய்து கொண்டுதான் இருந்தார். இதனால் அவர் மட்டுமல்ல சமர் கூட சில நேரம் மற்றவர்களால் காயம் பட ஆரம்பித்தான். ஆனால் யார் என்ன சொன்னாலும் அவனிடம் மிகவும் நெருக்கமாக இருப்பது செல்வராஜ் மட்டுமே அவரிடம் யாரின் பேச்சும் எடுபடதா காரணத்தினால் அனைவரும் அதற்கு சமரை தான் கரித்து கொட்டினார்கள்.

சமருக்கு இருந்த ஒரே ஆறுதல் ஆதவன் மற்றும் அவனுடைய குடும்பம் எப்பொழுதும் ஆதவனின் பெற்றோர் ஆதவனை மட்டும் தன் மகனாக பார்க்காமல் சமரையும் தங்கள் மகனாகவே பார்த்தனர். அதனால் தன் வீட்டில் கிடைக்காத சந்தோஷம் அந்த வீட்டில் அவனுக்கு கிடைத்தது.
பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அனைவரும் பாராட்டும் படியான மதிப்பெண்கள் பெற்ற போதுகூட செல்வராஜ் புனிதா விஜயா மற்றும் ராதிகா அனைவரும் பாராட்டினார்கள். மற்றவர்கள் கண்டு கொள்ளவில்லை தம்பி தங்கைகள் அனைவரும் அவன் மேல் பாசம் வைத்து இருந்தாலும் யாராவது ஏதாவது கூறி விடுவார்களோ என்று யாருக்கும் தெரியாமலேயே அவனிடம் பேசிப் பழகிக் கொண்டிருந்தனர்.

அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது அவன் முகத்தில் ஒரு விரக்தி புன்னகை வந்து போகும். அதன் பிறகு அவன் கல்லூரியில் தனக்கு விருப்பமான பாடத்தை எடுத்துப் படித்த போது கூட யாரும் அவனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. அவனுடைய விருப்பத்திற்கு எதிராக புனிதா செல்வராஜ் இருவரும் எதுவும் கூறாத காரணத்தினால் தன்னுடைய ஆசைப்படியே விவசாயத்தை தேர்ந்தெடுத்து தன் நண்பருடன் சேர்ந்து நல்லபடியாக படித்து டாப் ஸ்கோர் உடன் வெளியே வந்தான்.

படித்த முடித்து வந்தவன் உடனடியாக தன்னுடைய சித்தப்பாவை சந்தித்தான் அவரும் சமர் தன்னை தேடி வந்திருப்பது எதற்காக என்று அறிந்து அவனிடம் "நீ எந்த நிலத்தை வாங்கனும்னு ஆசைப்படுகிறாயோ அதையே உன்னோட பெயரில் வாங்கி தரேன். இவ்வளவு நாள் இந்த வீட்டுல சில விஷயங்களை மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் நீ கஷ்டப்பட்டு இருக்கிறாய் அது எனக்கு தெரியும் இனியாவது சந்தோஷமா இரு எப்பவுமே நான் உன் கூட தான் இருப்பேன் அதை நீ மறந்திடக் கூடாது" என்று கூறி அவன் ஆசைப்பட்ட நிலத்தை வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் சமர் அதற்கு அவரிடம் இருந்து சிறிது பணம் கூட வாங்கவில்லை அவன் படித்துக் கொண்டிருந்தபோது பார்ட் டைம் வேலை செய்து அதன் மூலம் பணம் சேமித்து வைத்திருந்தான். அதேபோல் மீதி பணம் ஆதவன் போட இருவரும் ஒன்றாக சேர்ந்து நிலத்தை தங்கள் இருவரின் பெயரில் வாங்கிக் கொண்டனர். சமர் இருக்கும் வீடு இருக்கும் இடம் மட்டுமே அவனின் பெயரில் இருந்தது மற்றவை அனைத்தும் இருவருக்கும் பொதுவாக இருந்தது.

அவன் வீட்டை விட்டு வெளியே செல்கிறான் என்ற விஷயம் அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த போது யாரும் பெரிதாக எதுவும் சொல்லவில்லை ஏனென்றால் சொந்த வீட்டிலேயே சிலரின் வெறுப்பு மற்றும் அவ சொல்லுக்கு ஆளாகி அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவன் தனிமையில் அவனுக்கு விருப்பமான வேலையை செய்து மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டனர். ஆனால் அவன் வீட்டை விட்டு செல்கிறான் என்று விஷயம் தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்த நபர்களும் அந்த வீட்டில் இருக்கத்தான் செய்தனர்.

எப்போது சமர் இந்த வீட்டிற்கு வந்தானோ அப்போது முதல் அவருடைய உலகம் இந்த விவசாயம் மற்றும் அவனுடைய நண்பனான ஆதவன் குடும்பம் தான். இவர்களுடன் அவன் என்னதான் மகிழ்ச்சியாக நாட்களை கழித்தாலும் பிறந்தது முதல் அவனிடம் வீட்டிலுள்ளவர்கள் காட்டிய வெறுப்பு ஏதோ ஒரு வகையில் மனதில் தங்கி தான் இருந்தது. அதன் பயனாக அவன் தன்னுடைய வாழ்க்கையில் வேறு யாரையும் இணைக்க முன்வரவில்லை அதை மீறி அவன் இணைக்க நினைத்த போதும் அது வேறுவிதமான அவமானமாக அவனுக்கு கிடைத்தது.

அதனால் மொத்தமாக தன்னுடைய வட்டத்தை தான் தன்னுடைய நண்பன் மற்றும் தன் தாய் தன்னுடைய சித்தப்பா தன்னுடைய தம்பி தங்கைகள் என்று சுருக்கிக் கொண்டான். அதில் வேறு யாரும் நுழைவதை அவன் விரும்பவில்லை ஏனென்றால் அவனுடைய மனதில் எண்ணங்கள் வேறு யாராவது தங்களுக்குள் வந்தால் இருக்கும் நிம்மதி சென்று விடும் என்ற ரீதியில் இருந்தது.

ஆனால் அவனுடைய மனதில் நுழைந்த தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாள் ஆதர்ஷினி. அவளுக்கு மட்டும் தன்னை எவ்வாறு பிடித்தது என்று சமர் பலமுறை யோசித்து இருக்கிறான். ஆனால் அவனால் அவளை தன்னுடைய வாழ்க்கை வட்டத்துக்குள் இணைக்க மனது வரவில்லை அதனால் அவள் வரும்போது எல்லாம் கோபமாக முகத்தை திருப்பிக் கொள்வான் இருந்தாலும் அவள் அவனை பார்க்க வருவது நின்றபாடில்லை. அதனால் அவனும் அவளுக்கு ஒரு திருமணம் முடியும் வரை வருவாள் அதுவரை ஏதாவது பேசிக் கொண்டு இருப்பாள் என்று எண்ணிக் கொண்டு அமைதியாகி விட்டான்.

இன்றும் அதுபோல்தான் அவள் சென்ற பிறகு தன்னுடைய வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான். அதேசமயம் ஸ்கூட்டியில் தனியாக விட்டுவிட்டு சென்ற தன் தோழி ஆத்திச்சூடியை மனதில் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள் பானிபூரி "எரும மாடு ஏதாவது சொல்லிட்டு போகுதா பாரு அது பாட்டுக்கு ஸ்கூட்டி நிப்பாட்டிட்டு இறங்கி போய்க்கிட்டே இருக்கு அந்த அண்ணன் கிட்ட அடி வாங்காமல் வந்தால் சரிதான் இவளை நம்பி போனா கடைசில தலையில் துண்டை போட்டு தான் இருக்கணும் போல" என்று தன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தாள்.

என்னதான் சமரிடன் வீரமாக பேசி விட்டாலும் அவன் இதுவரை வாழ்வில் அடைந்த துன்பங்களை நினைத்து கண்கள் கலங்க வந்து கொண்டு இருந்தவள் தன்னுடைய தோழி மனதில் போவதாக நினைத்து வாய்விட்டுப் புலம்பி கொண்டு இருப்பதை பார்த்து சிரித்துக் கொண்டே அவள் அருகில் வந்தாள்.

அடியே பானிபூரி "தனியா என்னத்த . புலம்பிகிட்டு இருக்க என்று கேட்டாள் ஆதர்ஷினி சத்தத்தில் திரும்பி பார்த்த பவானி அவளை மேலிருந்து கீழ்வரை ஆராய்ந்தாள். தன்னை இருக்கு தன்னுடைய தோழி ஆராய்கிறாள் என்ற விஷயம் புரிந்து அவள் தலையில் கொட்டிய ஆதர்ஷினி "அதெல்லாம் போன மாதிரியே முழுசா தான் வந்து இருக்கேன் அதெல்லாம் என் டார்லிங் என்ன அடிக்காது அப்படியே அடிச்சாலும் அது ரொமான்டிக் சீன்னா தான் இருக்கும்" என்று கூறினாள்.

பவானி அவள் முதுகிலேயே ஒன்று வைத்துவிட்டு "அந்த அண்ணா பாவம் நீ சும்மா சும்மா போய் அந்த அண்ணாவை தொந்தரவு பண்ணாத என்னைக்காவது ஒரு நாள் அதிகமாக கோபப்பட்டு உன்னைய இந்த வயலுக்குள்ளே போட்டு புதைக்க போகுது அதை நான் வேடிக்கை பார்க்க தான் போகிறேன். இனி நாளையிலிருந்து நான் உன் கூட வரவும் மாட்டேன்" என்று கூறினாள்.

தன் தோழியின் கழுத்தில் கை போட்டு இருக்கிய ஆத்திச்சூடி "செத்தாலும் சேர்ந்தேதான் சாகணும் ஏற்கனவே ஆதவன் அண்ணாக்கு உன்னைய பேச சொல்லி அந்த அண்ணா வீட்ல பேசிட்டேன். அவங்களும் கூடிய சீக்கிரம் உன்னோட வீட்டுக்கு வந்து பேசுவாங்க ஆல்ரெடி உன்னோட வீட்டிலயும் பேசிவிட்டேன். அதனால எங்கேயும் நீ தப்பிப் போக முடியாது தப்பி போக விடமாட்டேன் அதாவது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது புரியுதா உன் அண்ணனுக்கு நீ எவ்வளவு வேணும்னாலும் சப்போர்ட் பண்ணு அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது.

உன்னுடைய பாசமலர் அமைதியா சம்மதிச்சா நானும் அமைதியா கல்யாணம் பண்ணிக்கிட்டு அமைதியா இருப்பேன். இல்லையா ஏதாவது அடாவடியாக பண்ணிதான் கல்யாணம் பண்ணுவேன். இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவுமே இல்லை" என்று கூறி அவளை பார்த்து தோளை குலுக்கிவிட்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து ஹாரன் அடித்தாள். அந்த சத்தத்தில் இவ்வளவு நேரம் தன் தோழி பேசியதை நினைத்து அதிர்ச்சியில் உறைந்து நின்று கொண்டு இருந்த பவானி சுயநினைவு அடைந்து வேகமாக ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாள்.

என்னதான் வீரமாக பேசி சென்றாலும் அவளுடைய கண்கள் கலங்கியதை பார்த்த சமர் மனதிற்கு ஏனோ அதை தாங்கிக்கொள்ள முடியாமல் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் இவர்கள் கிளம்பும் இடத்திற்கு வந்தான். தன் நண்பன் செல்வதன் காரணம் என்ன என்று ஓரளவுக்கு யூகித்த ஆதவனும் அவன் பின்னே சென்றான். தன் நண்பனும் தன் பின்னே வருவதை சமர் உணர்ந்து இருந்தாலும் தான் சொல்லாவிட்டாலும் தன்னைப் பற்றி அவன் முழுமையாக அறிந்து வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவன் அமைதியாக சென்றான்.

அங்கே வந்து பெண்கள் இருவருக்கும் பேசியதை கேட்டே ஆண்களுக்கு அதிர்ச்சி ஆச்சரியம் மகிழ்ச்சி ஒரு சேர வந்தது. ஆதவனுக்கு தன் நண்பன் வாழ்வு கண்டிப்பாக ஆதர்ஷினியால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி மகிழ்ச்சி வந்தது. அதேசமயம் தான் மட்டுமல்ல தன் தோழி மற்றும் சமரின் தோழனாகிய தானும் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய சொல்லி இரண்டு வீட்டிலும் பேசியது அவனுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக இருந்தது.

இது நாள் வரை ஆதர்ஷினி தன்னை அவன் உடன்பிறவா சகோதரனாக தான் பார்த்து இருக்கிறாள் என்பது ஆதவனுக்கு புரிந்தது. என்ன தான் சிறு வயது முதல் தான் வீட்டிற்கு வரும் போது அவளை பார்த்து பேசி இருந்தாலும் அவள் இப்படி ஒரு பாசம் வைத்து இருப்பாள் என்று ஆதவனுக்கு இப்போது தான் தெரிந்தது. அதை பார்த்து அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி மட்டும் ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.

அவனுடைய அதிர்ச்சிக்கு மூல காரணம் என்னவென்றால் தன்னுடைய வீட்டில் கூட இதுபற்றி இன்னும் தன்னிடம் வாயை திறக்கவில்லை என்ற அதிர்ச்சிதான் அதிகமாக இருந்தது. ஆனால் இதிலிருந்து ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டான் கண்டிப்பாக ஏதோ ஒரு திட்டத்தை அனைவரும் சேர்ந்து செய்கிறார்கள் அது என்ன என்பதை கண்டிப்பாக தனக்கும் தெரிய வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்டவன் அமைதி காத்து விட்டான்.

அதேசமயம் சமர் மனதில் தனக்காக யோசித்து தன் நண்பன் வாழ்வு பறிபோய்விடுமோ என்று பல நாள் ஒரு ஏக்கம் இருந்து இருக்கிறது அந்த ஏக்கத்தை முற்றிலுமாக தீர்த்துவைக்க ஆதர்ஷினி முடிவு எடுத்து விட்டாள் என்று நினைக்கும் போது ஆச்சரியம் மகிழ்ச்சி சேர்ந்தே வந்தது. ஆனால் என்ன ஆனாலும் தன்னை திருமணம் செய்யாமல் விடமாட்டேன் என்று அவள் உறுதியாக கூறியது அவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இருந்தாலும் தன்னை மீறி எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையில் அவள் எப்போதும் போல நார்மலாக இருக்கிறாள் என்று எண்ணி அமைதியாக தன்னுடைய வேலைகளை பார்த்து சென்று விட்டான்.

தன் நண்பன் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளை பார்த்த ஆதவன் அவன் என்ன யோசித்து இருப்பான் என்பதை உணர்ந்து கொண்டவன் சிரித்துக்கொண்டே அவன் பின்னால் சென்றான்.

ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்களும் சரி வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆண்களும் சரி ஆதர்ஷினி சமரை எப்படி விரும்ப ஆரம்பித்தாள் அவளுக்கு எதனால் அவனை பிடித்து என்ற விஷயத்தை யோசிக்க ஆரம்பித்தனர்.

அது என்ன என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 

Krithika ravi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
88
20
18
chennai
சூப்பர் எபி... இன்னும் சில ஜென்மங்கள் ஜாதகம் ஜோசியம்னு சொல்லிடு இப்படி தான் பண்ணிட்டு இருக்காங்க. அங்க அந்த வீட்டுல இருந்து கஷ்டபடாம சமர் தனியா வந்ததுல தப்பே இல்லை... ஆத்திச்சூடி செம தான் ஹாஹா
 
  • Love
Reactions: Aashmi S

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
சூப்பர் எபி... இன்னும் சில ஜென்மங்கள் ஜாதகம் ஜோசியம்னு சொல்லிடு இப்படி தான் பண்ணிட்டு இருக்காங்க. அங்க அந்த வீட்டுல இருந்து கஷ்டபடாம சமர் தனியா வந்ததுல தப்பே இல்லை... ஆத்திச்சூடி செம தான் ஹாஹா
Thanks a lot akka 🥰🥰🥰
 
  • Love
Reactions: Krithika ravi