• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

யார் அவனோ?

Jul 31, 2021
71
54
18
Thanjavur
நின்னை நின் பெயரை
அறியா பேதை தான் இவள்!
நின் முகம் கண்டதில்லை!
நின் குரல் கேட்டதில்லை!
நின் முகவரியும் அறிந்ததில்லை!
ஆனாலும் மனதின் ஓரத்தில் ஓர் உணர்வு!
பல யுகங்களாய் நாம் ஒன்றாய்
ஒருவருக்குள் ஒருவர் வாழ்ந்ததைப் போல்..
நின்னை நினைக்காத நாட்களென்று
எதுவும் கடந்ததில்லை!
நின் நிழலினை தாங்கிடும்
நாட்களென்றும் எதுவும் வந்ததில்லை..
ஆனாலும் மனதின் ஓரத்தில் ஓர் உணர்வு!
என்றேனும் ஓர் நாள் இவை அனைத்தும்
நிஜமென ஆகும்.. அன்று என்முன்
நின் அழகிய வதனம் இருக்குமென்று.
~பாலா​