• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 7

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 7

"டேய் அது தான் ரெஜினா! சுரேஷ் மூர்த்தி சார் பொண்ணு" ராம் காரில் இருந்தே கை காட்ட, அந்த பெண்ணை இருவர் காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

"எங்க டா கூட்டிட்டு போறானுங்க?" கௌதம்.

"ம்ம் வா பாக்கலாம்" என்று அந்த காரை தொடர்ந்து சென்றனர் இருவரும்.

"வாட் இஸ் திஸ் நிவி? இன்னைக்கு க்ளையன்ட் வருவாங்கன்னு உனக்கு தெரியாது?" வருண் கத்தி கொண்டிருக்க, ராம் பற்றிய யோசனையில் நிவி வேலையில் செய்த தவறினால் நடந்ததை கூறி திட்டிக் கொண்டிருந்தான் வருண்.

"ஏண்டி அவன் மரியாதை இல்லாம உன்னை காறி துப்பாத குறையா பேசுறான். நீ என்ன மெய்மறந்து கேட்டுட்டு இருக்க?" வாசு நிவி காதில் சொல்ல,

"அவன் பேசுறது என் காதுல விழவே இல்ல டி. ராம்கிட்ட என்ன சொல்லனு யோசிச்சிட்டு இருக்கேன்" என்றாள்.

வாசு "சிங்கத்து குகைக்குள்ள மாட்டிகிட்டு ரொமான்ஸ் மூடுல இருக்காத டி. அந்த கௌதம் சொன்னத கேட்டதுல இருந்து என் கை இன்னும் ஷிவரிங்ல தான் இருக்கு"

"வாயை மூடு டி. இவன்லாம் ஒரு ஆள்னு சிங்கம் புலினு பில்டப் வேற. வேணா நாய் கழுதைனு சொல்லு"

"அடியே நீ ரொமான்ஸ் மூடுல இருக்கன்னு சொன்னேன். அதுக்கு பதில் சொல்லாம அவனை திட்டிட்டு இருக்க? அப்ப நிஜமா ரொமான்ஸ் தானா?"

வருண் "ஷட்அப்! நான் இங்க பேசிட்டு இருக்கேன். நீங்க என்ன அங்கே தனியா டிஸ்கஸன்?"

"சார் ஒருநாள் டைம் வேணும் நாளைக்கு முடிச்சுடுறேன்" நிவி அசால்ட்டாய் சொல்லி வெளியே செல்ல, வாசுவும் அவன் கோபமுகத்தை பார்த்துவிட்டு வெளியே சென்றாள்.

"ஷிட்! இவ என்ன இவ இஷ்டத்துக்கு ஆடுறா? நம்ம வழிக்கும் கொண்டு வர முடியல, அட்ட மாதிரி அந்த வாசு வேற ஒட்டிட்டு இருக்கா. வேலையும் உருப்படி கிடையாது. ச்சை" என புலம்பிய வருண் போனை கையில் எடுத்தான்.

"அவளை அங்கே விட்டுட்டு நீங்க கிளம்பிடுங்க. நான் இன்னும் அரை மணி நேரத்துல அங்க வந்துடுவேன்" வருண் கட்டளையிட, அந்த பக்கமும் கேட்டுக் கொண்டனர்.

"டேய் என்னடா இவ்வளவு பெரிய பங்களா? யாரோடது டா? இங்க அந்த பொண்ணை வச்சா நாம எப்படி அந்த பொண்ணுகிட்ட பேசுறது?" தெளிவாக யோசிக்கும் கௌதம் குழம்பி போய் இருக்க, பல நாட்களாக இதை கவனித்து கொண்டிருக்கும் ராம் ஒரு முடிவுடன் நிமிர்ந்தான்.

"இது வருணோடது தான். கெஸ்ட் ஹவுஸ். டெய்லி இப்படி தான் கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டு வர்ரானுங்க"

"என்ன டா சொல்ற? எனக்கு தலை சுத்துது" கௌதம் சொல்ல,

"வருண் இன்னும் நிறைய இல்லீகள் பிசினஸ் பன்றான் டா. அவன் பண்ற எல்லா தப்பும் இந்த வீட்டுக்குள்ள தான். அது வெளில தெரியாம இருக்க தான் இந்த ஏற்பாடு எல்லாம். இவ்வளவு ரிஸ்க் இருக்குறது தெரியாம அந்த ஆபிஸ்ல உட்காந்துகிட்டு இருக்கா உன் அருமை தங்கை" நக்கலுடன் ராம் சொல்ல,

"அடப்பாவி இவ்வளவு பெரிய கிரிமினல புடிக்க அவ ஸ்டெப் எடுத்து வச்சதே பெருசு. உனக்கு நக்கலா இருக்கா?" என ராம் தலையில் தட்டினான் கௌதம்.

"டேய்! டேய்! விடுடா. ஹேய் அங்கே பாரு, அங்க பாரு கார் வருது" என ராம் சொல்ல, அந்த பங்களாவில் இருந்து வெளிவரும் காரை இருவரும் கூர்ந்து பார்த்தனர்.

கௌதம் "கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டு வருவாங்கனு சொன்ன? கார்ல யாரும் இல்லையே டா"

"அப்படினா வருண் இன்னும் வர்ல. நமக்கு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு. உள்ள போயி ஒரு காட்டு காட்டணும்னு அர்த்தம்"

"அய்யயோ ஃபைட்டா? ஆளை விடு" என கௌதம் ஓட பார்க்க, சுவர் பக்கம் இழுத்துச் சென்றாம் ராம்.

"உன்னை மாதிரி பிரண்ட், அவளை மாதிரி ஒரு சிஸ்டர் நல்லா இருக்கு டா என் பொழப்பு" கௌதம் பேச்சினை கண்டுகொள்ளாமல் அந்த சுவற்றில் ஒரே தாவாக தாவிய ராம், கௌதமை அழைப்பதாக சொல்லி அங்கேயே நிற்க வைத்தான்.

"நிவி கௌதம் மெசேஜ் பண்ணியிருக்கான். இங்க பாரு இந்த லொகேஷன் வர சொல்லியிருகான். வருண் வேற இப்ப தான் கிளம்பி போனான். இப்ப எப்படி பெர்மிஸ்ஸன் கேட்குறது?" வாசு கேட்க,

"என்னடி சும்மா அவனுக்கு பயந்துட்டு இருக்க? வா போலாம். எனக்கு கௌதம் அண்ணா மேல நம்பிக்கை இருக்கு. இந்த ஆபரேஷன் சீக்கிரமே முடிஞ்சிடும்" என சொல்லிய நிவி வாசுவுடன் கௌதம் கூறிய இடத்திற்கு விரைந்தாள்.

"சகுந்தலா வா வா எப்படி இருக்க? நந்து குட்டி எப்படி இருக்க டா? இன்னும் சின்ன புள்ளயாவே என் கண்ணுக்கு தெரியுறா. உனக்கு கல்யாணமா? ரொம்ப சந்தோசம் கண்ணு" செல்லம்மா பேசிக்கொண்டே இருக்க, நந்தினி சிரித்துவாறு நின்றாள்.

"இல்ல செல்லம்மா! வீட்டுக்கு போய் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் வரோம் சாவி கொடு" என கேட்க, சாவியை தேடும்போது தான் தெரிந்தது சக்தி சாவியை வீட்டில் வைக்கவில்லை என.

"நேத்து வீடு சுத்தம் பண்ண எடுத்துட்டு போனான். இரு போன் பண்றேன். உள்ள வந்து உட்காருங்க" என சொல்ல, சகுந்தலா நந்தினி இருவரும் சக்தி வீட்டில் அமர்ந்தனர்.

"சக்தி இப்ப வர்றதா சொல்லிட்டான். தோட்டத்துல தான் நிக்குறான்" என சொல்லி பொதுவாக பேசிக் கொண்டிருக்க, ஹாலில் ஒரு ஓரத்தில் இருந்த டேபிள் மேல் கிடந்த புத்தகங்களை கையில் எடுத்துப் பார்த்தாள் நந்தினி.

எல்லாம் நாவல் புத்தகங்கள். "நீங்க புத்தகம் எல்லாம் படிப்பிங்களா அத்தை" நந்தினி கேட்க,

"எனக்கு என்ன கண்ணு தெரியும். இந்த சக்தி பயதான் இதை வாங்கி போட்ருக்கான். எப்பாவது நேரம் கிடைச்சா இதுல தான் நேரத்தை போக்குவான்" என செல்லம்மா சொல்ல, சக்தி வந்து சேர்ந்தான்.

யாரை பார்க்க வேண்டாம் என காலையிலே எழுந்து போனானோ அவளை பார்க்கவே வர வைத்துவிட்டது இந்த விதி.

நந்தினி கையில் புத்தகத்துடன் நிற்க, "வாங்க அத்தை எப்படி இருக்கீங்க? ஏதோ ஞாபகத்துல சாவிய கொண்டு போய்ட்டேன்" என்றவன், நந்தினியை பார்ப்பதை தவிர்த்தான். அதை செல்லம்மாவும் உணர்ந்து தான் இருந்தார்.

கோவில் திருவிழாவிற்கு நந்தினி வரும் போதெல்லாம் இது போல சில எழுத்தாளர் புத்தகங்களுடன் தான் வருவாள். அந்த ஞாபகத்தில் டவுனிற்கு செல்லும் போதெல்லாம் சக்தி சில குறிப்பிட்ட எழுத்தாளர் புத்தகங்களை வாங்கி வந்து நேரம் கிடைக்கும் போது படிக்கவும் செய்வான். எழுதும் அளவுக்கு அவன் படிக்கவில்லை என்றாலும் வாசிக்க தெரிந்ததே வரமாக தெரிந்தது அப்போது அவனுக்கு.

"வாங்க அத்தை நானே கொண்டு போய் விடுறேன்" சக்தி.

"இல்லப்பா பக்கம் தான.. நாங்க போய்க்கிறோம்" சகுந்தலா.

"ஹ்ம்ம் சரிங்க அத்தை" அதற்கு மேல் எதுவும் பேசாமல் தன் அறைக்கு செல்ல, அவள் அந்த புத்தகங்களை புரட்டுவது அவன் அறையில் இருந்து பார்க்க தெரிந்தது.

ஒருதலை காதலில் இவ்வளவு வலி இருக்க வேண்டாம் என நினைப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?

செல்லம்மாவிடம் சொல்லிக்கொண்டு சகுந்தலா நந்தினியுடன் கிளம்ப, சக்தி அறையில் முடங்கி கொண்டது என்னவோ போல ஆனது செல்லம்மாவிற்கு.

கோவிலுக்கு செல்லும்போதும் கண்டிப்பாக வர வேண்டும் என சகுந்தலா சக்தியிடம் சொல்லிவிட வேறு வழியின்றி சக்தியும் கோவிலுக்கு சென்றான்.

கோவிலில் பொங்கல் வைத்து சகுந்தலா சாமி கும்பிட என காலையில் சென்றவர்கள் கிட்டத்தட்ட மாலை வர அங்கு தான் இருந்தனர்.

பார்க்கக் கூடாது என அவன் எண்ணியிருக்க கடவுள் பார்க்க வைத்தான். நினைக்கக் கூடாது என அவன் எண்ணி இருக்க அவன் மனமும் கடவுளை போல கேட்கவில்லை. அவள் திருமணத்திற்கு முன் கண்களின் மூலம் இதயத்தில் பூட்டி வைத்தான் இந்த அழகிய நாளை.

நந்தினி இது எதையுமே அறியாது சாதாரணமாகவே செல்லம்மாவிடம் அன்பாக பழக அவருக்கும் வருத்தம்தான்.

ராம் தனது மொபைலில் இருந்து கௌதமை அழைத்தான். "டேய் சீக்கிரம் வாடா! பதறுது! எவ்வளவு நேரம் இங்கேயே நிக்குறது?" கௌதம் பதட்டத்தில் பேச,

ராம் "டேய்! அந்த பொண்ணுக்கு மயக்க மருந்தோ போதை மருந்தோ கொடுத்திருக்காங்க போலடா. அது மயக்கத்துல இருக்கு. இப்ப என்னடா பண்றது?"

கௌதம் "அடச்சீ! இந்த கருமம் வேறயா? சரி தூக்கிட்டாவது வந்து தொலைடா. அந்த சனியன் பிடிச்ச வருண் வந்துட போறான். வேற வழி இல்ல, நான் கார் எடுத்துட்டு கேட் கிட்ட நிக்கிறேன். அந்த பொண்ண பத்திரமா கூட்டிட்டு வர வேண்டியது உன்னோட பொறுப்பு" என்றவன் அங்கிருந்த வாட்ச்மேனை மயக்கமடைய செய்து கேட்டின் அருகே காரை நிறுத்தினான்.

அப்போது ராம் அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு ஓடி வர, "அடப்பாவி என்னடா உப்பு மூட்டை மாதிரி தூக்கிட்டு வர்ற? உள்ள ஆளுங்க யாருமே இல்லையா? ஆக்சிலேட்டரை முறுக்கிக்கொண்டு கௌதம் கேட்க,

"முதல்ல வண்டியை எடுத்து தொலைடா" என்று திட்டினான் ராம்.

வண்டி சிறிது தூரம் சென்று இருக்க ராம் பேச ஆரம்பித்தான். "அதான் சொன்னேனே டா! இந்த கெஸ்ட் ஹவுஸ் அவனோட பர்சனல் யூஸ்க்காக மட்டுமே வச்சிருக்கான். அதனால உள்ள ஆளுங்க யாருமே இல்ல. நான் வாட்ச்மேனுக்கு தான் பயந்தேன் அதையுமே நீ சரி கட்டிட்ட. அப்புறம் உள்ள வச்சு போலீஸுக்கு ஃபோன் பண்ணிட்டேன்"

"என்னடா சொல்ற? போலீஸ்க்கு ஏன் போன் பண்ணின?" கௌதம் மீண்டும் பதற,

"உள்ள நிறைய ஒரு பொடி மாதிரி பாக்கெட் கிடந்தது. ஐ திங்க் அது போதை மருந்து மாதிரி சம்திங் ஏதோ ஒன்னு தான். ஆனா ஈஸியா வருண் அதில் இருந்து வெளில வந்துடுவான். சில டாக்யூமன்ட்ஸ் கிடைச்சது அது எல்லாமே இல்லிகள் ப்ராப்பர்ட்டீஸ். உன் தங்கை நிவிக்கு இது போதுமானு கேளு" என மூச்சு வாங்க பேசிய ராம், ரெஜினாவைப் பார்த்தான். அவள் மயக்கத்தில் இருந்தாள்.

"இந்தப் பொண்ணு வேற மயக்கத்திலிருந்து எழுந்து என்ன ஆர்ப்பாட்டம் பண்ண போகுதோ" என ராம் சொல்ல கௌதம் பீதியுடன் ரெஜினாவை திரும்பிப் பார்த்தான்.

"ஆனா உன் ஆளுக்கு எல்லாம் இருக்குற தைரியத்துக்கு அவள நம்பி நீ எங்க வேணா போலாம் டா. பச்ச மண்ணு இந்த கௌதமை என்ன பண்ண வச்சுட்டா அந்த நிவி" என கௌதமும் புலம்ப கார் நேரே அவர்கள் சந்திக்கும் ரெஸ்டாரென்ட் சென்றது.

தொடரும்..
 
  • Like
Reactions: Lakshmi murugan