என் துணைக்கு நீதான் 💞
அத்தியாயம் -1
சூரியனின் பொற்கரங்கள் பூமியை தொடும் முன்பே எழுந்து, அந்த கதிரவனின் தரிசனத்திற்காக கையில் தேநீர் குவளையுடன் அந்த அடுக்கு மாடியின் மூன்றாம் தளத்தின் பால்கனியில் நின்று மிடறு மிடறாக தேநீரை சுவைத்துக் கொண்டு இருந்தாள் அற்புதா.
இந்த நேரம் அவளுக்கே அவளுக்கானது...