அத்தியாயம்…2
இரயில்வே ஸ்டேஷனின் கும்பலில் தன் தாயைக் கண்டு வேகமாக அவர்களிடம் சென்றவனின் கண்கள் பனித்தது.
தந்தையை இழந்தபிறகு தோட்டத்திலும் காட்டிலும் வேலை செய்து வயதுக்கு மீறிய முதுமையும் தன் மகனைக் கண்டதும் அன்பாக ஆசையாகவும் பாசத்தோடு விழிகளால் வருடிய உள்ளடங்கிய கண்களில் கொட்டிக் கிடக்கும் பாசத்தைக் கண்டவனுக்கு மனம் வலித்தது. இந்த வயதிலும் தாயை தன்னுடன் வைத்துத் தாங்க முடியாமல் போன தன் இயலாமையை மறைத்தவன் தாயின் அருகில் வெளியேறிய வண்ணத்தில் சுரிதார் அணிந்திருந்த வைசாலியைக் கண்டும் மனம் உருகினான்.
சிறு பூவாய் தன் கரங்களில் “உன் தங்கச்சிடா” எனத் தூக்கிக் கொடுத்த தன் அப்பாவைப் பார்த்தபடி நடுங்கும் சிறு கரங்களால் வாங்கியவனோ அப்பூவை தன் கரங்களுக்குள் பாதுகாப்பாக வைத்துக் கொண்டவன் அதன்பின் குழந்தையாக இருக்கும்போது பசிக்கு அழத் தொடங்கும் போதே கவனித்து அழாமல் பார்த்துப் பார்த்துச் செய்தவன் தான் பாரிவேந்தன்.
ஆனால் இன்றைய சூழ்நிலை தாய்யும் தங்கையையும் கிராமம்த்தில் விட்டுட்டு தன் மனைவிக்காக இங்கே வந்தவன் அடிக்கடி ஊருக்குப் போக முடியவதில்லை. முகிழினி பிறந்தபிறகு போகச் சிரமம் ஏற்பட அதற்காகத் தனமும் வைசாலியும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரண்டு நாட்கள் தங்கி விட்டுச் செல்வது வாடிக்கையானது.
இனறும் அது மாதிரி வந்தவர்களை அழைக்க வந்தவன் “கண்ணு” தன்னை அழைக்கும் தாய்யின் காப்பு காய்த்த கரங்களைப் பற்றியவனின் கரங்களோ லேசாக நடுங்கியது.
இவரின் உழைப்பிலும் இப்போது மனைவியின் உழைப்பிலும் வாழும் ஒட்டண்ணியாகத் தன்னை மனதிற்கு நினைத்தவனுக்கு அவமானமும் அசிங்கமாகத் தோன்றும் உணர்வுகளை அடக்க முடியாமல் அடக்கியவனின் விழிகள் சிவந்தது பாரிவேந்தனுக்கு.
அதைப் பார்த்தபடி தாயின் அருகில் நின்றிருந்த வைசாலிக்கு தன் அண்ணனின் ஆழ் மன வலியை உணர்ந்தவளோ அதை வெளிக்காட்டாமல் “அண்ணே அம்மாவைப் பார்த்ததும் என்னை மறந்துட்டே… உனக்குக் கொஞ்சம் கூட என் மேலே பாசமே இல்லை… உனக்காக ஒருத்தி ஊரிலிருந்து பார்க்க வந்திருக்காளே…
“ எங்க அண்ணன் … எங்க அண்ணன் … அன்பா அள்ளித் தெளிகிறதில் மனனன்… தங்க பாசத்தில் அவனை அடிச்சுக்க ஊருல யாருமில்லை எங்க அண்ணண்!!!.. இந்த அன்பு மொத்தமும் இந்தத் தங்ககுச்சிக்குத் தான்” எனச் சில வரிகளைச் சேர்த்து சிறுகுரலில் பாடியபடி அவனின் கரத்தைப் பிடித்தவளின் குறும்புதனத்தைக் கண்டு சிரித்தவன் “வாலு” எனத் தோளோடு இழுத்து அணைத்தவன் “எப்படிமா இருக்கீங்க” எனக் கரகரத்த குரலில் கேட்டவனை வாஞ்சையாகக் கன்னத்தை வருடிய தனலட்சுமி ‘’நல்லா இருக்கேன் கண்ணு … பேத்தி நல்லா இருக்காளா!! என்றவர், ஏன் உன் பொண்டாட்டி இங்கே வரல கண்ணு?”…எனச் சிறு அதட்டலுடன் கேட்டவரை “வேலைம்மா அவளுக்குச்” சிறு சிரிப்புடன் சொல்லியவனோ
“வாங்க போகலாம்” எனச் சொல்லி அம்மாவின் கைகளிலும் வைசாலி கைகளிலும் இருந்தப் பைகளை எடுத்தவன் வைசாலியை ஒருபுறமும் தாயை ஒருபுறமாக நடுவில் வந்தவனின் கைகளைப் பிடித்தபடி வளவளத்துக் கொண்டிருந்தவளின் பேச்சை ரசித்து ‘குட்டி வாலு’ என நினைத்தவனோ முகிழினிக்கும் வைசாலிக்கும் எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை அவனுக்கு.
தங்கையும் மகளாகத் தெரிய மூன்று மாதக் கதையை ஒப்பித்தபடி வந்தவளிடம் உம் கொட்டியபடி வந்தவன் கொண்டு வந்த சாமான்களை வண்டியில் ஏற்றியவன் அம்மாவைப் பின்னால் அமர வைத்துவிட்டு நான் தான் முன்னால் குதித்த தங்கையை முன்னால் அமர வைத்தவன் “காபி குடிக்கீறிங்களாமா”… எனக் கேட்டான் தனலட்சுமிடம்.
“ஆமா கண்ணு குடிக்கணும்… ஆனால்…” என இழுத்தவர் “போன தடவை வந்தபோது அங்கே ஒரு கடையில் வாங்கித் தந்தீயே அங்கே வரத் தரீயா” எனக் கேட்டவரைப் பார்த்தவனோ ஒன்றும் பேசாமல் தலையசைவன் மனம் சுருக்கென்றது.
வைசாலியோ “அங்கே எனக்கு முட்டை பப்ஸ் வாங்கித் தரணும் அண்ணே” என ஆர்டர் போட்டவளை “சரிடா குட்டி” எனச் சொல்லி வாகனத்தைக் கூட்ட நெரிசலில் மெதுவாகச் செலுத்தினான் பாரிவேந்தன்.
“அண்ண போன தடவை நீ வந்தபோது நம்ம வீட்டில் இருந்த நாய் குட்டி நாலு குட்டி போட்டு இருக்கு…. எதிர்த்த வீட்டிலிருந்த அலமேலு அக்கா வாங்கிய சேலையைக் கட்டி தன்னிடம் பகுமானம் காட்டியது…. பக்கத்து வீட்டு வாண்டுகளோடு தோட்டத்தில் மாங்காய் பறித்து மிளகாய் பொடி வைத்துச் சாப்பிட்டது…. தோட்டகாரனிடம் மாட்டிக் கொண்டது …. கிணற்றில் படி இறங்காமல் மேலே இருந்து குதித்து அங்கே தண்ணீரில் தத்தளித்த குட்டி கிளியைக் காப்பாற்றி சிறு கூண்டு செய்து அதில் வைத்து வளர்ப்பது வரை வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வந்தவளை அதட்டினார் தனலட்சுமி… “சோற்று பானையை உருட்டுகிற சுண்டெலி மாதிரி இத்துண்டு இருந்துகிட்டு ஊர்கதை நூற்றுக் கிழவி மாதிரி வாய் ஓயாமல் பேசிகிட்டு வரே… அவன் வண்டி ஓட்டனுமா வேண்டாமா” …தொன தொன பேசும் வைசாலியை அதட்டிய தனலட்சுமியை “விடும்மா என்கிட்ட தானே பேசறா” எனச் சொல்லியும் “இவளுக்கு இப்படியே செல்லம் கொடு கண்ணு… அதனாலே என் பேச்சை மதிக்கிறதே இல்லை உன்னோட தீக்குச்சி” என மகளை வைதவரைக் கண்டு குறும்பாய் கண்சிமிட்டிய தங்கச்சியின் செய்கையும் கண்டு வாய் விட்டுச் சிரித்தான் பாரிவேந்தன்.
அம்மாவுக்குக் காப்பியும் தங்கை கேட்ட பப்ஸ் வாங்கியவனிடம் தனலட்சுமி “கண்ணு குந்தவைக்கும் பாப்பாவுக்கும் பிடிச்சத எதாவது வாங்கு கண்ணு … நா காசு தரேன்” சொல்லியதைக் கேட்டவனுக்கு சுரீர் என்றது மனதிற்குள்…
சட்டென்று மாறும் வானிலையாக முகம மாறியவனைக் கண்டு பதறிய வைசாலி அம்மாவின் கரத்தை அழுத்தி அண்ணாவை ஜாடையில் காமித்தவளோ “அதெல்லாம் அண்ணா வாங்கிருச்சு மா… நீயும் ஊரிலிருந்து மகனுக்கு மருமகளுக்குப் பேத்திக்கு ஊரே விலை பேசி வாங்கிர மாதிரி அத்தனை வாங்கின சந்தையிலே… அதெல்லாம் வைத்து இங்கே எதுவும் கடை வைக்கப் போறீயா… எல்லாம் அவங்களுக்குத் தானே” எனச் சொல்லியவளோ “நீ வா அண்ணே இந்த அம்மா எப்பவும் ஊருக்குக் கிளம்பறேனா போதும் … தோட்டத்திலே சந்தையிலே இருக்கிற எல்லாத்தையும் வாங்கி முட்டை கட்டிரும்… இந்தத் தடவை அதுக்கு லக்கேஜ் சார்ஜ் போட்டுனா பார்த்துக்கோ” என அந்நேரத்தில் அண்ணனின் முகச் சுருக்கத்தைச் சரியாக்கியவளோ பாரிவேந்தனுக்குத் தெரியாமல் தாயை முறைத்தாள் வைசாலி.
மகள் முறைத்தும் வாயை மூடியவர் “ஆமாடா கண்ணு உனக்கு முறுக்கு! குந்தவைக்கு எள்ளுருண்டை செய்தேன்! பாப்பா சாப்பிட கடலை மிட்டாய் செய்து எடுத்து வந்ததை மறந்து போய்யிட்டேன் கண்ணு!” எனச் சமாளித்தவரைக் கண்டு மனம் மருகினாலும் எங்கே தன் மகன் வேலை இல்லாமல் மருமக சம்பாரிப்பதில் இருப்பதால் தங்கள் செலவுக்கும் அவளிடம் கையேந்தனுமா என எண்ணி வெம்பியது தனலட்சுமிக்கு.
தங்கைப் பேச்சிற்கு சிரித்தவனோ “என் அம்மா அன்பிற்கு சார்ஜ் பண்ண யாராலும் முடியாது வாலு’’ என்றவன் ‘’அம்மா அவளுக்குப் பாப்பாவுக்கு உங்களுக்கும் வைசாலிக்கும் என்ன வாங்கனுமோ முதலே வாங்கிட்டு தான் வந்தேன்… எதுவும் மனசைப் போட்டுக் குழப்பிக்காமல் வாங்க போகலாம்’’.... என்றவன் ‘’ஏய் வாலு இப்ப முகி உன்னை மாதிரி வாய் ஓயாமல் பேசறா தெரியுமா… உன்னை வைத்தே சமாளிக்க முடியல… இப்ப உன்னை மாதிரியே இன்னொன்று வளருது’’ எனச் சொல்லியவனிடம் முகம் சுளித்தவளோ ‘’என் மருமக என்னை மாதிரி… இல்லனா உன் அம்மாவை வைத்துக் காலம் தள்ள முடியுமா’’ எனத் தாயை கலாய்த்தவளை முறைக்க முயன்ற தனலட்சுமியும் சிரிக்க அங்கே காரில் மூவரின் பாசத்தின் பேரூற்றாகச் சிரிப்பொலி நிறைத்தது.
தாங்கள் தங்கிருக்கும் வீட்டிற்கு தாயையும் தங்கையும் அழைத்து வந்தவன் பக்கத்து வீட்டிலிருக்கும் அலமும்மா ‘’வாங்க தனம் எப்படி இருக்கீங்க?’’ என முகிழினியை வெளியே வேடிக்கை பார்க்க அழைத்து வந்திருந்தவர் கேட்க
‘’நல்ல இருக்கேன் அலமு… என் பேத்தி உன்னை ரொம்ப தொல்லை படுத்துறாளா … வாடி என் சிட்டு’’ எனப் பேசியபடி பேத்தியைக் கையில் வாங்கியவரோ கன்னத்தில் முத்தமிட அதுவோ ‘’நோ… நோ… அப்பி… அப்பி’’… எனத் தந்தையிடம் தாவ முயற்சிக்க வைசாலியோ ‘’ஏய் அம்மு’’ எனத் தூக்க ‘’அய் ஐத்த ஐத்த’’ எனக் குதித்தபடி அவளிடம் சென்றது குழந்தை.
குழந்தையைத் தூக்கியவளோ ‘’அத்த அத்த சொல்லு’’ எனச் சொல்லிக் கொஞ்சியவள் அண்ணன் வீட்டின் கதவைத் திறந்ததும் உள்ளே செல்ல அவனோ ‘’வாங்கம்மா’’ என்றவன் அலமுவிடம் ‘’முகி பாப்பா தொந்தரவு பண்ணலயே மா'’ எனக் கேட்க … அவரோ ‘’ம்க்கூம் உன் பொண்ணு எங்கே தொந்தரவு பண்ணறா… என்னைக் கட்டிய மனுசனை அதட்டி வைக்க வந்த மகராசி அவ’’ எனச் செல்லமாகச் சொல்ல அப்போது தான் வெளியே வந்த அலமுவின் கணவனோ அவரை முறைக்க அக்காட்சியை கண்டும் காணாமல் சிரித்தபடி உள்ளே போனான் பாரிவேந்தன்.
வீட்டின் சுத்தமும் அது அது அந்தந்த இடத்தில் அழகாக அடக்கி வைத்திருப்பதை ஓரக்கண்ணில் கவனித்தாலும் தனலட்சுமி தான் கொண்டு வந்த தேங்காய், மற்றும் நாட்டுக் காய்களை எடுத்துச் சாப்பாட்டு மேசையில் எடுத்து வைக்க முகிழினிக்கு சாப்பிட பருப்பும் நெய்யும் கலந்த சாதத்தை பிசைந்தவன் குழந்தையிடம் வரக் குழந்தையோ வைசாலியின் பேச்சில் லயித்து இருந்தது.
இருவரையும் கவனித்து அவர்களின் அருகே அமர்நதவனைக் கண்ட தனலட்சுமிக்கு மகனைக் கண்டு வருத்தமே அதிகம்.
எத்தனை இடிப்பட்டாலும் சுருக்கென்றும் வார்த்தைகள் சுட்டாலும் அதைப் பற்றிக் கவலையின்றி மனைவி குழந்தையெனத் தன் கூட்டை அழகாக்கிக் கொண்டவனைக் கண்டவருக்கு மிகுந்த மனவலி.
மகன் மருமக சம்பாரிப்பதில் வீட்டு வேலை செய்து குழந்தையைப் பராமரிப்பு வரை அவனே கவனிப்பதைக் கண்டு மிகப் பெரிய வருத்தம் தான். ஆனால் அதை எத்தனை முறை சொன்னாலும் முகம் மாறாமல் கேட்டுக் கொள்கிறவன் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாலும் மனைவியைத் தன் தாயிடம் விட்டுக் கொடுக்காமல் இருப்பவனைக் கண்டு பெருமூச்சே வந்தது தனலட்சுமிக்கு.
குழந்தைக்கு வைசாலி விளையாட்டுக் காட்ட பாரியோ உணவை ஊட்டிவிட அவ்விடமே கலகலப்பின் இருப்பிடமாக மாறியது.
‘’அம்மா நீங்கச் சாப்பிடுங்க’’... எனச் சத்தமாகச் சொன்னவனிடம் ‘’இல்லடா கண்ணு! நீயும் வாச்சேர்ந்து சாப்பிடலாம்” எனத் தனம் சொல்ல “ம்ம்” சொன்னவன் முகிழினிக்கு உணவை ஊட்டியவன் “வைசாலி போய் ரெப்பிரஸ் ஆகி வா… சாப்பிடலாம்” என்றவனிடம் தலையாட்டித் தாங்கள் வந்தால் தங்கும் அறைக்குச் சென்றவளைக் கவனித்தவன் மகளின் விழிகள் உறக்கத்திற்கு சொருகுவதைக் கவனித்து அவளுக்கு வாய் துடைத்துத் தங்களுடைய படுக்கையில் படுக்க வைத்து ஏசியை மிதமாக வைத்து லேசாகக் கதவைச் சாத்தி வந்தவனை எதிர்க் கொண்ட தனத்தின் கேள்விக் கணைகளுக்குப் பதிலிளத்தவனோ தாயுடனும் தங்கையுடனும் சேர்ந்து அமர்ந்து உண்டவன் அதன்பின் அப்பாத்திரங்களை எடுத்துக் கழுவ போட்டுவிட்டு தான் வாங்கி வந்த பொருட்கள், அம்மா கொண்டு வந்தப் பொருட்களை அது அது இடத்தில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவனை வார்த்தையால் சாடினார் தனலட்சுமி.
வைசாலியோ குழந்தை இருந்த இடத்திற்கு சாப்பிட்டதும் சென்றுவிட மகன் செய்கிற வேலையைப் பார்த்தபடியே பாத்திரங்களைக் கழுவியவரை ‘’வேண்டாம் மாப்போய் ரெஸ்ட் எடுங்க… நான் பார்த்துக்கிறேன்’’ எனச் சொல்லிய பாரிவேந்தனை முறைத்த தனலட்சுமியோ ‘’ஏன்டா ஆம்பிளை பாத்திரம் கழுவ விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறது உன் பொண்டாட்டியா… நான் உன் அம்மாடா… உங்க அப்பாரு இருந்த வரை சமையல் கட்டுப்பக்கமே எட்டிப் பார்த்தில்லே. அவர் இருக்குமிடத்திற்கு நான் தான் கையில் கொண்டு போய்த் தருவேன். இங்கே எல்லாம் தலைகீழ்” எனப் புலம்பியபடி பாத்திரங்களைக் கழுவியவரை எதுவும் பதில் சொல்லாமல் மிஷினில் போட்ட உலர்ந்த ஆடைகளை எடுத்துக் காய போட்டான் பாரிவேந்தன்.
அதைப் பார்த்து மேலும் கோபம் வந்தாலும் இதை வரும்போது எல்லாம் பார்க்கும் காட்சி தான் என்றாலும் மனம் வலித்தது தனலட்சுமிக்கு.
மனைவிக்கு ஊழியம் பார்க்கும் தன் மகனின் செயலில் வெகுண்டாலும் அதை அவனிடம் காமிக்க வழி இல்லாமல் மௌனமாகத் தன் வேலையை முடித்தவரோ மூன்று பேரும் அமரும் இருக்கையில் போய்ச் சாய்ந்து அமர்ந்தவரை நெருங்கிய பாரிவேந்தனோ அவரின் மடி சாய மகனின் தலையைக் கோதியதில் இதமே அதிகாக இருந்தது.
என்னதான் மகன் வேலைக்குப் போகாமல் வீட்டு வேலை குழந்தையைக் கவனிப்பது என இருப்பது பெரும் வருத்தம் உண்டானாலும் குழந்தையால மடி சாய்ந்த மகனிடம் மெதுவான குரலில் உரையாடியவரின் பேச்சைக் கேட்டவனின் மனம் அமைதியானது. அப்படியே தன்னை மறந்து உறங்கியவனைக் கண்டவரின் விழிகளில் உவர்ப்பு நீரின் படலம் தேங்கி நிற்க அதை வெளியேற விடாமல் உள்ளிழுத்த தனலட்சுமி தன் மகனின் தலைக் கோதலை விடாமல் செய்தபடி இருக்
கையிலே தானும் சாய்ந்து அமர்ந்தார் தனலட்சுமி.
தொடரும்..
கதையை படிப்பவர்கள் உங்கள் கருத்துகளை பகிருங்கள் மக்கழே...