அத்தியாயம்…4
கம்பெனி லேப்டாப்பில் கூட வேலை செய்யும் டீம் ஆட்களை இணைத்தவளோ வேலையில் முழு மனதோடு செய்ய முடியாமல் தவித்தாள் குந்தவை.
முடித்துக் கொடுக்க வேண்டுமே என்ற தவிப்பில் தான் ஏனோ தானோ என இரவில் வேலையோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்தவள் அறையினுள் நுழைந்த பாரி அவளை வேலை செய்வதைக் கவனித்து விட்டு அவளுக்காகப் பால் ஒரு டம்ளர் ஆற்றி அவளின் மேசையின் மேல் வைத்தவன் படுக்கையில் மகளின் அருகே படுத்து நெற்றியின் மேலே கரங்களை மடக்கி வைத்துக் கொண்டுப் படுத்துவிட்டான்.
எதுவும் பேசவோ கேட்கவோ இல்லாமல் மகளின் அருகே படுத்து இருப்பவனை ஓரக்கண்ணால் கவனித்தவளுக்குச் சுரீர்னு கோபம் கட்டுகடங்காமல் பேரலையாக அவளுள் ஆர்ப்பரிக்க ‘’மீதி வேலையை நாளைக்குப் பார்க்கலாம் கை்ய்ஸ்’’ எனச் சொல்லியவள் லேப்டாப்பை மூடி வைத்தவள் எழுந்து கணவனின் அருகே போனாள் குந்தவை.
‘’பாரி பாரி’’ என அவனின் கரங்களை எடுத்துவிட்டு அருகே அமர்ந்தவளைக் கண்டவனோ ‘’உஸ் பாப்பா தூங்கிறா… எதுக்கு இப்படி கத்தற?’’ எனக் கேட்டவன் ‘’வேலை அதிகம் சொன்னீல…. செய்து முடித்து விட்டேனா போய்ப் படுத்துத் தூங்கு’’ எனச் சொல்லியவனை முறைத்தவள் அவனின் கரத்தைப் பிடித்து இழுக்க ‘’உனக்கு இப்ப என்னடி வேணும்’’…. என எழுந்து அமர்ந்தவனை இழுத்து அறையின் ஓரத்திலிருந்த இருக்கைக்கு அழைத்துச் சென்றவள் அவனை அதில் தள்ளி விட அவனோ லேசான தடுமாற்றத்துடன் உட்கார்ந்தும் அவனின் மடியில் மேலே பொத்தென்று உட்கார்ந்தாள் குந்தவை.
கணவனின் இறுக்கமும் கோபமும் கண்டவளுக்குத் தன் வேலை அதனால் ஏற்படும் சிக்கல்களை அறிந்தவன் இப்படி பண்ணுவது அவளுக்கும் ஒருவித எரிச்சலையும் அழுத்ததையும் அவளுக்குள் உண்டானது.
‘’ஏன்டா நான் என்ன வெட்டியாக ஆபீஸ் போய்யிட்டு வரேன்… காலையிலே சொல்லிட்டுத் தானே போனேன். இன்னிக்கு முக்கியமான வேலை இருக்கு அதனாலே வர லேட்டாகும் என்று…. அதுவும் இன்னிக்குக் கூட வேலை செய்தவன் அத்தனை பேரும் சொதப்பி வைத்து விட்டானுங்க. அதிலே டென்ஷன் அதிகமாயிருச்சு. அதைச் சரிப்பண்ணிவிடலாமெனச் செய்வதற்குள் அங்கே வந்திருந்த பிரெஜெக்ட் மேனெஜர் நொய் நொய்னு கொசு மாதிரி காதுக்கிட்டே பேசிக்கிட்டே இருந்தான். மண்டை வலியே வந்திருச்சு. சரி வீட்டிலே போய் நைட் ஷிப்ட் செய்றேன் சொல்லி எஸ்கேப் ஆகி வரும்போது வண்டி இடையில் மக்கர். அதைச் சரிப்பண்ணி வந்தால் ரொம்ப லேட்டாகிருச்சு’’ எனச் சொல்லியவள் ‘’அத்தை வருவதை மறந்தது என் தப்பு தான் பாரி. அதுக்குத் தான் சாரி சொல்லிட்டேன்ல. அப்பறம் எதுக்கு மூஞ்சியை மூஞ்சுரு மாதிரி தூக்கி வைச்சுகிட்டு இருக்க’’ எனக் கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவன் அவளை மடியிலிருந்து இறக்கி கீழே அமர வைத்துவிட்டு அவள் முகம் பார்க்க அமர்ந்தான் பாரிவேந்தன்.
‘’நீ வேலைக்குப் போற. அதுல இருக்கிற பிரச்சினைகளைச் சொல்லற. அது எனக்குப் புரியது குந்தவை. ஆனால் அம்மாவுக்குப் புரியனுமல. அதுவும் உன் போன் சுவிட்சு ஆப்னு வரும்போது நான் என்ன நினைக்க… எவ்வளவு தவித்துப் போயிட்டேன் தெரியுமா’’ என்றவன் ‘’உன்னை வேலைக்கு அனுப்பிவிட்டு நான் ஆம்பிளை இப்படி வெட்டியா கையறுநிலையில் உட்கார்ந்து இருக்கேன். பொம்பளையை கஷ்டப்படுத்திவிட்டு ஆம்பிளே வீட்டிலே உட்கார்ந்து இருப்பது எவ்வளவு கடினம் தெரியுமா…. பொம்பளை சம்பாரிக்கிற காசைத் தின்னுட்டு கோயில் மாடு மாதிரி சுத்தறானு எத்தனை பேச்சுகள். அத்தனையும் எதுக்காக… உனக்குப் புரியுமா அது.
"’நீ வேலைக்குப் போற. அதுல இருக்கிற பிரச்சினைகளைச் சொல்லற. அது எனக்குப் புரியது குந்தவை. ஆனால் அம்மாவுக்குப் புரியனுமல. அதுவும் உன் போன் சுவிட்சு ஆப்னு வரும்போது நான் என்ன நினைக்க… எவ்வளவு தவித்துப் போயிட்டேன் தெரியுமா’’ என்றவன் ‘’உன்னை வேலைக்கு அனுப்பிவிட்டு நான் ஆம்பிளை இப்படி வெட்டியா கையறுநிலையில் உட்கார்ந்து இருக்கேன். பொம்பளையை கஷ்டப்படுத்திவிட்டு ஆம்பிளே வீட்டிலே உட்கார்ந்து இருப்பது எவ்வளவு கடினம் தெரியுமா…. பொம்பளை சம்பாரிக்கிற காசைத் தின்னுட்டு கோயில் மாடு மாதிரி சுத்தறானு எத்தனை பேச்சுகள். அத்தனையும் எதுக்காக… உனக்குப் புரியுமா அது. அதுவும் நீ வர லேட்டாக லேட்டாக என்ன நடந்திருக்குமோ? என்கிற பயம் என்னை எவ்வளவு கீழ்த்தரமாக உணர வைத்தது தெரியுமா…. உன்னிடம் என் அம்மா தங்கை வந்திருக்காங்க, ஏன்டி இவ்வளவு நேரம் என உரிமையோடு அதட்டத் தான் முடியுமா…. சில நேரங்களில் இந்த மாதிரி சூழ்நிலையில் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து நீ வேலைக்குப் போகாதே நானே பார்த்துக்கிறேன் எனச் சொல்ல ஆசை தான் ஆனால்’’…. எனப் பேசிக் கொண்டிருப்பவனை முறைத்தவளோ ‘’ஏன்டா நான் சம்பாரித்து நீ சாப்பிடுவது அவ்வளவு கேவலமா. நீ வேறே நான் வேறனு நினைக்கிறீயா… நேற்று நைட் போனுக்குச் சார்ஜ் போடல. பகலையும் வேலை அதிகமாக இருந்தால் போன் சுவிட்சு ஆப் ஆனதைக் கவனிக்கல. ஆனால் நீ அத்தையும் வைசாலி வருவது எனக்குப் பிடிக்கலனு நீ எப்படி சொல்லாம்’’ எனக் கோபத்துடன் கேட்டவளுக்குப் புரிந்தது தன் கணவனின் மனக் கொதிப்பை.
அதவும் அவனின் தவிப்பும் அம்மாவும் தங்கையும் வரும்போது தான் இப்படி நடந்தால் அவர்களின் கோபம் இவனை மேன்மேலும் புழுவாகச் சுருண்டு கொள்வானெனப் புரியவும் எதிர்வாதம் செய்யாமல் அமைதியாகிவிட்டாள் குந்தவை.
தன் மேலே உள்ளே அதீத காதலால் தனக்காக எல்லாவற்றையும் பொறுத்துப் போகிறவனுக்குள் இருக்கும் வலியை உணராதவள் அல்ல குந்தவை.
எல்லாம் தெரிந்தாலும் தனக்காக இங்கே வந்து தன்னையும் குழந்தையும் இந்தளவுக்குத் தாங்கிப் பிடிப்பவனின் அன்பை புரிந்து கொள்ளாதா மட்டி அல்ல அவள். ஆனாலும் தான் வேலைக்குச் சென்றே ஆகணும் என்ற என் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுப்பவனை அவனின் அம்மா தங்கை முன் உதாசீனப் படுத்தியதாக நினைத்துவிட்டான். அதுவும் வர லேட்டாக அவனுள் ஏற்பட்ட தவிப்பை தணிக்க அவனின் அருகே நெருங்கியவள் ‘’சாரி பாரி’’ எனக் கன்னத்தில் பூவிதழில் முத்தமிட்டவளோ ‘’உன் தவிப்பு புரிகிறது. நானாவது போன் பண்ணிப் பேசிருக்கணும். ஆனால் நீ தினமும் பேசுவீயலே மதியம்…. இன்னிக்கு நீயேன் கூப்பிடல…. உனக்கு அம்மா வந்தால் என்னை மறந்திற. மகள் இருந்தாலும் மறந்திற’’ எனச் சிறு குரலில் கொஞ்சலும் கெஞ்சலுமாகப் பேசியவளின் அதரங்களை ஆவேசமாக அணைத்தவனோ தன் கோபம் இயலாமை வீம்பு என அன்பின் வலிகளையும் வன்மையாக அவளிடம் காமித்தான் பாரிவேந்தன்.
அவனின் வேகமும் ஆவேசமான அரவணைப்பும் அவனின் மனக்குமறல்களின் வெளிப்பாட்டை உணர்ந்தவளோ அவன் இழுக்கும் பக்கமெல்லாம் சென்று கொண்டிருந்தவளுக்கு அதீத களைப்பு.
இதனால எந்தப் பிரச்சினையும் தீரப் போவதில்லை. சில நேர மனவலிக்கு வடிகாலாக இந்நிகழ்வுகள் அவனின் வாழ்வில் ஆக்ரோஷமாகச் சில நேரங்களில் எழும்.
அவனின் மனதின் நுண்ணிய உணர்வுகளை உணர்ந்தவளோ அவனின் இழுப்பிற்குச் செல்ல அங்கே கோபமும் மோகமாக ஒரு அரங்கேற்றம்.
எல்லா முடிந்து ஓய்ந்து போய் அவனின் மார்பில் படுத்திருந்தவளின் தலைமுடியை மென்மையாகக் கோதிவிட்டவனிடம் மீண்டும் ஒரு மன்னிப்பு வேண்டுதலைச் சொல்லியவளின் வாயை மூடியவன் ‘’நீ மன்னிப்பு கேட்கணும் அவசியமில்லை குந்தவை. உன் வேலையைப் பற்றி எனக்குத் தெரியாதா… ஒரு போன்கால் பண்ணிருந்தால் போதுமே’’ என மெல்லி்ய குரலில் சொல்லியவனை நெஞ்சத்தில் அழுத்தமாகப் படுத்தவளோ அதன்பின் பேச்சை வளர்த்தவில்லை.
இது தீராத பிரச்சினை ஒன்றுமில்லை. பேசிப் பேசி மனதின் காயங்களை அதிகப்படுத்துவதை விட ஆறப் போட்டு விடலாம் இதையென எண்ணியவள் அவனை அணைத்தபடியே உறக்கத்தை தழுவினாள் குந்தவை.
அவளைத் தழுவிப் படுத்திருந்தவனோ உறக்கம் மறந்த விழிகளோடு விட்டத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதிற்குள் பல போராட்டங்களின் ஆக்கிரமிக்க அவனின் மனம் நிகழ் காலத்தை மறந்து கடந்த காலத்தின் காலயடி சுவடுகளை வலிக்க வலிக்க நினைத்துப் பார்த்தது.
சந்தோஷம் மகிழ்ச்சி குதுக்கலமும் கும்மாளமும் நிறைந்த அந்நாட்கள் தன் வாழ்வில் மீண்டும் மலராதா என யோசனையும் விரைவில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளாமல் விட்டுப் போன தன்னுடைய இயலாமையின் கையறு நிலையும் அவனுள் ஆழ் ஊற்று கிணறாக இதயத்தில் நங்கூரமாகப் பாய்ந்து குருதியை கொப்பளித்தது.
வறண்ட பூமியில் விளைக்க வைக்கும் பயிரின் நிலையாக அத்தனை போராட்டம் கொண்டது தான். அவனின் வாழ்க்கைத் திசை மாறிச் சென்றது. அதற்குக் காரணகர்த்தா யாரென அவனால் இன்று வரை நிர்யணிக்க முடியவில்லை.
கிராமத்தில் அழகான கூடு கலைந்து போனது ஆழிக்காற்றில் தன் தந்தையின் வடிவில் …அதற்கு விமோசனமாக அவன் வாழ்க்கை திசை மாறிச் சென்றாலும் அதை வளமாக்கிக் கொண்டான் அன்பும் காதலும் பிரியமும் ஆழமான நேசத்தைக் கொண்டு. ஆனால் சில வேளைகளில் இப்படிச் சிறு பொறியில் தொடங்கி பட்டாசாக வெடிக்கும்போது தான் தாங்கிட இயலாமல் தவிக்கும்போது மனயலைகளின் பேய்யாட்டத்தை மனைவியின் வாயிலாகத் தீர்த்துக் கொள்வது எந்தவகை நியாயம் என அவனுள் கேள்வி எழும்பினாலும் அதற்கு விடை அவனுக்குள் அவளா, அவளுக்குள் அவனா என்கிற மற்றும் ஒரு கேள்வி முளைக்கும். இப்படி பல குழப்பங்களுக்கிடையில் சலசலப்பாக எழும் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்ததோ இல்லை மௌனமாகவோ இருவரும் கடந்து விடுவது அவர்வரின் புரிதலில் மட்டுமேயெனக் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் நினைத்தபடியே படுத்து இருந்தவன் மனைவியை இறுக அணைத்தபடியே ஆழ்ந்த உறக்கத்தை தழுவினான் பாரிவேந்தன்.
விடியலில் முகிழினி சிணுங்கலில் விழித்தவன் தன்னருகே படுத்திருந்தவளின் முகத்தில் தெரியும் களைப்பும் சோர்விலும் கூட அவனை இறுகப்பற்றிருந்த கரங்களில் எங்கே தன்னை ஒதுக்கிவிடுவானா என்ற பயம் இருந்ததை உணர்ந்தவன் அவளின் நுதலில் மெல்லிய அச்சராமாக ஒத்தடமிட்டவன் அவளின் கைகளை விட்டு எழுந்து கொள்ள முயல அவளோ விடாமல் அவனைப் பற்றிக் கொள்ள ‘’ஏய் பாப்பா எழுந்துட்டாடி விடு’’ என மெல்லிய குரலில் சொல்லியவனை ‘’ம்க்கூம் எப்ப பாரு விழிக்கிற நேரமெல்லாம் உன் மக தான் உனக்கு’’ எனச் சிணுங்கியவளோ ‘’நீ இரு நான் போய்ப் பால் ஆற்றிக் கொண்டி வரேன். நீ பாப்பாவை தூக்கு… எனச் சொல்லியபடியே எழுந்தவளை இழுத்து அணைத்து விடுவித்தவனின் சிறு கண் சிமிட்டலில் முகம் சிவந்தவளோ ‘’போடா’’ எனச் சொல்லியபடியே அறையிலிருந்து வெளியேறினாள் குந்தவை.
நேற்றைய நிகழ்வில் எழுந்த குற்றவுணர்வால் தானே இன்று செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுள். அதை நடைமுறைப்படுத்தவே எழுந்து செல்ல மனைவியின் மனத்தை அறிந்தவனோ சிறு சிரிப்புடன் செல்பவளைப் பார்த்துக் கொண்டிருக்க ‘’அப்பி… அப்பி’’ என மகளின் சிணுங்கலில் ‘’ராசாத்தி கண்ணு அம்மு எழுந்திட்டிங்களா குட்டி’’ எனக் கொஞ்சியபடி தூக்கினான் மகளைப் பாரிவேந்தன்.
மகளுக்குப் பாலாற்றியவளோ தனத்திற்கும் கணவனுக்கும் தனக்கும் காபி கலந்தவள் வைசாலிக்கு மட்டும் பாலில் ஏபிசி மால்ட் கலந்தவள் பிரட் ரோஸ்ட் செய்து எல்லாருக்கும் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வர ஒவ்வொருவரும் எழுந்து வரவும் அவர்வர்களுக்குரியதை கொடுத்தவள் தன் அத்தை தனத்தின் அருகே அமர்ந்தாள் குந்தவை.
தன்னருகே அமரும் மருமகளிடம் எதுவும் பேசாமல் காபி அருந்திக் கொண்டிருப்பவரைக் கண்டவளோ ‘’சாரி அத்தை நேற்று ஆபிஸில் நிறைய வேலை அது தான் வரமுடியல. இதுக்குப் போய் என்கிட்ட கோவிச்சுக்கலாமா… நான் உங்க அண்ணனின் ஒரே செல்லப் பொண்ணு…. உங்களுக்கும் செல்ல மருமகள் தானே… என்கிட்ட முஞ்சியை திருப்பிக்கிறீங்க…
வெள்ளந்தியான சிரிப்போடு அன்பாகப் பாசமாக வாடி என் செல்ல மருமகளே தூக்கிக் கொஞ்சியது எல்லா மறந்திருச்சா…. உன்னைவிட என் மருமகளை தான் பிடிக்கும்னு உங்க மகன்கிட்ட வம்பளத்து அன்பை பொழிந்த என் அத்தை எங்கே போனாங்க’’ என அவரின் தோளைப் பிடித்தப்படி பேசியவளைக் கண்டவருக்குச் சிறு சிரிப்பு உண்டானது. அதைப் பார்த்தபடியே பாரிவேந்தனும் வைசாலியும் பார்வையாலே ஜாடை காமித்து சிரித்தனர். ‘’அம்மாவுக்கு ஐஸ் மலையையே தூக்கி வைக்கிறா’’ எனச் சொல்லிச் சிரிக்க இவர்களுக்கிடையே அமர்ந்திருந்த முகிழினியோ ‘’அப்பி அப்பி’’ எனப் பாரியை இழுக்க ‘’என்னடா கண்ணு’’ எனக் கேட்டபடி மகளின் அரைகுறை தூக்கத்தை எழுந்திடாமல் மடியில் தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தான்.
தனலட்சுமியோ ‘’இப்படி கொஞ்சிப் பேசியே ஆளைக் கவுத்துரு’’ என மருமகளிடம் சொல்லியவர் ‘’பாரியும் உன்னையும் வைத்துத் தான் நேற்றே ஒரு விசயம் பேசணும் நினைத்து வந்தேன். ஆனால் அதை எப்படி எடுத்துக் கொள்ளுவீங்க தெரியல’’… எனச் சொல்லியவரை பு
ருவங்களைச் சுருக்கிப் பார்த்தான் பாரிவேந்தன்.
தொடரும்..
கதைப் பற்றி உங்கள் கருத்துகளைக் கூறுங்கள் மக்களே