• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அக நக முகநகையே

சசிகலா எத்திராஜ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
17
3
3
Karur
அக நக முகநகையே…


அத்தியாயம்…1


முத்துக் குமரனே முத்தமிழ் வேலனே!

சித்தனாய் வந்தருளும் சத்திய சீவனே!

வேடர்குலம் உய்ய வந்திட்ட நாயகனே!

வள்ளிக் கரம் பிடித்த தணிகா சலனே!


சாமியறையில் படங்களுக்குப் பூ வைத்துச் சாம்பிராணியும் விளக்கு ஒளியேற்றி வீடெங்கும் நறுமணத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது அவ்விடம் எங்கும்.

காலை வேளையின் பரபரப்பாக அறையினுள் இருக்கும் டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன் நின்ற குந்தவையோ வேலைக்குக் கிளம்பிச் செல்ல நேரமாயிற்றே என்ற பரபரப்புடன் தன் நீளக் கூந்தலை வாரியவள் பின்னல் போட்டு நெற்றியில் சிறு பொட்டும் வடுகில் லேசாகக் குங்குமம்த்தை வைத்துவிட்டு தான் அணிந்திருந்த காட்டன் சேலையின் மடிப்பினை சரிப்பண்ணிக் கொண்டே

‘’பாரி என்ன பண்ணற?..
எனக்கு ஆபீஸ்க்கு நேரமாச்சு…டிபன் ரெடி பண்ணீட்டியா ’’ எனக் கேட்டபடி அறைக்குள் இருந்து வெளியே வந்தவளோ டைனிங் டேபிளின் அருகே போனாள் குந்தவை.

டைனிங் டேபிளில் குளித்து முடித்து நெற்றியில் திருநீறு பூசியிருந்தவனோ அழுக்கு இல்லாத சுத்தமான வேட்டியும் டீசர்ட் அணிந்து தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு நின்றிருந்தபடி தன்னுடைய இரண்டு வயது மகளான முகிழினிக்கு இட்லியை ஊட்டி விட்ட படி மனைவியின் கேள்விக்குப் கண்களாலே ‘எல்லாம் ரெடியாக இருக்கு பாரு’ எனக் கண்ணால் காண்பித்துவிட்டு தன் மகளைக் கொஞ்சியபடி உணவை ஊட்டினான் பாரிவேந்தன்.

‘’பட்டுச் செல்லம் ஆ…திறங்க… உங்களுக்குப் பிடித்த நெய் இட்லி தேங்காய் சட்னியும்… பட்டுவுக்கு குட்டியா குட்டியா பியத்து தருவேனா … அம்மு செல்லம் சாப்பீடுவீங்களாம்’’ எனக் குழந்தையைக் கொஞ்சியே ஊட்டினான் பாரிவேந்தன்.

கணவனும் மகளும் அவர்களின் உலகில் சஞ்சரித்தபடி இருப்பதைக் கண்டு ‘’மகள் இருந்தாலே பொண்டாட்டிக் கண்ணுக்குத் தெரியாதே’’ என் முணுமுணுத்தவள் தனக்கான உணவைத் தட்டில் வைத்துக் கொண்டு உண்டவளின் முன் முகிழினி வேகமாக வந்து தன் சிப்பி வாயைத் திறக்க ‘’லட்டுக்கு இட்லி வேணுமா’’ எனக் கொஞ்சியவளோ தானும் ஒரு வாய் ஊட்டிவிட அருகிலிருந்த பாரியோ தன் வாய் திறந்து ‘எனக்கு’ என்று சொல்லிக் கேட்கப் பொய்யாக முறைத்தபடி அவனுக்கு ஊட்டிவிட்டாள் குந்தவை.

உணவை உண்டபடி இருந்தவளோ ‘’சாயங்காலம் வேலை முடிந்து வருவதற்கு லேட்டாகும் பாரி. இன்று முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் ஏற்றுக் கொண்டு முடிக்கும் பிரஜெக்ட் பற்றிப் பேசவதற்கு வருகிறார்கள் ஹெட் ஆபீஸ் இருந்து’’ என்று சொல்லியவளின் கரங்களை அழுத்தியவன் ‘’ம் நீ வேலையில் கவனம் வைடா …நான் இங்கே பார்த்துக்கிறேன்’’ எனப் பாரி வேந்தன் சொல்ல….

‘’அதில்லை, இன்று அத்தையும் வைசாலியும் வரேனு சொன்னாங்க. நானில்லை என்றால் எதாவது சொல்வாங்களே’’ என்று சொல்லியவளின் தோளைத் தட்டியவன் ‘’அதுயெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை. அம்மாவிடம் வைசாலியிடம் நான் பேசிக்கிறேன். நீ கிளம்பு, உனக்கு லஞ்ச் லெமன் ரைஸ் உருளைக் கிழங்கு பொடிமாஸ் வச்சிருக்கேன் மறக்காமல் சாப்பிடு. வேலை பிஸியில் சாப்பிடாமல் இருந்தால் நாளைக்கு உனக்குப் பிடிக்காத சாப்பாடு தான் செய்து தரப்போகிறேன்’’ என மிரட்டலாகச் சொல்லியவனைப் பார்த்துச் சிரித்த குந்தவையை ‘’சோ ஸ்வீட் பாரி’’ என அவனின் கன்னத்தைக் கிள்ளியவளின் கைகளைத் தட்டி விட்டது முகிழினி குட்டி.

‘’ஆ ஊ’’… சத்தமிட்டபடி அவளின் கைகளைத் தள்ளிய முகிழினியை முறைத்தவள் ‘’என் புருசன் நான் கிள்ளுவேன் போடி ’’ என்று மகளிடம் வம்பளக்க …

‘’ம்ஹூம் அ…அப்பி… முகி அப்பி’’ என்று மழலை குரலில் சொல்லிக் கொண்டுப் பாரியின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் முகிழினி

இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு தன் மேல் ஆதிக்கம் செலுத்தும் பாசப்பிணைப்பைக் கண்டவனோ, தன் மகளை அணைத்து இறுக்கியவன் ‘’குந்தவை… ஏன் குட்டிக் கூட எதுக்கு வம்பளக்கிற, உனக்கு நேரமாச்சு கிளம்பலயா’’ எனக் கேட்டவனின் கண்களின் நேச மொழிகளோ அவளை அரவணைத்துப் புன்னகைத்தது.

அவன் விழிகளின் மௌன பாஷையை புரிந்தவளோ முகம் சிவந்து அவனின் புஜத்தில் அடித்தவள் ‘’மதியம் ரயில்வே ஸ்டேஷனில் அத்தையும் வைசாலியும் வந்திருவாங்க பாரி. மறக்காமல் போய்க் கூட்டி வந்திருங்க. பாப்பாவை அலமும்மாவிடம் விட்டிட்டு போங்க, ரேஷன் கடைக்கு வேறு போகணும் பா. இன்று சர்க்கரை வாங்கணும். அத்தை வாங்கி வைக்கச் சொன்னாங்க மறந்திடாமல் வாங்கிருங்க, முடிந்தால் மீன் சிக்கன் வாங்கிட்டு வந்திருங்க, வைசாலிக்கு மீன் பிரை, சிக்கன் பிரியாணியும் விரும்பிச் சாப்பிடுவாள்’’ என்று சொல்லிக் கொண்டே கிளம்பினாள் குந்தவை.

‘’சரிடி நான் பார்த்துக்கிறேன், நீ இன்னும் ஆபீஸ் போற வரைக்கும் எதாவது சொல்லிகிட்டே போவீயா’’…என்று மகளைத் தூக்கிக் கொண்டே வெளியே வந்தவன் குந்தவை வண்டியை ஸ்டார்ட் பண்ண முடியாமல் சிரமம் படுவதைக் கண்டு ‘’பாப்பாவை பிடி’’ என்று அவளிடம் கொடுத்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணி வெளி கதவுக்கு முன் கொண்டு நிறுத்தியவன், ‘’நாளைக்கு வண்டியைச் சர்வீஸ் விடணும் குந்தவை. நீ நாளைக்கு ஆபீஸ்க்குக் கார் எடுத்துப் போகணும்’’ என்று சொல்ல, ‘’ம்ம்’’ என்றவள் பாரியிடமும் முகிழினியை கொடுத்ததும், ‘’அம்மாவுக்கு டாடா சொல்லுடா குட்டி’’ என்று பாரி சொல்ல முகிழினி தன் அப்பாவோடு சேர்ந்து அம்மாவிற்கு டாடா காட்டவும் இருவருக்கு கையை அசைத்தபடி கிளம்பினாள் குந்தவை.

அவள் செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்தவன் வெளியே இருக்கும் இரும்பு கதவைச் சாத்தும்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயகுமார், ‘’என்ன பாரி சார்!! ஒய்ப் வேலைக்குக் கிளம்பியாச்சு போல, கொடுத்து வச்சவர் நீங்க, பொண்டாட்டியை வேலைக்கு அனுப்பிவிட்டு ஜாலியா வீட்டிலே இருக்கிறீங்க’’ என்று நக்கலாகக் கேட்டவர்க்கு,
லேசாகப் புன்னகைத்தவன் ‘’அவங்க கிளம்பிட்டாங்க விஜய் சார்’’ என்றவன் ‘’பல வருசமா பொண்ணுக வீட்டிலே தானே இருந்திருக்காங்க… ஒரு சேஞ்ச் இப்ப நாம இருந்தால் எப்படி இருக்கும் பார்க்கலாமே’’ என்று சொல்லியபடி தன் வீட்டிற்குள் குழந்தையோடு உள்ளே சென்றான் பாரிவேந்தன்.

அதைக் கேட்டு முகம் சுருங்கிய விஜயகுமார் வேலைக்குப் போகாமல் வெட்டியா பொழுது போக்கிப் பொண்டாட்டிக்குச் சேவகம் செஞ்சு அவளோட காசிலே தண்டமாக உட்கார்ந்து சாப்பிடறான்… இதுல வியாக்கினாம் பேசறான்… இவன் செய்வதைப் பார்த்துத் தன் மனைவியும் ‘’அவரு என்னயெல்லாம் செய்யறாரு… நீங்கக் கறிவேப்பிலை கூட அவசரத்துக்கு வாங்கி தரீங்களா’’ எனக் கத்தவும் அவளிடம் பேசாமல் எல்லாம் இவனால் தானெனப் பாரிவேந்தனை நக்கலும் கேலியுமாகப் பேசிவிட்டு தன் மனைவி வாங்கிக் கொண்டு வாங்க சொன்ன பொருட்களை வாங்க சென்றார்…

வீட்டினுள் சென்றவனோ குழந்தையைப் பொம்மைகளோடு விளையாட விட்டவன் சமையல் அறையை ஒதுங்க வைத்துவிட்டு

துணிமணிகளை வாசிங்மிஷினில் போட்டுவிட்டு வெளியே செல்ல வேறு ஆடை உடுத்தியவன் குழந்தைக்குத் தேவையானவையை ஒரு வயர் கூடையில் வைத்துவிட்டு… ‘’பட்டு நாம் அலமு பாட்டி வீட்டுக்குப் போகலாமா… அங்கே பாட்டி கூட இருப்பீங்களாம் குட்டிம்மா… அப்பா போய்த் தனம் பாட்டியும் வைசாலி அத்தையும் பாப்பாவைப் பார்க்கக் கூட்டி வருவனேனா’’ எனப் பேசியபடி குழந்தைக்கு வேறு உடை அணிவித்தபடி சொல்லியவனின் மூக்கைப் பிடிக்கக் கைகால்களை அப்பா ‘’நானு…நானு’’… எனச் செல்லம் கொஞ்சிய மகளைத் தூக்கி முத்தமிட்டவன் தங்கள் வீட்டின் பக்கத்தில் வசிக்கும் அலமும்மாவிடம் விட்டவன் ‘’கடையிலே சாமான் வாங்கப் போறேன் மா. உங்களுக்கும் எதுவும் வேண்டுமா’’ எனப் பாரி கேட்க,

‘’வேண்டாம் கண்ணு, எல்லாம் போன வாரம் தானே வாங்கியது இருக்கு’’ என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே உள்ளே வந்த ராமன் ‘’என்ன பாரி பாப்பாவை விட வந்தீயா?’’ என்று கேட்டவர்க்கு, ஆமாபா, மதியம் அம்மாவும் தங்கச்சியும் வராங்க, இரயில்வே ஸ்டேஷன் போகணும் எனச் சொல்லியவன், ‘’முகிழினியை பார்த்துக்க உங்களுக்குச் சிரமம் இல்லையே’’ எனக் கேட்டான் பாரி.

‘’அதெல்லாம் ஒன்றும் சிரமம் இல்லை, குந்தவை ஆபீஸ் போயாச்சா’’ என அலமு கேட்க,

‘’போய்யாச்சு மா… நான் கிளம்பறேன்’’ எனச் சொல்லியவன் காரை எடுத்துக் கிளம்பினான் பாரிவேந்தன்.

‘’பொறுப்பான பிள்ளை எப்படி பொண்டாட்டியும் புள்ளையும் தோளில் சுமந்து கொண்டு அலையறான்’’ என அலமு சொல்ல ராமனோ அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் முகிழினியைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.

குந்தவை ஒரு தனியார் ஐடி கம்பெனியில் வேலை செய்தாள். தன் அத்தை தனலட்சுமி மகன் தான் பாரிவேந்தன். சொந்தம் விட்டுப் போயிடக் கூடாது எனக் குந்தவையின் அப்பா ஜனார்த்தனன் தன் அக்கா மகன் படித்துவிட்டு ஊரில் உள்ள நிலபுலன்களை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

குந்தவையோ சென்னையில் வேலையிலிருக்க அவளுக்காகச் சென்னை வந்தவனோ தன் மனைவி குழந்தையென அவனின் உலகத்தை அழகாக்கிக் கொண்டவனைக் கண்டவர்கள் அனைவரும் அவனை நக்கலும் நய்யாண்டியுமான பேச்சு பேசுவதைக் கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்தான் பாரிவேந்தன். மற்றவர்கள் பேச்சு முள்ளாகச் சில நேரங்களில் குத்தினாலும் தன் குடும்பத்தின் மீது கொண்ட அன்பின் பிணைப்பால் எதையும் காதில் வாங்காமல் இருந்தான் பாரிவேந்தன்.
ஸ்விப்ட் வாகனத்தைச் சாலையில் செலுத்திக் கொண்டிருந்தவனோ தன் மனைவி சொன்னப் பொருட்களையும் வாங்கியவன் தன் தாய்க்கும் தங்கைக்கும் பிடித்தவைகளை சேர்த்து வாங்கிக் கொண்டு மனைவிக்கும் குழந்தைக்கும் தனியாக வேறுசில பொருட்களையும் வாங்கியவன் அவர்களை அழைத்துக் கொண்டு வர இரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றான் பாரிவேந்தன்.

காரைப் பார்க் செய்துவிட்டு இறங்கி ஸ்டேஷனில் நுழைய அப்போது தான் இரயிலிருந்து இறங்கினர் தனலட்சுமியும் வைசாலியும்.

இருவரையும் கண்டு கைசைத்தபடி புன்னகைத்தபடி அவர்களை நெருங்க அங்கிருந்த கூட்டத்தில் தன் மகன் மட்டுமே கம்பீரமான உயரத்தோடு நின்றிருப்பதைக் கண்டு பூரிப்பாகப் பார்த்த தனலட்சுமியின் விழிகள் தங்களை நெருங்கி வந்தவனை ‘’கண்ணு எப்படி இருக்கே? எனத் தழுதழுத்தக் குரலில் கேட்டவரோ ‘’எங்கே உன் பொண்டாட்டி?... இன்றும் பேக்கை மாட்டிக் கொண்டு ஆபிஸூக்குப் போய்விட்டாளா’’ என மகனைப் பாசத்தோடு அரவணைத்தாலும் மருமகளை சிறு கசப்பான வார்த்தைகளால் வறுத்தெறுத்தார் தனலட்சுமி.

தொடரும்..

உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன் மக்கழே.. நன்றி வணக்கம்









1000099083.jpg