அத்தியாயம் 7
இரவு கவிழ்ந்திருந்தது. சுற்றிலும் சிறு வண்டுகளின் ரீங்காரமும், மின்மினி பூச்சிகளின் சத்தமும் கேட்டு கொண்டிருந்தது. அடுத்தடுத்த வீடுகள் ஒன்றையொன்று இணக்கமாக ஒட்டிக் கொண்டு நின்ற அந்த தெருவில், பெரிதும் இல்லாத சிறிதும் இல்லாத சிமெண்ட் கூரை போடப்பட்ட வீடு அது. ஆங்கிலம் கலந்த தமிழில் கான்கிரீட் வீடு. வீட்டை சுற்றிலும் இருந்த காம்பவுண்ட்டுக்குள் வளர்க்கப்பட்ட செடிகளில் மலர்ந்த முல்லை மலர்களின் மணம் காற்றில் பரவி தெருவில் நடப்போரின் நாசியை துளைத்தது. வீட்டு களத்துக்குள் (compound) தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் வந்தான் செழியன்.
இந்த தடவையும் நாமதாம்ல ஜெயிக்கிறோம். எம்புட்டு தைரியம் இருந்தா அந்த சகாயம் பைய நம்ம மதிவாணன் மச்சானுக்கு எதிரா நாமினேஷன் தாக்கல் பண்ணிருப்பான்?!! விடக்கூடாதுல, நாம யார்னு அந்த பையலுக்கு காட்டிபோடணும்", ஹாலில் அமர்ந்து சரவணனுடன் கார சாரமாக பேசி கொண்டிருந்தார் பாண்டியன்.
பாண்டியனை கண் கொட்டாது பார்த்தபடியே அங்கிருந்த மேஜை மீது தன்னுடைய கேமராவை வைத்தான் செழியன்.
ஏலேய்", வீட்டிற்குள் ஒரு பெண் குரல் கேட்டு திரும்பினான்செழியன். பாண்டியனும் சரவணனும் திரும்பி பார்த்தனர்.
சுவாதி சாயந்தரம் சீக்ரமே வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டாளாட்டுருக்குது. அண்ணிக்கிட்ட இப்போதே பேசிப்போட்டு வாரேன்”, என்றபடி தன் கையிலிருந்த அலைபேசியை காட்டினாள் அபிராமி.
சேனல்ல கொஞ்சம் வேலை அதிகமா இருந்துச்சு மா", மிக மெல்லிய குரலில் சொன்னான் செழியன்.
வேலை ஒனக்கு மாத்ரந்தே அதிகமாக்கு? சுவாதி மட்டும் எப்டிலே நேரத்துக்கு வூட்டுக்கு வந்தா? எங்கிட்டயே பொய் சொல்றியாக்கும்?", கேட்டுக் கொண்டே வந்து, மகனின் காதை திருகினாள் அபிராமி.
ம்மா, விடும்மா, வலிக்குது”, என்றான் செழியன்.
லேட்டாகும்னா ஒரு வார்த்தை ஃபோன் பண்ணி சொல்ல கூடாதாக்கு!!. நான் எம்புட்டு நேரம் ஃபோன் பண்ணேன் தெரியுமா?! உன் ஃபோனை எடுத்து பாருல", அவள் சொல்ல,
வேலைக்கு போயி அலுப்பா வந்திருக்கிற புள்ளைகிட்ட, வந்ததும் வராததுமா ஏண்டி வில்லுப்பாட்டு பாடிட்டுருக்ற?. மொதல்ல கூட்டிட்டு போயி சோத்தை போட்டுபோட்டு, அப்றமா பொறுமையா விசாரி", பாண்டியன் சொல்ல, தகப்பன் மீது பதித்திருந்த பார்வையை செழியன் விலக்கவில்லை.
போய்யா, போய் முகம் கழுவிட்டு சாப்பிட்டு போட்டு வா. பொறவால பேசலா", பாண்டியன் செழியனிடம் கனிவு நிறைந்த குரலில்சொல்ல, அமைதியாக தன்னறைக்குள் நுழைந்தான் செழியன்.
அண்ணே, நம்ம செழியன்கிட்ட ஏதோ வித்தியாசம் தெரியுதுண்ணே", என்றான் சரவணன்.
என்னல வித்தியாசம்?, அவன் எப்போவும் போலத்தானே இருக்கான்?", இயல்பாக செழியனின் தாய் அபிராமி சொல்ல,
என்னய,... எப்போ, எங்குட்டு பாத்தாலும் சரி, எப்போ வந்தீக? அத்தை எப்படி இருக்காக?! கவின் ஸ்கூலுக்கு போறானான்னு ஏகபோகமா நலம் விசாரிக்குற பைய, இன்னைக்கு நான் இங்கிட்டு உட்கார்ந்துக்கிருக்கேன். என்னய திரும்பி கூட பார்க்காம போறான். என்னவோ சரியில்ல", என்றான் சரவணன்.
இவன் ஒரு கூறு கெட்டவன், எதுக்கெடுத்தாலும் சந்தேகம், யாரை பார்த்தாலும் சந்தேகம். போன சென்மத்துல போலிஸா பொறந்துருப்பானாட்டுருக்குது. அவன் நாள் முழுக்க கேமராவை தூக்கிட்டு ஊர் பூரா சுத்திபோட்டு, அலுத்து போய் வந்துருக்காம்ல. அதே,... முகம் வாட்டமா இருக்கு", என்று சரவணனிடம் சொன்னார் பாண்டியன்.
அப்டியா சொல்றீக?!", சரவணன் இயல்பாக பாண்டியனிடம் கேட்க,
பொறவு?!", கேள்வியாக கேட்டாள் அபிராமி. பாவமாக பார்த்தான் சரவணன்.
இன்னும் போகலியாக்கு நீயி? போயி சாப்பாடு எடுத்து வைடி", பாண்டியன் கண்டிப்புடன் சொல்ல,
ம்க்கும், எப்போ பாத்தாலும் ரெண்டு பேரும் குசுகுசுன்னு என்னத்ததே பேசிக்குவாகளோ? இந்த சரவணம்பைய சகவாசத்த தொலச்சு கட்னாத்தே இவுக திருந்துவாக”, புலம்பிக் கொண்டே அபிராமி சென்றாள்
என்னல, ஏதோ பொடி வச்சி பேசுற மாதிரி தெரியுது?!. என் புள்ளைகிட்ட புதுசா என்ன வித்தியாசத்தை பார்த்துபுட்ட?!", பாண்டியன் சரவணனிடம் மெல்லிய குரலில் கேட்க,
இன்னைக்கு காலையில, அந்த தினேஷ் பைய ஊரை விட்டு போறதுக்கு முன்னால நம்ம செழியனை போய் பார்த்துருக்காண்ணே”, சரவணன் சொல்ல பாண்டியன் கண்கள் சுருக்கினார்.
மதுரை கோர்ட்ல, கேசவன் கேசுக்கு வந்த தீர்ப்பை தெரிஞ்சிப்போட்டு வரலாமுன்னு போன நம்ம பையலுக பார்த்துட்டு வந்து சொன்னானுக. அவன் நம்ம செழியன்கிட்ட ஏதாவது ஒளறிருப்பானோன்னு........", என்று வாக்கியத்தை இழுத்து நிறுத்தினான் சரவணன். கேள்வியாக அவனை பார்த்தார் பாண்டியன்.
மதிவாணனின் மிகப்பெரிய பங்களா வீட்டுக்குள் ஒரு அறையின் பால்கனியில் ஊசலாடிக் கொண்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் கௌசல்யா. அவளது மடியில் தலை சாய்த்து படுத்திருந்தாள் சுவாதி. கௌசல்யா, தன் மகளின் தலையை இதமாக கோதி விட்டு கொண்டிருக்க, சுவாதி வானில் தெரியும் நிலவினை ரசித்து கொண்டிருந்தாள்.
ம்மா”, சுவாதி அழைக்க,
சொல்லுடி”, என்றாள்
கௌசல்யா.
ம்மா, நா”,
ம்ம்”,
நா வந்து”,
ம்ம், வந்து”,
இல்லம்மா, நா வந்து”,
என்னடி?, வந்து வந்துன்னு வருது. விஷயம் வர மாட்டேங்குது. என்ன தப்பு பண்ணிப்போட்டு வந்த?”,
தப்பா?”, சொல்லி துள்ளி எழுந்தாள் சுவாதி.
நான் ஒம்பொண்ணும்மா, தப்பு பண்ணுவேனா?”, சுவாதி கேட்க,
தப்பு செய்யலன்னா என்த்துக்கு வார்த்தை தடுமாறுது?”, கேட்டு புருவங்களை உயர்த்தினாள் கௌசல்யா.
தலைகுனிந்து சிரித்த சுவாதியின் முகத்தில் வெட்கம் படர்ந்தது.
அட என் பொண்ணு வெக்கமெல்லாம் படுறாளாட்டுருக்குது. இது ஒங்கப்பாவுக்கு தெரியுமா?”, கிண்டலாக கேட்டாள் கௌசல்யா.
வெட்கம் அதிகரித்தது.
அப்போ என்னவோ பெருசா இருக்கு. என்னடி விசயம்?", சிரித்து கொண்டே கொஞ்சலாக சுவாதி கேட்க,
நா,.... நா,...",
தடுமாறிய சுவாதியின் வார்த்தைகளும், நொடிக்கு நொடி அவள் முகத்தில் அதிகரித்துக் கொண்டிருந்த வெட்க புன்னகையும், ஏற்கனவே மகள் மீது ஏற்பட்ட அனுமானமும், ஒன்றாக சேர்ந்து, கௌசல்யாவை கலக்கம் கொள்ள செய்தது.
யாரையாவது,.... லவ் பண்றியா சுவாதி?", கௌசல்யா சட்டென கேட்க, தலை நிமிர்ந்து தாயின் முகம் பார்த்தாள் சுவாதி.
யாரு?", கௌசல்யா கேட்க,
செழியன்", என்ற சுவாதி மீண்டும் தாயின் மடியில் முகம் புதைத்து அவளை கட்டிக் கொண்டாள். கௌசல்யா முகத்தில் இருந்த சிறு சிரிப்பும் சட்டென்று மறைந்தது.
நீங்கதாம்மா அப்பாகிட்ட பேசி எங்க கல்யாணத்துக்கு பர்மிஷன் வாங்கி தரணும்", சுவாதி சொன்னாள்.
ஒங்கப்பா இதுக்கு சம்மதிப்பாகளா சுவாதி?", கௌசல்யா கேட்க
ஏம்மா சம்மதிக்க மாட்டாக. செழியன் நம்மாளு தான?!", இயல்பாக சொன்னாள் சுவாதி.
அதெல்லாஞ்சரிதான், ஆனா ஒங்கப்பா ஒரு அரசியல்வாதி. அரசியல் செல்வாக்கு, அந்தஸ்துன்னு வரும் போது,.........", என்று கௌசல்யா இழுத்து பேச,
ச்சே, ச்சே அப்பா அப்படியெல்லாம் யோசிக்க மாட்டாகம்மா. அப்பாவுக்கு என் சந்தோஷந்தான் முக்கியம். சாதிய தான் முக்கியமா பாப்பாக. செழியன் நம்மாளு, அதுலயும் அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச பாண்டியன் மாமா பையன். நீ வேணும்னா பாரு, அப்பா என் காதலை பத்தி தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாக", சொல்லி விட்டு சுவாதி மீண்டும் கௌசல்யாவை கட்டிக் கொள்ள, சிந்தனையில் ஆழ்ந்தாள் கௌசல்யா.
சப்பாட்டு மேஜையில் சரவணனும், பாண்டியனும் அமர்ந்திருக்க, பாண்டியனின் எதிரில் அமர்ந்திருந்தான் செழியன். பாண்டியனின் பார்வை செழியன் மீது திடமாக படிந்தது. ஏனோ செழியன் தகப்பனின் முகத்தை பார்க்கவே இல்லை. இயந்திரம் போல் சாப்பிட்டு கை கழுவி எழுந்து கொண்டான். சரவணனுக்கு உள்ளுக்குள் நெருட, பாண்டியனுக்கு உள்ளுக்குள் பயம் படர்ந்தது. எல்லோரும் இரவு உணவை முடித்து வர செழியன் தனதறைக்குள் செல்ல எத்தனித்தான்.
செழியா", அபிராமியின் அழைப்பில் நின்று திரும்பினான் செழியன்.
என்னம்மா?",
வாடிப்பட்டியிலருந்து செந்தூரன் மாமன் வந்திருந்தாகய்யா. அவுக பொண்ணை உனக்கு கட்டி குடுக்கலாம்னு கேக்குறாக", என்று அபிராமி சொல்ல,
இந்தாடி, எம்புள்ளை வாழ்க்கை விசயத்துல தலையிடுற வேலை வச்சிக்கிடாத, சொல்லிட்டேன்", சட்டென குரல் உயர்த்தினார் பாண்டியன்.
இப்போ என்னத்த தப்பா பேசிப்புட்டேன்னுட்டு எகிறிட்டு வர்றீக?. என் அண்ணன் மொவளை என் மொவனுக்கு கட்டி வைக்கணும்ன்னு நினைக்கிறதென்ன அம்புட்டு பெரிய குத்தமாக்கு?. ", பதிலுக்கு அபிராமியும் குரல் உயர்த்த,
எம்புள்ளைக்கு யாரை கட்டி வைக்கணும்ன்னு எனக்கு தெரியும். உன் வகையறா சங்கதிய இங்கிட்டு கொண்டுட்டு வர்ற வேலை வச்சிகிடாத”, என்றார் பாண்டியன்.
இது என் வாழ்க்கை, நீங்க சிரமப்பட தேவையில்ல. யாரை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்”, உடனே செழியன் சத்தமாக சொல்ல மூவரும் அவன் முகம் பார்த்தனர்.
ஏலேய் என்னல பேச்சு பேசுற?. இந்தா......, ஊர்ல திரியிற எவளையாவது இழுத்துட்டு வந்து இவதேன் உன் மருமகன்னு சொல்லலாம்னு நினைக்காத. பொறவு, இந்த அபிராமியோட குணமே வேற மாதிரி இருக்கும் சொல்லிட்டேன்”, கொதித்து பேசினாள் அபிராமி.
ஏய், என்னடி, நான் இருக்கும்போதே என் புள்ளைகிட்ட கொரல் ஒசத்துற?. இது எம்புள்ள வாழ்க்கை, நாங்க பாத்துக்குருவோம். நீ ஒ சோலிய பாரு”, என்று பாண்டியன் சொல்ல,
நாங்க இல்ல, நா”, என்று அழுத்தமான குரலில் சொல்லி பாண்டியனை நேருக்கு நேர் பார்த்த செழியனின் கண்களில் இதுவரை கண்டிராத கோபம் ஒன்றை கண்டார் பாண்டியன். தோன்றிய அதிர்ச்சியை உள்ளுக்குள் மறைத்து கொண்டார்.
பாருங்க, ஒங்க முன்னாடியே என்ன பேச்சு பேசுறான்?. இப்படியே வுட்டீக?. நம்ம சாதி சனத்துல சேராத எவளையாவது இழுத்துட்டு வந்து நிக்க போறான்”, அபிராமி சொல்லி முடிக்கும் போது அவளை அறைந்திருந்தார் பாண்டியன்.
அப்பா”, சத்தம் கூட்டி அலறினான் செழியன்.
கன்னத்தில் கைவைத்து அதிர்ந்து நின்ற அபிராமியின் கண்கள் நீரை சுரந்தது.
எம்புட்டு தடவை சொல்றது?. ஆம்பளைங்க பேசிட்டு இருக்கும் போது குறுக்கால பேசாதன்னு. உள்ள போடி”, சாதாரணமான குரலில் பாண்டியன் சொல்ல,
கன்னத்தில் கை வைத்த படி உள்ளே சென்று விட்டாள் அபிராமி. செழியன் அருகில் வந்து அவனது தோளில் கை போட்டார் பாண்டியன். அவரை தீ பார்வை பார்த்தான் செழியன்.
நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு பழக்கவழக்கமிருக்குது. நம்ம சாதிக்குன்னு ஒரு கட்டுப்பாடு இருக்கு. பொம்பளைய எந்த எல்லையில வைக்கணும்னு ஒரு வரைமொறை இருக்கு. இதையெல்லாம் மீறி நடக்குறது ஒங்கப்பனுக்கு பிடிக்காது”, பாண்டியன் சொல்ல அமைதியாக நின்றிருந்தான் செழியன்.
இந்த ஊருக்குள்ள ஒங்கப்பனுக்கு ஒரு மரியாதை இருக்கு. அது கெட்டு போற மாதிரி எம்புள்ள நடந்துக்க மாட்டான்னு எனக்கு தெரியும்”, பாண்டியன் சொல்ல தன் தோளில் இருந்த பாண்டியனின் கையை விலக்கி விட்டான் செழியன். லேசான சிரிப்பொன்றை உதிர்த்தான்.
பழக்கவழக்கம், சாதி, கட்டுப்பாடு, வரைமொறை......”, என்று சொல்லி எள்ளலாக சிரித்து விட்டு தொடர்ந்தான் செழியன்.
உங்களுக்கு பிடிக்காதுங்குறதுக்காக என் மனுஷத்தன்மையை என்னால எழக்க முடியாது. உங்களுக்கு பிடிக்குங்குறதுக்காக நீங்க மூடத்தனமா வகுத்து வச்ருக்ற குப்பையெல்லாம் என் தலையில தூக்கி போட்டு சுமக்க முடியாது”, செழியன் சொல்ல அதிர்ந்தார் பாண்டியன்.
பொறவென்னவோ சொன்னீகளே, என்ன சொன்னீக?”, என்று சிந்தனை செய்வது போல் பாவனை செய்த செழியன்,
ஹான்.......... மரியாதையா?. இம்புட்டு நாளா இந்த ஊரு சனங்க ஒங்க மேல வச்சிருக்கிறது மரியாதைன்னுத்தே நானும் நெனைச்சிட்டு கிடந்தேன். ஆனா இன்னைக்குத்தே தெரிஞ்சது. அது மரியாதையில்ல, பயம்ன்னு, அருவருப்புன்னு”, செழியன் சொல்ல அதிர்ந்து பார்த்தார் பாண்டியன். சமையலறையில் நின்று கேட்டு கொண்டிருந்த அபிராமியும் கலக்கம் அடைந்தாள்.
ஏலே செழியா, நீ யார்ட்ட பேசிட்டுருக்கன்னு தெரியுதாலே?”, சரவணன் ஆவேசமாக கேட்க,
ஏன் தெரியாது?. கூலிக்கு கொலை பண்ற ஒரு கொலைகாரங்கிட்ட பேசிட்டுருக்றேன்னு நல்லாவே தெரியும்”, செழியன் சொல்ல அதிர்ச்சியில் உறைநிலை அடைந்தார் பாண்டியன்.
தன் கையால் வாய் மூடி அழுதாள், சமையலறையில் நின்றிருந்த அபிராமி.
நீ ஏன் இப்படி பேசுற?. உன்னை யாரு இப்படி பேச வைக்குறாகன்னு எனக்கு நல்லாவே தெரியும்ல. அந்த தினேஷ் பைய கோள் மூட்டி விட்டுட்டானாக்கு?”, சரவணன் கேட்க பதில் பேசவில்லை செழியன்.
இந்தேரு செழியா, இந்த ஊர்ல நம்ம குடும்பத்து மேல பொறாமையில கொஞ்சம் பையலுக சுத்திட்ருக்றானுக. அவனுக பேச்சையெல்லாம் கேட்டுப்போட்டு நீ ஒங்கப்பாவ எதுர்க்கிறது நல்லாயில்ல, சொல்லிட்டேன் ஆமா”,
சரவணன் சொல்ல விரக்தியாக சிரித்து விட்டு தனதறைக்குள் சென்று கதவடைத்து கொண்டான் செழியன்.
அதிர்ந்து நின்ற பாண்டியனின் தோள் தொட்டு அவரை நிகழுலகத்துக்கு கொண்டு வந்தான் சரவணன்.
நீங்க கவலைப்படாதீகண்ணே. செழியன் மனசுல இருக்கிறது யாருன்னு கண்டுபிடிக்கிறேன். அவ நம்ம குடும்பத்துக்கும், குலத்துக்கும் ஏத்தவளா இல்லன்னா, அவளை அறுத்து ஆத்துல வுட்றது எம்பொறப்பு”, சரவணன் சற்றே ஆவேசக்குரலில் சொன்னான்.
அதுக்கு அவசியம் வராது சரவணா. ஏன்னா செழியன் மனசுல இருக்கிறது யாருன்னு எனக்கு தெரியும்”, பாண்டியன் சொல்ல, காதுகளை கூர்மையாக்கினாள் அபிராமி.
யாருண்ணே அது?”, அதிர்ச்சி நிறைந்த குரலில் கேட்டான் சரவணன்.
வேறாரு?. நம்ம சுவாதிதே”, பாண்டியன் சொல்ல, முகம் மலர்ந்தான் சரவணன்.
ஆத்தீ”, நெஞ்சில் கை வைத்து பெரு மூச்சு விட்டாள் அபிராமி.
நம்ம சுவாதியா?. உங்களுக்கு எப்படிண்ணே தெரியும்?”,
சுவாதியும் செழியனும் ஒண்ணுமண்ணா சுத்துற விஷயம் ஊருக்கே தெரியும், எனக்கு தெரியாதால?”, கேட்டார் பாண்டியன். சிரித்தான் சரவணன்.
இந்தேரு சரவணா, இப்போ அவன் காதல் விவகாரம் முக்கியமில்ல. நேரம் வரும் போது மதிவாணன் மச்சாங்கிட்ட பேசி, கல்யாணத்தை நல்ல விதமா முடிச்சிடலாம்”, பாண்டியன் சொல்லும் போது குறுக்கிட்டான் சரவணன்.
மதிவாணன் ஐயா அவுக பொண்ணை நம்ம செழியனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிப்பாகளா?”, சந்தேகம் தோய்ந்த குரலில் கேட்டான் சரவணன்.
ஏல, என்னல பேச்சு பேசுற?. மதிவாணன் சொந்தத்துல எனக்கு மச்சானாக்கு. அவுகளும் நாமளும் ஒரே இனம்ல. ஒரே சாதி, நம்மள விட்டு கொடுத்துருவாகளா?. நம்ம ஆளுகளுக்காக எதையும் செய்வாக. அவுகளை சந்தேகப்படுறது நம்மள நாமே சந்தேகப்படுற மாதிரி. எப்பாடு பட்டாவது, செழியன் என்னை பத்தி வச்சிருக்கிற கொலைகாரங்குற அபிப்பிராயத்தை மாத்தி போடணும். அவன் என்னை வெறுப்பா பார்க்குறத என்னால தாங்க முடியலல. உள்ளுக்குள்ள என்னமோ பெசையுது”, சொல்லி பாண்டியன் நெஞ்சை அழுத்திப் பிடித்தார்.
யோசித்தான் சரவணன். அழுகையோடு நெற்றியில் அடித்து கொண்டாள் அபிராமி.
தீண்டாமைக்கு எதிர்க்கருத்து கொண்ட கட்சியின் அலுவலகத்தில், கையில் மதுக் கோப்பையுடன் அமர்ந்திருந்த மதிவாணனுக்கு எதிரில், கையில் மது கோப்பையுடன் அமர்ந்திருந்தார் ராஜவேலு.
என்ன சரக்குடா இது?! காரமே இல்லாம இருக்கு", மதிவாணன் போதை மொழியில் கேட்க,
இது நாம அந்த காலத்துல காய்ச்சுன பட்டை சாராயம்மில்லீங்க் மச்சான். ஃபாரீன் ஸ்காட்ச், நம்மளவுக்கு வெள்ளைக்கார பையலுகளுக்கு காரமிருக்காது. இன்னொரு ரவுண்ட் ஊத்துங்க. ஏறும்", என்றபடி கையில் இருந்த கண்ணாடி கோப்பையை வாயில் சரித்தார் ராஜவேலு.
சிறிது நேரம் அமைதியாக இருவரும் போதையில் மூழ்கினர். போதை மேலோங்கியது.
ஏன் மச்சான், இந்த பாண்டியன் பையலுக்கு நீங்க ஓவரா இடம் குடுக்குறீங்களோன்னு தோணுதுங்க", என்று குழறிய மொழியில் ராஜவேலு சொல்ல,
லேய், நம்மள எதிர்த்து நிக்கிற நாய்களை நாம களத்துல இறங்கி அடிக்க முடியுமா?!. நாய்களை இன்னொரு நாயை வச்சிதாம்ல சோலி முடிக்கணும். அப்படி நான் வளக்குற வேட்டை நாய்தே பாண்டியன். அவனுக்கு நம்ம சாதி மேல பக்தி. அந்த பக்தியை வெறியாக்கி நான் என் அரசியல் எதிரிகளை அழிக்க பயன்படுத்திக்கிறேன், அம்புட்டுத்தே”, மதிவாணன் சொன்னார்.
ராஜவேலு கேட்டுக் கொண்டிருந்தார்.
நம்ம கட்சியில புரட்சி செய்ற பையலுவளுக்கு நல்ல மரியாதை இருக்குது. காலணிக்கார பையலுவ எவனாது, பொரட்சி செய்றேன் போராட்டம் பண்றேன்னு ஊருக்குள்ள பேரு வாங்கிப்போட்டான்னு வையி. நம்ம பாடு திண்டாட்டமா போயிருமாக்கு. அந்த சாதி கெட்ட பையலுவ தலைதூக்காம இருக்கணும்ன்னா, பாண்டியன் மாதிரி ஒரு ஆளு நமக்கு வேணுமாக்கு”, என்றபடி மதுவை குடித்து கோழிக்கால் பொறியலை கடித்தார் மதிவாணன்.
யார எங்க வைக்கணும்னு எனக்கும் தெரியும்ல", என்ற படியே அடுத்த மிடறு மதுவை குடித்தார்.
ஆனா,... ஊருக்குள்ள பாண்டியன் இல்லன்னா மதிவாணன் இல்லன்னுல்ல பேசிக்கிறாக", என்று ராஜவேலு சொல்ல, கண்கள் சுருக்கினார் மதிவாணன்.
அது மட்டுமில்லீங்க மச்சா, நம்ம சுவாதிக்கும் அந்த பைய செழியனுக்கும் காதல்ன்னு", என்று ராஜவேலு சொல்லும் போது,
என்னது,... எம்புள்ளைக்கும் அந்த பண்ணைக்கார பையலுக்குமா?! காதலா?!....", பற்களை கடித்தபடி, கேட்டு சட்டென்று ராஜவேலுவின் சட்டைக் காளரை பற்றி பிடித்தார் பாண்டியன்.
விடுங்க மச்சா", சாதாரணமாக சொல்லி மதிவாணன் கையை தட்டிவிட்டார் ராஜவேலு.
மதிவாணனின் விரிந்த விழிகள் சுருங்கவில்லை.
ஊருக்குள்ள அம்புட்டு பையலுகளும் பேசுறானுக. அவனுங்க சட்டையெல்லாம் போய் புடிப்பீகளாக்கு?!. அந்த பாண்டியந்தே உங்க சம்மந்தின்னு பேசாத சனம் ஊருக்குள்ள இல்ல தெரியுமில்ல", சொல்லி விட்டு கண்ணாடியால் செய்யப்பட்ட மதுக் கோப்பையை வாயில் சரித்தார் ராஜவேலு. அதிர்ச்சி நிறைந்த பார்வையுடன் கையில் இருந்த கோப்பையை கீழே வைத்தார் மதிவாணன்.
விதித்த விதிகள் உடைபடுமோ?
வியர்த்து தடுமாறும்
விதி செய்த ஆதிக்க சக்திகள்!!!
விந்தையை என்ன சொல்ல!!!
தொடரும்...
சக்தி மீனா......

Last edited: