• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷26

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
அத்தியாயம் 26

இந்த வேள்வி பூச மட்டும் நடந்தா, கட்டுக்குள்ளார அழுதுட்டுருக்குற சாமியயே, காப்பாத்துன சாமியாயிருப்பேன். வாற தேர்தல்ல எவன் எதுத்தாலும் பெரும்பாலான சனம் எனக்குத்தே ஓட்டு போட்டுருக்கும். எந்திட்டத்தையே கெடுத்துடுட்டான். கேடு கெட்ட பைய”, கார் பயணத்தில், மதிவாணன் எரிச்சலோடு சொன்னார்.

ஆமாங்க் மச்சான், சின்ன சாதில பொறந்த நாய்க்கு இம்புட்டு மெதப்பிருக்கக்கூடாது. ம்ம்ன்னு சொல்லுங்க, அவஞ்சோலிய முடிச்சு வுட்டுர்றேன்”, ராஜவேலு கோபமாக சொன்னார்.

இப்போ வேணாம். சமயம் பாத்து செய்யணும். பாண்டியன் பாத்துக்குவான். நீ ஆருகிட்டயும் முட்டாத்தனமா பேசாமயிரு, அது போதும்”, மதிவாணன் சொல்ல ராஜவேலு அமைதியானார்.

மதிவாணனின் கார் ராஜவேலுவின் வீட்டு வாசலில் நின்றது.

சரிங்க மச்சான், நாளைக்கு மாப்ள வூட்டுக் காரவுகள கூட்டிட்டு நம்ம ஊட்டுக்கு வந்துர்றேன்", காரில் இறங்கிய ராஜவேலு சொல்ல, சரி என்பதாக தலையசைத்தார் மதிவாணன்.கார் கிளம்பியது.

மாமா,.. ஒங்ககிட்ட ஒண்ணு கேக்கட்டுங்களா?", முன்னிருக்கையில் அமர்ந்திருந்த நவீன் கேட்க,

என்னல கேக்க போற?", மதிவாணன் கேட்டார்.

அந்த டீக்கடை கருப்பசாமிய பாத்தா ஏன் எல்லாரும் பயப்படுறீக?",

பயமெல்லா இல்ல,....", இழுத்தார் மதிவாணன்.

அவரு பேச ஆரம்பிச்ச ஓடனே கூட்டம் முச்சூடும் அமைஞ்சிருச்சு. அம்புட்டு ஏன்? நீங்களும், பாண்டியன் சித்தப்பா, ராஜவேலு சித்தப்பாவும் கூட, அப்படியே அமைஞ்சிட்டிகளே. அந்த ஆளென்ன அம்புட்டு பெரிய ஆளா?",

ப்ச், பெரிய ஆளெல்லா இல்ல. அவன் அந்த காலத்துல நடந்த சாதி கலவரத்துல, சாதி ஆளுக ஏழெட்டு பேரை வெட்டி கொன்னுபோட்டு, ஜெயிலுக்கு போனான். அவன் செய்லருந்து வாரதுக்குள்ளார அவம்பொஞ்சாதி செத்து போச்சு. அவனுக்கு ஒரே ஒரு பைய. அவன் நம்மூரு சந்தையில் மாடா ஒழைச்சான். இப்போ நல்லாருக்கான். ஆனா அப்பங்ககூட பேச்சு வார்த்தையில்ல. ஊருக்காக செயிலுக்கு போனவன்னு அந்த சனங்களுக்கு ஒரு மரியாதை, அம்புட்டுத்தேன்...", மதிவாணன் சொல்ல,

அவரு யாரை மாமா கொன்னாரு?!", நவீன் கேட்டான்.

இந்தா,..... அந்த சங்கதியெல்லா இப்போ ரொம்ப அவசியமாக்கு?! ஓ சோலி என்னவோ அதிய மட்டும் பாக்கணும். சொல்லுல, எம்பொண்ணு இன்னைக்கு எங்கெங்கே போனா?!", மதிவாணன் கேட்டார்.

புலியூர் பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை விளக்கி சொன்னான் நவீன்.

அங்க எவனும் என் பேரையும் பாண்டியன் பேரையும் சொல்லிரலியே!!", பயம் நிறைந்த குரலில் கேட்டார் மதிவாணன்.

இல்லீங்க மாமா", என்றான் நவீன்.

நிம்மதி பெருமூச்சு விட்டு காரின் இருக்கையில் சாய்ந்தார் மதிவாணன்.

கடைசியா, சுவாதி பஸ் ஸ்டாப்ல இருந்த ஒரு காய்கறிக்கார பாட்டியை ஸ்கூட்டியில ஏத்திட்டு மேக்கால போனா. நா கெழக்க வந்துட்டேன்", நவீன் சொன்னான்.

ம்ம்ம்ம்ம்ம், அந்த கெழவிக்கு லிஃப்ட் குடுத்துருப்பா", என்றார் மதிவாணன்.




தேனி மேற்கு சந்தையின் வாயிலில் தன் ஸ்கூட்டியை நிறுத்தினாள் சுவாதி. காய்கறி கூடையுடன் பாட்டி இறங்கி கொண்டாள்.

சரிங்க பாட்டி”, என்றவள் தனது ஸ்கூட்டியின் ஆக்ஸிலேட்டரை திருக,

ஆத்தா”, அழைத்தாள் பாட்டி.

என்ன பாட்டி? ஏதாவது வேணுமா?”, சுவாதி கேட்டாள்.

அதில்லம்மா, ஆன்,,..... நீ எதுக்கு தாயி அந்த புள்ளைகள பத்தி விசாரிக்குற?”,

யார பத்தி?”,

அதே டீக்கடையில அந்த கோணங்கி பேரங்கிட்ட பேசிட்டுருந்தியே! அந்த மணிகண்டன் பையனயும் அவம்பொஞ்சாதியையும் பத்தி. அதே”,..... பாட்டி இழுத்தாள்.

நா ஒரு மீடியாக்காரி பாட்டி”,

அப்படின்னா, போலீஸ்ஸா? புதிய பரவ படத்துல வருவாளே! சரோசா தேவி அந்த மாதிரியா”, பாட்டி கேட்க சுவாதி சிரித்தாள்.

இல்ல பாட்டி, இந்த டிவியில செய்தியெல்லாம் வரும்ல! அந்த செய்திய போடுற சேனல்ல வேலை செய்றேன். என் வேலையே செய்தி சேகரிக்கிறதுதா”,

அப்போ, இன்னைக்கும் செய்திக்காகத்தே அங்கிட்டு வந்தியாக்கு?', பாட்டி கேட்டாள்.

ம்ம், ஆமா, ஆனா நா தேடி வந்த தகவல் கெடைக்கல”, சுவாதி உதடு பிதுக்கினாள்.

அதா அன்னைக்கு என்னன்னே நடந்துச்சுன்னு அந்த கோணங்கி பேரன் சொன்னானல்லோ!”, பாட்டி கேட்டாள்.

ம்ம், சொன்னாரு, ஆனா அன்னைக்கு கொலைய செஞ்சது யாருன்னு சொல்லல்லியே”, சுவாதி சொன்னாள்.

பாட்டி பதில் மொழியவில்லை.

நெசமா அந்த கொலைகாரன் யாருன்னு ஒனக்கு தெரியாதா?”, பாட்டி கேட்டாள்.

ம்ம்ஹூம்”, சுவாதி உதடு பிதுக்கினாள்.

தெரிஞ்சுகிட்டு என்ன செய்ய போறவ?”,

அந்த கொலைகாரனுக்கு எதிரா ஆதாரங்களை, சேகரிப்பேன். அவனுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி குடுப்பேன்”,

நீ பொட்டப்புள்ள, ஒன்னால முடியுமா தாயி?”,பாட்டி சந்தேகமாக கேட்டாள்.

நா சேனல் காரி பாட்டி. ஆதாரம் கிடைச்சா, கோர்ட்டுல குடுக்குறதுக்கு முன்னால டிவியில போட்டு ஊட்டுருவேன். அந்த கொலைகார பசங்க தப்பிக்கவே முடியாது”, சுவாதி சொன்னாள்.

பாட்டி யோசனை செய்தாள்.

இம்புட்டு ஏன் கேக்குறீக? ஒங்களுக்கு அந்த கொலைகாரன் யாருன்னு தெரியுமா?”, என்று சுவாதி கேட்டாள்.

ஆ,…. அது எனக்கேப்டி தெரியும்? சும்மா, ஆத்தாமையில கேட்டேன். வேறொண்ணுமில்ல”, பாட்டி சொன்னாள்.

ஓ, சரிங்க் பாட்டி, நா கெளம்புறேன். வேலையிருக்கு”, சுவாதி சொல்ல,

ஒரு நிமிசந்தாய்”,

சுவாதி பாட்டியை பார்த்தாள்.

ஓ அட்ரஸ் குடேன்”,

எதுக்கு?”,சுவாதி கேட்டாள்.

அதூஉ..... சொம்மாதா, நீ டிவியில வேலை செய்யறல்ல! எப்பவாது எதாது ஒதவி தேவைப்பட்டா கேப்பனல்ல?”, அசடு வழிந்தது பாட்டியின் முகத்தில்.

கண்கள் சுருக்கி சந்தேகமாக பார்த்தாள் சுவாதி.

வந்து,..... இந்த கொலைய பத்தி எனக்கு எதாவது வெவரந்தெரிஞ்சாலும் சொல்லுவேனல்ல?”,

அப்போ ஒங்களுக்கு இந்த கொலையை பத்தி தெரியுமா?”, என்று சுவாதி ஆர்வமாக கேட்டாள்.

இல்லல்ல, இதுவரை எதுந்தெரியாது. ஒரு பொட்டப்புள்ள நீ, நீயே அந்த கொலைகார பையலுகள பிடிக்கணும்ன்னு மெனெக்கெடுற? அதேன்,... என்னால முடிஞ்ச ஒதவிய செய்யலாமுண்டு தோணுது. ஏதாது துப்பு தெரிஞ்சா சொல்லுவநல்ல?", பாட்டி சொல்ல, சிரித்த படியே தனது விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்து கொடுத்தாள் சுவாதி.

இதுல என் ஃபோன் நம்பர், வீட்டு அட்ரஸ், சேனல் அட்ரஸ் எல்லாமே இருக்கு. நீங்க எப்போ வேண்ணா, என்ன ஒதவி வேண்ணாலும் கேக்கலாம்", என்று சொன்னாள் சுவாதி. பாட்டி சிரித்தாள்.

தூரத்தில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டியையும், தன் கையில் இருந்த விசிட்டிங் கார்டையும் பார்த்து பெருமூச்சு விட்ட பாட்டி, சந்தைக்குள் வேகமாக நடந்தாள்.





மைக்ரோசாஃப்ட் வார்டு சாஃப்ட்வேரில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான் தினேஷ். மடிக்கணினி அமர்ந்திருந்த மேசையின் மீது, லட்சுமி கொண்டு வைத்திருந்த தேநீர் கோப்பையில் ஆவி பறந்தது.

தேங்க்ஸ் மா", என்றவன் எடுத்து குடித்தான்.

தினேஷ்",

என்னம்மா", மடிக்கணினி மீது அவனின் பார்வை இருந்தது..

காயத்ரி ரெண்டு நாளா வீட்டு பக்கமே வர்ல", லட்சுமி சொல்ல, அவன் நிமிர்ந்து பார்த்து புருவங்கள் சுருக்கினான்.

வீட்டுக்கே வர்லன்னா, மோனி?", கேள்வியாக கேட்டான்.

மோனியும் தா வர்ல", அந்த குட்டி அறையின் கதவருகே நின்ற கமலி சோகமான குரலில் சொன்னாள்.

தினேஷ் சிந்தித்தான்.

ஆஃபீஸ்லதா என்னைய அவாய்ட் பண்றான்னா, வீட்டுக்கு வர்றதுக்கு என்ன?", தனக்குள் சத்தமாகவே புலம்பினான்.

அப்போ, காயத்ரி ஆஃபீஸ்க்கு வர்றாங்களா?!, மோனிய யார்கிட்ட விட்டுட்டு வர்றாங்க?", கமலி கேட்டாள்.

காயத்ரி கொஞ்சம் வெலகி நிக்கிறதும் சரிதான் தினேசு. நாமளும் வெலகியே இருந்துருவோம்", லட்சுமி சொல்ல, தாயை பார்த்தான் தினேஷ்.

அந்த கொழந்த ஒன்னைய அப்பான்னு கூப்டறதும் சரியில்லையல்ல?!", லட்சுமி சொல்ல,

பூரீலம்மா, அவ கொழந்த, அவளுக்கென்ன தெரியுமா?! எம்மேல இருக்கிற பாசத்துல என்னைய அப்பான்னு கூப்டுறா. இதுல தப்பென்ன இருக்கு?", தினேஷ் கபடின்றி கேட்டான்.

என்னய்யா பேசுற?! நம்ம ஊரு பொண்ணுன்னு, இருக்குறதுக்கு வூடு புடிச்சு குடுக்கலாம். கூட மாட ஒத்தாசி செய்யலாம். அதுக்காக அவ புள்ளைக்கு அப்பனாக முடியுமா?", லட்சுமி சொல்லில் வெறுப்பு இருந்தது.

ம்மா, வேணாம், ஒங்க பேச்சு சரியில்ல, எனக்கு புடிக்கல", தினேஷ் குரலில் கோபம் கலந்தது.

காயத்ரியும் இப்படியே இருந்துற முடியாதல்ல தினேசு? அவளுக்கு மறுவடியு ஒரு வாழ்க்கை, கல்யாணம்னு, ஆவுமல்ல. அவளுக்கு வர்றவன் இத தப்பா பாத்தாலும், சங்கடந்தானா?!!", லட்சுமி கனிவான குரலில் மகனுக்கு தன் எண்ணத்தை புரிய வைக்க முயன்றாள்.

இயற்கையா மனுஷனுக்கு வர்ற மனுஷத்தன்மைய கூட புரிஞ்சிக்க தெரியாத ஒரு முட்டாள, காயத்ரி எப்போவும் தனக்கு துணையா தேர்ந்தெடுக்க மாட்டா. நீங்களா ஏதாது பேசி சங்கடத்தை உண்டாக்கி வுட்ராதீகமா", தினேஷ் சொன்னான்.

அதில்ல சாமி, காலம் இப்படியே போயிராதல்ல!! நாளைக்கே ஒனக்கு ஒரு கல்யாணமாகி, ஒனக்குன்னு ஒருத்தி வர்றப்ப, மோனி இப்படி கூப்டறது நல்லாயிருக்காதல்ல?!", லட்சுமி சொல்ல,

ஆமாண்ணே, அம்மா சொல்றதுல அர்த்தமிருக்குது", கமலி சொன்னாள்.

நீயுமாடி? அவ கொழந்த. இங்கருக்குற சிஸ்டமும், சடங்கும் அவளுக்கென்ன தெரியுமா? நாம அவளுக்கென்ன குடுக்குறோமோ, அதை அவ திருப்பி குடுப்பா. அவ முன்னாடி நாம அழுதா அவ அழவா. சிரிச்சா சிரிப்பா. அதுதா அவளுக்கு தெரியும். நா அவகிட்ட அன்பா இருந்தேன். ஒரு கொழந்தைக்கு எப்படி அன்பை வெளிக்காட்ட தெரியுமோ அப்படி அவ என்கிட்ட அன்பு காட்டுறா. அது ஒருத்தர் பார்வைக்கு தப்பா தெரியுதுன்னா அவங்கலாம் மனுஷ பிறவியே இல்ல. அப்படிப்பட்டவகள பத்தி பேச எதுவுமில்ல", தினேஷ் சொல்ல இருவரிடமும் பதில் பேச்சு இல்லை.

சட்டென எழுந்தவன் சட்டையை எடுத்து அணிந்த படி,

நா காயத்ரிய பாத்துட்டு வர்றேன்", என்றான். அவன் வாசல் நோக்கி நகர,

தனியாவா போற?", லட்சுமி அர்த்தமாக கேட்டாள்.

நானென்ன யுத்தத்துக்கா போறேன்?", கோபமான குரலில் கேட்டு விட்டு, வெளியே சென்ற தினேஷ், ஹாலில் அமர்ந்திருந்த தகப்பனை பார்த்து நின்றான்.

பாவொய்யா அந்த புள்ள!! கொழம்பி சங்கடப்பட்டுகிட்டு கெடக்கும். நீ போயி ஒரேட்டு பாத்துட்டு வா. நா பொறவால போயி பாக்குறேன்", தினேஷின் தகப்பனார் தேவேந்திரன் சொல்ல, சிரித்தான் தினேஷ்.

தன் வீட்டிலிருந்து நான்கு வீடுகளுக்கு அடுத்து ஐந்தாவதாக இருக்கும் வீட்டு வாசலுக்கு சென்றான். பள்ளி சீருடையில் நடந்து வந்த சிறுவன் ஒருவன்,

பை தினேஷ் அங்கிள்", என்று சொல்லி அவனை கடந்து செல்ல, தினேஷும் கையசைத்து சிரித்தான்.

பிறகு அவ்வீட்டின் கதவை தட்டினான் தினேஷ்.

காயத்ரி கதவை திறந்தாள். அதிர்ந்து நின்றாள்.

சிறிய வீட்டின் குட்டி வரவேற்பறையில் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மோனி,

ப்பாஆ", சொல்லி சிரித்தாள். தினேஷ் சிரித்தான். காயத்ரி பரிதவித்தாள்.




ஓங்கிட்ட எம்புட்டு படிச்சு படிச்சு சொன்னேன். அவள கவனிக்கிறத விட வேறென்ன புடுங்குற வேலைல ஒனக்கு?", செழியன் கோபமாக கேட்க, பதில் சொல்ல இயலாமல் திரு திருவென விழித்த படி நின்றான் சாரதி.

மலைய முழுங்குன மாதிரி நிக்கிற? அவளுக்கு உண்மை தெரிஞ்சா,.... என்னாவும்?! பாவம்ல அவ",

சொம்மா என்னையே குத்தம் சொல்லாதல. சுவாதி இன்னைக்கு புலியூர்பட்டிக்கு போற விஷயமே, இப்போ ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி செம்பன் சார் சொல்லிதா எனக்கே தெரியும். நானென்னவோ, தெரிஞ்சுகிட்டே கண்டுக்காம வுட்ட மாதிரி பேசுற", சாரதி கடுப்பாக சொன்னான்.

செம்பன் சார் சொன்னாரா? அவ அங்க போற விஷயம் அவருக்கு தெரியும். உனக்கு தெரியாதுன்னா,...... ", செழியன் நடக்கும் நிகழ்வுகளையும், யதார்த்தத்தையும் கூட்டி கழித்து கணக்கு போட்டான்.

ஏதோ கண்டு பிடித்தவன் போல், வேகமாக நடந்தான். அவனின் பின்னால் நடந்தான் சாரதி.

செம்பனின் அலுவலக அறையை படாரென்று திறந்தவன் வேகமாக உள்ளே சென்றான்.

செம்பனுக்கு எதிரில் அமர்ந்திருந்த உதவி ஆசிரியர், அதிர்ந்து எழுந்தார்.

தேவையில்லாம சுவாதிய ஏன் இந்த கேஸ்க்குள்ள இழுத்து விட்டீங்க?", செழியன் சத்தமாக கேட்டான்.

சலனம் சிறிதும் இல்லாமல் அமர்ந்திருந்த செம்பன், கண் காட்ட உதவி ஆசிரியர் சென்றார்.

எந்த கேஸ்? யார இழுத்து விட்டேன்? புரியிற மாதிரி பேசி செழியா", மிகவும் இயல்பாக சொன்னார் செம்பன்.

நல்லா ஆக்ட் பண்றீங்க சார். ஆனா நீங்க ஆக்ட் பண்றீங்கன்னு தெளிவா தெரியுது", செழியன் சொன்னான். செம்பன் சிரித்தார்.

மணிகண்டனை கொலை செஞ்சது யார்னு ஊருக்கே தெரிஞ்சுருக்கு. நீங்க ஒரு மீடியா எடிட்டர். ஒங்களுக்கு தெரியாம இருக்க வாய்ப்பேயில்ல", செழியன் சொல்ல,

ம்ம், நீ கண்டுபிடிச்சிருவன்னு தெரியும். ஆனா இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சிருவன்னு எக்ஸ்பெக்ட் பண்ணல", செம்பன் சொன்னார்.

செழியன் கோபமாக பார்த்தான். சாரதி புரியாமல் பார்த்தான். செம்பன் இயல்பாக பார்த்தார்.

ஏன் சார் இப்டி பண்றீங்க? அப்பனுக்கு எதிரா பொண்ணையே களம் இறக்கி வேடிக்கை பாக்குறீங்களே. இதுதான் ஒங்க ஊடகத் தொழில் தர்மமா?", செழியன் குரல் உயர்த்தினான்.


இல்ல தொழில் அறம், இது ஜர்னலிசம் செழியன்., பொய் கலப்பில்லாத உண்மை செய்திகளை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்குறது தா, ஒரு ஜர்னலிஸ்டோட கடமை. இன்னைக்கு தொழில் அறமுமில்லாம, அறமே இல்லாம நிறைய சேனல்ஸ் வேலை செய்யுது. இன்னும் சில சேனல்கள் நமக்கெதுக்கு வம்புன்னு, பிசினஸ்ஸ மட்டுமே குறிக்கோளா வச்சு இயங்கிட்டுருக்கு. அப்டிப்பட்ட சேனல்களுக்கு மத்தியில, எத்தனையோ எதிர்ப்புகளுக்கு நடுவுல, நம்ம சேனல் நேர்மையா இயங்கிட்டுருக்கு. கண்டிப்பா, இது தெரிஞ்சுதா சுவாதி நம்ம சேனல்ல சேர்ந்துருக்கணும். நீயும் சரி, சுவாதியும் சரி ரொம்ப ஸ்டிரைட் ஃபார்வார்டு. ஆனா, ரெண்டு பேருக்கும் ஒங்க குடும்ப பின்புலமே முழுசா தெரியலங்குறது தா சோகம்", செம்பன் சொல்ல கோபமாக நின்றான் செழியன்.

நீங்க வேலைக்கு சேர்ந்த ரெண்டாவது நாள், சுவாதியோட அப்பா பிரசிடன்ட் மதிவாணனும், அவரோட வலது கை, மிஸ்டர் பாண்டியனும் என்னை மெரட்டுனப்பவே, ஒங்க ரெண்டு பேர் பத்தி முழுசா புரிஞ்சுகிட்டேன்", செம்பனின் சொல்லில் அதிர்ந்து பார்த்தான் செழியன்.

மெரட்டுனாரா?", சாரதி கேட்டான்.

ஆமா, சுவாதி இந்த வேலை செய்றது மதிவாணனுக்கு ஆரம்பத்துலருந்தே பிடிக்கல",

என்பொண்ணு ரொம்ப ஆசைப்படுறதால தா அவளை இந்த வேலைக்கு அனுப்பிருக்கேன். இது ஜஸ்ட் டெம்பரரி தா. சுவாதி என் வருங்கால அரசியல் வாரிசு. இப்போதைக்கு என்னை பத்தி எதுவும் சுவாதிக்கு தெரியக்கூடாது. என்னை பத்தின்னா, என் அரசியலுக்கு பின்னால இருக்கிற என் பக்கத்த பத்தி எதுவும் தெரியக்கூடாது. ஒருவேளை தெரிஞ்சா, இந்த நாட்டுல ஒரு சின்ன புள்ளையா கூட இல்லாத உன் சேனல், தடந்தெரியாம போயிரும்"ன்னு என்கிட்ட மதிவாணன் சொன்னாரு. இதே மேட்டர வேற விதமா, ரொம்ப நாசூக்கா, ஹெட் பிராஞ்சுக்கு கால் பண்ணி நம்ம பாஸ்கிட்டயும் சொல்லிருக்காரு. , அவமானமாக உணர்ந்தான் செழியன்.

அவங்க சொல்றதுல ஒரு விசயம் உண்மை. நம்ம சேனல் ரொம்ப சின்ன சேனல். மதிவாணன் மாதிரி ஒரு பணக்கார அரசியல்வாதி நெனைச்சா, இதை தடந்தறியாம அழிச்சிர முடியும்", செம்பன் சொன்னார்.

செழியன் பேச இயலாமல் நின்றான்.

மதிவாணனும், பாண்டியனும் ரொம்ப டேலன்டான ஆளுங்க. பெத்த புள்ளைங்களோட ஐடியாலஜி தங்களுக்கு எதிரானதுன்னு சரியா கணிச்சு, அவங்க செய்ற அயோக்கியத்தனத்தை ஒங்ககிட்டருந்து சாமர்த்தியமா மறைச்சிருக்காங்க. இதுக்காக கண்டிப்பா அவங்க ஒங்கள சுத்தியிருக்குற எல்லாரையும் மெரட்டிருக்கணும். ஒங்க ஃப்ரெண்ட்ஸ்ஸ கூட”, சொல்லி சாரதியை பார்த்தார் செம்பன்.

செழியனும் சாரதியை பார்த்தான். சாரதி சங்கடமாக பார்க்க, சட்டென சாரதியின் சட்டைக் காளரை பிடித்தான்.

ஒனக்குந்தெரியுமால?”,

இந்த ஜில்லா முழுக்க தெரியும். இவனுக்கு தெரியாதா? அவன விடு”, செம்பன் சொன்னார்.

அப்போ எங்கப்பன் ஒன்னையும் மெரட்டுனாகளா?”, செழியனின் கை இன்னும் சட்டைக் கல்லிலிருந்து விலகவில்லை.

என்னையில்ல, எங்கப்பனை மெரட்டுனாக. நாம ஆறா வவுப்பு படிக்கும் போது”, சாரதி சொன்னான். செழியனின் கைகள் சட்டைக்காரரிலிருந்து விலகியது.

சுவாதி, செழியன் ரெண்டு பேரையும் சுத்தி நடக்குற கண்ணாமூச்சு ஆட்டத்த என்னால தெளிவா புரிஞ்சிக்க முடிஞ்சது. ஆனா, ஒங்க ரெண்டு பேரோட நேர்மையை மதிவாணனோட அரசியலுக்கு பலி குடுக்க நா விரும்பல. ஆஃப்கோர்ஸ் நம்ம பாஸ்ஸும் விரும்பல. ஒங்களுக்கு உண்மை தெரியப்படுத்துறதுக்கான நேரத்துக்காக காத்துட்டுருந்தோம். ஆனா நாங்க எந்த முயற்சியும் செய்யாமலே, தினேஷ் மூலமா ஒனக்கு மதிவாணன் பத்தி தெரிய வந்துச்சு. நீ சுவாதிகிட்ட சொல்லிருவன்னு நா எதிர்பார்த்தேன். நீ சொல்லல", செழியன்.

எங்கப்பா கொலைகாரன்னு தெரிஞ்ச அந்த நொடி, செத்துரலாமான்னு கூட தோணுச்சு சார். எனக்கு வந்த, அந்த வலி சுவாதிக்கும் வர வேண்டாம்னு தா சொல்லல", செழியன் சொல்ல,

ம்ம்ம்ம்ம்ம்ம் புரிஞ்சிகிட்டேன், ஆனா நீ நினைக்கிறது தப்பு", செழியன் அமைதியாக நின்றான்.

நீ சுயநலமா யோசிக்கிற செழியா”, செம்பன் சொல்ல,

ஆமா சார் நா சுயநலவாதிதா”, சொன்னான் செழியன்.

ஒரு சுவாதியும் ஒரு செழியனும் மட்டும் எதுக்குறதால இவனுங்க திருந்திர போறதில்ல. இங்க எவன் உத்தமன்? கீழ கெடக்குறவன நசுக்குறதால மேல இருக்குறவன கொடுமைக்காரன்னு சொல்றோம். கீழ கெடந்து அடிச்சு புடிச்சு மேல வர்றவன் மட்டும் என்ன செய்றான்? அதிகார வர்க்கத்தோட சேந்துட்டு தங்கக்கூட கீழ கெடந்தவனுக்கே குழி வெட்டுறான். காலங்காலமா, காலுக்கு கீழயே கெடக்குறவன் கூட வீட்லருக்குற பொண்டாட்டிய அடிமையா நடத்துறான். பொறந்தது பொட்டப்புள்ளன்னு தெரிஞ்சா, களிப்பால ஊத்தி கொல்றான், அதையும் மீறி அவ வளந்துட்டா கல்யாணங்குற பேர்ல அடக்கி வைக்கிறான்”,செழியன் சொல்லிக் கொண்டே போக,

ஏல, ஒனக்கு பைத்தியம் புடிச்சிருச்சால? கல்யாணங்குறது புனிதமுல. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது அந்த அப்பனோட கடமைல”, சாரதி சொன்னான்.

ஒரு பொண்ணு மனசார விரும்புறவனோட அவளுக்கு கல்யாணம் நடத்துறதுதா ஒரு அப்பனோட கடமை. இங்க கல்யாணம்ன்னா எப்படில இருக்கு? முன்ன பின்ன தெரியாத ஒருத்தனுக்கு அந்த பொண்ணை புணர்றதுக்கான உரிமையை குடுக்குறததானல கல்யாணம்னு வச்சிருக்கானுங்க. அந்த கல்யாணம் எப்படில புனிதமானதாகும்?”, செழியன் ஆவேசமாக கேட்க, அதிர்ந்து எச்சில் விழுங்கினான் சாரதி.

இங்க எதுவும் மாறாது சார், எவனும் மாற மாட்டான். இவனுங்கள மாத்தணும்னு யோசிச்சு நா என் வாழ்க்கைய எழக்க விரும்பல. என் சுவாதியையும் எழ விரும்பல. அவள இந்த கேஸ்லருந்து ரிலீஸ் பண்ணி விடுங்க”, செழியன் செம்பனை பார்த்து சொன்னான்.

முடியாது செழியா சொன்னார்”, செம்பன்.

முடியும் சார், என்னால முடியும். கடைசி வரைக்கும் சுவாதிக்கு எந்த உண்மையும் தெரியாம பாத்துக்க என்னால முடியும்”, சொன்ன செழியன் அறையை விட்டு வெளியேற எத்தனித்தான்.

அதுக்கு நீ மெனக்கேட வேண்டியதில்ல செழியா”, செம்பன் சொல்ல நின்று திரும்பினான் செழியன்.

அந்த வேலைய மதிவாணன் செஞ்சுட்டுருக்காரு”, சொன்னார் செம்பன்.

செழியன் சாரதி இருவரும் அதிர்ந்து பார்த்தனர்.

நீ சாரதிய வச்சு, சுவாதிய ஃபாலோ பண்ண. மதிவாணன் நவீன வச்சு, அவள ஃபாலோ பண்ணிட்டுருக்காரு”, செம்பன் சொல்ல உறைந்து நின்றான் செழியன்.

புரீல சார், மதிவாணன் ஏன் சுவாதிய ஆளு வச்சு வேவு பாக்கணும். ஒங்கள மெரட்டி சுவாதிய இந்த கேஸ்ல தலையிடாம பண்ணிடலாமே?”, சாரதி சந்தேகத்துடன் கேட்டான்.

மெரட்டுனாரு”, செம்பன் சொன்னார்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஆனா நா என்ன பண்ண முடியும்? சுவாதி அவளே இஷ்டப்பட்டு இந்த கேஸ்ஸ அனலைஸ் பண்ணிட்டுருக்கா. நா அவள கட்டாயப்படுத்தல, இது அவளுக்கு சேனல் குடுத்த வேலையில்ல”, செம்பன் சொல்ல,

அப்படித்தா மதிவாணன்கிட்ட சொன்னீங்களா?”, சாரதி கேட்டான்.

ஆமென்று தலையசைத்து சிரித்தார் செம்பன்.

பட் சேனல் சுவாதிக்கு சப்போர்ட் பண்ணிட்டுருக்கு”, செழியன் சொன்னான்.

ஆமா பண்ணும், ஏன்னா சுவாதி எங்க சேனலோட எக்ஸ்பீரியன்ஸ்டு ஆண்ட் குட் ஸ்டாஃப்”, மிகவும் தண்மையாக சொன்னார் செம்பன்.

இவ்ளோ, எதிர்ப்பை மீறி ஒங்களால சுவாதிக்கு உண்மைய தெரிய வைக்க முடியாது?”,செழியன் சொன்னான்.

ஏன் முடியாது? நீ உண்மைய தெரிஞ்சிக்கல!?”, செம்பன் கேட்டார். செழியன் அதிர்ந்தான்.

எத்தனை பேர் பொத்தி வச்சாலும், நா இங்கதா இருக்கேன்னு சத்தம் போட்டு, நெருப்பா வெடிச்சு வர்ற ஆற்றல் உண்மைக்குண்டு”, செம்பன் சொன்னார்.

வாயடைத்து போனாலும் தன்னிலை விளக்கம் சொல்ல நினைத்தான் செழியன்.

நாங்கலாம் புரட்சி பண்ற போராளி இல்ல சார். சாமான்ய மனுஷங்க”, செழியன் தாழ்வான குரலில் சொன்னான்.

நல்ல ஜர்னலிஸ்டாகணும்னு முடிவு பண்ணப்போதா சுவாதி போராளியானா. சந்த்யாவ கட்டிக்கணும்னு எப்போ முடிவு பண்ணியோ, அப்போவே நீ போராளியாயிட்ட!!!”, சொல்லி சிரித்தார் செம்பன்.

அதிர்ந்து உறைந்து நின்றான் செழியன்...



மனித உணர்வை
உயர்வென கொண்டவன் எவனோ!!
மன உணர்வோடு
சமரசம் பேசாதவன் எவனோ!!
அவனே போராளி!!

சக்தி மீனா,.........
 
  • Like
Reactions: Maheswari

vinodha mohan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 29, 2023
29
20
3
Plano , tx
செல்வாக்கு எங்கெல்லாமோ பாயுது.....
இவ்வளவு சூட்சுமம் செய்து பிள்ளைகளிடமே உண்மையை மறைத்தவர்கள்... நிச்சயம் நாட்டிற்கு கேடானவர்கள்....

சாமிய இவரு காப்பாத்தி பேரு எடுக்க போறாராமா!!!!
மகள் கிட்ட உண்மைய மறைக்க வழி தேடுறாங்க...‌‌
இவங்க சாமிய காப்பாத்துறாங்களா!!!
எனக்கு ஒரு‌ சந்தேகம்...

உனக்கு சாமி நம்பிக்கை இருக்கு... யாகம் வளர்த்து சாமிய உன் பக்கம் இழுக்குற... Ok...
அதே சாமி‌‌ அழுகுதுன்னு கதை கட்டுறியே!!!
அப்போ சாமிக்கு துரோகம் பன்றன்னு சாமி‌ உன்னை எலெக்ஷன்ல கவிழ்த்து விட்றாதா!!!!
உனக்கு வேணும்னா சாமிய நம்பி யாகம் பண்ணுவ... தேவைப்பட்டா சாமிக்கே நீ வரம் கொடுக்குறவனா‌ மாறிக்குவ...
போடா‌ லூசுப் பயலே....




❤️❤️❤️❤️ சூப்பர் மீனா!!!!!! 👌👌👌👌
 

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
செல்வாக்கு எங்கெல்லாமோ பாயுது.....
இவ்வளவு சூட்சுமம் செய்து பிள்ளைகளிடமே உண்மையை மறைத்தவர்கள்... நிச்சயம் நாட்டிற்கு கேடானவர்கள்....

சாமிய இவரு காப்பாத்தி பேரு எடுக்க போறாராமா!!!!
மகள் கிட்ட உண்மைய மறைக்க வழி தேடுறாங்க...‌‌
இவங்க சாமிய காப்பாத்துறாங்களா!!!
எனக்கு ஒரு‌ சந்தேகம்...

உனக்கு சாமி நம்பிக்கை இருக்கு... யாகம் வளர்த்து சாமிய உன் பக்கம் இழுக்குற... Ok...
அதே சாமி‌‌ அழுகுதுன்னு கதை கட்டுறியே!!!
அப்போ சாமிக்கு துரோகம் பன்றன்னு சாமி‌ உன்னை எலெக்ஷன்ல கவிழ்த்து விட்றாதா!!!!
உனக்கு வேணும்னா சாமிய நம்பி யாகம் பண்ணுவ... தேவைப்பட்டா சாமிக்கே நீ வரம் கொடுக்குறவனா‌ மாறிக்குவ...
போடா‌ லூசுப் பயலே....




❤️❤️❤️❤️ சூப்பர் மீனா!!!!!! 👌👌👌👌
கடைசியாக சொன்ன மூணு வார்த்தை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு வினோ..

"போடா லூசு பையலே" ஹா ஹா நா நல்லா சிரிச்சிட்டேன். Thank you so much di friendu🤝🏻🤝🏻
 
  • Like
Reactions: vinodha mohan