• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 03

mohanaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 24, 2025
4
4
3
23
Salem
காலை உணவை முடித்து விட்டு குடும்பத்தார்களிடம் சொல்லிவிட்டு ராஜா தாரணி இருவரும் காரின் பின்னிருக்கையில் அமர்ந்தனர்… லட்கேஜை எடுத்து வைத்துவிட்டு வந்து காரை ஸ்டார்ட் செய்து இயக்க ஆரம்பித்தார் டிரைவர்…
தாரணி கணவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்… அவன் ஒருவார்த்தை சொன்னதும் நால்வரும் அடங்கியதை நினைத்து பார்த்தவழுக்கு தானும் ஆண்மகனாக பிறந்து இருக்கலாம் என்ற ஆசை உருவானது…
"தேவி"..
"ஆங் மாமா"…
"என்ன அப்படி பாக்குற?" என்று ACP பட்டத்திற்கு சொந்தக்காரன் சாதுவாக சன்னமான குரலில் கேட்டான்…
"ஒண்ணுமில்ல மாமா"…
"அத்தை தனியா கூட்டிட்டு போனாங்கல்ல… என்ன சொன்னாங்க" என்று அவளின் முகத்தை கூர்ந்து கவனித்தவாரு கேட்டான் ராஜா…
தாரணியின் முகம் விரக்தியாக மாறி பின் இயல்பு நிலைக்கு திரும்பியது…
"தாரணி உன்னைத்தான் கேட்கிறேன்?... பதில் சொல்லு"…
அவன் குரலை உயர்த்தி பேசியதும் திடுக்கிட்டு அவனை பார்த்தாள் பாவபட்டவள்…
'ப்ச்!... இதென்னடா இவ அமைதியாகவே இருந்து கொல்லுறா?... இப்படி அமைதியா இருந்தா எப்படி சென்னையிலை பொழைக்கிறது' என்று மனதிலேயே முனகியவன் ஆழ்ந்து பெருமூச்சு விட்டு சீட்டில் தலையை சாய்த்துக்கொண்டான்…
தாரணி அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்… அவனை பார்க்க பார்க்க உள்ளுக்குள் சற்று உதறல் எடுத்தாலும் அவன் மென்மையாக பேசிய விதம் அவளுக்கு பிடித்தே இருந்தது… அவனின் மென்மையை மட்டுமே பார்த்தவள் வன்மையை கண்டால் கிணத்தில் குதித்து இறந்துவிடுவால் போல!...
மாலை ஆறுமணிக்கு சென்னைக்கு வந்து சேர்ந்தனர்… கார் காவலர் குடியிருப்புக்குள் நுழைந்தது… தாரணி ராஜா இருவரும் இறங்கிக்கொண்டனர்…
"தேங்க்ஸ் அண்ணா!... இனி நான் பாத்துக்கிறேன்" என்ற ராஜா டிரைவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு லட்கேஜை எடுத்துக்கொண்டு வீட்டின் முன்பு வந்து நின்றான்… அவனின் பின்னாலேயே வந்தாள் தாரணி…
"தேவி என் பேண்ட் பாக்கெட்- ல சாவியிருக்கும் அதை எடு" என்று ராஜா சொன்னதும் திக்கென்று அவனை பார்த்தாள் தாரணி…
"என்ன சொன்னாலும் பார்வையாலேயே பதிலை சொல்லாத… உன்னால எடுக்க முடியலன்னா இதை பிடி நானே எடுத்து டோரை ஓப்பன் பண்ணுறேன்" என்று அதிகாரமான குரலில் கையிலிருந்த லட்கேஜை கண்ணால் காட்டியவாறு கூறியவனை எச்சில் விழுங்கியபடி பார்த்த தாரணி அவனின் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு சாவியை தேடினாள்…
அவளின் தொடுதல் அவனை தொடமுடியாத வானத்தின் தூரத்தில் பறக்க வைத்தது… அவளின் வாசம் வானவிலை போல ரசிக்க வைக்க ஆழ்ந்து சுவாசித்தான்… தேக வாசத்துடன் கலந்த மஞ்சள் மல்லிப்பூவின் வாசம் அவனை அவளின் பக்கம் இழுத்தது… இருக்கும் இடம் கருதி உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டவன் தாரணியின் எதிர்காலத்தை நினைவுக்கு கூட்டி வந்தான் கடனாக…
சாவியை எடுத்தாள் தாரணி…
"சொன்னாத்தான் அடுத்ததை செய்வியா?... அதான் சாவியை எடுத்துட்டல்ல கதவை திற தேவி" என்று எரிச்சலாக கூறினான் ராஜா… பக்கத்தில் பால்கோவை வைத்துக்கொண்டு சுவைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தான் அந்த எரிச்சல்…
சாவியை போட்டு பூட்டை திறந்தாள் தாரணி… காலால் கதவை தள்ளியவன் மனைவியுடன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தான்…
கிச்சன் ஹால் பெட் ரூம் என மினி சைஸ் வீடுதான்… இருவரும் வாழ்வதற்கு இந்த வீடு பெரியது தான்… ராஜாவுக்கு இந்த வீடு பழக்கப்பட்டது… கிட்டத்தட்ட நான்கு வருடமாக இந்த வீட்டில் தான் இருக்கின்றான்…
தாரணி மன அமைதிக்காக பின் வாசல் வழியாக வெளியில் வந்து இயற்கையான சூழலை ரசித்தவளுக்கு மனம் லேசானதைப்போல இருந்தது… வீட்டை விட்டே வெளியில் வராதவளுக்கு இயற்க்கை எழில் கொஞ்சிய இந்த வீட்டை வெகுவாய் பிடித்துவிட்டது… சின்ன சின்ன பூச்செடிகள் தொட்டியில் பூத்துக்குலுங்குவதை பார்த்து அவளின் மனம் இறக்கையில்லாமல் பறந்தது….
பறவையின் இறக்கையை அறுத்து நடக்கவிட்டது போல தாரணியின் ஆசைக்கு அனைத்து விதத்திலும் முட்டு கட்டை போட்டு வைத்திருந்தார் நந்தினி… எதனால் ராஜாவை அவள் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டால் என அவளுக்கே காரணம் தெரியவில்லை என்றாலும் இந்தநொடி அவனை திருமணம் செய்தது சரியே என்பதை நினைத்து மனதிலிருந்த குழம்பத்திற்கு மந்திரத்தை போட்டு அனுப்பி வைத்தவள் சிரித்துக்கொண்டாள்…
வீட்டிலிருந்து எடுத்து வந்த அனைத்தையும் அறைக்குள் வைத்து விட்டு பின் வாசலுக்கு வந்த ராஜா மனைவியின் முகம் மந்தகாச புன்னகையுடன் இருப்பதை பார்த்து முகம் மலர்ந்தான்… அவளை பார்க்கும் போதே அவனின் மனதில் ஒரு அமைதி குடிக்கொண்டது…
அதிர்ந்து கூட பேசத்தெரியாதவளை ஆழமாக ஆண்டாண்டு காலமாக காதலித்தான் காவல்காரன்... அவளின் பின்னழகை பார்த்தே பித்தனாகிப்போனான் ACP… அவள் காதில் நாட்டினமாடும் கொடை ஜிமிக்கி கூட அவனிடம் ஆயிரம் கதைகளை சொன்னது… அங்குலம் அங்குலமாக காதல் மனைவியை காரசாரமாக ரசித்தான் காதலன் அவளின் காவலன்…
அவள் அணிந்திருந்த மயில் பச்சை கலர் புடவைக்கூட அவளை மங்களகரமான மயிலைப்போல காட்சிப்படுத்தியது…
'எந்த ஊர்ல- டா மயில் மங்களகரமான மஞ்சக்கியித்தோட சுத்துது… ஏண்டா போலீஸ் உன் அலும்பு தாங்கலடா' என்று காதல் மனம் காரித்துப்பியதை துடைத்து போட்டவன் துணைவியைத்தான் துகளுறிக்கும் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தான்…
ஏதோ உந்துதலில் திரும்பிய தாரணி கணவனை பார்த்து தயக்கமாக கையை பிசைந்தாள்…
'கையில கோதுமை மாவை வச்சிருப்பா போல… அப்பப்ப அப்படி போட்டு பிசையிரா' என்று மைன்ட் வாய்சில் பேசியவன் மாமரத்தில் சாய்ந்தபடியே மனைவியை மாங்காய் சாப்பிட வைக்கும் அளவிற்கு மோகப்பார்வை பார்த்தான்…
அவனின் பார்வை வீரியத்தை தாங்கிக்கொள்ள முடியாத அவனின் தாரகையோ தரையை பார்த்து தலை குனிந்து நின்றாள்..
"தேவி"…
"சொல்லுங்க மாமா" என்றவள் சத்தியமாக அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை…
"தேவி என்னை பாரு"…
மெதுவாக தலையை நிமிர்த்தி அவனை பார்த்தாள் பாதகத்தி… அவள் ஸ்லோ மோஷனில் நிமிர்ந்து பார்த்ததும் நிற்க முடியாமல் தடுமாறிய போலீஸ் காரன் மனைவியின் அழகில் அவளிடம் மானாய் மாட்டிக்கொண்டான்…
ராஜாவின் பார்வை வீரியத்தை தாரணியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை… அவனின் போதையேற்றும் கண்ணை பார்த்து பைத்தியமானாள் பேதை… அவனின் கம்பீரமான தோற்றமும் ஆஜபாகுவான உடல் வாகும் அவளை உருகுளைய வைத்தது…
நிம்மதியில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கைக்கு விடுதலை கொடுத்த காவலாளியை கண்கொட்டாமல் பார்த்தவழுக்கு அவளின் மனம் கட்டிப்பிடித்து நன்றிக்கடன் கூறச்சொல்லியதை சூசகமாக உணர்ந்தவள் திடுக்கிட்டு மலங்க மலங்க விழித்தாள்…
அவளின் பார்வையை கூட இந்நொடி பட்டதாரி பட்டம் வாங்கிய சந்தோஷத்துடன் பால்கோவை சாப்பிட்ட சுவையோடு ஜிவ்வென்ற உணர்வில் உருகிப்போய் பார்த்தான் திருட்டு போலீஸ்…
"மாமா"…
"ம்… சொல்லு தேவி"…
"உள்ளப்போலாமா!" என்று தயங்கியவாறே கேட்டாள்… அவள் என்ன கேட்டால் என்று திருப்பி அவளிடம் கேட்டால் அவளுக்கே தெரியாது… அவனின் பார்வையை தாங்கிக்கொள்ள முடியாமல் வாயில் வந்ததை வாடகைக்கு எடுத்து அடித்து விட்டிருந்தாள் அவனின் அழகி…
"பசிக்கலையா உனக்கு?"...
தலையை இடவழமாக ஆட்டியவழுக்கு உண்மையில் பசிக்கவே இல்லை… காரில் வரும் போதுக்கூட அவள் வயிறு பசிக்கு கத்தியது ஆனால் அவனிடம் கேட்க தயக்கமாக இருந்தது… அதையும் தாண்டி அவன் தூங்கிக்கொண்டு இருந்தான்… தூக்கத்தில் இருப்பவனை எழுப்பி சாப்பாடு கேட்க அவளுக்கு மனம் வரவில்லை… அதனால் தண்ணீரை குடித்து பசியை அடக்கிக்கொண்டவள் வீட்டிற்க்கு வந்ததும் இங்கிருந்த ஏகாந்த சூழ்நிலையை அனுபவித்து பசியை பகட்டாய் விட்டுவிட்டாள்…
"உனக்கு பசிக்கலன்னா என்ன?... எனக்கு பசிக்கிது… வா ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு வரலாம்… தனியா போகுறதுக்கு கடுப்பா இருக்குது… எனக்கு கம்பெனி கொடுக்கவாவது என்னோட வா" என்று அவளின் கையை பிடித்து இழுத்தான்…
அவன் இழுத்த இழுப்பில் அவனின் மேல் வந்து விழுந்தாள் தாரணி… சற்று முன்பு அவன் ரசித்த பின்னழகை பிடித்திருந்தது அவனின் பிரம்பு கைகள்….
இதயம் ரயில் வேகத்தில் துடிப்பை அதிகரிக்க அதிர்ச்சியாக கணவனை பார்த்தாள் தாரணி… அவளின் தபேலாவை தாங்கிக்கொண்டிருந்த அவனின் கைகள் இரண்டும் அத்தனை மென்மையை உணர்ந்தது… அதே நேரம் அவனின் பாக்கெட்டிலிருந்த ஃபோன் விடாமல் ரிங்கானது…
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,723
671
113
45
Ariyalur
😄😄😄😄😄😄😄போலீஸ்காரன் பொண்டாட்டிய படிக்க வைக்கணும்னு இப்படி தொடாம பார்வைலயே துகிழுரிக்கிறான்