• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 07

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
"மௌனமாய் ஓர் யுத்தம்" என்ற நாவலை இதோ நூறாவது தடவை வாசித்து விட்டான் ரிஷி.

அதிலுள்ள ஒவ்வொரு சொல்லும் அவனது அடிமனதில் பசுமரத்தாணி போல பதிந்து போனதன் விந்தையை என்னவென்று சொல்வது...!!

அந்த நாவலில் முழுக்க முழுக்க தலைவனால் ஒதுக்கப்பட்ட தலைவியின் காதல் பற்றியே சித்தரிக்கப்பட்டிருந்தது.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த தலைவியோ அழகாக இருந்தாலும் நிறத்தில் தலைவனை விட மங்கியவள். இயற்கையிலே அதி புத்திசாலியானவளோ தனக்குப் பிறகுள்ள சகோதரர்களின் நிலையை கருத்திற் கொண்டு தன் கல்வியை மேற்கொண்டு தொடரவில்லை. அதன் விளைவு இதோ தலைவனின் சுடு வார்த்தைகளுக்கு ஆளாகுகிறாள்.

அவளது தந்தை அவளுக்கு வரன் பார்த்திருப்பதாகக் கூற முதலில் அதிர்ந்து பின் தன்னை சுதாரித்துக் கொண்டவளாக திருமணம் செய்ய மறுக்க தாயின் கூரிய வார்த்தைகளில் மரித்தாள்.

திருமண வயதாகியும் வரன்கள் அமையாததால் மன அழுத்தத்திலிருந்த அவளது தாய், மகளென்றும் பாராமல் வார்த்தைகளை விட்டு விட வலிகளை விழுங்கிக் கொண்ட மதியவளோ தந்தையின் உடல் நிலையைக் கருத்திற் கொண்டு திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டாள்.

அதன் பிறகே அவளுக்கு தன் கணவனாகப் போகின்றவன் பற்றிய உண்மைகள் தெரிய வருகின்றன. அவனை புகைப்படத்திலே முதன் முதலில் பார்த்தாள். சங்க கால இலக்கியங்களில் வர்ணிக்கப்படும் தலைவனைப் போல வசீகரமான சிரிப்புடனிருந்தவன் அந்நொடியே அவளின் மனதில் பச்சைக்குத்தி அமர்ந்து விட்டான். படிப்பிலும் செல்வத்திலும் அவளுக்கு எட்டாக்கனியே அவன்.

"இவர் எப்படி என்னை மணந்து கொள்ள சம்மதித்தார்...?" என்று இவள் இங்கே நினைத்திருக்க அங்கே அவளின் சிந்தனைக்குரியவனோ கோபத்தில் அறையிலிருந்த பொருட்களையெல்லாம் கீழே தள்ளி விட்டு ஆஆஆஆஆ என்று தலையை பிடித்துக் கொண்டு கத்தியவன் "இவளுக்கு என்ன தகுதி இருக்கு என்று என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டாள்..." என சீறிக் கொண்டிருந்தான்.

அவனது தந்தையை மீறி அவனுக்கும் ஒன்றும் செய்து விட முடியாத நிலை. அனைத்தையும் பேசி முடித்து விட்டு, இவள் தான் உன் மனைவியாகப் போகிறவள், நாளை உனக்கு திருமணமென்ற தகவலை மட்டும் தந்தால் அவனும் என்னதான் செய்வான்...!? தனக்கு கொஞ்சம் கூட தகுதியில்லாதவளுடன் தான் வாழ்வதா..?? என்றே இப்படி வெறிபிடித்து நிற்கிறான்.

திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கடந்திருந்தும் அவர்களிடம் ஓர் ஒட்டுதல் வந்திருக்கவில்லை. அவளை தினமும் வார்த்தைகளால் குத்திக் கிழிப்பவனிடம் நேருக்கு நேர் நின்று வம்பு செய்பவளோ தனிமையில் மன வேதனையில் அழுது தீர்ப்பாள்.

அப்படியிருக்க எப்போது அவளது மனதினுள் அந்த ராட்சசன் நுழைந்தான் என்று தெரியாதளவு அவன் மேல் காதல் பித்தாகி இருந்தவள் தன் மனக்குமுறல்களை இதோ புத்தகமாக செதுக்கி இருந்தாள். ஆம் இது மதிநிலாவின் உதிரத்தில் உறைந்து போன வடுக்கள். அவளே ரிஷியின் மனைவி...!!

அவள் அவனுக்கென்று விட்டுச் சென்றது இந்த நினைவுகள் சுமந்த புத்தகம் மட்டுமே. வழமை போல அதனை வாசித்து முடித்தவனின் விழிகளில் நீர் கோர்த்திருந்தது. நேரத்தைப் பார்க்க நல்லிரவு பன்னிரண்டு மணியென்றிருக்க அப்படியே எழுந்து அருகிலிருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்து கொண்டவன் உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடன் அந்த அறையைப் சுற்றிப் பார்த்து ஆழ்ந்து சுவாசித்தான்.

அவனவள் வாழ்ந்த அறையது..! தன்னவளின் வாசத்தை நுரையீரலினுள் நிரப்பிக் கொண்டவன் வேகமாக வெளியேறி தனதறைக்குள் வந்து கட்டிலில் தலை சாய்த்தான். கடந்த இரண்டு மாதங்களாக அவனின் தேடல் தொடர்கிறது. தேடலுக்குரியவளைத் தான் காணவில்லை. தூக்கம் வராமல், கண்கள் மூட மறுக்க பால்கனியில் வந்து நின்று கொண்டான்.

பௌர்ணமி நிலவை வெறித்தவனுக்கு அது அவனது மதிநிலாவை நினைவு கூர்ந்தது. அவளும் இந்த நிலவைப் போலத் தானே. வட்டமான முகத்தில் எப்போதும் ஓர் குறும்புப் புன்னகை ஒட்டியிருக்கும். வேண்டுமென்றே இவனைச் சீண்டி திட்டுக்கள் வாங்குவாள். அதை நினைக்க நெஞ்சம் வலித்தது. மார்பை தடவி விட்டவன் அவள் பிரிந்து சென்ற கணத்தை நினைத்துப் பார்த்தான்.

...


சரியாக இந்த இரண்டு மாதங்களுக்கு முன்.

காலையில் ஆபிஸ் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான் ரிஷி.

மதியோ எழுந்து குளித்து விட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாள். அவளது அழைபேசிக்கு அழைப்பொன்று வர எடுத்து காதில் வைத்தவளுக்கு இன்ப அதிர்ச்சியே.

"ஓகே ஓகே இன்னைக்கே வரேன்ண்ணா..." என்றவளுக்கு முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

அதனை அந்தப் பக்கம் கேட்டுக் கொண்டு நின்றிருந்த ரிஷி "சும்மா ஊர் சுத்திட்டு திரியாம வீட்டுல இருக்கிற வழியப் பாரு..." என்றவன் போகிற போக்கில் சொல்லி விட்டுப் போக அவளோ பின்னாலிருந்து உதட்டை வளைத்து அவனுக்கு பலிப்புக் காட்டி விட்டு சென்று விட்டாள்.

ஆனால் அதனை அருகே இருந்த கண்ணாடியினூடாக ரிஷி கவனித்து தான் இருந்தான்.

சிரிப்பில் துடித்த உதட்டை மீசையை நீவுவது போல அடக்கிக் கொண்டவன் ஆபிஸ் சென்று விட்டான் அங்கே அவனுக்கா காத்திருப்பதறியாது.

...

கேன்டினில் மித்ரன் பவித்ராவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரிஷியின் அருகில் வந்தமர்ந்தான் அவர்களின் காலேஜ் நண்பன் ரவி.

வந்தவன் "குட் மார்னிங்" என்கவும் மூவரும் பதிலளித்து விட்டு மீண்டும் சாப்பிட ஆரம்பிக்க ரவியோ "என்ன ரிஷி சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்ட போல.." என்றான்.

அதில் ரிஷிக்கு புறைக்கேற மற்றைய இருவரும் ரவியை அதிர்ந்து பார்த்தனர்.

"அண்ணா தண்ணி..." என இங்கிருந்து வெயிட்டருக்கு சத்தம் போட்ட ரவியோ ரிஷியைப் பார்த்து கோணல் சிரிப்பொன்றை உதிர்க்க ரிஷியோ அதிர்ச்சி விலகாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"எனக்கெப்படி உண்மை தெரியும்னா பார்க்குற..?" என்றவன் நடந்த கதையைக் கூறினான்.

அதாகப்பட்டது என்னவென்றால், ஊரிலிருந்த ரிஷியின் தோழன் ஒருவன் ஃபோன் பேசும் போது யதார்த்தமாக ரிஷிக்கு திருமணம் நடந்த கதையை உலறிக் கொட்ட, ரவி போட்டு வாங்கியதில் மொத்தக் கதையையும் சொல்லி விட்டான்.

...

அதனை ரிஷியிடம் கூற அவனோ பற்களை நறநறுத்துக் கொண்டிருந்தான்.

ரிஷியை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே "பிடிக்காம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே..." என்றதும் முந்திக் கொண்ட மித்ரன் "ரவி மைன்ட் யுவர் ஓன் பிஸ்னஸ்.. இது அவன்ட பர்சனல் அதுல நீ தலையிடாத..பேசாம போ.." என எச்சரிக்க

ரவியோ "அதே தான் நானும் சொல்றேன் மித்ரன். இது அவன்ட பர்சனல்ல..? பின்ன ஏன் நீ வாய்ப் போடுற..?" என்றவன் மீது பாயப் போன மித்ரனின் கையைப் பிடித்து தடுத்தாள் பவித்ரா.

அதில் அடங்கியவன் "டேய் ஃபூல் வாய மூடிட்டு இருக்க.." என ரிஷி மீது எகிறினான்.

ரிஷியோ கோபத்தில் கையிலிருந்த போத்தலில் அழுத்தத்தைக் கூட்ட அதனை கவனித்த ரவியோ மெதுவாக "டேய் மித்ரன் நீயே உன் ஃப்ரெண்ட புரிஞ்சிக்காமல் இருக்குறியே.. அவனே இப்படி ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு கோபத்துல இருக்கான்..நீ வேற..யாருக்குத் தான் இப்படிப் படிக்காம பார்க்க கேவல...." என்று சொல்லி முடிப்பதற்குள் ரவியின் சேட் காலரை பாய்ந்து பற்றி இருந்தான் ரிஷி..

இதனை எதிர்பாராத ரவி "ஹேய் விடு..." என விடுபட போராட

ரிஷியோ விடுவதாக இல்லை. அதற்குள் சக ஸ்டாப்ஸும் அவ்விடம் குமிய ரவிக்கு இன்னும் அவமானமாகிப் போனது.

"நீ யாருடா என் லய்ஃப பத்திப் பேச..." என ஓங்கிக் குத்தப் போக அதற்குள் ரவி ஒரே தள்ளலில் அவனைத் தள்ளி விட்டான்.மித்ரன் ஓடிச் சென்று ரிஷியைத் தாங்க ரவியோ சட்டையை சரி செய்தவாறு முறைப்புடனே அவ்விடம் விட்டகழ்ந்தான்.

"விடுடா.. இந்த இடியட்.." என ஏதோ சொல்ல வாயெடுத்தவனின் வாயை மூடிய மித்ரன் அவனது காதில் "டேய் எல்லாரும் நம்மலத் தான் பார்க்குறாங்க.." என்றதும் சட்டென அடங்கி விட்டான்.

பவித்ராவோ மற்றவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்க ஓரமாக ரிஷியை அழைத்து வந்த மித்ரன் கதிரையில் அமர வைத்து தண்ணீரை அருந்தக் கொடுக்க சீற்றத்துடன் அதனை வாங்கிப் பருகினான் ரிஷி.

பவியும் அவ்விடம் வந்து ஏதோ சொல்ல வாயெடுக்க அவளை பார்வையாலே தடுத்திருந்தான் மித்ரன்.

ஆனால் ரிஷியின் மனமோ உலையாக கொதித்துக் கொண்டிருந்தது.

ரவி பேசியது ஓர் பக்கம் இருக்க ஸ்டாப்ஸ் முன் இப்படி நடந்து கொண்டதை அவமானமாக உணர்ந்தான் ரிஷி.

...

வேலைப் பளு காரணமாக இரவு நேர தாமதமாகியே மூவரும் வீட்டிற்கு வந்திருந்தனர்.

பவித்ரா மிகவும் களைப்பாக காணப்பட்டாள். கர்பம் வேறு, ஆபிஸில் அதிக வேலை வேறு என தலைவலியே வந்து விட்டது அவளுக்கு.

வீட்டிற்குப் போய் நிம்மதியாய் உறங்க வேண்டும் என நினைத்து வந்தவளை வரவேற்றதோ பூட்டியிருந்த கதவு.

புரியாமல் கணவனை அவள் திரும்பிப் பார்க்க அவனோ திரும்பி ரிஷியைப் பார்த்தான்.

காலையில் நடந்த பிரச்சினைக்குப் பிறகு ரிஷி இருவரினதும் முகத்தையும் சரி, மற்றவர்களுடையதையும் சரி பார்த்தானிலில்லை. முகத்தில் அத்தனை இறுக்கம்.

யதார்த்தமாக திரும்ப, இருவரும் இவனையே பார்த்துக் கொண்டிருக்க புரியாமல் என்னவென புருவத்தை உயர்த்த, மித்ரனோ கதவை ஜாடை காட்டினான்.

எட்டிப் பார்த்தவன் ஏதோ யோசனையில் "திறந்து உள்ள போக வேண்டி தான.. எதுக்கு என் மூஞ்சிய பார்த்துவிட்டு இருக்க..?" என கடுப்படித்தான்.

தலையில் அடித்துக் கொண்ட மித்ரன் "வீடு பூட்டி இருக்கு..." என்றதும் அவனும் எரிச்சலில் "அதுக்கு..?" என எரிந்து விழ மித்ரனோ பரிதாபமாக பவியைப் பார்த்தான்.

அவள் உதட்டுக்குள் சிரிக்க அவளை முறைத்தவன் திரும்பி இவனிடம் "சாவி மதிக்கிட்ட..." என்றான்.

மதி என்ற பெயரே அவனுள் எரிந்து கொண்டிருந்த சீற்றத்தை மீண்டும் தூண்டி விடப் போதுமானதாய் இருந்தது.

மூக்கு விடைக்க பற்களை கடித்தவனின் கை முஷ்டி இறுகியது.

"சரி வெய்ட் பண்ணுவோம்.. எங்க சரி அவசரமா வெளியே போய்ப்பா...வந்துருவா.." என்று பவித்ராவே சமாதானம் பேசி விட்டு அருகிலிருந்த திண்டில் அமர்ந்து கொண்டாள்.

நேரம் சென்று கொண்டிருந்ததே தவிர மதி வரும் வழியைத் தான் காணவில்லை..

கட்டுக்கடங்காத தன் கோபத்தை கட்டுப்படுத்த வழியின்றி கை முஷ்டி மடக்கி தொடையில் குத்தினான்.

பவித்ரா களைப்பில் இடுப்பை பிடித்துக் கொண்டு கணவனின் தோளில் தலைசாய்த்திருந்தாள்.

எவ்வளவு நேரம் தான் அவளும் பொறுத்திருப்பது.

இப்போது முடியாமல் "எ..என்னங்க..?" என கால் வலியில் முகத்தை சுருக்கியவளைப் பார்க்க மித்ரனுக்கும் பாவமாக இருந்தது.

ரிஷியை பரிதாபமாக திரும்பிப் பார்த்தவனின் பார்வையை சந்திக்க முடியாமல் முகத்தை திருப்பியவனுக்கு முன் இன்னேரம் அவள் நின்றிருந்தால் பார்வையாலே சுட்டுப் பொசுக்கியிருப்பான்.

அந்தளவுக்கு அவன் தாலி கட்டியிருந்தவள் கோபப்படுத்தியிருந்தாள். காலையில் நடந்த சம்பவத்தின் பிறகு மொத்தக் கோபமும் மதி மீதே திரும்பி இருந்தது.

"கண்ட கண்ட நாய்ங்க எல்லாம் பேச இவ தான காரணம். இவள நான் கட்டிக்கிட்டது தானே காரணம்" என மொத்தப் பழியும் அவள் மீது திரும்பி இருந்தது.

தன் நண்பன், கர்ப்பமான மனைவியை வைத்துக் கொண்டு குளிரில் வெளியே நிற்பதை அவனால் சகிக்க முடியவில்லை. எல்லாம் அவளால் வந்த வினையென "வரட்டும்" என்ற ரீதியில் நின்றிருந்தான்.

ஆனால் அங்கே இவர்களின் இந்த நிலைக்கு காரணமானவளோ தன் மொத்த சந்தோஷத்தையும் அள்ளிக் கொண்டவளாக கையில் ஓர் பையுடன் முச்சக்கர வண்டியில் வந்திறங்கினாள்.


தொடரும்...


தீரா.