• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 10

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 10

“எப்பா டேய்! இந்த ஸ்பீட் எல்லாம் நமக்கு ஆகாது! போதும் இனி மது அப்பாக்கு மட்டும் ஒரு விசிட் போட்டா போதும்.. அதை நாளைக்கு பார்த்துக்கலாம்” ராஜ் சொல்ல,

“இப்பவே பேசிட்டா பெட்டர் டா.. பின்னாடி அலையவோ பயப்படவோ வேணாம்” என்றான் ஆனந்த்.

“சத்தியமா என்னால முடியலை டா.. அதுவும் மது அப்பா நினைச்சாலே பயமா இருக்கு.. அதுவும் இவ்வளவு டயர்டுல போறது அதுவும் பிளான் இல்லாமல்.. சரி இல்லைனு தோணுது டா”

“அப்டின்றியா?”

“ஹ்ம்ம் ஆமா! முதல்ல அம்மாகிட்ட பேசு.. அப்புறம் பார்க்கலாம்.. டைம் இருக்கே”

“சரி டா.. அவ்வளவு தான்.. நான் அம்மாகிட்ட மெதுவா பேசி பார்க்குறேன்.. அவங்க ஓகே சொன்னா.. இந்த பிளானையும் கூட கேன்சல் பண்ணிக்கலாம்ல” என்றான் ஆனந்த்.

“எது கனகா அத்தைகிட்டயும் பேச போறியா?”.

“ஆமா டா பேசி பார்க்கலாம் நினைக்குறேன்.. பட் கன்ஃபார்ம் பண்ணல..”

“அதை அப்படியே ஸ்டாப் பண்ணிடு.. மொத்தமா புட்டுக்கும்.. வேணாம் டா.. அத்தை எல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாங்க”

“நீ எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாத.. பார்த்துக்கலாம் விடு.. இப்ப ஓவர் பாஸ்டா கல்யாணத்தை நடத்த நிக்கிறது விமலா சித்தி தான்..”

“அவங்களை பேசாமல் போட்டு தள்ளிட்டா என்ன?”

“சிம்பிள்! மது வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிப்பா.. நீ ஜெயில்ல கம்பி எண்ணலாம்”

“நல்ல வார்த்தையே வராதா உன் வாயில.. போட்டு தள்ளலாம் சொன்னேன்.. நான் பன்றேன்னு சொல்லல”

“தெரியும் டா உன் பிளான்.. பேசாமல் வா.. இல்ல உன்னை மர்கையா பண்ணிடுவேன்”

பேசிய அடுத்த நாள் எல்லாம் நன்றாகவே சென்றது. சொன்னதை போலவே திருமணத்தை அவசரப்படுத்தியதும் விமலா மட்டும் தான்.

இருந்தாலும் ஸ்ரீயின் நடவடிக்கையில் தெரிந்த மாற்றம் பார்த்து அவரே ஒரு நாள் கேட்டுவிட்டார் ஸ்ரீயிடம்.

“என்ன டி முன்ன கிளாஸ் போறியா இல்லையா? ஏன் எப்ப பாரு எதையோ பறிக்குடுத்த மாதிரியே இருக்குற?” என்றதற்கு

“அதான் உன் இஷ்டப்படி எல்லாமே நடக்குது இல்ல.. அப்புறம் ஏன் என் வாயை கிளறுற? பேசாமல் போய்டு” என்றாள் ஸ்ரீ.

“ரொம்ப எதிர்த்து பேசற டி நீ.. பவானியும் கனகாவும் நாள் குறிக்க வர்ராங்க.. இப்படி பே ன்னு அவங்க முன்னாடி உட்காராமல் போய் குளிச்சு துடைச்சு மூஞ்ச சிரிச்ச மாதிரி வச்சுக்கோ!”

“ம்மா! என்னை பேச வைக்காத! என்னால இப்படி தான் இருக்க முடியும்.. ஏதாவது சொன்ன லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடி போய்டுவேன்.. உன் மரியாதை தான் போகும் பார்த்துக்கோ” அன்னை மேல் இருந்த கோபத்தில் பேசிவிட,

“என்ன வார்த்தை டி சொல்ற.. உன்னை பெத்து வளத்ததுக்கு.. உன் கல்யாணத்தை நான் முடிவு பண்ண கூடாதா?.. பேசுவ.. நீ இதுவும் பேசுவ.. இன்னமும் பேசுவ.. உன்னை போய் ராணியா வாழ வைக்கணும் நினைச்சேன் பாரு..”

“அது தான் நானும் சொல்றேன்.. பணத்துக்காக தானே இன்னொருத்தியை விரும்புறான்னு தெரிஞ்சும் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்ற? அப்ப இப்படி தான் பேசுவேன்” அவள் கத்திவிட இப்போது சுதாரித்தார் விமலா.

கனகா முன் இதே போல பேசிவிட்டால் மொத்தமும் அவருக்கு தெரிந்து விடும்.. நிச்சயம் அதற்கு பின் இந்த திருமணம் நடக்க வாய்ப்பில்லை. நினைத்து பார்த்தவர் மகளை அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் முறைத்தபடி சென்றுவிட்டார்.

அமைதியாய் இதை பார்த்துக் கொண்டு தான் இருந்தார் வினோதன். பெரும்பாலான வீடுகளில் இருக்கும் ஆண்களின் நிலை தான் இவருக்கும்.

“அபி! நாளைக்கு அஸ்வினி வர்றதா சொல்றாங்க.. நீ பேசினியா? பிளேஸ் எல்லாம் ஓகே தானே?” ஆனந்த் அபியிடம் கேட்டான்.

“பேசினேன்.. ஸ்ரீயும் அச்சுகிட்ட பேசியிருக்கா.. நாளைக்கு வரட்டும்.. நேர்ல வந்ததும் பேசிக்கலாம்னு சொல்லிட்டேன்”

“சரி டா.. நான் முடிஞ்சா வரேன்.. இல்லைனா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ம்ம்..”

“சரிங்க! அப்புறம் மது கால் பண்ணினாங்க..”

“உனக்குமா?” என்று சொல்லி சிரித்தான் ஆனந்த்.

“ஆமா! அன்னைக்கு நான் பொறுப்புன்னு நீங்க தானே சொன்னிங்க.. இன்னும் ஒரு வாரத்துல நிச்சயமும் கல்யாணமும் ஒன்னா வைக்குறதா முடிவு பண்ணியும் ஏன் இன்னும் ராஜ் அண்ணாவும் நீங்களும் மது வீட்ல பேசாமல் இருக்கீங்க”

“மது அப்பாகிட்ட செண்டிமெண்ட்டா பேசி எல்லாம் சம்மதிக்க வைக்க முடியாது..”

“அதுக்கு?”

“அது தான் டா யோசிக்குறோம்.. இன்னும் ஒரு வாரம் இருக்கே.. எப்படியும் பேசிடுவோம்.. ராஜ்ஜை புடிக்காதுன்னு யாரும் சொல்ல மாட்டாங்க தான்.. ஆனா சிட்டுவேஷன் நமக்கு சாதகமா இல்லையே! அவரு அவர் பெண்ணுக்காக தானே முதல்ல யோசிப்பாங்க.. அதான் நாங்களும் என்ன பேசலாம்னு யோசிக்குறோம்”

“ஹ்ம்ம்! அப்ப நான் ஒரு ஐடியா சொல்லவா?”

“சொல்லு டா”

“நானும் வேணா உங்களோட வரவா? நான் பேசுறேன்”

“நீயா?”

“ஆமா ஏன் பேச கூடாதா?”

“ச்சே ச்சே! ஆனா நீ எப்படி?”

“அவங்க அம்மாவும் இருப்பாங்க இல்ல.. நான் சொன்னா கொஞ்சம் யோசிப்பாங்க இல்லை..”

“ஹ்ம்ம் அதுவும் சரி தான்.. நான் ராஜ்கிட்ட பேசிட்டு சொல்றேன் டா”

“ம்ம் சரி!”

கனகா சாப்பிட வந்து அமர, கிச்சனில் வேளையாய் இருந்தார் பவானி. இதுவும் ஆனந்த் அபியின் கூட்டுத்தனம் தான்.

பவானியிடம் பேசி செல்லம் கொஞ்சி இந்த நாடகத்திற்கு சம்மதம் வாங்கி இருந்தான்.

“இங்கே பாரு அபி! அண்ணி லைட்டா முறைக்குற மாதிரி இருந்தா கூட திரும்பி பார்க்காமல் ஓடி வந்துடு.. நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுடுறேன்.. சரியா?”

“ம்ம் சரி பவானிம்மா! ஆனா எனக்கு பயத்துல கையெல்லாம் நடுங்குது”

“எனக்கும் பயமா தான் இருக்கு”

“என்ன ம்மா!”

“ப்ச் பயந்தா எப்ப நீ உன் அத்தைகிட்ட பேசுறது? போ போய் பரிமாறு!”

“ம்ம் சரி!” என்றவள் சாம்பார் கிண்ணத்துடன் டைனிங் ஹாலிற்கு வந்தாள்.

“பவானி! ராஜ் இன்னைக்கு ஆஃபிஸ்....” இட்லி பரிமாறும் கைகளை பார்த்துக் கொண்டே பேச ஆரம்பித்த கனகா அந்த கைகளில் நடுக்கத்தை கண்டதும் பேசுவதை நிறுத்திவிட்டு திரும்பி முகத்தை பார்த்தார்.

“அ..த்..தை..” வாய்க்குள் தான் கூறினாள்.. வெளியே காற்று தான் வந்தது அபிக்கு.

சத்தம் போடுவரோ? சாப்பிடாமல் எழுந்து சென்று விடுவாரோ? நலனே பரிமாற வேண்டாம் என்பாரோ? என பல எண்ணங்கள் அபி மண்டைக்குள் ஓட,

“பவானி எங்கே?” என்றார் சாதாரணமாய்.

“பவானிம்மா! காய் நறுக்குறாங்க” அபி சொல்ல, எதுவும் பேசாமல் சாப்பாட்டில் கவனம் வைக்கவும் மீண்டும் இட்லிகளை வைக்க தொடங்கினாள்.

“பேசு டி ன்னு அனுப்பி விட்டா இட்லி மட்டும் தான் வைப்பா போல.. இதுக்கே உனக்கு ஒரு வருஷம் ட்ரைனிங் வேணும்” பவானி உள்ளிருந்து திட்டிக் கொண்டிருந்தார்.

“சாம்பார்.. சாம்பார் ஊத்தவா அத்தை!”

“பின்ன என்ன வெறும் இட்லியவா சாப்பிடுவாங்க?” கனகா சொல்ல,

“சரிங்க.. சரிங்க அத்தை” என வேகமாய் பரிமாறினாள்.

“அய்யோ இவளை!” – பவானி.

“அத்தை.. அவங்க.. அவங்க உங்ககிட்ட..”

“எவங்க?”

“அதான்.. உங்க.. உங்க மகன் தான் உங்ககிட்ட பேச.. பேசனும்னு..”

“எனக்கு போதும்” பேசிக் கொண்டு இருக்கும் போதே போதும் என்று கைகழுவி எழுந்துவிட, உதடுகளை வெளியே பிதுக்கி பாவமாய் பவானி முன் சென்று நின்றாள்.

“உன்னை...” என்று காதை பிடித்து திருகியவர்

“ஏன் டி அண்ணி இவ்வளவு அமைதியா பேசுறது எல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? எவ்வளவு நல்ல சான்ஸ்? உன்னை எல்லாம் என்ன பண்ணலாம்”

“அய்யோ பவானிம்மா! எனக்கு ரொம்ப நடுங்கிடுச்சு தெரியுமா? சினிமால வர்ற மாதிரி தட்ட தூக்கி எரிஞ்சுடுவாங்களோனு ரொம்ப பயந்துட்டேன்.. அதான் என்ன பேசன்னே தெரியல..”

“அடி போ டி! உன்னை போய் இந்த ஆனந்த் என்கிட்ட ட்ரைனிங் விட்ருக்கான்.. ஏனக்கே அண்ணியை பார்த்தா உதறும்”

“இப்ப என்னம்மா பண்றது?”

“ம்ம் மீதி இருக்குற இட்லிய போய் சாப்பிடுவோம்.. அப்புறம் பார்க்கலாம்”

“ம்ம்”

“நல்லா ம்ம் மட்டும் கொட்டு”

“சாரி ம்மா! இன்னைக்கு நாள் சரி இல்ல போல.. நாளைக்கு ஒழுங்கா பேசிடுறேன்.. ஈவ்னிங் அச்சு வர்றா நான் போய் அவளை பார்த்துட்டு வர்றேன்”

“சும்மா போகாத! வீட்ல நிறைய அதிரசம் செஞ்சு வச்சுருக்கேன்.. கொண்டு போய் குடு.. எலி கொரிச்ச மாதிரி இல்லாமல் நல்லா சாப்பிட சொல்லு” என்றார் பவானி அன்பாய்.

“அத்தைகிட்ட சொல்லிட்டு போகவா?”

“நீ பேசின லட்சணம் தான் பார்த்தேனே! மறுபடியும் போய் அஸ்வினினு சொதப்புனா அடுத்து அண்ணி உங்களை தனியா வேற வீடு பார்க்க சொல்லிடுவாங்க பரவால்லையா?”

“இல்ல! வேணாம் வேணாம்.. நான் சொல்லாமலே போய்ட்டு வரேன்.. நம்ம பிளான் நாளைக்கு வச்சுக்கலாம்”

“ம்ம் அது! நல்லபடியா போய்ட்டு வா.. அந்த புள்ளைய கேட்டேன்னு சொல்லு” என்றவர் எழுந்து சென்றுவிட்டார்.

ஆனந்த்திடம் சொல்லிக்கொண்டு அபி அஸ்வினியை பார்க்க செல்ல, அந்த பக்கம் ஸ்ரீ, ராமோடு வந்து சேர்ந்தாள்.

“அச்சு! உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?” – அபி.

“நானும் தான் அண்ணி! உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன்.. எப்படி இருக்கீங்க அண்ணி” – ஸ்ரீ.

“நல்லாருக்கேன் டா.. இவங்க தான் நீ சொன்ன அவங்களா?” கிண்டலாய் ராமை காட்டி ஸ்ரீயிடம் கேட்டாள் அஸ்வினி.

“ம்ம்!” வெட்கம் கலந்து ஸ்ரீ சொல்ல, அபி, அஸ்வினி இருவரும் அவளை கிண்டல் செய்து சிரித்தனர்.

“ஓரு மாசம் கூட ஆகல அச்சு.. ஆனா அப்ப விட இப்ப ரொம்ப பிரச்சனை.. உனக்கு ஒன்னு தெரியுமா கனகா அத்தை கூட சீக்கிரம் என்னை மன்னிச்சுடுவாங்க.. ஆனா அடுத்து ராஜ் அண்ணா கல்யாணத்துல இருக்குற குழப்பம் தெரிஞ்சா தான் என்ன பண்ணுவாங்கன்னே யோசிக்க முடியல.” அபி சொல்ல,

“ஆமா அச்சு அண்ணி! இந்த அம்மா என்ன வேலையெல்லாம் செய்யுறாங்க தெரியுமா? அவங்களை பார்த்தாலே இப்ப எல்லாம் எனக்கு அவ்வளவு கோபம் வருது” என்றாள் ஸ்ரீயும்.

“ஹேய் என்ன நீங்க? எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நம்ம பிரச்சனையை நாம தான் சால்வ் பண்ணனும்.. இதுக்கெல்லாம் பயப்படலாமா? உனக்கு ஆனந்த் சப்போர்ட் பண்ணுவாரு.. உனக்கு இதோ சூப்பர் ஹீரோ கூடவே இருக்காரு.. அப்புறம் என்ன?”

“எல்லாம் சரி தான் ஆனா பயமா இருக்கு அச்சு.. எப்படி நல்ல விதமா முடிய போகுதுன்னு தெரில..”

“எல்லாம் எனக்கு தெரியும்.. ஆனந்த் எனக்கு எல்லாமே சொன்னாங்க.. அவங்க சொன்னது சரி தான்.. நம்ம லைஃப் நமக்கு முக்கியம்.. இப்ப அதை மட்டும் யோசிங்க” அஸ்வினி.

“கரெக்ட்டா சொன்னிங்க சிஸ்டர்! நானும் இதை தான் சொல்றேன்.. பயந்துட்டே இருக்கிறா” ராம் கூறினான்.

“அதான் பிரதர் சொல்றாங்க இல்ல.. எதுக்கும் கவலை படாதீங்க எல்லாமே நல்லபடியா நடக்கும்.. சரி வாங்க சாப்பிடலாம்” என அழைத்து சென்றாள் அஸ்வினி.

சில மணி நேரங்கள் என்றாலும் நொடிகளாய் கரைய அஸ்விணி, அபியோடு ஸ்ரீக்கு அந்த நாள் அவ்வளவு அழகாய் சென்றது.

பிரியவே மனம் இன்றி மூவரும் பிரிந்து அவரவர் இடத்திற்கு செல்லும் நேரம் வந்தபோது அபியின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிய, அது வீடு வந்து சேரும் வரையுமே தொடர்ந்தது.

தொடரும்..
 
Top