• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் -11

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
44
43
18
Chennai
உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம்-11


அங்குள்ளவர்களுக்கு ஏற்கனவே கிம் சியோ ஜீனை தெரிந்து இருந்தது.எல்லோரும் அவனை புன்னகை முகமாக வரவேற்றனர்.அதோடு கிம் அங்கே சுத்தம் செய்யும் ஒரு பெண்ணிடம் ஆங்கிலத்தில்


“நல்லா இருக்கீங்களா?”
என்று விசாரித்தான்.


அவரோ தமிழில் “நல்லா இருக்கேன் தம்பி இப்போ உடம்புக்கும் பரவாயில்லை திரும்ப வேலை கொடுத்ததில் ரொம்ப சந்தோஷம்” என்று கையை எடுத்து கும்பிட்டார்.


அவனோ சிரித்துக் கொண்டே “இட்ஸ் ஓகே” என்றான்.அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதைப் பார்த்து பாவைக்கு தான் வயிற்றில் புளி,மிளகாய் எல்லாம் கரைத்தது.அவனுக்கு தமிழ் தெரியாது என்று நினைத்து அவன் முன்னாலேயே சப்பை மூக்கன் என்று அழைத்தது எல்லாம் நினைவில் வந்து போனது.


பாவை மனதிலோ ‘டேய் சப்பை மூக்கா அய்யோ அய்யோ திரும்பவும் அதே தான் நினைப்புக்கு வருது கிம் தமிழ் தெரியும்னு சொல்லவே இல்லை இப்படி என்னை நம்ப வைச்சு ஏமாத்திட்டியே! இப்போ எப்படி அவன் முகத்துல நான் முழிப்பேன்’ என்று திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தாள்.


அவளின் முகபாவனைகளை வைத்து ஓரளவு கணித்து விட்ட கிம் எதுவும் தெரியாதது போல் அவள் புறம் திரும்பினான்.அவனைப் பார்த்து என்னச் சொல்வதென்று தெரியாமல் புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தவள் மனதினுள் ‘ஐயோ இப்படி வசமா சிக்கிட்டியே பங்கு அவன் பார்க்கிற பார்வையிலே தெரியுது உன் வேலை அதோ கதி தான்’ என்று நினைத்தாள்.


கிம் ஆங்கிலத்தில் “நீங்க வந்த வேலையைப் பார்க்கலாமே”


“ஹான் ஓகே சார் டீடெய்ல்ஸ் யார்கிட்ட போய் கேட்கனும்” என்று பதற்றமாக கேட்டாள்.


“நீங்க ஆபிஸ் ரூம் போங்க அங்கே டேபிள்ல உங்களுக்கு எல்லா விவரங்களும் இருக்கிற பைல்ஸ்ஸ கொண்டு வரச் சொல்றேன்” என்றான்.


இருக்கும் சூழ்நிலையை சமாளிக்க வழி தெரியாமல் விழித்தவாறே சரியென்பது போல் தலையாட்டினாள்.
எப்படியோ அங்கிருந்து தப்பித்தால் போதும் வேகமாக சென்று விட்டாள்.


அங்கு வேலை செய்பவர்களிடம் அலுவலக அறைக்கு செல்வதற்கான வழியைக் கேட்டு உள்ளே சென்றாள்.அங்கே ஏற்கனவே எல்லா கோப்புகளும் எடுத்து வைக்கப்பட்டு இருந்தன.



அதைப் பார்த்த பாவை “ஏற்கனவே ப்ளானோட தான் வந்திருக்கான் போல நாம தான் வசமா மாட்டிக்கிட்டோம் இதுக்கு எல்லாம் காரணம் இந்த விமலா தான் இரு வரேன்” என்று அவளை கைப்பேசியில் அழைத்தாள்.


மறுமுனையில் பேசிய விமலாவிடம் பாவை “போச்சு எல்லாம் போச்சு நான் வசமா மாட்டிக்கிட்டேன்” என்று புலம்பினாள்.


விமலா புரியாமல் “என்னாச்சு பாவை என்னன்னு விவரம் சொல்லாமல் புலம்பினால் நான் என்னன்னு புரிஞ்சுக்குவேன்”என்றுச் சொல்ல

அவளோ “நீ வேற நிலைமை புரியாமல் எல்லாத்தையும் விவரமா சொல்றேன் கேளு” என்று நடந்ததைச் சொன்னாள் பாவை.


அதைக்கேட்ட விமலா “ஹேய் என்ன சொல்றே? உண்மையாவா?”


“வேற என்ன சொல்றது? நான் தான் கிம் சார் வரும் பொழுது
சப்பை மூக்கன்னு சொன்னது காதுல விழுந்திருக்குமோ?”


விமலா பயந்தபடி “நான் எதுவும் கிம் சாரை பத்தி பேசலை தானே?” கேள்வியாகக் கேட்டாள்.


அதைக்கேட்ட பாவை இன்னும் அதிர்ந்தபடி “விமலா கடைசில என்னை மாட்டி விட்டுட்டியே இது நியாயம் தானா? சொல்லு நம்ம ஆபிஸ்ல உள்ள சீனியர்ஸ்கிட்ட கிம் சாரைப் பற்றி கேட்டு இருக்கலாம் அப்பொழுதாவது நாம கொஞ்சம் உஷாராக இருந்துக்கலாம்” என்றதும்


“இப்போ எப்படி சமாளிக்கப் போறே?” என்று விமலா கேட்டாள்.


“தெரியலை நேரடியாக எதாவது கேட்டால்” என்று பாவை பேசிக்கொண்டிருக்கும் பொழுதே உள்ளே நுழைந்தான் கிம்.அவனைப் பார்த்ததும் கைப்பேசியின் அழைப்பை துண்டித்தாள்.


அவனோ அவளை நேராக பார்த்தப்படி… “ரொம்ப முக்கியமான கன்வசேஷன் போயிட்டு இருக்கு போல” என்றான்.



அதைக் கேட்டு நெஞ்சம் படபடவென்று அடித்தது.அதை வெளிக்காட்டாமல் திணறியபடி “அதெல்லாம் ஒன்னுமில்லை சார் சின்னதா டவுட்டு அதான் கிளியர் பண்ணேன்” என்றாள்.


அவள் காட்டிய முகபாவனையில் அவனோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “அந்த டவுட்டு என்னன்னு என்கிட்டயே கேளுங்க” என்றான்.


“ச…சார் அது” என்று அவள் திணற…


அவள் சொன்ன வார்த்தைக்கான அர்த்தத்தை நேற்றே கூகுளில் அர்த்தம் தேடியதோடு தன் மூக்கை ஒருபுறம் சரிபார்த்துக் கொண்டது எல்லாம் ஒரு பக்கம் வேறு இருக்கிறது.அதனால் இவனும் துணிவாக “என்னன்னு சொல்லுங்க நான் கிளியர் பண்றேன்” என்றான்.


பாவையோ என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கையை பிசைந்தபடி பதற்றத்தில் அமைதியாக நின்றாள்.அவனும் அவளின் பதிலுக்காக பார்த்துக் கொண்டிருந்தான்.


அப்பொழுது அவனுடைய கைப்பேசி அழைக்கவும் கிம்மின் கவனம் திரும்பவும் இது தான் வாய்ப்பு என்று கோப்புக்களை பார்க்கத் துவங்கினாள் பாவை.


அவன் கைப்பேசியின் அழைப்பிற்கு பதிலளித்து அவளைப் பார்த்தான்.ஏதோ மும்மூரமாக வேலையில் மூழ்கி இருப்பவளைப் போல் பாவனை செய்துக் கொண்டிருந்தாள்.


அவளை சீண்டுவதும் அதற்காக அவள் பதுங்குவது அவனுக்கு பிடித்திருக்க இதையே தொடர முடிவெடுத்தான்.யோசனையோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.இதே நிலைமையில் வேற யாராவது பேசியிருந்தால் அவர்களிடம் நிச்சயம் கோபமடைந்து இருந்திருக்கலாம்.ஆனால் அவள் பேசிய விதம் அவனுக்கு பிடித்து இருந்தது.


சிறிது நேரம் செல்லவும் அந்த தொழிற்சாலையின் மேலாளர் உள்ளே வந்தவர் கிம்மை தொழிற்சாலை முழுவதும் சென்று பார்க்க அழைத்தார்.


பக்கத்தில் இருந்த பாவையை பார்க்க அவளோ கோப்புகளில் உள்ள விவரங்களை எழுதிக் கொண்டிருந்தாள்.உடனே கிம் அவளைப் பார்த்து “பாவை என்கூட ரவுண்ட்ஸ் வாங்க கொஞ்சம் நோட்ஸ் எடுக்க வேண்டி இருக்கு வாங்க” என்று அவளுடைய பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வேகமாக எழுந்து நடந்தான்.


பாவை அவன் பின்னாலேயே சென்றாள்.அவன் குறிப்புகளைச் சொல்ல இவள் எழுதிக் கொண்டே வந்தாள்.சில இடங்களில் அவன் பேச்சுவழக்குகளில் ஹங்குவான் மொழியை அடிக்கடி உபயோகிக்க தற்சமயம் அதை ஆங்கிலத்தில் எழுதி வைத்தான்.


இப்பொழுது உடனே கேட்டால் அவன் கோபம் கொள்வதற்கு வாய்ப்புக்கள் இருப்பதால் அமைதியாக வந்தாள்.அவன் எல்லாவற்றையும் சொல்லி முடித்ததும் இவளை ஒருமுறை பார்த்தவன் “இன்னும் எதாவது சந்தேகம் இருக்கா? ஏன்னா ஏற்கனவே உங்களுக்கு வந்த டவுட்டை கிளியர் பண்ணலை அதான் கேட்டேன்” என்றான்.


இவளோ மனதினுள் ‘'ஐயோ என்னைப் போட்டு ஒருவழி பண்ணாமல் விட மாட்டாங்க போல’ என்று தனக்குள்ளே நொந்துக் கொண்டவள் “சார் ஒரு சந்தேகமும் இல்லை நான் உங்களுக்கு நோட்ஸ் ரெடி பண்ணிட்டு சொல்றேன் நீங்க கரெக்ஷன் செய்ங்க” என்றாள் புன்னகையோடு….


அவனும் “ஓகே” என்று தலையசைத்தான்.நேரம் பிற்பகலை கடக்கவிருந்தது.பாவைக்கு பசி எடுத்தது.எப்படி சொல்லிக் கொண்டு செல்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு தன் வேலையைக் காட்டியது.அவளது நிலைமையை அருகில் இருந்து புரிந்துக் கொண்ட கிம் பாவையிடம் “வாங்க பாவை பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல்ல போய் சாப்பிடலாம்” என்றான்.


அவளோ யோசனையாய் நிற்க… அவனோ ஒரு விஷயத்தை சொல்லி விட்டான் என்றால் அடுத்து அதை செய்து முடிப்பதே அவன் வாடிக்கை.அதனால் அவன் சென்று காரில் அமர்ந்துக் கொள்ள உடன் அவளும் இருக்கையில் இருந்தாள்.


அங்கே தொழிற்சாலையில் சில கொரியர்கள் ஏற்கனவே வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்களிடம் விசாரித்து விட்டு ஒரு ஹோட்டலில் இவர்கள் நாட்டு உணவும் சேர்ந்து கிடைக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.



அங்கே இருக்கையில் எதிரெதிரே இருவரும் அமர்ந்திருந்தனர்.கிம் தன் நாட்டு உணவான சூப்பும் காய்கறி சாலட்டும் கொண்டு வரச் சொல்ல பாவை சைவ சாப்பாடு ஒன்று சொன்னாள்.


முதலில் பாவையின் உணவு வர அதை பார்க்கவும் பசியில் இருந்தவள் அருகில் இருப்பவனைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் பசியினால் தன் உணவினை சாப்பிட ஆரம்பித்தாள்.


அவனுடைய உணவு வரவும் நிமிர்ந்து பார்க்க அவனோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.அப்பொழுது “சார் சாப்பாடு கொஞ்சம் டிரை செய்து பார்க்கிறீங்களா?”


அவனோ “இப்போத் தான் கேட்கனும்னு தோணிச்சா?”


“அ…து சார் நல்லப் பசி சாப்பாடு வந்ததும் எதையும் யோசிக்கலை சாப்பிட ஆரம்பிச்சிட்டேன்” என்றாள்.


அவனோ “வேண்டாம்” என்று தன் உணவினை சாப்பிட ஆரம்பித்தான்.


அவன் சாப்பிடுவதைப் பார்த்தவள் “கொஞ்சம் டிரை பண்ணுங்க” என்று வெண்டைக்காய் கூட்டு எடுத்து தனியாக வைத்தவள் “சார் இதை நான் இன்னும் சாப்பிடலை நீங்க சாப்பிட்டு பாருங்க” என்றாள்.


அவனோ “ஏன் உங்களுக்கு பிடிக்கலைன்னு எனக்கு தள்ளி விடுறீங்க போல” என்று அவன் பொதுவாகத் தான் கேட்டான்.இவளுக்குத் தான் கோபம் உடனே வந்தது.


“மிஸ்டர் கிம் விருந்தினர்களை உபசரிக்கிற தமிழ்நாட்டுல பொறந்த என்னைப் போய் வேண்டா வெறுப்பா உங்களுக்குத் தரேன்னு சொல்லிட்டீங்க அசிங்கம் வெட்கம்” இவள் இப்படி பேசியதும் அவன் அதிர்ச்சியாகி “யாருக்கு அசிங்கம்?” என்றான் புரியாமல்…


அவன் சொன்னதைக் கேட்டு தலையில் கைவைத்தவள் “ஹய்யோ அசிங்கம், வெட்கம், வேதனை எல்லாம் எனக்கு தமிழ்பெண்ணான எனக்கு” என்று அவள் தமிழிலில் புலம்ப இவனோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.


பாவை “இந்தாங்க மிஸ்டர் கிம்” என்று தன் தட்டை மொத்தமாக அவன் பக்கம் தள்ளி வைத்தவள் “மிஸ்டர் கிம் உங்களைப் பத்தி எனக்கு சரியா தெரியாது அதுவும் நான் இந்த கம்பெனிக்கு புதுசு” என்றதும் இவனோ புரியாமல் பாவையைப் பார்த்து “இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்லுறீங்க எனக்கு புரியலை” என்றான்.


அவளோ ‘அடேய் ஏன்பா என்னை இப்படி பைத்தியக்காரி ஆகிட்டே எங்கே நான் உங்களை கிண்டல் பண்ணதை கேட்டுவிடுவீங்கன்னு நானே பயத்துல ஏதோ குறலி வித்தையெல்லாம் காட்டிட்டு இருக்கேன் இதுல புரியலைன்னு இப்போ யார் கேட்டாங்க’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் பாவை.


அவனோ அவளைப் பார்த்து “என்ன” என்பது போல் சைகைச் செய்தான்.


அவளோ “அதாவது தமிழர் பண்பாட்டை பத்தி பேசவும் நான் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேன் இந்த கிண்ணத்தில் இருக்கிற சாதம் அப்புறம் இந்த குழம்பு எல்லாம் நான் இன்னும் டிரை பண்ணலை சார் நீங்க சாப்பிடுங்க” என்று அவன் பக்கம் வைத்தாள்.


பாவையின் செயல்பாடு அவனுக்கு பிடித்திருந்தது.அவன் கேட்டான் என்பதற்காக இன்னொரு உணவை ஆர்டர் செய்து அதை வீணாக்காமல் தனக்கு நெருக்கமானவங்களுக்கு கொடுப்பது போல் அவனை கவனித்துக் கொள்வது கவனம் கொள்ள வைத்தது.


அவனோ சிரித்துக் கொண்டே அவள் கொடுத்த உணவை சிறு தட்டில் வைத்து சாப்பிட போகவும் அவளோ “இருங்க கிம் சாப்பாட்டுல நல்லா குழம்பை ஊத்தி சாப்பிடுங்க” என்று அவன் கையிலிருந்து வாங்கி அவளே இன்னும் கொஞ்சம் அதிகமாக காரக்குழம்பை ஊற்றி அதன் மேல் அப்பளத்தையும் பொடித்து போட்டவள் “ இப்போ சாப்பிடுங்க” என்று அவள் கொடுக்கவும் ஏதோ நெருக்கம் தந்த உணர்வு.


அவன் வாங்கி ஒரு கவளம் வாயில் வைத்து மென்றுக் கொண்டிருக்கும் போதே பாவை அவனையேப் பார்த்தவள் “எப்படி இருக்குனு சொல்லுங்க சார்?” என்று அவள் இரு விழிகளை உருட்டிக் கொண்டுக் கேட்க அவனோ இருங்க என்பது சைகைச் செய்து சாப்பிட்டு முடித்தவன் “ம்ஹீம் சோத்தா” என்றான்.


இவளோ அவசரமாய் “என்ன நல்லாயில்லையா?” என்றதும் அவனோ சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் “நல்லா இருக்கு நான் ஹங்குவான் மொழியில் சொன்னேன்” என்றான்.


இவளோ அசடு வழிந்தவாறே “ஓகே ஓகே” என்றதும் கிம் “என்னுடைய சாப்பாட்டை நீங்க சாப்பிடுங்க” என்று தன் பக்கம் இருந்த சாலட்டை எடுத்து அவள் பக்கம் கொடுத்தான்.


அதைப் பார்த்தவள் மனதினுள் “ஹய்யோ இந்த பச்சை காய்கறி எல்லாம் மனுசன் சாப்பிடுறதே கிடையாது இதைப் போய் என்னைச் சாப்பபிடச் சொல்றானே!’ என்று மனதினுள் நொந்தவள் கொஞ்சமாக எடுத்து அவன் பார்க்காதவாறு முகத்தை சுழித்துக் கொண்டே சாப்பிட்டாள்.


அவன் அதை கவனித்தாலும் தெரியாதது போல் இருந்துக் கொண்டான்.இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு மற்ற வேலைகளைப் பார்க்கவும் நேரம் சரியாக இருந்தது.


இருவரும் அங்கிருந்து திரும்பவும் வீட்டிற்குச் செல்வதற்காக நேரம் இரவு நேரமாகிப் போனது.கிம் தனது காரை ஓட்டிக் கொண்டிருக்க முன்னால் அமர்ந்த பாவைக்கு சிறிது நேரத்திலேயே கண்கள் தூக்கத்தை தழுவ ஆரம்பித்தது.அவளும் கொஞ்சம் சமாளித்துப் பார்க்க வேலைப் பளுவின் காரணமாக அப்படியே தூங்கிப் போனாள்.


கிம் பாவையின் பக்கம் ஏதேச்சையாக திரும்ப அவளோ நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.அவளின் கைகளை அப்படியே தொங்கப் போட்டு ஒரு பக்கம் சாய்ந்தவாறே தூங்கினாள்.


இதைப் பார்த்து கிம் தனது காரை ஓரமாக விட்டவன் அவளின் தூக்கம் கலையாதவாறு மெதுவாக கைககளை அவள் மேலே வைக்கவும் பாவை தூக்க கலக்கத்தில் “அப்பா சும்மா இருங்க” என்று புலம்பினாள்.


அவள் அப்படிச் சொன்னதும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன் அவள் தலையை லேசாக சாய்ந்த மாதிரி வைத்து தன் பயணத்தை தொடர்ந்தான்.அவளின் வதனத்தைக் காண ஏனோ மனம் லேசாக பிடித்துப் போவதை தடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.


பாவை சொன்ன இடம் வரவும் “மிஸ் பாவை பாவை” என்று அவன் அழைக்க அவளோ “ஹய்யோ சும்மா தொணதொணன்னு எனக்கு தூக்கம் வருது” என்று கையை தலைக்கு அடவுக் கொடுத்து முட்டியை மேலே தூக்கி ஒருபக்கம் சாய்ந்தவாறு அவள் தூங்குவதற்குக் கொடுத்த கெட்டப்பை பார்த்து சிரித்தவன் “மிஸ் பாவை பாவை இது வீடு இல்லை நாம இன்னும் கார்ல தான் இருக்கோம்” என்றுச் சொல்லிப் பார்த்தான்.


மெதுவாக விழிகளைத் திறந்துப் பார்க்க அவனோ கார் திசைமாற்றியின் மேல் தலை சாய்த்து அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவள் பதறிப் போய் “அம்மே” என்றுக் கத்தவும் அவனும் அதில் பதறிப் போய் “என்னாச்சு” என்றான்.


அவளோ “சார் நீங்க இங்கே என்ன பண்ணுறீங்க?” என்றதும் இம்முறை அவனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.


அவனோ “பாவை இந்தக் கேள்வியை நான் கேட்கனும் இப்போ நீங்க இருக்கிறது என்னுடைய கார்ல கொஞ்சம் நிதர்சனத்துக்கு வாங்க” என்றதும் அவளோ தன்னைச் சுற்றிப் பார்த்தவள் கண்களைத் தேய்த்து விட்டு “சாரி சார்” என்றாள்.



அவனோ அதைக் கண்டுக் கொள்ளாதது போல் “இங்கே உங்க வீடு எங்கே இருக்கு” என்றதும் அவள் வெளியே எட்டிப் பார்த்து “சார் இதோ பக்கத்துல நடந்துப் போற தூரம் தான் ரொம்ப தாங்ஸ் அப்புறம் என்னை மன்னிச்சிடுங்க நான் அசந்து தூங்கிட்டேன் அதான் நினைவு வரலை” என்றாள்.


உடனே கிம் “ம்ம்… இருக்கட்டும் நானும் உங்ககூட வீடு வரைக்கும் வரட்டுமா?” என்ற போது “இங்கே வரைக்கும் விட்டதே போதும் சார் நான் போய்டுவேன் தாங்ஸ்” என்று காரிலிருந்து இறங்கியவள் அவனிடம் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தாள்.


அவளின் தலை மறையும் வரை காத்திருந்தவன் அவள் சென்றதும் தனது வாகனத்தை எடுத்து வேகமாக செலுத்தினான்.முகம் முழுவதும் அவள் செய்த விஷயங்களை எண்ணி முதன்முதலாக புன்னகையை சிந்திய படி ….


எனது மகிழுந்து முழுவதும்

உனது வாசனை மகிழ்வாய்…