• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் -12

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
44
43
18
Chennai

உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -12


அவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று வேகமாக நடந்தாள் பாவை.அவன் முன்னால் தூங்கியதோடு அவள் படுத்திருந்த முறையிலேயே ஓரளவு தன்னைப் பற்றி யூகித்தவள் மனதினுள் ‘போச்சு அசிங்கமா போச்சு அவன் என்னைப் பத்தி என்ன நினைப்பான்? சரியான தூங்குமூஞ்சின்னு’ என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டே வீட்டிற்குள் வந்தாள்.


அவளைப் பார்த்த ரமணா “என்னம்மா ஏதோ பெரிய சம்பவம் நடந்து இருக்கு போல முன்னால இருக்கிற அப்பா கண்ணுக்கு தெரியலையே” என்று அவர் கேட்கவும்


பாவை “அப்பா இப்படி எல்லாம் பேசி என்னை டென்ஷன் ஆக்கிடாதீங்க அப்புறம் நீங்க தான் சமாளிக்கனும்” என்று மிரட்டினாள்.


உடனே ரமணா “இருபத்தியோரு வருஷமா நாங்க தானே சமாளிக்கிறோம் அதனால பெரிய பிரச்சினை இல்லை” என்று பாவையிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.


அவளோ “அப்பா சும்மா இருங்க எப்போ பார்த்தாலும் தட்டிக்கொடுக்கிற மாதிரி பேசிட்டு அப்புறம் கிண்டல் பண்ணுவீங்க”


அவரோ சிரித்துக் கொண்டே “ம்ம்… என் பொண்ணை இவ்வளவு தூரம் டென்ஷன் ஆக்கினவங்க யானுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”


அவளோ அவரிடம் பேசிய படி தன் வேலைகளை முடித்து விட்டு முகம் கழுவி உடைமாற்றி ஷோபாவில் பொத்தென்று விழுந்தவள் “புதுசா வந்திருக்கிற டிரையினர் தான் அப்பா எப்போ பார்த்தாலும் எதாவது வேலைச் செய்யுன்னு நொச நொசன்னு” என்றாள்.


அவரோ யோசனையாய் “யாரு அன்னைக்கு உன்னை ஆபிஸ்ல பிக்அப் பண்ண வரும் போது காரில் இருந்தபடியே பார்த்துட்டு இருந்தாரே கொரியனா அவரா?” என்று கேட்கவும் பாவை கொஞ்சம் அதிர்ச்சியாகி எழுந்து ஒழுங்காக உட்கார்ந்தவள் “அப்பா நீங்க எப்போ பார்த்தீங்க?” என்றாள் அதிர்ச்சியோடு…


அவரோ “அன்றைக்கு உன்னை கூடிட்டு போகலாம்னு வந்தேன்ல அப்போ அவர் உன் பின்னால கார்ல இருந்தபடியே நீ போற வரைக்கும் பார்த்துட்டு இருந்தாரும்மா அதை நான் கவனிச்சேன் பரவாயில்லை இந்த வயசுல நல்ல அக்கறையான பையனா இருக்கான்” என்றார்.


ஏனோ அவளது அப்பாவின் பாராட்டுதல் அவளின் மனதிலும் லேசாக இடம் பிடித்தது.பாவையின் அமைதியைப் பார்த்த ரமணா “என்ன பதிலே காணோம்? டிரையினர்னா வேலைக் கொடுத்து உங்களை பெஸ்ட்டா மாத்திறது தானே அதுக்கு போய் கோபப்பட்டா எப்படி பாவை?” என்றார்.


பாவை யோசனையோடு “ம்ம்… நீங்க சொல்றதும் சரி தான்” என்ற போது…


ரமணா “பாவை உனக்கு வேலை கஷ்டமா இருந்தால் மேற்படிப்பு படிக்கப் போம்மா அப்போ மைண்ட் ரிலாக்ஸ்ஸா இருக்கும்” என்றார்.


அப்போது இவர்கள் இருவரின் பேச்சை கேட்டப்படி வந்த பாவையின் அம்மா செல்வி “நல்ல இருக்கு உங்க ரெண்டுபேருடைய பேச்சும் அப்பா என்னன்னா படிக்க போன்னு சொல்றதும் பொண்ணு என்னன்னா எனக்கு வேலை போகவே கஷ்டமா இருக்குன்னு சொல்றதும் இதெல்லாம் சரியா?” என்ற போது


ரமணா செல்வியைப் பார்த்து “அப்போ மேடம் என்ன ஐடியா வைச்சு இருக்கீங்கன்னு சொல்லுங்க?”


பாவை அப்பாவைப் பார்த்து முறைக்க அவரோ அவளைப் பார்த்து கண்ணைக் காட்டினார்.


செல்வி ஆர்வமாக “நான் சொல்றதைக் கேளுங்க நாம எப்படி வாணிக்கு ஒரு நல்ல வரனா பார்த்து முடிச்சோமோ அதே மாதிரி பாவைக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் முடிச்சிடலாம் நாமளும் நிம்மதியா இருக்கலாம் ரெண்டு பொண்ணுங்களும் நல்லபடியா வாழ்வாங்க என்ன நான் சொல்றது நல்ல யோசனையா இருக்கா?” என்றார்.


உடனே பாவை “அம்மா என்னை வெளியே துரத்தி விட்டுட்டு நீங்க நிம்மதியா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்க அதானே அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை மேடம் நான் இங்கேத் தான் இருப்பேன் உங்களையும் அப்பாவையும் எப்போவும் தொல்லை பண்ணிட்டுத் தான் இருப்பேன் என்னை விட்டுட்டு தனியா போகலாம்னு நினைச்சீங்க அவ்வளவுதான்” என்றாள் கோபத்தோடு…


அதைக் கவனித்த ரமணா “ப்ச் பாவை இதுக்கு எல்லாம் கோபப்பட்டுட்டு அப்பா சொல்றேன் நீ தொல்லை பண்ணு செல்லம் நான் உன்னை எங்கேயும் அனுப்ப மாட்டேன்” என்று ஆறுதலாய் கூறவும் தான் பாவை முகத்தில் சிரிப்பே வந்தது.


அதைப் பார்த்த செல்வி “ம்ஹீம் இது சரி வராது இப்படி இருந்தால் எப்படி? கடவுளே நீயே என் பொண்ணுக்கு ஒரு வழியைக் கொடு” என்று புலம்பிக் கொண்டு சென்றவர் இரவுக்கான உணவை
மூவருமாக சாப்பிட்டு முடித்தனர்.


மறுநாள்…

கிம்மை சந்திக்கலாம் என்று பார்த்தால் அவனுடைய அறையில் யாராவது ஒருவர் இருந்துக் கொண்டே இருந்தார்கள்.அதனால் உள்ளே சென்று அவனை சந்திப்பது சிரமமாக இருந்தது பாவைக்கு.


அதனால் பாவை எப்போதும் போல் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
விமலாத் தான் அவளிடம் வம்பு பேசிக் கொண்டிருந்தாள்.


“ஹேய் கிம் சாரோட போனியே எப்படி இருந்துச்சு ஒரே ரொமாண்டிக்கா இருந்துச்சா?”
என்றதற்கு


அவளோ “ஹேய் நீ வேற ஏன்டி இப்படி படுத்துறே? அந்தாளுக்கு தமிழ் தெரியும்னு தெரிஞ்ச உடனே நான் பட்ட அவஸ்தை அது எனக்கு மட்டும் தான் தெரியும்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே கிம்மின் அறையிலிருந்து பாவைக்கு அழைப்பு வரவும் எழுந்துச் சென்றாள்.


உடனே விமலா “பாருடி உடனே அழைப்பு வந்திடுச்சு” என்று கிண்டலடித்தாள்.இவளோ அவசரமாக எழுந்துச் சென்றவள்
அங்கே அவனைப் பார்க்கவும் கிம்மிடம் வணக்கம் சொல்லி விட்டு நின்றுக் கொண்டிருந்தாள்.


கிம் “பாவை நேத்து போயிட்டு வந்த கம்பெனிப் பத்தி சில டீடெய்ல்ஸ் சொன்னேன்ல அந்த நோட்ஸ் எடுத்துட்டு வாங்க இன்னும் பத்து நிமிசத்துல மீட்டிங் இருக்கு அதைப் பற்றி பேசனும்” என்றான்.


பாவைக்கு ஒன்றுமே புரியவில்லை.கிம்மிடம் சில வார்த்தைகள் பற்றி அர்த்தம் கேட்கலாம் என்று நினைத்திருந்தாள்.இப்போது அது எதற்குமே வாய்ப்பில்லை என்றானது.


மெதுவாக “சார்” என்று அழைக்கவும் அவனோ மடிக்கணினியைப் பார்த்தப்படி “ம்ம்… சீக்கிரம் போங்க” என்றான்.


அவளும் வேறு வழியில்லாமல் சந்திப்பு நிகழ்ச்சி இருக்கும் அறையில் வந்து உட்கார்ந்தாள்.எல்லோரும் அங்கே அமர்ந்திருக்க கிம் பேச ஆரம்பித்தான்.அப்பொழுது அவன் ஒரு இயந்திரத்தைப் பற்றிச் சொன்னவன் பாவையிடம் அந்த விவரங்களைப் பற்றிச் சொன்னான்.

உடனே இவளும் வேறு வழியில்லாமல் அவள் எழுதியதை ஆங்கிலத்தில் வாசிக்க இடையினில் வந்த ஹங்குவான் மொழியில் “பலோ ஒசியாயோ - சரியாக வந்திருக்க” என்று அவள் சொன்னாள்.


அவள் அப்படி சொல்லவும் எல்லோரும் அவளைப் பார்த்தனர்.இவளோ திருதிருவென்று விழிக்க கிம் அவளைப் பார்த்தான்.


பாவை “அது எனக்கு என்ன அர்த்தம்னு தெரியலை சார் சொன்னதே எழுதிட்டேன்” என்று அப்பாவியாய்….


உடனே கிம் அதற்கான விளக்கத்தைச் சொன்னவன் பாவையிடம் “இன்னும் இருக்கா?” என்றதற்கு “ஆமாம்” என்றாள்.


அவனும் தற்போது சரியென்று பாவையிடம் அந்த விவரங்களைப் பற்றி சொல்லச் சொன்னான்.அவளும் வேறு வழியில்லாமல் மற்ற விவரங்களைச் சொல்ல ஆரம்பிக்க இடையினில் ஹங்குவான் மொழியில் “அமாடு ,குவான்சானா, டெட்டேல்லோ” என்று அவள் திக்கித் திணறிப் பேச அவனுக்கு சிரிப்பாக வந்தது.


அதை அடக்கியபடியே பதில் சொல்ல அங்கிருந்தவர்களுக்கு ஏனோ இது ஒரு புது அனுபவமாக இருந்தது.சந்திப்பு நிகழ்ச்சி முடியும் போது அங்கிருந்தவர்களில் ஒருவர் “இன்னைக்கு மீட்டிங்ல கொரியன் லாங்குவேஜ் க்ளாஸ் நல்லா போச்சு கிம் நல்ல என்டர்டெயிண்ட்டா இருந்துச்சு ஆனால் இது தான் கடைசி முறை” என்று சொல்லி விட்டு புன்னகையோடு சென்றார்.


அதை அருகில் இருந்த பாவையின் காதிலும் விழ அவளுக்கு பயத்தில் உடம்பே நடுங்கியது.இன்றைக்கு தன்னுடைய நிலைமையை நினைத்து அவளுக்கே கஷ்டமாக இருந்தது.


எல்லோரும் அங்கிருந்துச் செல்லவும் பாவையும் கிம் மட்டும் இருந்தார்கள்.


கிம் “என்கிட்ட ஏன் முதலிலேயே இதைப் பத்தி கேட்கலை?”


அவளோ “சார் நீங்க பிஸியாக இருந்தீங்க” என்ற போது…


“என்னோட நம்பர் உங்ககிட்ட இருக்கா?”


அவளோ இல்லை என்றதும் “உங்க நம்பர் சொல்லுங்க” என்றதும் தன்னுடைய கைப்பேசியில் இருந்து அவளுடைய எண்ணிற்கு அழைப்பு விடுத்தவன் “இது தான் என்னோட நம்பர் உங்க நம்பரை நான் சேவ் பண்ணிக்கிறேன் இனிமேல் எதாவது தேவைன்னா கால் பண்ணுங்க” என்று சொல்லி விட்டுச் சென்றான்.


இவளோ நடப்பதை எதுவும் நம்ப முடியாமல் அப்படியே நின்றாள்.


கிம் மனதிலோ ‘'பாவை அவனை சந்திப்பதற்காக முயற்சி செய்ததை தன் இருப்பிடத்தில் இருந்தே கவனித்தவன் அவளின் கைப்பேசி எண்ணை வாங்குவதற்கான வழியாக இதைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்க அதுவே நடந்துப் போனதை எண்ணி சிரித்தான்.



வேலைகள் முடிந்து எப்போதும் போல் வெளியே வரவும் பாவை,விமலா,கிம் என மூன்று பேரும் ஒன்றாக வந்தனர்.விமலாவிற்கு அவனோடு பேச வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தில் யோசித்துக் கொண்டே வந்தவள் அதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தாள்.


விமலா “சார் சென்னைக்கு இப்போத் தான் முதல் தடவையா வந்து இருக்கீங்களா?”


அவனோ “இல்லை ஏற்கனவே நிறைய முறை வந்திருக்கேன்” என்றான்.


உடனே விமலா “சுத்திப் பார்த்தீங்களா?”


கிம் உடனே “இல்லை அதுக்கான நேரம் இருந்ததில்லை எப்பவும் குறிப்பிட்ட நாள்ல வந்து போற மாதிரி தான் இருந்திருக்கு அதனால ஊரைச் சுத்திப் பார்க்க நேரம் இருந்ததில்லை” என்றான்.


உடனே விமலா “ம்ம்… பரவாயில்லை சார் அதனால் இன்னைக்கு நாம அவுட்டிங் போகலாம் நம்மக் கூட பாவையும் வருவாள்” என்றாள்.


உடனே பாவை விமலாவைப் பார்த்து முறைக்க அவளோ கண்களை உருட்டிக் கொண்டிருந்தாள்.


‘மவளே இப்போ மட்டும் நான் வரலைன்னு சொன்னேன்னு வை உன்னைக் கொண்ணுடுவேன்’இவள் சைகையில் காட்டா பாவையோ ‘'முடியாது” என்பது போல் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.


இதை எல்லாம் கவனித்தும் கவனிக்காதது போல் இருந்த கிம் தொண்டையை செருமியபடி “பாவைக்கு நான் வர்றது பிடிக்கல போல அதனால நீங்க போங்க” என்றதும்


விமலா “அப்படி எல்லாம் இல்லை சார் அவ வீட்ல என்னச் சொல்லலாம்னு யோசிச்சுட்டு இருக்கா?” என்றதும்

கிம் சிரித்துக் கொண்டே “கொரியாவுல இந்த மாதிரி பிரச்சினைல இல்லை மேஜர் ஆகிட்டா எல்லோரும் தனியா போய் அவங்க லைப்பை பார்த்துப்பாங்க அதனால அவங்க இஷ்டப்படி வாழ்ந்துக்கலாம்” என்று அவன் பொதுவாகச் சொல்ல…


உடனே பாவை “ஆனால் இந்தியாவுல அப்படிக் கிடையாது பெற்றவங்க கூடத் தான் இருக்கும் அப்போத் தான் ஒழுக்கமும் பாசமும் இருக்கும்னு நினைக்கிறாங்க ஆனால் அதுக்காக எல்லோரும் சரின்னு நான் சொல்ல வர்றலை பெத்தவங்களோடு இருந்து தப்பு பண்ணுறவங்களும் இருக்கிறாங்க ஆனால் நம்மளை விட பெரியவங்க வீட்டில் இருக்கும் போது அதை நாம பாலோ பண்ணனும்னு நினைப்போம்” என்றாள்.


கிம் அவளைப் பார்த்தான்.விமலாவிற்கு மேற்கொண்டு பேச்சை வளர்க்க பிடிக்காமல் “அப்புறம் சார் சாப்பாடு கொரியாவில் ரொம்ப நல்லா இருக்குமே வீடியோஸ் பார்த்தேன்”


“ம்ம்… டெசர்ட்ஸ் உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்” என்றான்.


மூவருமாக வெளியே வரவும் கிம் “நான் என் காரை எடுத்துட்டு வரேன் அதுல போகலாம்” என்று சொல்லவும் விமலா பாவையின் கையைப் பிடித்துக் கொண்டாள்.


பாவை மெதுவாக “ஹேய் நான் வீட்டுக்கு போகனும்”


“போலாம் போலாம் அமைதியா என் கூட வா” என்று முறைத்தாள்.பாவைக்கு இதற்கு மேல் பேசினால் வேலைக்கு ஆகாது என்று புரிந்துக் கொண்டவள் அமைதியாக நின்றாள்.


காரை எடுத்துக் கொண்டு வந்த கிம் காரை விட்டு இறங்கி கதவை திறந்து “உள்ளே உட்காருங்க” என்றான்.


விமலாவிற்கு இந்தக் காட்சியைப் பார்க்கவும் ஏதோ கே நாடகத்தில் நுழைந்ததாக எண்ணிக் கொண்டாள்.பின்னால் அவளும் அடுத்து பாவையும் உட்கார்ந்தார்கள்.


முன்னால் அமர்ந்து காரை ஓட்டியவன் பின்னால் இருந்த விமலாவிடம் பேசிக் கொண்டு வந்தான்.பாவை அமைதியாக இருந்தான்.தன் பக்க இருந்த கண்ணாடியை அவளைப் பார்ப்பது போல் திருப்பி விட்டத்தை கவனித்த விமலா மனதினுள் ‘'ஹோ கதை அப்படி போகுதா! இல்லையே எனக்கில்லையே’ என்று பெரூமூச்சு விட்டுக் கொண்டாள்.



கிம் விமலாவிடம் “உங்க ப்ரெண்ட் தனியாக இருந்தால் தான் நல்லா பேசுவாங்களோ?” என்று கேட்கவும்…


பாவை கிம்மை பார்த்து முறைக்க வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.விமலா “என்னச் சொல்லுறீங்க சார் புரியலை” என்றாள்.


அவனோ புன்னகையை தவழ விட்டப்படி “ப்ச்… ஆபிஸ்ல உங்கக் கூட இருக்கும் போது நல்லா சிரிச்சு எல்லோரையும் நல்லா கிண்டல் பண்ணி பேசுறாங்க அதே மாதிரி நேத்து நாங்க தனியா போகும் போதும் நல்லா பேசினாங்க இப்போ என்னன்னா அமைதியா உருவமா இருக்காங்க” என்றான்.


இதைக் கேட்டதும் பாவை “சார் நேத்து நாம ரெண்டுபேரும் நல்லா பேசி புரிஞ்சுக்கிட்டோம் இன்னைக்கு நீங்களும் விமலாவும் பேசி ஓரளவு ஓகேன்னா அடுத்து” என்று அவள் பேசி முடிக்க முன்னரே விமலா லேசாக பாவையின் தொடையில் தட்டி “அமைதியாக இரு” என்று சைகைச் செய்தாள்.


உடனே பாவை முகத்தை திருப்பிக் கொண்டு கோபத்தோடு அமர்ந்தாள்.இதை எல்லாம் கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டிருந்த கிம்மிற்கு சிரிப்பாகவும் அவனுடைய மனதில் இன்னும் பாவையின் இடமும் அதிகமானது.


உதட்டில் பொய் புன்னகை தவழ விட்டப்படி செல்லும் இன்றைய மக்களுக்கு மத்தியில் உணர்ச்சியை உடனே காட்டும் பாவையின் செயல் அவனை கவர்ந்தது.


மூவருமாக ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு சென்றார்கள்.இம்முறை மூவருமாக அசைவ உணவகத்திற்கு வந்திருந்தனர்.


பாவை மெதுவாக விமலாவிடம் “ஹோய் ஜாலி செமையா இருக்கும்” என்றாள்.


உடனே விமலா “இன்னைக்கு செவ்வாய்கிழமை நோ நான் வெஜ்” என்றதும் அவசர அவசரமாக தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தவள் “ஹேய் இன்னைக்கு வியாழக்கிழமை தான் அதனால சாப்பிடலாம்” என்றாள்.


உடனே விமலா சிரித்துக் கொண்டே “நாளைக்கு வெள்ளிக்கிழமை அதனால இன்னைக்கு வேண்டாம்” என்றாள்.



பாவை “கூடிட்டு வந்துட்டு கடுப்பு ஏத்துறே விமலா”


அவளோ “பார்டா… கோபத்தை அழைக்கும் போது வர மாட்டேன்னு பிகு பண்ணுறது இப்போ என்னனா சாப்பிட சண்டைப் போடுறது உன்னை புரிஞ்சுக்கவே முடியலை” என்றாள்.



இவர்கள் இருவரின் பேச்சைக் கவனித்த கிம் விமலாவிடம் “என்னாச்சு எனக்கு ஒன்னுமே புரியலை” என்றான்.


உடனே பாவை முந்திக்கொண்டு “சார் நான் வாரத்தில் ரெண்டு நாள் நான் வெஜ் சாப்பிட மாட்டேன் அதைப்பத்தி சொல்லி என்னை கிண்டல் பண்ணுற” என்றதும் அங்கே வேலை செய்பவர் இவர்களுக்கான இடத்தைச் சொல்லவும் மூவரும் இருக்கையில் போய் அமர கிம்மிடம் பேசிக் கொண்டே அவனருகில் போய் அமர்ந்தாள்.



இதை மற்ற இருவரும் கவனித்து இருக்க பாவை தான் சாதாரணமாக அமரவும் பாவை “சார் எங்க வீட்ல அதான் பழக்கம் அதை சொல்லி என்னை சாப்பிடவே விடலை” என்றாள்..

உடனே கிம் புரியாமல் “ஏன் சாப்பிட மாட்டீங்க? அதுவும் சாப்பாடு தானே?”


அவளோ “சார் இது இந்தியாவில் சில பேர் பாலோ பண்ணுற பழக்கம் தான் இது” என்றதும் அதைப் பற்றி தெரிந்ததைச் சொன்னாள்.l


விமலா இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.கிம்மை அவள் சாப்பிட அழைத்து வந்தது போக இப்போது அவனுக்கு அருகில் பாவை இருப்பதைப் பார்த்தவள் மனதினுள் ‘'இல்லை எனக்கில்லை” என்று தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டிருந்தாள்.


பேச்சுவார்த்தையில் ஓரளவு சமரசம் வரவே பாவை தான் எங்கே அமர்ந்திருக்கிறோம்? என்பது உரைக்க விமலாவைப் பார்த்து திருதிருவென்று விழித்தாள்.


அவளோ ‘'தனியாக என்கிட்ட வருவேல்ல அப்போ இருக்கு’ என்ற யோசனையில் விமலா தன்னைப் பார்ப்பதை புரிந்துக் கொண்டவள் எழுந்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் போது அவர்கள் சொல்லியிருந்த உணவுகளும் வர வேறு வழியில்லாமல் அப்படியே உட்கார்ந்தாள் பாவை.


கிம் பாவைக்கு ஒவ்வொன்றாக பார்த்து கவனமாக எடுத்து வைத்து சாப்பிடக் கொடுத்தான்.பக்கத்தில் விமலா இருப்பதால் அவளுக்கு ஒரு சிறு கவனிப்பு.


சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாவைக்கு லேசாக புரை ஏறி இருமல் வரவும் கிம் அவளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பதைப் பார்த்து விமலா மனதினுள் மறுபடியும் ‘'ஹய்யோ எனக்கில்லையே எனக்கில்லை’ என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தாள்.



விமலாவின் மனதையும் கிம்மின் விருப்பத்தையும் அறியாமல் பாவை அசைவ உணவை எடுத்து நன்றாக இரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.


கிம் இருவரையும் வீட்டில் போய் இறக்கி விடுவதாகச் சொன்னதற்கு பாவையும் விமேலாவும் மறுத்து விட கடைசியில் இருவரிடமும் நன்றி சொல்லி விட்டு அவன் சென்று விட்டான்.


விமலா பாவையிடம் “ஹேய் சாரிடி ஏதோ பேசற ஆர்வத்துல கிம் சார்கிட்ட போய் உட்கார்ந்திட்டேன்” என்றாள்.


அவளோ மேலே பார்த்தப்படி கண்கள் கலங்கியபடி “எப்படியோ நல்லா இரு இதுக்கு மேல நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை” என்றாள்.


உடனே பாவை “என்னாச்சுன்னு சொல்லு நான் ஏன் இப்படி பண்ணுறே?”


உடனே விமலா “வேணாம் இப்போ நான் எதுவும் சொல்லலை எல்லாம் நீ தன்னால சொல்லுவே அப்போ பார்த்துக்கிறேன்” என்று இருவரும் பேசியபடியே அவரவர் இருப்பிடத்திற்குச் சென்றனர்.