• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 15

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
அத்தியாயம் 15

"வா செழியா!" வாசலில் வருத்தத்தோடு நின்றவனை மகேந்திரன் உள்ளே அழைக்க,

"வாங்க அண்ணா!" என்றாள் அஜிதாவும் தொடர்ந்து.

"வாங்க..!" என்ற கண்ணனின் குரலில் உள்ளே வந்த செழியன்,

"நைட்டு ஏதோ ஒரு தாட்ல.." என்ன சொல்ல என தெரியாமல் செழியன் தடுமாற,

"அதெல்லாம் விடுங்க.. உள்ள போய் பிரெஷ் ஆகிட்டு வாங்க.. சாப்பிடலாம்" என்ற அஜிதா,

"அத்த! செழியன் அண்ணா வந்தாச்சு.. அவங்களுக்கு பசிக்கும்.. சீக்கிரம் வாங்க.. சமைக்கணும்" என்று கூறவும் சித்ராவும் உடனே வந்துவிட்டார்.

கண்ணன் எதுவும் கூறாமல் நிற்க, "உள்ள போ செழியா!" என்றான் மகேந்திரன்.

அவன் முகத்தில் இருந்து எதையும் அறிய முடியவில்லை செழியனிற்கு. மலர் செய்தது தவறு என்றாலும் தான் செய்தது முட்டாள்தனம் என நன்றாய் புரிய, மன்னிப்பு கேட்கவும் முடியாமல் நின்றான் செழியன்.

"ப்பா!" என்று மகேந்திரன் கண்ணசைக்கவும் தான் கண்ணன் தெளியவே செய்தார் எனலாம்.

"சீக்கிரம் வாங்க.. சாப்பிடலாம்..
மலர் கூட இன்னும் எதுவும் சாப்பிடல" என்று கண்ணன் பேசியதில் திரும்பி மலர் அறை பக்கம் நடந்தான் செழியன்.

"உங்க தங்கச்சி மட்டும் இந்நேரம் என் தங்கச்சியா இருந்திருந்தா நல்லா நாலு அறை கன்னத்துலேயே குடுத்துருப்பேன்" அஜிதா கூறவும் மகேந்திரன் கோபமாகவும் பெற்றவர்கள் பாவமாகவும் நிற்க,

"என்ன முறைக்குறிங்க? நிஜமா தான் சொல்றேன்.. அவளால இவங்களுக்கு எவ்வளவு கஷ்டம்? அத்தை மாமாவ பார்க்கவே சங்கடப்படுறாங்க.. போகும் போது நல்ல புத்தி சொல்லி அனுப்புங்க அவளுக்கு" அஜிதா கூறிவிட்டு சமையலறை சென்றுவிட்டாள்.

"விடுங்க பா.. இவளுக்கு மலர எதாவது சொல்லனும்.. நான் போய் வாழை இலை வாங்கிட்டு வந்துர்றேன்" என மகேந்திரனும் கிளம்பிவிட்டான்.

மலர் அறைக்குள் நுழையவும் செழியனின் கண்கள் கண்டு கொண்டது, தான் விட்டு சென்ற இடத்தில் இருந்து அசையாமல் அமர்ந்திருந்த மனைவியை தான்.

எதுவும் பேச தோன்றவில்லை. உண்மை தெரிந்து வருந்தி இருப்பாள் என்று புரிந்த போதும் வார்த்தைகளின் காயம் அப்படியே இருக்க அதை மறைக்க முடியவில்லை செழியனிற்கு.

நொடி நேர சிந்தனைகள் உலகை வலம் வர, அவனைக் கண்டுவிட்டவளோ அருகே ஓடி தான் வந்திருந்தாள்.

"சாரிங்க.. ப்ளீஸ் மன்னிச்சுடுங்க.." இன்னும் அதே வார்த்தைகள் தான்.. அது உள்ளிருந்து வருவது தான். கைகள் அவனை சுற்றி இறுக்கி இருக்க, ஓடி வந்த வேகத்தில் அணைத்தும் இருந்தாள்.

கதவை மெதுவாய் அடைத்தவன் அவளை தன்னில் இருந்து பிரித்தான்.

"விடு சரியாகிடும்.." என்றதோடு அவன் விலகி குளியலறைக்குள் சென்றுவிட, அவன் விலகல் இன்னும் பயமுறுத்தியது மலருக்கு.

மூன்றே நாட்களில் முந்நூறு முறை மலர் என்றவன் இப்படி அவள் பெயரை மறந்து போயிருக்க, வெறித்த பார்வையுடன் நின்றுவிட்டாள் மலர்.

காலம் எதையும் மாற்ற கூடியது தானே? காதலும் தான். ஒரே இரவில் கண்களில் ஜீவனற்று வந்தவனை கண்ட நொடி தன்னையே அதிகமாய் வெறுத்திருந்தாள் மலர்.

உள்ளே சென்றவனும் மூச்சுமுட்டி போயிருந்தான். அவள் தவறை உணர்ந்திருந்தாலும் அவள் தந்த காயம் தான் அவன் முன் நின்றது.

இதுவும் கடந்து போகும் நினைத்துக் கொண்டவன் முகம் கழுவிக் கொண்டு வெளியே வர, அவன் முன் வந்து நின்றாள் மலர்.

கண்களோடு கலந்து பேசிட இயலாவிட்டாலும் அவன் தன்னை மலர் என்று ஒரு வார்த்தை அழைத்துவிட்டால் போதும் என்று இருந்தது.

"வெளில எல்லாரும் வெயிட் பண்றாங்க.. போகலாம்" என்றவன் அவளைத் தாண்டிக் கொண்டு செல்ல,

"ஒரு நிமிஷம்!" என்றாள் வழி மறித்து.

என்ன என்ற பார்வை அவனிடம். அதில் நிலைத்து நின்றவள், "சாரிங்க.. நான் வேணும்னு...." என அவள் பேச வருவதற்குள்,

"போதும்! இதையே திரும்ப திரும்ப பேச வேண்டாம்.. எனக்கு அதுல விருப்பம் இல்ல.. எனக்கு புரியுது.. ஆனா அக்சப்ட் பண்ணிக்க முடியல.. ப்ளீஸ்!" என்றவன் நகர்ந்து சென்றுவிட,

"அப்போ அதுவரை?" என்றாள் அதே இடத்தில் நின்று.

"என்ன?"

"என்னை மன்னிக்க உங்களுக்கு விருப்பம் இல்லை இல்ல?" பாவமாய் கேட்பவளிடம் இல்லை என்று கூறிட முடியவில்லை.

"எனக்கு மறக்கணும் ம... மலர்விழி" என்று கூறி வெளியேறிவிட்டான்.

நீண்ட நேரம் ஆன பின்பு அஜிதாவின் குரலுக்கு மலர் வெளியே வர, அங்கே சாப்பிட தயாராய் அமர்ந்திருந்தான் செழியன்.

"நீயும் உட்காரு டா!" மகேந்திரன் குரலுக்கு,

"ஏன் நீங்க சொல்லலைனா அவளுக்கு தெரியாதா?" என அஜிதா கேட்க,

"நான் மலர் மாமா பக்கத்துல" என்ற ரச்சனா மலருக்கும் மாமாவிற்கும் இடையில் அமர்ந்து கதை பேச அவளுடன் சிரித்து பேசியபடியே சாப்பிட்டு முடித்தான் செழியன்.

முதன் முறையாய் அண்ணன் மகள் மீது கோபமும் பொறாமையும் மலருக்கு.

"என் பொண்ணு என்ன டி பண்ணினா?" பார்வையை வைத்தே அஜிதா கேட்க,

"ப்ச்!" என்ற சலிப்புடன் பாதியில் எழுந்து கொண்டாள் மலர்.

"என்ன மலர்? போதுமா?" மகேந்திரன் கேட்க, ம்ம் என்ற முனகலுடன் சென்றவளை செழியன் பார்த்தானே தவிர கேட்கவில்லை.

"பக்கத்துல கோவில் எங்க இருக்கு மாமா?" செழியன் கேட்க, அதுவரை கவலையில் மகளைப் பார்த்து நின்ற கண்ணன்,

"இங்க தான்.." என்று வழியைக் கூறவும்,

"மாமா நானும்!" என்றாள் ரச்சனா.

"இப்ப நானும் அத்தையும் போய்ட்டு வர்றோம்.. வந்து ஈவ்னிங்கா எல்லாருமா வெளில போகலாம்" என்று கூறவும் மலரோடு மலர் வீட்டினரின் முகமும் பிரகாசம் அடைய, ரச்சனாவோ அழ ஆரம்பித்துவிட்டாள்.

"இவ வேற! நேரம் காலம் தெரியாம.." என்று அஜிதா ரச்சனாவை கையில் தூக்க,

"அப்படியே அவ அப்பாவை மாதிரி அதானே?" என்று முறைத்தபடி என்றாலும் தன்னை தானே டேமேஜ் செய்து கொண்டான் மகேந்திரன்.

"நான் ஃபுல் ஸ்டாப் வச்ச அப்புறம் கோலம் போட்டது நீங்க.. உண்மையை எல்லாம் நான் அடிக்கடி சொல்றது இல்ல" என்று அஜிதா கூற, வீட்டில் ஒரு இலகு நிலை.

மலர் அருகே வந்தும் "இப்படியா டி சின்ன புள்ள கூட போட்டி போடுவ? ஒரு பேச்சுக்காச்சும் அத்தை கூட வான்னு சொன்னியா அவளை?" என்று அஜிதா கேட்க,

"எனக்கு இப்ப வில்லியே அவ தான்.. எனக்கு டைம் ஆச்சு.. பை" என்று துள்ளி ஓடிய மலரை புன்னகையுடன் விழி தொடர்ந்தாள் அஜிதா.

மலர் தன் அறைக்கு வந்த பொழுது அவளுக்கு முன்பே வந்திருந்தான்.

செழியன் இவ்வளவு சோர்வாய் உணர்ந்ததே இல்லை. அதுவும் திருமணம் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பித்த பின் அவன் இப்படி இருந்ததே இல்லை எனலாம்.

எதிலாவது மனதை திசை திருப்பலாம் என்றால் நண்பர்கள் வீடு என்பதை தாண்டி எதுவும் நியாபகம் வராமல் போக சாப்பிடும் பொழுது தான் கடவுள் கண்முன் வந்தார்.

உடனே அதை எப்படி சொல்வது என யோசிக்க ரச்சனாவே அவன் வேலையை சுலபம் ஆக்கிவிட்டாள்.

மலரிடம் கேட்காமல் முடிவெடுத்தவன் அவள் வந்ததும் தான் நியாபகம் வந்தவனாக, "போலாம் தானே?" என்று கேட்க, அவனின் பெயர் அழைப்பு இல்லா கேள்வியில் மனம் சுணங்கினாலும் ஒரு பற்றுதல் கிடைத்த மகிழ்ச்சியில் தலையாட்டினாள்.

மகேந்திரனின் வண்டியை எடுத்துக் கொண்டு இருவரும் கிளம்ப, மகளின் முகத்தினில் இருந்த மலர்ச்சி பெற்றவர்களுக்கு நிம்மதியை தந்தது.

கட்டை விரலை உயர்த்திக் காட்டி அஜிதா வழியனுப்பி வைக்க, சிவபெருமான் கோவில் தரிசனத்திற்கு சென்றனர் இருவரும்.

அவர்கள் சென்றதும் அங்கே வருகை தந்தான் கவின்.

"வாப்பா! நீ எப்ப வந்த?" என கண்ணன் கேட்க,

"உள்ள வா டா" என்று சென்றார் சித்ரா.

"இப்ப தான் வந்தேன்ப்பா.. அம்மாவை பாக்கணும்னு தோணுச்சு அதான்.. ஈவினிங் கிளம்பிடுவேன்" என்றான்.

"ரொம்ப டையார்ட்டா இருக்க.. நீ மட்டும் தான் டிரைவ் பண்ணியா?" என்று மகேந்திரன் கேட்கவும்,

"ண்ணா! இவ்ளோ பிரில்லியண்ட்டா இருக்க உங்களை போய் அண்ணி அடிக்கடி கலாய்க்குறாங்களே!" என்றான் கவின்.

"இது கூட உன் அண்ணி காதுல கேட்டுடாம பாத்துக்கோ" என்று அவன் சிரிக்க,

"மலர் இப்ப ஓகே தானே?" என்று கவின் கேட்டான்.

"மலர் ஓகே மாதிரி தான் தெரியுது.. ஆனா செழியன் என்ன நினைக்குறான்னு தான் தெரியல" என்று கூற, மகேந்திரனுக்கு தெரியுமா தெரியாதா என்று தெரியாமல் வாயை விடவில்லை கவின்.

"அதெல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும் ண்ணா.. சின்ன சின்ன மிஸ்ஸண்டர்ஸ்டண்டிங் வர்றது எல்லாம் சகஜம் தானே?" என்று கவின் கூறியபடி உள்ளே வர,

"கவி!" என்று ஓடி வந்தாள் ரச்சனா. ரச்சனாவை ஒளித்து விட்டபின்பே கிளம்பி இருந்தனர் இருவர்.

"ரச்சு பாப்பா!" என கவின் அவளை அள்ளிக் கொள்ள,

"மிஸ்ஸண்டர்ஸ்டண்டிங் பத்தி எல்லாம் பேசுற! நீ சிங்கிள் தானே?" சந்தேகமாய் அஜிதா கேட்க,

"சிங்கிள்னா உங்களுக்கு அவ்வளவு சீப்பா போச்சா? ஏன் எங்களுக்கு தெரியாதாக்கும்?" என்றவன்,

"ஏதோ அப்பப்ப அங்கங்க கேள்விபட்டிருக்கோம்" என்றான் பொதுவாய்.

"நீ எப்ப டா கிளம்புற? நாளைக்கு நீயும் இரேன் பார்ட்டிக்கு" என்று கண்ணன் அழைக்க,

"இல்ல பா.. அங்க பிரேம் மட்டும் தனியா இருப்பான்.. இதுல ஒரு பைத்தியம் வேற எங்க கூடவே இருக்கு.. நான் கிளம்பனும்.. பார்ட்டி தானே? நாம தனியா வச்சுக்கலாம்" என்று கூறி சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பிவிட்டான்.

கோவில் பிரகாரத்தில் இருந்தனர் செழியனும் மலரும்.

செழியனுக்கு மலரின் மீதான வருத்தம் தாண்டி காதல் குறையவில்லை. மலர் இன்னும் அவன் காதலை முழுதாய் தெரிந்து கொள்ளவில்லை.

செழியன் கேட்ட அமைதியும் நிம்மதியும் அங்கே அவனுக்கு கிடைத்திருக்க, மலர் மனதுடன் கண்களும் செழியனிடம் தான் இருந்தது.

"நாலு வருஷமா உங்களுக்கு என்னை தெரியுமா?" செழியனைப் பார்த்தபடி அமர்ந்திருந்த மலர் கேட்க, வேறு சிந்தனையில் இருந்தவன் அவள் கேள்வியில் அந்த நினைவுகளை மனதில் கொண்டு வந்து ஆம் என்று தலையசைத்தான்.

"முன் கோபத்தை மட்டும் குறைன்னு அண்ணி அடிக்கடி சொல்லுவாங்க.." என்று வெறித்த பார்வை பார்த்த மலர்,

"எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கேன் இல்ல உங்கள.." என்று கேட்க,

"ப்ச்! இந்த பேச்சு வேண்டாம்னு சொன்னேன்" என்றான் மீணடுமாய்.

"நான் ரொம்ப மோசம்.. நான் இப்படினு தெரிஞ்சி இருந்தா இந்த நாலு வருஷத்தை வேஸ்ட் பண்ணிருக்க மாட்டிங்க இல்ல?" என்றாள் கண்களில் வலியுடன்.

தொடரும்..
 
  • Love
Reactions: Vimala Ashokan

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
மனதுக்குள் ஆயிரம் ஆசைகள் கொண்டு
மணம் முடித்தால்
மறுநாளே மனைவியிடம்
மன வருத்தம் கொள்வோம் என
மருந்துக்கும் நினைக்கவில்லை மலரின் செழியன்....
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
மனதுக்குள் ஆயிரம் ஆசைகள் கொண்டு
மணம் முடித்தால்
மறுநாளே மனைவியிடம்
மன வருத்தம் கொள்வோம் என
மருந்துக்கும் நினைக்கவில்லை மலரின் செழியன்....
அழகு