இனியன் தன் மன வேதனைகளை பாடலாக பாடி முடித்த பிறகு தனது கிடாரை பத்திரமாக தன் பையில் எடுத்து வைத்துவிட்டு ஜன்னல் வழியாக வெளியேஇருக்கும் இயற்கை எழிலை ரசித்துக் கொண்டிருந்தான்..
அதே சமயம்......
பாடலை ரசித்துக் கொண்டே இருந்த இன்னிசை அவன் மட்டும்தான் கிடார் வைத்து சினிமா பாடலை பாடுவானா நாமும் ஒரு பாடகர் தானே அதுவும் பாரம்பரியமான கர்நாடக பாடலை பாடும் பெண் நான் நான் மட்டும் பொழுதுபோக்கிற்கு பாட மாட்டேனே என்ன என்று இசை அம்பை இடம் கூற..
அடியே அவன் ஏதோ பாடுறா நீயும் போட்டி போட்டு பாடுவியா உன்மனசுல இந்த போட்டி பொறாமை இருக்கிற வரைக்கும் உன்னை யாராலும் அசைக்க முடியாது இசை இருந்தாலும் இது எல்லா இடத்துக்கும் பயன்படாது ஞாபகம் வச்சுக்கோ..
அட போடி நீ எல்லாம் கர்நாட்டிக் சிங்கர் னு வெளியே சொல்லிக்காத..
நம்ம திறமையை நம்ம தான் காட்டனும் அப்படியே அமைதியா இருக்குற ...
உனக்கு என்ன உன் லவ்வர் இருக்காரு அவர கல்யாணம் பண்ணி செட்டில் ஆகப் போற ஆனால் நான் அப்படியா வேலைக்கு போகணும் சம்பாதிக்கனும் அதுக்கப்புறம் தான் எனக்கான வாழ்க்கை அமையும் என்று வேண்டுமென்றே இசை அம்பையை சீண்டினாள்..
"இசை" அந்த துரோகியை ஞாபகப்படுத்த வேண்டாம் அவன் மோசமானவன் சுயநலக்காரன் எவ்வளவு திமிர் இருந்தால் என்னை சந்தேகப்பட்டு இருப்பான்...
அவன் கூட பழகுன அந்த பத்து நாள்ல அவன் தான் உலகம்னு இருந்த ஆனா அவன் இப்படி பண்ணுவான் நினைச்சு கூட பாக்கல மத்தவங்க கூட பேசினா அது தப்பு அவன்கிட்ட மட்டுமே பேசினால் தான் நல்லது அவனைப் பொறுத்த வரைக்கும் அவனுக்கு கீழ் தான் எல்லாமே இருக்கணும்...
அவன் கூட தான் இருக்கணும் எனக்குன்னு சுதந்திரம் ஆசை எதுவுமே இருக்கக்கூடாது அப்படி பட்டவன் அந்த அவன் பேரைச் சொல்லக் கூட எனக்கு பிடிக்கலை என்று அம்பை கோபப்பட்டாள்..
சாரி அக்கா நீ இவ்வளவு கோபப்படுவ னு என்று நினைச்சு கூட பாக்கல இனிமே நான் அவளை பத்தி பேசவே மாட்டேன் சரியா சரி வா வா நாம ரெண்டு பேரும் படம் பார்க்கலாம் என்று தனக்காக சமாதானம் செய்து இருவரும் லேப்டாப்பில் மகிழ்ச்சியாக படம் பார்த்துக்கொண்டிருந்தனர்..
படம் பார்த்துக் கொண்டு இருக்கும்பொழுது இசை நான் வாஷ் ரூம் போயிட்டு வரேன் என்று அம்பை வெளியே சென்றாள்..
வாஷ் ரூம் சென்று முகம் கழுவிக் கொண்டு அம்பை வெளியே வர யாரோ ஒருவன் அவளை இடித்து விட்டான்..
அம்பை கோபமாக கண்ணு தெரியல பொண்ணுங்க வந்தா போதும் அப்படியே இடிக்க வேண்டியது இடியட்ஸ் என்று அம்பை வாயில் திட்டிக்கொண்டே முணுமுணுத்தாள்..
அவனோ அம்பையை பார்த்த அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்று கொண்டிருந்தான்..
அம்பை எதற்காக இவன் ஒரு உணர்ச்சியும் காட்டாமல் இருக்கிறார் என்று அவன் முகத்தைப் பார்க்க அவனை பார்த்தவுடன் அம்பை கண்களில் கண்ணீருடன் அவளும் உறைந்து போனாள்..
நீண்ட நேரம் ஆகியும் அக்கா வரவில்லையே என்று இசை வெளியே சென்று பார்க்க..
அம்பை நீண்டநேரமாக யாரோ ஒருவரை பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்த இன்னிசை அவளிடம் சென்று அக்கா என்று அழைத்தாள்..
அப்பொழுது சுயநினைவு வந்தவள் தன்னை சுதாகரித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அப்பொழுது அவன்..
"அம்பை என்ன மன்னிச்சிடு"
நான் செஞ்சது பெரிய தப்பு அதுக்கு நீ இப்படி ஒரு தண்டனை கொடுக்கக்கூடாது ப்ளீஸ் என்று கெஞ்சினான்..
இசை இருவரும் நடந்து கொள்ளும் விதத்தை கவனித்து புரிந்து கொண்டுவிட்டாள்..
அடடா இவர்தான் செழியனா அழகாத்தான் இருக்கார் ..
இவ்ளோ இருந்து என்ன பிரயோஜனம் என்ன அக்கா நெருப்பு மாதிரி அவ்வளவு சந்தேகப்பட்டு இருக்காரு..
எல்லா ஆம்பளைங்களும் இப்படித்தான் ஒரு பொண்ணு விரும்பினால் போதும் ஏதாவது ஒன்னு சொல்லிவிட்டு அந்த பொண்ண அழவச்சிக்கிட்டு சந்தேகப்பட்டு டார்ச்சர் பண்ண வேண்டியது...
அந்த பொண்ணு மனசு வெறுத்துப் போன பிறகுதான் அவை இல்லாத அருமை அவங்களுக்கு தெரியும் பின்னாடி செஞ்சுகிட்டு வருவானுங்க..
இந்த ஆம்பளைங்க எப்பத்தான் மாறப் போறாரோ ஒரு பொண்ணோட வலி வேதனை மனசு எல்லாத்தையும் புரிஞ்சு கொண்டு வர காதலன் அபூர்வம் தான் கடவுளே எனக்கு இதே மாதிரி காதல் வேண்டவே வேண்டாம் என்று வேண்டிக் கொண்டாள் இசை..
அப்பொழுது இசையின் பின்னால் ஒரு குரல் டேய் அண்ணா என்னடா ஒரு பொண்ணு வந்தா போதும் சைட் அடிப்பே ஒழுங்கா வாடா ரூமுக்கு என்று சொல்ல..
இசை மனதில்" யாருடா அது நம்ம மனசுல என் அக்காவை கேட்க வேண்டிய கேள்வியை பக்கத்துல இருக்கிறவர பார்த்து பேசுறது"
என்று திரும்பி பார்த்தவள் ..
அவனைப் பார்த்தவுடன் இசை தன் கண்கள் விரிய அவனை ஆச்சரியமாக பார்த்தாள்..
அவனோ அவளை கொஞ்சம் கூட மதிக்காமல் அண்ணா சீக்கிரம் வா என்று மீண்டும் சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்..
இசையோ அவனைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு அழகா இருக்கான்..
பக்கத்து கம்பார்ட்மென்ட் இருக்கிறான் அப்படி என்றால் இவன் தான் அந்த சோகப் பாடலை பாடியது இவன் முகத்துக்கும் அந்த பாடலுக்கும் சம்பந்தமே இல்லையே..
இருந்தாலும் குரல் அழகாக இருந்தது இருந்தாலும் லைட் மியூசிக் மீது எனக்கு அவ்வளவு காதல் இல்லை ஆனால் இவனைப் பார்த்தால் காதல் வரும் போல இருக்கிறதே..
இப்படிப்பட்டவன் நமக்கு கணவராக வந்தால் எப்படி இருக்கும் என்று மனதில் இஷ்டப்படி கனவுக் கோட்டை கட்டிக் கொண்டாள்..
அவள் கனவை கலைத்து வண்ணம் அம்பை
என்னடி என்ன அக்கா அப்படின்னு கூப்பிட்டு இங்க நீ என்ன அவனைப் பார்த்து ஐஸ்கட்டி மாதிரி உறைந்து போய் நிற்கிற வா உள்ள போகலாம் என்று இருவரும் தங்கள் கம்பார்ட்மெண்டிற்கு சென்றனர்..
இசை அறைக்குள் சென்று விட அம்பை கதவை சாற்றும் பொழுது அங்கே செழியன் நின்றுகொண்டிருந்தான் அவன் மீது இருக்கும் கோபத்தை காட்ட கதவை படாரென்று சாத்தினாள்..
அது செழியனின் முகத்திலே அறைந்தாற் போலிருந்தது செழியனுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது...
நாம் அன்று செய்த தவறுதான் இப்பொழுது இவளின் கோபம் வெளிப்படுகிறது அவளும் மனுஷி தானே
அவளுக்கு வலி வேதனை அனைத்தும் இருக்கும் ....
அதை புரிந்து கொள்ளாமல் நம் இஷ்டப்படி பேசினோம் அதுதான் இப்போது அவள் இப்படி வெளிப்படுத்துகிறாள்...
அவ்வளவுதான் இருந்தாலும் அம்பை என்றும் என்னை விட்டு போக மாட்டாள் என் அம்பை அக்னிகாதேவி என்றும் என்னுடைய தேவி தான் என்று மனதில் தன் காதலியை நினைத்து கொண்டே தன் கம்பார்ட்மெண்டிற்கு சென்றான் செழியன்..
செழியன் சோகமாக வந்து இருக்கையில் அமைதியாக உட்கார்ந்து இருப்பதை கண்ட இனியன்
அண்ணா என்னடா ஆச்சு நல்லாத்தானே வெளியே போன ரொம்ப நேரமா அவங்கள பார்த்துகிட்டு இருந்த நான் கூப்பிட்ட பிறகு கூட நீ ரொம்ப மெல்லமா வந்து இருக்க யார் அவங்க என்ன ஆச்சு உனக்கு என்று விசாரிக்க
எங்களோடது ஒன் மினிட் பிளாஷ்பேக் தான்...
என்னோட ஃபிரண்ட் கௌதம் கல்யாணத்துக்கு போனோம் அப்ப தான் அவள முதல் நாள் பார்த்த...
எனக்கு ரொம்ப பிடித்துப் போயிருந்தது அவளும் என்னை பார்த்து கண்ணாலே பேசி பார்த்தவுடன் காதல் கண்டவுடன் காதல் அப்படின்னு சொல்வார்களே அந்த மாதிரி எங்களுக்கும்..
ரெண்டு பேரும் கண்ணுலேயே பேசிக்கிட்டோம் மறைமுகமாக காதல் விளையாட்டு விளையாடி இருக்கும் ஆனால்..
காதலை வெளிப்படையாக சொல்லல கடைசியாக கல்யாணம் முடிஞ்சு ரிசப்ஷன் நடக்கும்பொழுது சித்தப்பா பையன் விக்னேஷ் அவன் கூட இவர் சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தா அது எனக்கு சுத்தமா பிடிக்கல அதனால ரொம்ப மோசமா அவளைத் திட்ட அதனால்தான் அவை இவ்வளவு கோபம் நான் ரொம்ப அவகிட்ட முரட்டு தனமா நடந்துகிட்டேன் அவளை தெரியாம அடிச்சிட்டேன்...
இனியன் அதிர்ச்சியாக தன் அண்ணனைப் பார்த்து
"அடப்பாவி பூனை மாதிரி இருந்த நீ இவ்வளவு வேலை பார்த்து இருக்கியா உனக்கு தேவை தான் "
பாவம் அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க நீயாடா இப்படி பண்ண இதுக்கு தான் லேட்டா லவ் பண்ணா இதுதான் பிரச்சினை இப்பவே உனக்கு 27 வயசு ஆகுது இவங்க இருக்குற கோபத்தில் பார்த்தால் இந்த ஜென்மத்துல உனக்கு கல்யாணம் ஆகாது என்று சிரித்தான் இனியன்..
டேய் போடா இதெல்லாம் குழந்தை மாதிரி என்னதான் இருந்தாலும் என் அம்பை அக்னிதேவி எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று பெருமையாக தன் சட்டை காலரை தூக்கிவிட்டு சொன்னான் செழியன்..
இனிய தன் சிரிப்பை அடக்கமுடியாமல் பேசினான்
"அட லூசு அண்ணா அவங்க பேரே சொல்லுதே அவங்க பேரு என்ன அம்பை அக்னிகா தேவி அம்பை யாருன்னு தெரியுமா மகாபாரதத்தில் பீஷ்மர் க்கு சாபம் கொடுத்து மறுஜென்மம் எடுத்து பீஷ்மரை கொன்னவங்க''
எனக்கு தெரிஞ்சு உன்மேல கொலைவெறியில் இருப்பாங்க
அம்பை மட்டுமில்ல பக்கத்துல அக்னி தேவி இருக்குது நெருப்பு கோபம் பகை எல்லாம் சேர்ந்த மாதிரி அவங்களுக்கு என்று தன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து கொண்டிருந்தான்..
செழியன் தன் சகோதரனைப் பார்த்து பார்த்து இனியன் எனக்கு சந்தோஷமா இருக்குடா நீ என்னை கிண்டல் பண்ணி எவ்வளவு நாள் ஆகுது அதே மாதிரி விழுந்து விழுந்து சிரிக்கிற இதுக்காக தாண்டா நான் காத்துக்கொண்டிருந்தேன்..
ரெண்டு வருஷம் நீ வனவாசம் இருந்த இனிமே உன் வாழ்க்கை சந்தோஷம் மட்டும்தான் இருக்கும் எனக்கு எப்படி ஒரு அக்னிதேவி கிடைச்சாலும் உனக்கும் ஒரு தேவி கிடைப்பாங்க என்று தன் தம்பியை வாழ்த்தினான் செழியன்..
இவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்த இனியன் அவன் சொன்ன உடன் கோபத்தோடு
"அண்ணா என் வாழ்க்கையில குக்கூ மட்டும் தான் இருக்குறா அவளை தவிர வேற எந்த ஒரு பொண்ணையும் மனசார என்னால் காதலிக்க முடியாது"
அப்படி நான் பண்ணா அது என் குக்கூ க்கு நான் பண்ற துரோகம்
அவ பாவம் அவ எந்த பாவமும் அறியாமல் இறந்து போயிட்டா அவ சாவுக்கு நானும் ஒரு காரணம் இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ணாம குக்கூ வை நினைச்சுகிட்டே இருக்கப் போறேன் என்று சபதம் விட்டான் இனியன்..
செழியன் தன் தம்பியைப் பார்த்தவாறு மனதில் டேய் தம்பி இப்படி பேசுற வங்க எல்லாம் எந்த நிலைக்கு வந்தாங்களே எத்தனை கதை படித்திருப்பேன்
எத்தனை சினிமாவில் பார்த்திருப்பேன் வேணா பாரு நீயும் ஒருத்திக்காக பைத்தியமாக அலைய போற ...
அந்த பொண்ணு உன்ன பயங்கரமா சுத்த விடுற போடா இது இந்த அண்ணனோட சாபம் என்று மனதில் தன் தம்பிக்கு ஒரு இனிய சாபத்தை வழங்கினான்..
அதேசமயம்...
இன்னிசை க்கு தலைவலியே வந்துவிட்டது
கம்பார்ட்மெண்டில் வந்ததிலிருந்து அம்பை சோக முகத்தோடு ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்
இவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருந்த அக்கா வெளியில் சென்று அந்த நபரை நீண்ட நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்
பிறகு உள்ளே வந்து கோபமாக கதவை சாத்தினாள் இப்போது அமைதியாக வந்து தன் சந்தோஷத்தையே கெடுக்கிறாளே என்று மனதில் புலம்பிக் கொண்டிருந்தாள்..
பொறுமையிழந்த இன்னிசை அக்கா உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்க ஒருத்தர வெளியே இவ்ளோ நேரம் பார்த்துகிட்டு இருந்தே அவர்தான் உன்னோட கா முன்னாள் காதலரா என்று இசை வெளிப்படையாக கேட்டுவிட்டாள்..
அம்பை தனக்கு வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு ஆமாம் அந்த துரோகி அவன் தான் நினைச்சு கூட பாக்கல அவனும் இந்த ட்ரெயின்ல வருவானு...
அவனை பார்த்து ஆறு மாசம் ஆச்சு இப்ப வந்து என்கிட்ட மன்னிப்பு கேட்கிறான் நான் சும்மா விடுவேனா எனக்கும் சோகம் துக்கம் வலி வேதனை எல்லாம் இருக்கும் அதை எல்லாம் அவனுக்கு இப்ப தான் புரிந்தது போல பரவாயில்லை கொஞ்ச நாள் காயட்டும் அப்பதான் அருமை தெரியும் அதுக்கு அப்புறம் போகப் போக புடிக்கலாம் என்று அம்பை சர்வ சாதாரணமாக சொன்னாள்..
இசை ஆச்சரியமாக என்ன அக்கா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் வாழ்க்கையில திரும்பி அவரை சந்திக்கவே மாட்டேன் அவனுக்கு என் வாழ்க்கைல இடமே இல்லை நான் வெறுத்து போயிட்டேன் அப்படி இப்படி சொன்ன...
இப்போ வெளியே அவர கொஞ்ச நேரம் பார்த்து வந்த பிறகு இப்படி பேசுற நீ என்ன சொல்ல வர என்று இசை குழம்பி அவ்வாறு கேட்க..
அம்பை சிரித்துக்கொண்டு இசையின் தலையில் அடித்தாள்
" லூசு தங்கச்சி இதுக்கு பெயர்தான் காதல்"
அடிக்கடி சண்டை சச்சரவு எல்லாம் வரும் அது வந்த பிறகுதான் ஒருத்தருக்கு ஒருத்தர் அதிகமா புரிஞ்சு இருப்போம் அப்பதான் நெருக்கம் இன்னும் ஜாஸ்தியாகும்
ஆறு மாசம் நாங்க ரெண்டுபேரும் பிரிஞ்சு இருக்கோம் அந்த ஆறு மாசத்தில் செழியன் ரொம்ப மாறிட்டாரு
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்கிட்ட மன்னிப்பு கேட்டார் அவர் மன்னிப்பு கேட்கும் பொழுது தெரிஞ்சு போச்சு
அவர் எல்லாம் உணர்ந்திருந்தார் இருந்தாலும் கொஞ்ச நாள் விலகி இருக்கலாம்னு இருக்கிறேன்
அவ்வளவுதான் இது தாண்டி காதல் சண்டை போட்டா ஒரேடியா பிரிந்து விடக்கூடாது சண்டை போட்ட பிறகுதான் இன்னும் நெருக்கமாக புரியுதா என்று அம்பை இசை இடம் சொல்ல..
இசையோ தலையில் அடி த்துகொண்டு அட போடி இந்த காதலே எனக்கு வேண்டாம்
வேலைக்கு வந்தேன் சம்பாதித்தேன் அவ்வளவு தான் இருப்பேன்
அம்மா சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்த வேண்டியது தான் ...
காதல் பண்ணிக்கிட்டு அடிக்கடி சண்டை போட்டு அழுதுகிட்டு புலம்பிக்கிட்டே என்னால இருக்க முடியாது பா என்று இசை சொல்லி விட்டு ஜன்னல் வழியாக வெளியே இருக்கும் இயற்கை அழகை ரசிக்க ஆரம்பித்து விட்டாள்..
என்னடி இவ்ளோ நல்லவ மாதிரி பேசுற..
இந்த உலகம் என்ன அப்படி மாத்திடுச்சு ரெண்டு வருஷத்துல இந்த உலகத்தை பத்தி நல்லாவே புரிஞ்சுகிட்டேன் எல்லாரும் சுயநல காரங்க..
யாரையும் நம்ப கூடாது முக்கியமா காதலிக்கிற ன்னு சொல்றாங்க ல சுத்தமா நம்பக்கூடாது அதுக்கு வீட்ல பார்க்கிற பையன் அரைமனசோடு கல்யாணம் பண்ணிகிட்டா கூட ஆஃப்டர் மேரேஜ் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுக்க லா..
. ஆனால் லவ் பண்ணி கல்யாணம் பண்ற வந்தா கல்யாணத்துக்கு முன்னாடி நாம ஏதாவது ஒரு விஷயம் பண்ண அது குத்தி காட்டுவான் தேவையில்லாம அவ்வளவு சண்டை வரும் அதான் எனக்கு இது மேல இன்ட்ரெஸ்ட் இல்லாம போயிடுச்சு...
அம்பை சிரித்துக்கொண்டே மனதில் இப்படி பேசுற பொண்ணுங்கள நம்பவே கூடாது வேணா பாரு ஒரு பையனுக்காக நீ எப்படி துடித்துப் போவேன் நானும் பார்க்க தான் போறேன் என்று தன் தங்கைக்கு ஒரு இனிய சாபத்தை வழங்கினாள்..
ஒருபுறம் அண்ணன் தன் தம்பிக்கு வரப்போகும் வருங்கால மனைவியை பற்றி மறைமுகமாக மனதில் கற்பனை செய்து கொண்டிருந்தான்..
மறுபுறம் அக்கா தன் தங்கைக்கு வரப்போகும் வருங்கால கணவனின் காதலி பற்றி மறைமுகமாக கற்பனை செய்து கொண்டிருந்தாள்..
என்ன நடக்கப்போகிறது இவர்களின் காதல் கதை பார்க்கலாம் இனிய இசைக்காக காத்திருப்போம்..
தொடரும்…