அத்தியாயம் - 3
மினுக்கியும் மேனாமினுக்கியும் ஒருசேர கோவத்தில் எழ முயன்றிட, மீண்டும் அதட்டலாக வந்த ரங்கம்மாவின் குரலில் படக்கென்று அமர்ந்தே விட்டனர். அத்தனை ஆவேசம் அவளின் குரலில். அதில் இவர்களுக்கு கிலி பிடித்து விட்டது எனலாம்.
"அக்கோவ் அவகிட்ட நம்மால பேச முடியுமா.? நம்மையும் இப்படி கீழ போட்டு மிதிச்சா.? நம்ம போய் சேந்துருவோமேக்கா.." என்று பயத்தில் மினுக்கி கூறிட, இந்த பயம் மேனாமினுக்கிக்கும் இருந்தது என்னவோ உண்மைதான்.
இருவரும் எதுவும் பேசாமல் பார்வையை மட்டும் நடப்பதிலே நிலை நிறுத்தி இருக்க, அப்போது மினுக்கியின் பார்வை இன்னும் விரிந்து அவளின் அதிர்வையும் வெளிக் காட்டியது.
"அக்கோவ் அந்த சிக்கம்மா புள்ளக்கா.. அங்க பாரு அங்க பாரு" என்று வேகமாக மூச்சு வாங்க கூறிட, அவளைப் பார்த்ததும் மேனாமினுக்கியின் விழிகளும் அதிர்வைக் காட்டியது.
"அப்ப இந்த புள்ளயோட வேல தான் இது.. இதைய போய் நம்மாளுக நல்லவனு நம்பிப்புட்டு திரியறாங்க.. நம்ம மேல அப்படி என்ன கோவம்னு இப்படியொரு வேலையை செஞ்சுருக்கு.?" என்று கேட்ட மேனாமினுக்கியின் குரலில் அதிருப்தி.
மினுக்கியும் "இவங்க போகட்டும்க்கா அந்த புள்ளயோட தலைமுடியைக் கொத்தா புடிச்சு என்னனு கேட்போம்.. பொறவு நம்மாளுகளை பாத்துக்கலாம்" என்றதும் சரியெனப்பட்டதில் பல்லைக் கடித்து அமைதியாகவே இருந்தனர்.
இதுகளுக்கு உண்மையாவே புத்தி வேலை செய்யல போல.. இதுகளை விட்டுட்டு வேறவ கூட அவங்க கள்ளத்தொடர்பு வெக்கணும்னா ஏன் இதுகளைப் போல இருக்கற மூஞ்சிக கூடவே வெக்கணும்.. எதையும் யோசிக்கற நிலைமைல இல்லை போல.. இப்ப இவங்க கிட்ட மாட்ட போற அந்த சிக்கம்மா புள்ள தான் பாவம்.
ஒருவழியாக பஞ்சாயத்து முடிந்து அடித்து துவைத்த ஆளையும் பாவம் பார்த்து தூக்கி கொண்டு செல்ல, இப்போது அங்கு ரங்கம்மாவும் குருவிக்கூடும் தான். மினுக்கியைப் போல இருந்தவளும் பரட்டையுடன் நகர்ந்து விட்டிருந்தாள்.
"மச்சான் மேல இம்புட்டு பாசமா புள்ள.? என்ன ஒத்த வார்த்தை சொல்லிப்புட்டானு இப்படி மிதிச்சுருக்க.?" என்று ஆசையாக குருவிக்கூடு வினவியதும் வெத்தலையைத் துப்பி "பின்ன இருக்காதா.? ராவுக்குள்ள உம்மைய கதற கதற தூக்கிட்டு வந்து தாலி கட்ட வெச்சவளாச்சே இந்த ரங்கம்மா.. அப்படியே வுட முடியுமா என்ன.?" என்று அவள் கேட்ட தோரணையில் குருவிக்கூடு சிரிக்கத் தான் செய்தான்.
அவர்கள் நகர்ந்ததும் வேகமாக எழுந்த மினுக்கி மறைந்து நின்றிருந்த சிக்கம்மா நகரும் முன்பே அவளின் கூந்தலைப் பற்றி இழுத்து வந்தாள்.
அவர்களை ரங்கம்மா என்று நினைத்த அவள் "அய்யோ மன்னிச்சுருங்கம்மா.. தெரியதனமா ஒளிஞ்சு நின்னு பார்த்துப்புட்டேன்.. அந்த ஆளுக்கு வாக்கப்பட்டது தான் வாக்கப்பட்டான் அவனைக் காப்பாத்த நினைச்சே என் வாழ்நாள் போவுது.. மன்னிச்சுருங்கம்மா.. இனி உங்க பக்கமே வர மாட்டேன்" என்று அவர்களின் காலிலே விழுந்து விட்டாள்.
தங்களைப் பார்த்தால் பதறி 'அக்கோவ் எனக்கு எதுவும் தெரியாது' என்று பயப்படுவாள் என்று நினைத்தால் அவள் பேசும் தோரணையில் இவர்கள் தான் பேந்தபேந்தவென முழிக்க வேண்டியதாயிற்று.
தன்னை மீட்டுக் கொண்ட மினுக்கி "என்ன புள்ள அப்படியே நீ திருப்பி பேசுனா நம்பிபுடுவோமா.? எதுக்கு இந்த வேல பார்த்துப்புட்டு இருக்க நீ.?" என்று சீறினாள்.
அவளின் கோவத்தில் பயந்த சிக்கம்மா "சின்னம்மா எம்மைய மன்னிச்சுப்புடுங்க" என்று மறுபடியும் காலில் விழ போக, 'என்னடா இது.? இவ பொசுக்குபொசுக்குனு காலுல விழுந்துட்டு இருக்கா.?' என்று இவர்கள் தான் பேய்முழி முழித்தனர்.
அந்நேரம் சடாரென்று ஏதோ விழுந்த சத்தத்தில் மூவரும் திரும்பி பார்க்க, இப்போது என்னவென்றால் சிக்கம்மாவின் கருமணிகள் தான் திகைப்பில் பெரியதாக விரிந்து பின்பு தன் முன்னே நிற்பவர்களையும் ஏறிட்டுப் பார்த்தது.
"நீநீநீநீங்க.?" என்று கேட்க முயன்றவளின் வார்த்தைகள் பிசிறடிக்க, "என்ன எம்மைய தெரியாததை போல கேட்கற.? அப்படியே போட்டனா வெய்யு எல்லாமும் ஞாபகம் வந்துப்புடும்.. என்ன நினைச்சு எங்க வுட்டுக்காரனை இப்படியொரு வேல பாக்க வுட்டுருக்க நீ.? எங்களுக்கு இது தெரிஞ்சதும் அப்படியே மாத்தி பேசறீயா.? இருடி மவளே உமக்கு ஆறடி குழியா வெட்டி அப்படியே மண்ணைப் போட்டு பொதைச்சு வுடறோம்" என்று மிரட்டினாள்.
சிக்கம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ரங்கம்மாவும், சின்னம்மாவும் அங்கு இருக்கிறார்கள் என்றால் இவர்கள் யார்.? அதுவும் அவர்களைப் போலவே இருக்கிறார்களே.? என்று குழம்பி போனாள்.
"நீங்க யாரு.? எப்படி ரங்கம்மா போலவே இருக்கீங்க.? எம்மைய எதுக்கு மிரட்டறீங்கனு எமக்கு உண்மையா புரியல.. நா என்ன பண்ணிப்புட்டேன்.? நீங்க யாருனே எமக்கு தெரியல" என்ற சமயம் ரங்கம்மாவின் ஆட்கள் இவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி வர, பதறிய சிக்கம்மா தான் "நீங்க யாருனு தெரியல ஆனா அதுக கண்ணுல சிக்க வேணாம்.. தயவுசெஞ்சு வாங்க" என்று அவர்களின் பதிலையும் எதிர்பாராமல் இருவரையும் இழுத்துச் சென்றாள்.
அவ்விடத்தை விட்டு வெளியில் வந்ததும் அச்சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளவே நிமிடங்கள் பிடிபட்டது. எங்கும் பசுமை நிறைந்த கண்ணுக்கு குளிர்ச்சியான மரங்களும் வயல்களும் தான். எங்கும் நவீனமயமாக்கல் இல்லை. சுற்றிலும் பசுமைகள் தான். அதுவே இவர்களுக்கு சந்தேகத்தை தூண்டி அமைதியாக்கியது.
"அக்கோவ் இது என்ன இடம்.? நம்ம இருக்கற இடத்துல எல்லாம் இப்படி இருக்காதே.? நம்ம உலகத்துல ஒரு மரம் இருக்கறதே ஆச்சரியமாச்சே.. இங்க எப்படி இப்படி.? ஒருவேளை நம்ம வேற உலகத்துக்கு வந்துப்புட்டோமா.?" என்று அச்சத்துடன் வினவினாள் மினுக்கி.
மேனாமினுக்கியோ "உண்மையாவே எம்மைய யாருனு தெரியலயா.?" என்று சிக்கம்மாவிடம் வினவிட, அவளோ அச்சத்தில் "நீங்க ரவுடி ரங்கம்மானு நினைச்சேன்.. ஆனா இப்ப நீங்க யாருனு உண்மையா எமக்கு புரியலங்க.. நீங்க எப்படி அப்படியே அவங்க மாதிரியே இருக்கீங்க.? இத்தனை வருசமா எங்க இருந்தீங்க.? இப்ப ஏன் இந்த வந்துருக்கீங்க.? நான் ஏதாவது உங்களுக்கா கெடுதல் பண்ணிப்புட்டனா.? எம்மேல கோவமா இருக்கீகளா.?" என்று வருத்தத்துடன் கேட்டாள்.
அவர்களுக்கு மண்டையை பிய்த்து கொள்ளலாம் என்றிருந்தது. உண்ணாமை யில் என்ன நடக்கிறது என்று பிடிபடவே இல்லை. 'நாங்கள் எப்படி இங்கு வந்தோம்.?' என்பதை நினைத்தே குழம்பினார்.
அவர்களின் முகத்தில் தெரிந்த வருத்தத்தைக் கண்டு சிக்கம்மாவும் வருத்தமடைந்து "இங்கனவே நின்னு பேச வேணாம்.. வாங்க குடிலுக்கு போவோம்.. இப்பத்துக்கு அங்கன யாரும் வர மாட்டாக" என்று அழைக்க, வேறு வழியின்றி அவர்களும் சம்மதமாக தலையசைத்து அவளுடன் நடந்தனர்.
ஊருக்கு ஒதுக்குப் புறமாக சிக்கம்மாவின் குடில் தனித்து இருந்தது. ஒரே ஒரு அறை மட்டும் கொண்ட குடில் தான் அது. அதையவே ஆச்சரியமாக பார்த்து "இது தான் உன் வூடா புள்ள.?" என்று கேட்டாள் மினுக்கி.
"ஆமாக்கா.. நாங்க காதல் கண்ணாலம் பண்ணிப்புட்டோம்னு எங்களைய ஊரை ஒதுக்கி வெச்சுப்புட்டாக.. நானும் என் வூட்டுக்காரரும் இங்கன தான் பல வருசமா கிடக்கோம்.. இங்கன இருக்கற வூடு பூரா இப்படித்தான் இருக்கும்.. ரவுடி ரங்கம்மா வூடு மட்டும் தான் நல்லா விசலாம கிடக்கும்.. ஆனா அங்க போறதுக்கு ஆருக்கும் உரிமை இல்ல..
அப்படியும் அங்கன போயிட்டா தோலை வுரிச்சு தலைகீழா தொங்க வுட்டுருவாக.. நீங்க அவுக கண்ணுல சிக்காம இருக்கறது தான் நல்லதுக்கா.. பாத்து சூதனமா இங்கிருந்து கிளம்பிருங்க.. நீங்க இருக்கற வரைக்கும் இங்கனவே இருங்க.. ஆரும் இங்கன வர மாட்டாக.. நீங்க எங்கிருந்து வரீக.?" என்று அத்தனை பாசத்துடன் கூறியவளின் மேல் இவர்களுக்கும் புதியதாக பாசம் பிறந்தது.
இவளின் பேச்சில் பொய்யில்லை என்றுணர்ந்து கடைசியாக நடந்ததை கூறி அந்த கடிகார பேழையையும் எடுத்துக் காட்டிட, சிக்கம்மாவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக தான் இருந்தது. 'எப்படி இப்படி.?' என்று வாய்விட்டே கேட்டாள்.
"நீங்க எங்கிருந்து வந்துருக்கீகனு எமக்கு தெரியலக்கா.. ஆனா இப்பவே ஒன்னும் பண்ண முடியாது.. என்ன பண்ணலாம்னு மொதல்ல யோசிப்போம்.. நம்ம பாட்டுக்கு ஏதாவது பண்ண போய் அது வேற பிரச்சனைல மாட்டி விட்டுருச்சுனா.?" என்றவளின் பேச்சில் இருந்த உண்மை தாக்கியதில் இருவரின் தலையையும் ஒரு சேர ஆடியது.
பின்பு ஞாபகம் வந்தவளாக "உன் வூட்டுக்காரன் வர மாட்டானா.?" என்று மேனாமினுக்கி வினவிட, "அந்த ஆளு இப்பத்துக்கு வர மாட்டான்க்கா.. நீங்க பயப்படாம தகரியமா இருங்க" என்றவளிடம் ஏன்.? என்று கேட்க துடித்த அதரத்தைக் கஷ்டப்பட்டு அடக்கினாள் இப்போதைக்கு எதுவும் பேச வேணாமென்ற முடிவில்.!
அவர்களுக்கான உணவு என்று கம்மங்கூழையும் நறுங்கிய வெங்காயத்தையும் சிக்கம்மா தந்தபோது "இது தான் உமக்கு சாப்பாடா.?" என்று தன்னை மீறி கேட்டு விட்டாள் மினுக்கி.
"ஆமாக்கா இங்கன பெரும்பாலும் எல்லாரு வூட்டுலயும் இதுதான்.. அதுவும் உழைச்சு சம்பாரிச்சா மட்டும் தான் மனநிறைவா இதைய குடிக்க முடியும்" என்றவளிடம் "ஆமா நீ என்ன வேலை பாக்கற.?" என்று கேட்டாள் மினுக்கி.
"இங்கன எல்லாரும் கூலி வேலை தான்க்கா.. காலைல விடியறதுக்கு முன்னாடி போனா சாயங்காலம் இருட்டறதுக்கு முன்னாடி குடிலுக்கு வந்துப்புடலாம்.. தினமும் வேலை கிடக்கும்.. வேலை இல்லைங்கற பேச்சே இங்கன இல்லை" என்று விலாவாரியாக சிக்கம்மா கூறினாள்.
"எதே காட்டுல இறங்கி நாள் பூரா வேலை பாக்கணுமா.? பேசாம தட்டைத் தூக்கிட்டு போய் ஒரு கோவிலு முன்னாடி உட்காரலாமே.?" என்றவளிடம் புரியாமல் "அங்கன எதுக்கு போகணும்.?" என்று கேட்டாள் சிக்கம்மா.
"எதுக்கா.? பிச்சையெடுத்து சாப்பிட தான்.. மூனு நேரமும் சாப்புட்டுபுடலாம்.. சாப்படலனு சொல்லி கோவிலுக்கு வர்றவங்ககிட்ட அனுதாபத்தை சம்பாரிச்சு காசு வாங்கிரலாம்.. ஒவ்வொருத்தரு வாய்க்கு ருசியா சாப்பாடும் வாங்கி குடுத்துட்டு போவாங்க.. நாங்க எல்லாம் தினமும் ருசியான சாப்பாடு சாப்பிடறவங்க.. இப்படி கஞ்சி எல்லாம் குடிக்க மாட்டோம்..
அங்கன இந்த வேல தான் ரொம்ப ஈசி.. பெரிய படிப்பு படிச்சுப்புட்டு வேல இல்லாம கஷ்டப்படறவங்க தான் அதிகம்.. ஆனா நாங்க அதிகமா கஷ்டமே படமா நாளுக்கு ஆயிரம் ரூவாவுக்கு மேல சம்பாரிப்போம்.. அத்தனையும் எங்ககிட்ட இருந்தாலும் இல்லாத மாதிரி தான் காட்டிப்போம்" என்று பெருமையாக கூறியதை சிக்கம்மா தான் கேவலமான பார்வையுடன் பார்த்தாள்.
"அடுத்தவங்க கிட்ட கையேந்தற பழக்கமே இங்கன இல்ல.. ஒரு வாய் சாப்புட்டாலும் அது உழைச்சு சம்பாரிச்ச காசுல தான் இருக்கணும்னு நினைக்கறவங்க நாங்க.. எங்களுக்கு இப்படி அடுத்தவங்கள ஏமாத்தி பொழைக்கற பொழைப்பு எல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது.. இதைய பெருமையா வேற சொல்றீக.?" என்று முகத்தைச் சுழித்து
தான் வினவினாள்.
இதில் மினுக்கியின் முகம் கறுத்துப் போனது.
தொடரும்..