• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Anitha Kumar

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 15, 2024
Messages
58
அத்தியாயம்: 20

நிலா, யாருக்கும் எட்டாத உயரத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டு தன் அழகினை உலகிற்கே பறைசாற்றும் இரவு நேரம் அது..

தூணில் சாய்ந்து சோகமாக அமர்ந்திருந்தார் நாச்சியம்மாள்.. காரணம் தரன்‌ முதலிரவுக்கான எந்த ஏற்படும் செய்யக்கூடாது என கண்டிப்புடன் கூறியதால்..

" அம்மா அவங்களுக்கு கொஞ்சம் டைம் குடும்மா.. எதிர்பாக்காம கல்யாணம் நடந்துடுச்சு.. உடனே முதலிரவுன்னா.. அவென் சொல்லுறதையும் கேளும்மா.." என‌ சமாதனப்படுத்தினார்‌ நங்கை..

" சரிடி நாம எந்த ஏற்பாடும் செய்யவேண்டாம்.. அதுக்குன்னு அந்தப் புள்ளய தனி ரூம்லயா தங்க சொல்லுறது.. ரெண்டு பேரும் ஒரே அறைல தா இருக்கனும்.. என்னய்யா சொல்லுற.. " என இறைஞ்ச வேறு வழியில்லாமல் சரி என்றான்.. இதோ ஹரிணி அலி பாபா குகைக்குள் செல்வது போல் மிகுந்த ஆர்வமும் அச்சமும் கலந்த உணர்வுடன் செல்கிறாள்..

மூன்று அடுக்குகளாக இருந்தது அந்த அறை.. பால்கனி , ஜிம் மற்றும் பாத்ரூம் , படுக்கை என பிரிக்கப்பட்டிருந்தது.. படுக்கை அறை மிகவும் நேர்த்தியாகவும் கலைநயத்துடனும் இருந்தது.. ஆங்காங்கே சுவற்றில் சின்னஞ்சிறு ஓவியமும்.. ஆள் உயர கண்ணாடி பதிக்கப்பட்ட அலமாரியும்.. சிறிய சோஃபா செட் டீப்பாய் என சகலமும் இருந்தது.. அதில் அவளுக்கு பிடித்தது பீப்பாய் மேல் இருந்த சதுரங்க பலகை தா.. முழுவதும் கண்ணாடியால் செய்யப்பட்ட பலகையும் அதன் காய்களும் தான் மிகவும் அழகாய் இருந்தது..

சில அடிகள் எடுத்து வைத்ததும் இடப்புறம் ட்ரெஸ்ஸிங் ரூமுடன் இருந்த குளியலறையும் , வலப்புறம் மினி ஜிம்மும் இருந்தது.. அதை தாண்டி செல்லும் போதே வந்த வாடை அவளின் முகம் சுழிக்க வைத்தது..

பால்கனியில் மூங்கில் கூடை ஊஞ்சலில் அமர்ந்து தன் எதிரில் நிற்கும் அவளை பார்த்துக் கொண்டு.. இல்லை.. இல்லை.. முறைத்துக் கொண்டு.. சரியாக தெரியவில்லை அவனின் பார்வையின் பொருள்.. கை பிடியின் மேல் இருந்த ஆஷ் டிரே அவன் புகைத்து தள்ளிய சிக்ரெட்களின் எண்ணிக்கையே சொல்லியது.. நிச்சயம் ஒரு பாக்கெட்டிற்கு மேல் பிடித்திருப்பான்.. சிறிது நேரம் நின்றவள் அவன் எதுவும் கூறாததை கண்டு உள்ளே சென்றாள்..

" அடப்பாவி சேஞ்ச் ஸ்மோக்கரா நீ.. உன்ன போய் இந்த வீடும் ஊரும் நல்லவன்னு நம்புதே.. ஹிம்.. எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்கும்னு சொல்லவே முடியலடா சாமி.. ஆள் பாக்க கிராமத்தான்னாட்டம் இருக்கான்.. ஆனா ரூம்.. ப்ப்பா.. செமையா வச்சுருக்கான்.. இந்த உலகத்துல இருக்குற எல்லாப் பொண்ணுக ரூமும் இவன் முன்னாடி தோத்துப் போச்சு.. எவ்ளோ நீட்டா வச்சுக்கான்.. ஒருவேல மிஸ்டர் பர்பெக்ட்டா இருப்பானோ.. நாம கலச்சுவச்சா திட்டுவானா.. ம்ச்.. திட்டுனா பாத்துக்கலாம்.. " தனக்குத் தானே பேசியவாறு‌ மெத்தையில் அமர்ந்தவள் களைப்புடன் படுக்கலானாள்..

விறுவிறுவென வந்தவன் அவளின் முழங்கையை பிடித்து இழுத்து.. " எனக்கு ஒரு பொண்ணு கூட ரூம ஷேர் பண்ணி பழக்கமில்ல..‌ பெரியவங்களுக்காத்தா இதுக்கு சம்மதிச்சேன்.. சோ நீ அந்த சோஃபால படுத்துக்கோ.. ஆ.‌. அப்புறம் ட்ரெஸ்ஸிங் ரூம்ம நீ யூஸ் பண்ணிக்கோ.. அதுல மெட்சீட் இருக்கு.. பட் ஜிம் பக்கம் நீ வரவே கூடாது.. ஓகே.." என்றவன் அவளின் அதிர்ந்த முகத்தை கூட பார்க்காது மெத்தையில் படுத்துக் கொண்டான்....

" என்னது ஷேர் பண்ணி பழக்கமில்லையா.. நாங்க மட்டும் ஒரு நாளைக்கு பத்து பசங்க கூட ஷேர் பண்றோம்மாக்கும்.. எங்களுக்கும் பழக்கமில்ல தா.. இடியட்.. ஜீம் பக்கம் போக்கூடாதாம்.. ஹிம்.. நாலு தம்பில்ஸ்ஸ வச்சிருக்க போறான்... அத திருடிட்டு போய் என்ன பண்ணிடுவேனாம்... " என முணுமுணுத்துக் கொண்டே போர்வையை எடுத்து கொண்டு சோஃபாவில் படுத்தாள்..

" ஆ.. என்னடா சோஃபா இது தலையும் வைக்க முடில காலும் வைக்க முடில.. என்னையவாட நீ இதுல படுக்க வச்ச.. நீ இதுக்கு கண்டிப்பா ஃபீல் பண்ணுவ இல்ல பண்ண வப்பாடா இந்த ஹரிணி.. உன்னைய இதே மாறி சுருண்டு படுக்க வக்கல.. ஹப்....ப்பா.. நா ரொம்ப டையடா இருக்கேன்.. நாளைக்கு உனக்கு சாபம் குடுக்குறேன்.. இப்ப பேட் நைட் ஃபார் யூ.. கெட்ட கெட்ட கனவா வரும் உனக்கு.. " என்று விட்டு நித்திரைக்குச் சென்றாள் .

அவள் படுத்தும் உறங்கிவிட படுக்கப் சொன்னவன் உறக்கமின்றி தவித்தான்.. சிறு குழந்தை போல் கைகளை தலைக்கு வைத்து தூங்கிக்கொண்டிருக்கும் அவளின் மதி முகத்தைக் கண்டவனின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன..

ஏழு வருடங்களுக்கு முன்னாள்..


டெல்லியில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினியரிங் படிக்கும் மாணவன் ரிஷி தரன்.. ஏழெட்டு மாதத்தில் அவன் படிப்பை முடித்து விடுவான்.‌. இன்னும் இரு தினங்களில் ஒரு முக்கியமான பரிச்சை உள்ளது.. விடுமுறைக்கென சென்னை வந்தவன் இரயிலில் டெல்லி செல்ல தன் உடைமைகளை அடுக்கிக் கொண்டு இருந்தான்.. ( முதல் அத்தியாயத்தோட கனெக்ட் பண்ணிக்கோங்க.. )

" டேய் அண்ணா.. நா யார் கிட்டையும் சொல்லமாட்டேன்.. ஏங் கிட்ட மட்டும் சொல்லீட்டு போண்ணா.." வைசு.

" என்ன சொல்லனும்.." தரன்.

" யார் அந்த பொண்ணு.. ப்ளீஸ்.. ஏதாச்சு அடையாளம்.. முகத்தில் மரு.. கழுத்தில் மச்சம் இப்படி எதாவது.. அப்படி இல்லைன்னா அவ வயசாச்சும் கணிச்சு சொல்லுண்ணா.. இல்லைன்னா எனக்கு தலையே வெடிச்சிடும்.." சிணுங்கினாள் வைசு..

அதாவது ரிஷியின் பம்கின் யார் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் அவள் கேட்க..

" ஏ இப்படி உலரிக்கிட்டு இருக்க
மருவாம்.. மச்சமா.. என்னடி வேணும் உனக்கு.."

" ஒரு வாரத்துக்கு முன்னாடி எங்க ஸ்கூல்ல ஒரு பொண்ணு பாத்தேல்ல.. அத தா யாருன்னு கேக்குறேன்.. அந்த பொண்ணுக்கு தா அடையாளம் சொல்லுன்னு சொன்னேன்.. அட்லீஸ்ட் எந்த இடத்துல பாத்தன்னு மட்டுமாது யோசிச்சு சொல்லுண்ணா.." கெஞ்சினாள்..

" ஞாபகம் வச்சுக்குற அளவுக்கு நா யாரையும் பாக்கலையே.."

" பொய் சொல்லாத.. உங்கிட்ட நிறைய சேன்ஜ் தெரியுது.. நீ இப்படி கெடையாதேண்ணா.. என்னால நிச்சயம் அவளப் பத்தின டீடெய்ல்ஸ் கண்டுபுடிக்க முடியும்.. சொல்லேண்ணா "

அன்று பார்த்த பம்கின்னின் முகம் அவனின் நினைவுகளில் இருந்து நீங்காத போதும் பின் தொடர்ந்து அவளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் அவனுக்கு இல்லை.. அந்த அளவுக்கு அவள் வெர்த் இல்லை என்பது அவனின் எண்ணம்.. எனவே தங்கையிடம் ஏதேதோ சொல்லி சமாளித்து ரயில்வே நிலையம் சென்றான்..

" எடுக்க வேண்டிய எல்லாத்தையும் எடுத்தாச்சில்ல.. அப்புறம் அத காணும் இத காணும்ன்னு கொரியர் அனுப்ப சொல்லக் கூடாது.. ஒழுங்கா எக்ஸாம் எழுது.. என்ன சரியா.." வண்டியில் ஏறியதிலிருந்து அட்வைஸ் மழையை பொழிந்து கொண்டே வந்தார் சத்தியமூர்த்தி..

அப்பா பிள்ளை என்ற போதிலும் இருவரும் வாய்விட்டு அதிகம் பேசியதில்லை எனலாம்.. ஆனால் இருவரும் உணர்வுகளால்‌ இணைந்திருந்தனர்.. ஒருவரின் மனதில் உள்ளதை மற்றொருவர் அறியும் அளவுக்கு.. இம்முறை மகனின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தினால் தான் இந்த அதீத அட்வைஸ்...

ரயில் ஏற்றி விட்டு தான் செல்வேன் என்றவரை " நா என்ன சின்னக் குழந்தையா.. எவனாவது வந்து பிஸ்கட் குடுத்து மயக்கி தூக்கீட்டு போக.. அவ்வளவு பெரிய சிட்டி டெல்லி அதுல எனக்கு தெரியாத இடமே இல்லை.. கேப்பிட்டல் சிட்டீல காணாம போகாதவனா இங்க காணாம போய்டுவேன்.. உங்க பீபி ஏறிடுச்சுன்னு எ பீபியா ஏத்தாம கிளம்புங்க.." முணுமுணுத்தான் அவரின் காதுகளில் விலாதவாறு..

அறிவிப்பு வரும் வரை இருந்து ரயில் புறப்பட்ட பின்னே சென்றார்.. ஆனால் அவரது கெட்ட நேரமோ , இல்லை இவனின் நல்ல நேரமோ புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நின்று விட்டது.. சிக்னல் கோளாறு காரணமாக..

வெகு நேரம் நின்றதால் தலையை மட்டுமல்லாது கம்பியை பிடித்துக் கொண்டு உடலயும் வெளியே நீட்டிய படி கடந்து சென்றவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

தன்னைச் சுற்றி இருந்து கேட்ட சத்தத்தைக் காட்டிலும் ஒரு குரல் தனியாக அவனின் செவிகளில் கேட்டது.. அது அவளுடையது பம்கின்... ஸ்வீட் பம்கினுடையது.. தன் பார்வையை சுழல விட்டவன்‍, நடைமேடையில் செல்போன் பேசிய படியே சென்ற அவளைக் கண்டு விட்டான்..

எதைப்பற்றியும் சிந்திக்காமல் இறங்கி அவளை தேடிச் சென்றான்.. கூட்டத்தில் அவளை தொலைத்து விடாமல் பின்தொடர்ந்தவன், ரயில்வே நிலையத்தை விட்டு வெளியே வந்து விட்டான்.. எவரைப் பற்றியும் கவலைப்படாமல் ரயில் தன் கடமையை ஆற்ற புறப்பட்டு சென்று விட்டது..

கரும்பு நிற ஜாக்கெட்டும் ஜீன்ஸ்ஸும் அணிந்திருந்தவள் ஜங்ஷனைவிட்டு சிறிது தூரம் நடந்து பின் ஒரு தேவாலயத்திற்குள் நுழைந்தாள்.. மண்டியிட்டு அமர்ந்து இறைவனிடம் இதழைசைத்து வேண்டியவளை தன் கண்களால் நிரப்பிக்கொண்டு இருந்தான் அவன்.. மெல்லிய இதழ்கள் லேசாக அசைந்து எதேதையோ வேண்டிக் கொள்ள ரிஷி தரனின் மனமும் அசைந்து தான் விட்டது..

ப்ரார்த்தனையை முடித்து விட்டு வெளியே வந்து தனது குட்டை முடியை ஹெல்மெட்டுக்குள் அடைத்துக்கொண்டு ஒரு ஸ்போட்ஸ் பைக்கிள் பறந்து சென்றது பம்கின்..

" ச்சே போய்ட்டா.. மிஸ் பண்ணீடுவேனோ.." என புலம்பியவனின் கண்ணில் பட்டான் அவனின் நண்பன்..

" என்ன மச்சி.. நீ ஊருக்கு போறதா சொன்ன.. சர்ச் பக்கம் வந்திருக்க.. எதுவும் பெரிய வேண்டுதளா.." .

"ஆமாம் மாப்ள.. உனக்கு அலகு குத்துறதா ஏசுநாதர் கிட்ட வேண்டுதல்.. கன்னத்த அப்புறம் தா.. இப்ப உன்னோட பைக்கத்தா.." என பிடிங்கிச் சென்றான்...

பைக் மகாபலிபுரம் நோக்கிச் சென்றது ஈசிஆர் ரோட்டில்.. ஹெல்மெட்டுடன் இருப்பதால் அவள் பெண்ணாக அல்லாது ஒரு டாம் பாய்யாகவே தெரிந்ததாள் பார்ப்பதற்கு.. செல்லும் வழியில் சில இளைஞர்கள் இது தான் வீரம் என எண்ணி பைக் ரேஸ்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது..

நடைபாதையில் தங்கியிருந்த சில குடும்பத்தின் குழந்தைகள் ஓரமாக விளையாண்டு கொண்டிருப்பதையும் , பைக் ரேஸ் இளைஞர்கள் சிலர் அவர்களின் மீது ஏற்றுவது போல் பயமுறுத்துவதையும் கீழே தள்ளி விட்டதையும் கண்டவள்.. அந்த இளைஞர்களை முந்திச் சென்று வழி மறைத்து தன் பைக்கை நிறுத்தினாள்.

"ஏய் குய்ந்த நீ வெளாடுறதுக்கு நடு ரோடுதா கெடச்சதா.. அப்பாள போய் வெளாடு.." என பைக் இளைஞன் ஒருவன் இலவச அட்வைஸ் தர..

பதிலளிக்காது ஆக்ஷிலேட்டரை முறுக்கினாள்.. கீழே இறங்க வில்லை.. ஹெல்மெட்டை கலட்டவில்லை. கோபமாக திருக்கியபடி இருந்தாள் அவள்...

" ஏய்.. இன்னா ரேஸ்க்கு கூப்டுறீயா.. உங் கண்ணுல நா இன்னைக்கு செம்பரம்பாக்கத்த பாக்காம விடமாட்டேன் டா.. ஏய் என்னங்கடா சொல்றீங்க..." மற்றொருவன்..

" ஆமாந்தல..." என ஜால்ராக்கள் ஆமோதிக்க..

" நா காட்டி செயிச்சேன்னா.. உன்ட்ட இருக்குற பைக்கு.. அப்பாள போட்ருக்க நக ஃபோனுன்னு அல்லா காஸ்லி பொருளயும் என்னான்ட கொடுத்துட்டு திரும்பிப் பாக்காம போய்டனும்.. சரியா.."

அவள் சைகையில் 'நா செயித்தால் என்ன தருவீர்கள்..' என்க .

" உன்னான்ட சொன்னது தா.. பைக்கு காசு அல்லாத்தையும் தந்துடுறோம்.. என்னங்கடா.."

" தல இது பூட்ட கேஸ்ஸூ... தோத்துன்னு அழுதுக்கின்னே போப்போது பாறேன்.‌. " என ஜோக் அடித்தது போல் அனைவரும் சிரித்தனர்..

வட்டவடிவமாக இருந்த சாலையை தேர்ந்தெடுத்து அதன் தொடக்கத்தில் நின்றிருந்தனர் ரேஸ்காக.. நடு ரோட்டில் நின்று ஒருவன் கொடியசைக்க அவளும் அந்த இளைஞனும் தயாராகி பைக்கை முறுக்கினர்..

விர்ர்ர்.. என‌ சீறிப்பறந்தது அந்த மோட்டார் வாகனம்.. வெறும் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாக பந்தைய தூரத்தை கடந்து வெற்றி பெற்றாள் அவள்.. தோற்ற இளைஞன் முணுமுணுத்தபடியே தன் நகை காசு ஃபோனை ஒப்படைத்தனர்...

பைக்கைத் தர முன்வந்த போது வேண்டாம் என தடுத்தவள்.. காசை அவர்கள் தள்ளிவிட்டுச் சென்ற சிறுவர்களிடம் அவர்கள் கைகளாலே ஒப்படைக்க வைத்தாள்..

இவை அனைத்தும் அவளை பின்தொடர்ந்து வந்த தரனின் கண்களுக்கு பட்டது.. பின் பைக் மகாபலிபுரம் கடற்கரைக்குச் சென்றது.. இறங்கி தன் ஹெல்மேட்டைக் கழற்றியவளின் முகம் முழு பௌர்ணமியில் நிலவுக்கு போட்டியாக ஜொலித்து...


அது ஹரிணி ....‌.

அவனால் பம்கின் என அழைக்கப்பட்டது தற்போதைய அவனின் மனைவி ஹரிணி‌..

 
Top