• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Anitha Kumar

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 15, 2024
Messages
46
அத்தியாயம்: 25

தோழனின் தோல்களும் அன்னை மடி
அவன் தூரதில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியதும் உள்ள படிஈ
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கொள் பெற்றோம்
அதனாலே யாவும் பெற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலே நின்றோம்

தனது செல்போன் இசைக்க அதில் தெரிந்த தன் நண்பனின் முகத்தை சிறிது நேரம் ரசித்துவிட்டு பின் அதை அட்டென் செய்தாள்..

"ஹ..ல்ல்.....லோ .... " ஹரிணி..

" ஃபிகர பாத்ததும் பிரெண்ட கலட்டி விட்டுடுவான்னு விகேக் சார் பசங்களுக்கு மட்டும் தா சொன்னாருன்னு இத்தன நாள் நினைச்சேன்.. பாரு பொண்ணுங்களுக்கும் சேத்து தா சொல்லி இருப்பாரு போல.. இன்னைக்கோட நாலு நாள் ஆச்சு எங்கிட்ட நீ பேசி.." என்றான் போலி கோபத்துடன் கௌதம்..

" நா உனக்கு கால் பண்ணினேன்.. நீ தா பிஸி.. "

"நா பிஸி இல்ல.. "

"பொய் சொல்லாத டா.. ஏதோ அம்பானிக்கு அசிஸ்டெண்ட் பிரதர் மாறி எனக்கு ஒர்க் இருக்குன்னு ஸீன் போட்டது யாராம்.." ஹரிணி..

" நா ஏம்மா பொய் சொல்லப் போறேன்.. அதுவும் உங்கிட்ட.. சரி நல்லா இருக்கியா.. அங்க ஒன்னும் பிரச்சன இல்லையே.." கௌதமின் குரலில் அக்கறை வழிந்தோடியது..

" ஏப்பு.. நாங்க ஒன்னும் கொடுமக்காரவுக கிடையாது.. உன்னோட சிநேகிதிய கொடும படுத்த.. " நாச்சியம்மாள்..

குடும்பமே நடு கூடத்தில் கூடியிருக்க ஹரிணி ஃபோனை லவ்டு ஸ்பீக்ரில் போட்டு பேசியதால் இடையில் பேசினார் நாச்சியம்மாள்.. இந்துவின் மனதை அறிந்ததால் அவள் கௌதமின் குரலைக் கேட்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தாள் ஹரிணி..

" பியூட்டி.. நா அப்படி சொல்லல.. " என்றான் மலுப்பலாக .

" பெறவு எப்படிய்யா சொன்னா.." மலர்..

" ஐய்யோ.. அறியா சிறுவன் தெரியாமல் பேசிவிட்டே.. மன்னியுங்க ராஜா மாதா.." என சரணடைய..

" சரி சரி மன்னிக்கிறேன்.. என்ன பண்ற நல்லா இருக்கியா.. பவி , ஜோதி , அப்புறம் பெருமாளு நல்லாயிருக்குறாகள..." மலர்..

" வீட்டில் அனைவரும் நலம் மாதா.. அங்கு ஆடு மாடு என அனைவரின் நலத்தையும் அறிய நான் ஆவலாக உள்ளேன.‌."

" டேய் மொக்க போடதடா.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாறியா இருப்பாங்க நீ தா டெய்லியும் உன்னோட ப்யூட்டிட்ட ஃபோன்ல பேசுறேள்ள.." ஹரிணி..

" என்னது மொக்க போடுறேன்னா.. சரிம்மா இன்ட்ரெஸ்டிங்கா பேசவா.. ஒரு வாரமா உன்னப்பத்தி கேக்குற எல்லாத்துக்கும் பதில் சொல்லியே நா மூனு கிலோ கொறஞ்சுட்டேன் தெரியுமா உனக்கு.. வந்துட்டா பெருசா பேச.. மொதல்ல ராகவ் கிட்ட என்ன நடந்ததுன்னு சொன்னியா.. மனுசே பேசியே கொள்ளுவாரு.. மூனு நாள்ள முன்னூறு கால் பண்ணிருக்காரு.. எந் தங்கச்சி எங்க.. எந் தங்கச்சி எங்கன்னு.. உங்க தங்கமான தங்கச்சி இப்ப இன்னோருத்தனோட பொண்டாட்டின்னு சொன்னா மனுசே எங் கழுத்துல கத்தி வச்சுட மாட்டாரு.."

" மூச்சு விட்டுக்கிட்டே பேசுடா.. ராகவ் அண்ணாட்ட நா பேசிட்டேன்.. பட் மேரேஜ் பத்தி சொல்லல.. தெரிஞ்சா உடனே குவைத்ல இருந்து வந்துடுவாரு.‌‌. அண்ணாக்கு இது இம்பாடெண்ட் ட்ரைனிங்.. சோ அவர டிஷ்டப் பண்ண வேண்டாம்னு நெனச்சேன்.. அவரோட கெரியர் முக்கியம்ல.."

" முக்கியம் தா‌ யாரு இல்லைன்னு சொன்னா.. அதை விட தங்கச்சி கல்யாணம் முக்கியமில்லையா... தெரிஞ்சா நிச்சயம் கோவப்படுவாரே.."

வீட்டில் இருந்தவர்கள் ஹரிணியின் குடும்பம் பற்றி கேட்ட போது ' எனக்கு அண்ணனே மட்டும் தா.. அவரும் இப்ப இந்தியால இல்ல.. நா அவங்கட்ட பேசிக்கிறேன்.. நீங்க கவலப்படாதீங்க ' என்றதால் அமைதியாகி இருந்தனர்.. இப்போது அது தவறோ என நினைக்கத் தோன்றியது..

" அண்ணாவ சரிக்கட்ட எனக்கு நல்லாவே தெரியும்.. நீ ஏதாச்சும் உலராம இருந்தா சரித்தா.." ஹரிணி..

" நா ஏம்மா உலரனும் எந் தங்கச்சி சொல்லாம இருப்பாளா.. இந்த நேரம் உன்னோட மேட்டர் ராகவ் காதுக்கு போய் சேந்திருக்காதுன்னு நெனைக்குற..."

ராகவ் ஹரிணியின் அண்ணன்.. பவிக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை.. பவியின் படிப்பு முடிய ஆறு மாதங்கள் ஆகும் என்பதால் அதன் பிறகு திருமணம் என பேசி முடிக்கப்பட்டுள்ளது..

" உந் தங்கச்சிக்கு உன்னவிட புத்தி ஜாஸ்தி.. எத எப்ப யார்ட்ட எப்படி சொல்லனும்னு அவளுக்கு நல்லா தெரியும்.. யூ டோண்ட் வரி.."

" எது நடந்தா எனக்கென்ன.‌. நா ஏன் கவலப்படனும்கிறேன்.."

" அதெல்லாம் சரி.. ஸார் முந்தாநேத்து எங்க போயிருந்திங்க.. யார பாத்திங்க.. "

" நானே அத உங்கிட்ட சொல்லனும்னு தா கால் பண்ணேன்.. ப்பா..ப்பா செம்ம பேபி. என்னோட பேபி.. அழகுன்னா அழகு அப்படி அழகு... மினி கவுன்ல என்னோட பேபி நடயென்ன டான்ஸ் என்ன.. வாரே வாவ்.. இப்படி ஒரு பேபி எங்கூடவே லைஃப் லாங் இருந்தா எப்படி இருக்கும்.. நா ம்னு சொன்னா இப்பவே எங்கூடவே வந்திடும்.. என்னோட பேபி.." கௌதம் குதுகலத்துடன் சொல்ல இந்துவின் முகம் வாடியது..

" டேய் டெல்லி போறியா.. இல்ல சென்னைக்கா..."

" எதுக்கு.."

" பின்ன மூனு வயசு கொழந்தைய எந்த ஒரு ரிலேஷன்ஷிப்பும் இல்லாம கூடவே வச்சுக்கனும்னு சொன்னா.. கடத்தீட்டுத்தா வரனும்.. கடத்துனா திஹார் ஜெயில்லா இல்ல.. புழல் ஜெயில்லா.. உன்னோட வக்கீல் தம்பீட்ட கேட்டு சொல்லவா.."

" வக்கீலா.. அவனா.." அதிர்ச்சியுடன்.

" அத விடு.. யாரிந்த பிங்க் லகங்க.. போட்டோஸ் லாம் பாத்தேன் ஃபேஸ்புக்ல.. சரியில்லையே.. அவளோட பார்வ அப்புறம் நிக்குற போஸ் இது எதுவுமே சரியில்ல.. நீ ஏ அந்த பிங்க் கூட போட்டோ எடுத்த.. சம்திங் சம்திங்.. " ஹரிணி சந்தேகமாக..

" ஏ நா வீட்டுல நிம்மதியா இருக்குறது உனக்கு பிடிக்கலையா.. ஹிட்லர்க்கு தெரிஞ்சா என்ன வீட்ட விட்டே தொரத்தி விட்டுடுவாரு.. அப்புறம் உன்னோட மாமியார் வீட்டுல தா எனக்கு சாப்பாடு.. உம் புருஷனுக்கு நல்ல ஆஃபர்.. ஆடி தள்ளுபடில ஒன்னு வாங்குனா ஒன்னு ஃப்ரீங்கிற மாறி என்னையும் சேர்த்து வச்சு கஞ்சி ஊத்தனும்.. பரவாயில்லையான்னு உம் புருஷன்ட கேட்டு சொல்லு.."

" நீ என்ன கடோத்கஜனுக்கு கடைசி பையனா.. நீ சாப்பிடுற இத்தினோண்டு சாப்பாடு கூட போட முடியாத அளவுக்கு யாரும் இல்ல.. பேச்ச மாத்தாத.. அது கூட ஏன் நின்று போட்டோ எடுத்த.. அது யாரு.."

" ஆஃபிஸ் ல ஒன்னா வேல பாக்குற பொண்ணும்மா அது.. அத தவிர எனக்கும் அந்த பிங்க்க்கும் சம்பந்தமே இல்லை.. ஐ திங் அது உனக்கு அண்ணியாக வர வாய்ப்பிருக்கு.. கதிர் மூலமா அந்த புள்ளை டிசைன் டிசைனா ஸ்கெட்ச் போடுட்டே இருக்கு.. சக்சஸ் ஆகிடும்னு நெனைக்குறேன்.. வாழ்த்துக்கள்.‌. குஜராத் மாநிலத்துல இருந்து உனக்கு ஒரு அண்ணி வரப்போறதுக்கு.." கௌதம் .

" எனக்கு என்னமோ அந்த பொண்ணு மேல் டவுட்டாவே இருக்கு..கதிர் கூட வேற கூட்டுன்னு சொல்ற.. சோ கேர் புல்லா இரு அவகிட்ட ஓகே.."

" ஓகே.. " என்றவன் ஹிந்தியில் தரனைப் பற்றி விசாரித்தான்..

நிமிர்ந்து ரிஷியின் முகம் பார்த்தவள் கௌதமிடம் சில நிமிடம் பேசிவிட்டு வைத்துவிட்டாள்.. ரிஷிக்கு ஹிந்தி தெரியாது என்று நினைத்து கௌதமிடம் ஹிந்தியிலேயே உரையாடினாளா அல்லாது இருவரும் அவனை பற்றி பேசுவது குடும்பத்தினருக்கு புரியக்கூட்து என பேசினர்.. இவர்களின் உரையாடலை அவன் புன்னகையுடன் ரசித்துக் கொண்டே தன் பெரியப்பாவுடன் பேசிக்கொண்டு இருப்பதை அறியவில்லை..

ஹரிணி , அன்று தேவையில்லாமல் திட்டு வாங்கியப் பின் தரனிடம் பேசவே இல்லை.. அவள் வீட்டில் சின்ன சின்ன மாற்றங்களை கொண்டு வந்திருந்தாள்.. முதலாவதாக கிருபாவதிக்கு, தொழுவத்தை சுத்தம் செய்வதால் அவர் காலை உணவை உண்பதில்லை.. மாட்டுச் சாணத்தின் வாடை அவர் கையில் எப்பொழுதும் இருக்கும்.. வேற்று ஆளை இதற்கென நாச்சியம்மாள் விட்டதில்லை.. எனவே அவர் கைகளுக்கு உறை வாங்கியதுடன்‌ மாஸ்கும் வாங்கி வந்தாள்..

நங்கையின் அறை சிறியது.. அதை மினி லைப்ரரி ஆக மாற்றி நங்கையை வேறு பெரிய அறைக்கு மாற்றினாள்.. தினமும் மூர்த்திக்கு கவிதைகள் நாவல்கள் என சிந்திக்க வைக்கும் புத்தகங்களை ஒரு மணி நேரம் வாசித்து காட்டினாள்..

லதா மற்றும் சுதாவிற்கு படிப்பில் உதவுவது.. பிரகாஷ்ஷை வழக்கறிஞராக மாற்ற அவனின் அரியரை க்ளியர் செய்ய உதவுவது.. இந்துவை தபால் வழி கல்வி மூலம் முதுகலை படிப்பில் சேர்ந்து விட்டது என தனக்கு தெரிந்ததை செய்து அந்த குடும்பத்தின் உறுப்பினராக மாறிப் போனாள்.. அவனின் அறையில் இருந்த சிறிய சோஃபா கூட இப்போது கால் கைகளை நீட்டி படுக்கும் அளவுக்கு பெரிதாக மாறி இருந்தது.. ஆனால் கணவன் மனைவி இருவர் உறவில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை..

மேலும் இரு வாரங்கள் ஓடி விட்டது.. ஒரே அறையில் இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் சரியாக பார்ப்பது கூட இல்லை..

தன் லேப்டாப்பில் எதையே நோண்டிக் கொண்டிருந்தவளிடம்.. " கலக்குற ஹரிணி , புது லேப்டாப்பு , புது ஃபோனு, புது சோஃபா.. ம்....ம்.. எங்கண்ணே காச இப்படி கரி யாக்குறியே இது நியாயமா..‌ இது அடுக்குமா.. ஆன்சர்.. ஆன்சர்..‌ ஆன்சர் ஐ நீடு..." பிரகாஷ்..

" வாய்யா அரியர் வச்ச வக்கீலு.. உங்க கொண்ணே காச ஒன்னும் நா எடுக்கல.. எல்லாமே நா சம்பாதிச்சது.. அத செலவழிக்க நா யார்ட்டையும் கேக்கனும்னு அவசியம் இல்லை.."

" பட்டப் படிப்பு படிச்சவனுக்கே இங்க வேல கிடைக்குறது இல்லையாம்.. இத்துப் போன கெமிஸ்ட்ரியா முடிச்ச உனக்கு ஆயிரம் ஆயிரமா சம்பளம் கிடைக்குதோ.. யார்ட்ட கதவுடுற.." பிரகாஷ் .

" ஆயிரம் ஆயிரமா இல்ல கோடி கோடியா.. ஐ ஆம் அ ஃபேஷன் டிசைனர்.. உன்னோட கூகுள் சாமியார்ட்ட ஹச்ஆர் மாடல் ஹவுஸ்ஸோட ஓனர் யாருன்னு கேளு அவரு சொல்லுவாரு இந்த ஹரிணி யாருன்னு.. " என்றவளை வியந்து தான் பார்த்தனர் இளையவர்கள்..

‌கோலிவுட் நடிகர் , நடிகைகளுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்து தரும் இந்தியாவின் நம்பர் ஒன் ஃபேஷன் ஹவுஸ்ஸில் அதுவும் ஒன்று‌.. பல கோடிகளில் பண பரிவர்த்தனை நடைபெறும் ரோஸ் (ROS) இன்டெக்ஸ்டீஸ் குழுமத்தின் கிளை நிறுவனமும் கூட அது.

"இந்து எங் கைய கொஞ்சம் கிள்ளேன்.. " பிரகாஷ் சொல்ல இதுதான் வாய்ப்பு என நறுக்கென கிள்ளினாள் இந்து..

" ஆ.. நா கனவு காணல.. அப்படீன்னா நீ.. ஸாரி நீங்க ரோஸ் கம்பெனியோட ஓனர் ஓம்கார்தேவ்வோட சிஸ்டர்ரா.." அதிர்ச்சியுடன்..

" எஸ் ஓம்காரோட சிஸ்டரே தா.. அப்புறம் மரியாதயெல்லாம் மனசுக்குள்ளையே இருக்கட்டும்.." என்றவள்.. பின் " என்ன எப்பையும் போலவே கூப்பிடு.. வீ ஆர் ஃப்ரண்ட்ஸ் ஃபஸ்ட்.. மத்ததெல்லாம் அப்புறம் தா.. "

" எப்படி‌ நீ இங்க.. எவ்ளோ பெரிய பணக்காரி நீ.. எதுவும் பிரச்சனை வந்திடாதா.. திடீர் கல்யாணத்துனால.." வார்த்தைகளை மென்றபடி..

" வரும் தா.. உனக்கு இல்ல உன்னோட அண்ணனுக்கு.. பூம்பூம் மாடு மாறி சொன்ன உடனேயே தாலிய கட்டிக்கிட்டாருல்ல வரத்தா செய்யும்.. பாத்துக்கச் சொல்லு உங்கண்ணன.." என்றவள் குதுகலத்துடன் சென்றாள்..

 
Top