• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அபிதா - ஒரு ஆணின் சாபம்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
ஒரு ஆணின் சாபம்

" இந்த வீட்டில் யாரும் எடுக்குற பொருளை எடுக்குற இடத்தில் வைப்பதே இல்லை . வீடே குப்பையா இருக்கு " என்று வாய்க்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தார் பார்வதி .

தண்ணீர் குடிக்க வந்த ஆர்த்தியின் காதில் தப்பாமல் விழுந்து விட்டது .

" இப்போ நீங்க என்ன தான சொல்லுறீங்க. " ஆர்த்தி சண்டை போட தயாரானாள் .

" நான் உன் பேரை சொல்லி சொல்லலையே " பார்வதி .

" பின்ன ... இந்த வீட்டில் கிச்சனில் வேலை செய்வது நீங்களும், நானும் தான் . உங்கள நீங்களே திட்டிக்க நீங்க ஒன்னும் லூ… "

" ஏய் ! வார்த்தைய அளந்து பேசு . இப்படி தான் பெரியவங்கக்கிட்ட மரியாதை இல்லாம பேச உங்க வீட்டில சொல்லித்தந்தாங்களா ? "

" தேவையில்லாம எங்க வீட்ட பத்தி பேசாதீங்க . உங்கள மாதிரி ஆளுங்க கூட இருந்தா எல்லாரும் இப்படி தான் பேசுவாங்க . காலையிலிருந்து நைட் தூங்க போகும் வரை எல்லா வேலைகளையும் செய்துட்டு தான இருக்கேன். ஆனா , நீங்க நான் செய்ற வேலை எல்லாத்துலையும் குறை தான் சொல்லுறீங்க . நீங்க என்ன பாராட்ட வேண்டாம் அட்லீஸ்ட் குறை சொல்லாமல் இருந்தா போதும். நானும் மனுஷி தான் "

" உன்ன வேலை செய்ய சொல்லிட்டு நான் ஒன்னும் இங்க சும்மா படுத்துக் கிடக்கல . நானும் வேலை செய்துட்டு தான் இருக்கேன் . வேலை செய்றது மட்டும் பெரிய விசயமில்ல செய்ற வேலையை உருப்படியா செய்யணும் புரியுதா "

" அப்படி இங்க நான் என்ன உருப்படியா செய்யல " என்றாள் ஆர்த்தி கோபமாக .

" இங்க பாரு சமைக்குறேன் என்ற பெயரில் அடுப்பு திட்டு முழுக்க எண்ணைய ஊத்தி வச்சிருக்க . அத துடச்சிருக்க ஆன , கொஞ்சம் கூட பிசுபிசுப்பு போகல . வாஷ்பேஷனை அழுத்தி தேக்கவே மாட்டேங்குற. ஒரே வழுவழுன்னு இருக்கு . மசாலா டப்பாவ எடுக்குற இடத்துல ஒழுங்கா வைக்கிறதே கிடையாது . வீடு பெருக்குற. ஆனா , ஒழுங்கா செய்றதே இல்ல. நீ குப்பைய கொட்டுறதுக்கு முன்னாடியே, நீ பெருக்குன இடத்துல தூசி பறக்குது. " என்றாள் பார்வதி ஆவேசமாக .

கண்ணில் கண்ணீர் நிற்க , முகம் முழுவதும் கோபத்தில் சிவக்க . மாமியார் முன் அழ பிடிக்காமல் வேகமாக தன் அறைக்கு சென்றவள், தன் கோபத்தை கதவின் மேல் காட்ட... வேகமாக சத்தத்துடன் மூடப்பட்டது கதவு.

" மரியாதை கிலோ எவ்வளவுனு கேட்பா போல. எனக்கு இந்த வீட்ல கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லை. " என்று தன் கணவன் படத்தை பார்த்து கண் கலங்கியவர் , ஆர்த்தி வேகமாக கதவை அடைக்கவும் மீண்டும் கோபமாக , " கதவை இன்றைக்கே உடைச்சி எடுத்துடுவா போல " என்ற பார்வதி அடுப்பை மீண்டும் துடைக்க ஆரம்பித்தார் .

ரூம் உள்ளே வந்த ஆர்த்தி பெட்டில் விழுந்து அழ ஆரம்பித்தாள் .

ஆர்த்தி ரூம் உள்ளே வந்ததிலிருந்து , ஸ்டடி டேபிளில் எழுதிக் கொண்டிருந்த சரவணன் எழுதுவதை நிறுத்தி , அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் .

அவள் அழுவதை பார்க்க முடியாதவன் , " ஏன் டா அழற ? " என்று கேட்க , ஆர்த்தியிடம் பதில் இல்லை .

அவளை தன்னை பார்க்க திருப்பியவன் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க .

ஆர்த்தியோ , " நீங்க இந்த வீட்டில் தான இருக்கீங்க. நாங்க சண்ட போட்ட சத்தத்திற்கு பக்கத்து வீட்டு பாட்டியே இன்னைக்கு சாயந்திரம் வந்து உங்க அம்மா கிட்ட நாங்க பேசுனத புட்டுப் புட்டு வைப்பாங்க . அந்த பாட்டி கிட்டக்கூட என்ன பத்தி குறை தான் செல்லுவாங்க உங்க அம்மா . இந்த பாட்டியும் நல்லா உங்க அம்மாவ ஏத்திவிட்டு போவாங்க . ஆனா , உங்களுக்கு மட்டும் எதுவும் கேட்காது . நான் எங்க வீட்ல மகாராணி மாதிரி வளர்ந்தேன் . இந்த வீட்டில் வேலைக்காரிக்கு கிடைக்குற மரியாதை கூட எனக்கில்லை . நிம்மதியா ஒரு நாள் கூட இந்த வீட்டில் நான் வாழ்ந்ததில்லை."

" அம்மா அந்த காலத்து ஆளுங்க. அதுவுமில்லாமல் அப்பா இல்லாம அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க டா . புரிஞ்சுக்கோ. அவங்க கோபமா பேசினாலும் நீ அமைதியா இரு மா " சரவணன் .

" நீங்க எப்பவும் உங்க அம்மாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்க . என்கிட்ட எதுவும் பேசாதீங்க " என்ற ஆர்த்தி காதை மூடிக்கொண்டு அழுதாள் .

இனி தான் என்ன பேசினாலும் இவளுக்கு புரியாது என்பதை உணர்ந்து சரவணன் மீண்டும் டைரியில் எழுத தொடங்கினான் .

தன்னால் முடிந்தளவு அழுதவள் பின் மனம் லேசாக சரவணனை திரும்பி பார்க்க , அவன் எழுதுவதை பார்த்து மீண்டும் கோபமானாள் .

' அழும் என்னை சமாதானம் செய்யாமல் , எப்போ பார்த்தாலும் டைரியில் எழுதுக்கொண்டிருக்கிறார் ' மனதில் நினைத்தவள் ஒன்றை மறந்துவிட்டாள். தாம் தான் சமாதானம் பேச வந்தவனை பேச விடாமல் அனுப்பிவிட்டோம் என்பதை .

சரவணன் எழுந்து வெளியே சென்றான் .

பார்வதி அருகே போனவன் , " அம்மா " என்று அவன் சொல்லி முடிக்கும் முன் பார்வதி , " இங்க பாரு டா உன் பொண்டாட்டிக்கு சப்போர்ட்டா என்கிட்ட எதுவும் பேசாத டா . அப்படி நான் இங்கு இருப்பது அவளுக்கு பிடிக்கலனா என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடு . எனக்கு தான் யாருமில்லையே . என் கணவரும் போய் சேர்ந்துட்டாரு . என்னையும் கூட கூட்டிட்டு போகணும்னு அறிவு கூட அந்த மனுசனுக்கில்ல . நல்லா என் பிள்ளைய முந்தானையில் முடிஞ்சி வைச்சிருக்கா ".

சொல்ல முடியாத வேதனையை கண்களில் காட்டிய சரவணன் , " அம்மா நான் வெளிய போயிட்டு வரேன். " என்றவனுக்கு அந்த வீட்டில் மூச்சு முட்ட அருகில் உள்ள கடற்கரைக்கு தன்னை மறக்கச் சென்றான் .

பார்வதி பேசியது தெளிவாக ஆர்த்தி காதில் விழ , வேகமாக எழுந்தவள் , " என்ன பேச்சு பேசுறாங்க . இவங்க பிள்ளைய நான் முந்தானையில் முடிஞ்சி வைச்சிருந்தா இப்படி ஒன்னுமே கேட்காம போவாங்களா ? இவங்க எதுக்கு முதியோர் இல்லத்திற்கு போகணும்‌. நான் போறேன் எங்க வீட்டுக்கு. " என்றவள் பையில் தன் பொருட்களை அடுக்க அப்போது அவள் கண்ணில் பட்டது அந்த டைரி .

இது நாள் வரை அதை படிக்க அவளுக்கு தோன்றியதே இல்லை , இன்று ஏதோ உந்த , ' என்னை விட அவருக்கு இந்த டைரி தான் முக்கியம் ' என்று மனதில் நினைத்தவள் அதை எடுத்துப் பிரித்தாள்.

டைரியின் முதல் பக்கம் , " ஒரு ஆணின் வரம் " என்று எழுதியிருந்தது .

டைரியை எடுத்துக் கொண்டு பெட்டில் உட்கார்ந்தவள்,அந்த டைரியை படிக்க தொடங்கினாள் .

படிக்க படிக்க அவள் கண்களிலிருந்து கண்ணீர் வந்துக் கொண்டிருந்தது . கடைசி மூன்று பக்கங்கள் ,

'

10.10.2020 ,

" அத்தம்மா என்ன தனியா பேசிட்டிருக்கீங்க " ஆர்த்தி .

" தப்பா எடுத்துக்காத டா.இனிமே கொஞ்சம் அழுத்தி அடுப்பை தொடமா . இங்க பாரு அழுக்கு போகவே இல்லை " பார்வதி

" சாரி அத்தை , எனக்கு இன்னைக்கு பீரியட்ஸ் ரொம்ப வலியா இருந்தது. என்னால சரியா வேலை செய்ய முடியல. அதான் லேசா தொடச்சேன் " என்றாள் ஆர்த்தி சோர்வாக .

" முன்னையே சொல்லமாட்டியா . நானே அடுப்பை சுத்தம் செய்திருப்பேன் . நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு " பார்வதி .

" அத்தை நீங்களே எப்படி எல்லா
வேலையும் செய்வீங்க . நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் " ஆர்த்தி .

" இரண்டு வருஷமா தான் நீ இந்த வீட்டிலிருக்க. அதற்கு முன்ன இருந்து நான் தான் எல்லா வேலையும் செய்றேன் . நீ போய் ரெஸ்ட் எடு "

" தேங்க்ஸ் அத்தம்மா. லவ் யூ. " என்றவள், பார்வதியின் கண்ணத்தில் முத்தமிட்டு ஓடி விட்டாள் .

" விளையாட்டு பிள்ளையாவே இருக்கா " என்று நினைத்தவர் தன் வேலையை தொடர… காலிங் பெல் சத்தம் இசைத்தது.

யாரென்று கதவை திறந்து வெளியே பார்க்க… அங்கு பக்கத்து வீட்டு பாட்டி நின்றுக்கொண்டிருந்தார் .

" உள்ள வாங்க மா " பார்வதி .

உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தவர் , ஆர்த்தி இல்லாததை குறித்துக் கொண்டார் .

" ஏன் பார்வதி நீ தான் எல்லா வேலையும் செய்றியா உன் மருமக ஒன்னும் செய்றதில்லையா ? " பாட்டி .

" அவளுக்கு வயிரு வலி அதான் நான் அவளை ரெஸ்ட் எடுக்கச் சொன்னேன். "

" நீ இப்படி லூசா இருந்தா, எல்லாரும் உன் தலையில் மிளகாய் அரைச்சிட்டு போயிடுவாங்க . வயிரு வலி எல்லாருக்கும் வருவது தானே. இதுக்கு போய் யாராவது வேலை செய்யாமல் இருப்பாங்களா ? உனக்கு வேற யாரும் இல்லை.பார்த்து நடந்துக்கோ " பாட்டி .

" ஆமா , நேத்து நைட் உன் மருமக கோபமா பேசிட்டிருந்தா . ஏன் நீ ஒன்னும் பேசாம அமைதியா இருந்த ? " பாட்டி .

" அவளுக்கு தூரம் வந்ததும் கஷ்டமாகிடுச்சு . கொஞ்ச நாளா குழந்தை இல்லனு ஸ்ட்ரஸ்ல இருக்கா . அதுவும் இல்லாம அந்த டைம்ல ஹார்மோன்ல சேஞ்ச் இருக்கும் . அந்த டைம்ல அவ கோபமாதான் பேசுவா எனக்கு தெரியும். அதை நான் பெரிசா எடுத்துக்க மாட்டேன் . இன்னைக்கு காலைலே வந்து என் கிட்ட மன்னிப்பு கேட்டா " பார்வதி .

" என்னமோ சொல்லுற பார்வதி . துணை இல்லாத பெற்றோரை தான் அதிகமா முதியோர் இல்லத்தில் சேர்க்குறாங்க பார்த்துக்கோ . நான் வரேன் " பாட்டி .

பாட்டி வெளியே செல்ல , உள்ளே வந்தான் சரவணன் , " அம்மா , இன்னைக்கு நான் சீக்கிரமா வந்துட்டேன் . நாம வெளியே எங்கேயாவது போகலாமா ? "

" நான் வரல , உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போ ".

" நீங்களும் வாங்க மா ப்ளீஸ் ".

" சரவணா உனக்கு ஒருதரவ சொன்னா புரியாதா "

" அம்மா பசிக்குது காபி தாங்க ".

" காலையிலிருந்து வேலை செய்தது டயர்டா இருக்கு , உன் பொண்டாட்டிய கேளு , நான் கொஞ்ச நேரம் படுத்திருக்கேன் "

குழப்பமாக பார்வதியை பார்த்த சரவணன் பின் அவன் அறைக்கு சென்றான் .

" ஏன் டா வேலை செய்யாம படுத்திருக்க ? அம்மாவே எல்லாம் செஞ்சதால டயர்டா இருக்காங்க போல. என் கிட்ட கோபமா பேசுனாங்க " சரவணன்.

" எனக்கு வயிரு வலிக்குதுனு சொன்னேன் , அத்த தான் போய் படுத்துக்கோனு சொன்னாங்க "

" அப்போ ஏன் என் கிட்ட கோபமா பேசுனாங்க ? "

" நீங்க வரப்ப பக்கத்து வீட்டு பாட்டி இருந்தாங்களா ? " ஆர்த்தி.

" நான் வரப்பதான் அவங்க வெளியே போனாங்க " சரவணன் .

" அந்த பாட்டிக்கு இதே தான் வேலை . அத்த மனசுல மாமா இல்லாம தனியா இருக்கோம் என்ற எண்ணத்தை ஆழமா பதிய வெச்சிட்டு போயிடுவாங்க . அத்த கோபப்பட்டால் அமைதியா இருங்க . நாளு வார்த்த அன்பா பேசுனா போதும். அத்த பழைய மாதிரி அன்பா பேசுவாங்க. அது வரைக்கும் கோபமா தான் பேசுவாங்க. நீங்க அதைக் கண்டுக்கக் கூடாது " ஆர்த்தி .

" பரவாயில்லையே எங்க அம்மாவ நல்லா புரிஞ்சி வச்சிருக்க " சரவணன் .

" உங்க அம்மா இல்ல என் அத்தம்மா " என்ற ஆர்த்தி புன்னகைத்தாள் . அதில் சரவணனும் இணைய , அங்கு மகிழ்ச்சி விதைக்கப்பட்டது . '

என்று டைரியில் எழுதியிருந்த கடைசி பக்கத்தை முடித்தாள் ஆர்த்தி .

சொல்ல முடியாத வேதனை மனசு பாரமாக அவளுக்கு இருந்தது . குற்றவுணர்ச்சியை தாங்க முடியாமல் பார்வதி அறைக்குச் சென்றாள் ஆர்த்தி .

" அத்தம்மா என்ன மன்னிச்சிடுங்க . நான் உங்க கிட்ட கோபமா பேசிட்டேன் . நான் ஏன் ஒழுங்கா வேலை செய்யலனு சொல்லாம கோபமா பேசிட்டேன் . இனிமே இப்படி நான் நடந்துக்க மாட்டேன். இதுவரைக்கும் நான் உங்க பிள்ளைய ஒரு சுயநலவாதி , அவருக்கு உணர்வுகளே இல்லைனு நினைச்சேன் ஆன , இன்னைக்கு தான் எனக்கு புரியுது இந்த உலகத்துலே நான் சொல்லாமலே அவருக்கு மட்டும் தான் என் உணர்வுகள் புரியுது . என்ன சரியா புரிஞ்சிக்கிட்ட ஒரே ஆள் உங்க பையன் தான் . நான் தான் இத்தன நாளா சுயநலவாதியா இருந்திருக்கேன் என தெரிஞ்சிக்கிட்டேன் . நமக்குள்ள சண்ட வர காரணம், நமக்குள்ள புரிதல் இல்லை என்பதால் தான் . நம்ம இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் புரிஞ்சிக்கிட்டா நமக்குள்ள சண்டையே வராதுன்னு சரவணன் எழுதியிருக்கார் . இந்த டைரில இது நாள் வரை நம்ம சண்டப்போட்டத நமக்குள் புரிதல் இருந்திருந்தா, அந்த சண்ட எப்படி மாறியிருக்கும்னு எழுதியிருக்கார் . இன்னைக்கு நாம சண்ட போட்டது வரை எழுதி வைச்சிருக்கார் . இனி நான் உங்க கூட சண்ட போட மாட்டேன் அத்தம்மா . உங்களால முடிஞ்சா இந்த டைரிய படிச்சி பாருங்க " என்று ஆர்த்தி அந்த டைரியை டேபிள் மேல் வைத்துவிட்டு சென்றாள் .

ஆர்த்தி மேல் இருந்த கோபத்தால் அவள் அறைக்கு வந்ததிலிருந்து அவளை பார்க்காமல் திரும்பி படுத்திருந்த பார்வதி , அவள் பேச பேச அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் . அவள் வெளியே சென்றதும் எழுந்து உட்கார்ந்தவர் , தன் கண்ணாடியை மாட்டிக் கொண்டு டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்தார் .

படிக்க படிக்க அவரின் கண்ணீரை நிறுத்தும் வழி அவருக்கே தெரியவில்லை .

' கணவனை இழந்த பின் சரவணனை நன்றாக பார்த்துக்கொள்ளவில்லை அதுவும் அவனுக்கு திருமணம் ஆன பின் அவனிடம் அன்பாக ஒரு வார்த்தைக் கூட தான் பேசவில்லை என்பது புரிய அவனை பெற்ற வயிரு துடித்தது .

தவமாய் பெற்ற பிள்ளையை பார்த்துக்கொள்ளவில்லையே . அவனை சிரித்த முகமாக பார்த்து எத்தன வருடமாகிறது . இதைக்கூட நான் இவ்வளவு நாளா கவனிக்கலையே .

இவ்வளவு அனுபவம் உள்ள நானே சூழ்நிலையை சரியாக சமாளிக்காத போது ஆர்த்தி என்ன செய்வா , பாவம் அவள் பெற்றோரை விட்டுட்டு, புது சூழலில் வாழ வந்தவளை நான் நன்றாக பார்த்துக் கொள்ளவில்லையே. ' என்று வருந்திய பார்வதி ஒரு முடிவோடு வெளியே வந்தார் .

" ஆர்த்தி…" என்ற பார்வதி அவளை அணைத்துக் கொண்டார் .

" மன்னிச்சிடு டா.வீட்டிற்கு மூத்தவளா செய்ய வேண்டியதை நான் செய்யல . அதான் இந்த வீட்ல சந்தோஷமே இல்லாம போயிடுச்சு . என் பையன் சரியாத் தான் எழுதியிருக்கான் . இனிமே நான் கோபப்படாமல் உன் சூழ்நிலையை புரிஞ்சிப்பேன் . நாம் இனிமே நல்ல நண்பர்களாக இருக்கலாம். " பார்வதி .

சம்மதமாக தலை ஆட்டிய ஆர்த்தி , " நமக்குள் இனி புரிதல் இருக்கும் அத்தம்மா . இனி எந்த பிரச்சனையும் வராது " .

நேரமாவதை உணர்ந்த சரவணன் கடல் அலையிடமிருந்து தன் பார்வையை பிரித்து நிஜத்திற்கு வந்தவன் வீட்டை நோக்கி நடந்தான் .

' அம்மா பேச்சை கேட்டு கண்டிப்பா ஆர்த்தி அவங்க வீட்டிற்கு கிளம்பியிருப்பா . இனி நான் என்ன செய்றதோ ' என்று யோசித்துக் கொண்டே கதவை திறந்தவன் அங்கு கண்ட காட்சியை நம்ப முடியாமல் கண்ணை சரி செய்து மீண்டும், மீண்டும் பார்த்தான் . இருந்தாலும் நம்ப முடியாமல் கையை கிள்ளி பார்த்தான் .

நடப்பது நிஜம் என்பது புரிய அப்படியே அங்கு நின்றுக் கொண்டிருந்தான் .

" அத்தம்மா , இப்போ தான் நீங்க எப்படி இப்படி சூப்பரா தோசை ஊத்துறீங்கனு தெரியுது " என்றாள் ஆர்த்தி அடுப்பு திட்டில் உட்கார்ந்து தோசை சாப்பிட்டுக் கொண்டே .

" உனக்கு தோசை ஊத்த தெரியாதா ? " பார்வதி .

" தெரியாது அத்தம்மா " .

முன்பே கேட்காத தன் மடதனத்தை நினைத்து வருத்தப்பட்டவர் , " இனி எல்லாமே நான் சொல்லி தரேன் டா " பார்வதி .

சம்மதமாக தலை அசைத்தவள்,
அப்போது தான் நம்பாத பார்வையுடன் வாசலிலே நிற்கும் சரவணனை பார்த்தாள் ஆர்த்தி .

பின் மெதுவாக பார்வதியின் காதில் , " அத்தம்மா , சரவணன் வந்துட்டார் . அங்கே நிற்கிறார் " என்றாள் .

திரும்பி பார்த்த பார்வதி , " வா டா கண்ணா . சீக்கிரம் போய் கை கால் கழுவிட்டு வா சாப்பிடலாம் " என்றார் .

எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்ற சரவணன் , அங்கு டேபிளில் இல்லாத டைரியை பார்த்தவன் வேகமாக வெளியே வந்து , " மாமியாருக்கும் மருமகளுக்கும் எந்த மரத்தடியில் ஞானம் கிடைச்சதுனு யோசிச்சேன் . இப்போ தான புரியுது.என் டைரிய படிச்சி தான் இரண்டு பேருக்கும் அறிவு வந்திருக்கு " என்றான் நக்கலாக .

" அத்தம்மா , நம்ம இரண்டு பேரும் இத்தனை நாளா அறிவில்லாமல் இருந்தோம்னு உங்க பையன் சொல்றாரு " .

" அது உண்மை என்றாலும் அவன் இப்படி வெளிப்படையா சொன்னா நாம சும்மா இருக்கக்கூடாது வா நம்ம பவர காட்டுவோம் " என்று பார்வதி சொல்ல , இருவரும் சரவணனை அடிக்க துரத்த .

" முடிஞ்சா என்ன பிடிங்க பாப்போம் " என்றவனோ இருவரின் கையிலும் சிக்காமல் ஓடினான் .

மூச்சு வாங்க சோபாவில் வந்து உட்கார்ந்தார் பார்வதி . அவரை தொடர்ந்து ஆர்த்தியும் அவர் அருகில் அமர்ந்து அவர் தோளில் சாய்ந்து கொண்டாள் .

இந்த காட்சி சரவணனின் பல நாள் மன காயங்களுக்கு மருந்தானது .

வேகமாக வந்து தன் தாயின் மடியில் தலை வைத்துப் படுத்தவன் , ஆர்த்தியை பார்த்து கண்ணடித்தான் .

மீண்டும் பழசை பேச விரும்பாமல் மூவரும் அமைதியாக இருக்க , மூவரின் மனதும் நிறைவாக இருந்தது . இனி அந்த வீட்டில் மகிழ்ச்சி மட்டுமே .

***

நன்றி.
 
Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
சூப்பர் சிஸ். இப்படி எல்லோரும் சரவணன் டைரியில் எழுதி இருக்கிற மாதிரி நடந்துக் கிட்டா மாமியார் மருமகள் சண்டையே வராது. சரவணன் நல்ல கணவன், நல்ல மகன் . இரண்டு பேர் கிட்டயும் மாட்டிக் கிட்டு பார்க்கும் போது கொஞ்சம் பாவமாக தான் இருக்கு. வாழ்த்துக்கள் சிஸ் ♥️
 
Suganya.P

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
2

ஆணின் மனதும் ஆழமான அழகானது தான் போல .சரவணன் கிரேட்.வாழ்த்துக்கள் அபி
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
651
சூப்பர் சிஸ். இங்க பலரோட வீட்டுல புரிதல் இல்லாததால தான் சண்டையே வருது. சரவணனோட ஆசைப்படி மாமியாரும் மருமகளும் பேசிப் புரிஞ்சிக்கிட்டா இந்தமாதிரி சண்டைகளே வராது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சிஸ்..💐💐💐
 
Murugesanlaxmi

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
4

வாவ், நல்ல இருக்கு சகோதரி. நல்ல கதை. வாழ்த்துகள்
 
Abitha

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
13
சூப்பர் சிஸ். இப்படி எல்லோரும் சரவணன் டைரியில் எழுதி இருக்கிற மாதிரி நடந்துக் கிட்டா மாமியார் மருமகள் சண்டையே வராது. சரவணன் நல்ல கணவன், நல்ல மகன் . இரண்டு பேர் கிட்டயும் மாட்டிக் கிட்டு பார்க்கும் போது கொஞ்சம் பாவமாக தான் இருக்கு. வாழ்த்துக்கள் சிஸ் ♥️
Thank u sis
 
Abitha

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
13
சூப்பர் சிஸ். இங்க பலரோட வீட்டுல புரிதல் இல்லாததால தான் சண்டையே வருது. சரவணனோட ஆசைப்படி மாமியாரும் மருமகளும் பேசிப் புரிஞ்சிக்கிட்டா இந்தமாதிரி சண்டைகளே வராது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சிஸ்..💐💐💐
Thank u sis
 
R_Boomadevi

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 9, 2021
Messages
6
ஆஹா....அருமையான கதை.வீட்டில் இருவருக்கிடையில் மனவேறுபாடு வந்தால் ....மூன்றாமவர் அவர்கள் இருவருக்கும் இடையே நடுநிலையாக இருந்து நல்லதை யோசித்து ஞாயமாக செயல்பட்டால் ...அந்தப் புரிதல் உறவை வளர்க்கும்.குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.
அந்த மூன்றாமவர் தான் குடும்பத்தின் ஆனி வேர்...அன்பு வேர்.
 
Top