• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின்‌‌ மான்குட்டி 💕15

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
48
87
18
Madurai
ஏதர்பாராது நடந்த அவளுடனான இதழ் விபத்து ஆடவனை இன்னும் கூட கிறக்கி அவளை நோக்கி அவன் மனதை கோக்கி போட்டு இழுத்து இளமையின் சுமையை கூட்டியது..

அவள் இதழை ஸ்பரிசித்த தன் இதழை கிறக்கம் கொண்டு கடித்து கொண்டவன் நறுக்கென கடித்ததின் வலியில் சுயம் உணர்ந்து தலையை உலுக்கியவன் தன் தலையில் தட்டி ராட்ச்சசி என்ன கெடுத்து வச்சுட்டா என கண்களை மூடிய அந்த கனப்பொழுதையும் வீணடிக்காமல் இமையின் நடுவே பிம்பமாக விரிந்தவளை கனவுலகில் மிதந்தபடி களீபரம் செய்தவன் முத்தமிட்ட போது கண்டும் காணாமலும் அவள் நெஞ்சின் மென்மையின் வலைவில் லேசாக இறங்கிய உடையின் பக்கம் பார்த்த ஒற்றை பொட்டு அளவு மச்சம் அவனை அறியாது கிறக்கத்தில் ஆழ்த்தியதில் உச்சம் அடைந்தவன் போல் உடலை ஒருமாதிரி முறுக்கியவனுக்கு உச்சம் அடைய அவள் கடைக்கண் பார்வை போதுமே..

ஒரு அளவுக்கு மேல் இளமையில் இம்சை தாளாது விருட்டென மெத்தையில் இருந்து எழுந்து நின்றவன் அடியே ஏன்டி என்ன படுத்துற என மானசீகமாக அவளோடு உரையாடி விடலை பருவ ஆடவன் போல் வளைந்து நெளிந்து தோற்றம் காட்டியவன் அதற்கு மேல் அவஸ்தை தாளாது அஞ்சலியின் அறையை நோக்கி நடையை கட்டினான் தன்னை தின்று‌ தீர்க்கும் மோக சுமைக்கு முழு முற்றும் வடிகால் இல்லாமல் போனாலும் குறைந்தபட்சம் சிறு இமை தீண்டும் ஸ்பரிசம்‌ தோள் உரசும் அருகாமையாவது வேண்டும் என


அவள்‌‌ அறைய‌ வரை வீர நடைப்போட்டு வந்தவன் உள்ளே செல்ல திராணியற்று காலை முன்னுக்கு வைப்பதும் பின்‌ பின்யிழுத்து கொள்வதுமாய் பருவம் அடைந்து பக்குவம் இல்லாமல் காதல் கிறுக்கு முற்றிய பையன் போல் தடுமாறி தொலைந்தவன் அறையில் ஏதோ சிதறுவது போல் கேட்ட சத்ததில் தயக்கம் துறந்து சாற்றி இருந்த அறையை திறந்தவனின் விழி அதிர்ச்சில் விரிந்து போனது கண்ட காட்சியில்....

அங்கே அஞ்சலி தரையில் மல்லாக்கப் படுத்து கொண்டு மேலே சுற்றும் விசிறியை பார்த்து சிரித்து நீ ஏன் சுத்துற நில்லு என கூறி கொண்டு விசிறியை பிடித்து நிறுத்தும் முனைப்போடு கட்டிலில் ஏறி கையை விசிறியை நோக்கி உயர்த்தியவளை பார்த்து ஏய் என சத்தம் எழுப்பி அருகே சென்றவன் அவள் இடையில் கைவிட்டு தனக்கு பக்கவாட்டாக தூக்கி பச்சை பிள்ளையை இடுப்பில் வைத்து கொள்வது போல் தன் பக்கவாட்டு பக்கம் அவளை இறக்காது இறுக்கி கொண்டவனின் தோளில் அடித்து அதை நிறுத்தனும் விடு சுத்திட்டே இருந்தா தலையில் விழுந்துரும் என குழந்தை போல் தலையில் கைவைத்து உதட்டை குவித்தவளை பார்த்து தன்னை அறியாது சிரித்தவன் சரி என அவள் நிலை உணர்ந்து திட்டாமல் அப்படியே அவளை இறக்காது விசிறியின் சுவிட்ச் அருகே சென்று ஆப் செய்தவன் அவள் தாடையை மின்விசிறி பக்கம் திருப்பி இப்போ விழுகாது படுப்போமா என கேட்க...

அவளோ மஹூம் மஹூம் என தலையை நாலாபுறமும் அசைத்தவள் நீ..நீ ரொ..ரொம்ப பேட் என் தொட்..தொடாத என அவனை தள்ளியவள் ஒய்யாரமாக அவன் இடையில் சுகவாசியாக தான் அமர்ந்து இருந்தாள்...

அவனோ அவள் அட்டகாசம் தாங்காது ஏய் என கடிந்து கொண்டதில் விரிந்த குட்டி இதழ் பிதுங்க மூக்கை சுறுக்கி ஓ வென அழுவதவளை என்ன செய்வது என்று தெரியாமல் திணறி நின்றவனுக்கு அவள் இத்தகைய அருகாமை வேறு கொம்பு சீவும் அரக்கனாய்..


பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டு அவளை சமாதானம் படுத்துவதே இப்போது தலையாய செயலாக நினைத்தவன் ஐயோ என் குட்டி பாப்பா எதுக்கு அழுகுது என் அம்மு குட் கேர்ள் தான என அவள் கன்னம் குவித்து கொஞ்சி அப்போது கள்ளிச்செடியாக இனிமையான‌ கொஞ்சலின் நடுவே இளமை கொடுத்த மயக்கத்தில் அவள் கழுத்தில் புதைந்து மீசை குத்த அழுந்த முத்தமிட்டதில் என்ன நினைத்தாலோ தன் பலம் திரட்டி அவனை தள்ளிவிட்டு கீழே விழுந்து சுவரோடு ஒன்றி கொண்டு கோழி குஞ்சாக வெடவெடத்து அவன் முத்தமிட்ட இடத்தை தேய்த்து தன் அருகே நெருங்க பார்த்தவனை கி..கிட்ட வரா..வராது பீளிஸ் என அவள் முகத்திற்கு நேரே கரம் கூப்பி உதடு துடிக்க முகம் வெளிறி கெஞ்சியதை புருவ முடிச்சிட புரியாது பார்த்தவனுக்கு ஏன் இந்த திடிர்‌ அச்சம் நடுக்கம் என விளங்காத போதும் அவளை சமாதானம் செய்ய மெல்ல நெருங்க பார்த்தவனை கண்டு கதறவே தொடங்கி இருந்தவளை கலக்கம் மேலிட பார்த்தான் அதர்ஷன் வர்மா...

வேண்டாம் வேண்டாம் பீளிஸ் கிட்ட வராத உன் காலுல கூட விழுகுறேன் பீளிஸ் என கெஞ்சி சுவரை துளைத்து கொண்டு செல்பவள் போல் சுவரோடு ஒன்றி கெஞ்சியவளை கண்டவனுக்கு உள்ளே இதயம் நொறுங்கி சிதைவது போலான வலி...புயலுக்கும் நெஞ்சை நிமிர்த்தி அசையாது நிற்கும் ஆடவனின்‌ இரும்பு மனம் அவள் கதறலில் பாதரசமாக உருகி தேக சதையை சுட்டு அவளை உருகுலைத்தது...நடுங்கும் தேகத்தை தன்னுள் அடக்கி இதமுட்ட துடித்து கரம் நீட்டியவனின் கரம் தன்னை நெருங்க விடாது பட்டென மெஜை மேல் இருந்த பிளவர் வேஸை எடுத்து அவனை அடிக்க போக அதனை சற்றும் எதிர்பார்த்திராதவன் திடுக்கிட்டாலும் கன நேரத்தில் தன்னை சுதாரித்து கொண்டு படக்கென லாவகமாக தன் மேல் படாதபடிக்கு விலகி வேஸை தூரம் தட்டி இருந்தான்..

எடுக்கும் போதே விரிசல் விட்டிருந்த வேஸ் அவன் தடுக்க வந்ததில் விரிசல் விட்ட இடம் உடைந்து அதன் கூறிய முனை அவள் வல கரத்தோடு சேர்த்து மணிக்கட்டை அறுத்து இருந்தது..

கீறிய வேகத்தில் இரத்தம் பொலபொலவென கொட்ட கண்கள் சொருகி அப்படியே மயங்கி சரிய போகவும் அவளை இழுத்து தன் நெஞ்சோடு சேர்த்து கொண்டப்படி தூக்கி கட்டிலில் கிடத்தி விட்டு வேகவேகமாக அறை மொத்ததையும் களைத்து போட்டு முதல் உதவி பெட்டியை தேடி எடுத்தவன் ஒரு நொடி அதர்ந்து பார்த்தவன் பிறகு அவளை தூக்கி மெத்தையில் கிடத்திவிட்டு தன் அறைக்கு சென்று அனைத்தையும் களைத்து போட்டு முதல் உதவி பேட்டியை தேடி எடுத்தவன் நடுங்கும் கரங்களோடு தனக்கு தெரிந்த மட்டு மருந்து வைத்து கட்டி விட்டவனின் கண்கள் கலக்கத்தோடு கலங்கி இருந்தது...

இதை வெளியே இருந்து யாராவது பார்த்து இருந்தால்..அதர்ஷன் கண்களில் கண்ட கண்ணீர் விசயம் சர்ச்சை கூறிய விஷயமாக அமைந்து போகும் என்பதில் ஐயம் இல்லை ஏன் அவனே தன் கண்கள் உகுந்த நீரை வேற்று கிரக ஜந்துவாக தொட்டு பார்த்து கொண்டானே...

முதல் உதவி முடிந்து அவசரகதியாக மருத்துவருக்கு அழைத்து அவள் அருகிலே அவளை பார்த்தப்படி அமர்ந்து விட்டான் அவன்...

அவன் அழைத்த சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்து இருந்த மருத்துவரும் அவளை சோதிக்க அதற்குள் ஆயிரம் கேள்வியால் துளைத்தவனை ஆயசமாக ஏறிட்டார் அவர்...

அவனோ இன்னும் கூட பதைபதைப்பு அடங்காத குரலில் காயம் ஆழமா இருக்கா..எப்போ சரி ஆகும்...மணிக்கட்டுல பட்டிருக்கிறது எதுவும் விபரிதம் இல்லையே...வேணும்னா ஹாஸ்பிடல் கூட்டிட்டு வரவா...ஏன் இன்னும் மயங்கியே இருக்கா...என கேள்வி எழுப்பி ஏதாவது சொல்லுங்க என்னதான் ஆச்சு என சீறியவனின் சீற்றத்தில் சற்று அதர்ந்தவர் பின் சுதாரித்து கொண்டு சார் ஜஸ்ட் காம் டவுன் என கூறிய பின்னும் கூட டாக்டர் பர்ஸ்ட் அவளோட கண்டிஷன சொல்லுங்க என பரபரத்தவனை வினோதமாக பார்த்து வைத்தவருக்கு அதர்ஷனின் துடிப்பு புரியாமல் இல்லை ஆனால் அவன் துடிப்பது தான் விசித்திரமாக பட்டது அவருக்கு...

சார்வெயிட் ஏன் இவ்ளோ பதட்டம் படுறிங்க அவுங்களுக்கு ஒன்னும் இல்ல இன்னும் 5 நாள்ல கட்டு எடுத்தற்லாம்..அப்பறம் அவங்க ஏற்கனவே குடிச்சு இருக்காங்க இதுல பிளட் லாஸ் வேற அதான் மயங்கிடாங்க என கடைசி வாக்கியத்தை தயங்கி தயங்கி சொல்லி முடித்தவர் பின் அதனை தொடர்ந்து ...நத்திங் டு பெனிக் சரியா போய்ரும் கொஞ்சம் நல்லா பாத்து கொள்ளுங்கள் என்று அவர் விடைபெற்று சென்றார்....

இங்கே தேவா கையில் ஒரு பாட்டிலை வைத்து கொண்டு வீரிடம் சண்டை பிடித்து கொண்டு இருந்தான்...கேட்டு இருக்கலாம்ல டா ஏண்டா இப்படி பண்ண நம்ம நட்ப நீ கொச்ச படுத்திட்ட நா இதை உன் கிட்ட இருந்து எதிர்பார்க்கல வீர் கேட்டு இருந்தா கொடுக்க மாட்டேன்னுனாடா சொல்லிறுப்பேன் போடா என முகத்தை இறுக வைத்து கொண்டு கூறியவனை தொடர்ந்த வீர்...

இல்லைடா நா எடுக்கல நா ஏன் உன்கிட்ட கேட்காம எடுக்க போறேன் என கூறியவனை கண்டு கொள்ளாது வெறுப்பாக திரும்பியவன் அப்போது அங்கு அஞ்சலியின் அறையில் இருந்து ஒரு மருத்துவர் வாசல் பக்கம் செல்வதை பார்த்தவன் வீர் அருகே வந்து என்னடா அஞ்சலி ரூம்ல இருந்து டாக்டர் வராங்க அஞ்சலிக்கு என்னாச்சு என‌ கேட்டதை தொடர்ந்து வீர் தெரியாது என இதழ் பிதுங்க...

இருவரும் நடந்த சம்பவம் எதுவும் அறிந்திராமல் என்னானதோ என வேகமாக அஞ்சலியின் அறைக்கு சென்றனர்‌...

அங்கு அதர்ஷன் அஞ்சலியை தன் மடியில் போட்டு கொண்டு காயமாகிய கரத்தை ஒரு கரங்களால் வருடி விட்டு கொண்டே மற்றோரு கரத்தால் தலையை வருடி‌ ஆதரவாக மடியில் போட்டு தூங்கவைத்தவனை பார்த்து இருவருக்கும் ஆச்சரியம் எல்லாம் இல்லை இதை விட பெரிய அதிர்ச்சியை பார்த்து பழக்கப்பட்ட‌ இதயத்திற்கு இந்த அதிர்ச்சி தாங்கும் படியான அதிர்வையே கொடுத்தது...

அண்ணா என்ன ஆச்சு ஏன் டாக்டர் வந்துட்டு போறாங்க என வீர் அஞ்சலி காயத்தில் பதிந்து இருந்த அதர்ஷனின் கரங்களை பார்த்து கேட்க..

அதர்ஷனோ அதற்கு பதில் அளிக்காமல் யாரு வாட்டர் பாட்டில்ல கண்ட கருமத்தை கலந்து வச்சது என கேட்க இருவரும் திருட்டு முழி முழித்தனர்..

சொல்லுங்க என அதட்ட அதில் சிறிதாக சினுங்கியவளை நன்றாக இறுக்கி ஆறுதல் படுத்திவிட்டு மீண்டும் அவர்கள் புறம் உஷ்ன பார்வையை செலுத்தி நா கேட்டதுக்கு பதில் என கேட்க..

தேவாவோ அப்போ அதை நீ எடுக்கலையா என வீரிடம் மெல்லிய குரலில் கேட்க..அவனோ இல்லடா என கூற..

தேவாவோ திருட்டு முழியுடன் அது அண்ணா என‌‌ ஏதோ கூற வந்தவனை தடுத்து தேவா இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங் இனி உன்னால அஞ்சலிக்கு ஏதாவது ஆச்சுனா அவ்ளோதான் ஜஸ்ட் கெட் லாஸ்ட் நௌ என கண்களில் அனல் தெறிக்க அவளுக்காக இழுத்து பிடித்த மென்மை குரலில் சீறினான்..

அவன் சீற்றத்தை தொடர்ந்து இருவரும் தப்பித்தால் போதும் என ஒடி விட்டு இருந்தனர்..

நடந்தது இது தான் தேவா சரக்கு வாங்கி அதை பெப்ஸியில் கலந்து வைத்து சைட்டிஷும் ரெடியாக வைத்து விட்டு குடிப்பதற்கு ஏய்துவான காஸ்டும் உடுத்தி வர சென்ற நேரம் அங்கே வந்த அஞ்சலி மேஜையில் தகதகத்த பக்கோடா கின்னத்தை பார்த்து ஆசையாக வாயில் எடுத்து போட்டு கொண்ட போது அதில் கிடந்த மிளகாவை கடித்தி காரம் உச்சி மண்டைக்கு ஏற‌ பக்கத்தில் கிடந்த பெப்ஸியை காரத்திற்கு இதமாக உள்ளே செலுத்த அதவோ காரத்தை குறைத்து போதையை ஏற்றி விட்டது அவளுக்கு...

தட்டுதடுமாறி அறைக்கு வந்த பின் அவள் செய்த அட்டகாசம் நமக்கு தெரிந்ததே..

தேவாவும் எல்லாம் வேலையையும் முடித்து வந்தவன் காலியான பாட்டிலை பார்த்து வீர் தான் எடுத்து இருப்பான் என அவனிடம் சண்டை பாய்ந்த கதையும் நமக்கு தெரிந்ததே..

அதர்ஷன் மென்மையாக அவள் தலையை வருடிக் கொண்டே அவள் முகத்தை தான் கண் எடுக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்..

கன்னம்மா என காற்றுக்கும் நோகாமல் அழைத்து..உனக்கு என் பிரச்சனை ஏன் இந்த பயம் நடுக்கம் உனக்குள்ள என்னதான் அழுத்திட்டு இருக்கு என உறங்கி கொண்டு இருந்தவளிடம் கேட்டவன் பின் எந்த சலனமும் இல்லாமல் இதமாக தன் மடியில் தன்னை புதைத்து உறங்கும் அவளை பார்த்து சிறு புன்னகையுடன் அவளை நகர்த்த பால் வாசம் தேடி மறுபடியும் தாயிடம் தஞ்சமடையும் குழந்தை போல் மறுபடியும் அவனை இழுத்து ஒன்றி கொண்டதில்...அப்படியே சரந்து விட்டான் அவள் பக்கதிலேயே அவளை விட்டு செல்லும் என்னம் அற்று.‌‌..

அவள் முகத்தையே பார்த்தவன்..மெதுவாக அவள் கழுத்தடியில் கை கொடுத்து அவள் பஞ்சு கன்னம் தாங்கி அவள் முகத்திற்கு மிக அருகே குனிந்து உன்ன லவ் பன்னுறேனா அம்மு என கேட்க அதை எதுவும் உணராமல் அவள் உறக்கத்தின் பிடியில் கட்டுண்டு போதும் இதழோரம் ஓர் சன்ன சிரிப்பு....

லவ் இல்லனாலும் உன்ன விட மாட்டேன் என இறுக்கி அனைத்து கொண்டு அவளுடனே உறங்கி போனான்..

இருவருக்கும் நிம்மதியான தூக்கம் அவனுக்கு தாயின் கதகதப்பை கொடுத்தவள் அவனிடம் பாதுகாப்பை பெற்று சுகமாக உறங்கி இருந்தாள்...

காலை விடிய அதர்ஷன் போன் விடாமல் அழைக்க கண்ணை கசக்கி எழுந்து போனை துலாவி எடுத்து பேசியவன்..ஒகே என ஒரே வார்த்தையில் பேசி முடித்து கொண்டு எழுந்நவன் தன் அருகே பார்க்க அவன் தேவதை பெண்ணோ நிம்மதியாக தூங்கியிருந்தாள்... அவள் இதமாக நெற்றியில் முத்தமிட்டு தன் அறைக்கு நடந்தான்...

அதர்ஷன் தன் அறைக்கு செல்லும் போது தேவா யாருடனோ திவிரமாக பேசிவிட்டு கைபேசியை அனைத்து விட்டு திரும்ப..

அதர்ஷன் எந்த கேள்விகளும் இன்றி அவனை தான் பார்த்து சிரித்தான் அந்த சிரிப்புகுள் ஆயிரம் அர்த்தம் ..தேவாவும் சலைக்காமல் ஒர் புன்னகை புரிய அவன் தோளை தட்டி விட்டு சென்றான் அதர்ஷன் வர்மா....

தொடரும்.......