• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி💕3

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
48
87
18
Madurai
பாகம்-3

கோவை விமான நிலையத்தில் வந்து இறங்கியவனை சொல்லொன உணர்வு தாக்கி பூ பூக்கம் நேரம் கற்பாறை அதிர்ந்து அடங்குவதை போல் ஓர் சிலிர்ப்பு இதமாய் மனதை வருடியது.... அனைத்துயும் அலட்சியமாக கடந்து செல்பவனுக்கு இந்த நிலை அலட்சியம் செய்ய முடியாத படிக்கு மாயக்கட்டுக்குள் ஆழ்த்தி ரசிக்கவைத்ததில் கடையோரும் தன்னை அறியாது துளிர்த்த புன்னகையோடு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தான் அமர்தலான ஆளுமை கொண்ட நடையுடன்...

வெளியே தனக்காகவே கொகுசு மகிழுந்துடன் நின்றவரை நோக்கி வந்தவன்...அவரிடம் இருந்து சாவியை வாங்கி வீரிடம் கொடுத்து நம்ம கெஸ்ட் ஹவுஸ் என்ற சொல்லோடு முடித்து கொணடு மகிழுந்தினுள் ஏறி அமர்ந்தவனை தொடர்ந்து வீரும் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை இயக்கினான்...

சீரான தார் சாலையில் தங்களுகான இன்றைய டாஸ்கை முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் நின்ற மக்கள் கூட்டம் முன்னுக்கும் பின்னுக்கும் அல்லாட பாவம் பூமி தாய் தான் இவர்களது வேகம் தாளாது சற்று தளர்ந்து சூரியனை துனைக்கு அழைத்தாள்...

அலைமொதும் நெரிசலில் சிக்கய வீர் சற்று சலித்து கொண்டு ஸ்டியரிங்கில் தாளம் தட்டியப்படி வாயை குவித்து இழுத்து மூச்சை விட்டேறிந்த படி களையும் நெரிசலுக்காக காத்திருந்த நேரம் அனிச்சையாக பார்வை திரும்பிய திசையில் கண்ட காட்சியில் கூட்டத்தின் நடுவே சிக்கி இருந்த காரில் இருந்த இறங்க முயன்றவனை...

ஏய் எங்க போற என தொலைபேசியில் தலையை கவிழ்த்து இருந்தவன் பட்டென ஏறிட்ட என்ன என்று வினவி இருக்க...அவனோ பரபரத்த கால்களுடன் கண்களை அந்த திசையில இருந்து அகற்றாது " அண்ணா அந்த பொண்ணு என்ற சொற்களோடு தனக்கு எதிர் புறம் கை காட்டியவனின் கை நீண்ட பக்கம் பார்வையை திருப்பியவன் என்ன நினைத்தானோ அவனுக்கு மிஞ்சிய வேகத்தோடு தனக்கு பத்தடி தூரத்தில் இருந்த பேருந்து நிலையத்தை விரைந்து அடைந்து நின்ற நேரம் இத்தனை நேரம் தள்ளடி கொண்டு இருந்தவள் வழு இழந்த வேர் போல் மயங்கி சரியப்போனவளை ஒரே தாவில் அவளை இடுப்போடு சேர்த்து இழுத்து தன் கரங்களோடு சேர்த்து கொண்டவன் அவள் முகத்தைதான் பொருள் விளங்கா பாவனையுடன் அவளை தான் ஊன்றி பார்த்து கொண்டு இருந்தான்... அவளோ அத்தனை மயக்கத்திலும் அவன் முகத்தை நோக்கி விழி மலர்த்த முயன்று தோற்றவளாக அவன் கையில் பாந்தமாக பதுங்கி கொண்டாள்...ஆம் அஞ்சலி மயங்கியப் போது தாங்கிய கரம் அதர்ஷனின் கரம் தான்...

ஏனோ அந்த பூரன நிலவு போன்ற மதி முகத்துடன் குழந்தையாக தன் கைக்குள் அடங்கி இருந்த பூங்கொத்தை விட்டு பார்வையை அகற்ற முடியாது சுற்றத்தை மறந்து அவளை தான் பார்த்து இருந்தான்...வீரோ முதலில் அதர்ஷனின் புது வித செயலில் சற்று அதர்ந்து பெவென அவர்களை வெறித்தவன் தன் பின் கேட்க ஹாரன் சத்ததில் சுற்றம் உணர்ந்து தன்னை நிலைப்படுத்தி கொண்டவன் அண்ணா என குரல் எழுப்பி அதர்ஷனின் மௌன நிலையையும் கலைத்து இருந்தான்...

அவன் குறலில் மௌன நிலை களைந்து சற்று ஏரிச்சல் உற்றவன் பின் நிலை உணர்ந்து சீக்கிரம் வண்டி எடு என வீரிடம் கட்டளை பிறப்பித்து விட்டு மெல்லிய பட்டுப்பூவை போல் இருந்தவளை மெல்ல பின்னிருக்கையில் கிடத்தி விட்டு முன்னிருக்கையில் அமர்நதவன் சீக்கரம் போடா என அவனை அவசர படுத்தியவனை வேற்று கிறகவாசி போல் பார்த்தாலும் அவன் கட்டளையின் படி வண்டியை வேகமாக செலுத்தி இருந்தான்...

யோசனை மொத்தமும் அதர்ஷன் பக்கம் அவனை பற்றிய யோசனையா என்றாள் ஆம் அவனை பற்றி தான் ஏனேனில் மற்றவர்களுக்கு ஒடிப் போய் உதவி செய்யும் ரகம்யில்லையே அதுவும் பெண் என்றால் தன்னாள் அவன் கண்ணில் குடியேறும் ஓர் அலட்சியம் பாவம் இது தானே அதர்ஷன் வர்மா ஆனால் இப்போது அவனின் வினோத செயலில் வீர் திகைப்பது ஒன்றும் அதிசயம் இல்லையே...

.சாலையிலும் சற்று நெரிசல் குறைந்ததால் காரும் சீரான வேகத்தில் பயணித்தது மருத்துவமனை நோக்கி....
அவனுக்கே கூட இன்னும் புரியாத புதிராக இருந்தது தான் ஏன் அவள் தள்ளாடி விழும் நேரம் பதைபதைத்து போய் தாங்கினோம் என்று ஆனாலும் அவள் கைகளில் விழுந்த தருணம் சில மணி தூளிகள் கடந்தும் தன் கையில் நிலைத்த ஸ்பரிசத்தோடு இனிப்பதாய்...

பஞ்சை பாலில் தொய்த்து எடுத்ததை போலான மிருதுவான அவள் பால் வண்ண தேகத்தில் பொருந்தி இருந்த எலும்பிச்சை நிற புடவை அவளுக்கு மேலும் அழகு கூட்டுவதாய்....மெல்லிய மேல் இதழுக்கு எதிர்பதமாக கீழ் உதடு சற்று தடித்து முத்தமிட ஏய்துவாக பார்த்து பார்த்து செதுக்கிய சிவந்த அதரம் கைகளில் பாந்தமாக இடைவெளி இன்றி அடங்கும் சிறுத்த இடை அவ்வளவு களைப்பையும் தாண்டி உறங்கிடும் குழந்தையின் இதழில் தோன்றும் புன்னகைப் போல் குறும்சிரிப்பு என அவள் விழுந்த இருவினாடியில் அனைத்தையும் தன் லெசர் விழியால் அளந்து தன் மனப்பெட்டகத்தினுள் பதுக்கி வைத்து கென்டான் கள்வன் அவன்.....

அவள் தன் கரத்தில் விழுந்த நொடி உடம்பை நனைக்கு பூந்தூறலாக மனதை குளிர்விப்பதாய்...

அவன் அந்த நொடிகளிலேயே லயித்துயிருக்க...
" ஹாஸ்பிடல் வந்துருச்சு" என்ற வீரின் நிகழ் உலகம் உணர்த்தும் குரலில் நிகழ்வுக்கு வந்தவன்" ம்ம் "என கூறி அவன் இறங்கி வரும் முன் விறுவிறுவென அவளை தூக்க சென்ற வீரை சட்டென தடுத்து நிறுத்தி தானே தன் கரங்களில் அள்ளி கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தான்...அவளை எமர்ஜென்சி வார்டில் விட்டு கதிரையில் அமர...அப்போது அவளுக்கு பரிசோதித்து முடித்து வெளியே வந்த மருத்துவர்... அவன் கேட்கும் முன்பே அவுங்க ரொம்ப வீக்கா இருக்கான்ங்க அவுங்க சாப்டே 2 நாள் இருக்கும் போல அதான் டக்குனு மயங்கிடாங்க நீங்க அவுங்களுக்கு யாரு இரண்டு நாள் அவுங்க சாப்பிடாம இருக்குறத எப்படி கவனிக்காம விட்டிங்க என பொறிந்து கொட்டியவர் பின் சற்று நிதானித்த கண்டிப்பு குரலில் டிரிப்ஸ் போட்டுயிருக்கேன் 1 ஹவர்ல எழுந்துருவாங்க எதாவது சாப்பிட குடுங்க என கூறி சென்று விட...

அவர் திட்டியதை கவனமாக காரணம் இன்றி உள்வாங்கி கொண்டவன் இரண்டு நாளா சாப்பிடலயா என‌ தனக்குள் கேட்டு கொண்டு நின்று இருந்த நேரம் அவன் தொலைபேசி அதிர்ந்து தன் இருப்பை காட்டியதில்... சுயம் உணர்ந்து போனின் தொடுத்திறையை பார்க்க அதில் விரந்த மேனேஜர் என்னும் பெயரில் தான் தன் வேலையை நினைவு கூர்ந்தவன் மற்ற அனைத்து சிந்தனையையும் ஒதுக்கிவிட்டு வீர் நீ பாத்துக்கோ எழுந்ததும் சாப்பிட கொடுத்து போய் பத்திரமா அவுங்கள வீட்டுல விடு அப்பறம் நீ வந்தா போதும் " என கூறிவிட்டு வேகமாக தன்னை நெருக்கும் அலுவலை பார்க்க சென்றான்...

வீரும் அவள் விழிக்க காத்திருக்க தொடங்கினான்...
சுறுசறுப்பான துருதுரு குழந்தை பெண்ணோ 1 மணிநேரத்திற்க்கு முன்பே கருமணி உருல மெதுவாக கண் விழித்து சுற்றிலும் பார்த்தவளுக்கு தான் பேருந்து நிலையத்தில் இறங்கியது அதன் பின்‌ தலை கிறுகிறுத்து கீழே விழுந்தது மட்டும் தான் ஞயாபகம் இருந்தது அவளுக்கு.. ஏன் அதர்ஷன் தாங்கி பிடித்தது கூட அவள் நினைவு அடுக்குகளில் பதியவில்லை...

அவள் மிரட்ச்சியோடு அறையில் பார்வையை சுழற்றி கொண்டு இருந்த நேரம் அவள் எழுந்தாள் சாப்பிட வை என்ற தன் அண்ணனின் கட்டளைக்கு இனங்க அவள் எழுவதற்குள் சாப்பாடு வாங்க சென்றவன் அன் நேரம் உணவு பையுடன் உள் நுழைய... அவளோ இதற்கு முன் அறிந்திடாத ஆடவன் ஒருவன் தன் முன் நின்றதில் மெலும் மிரண்டு அவனை பார்க்க...

அவள் விழியில் தொக்கி நின்ற பயத்தினோடும் சேர்ந்து இருந்த கேள்வியை புரிந்து கொண்டவன் அவள் வாய் மலர அவசியம் இன்றி "நீங்க ரோடுல சட்டுனு பென்ட் அப் ஆகி விழுந்துடிங்க அதான் ஆஸ்பிடல் கூட்டிட்டு வந்தேன் மத்தப்படி ஒன்னும் இல்ல" என விளக்கி ஒர் அளவிற்கு அவள் பயம் களைந்தவன்... வாங்கிய சாப்பாட்டை பிரித்து வைத்து சாப்பிடு என ஆதுரமாக வெளிப்பட்ட வார்த்தையுடன் அவள் முன் உணவு பொட்டலத்தை நீட்ட.....

அவளோ வயிற்றில் பெறுங்குடல் சிறுகுடைலை தின்பதுப் போல் பசிக்கு ஏங்கினாலும் சிறு தயக்கத்தோடு வேண்டாம் அண்ணா என கூற...

அவள் அண்ணன் என அழைத்ததில் ஏற்கனவே ஸ்ரீலோலன் போலான அவன் சிரித்த முகம் மேலும் பூவாக மலர்ந்து போனது..
ஏனினில் அவனுக்கு சொந்தம் என்று யாரும் இல்லை அவனுக்கு அனைத்துமே அதர்ஷன் தான் அப்படி இருக்கையில் இவள் புதிதாக அண்ணன் என புது அங்கிகாரம் கொடுத்ததில் அவனுள் ஓர் துள்ளல்..
"ஏன் வேண்டாம் " என அவன் இப்போது உரிமையாகவே கேட்க...
அவள் விழிக்க அவன் சிறு புன்னகையுடன் "ஏன் நான் வேஷம் வச்சுறுவேன்னு பயமா " என கேட்க...அவசரமாக மறுத்தவள் அது என தயங்க... நான் உன் அண்ணன்னு நினைச்சா சாப்பிடு என கூற அவளாளும் அவனின் அந்த வார்த்தைக்கு பின் வேண்டாம் என மறுக்க தோன்றவில்லை ஆதலால் மறுக்காமல் சாப்பிட்டாள்...

அவளுக்கும் இந்த புது அண்ணன் என்ற உறவு ஒர் உற்சாகத்தை அளித்தது..அவளும் அவனை போல் உறவுகளுக்கு தவிப்பவள் தானே...
சாப்பிட்டு விட்டு அவன் கிளம்பலாமா என வினவ.."ம்ம் "என சொல்ல கிளம்பினார்கள்..

அவள் அமைதியாக வர அவன் அந்த அமைதியை மறுத்து அவளை சீண்டி பேசவைக்க முயற்சிக்க...அவன் உணர்த்திய பாதுகாப்பு உணர்வில் இயல்பாக அவளுள் இருக்கும் தூடுக்குத்தனம் தலை தூக்கி பதிலுக்கு பதில் வாயாடி இயல்பாகவே சிறிது நேரத்தில் அவனிடம் ஒன்றி போனால்....பேசி சிலநிமிடமே ஆனப்போதும் உடன்பிறந்த சகோதரி சகோதரன் போல் சகஜமாக பேசிக்கொண்டனர் இருவருக்கும்....தற்காலிக சில நிமிட பாசமான உறவு என்றாலும் இருவரும் அதற்குள்ளேயே அழகாக ஒன்றி இருந்தனர்...ஒருவேலை இது நிரந்தர‌ உறவு என முன்பே உணர்ந்து இருந்தனரோ என்னவோ...

அவள் துருதுருவென பேச்சும் கள்ளம்கபடம் இல்லா சிறிப்பு என அவனுக்கு அனைத்தும் பிடித்தது இப்படி ஒர் தங்கையை யாருக்கு தான் பிடிக்காது அவனுக்கும் பிடித்துப் போனது...
அவர்கள் அவள் வீட்டை நெருங்க அண்ணா இங்கயே நிறுத்துங்கள் என கூற ஏன் என்ன ஆச்சு... சித்தி பாத்தா அடிப்பாங்க ஊர் சுத்திட்டு வரியானு....அவனுக்கு அந்த பொம்பளையை நினைத்து கடுப்பு தான் வந்தது...அவள் வரும் பொதே தன் சித்தியை பற்றி கூறி இருந்தாள்...அவர் கொடுமைகளை தவிர்த்து அவருக்கு தான் என்றால் பிடிக்காது என்று.....

கோவம் வந்தாலும் தட்டி கேட்கிறேன் என அவளை வதைக்க விரும்பாதவன் அவளை அங்கயே இறக்கிவிட்டு விடைபெற்றுச் சென்றான் அவன்....
*************
அதர்ஷன் அனைத்து குழறுபடிகளையும் களைந்து சுமுகமாக யாருக்கும் பாதகம் இன்றி தெளிவாக பிரச்சனையை தீர்த்து ஏதிர்த்தவர்களை சாதுர்யமாக தன் கண் பார்வையில் கட்டி இழுத்து பேசி முடிக்கும் வரை தன் ஆளுமையால் ஏதிர்வாதம் இன்றி பிரச்சனையை தீர்த்தவன் தன் கெஸ்ட் ஹவுஸ்ற்க்கு வரவே இரவை நெருங்கி இருந்தது.....அதின் பின் முக்கிய வேலைகளை முடித்து துண்டு துண்டான சிறு சிறு வேலைகளை அப்போது வந்த வீரின் மேற்பார்வையில் விட்டு விட்டு அயர்ச்சியாக தன் ரூமிர்க்கு வந்து இருந்தான்...

கட்டிலில் விழுந்தவனுக்கு அழையா விருந்தாளியாக காலை பார்த்த கன்னியின் நியாபகம் நெஞ்சோரத்தில் இருந்து மனம் முழுவதிலும் படர்ந்து தித்தித்தது...தித்தித்த அவள் நினைவுகளோடு வெகு நாட்கள் கழித்து சுகமான உறக்கத்தில் லயித்து போனான்...

தொடரும்...
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
Woov... really amazing ma...
konjam kooda salippe illama padikka mudiyuthu.
unka first story nnu sonna nambave mudila
keep going
 
  • Like
Reactions: Brindha Murugan

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
வேற லெவல்... பாக்கலாம் என்ன ஆகும்ன்னு
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அதர்ஷனோட இன்னொரு பக்கத்தை அழகா சொல்லிருக்கீங்க 🤩

அவனுக்கே தெரியாம அவனோட மான்குட்டி மனசுல வந்து உட்கார்ந்துட்டா 😍

அஞ்சலிக்கு ஆறுதலா அண்ணாங்கிற புது உறவு 👌🏻

இந்த புது அண்ணனும் அரக்கனும் மான்குட்டிக்காக என்னென்ன செய்யப் போறாங்களோ! 🥰
 
  • Like
Reactions: Brindha Murugan

Abinaya abi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 28, 2023
5
1
3
Cuddalore
சூப்பர் சிஸ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கேன் மான்குட்டிக்கா காத்திருக்கேன்
 
  • Like
Reactions: Brindha Murugan

Mayuri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 2, 2024
36
11
8
Bangalore
சூப்பரா இருக்கு 🤩