• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕10

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
48
87
18
Madurai
காலை அவளை அடித்து விட்டு ரோஷமாக அலுவலகத்திற்கு கிளம்பி வந்தவனுக்கு ஓரு வேலையும் ஒடவில்லை...அனைவரையும் தொட்டதற்க்கு எல்லாம் ஏறிந்து விழுந்து சாடி எல்லொரையும் ஒருவித பதட்டநிலையிலேயே அமர்த்தி இருந்தான் அதர்ஷன்..

ஏதோ பயத்தில் தெரியாமல் பேசியிருப்பாள் என அவளுக்கு பரிந்து கொண்டு வந்த மனதை கொட்டு வைத்து அடக்கிய பின்னும் கூட முனுக்கென வலியை உணர்த்தியதில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தவனின் என்னம் அவளையே சுற்றி வந்து தட்டாமளை சுற்றுவதாய்...

பாலில் விழுந்த கருங்திராட்சை போலான அவளின் அகண்ட விழியிகள் பயத்தில் மருண்டு விழித்த போதும் அவனுள் ஏதேதோ ரசாயன மாற்றத்தை அரும்ப செய்து முக்கிய ஹார்மோனை தட்டி எழுப்பியதில் தன் கட்டிற்குள் நில்லாமல் போன தன் உடலை நினைத்து தன் மேலேயே அவனுக்கு கோபம்...

இதில் இதழை பிதுக்கி தன் பஞ்சு கன்னம் பிதுங்க கரங்களால் தாங்கி நின்ற அந்த வளர்ந்த குமரியவளை பிஞ்சு பிள்ளையாக மாரில் தூக்கி வைத்து விரும்பிய மிட்டாய் கொடுத்து சமாதானம் செய்ய துடித்த மனதை எந்த லிஸ்டில் சேர்ப்பது என தெரியாமல் தடுமாறி போனான் எல்லாத்திற்கும் திமிராக நெஞ்சை நிமிர்த்தி கர்வம் கொள்ளும் ஆண்மகன் அவன்...

அவனுக்கே தன் என்ன போக்கு அப்பத்தமாக தோன்றிய போதும் தன் கட்டுக்குள் வராது அஞ்சலியை சுற்றி வரும் மனதை அடக்க வழி அறியாது திணறிவன் அவளை பார்த்து கனம் முதல் உள்ளுக்குள் நடுநாயகமாக அமர்ந்து கொண்டு பூட்டியை இதய கதவை கரையனாக சுரண்டியதில் எங்கே தன்னை மீறி வீழ்ந்து விடுவோமோ என பயம் முகழ்ததோ அவனுள் அதனால் வந்த தடுமாற்றமா இது கடவுளுக்கே வெளிச்சம்...

தன்னை அணுக முயன்ற பெண்களை தன் குத்தீட்டி பார்வையால் தள்ளி நிறுத்தியவனின் பாட்ஷா இந்த சிறு மான்குட்டியிடம் பளிக்காமல் போனதில் காரணமே இன்றி எரிச்சல் தான் மூன்டது..

இத்தனை தடுமாறுபவனிடம் காதலா என்று கேட்டாள் வேகவேகமாக தலை அசைத்து இல்லை என்பவனின் பதில் தனக்கு ஆறுதல்காகவா இல்லை உண்மை அது தானா என்பது அவனுக்கே வெளிச்சம்...

இவன் ஏதேதோ என்னங்களில் சுழன்றவனாக பேனாவை மேஜையில் தட்டியபடி தன் இருக்கையின் பின்புறமாக சாய்ந்து இருந்த நேரம் அனுமதி பெற்ற உள்நுழைந்த வீர் தன் அண்ணனின் கடுகடுத்த முகத்தை கூர்ந்தப்படி பார்த்தவனுக்கு அவனின் இந்த முகம் அவன் பரிமாணத்தில் இருந்து தனித்து தெரிந்ததை பார்த்த வீருக்கு அவன் முகம் காட்டிய பாவத்தின் உள்ளடங்கிய பொருள் அறியாமல் போனாலும் கோவத்தை மட்டுமே பிரதான பாவமாக காட்டும் அவன் முகத்தில் தோன்றிய இந்த பாவத்தில் இவனுள் இப்படி எல்லாம் கூட பரிமாணம் உண்டா என்பது போல் பார்த்து வைத்தான் வீர்...

ஆனால் அவனில் இந்த புது முகம் காட்டிய தாக்கத்தில் அனைவரையும் திணறடித்து தட்டாமளை சுற்றவைத்த நபரினுள் அடங்கிய வீரும் இன்று சற்று நோந்து நூடல்ஸாக தான் போனான் பாவம்...

அவன் முகம் பார்த்து யோசனையை எங்கோ வைத்து இருந்தவனை மேஜை தட்டி சுயநினைவுக்கு கொண்டு வந்தவன் என் மூஞ்சில எதாவது ஒடுதா என கேட்க அதில் இ..இல்ல அண்ணா என அவரசமாக கூறியவன் வந்த விஷயத்தை படபடவென பொறிந்து தள்ளிவிட்டு அவன் பைலை கொடுக்கும் வரை கூட நிற்காமல் ஒடி இருந்தான்..

அதர்ஷனும் வலுக்கட்டாயமாக அவளை சுற்றி வட்டமடித்த மனதை பிரித்து எடுத்து வேலையில் ஒட்டவைத்து அதில் மூழ்கி போனான்..

****************
நேற்று வரை வெற்றி களிப்பில் படு ஜோராக துள்ளி திரிந்தவனின் ஆட்டம் பல்லை பிடுங்கி விஷம் வற்றிய நாகமாக முகம் கருத்து தோல்வியுற்று கொதித்து போய் அமர்ந்து இருந்தான் செல்வராகவன்...

ஏற்கனவே இருக்கும் வன்மத்தை விட பன்மடங்கு அவன் மேல் வளர்த்து கொண்டவனுக்கு அவனை இப்போதே துண்டாடி கொள்ளும் வெறியில் தாடை இறுகி நிரம்பு வெடிக்க உஷ்னம் தெரிக்க அமர்ந்து இருந்தான் அவன்...

மீனுக்கு பொரி காட்டி பக்குவமாக வளைக்கு இழுப்பது போல் பக்காவாக திட்டம் தீட்டி அஞ்சலியை கடத்த கட்டம் கட்டி அவளை கோவையில் இருந்து வேலை என்னும் பெயரில் இங்கே வரவழைத்து அவளை வைத்து பல லாபம் காணும் நோக்கோடு செய்த அனைத்தையும் துருப்பை தூக்கிப்போடுவது போல் ஈசியாக ஒரு நொடியில் அவன் கனவு கோட்டையை தரமாட்டம் ஆக்கி மூளையை குடைந்து சீர்குலைக்கும் வண்டாக அவன்..

செல்வா தன் ஆட்களை வைத்து அஞ்சலியை துள்ளியமாக கண்காணித்து தக்கசமயத்தில் தன் வேலையை முடித்து கொள்ள கங்கனம் கட்டி கொண்டு தெளிவாக அனைத்தும் செய்து விட்டு சற்று நிமிர்ந்து மூச்சு விடும் நேரம் நிலையை அப்படியே தலைகீழாக மாற்றி இருந்தான் அதர்ஷன் வர்மா...

அஞ்சலியை சிறைபிடிக்கு முன்னமே அனைவரையும் உரு தெரியாமல் கதற கதற வேட்டையாடி வேகுநாட்கள் பெரிய சம்பவம் இன்றி‌ தளர்ந்து இருந்த அவன் தசை கோளங்களுக்கு தீணியாக அனைவரையும் சக்கையா பிளிந்து எறிந்து ஆர்ப்பாட்டம் இல்லாமல் அவளை தூக்கியது எல்லாம் தனிக்கதை...


ஒவ்வொரு தடவையும் செல்வாவின் தலையில் அலட்டிகொள்ளாமல் இடியை இறக்குவதில் அவன் ஓய்வதே இல்லை போலும்..

ஆழ்ந்த தூக்கத்தில் லயித்து இருந்தவனின் உறக்கம் வெகு தொலைவில் இருந்த அதர்ஷனுக்கு பிடிக்கவில்லை போலும் அதை கெடுக்கவே தான் கத்தையாக கட்டி வைத்து இருந்த ஆப்பின் செம்பல்லாக ஒன்றை களட்டி விட்டு வெடிப்பதற்கு காத்திருந்தான்...

துயிலின் நடுவே தன் ஒளியால் மண்டையை குடைய வைத்த தொலைபேசியை சலித்தப்படி துழாவி எடுத்து காதில் வைத்ததை தொடர்ந்து மொத்த தூக்கமும் வடிந்து போனவனாக எழுந்தவன் இரவு உடையுடன் அப்படியே ஆக்ரோஷமாக தன் அறையில் இருந்து கீழ் இறங்கி இருந்தான்...

கார் எடு என பீம் பாய் போல் இருப்பவனிடம் முன் வந்து கர்ஜிக்க...அவனும் அவன்‌ ஆக்ரோஷத்தில் அடங்கி ஏதிர்பேச்சு இன்றி வண்டியை எடுத்தான்..

நம்ம ஹாஸ்பிடல் போ என அவன் கூறியதை தொடர்ந்து ஹாஸ்பிடல் நோக்கி வண்டியை செலுத்தி வந்து இறக்கி விட்டு ஒதுங்கி நின்று கொண்டான்..‌.

பூமி தாய் நோக பாதங்களை தரை பிளக்கும் அளவு அழுந்த பதித்த உள்ளே வந்தவன் கண்டது தன் ஆட்கள் அனைவரும் அணிவகுத்து வரிசையாக அடுத்து அடுத்த கட்டிலில் அசைவற்று கிடந்ததை தான்....

தன் அடியாட்கள் இப்படி கிடப்பதில் கவலை இல்லாவிடினும் சற்று மனிதாபிமான அடிப்படையில் இரக்கமாவது சுரந்து இருக்க வேண்டும் ஆனால் அவனோ வெறிக் கொன்டு அமர் என்பவன் அருகில் சென்று மயக்கத்தில் இருந்தவனை தன் வெறி தீர மட்டும் கன்னம் கன்னமாக அறைந்து தள்ளாடி நின்றவனை பிடித்து உலுக்கி உங்களால இத கூட புடுங்க முடியாலேனா வேற என்ன தான் முடியும் என சீறி பாய்ந்தவனை பக்கத்தில் இருந்த அந்த பீம் பாய் தான் எங்கு இவன் இன்னும் அடித்தால் அவன் செத்து விடுவோனோ என நினைத்து கஷ்டப்பட்டு செல்வாவை பிரித்து இழுத்து நிற்க்க வைத்தவன் ஜீ அவனை விடுங்க செத்துற போறான் என கூற..

அவனோ அவனை மிதித்து செத்து தொலையட்டும் என கூறியவன்..ஓநாயாக வெறிக்கொண்டு கொடூரமாக அதர்ஷா உன்னை சும்மா விடமாட்டேன் டா என முழங்கி கொண்டான்...

அந்நேரம் அவன் தொலைபேசி அழைக்க எடுத்தவனுக்கு இன்னும் வெறி தான் எகிறியது இருந்தும் கட்டுப்படுத்தி கொண்டு போனை ஆன் செய்து காதிற்கு கொடுத்தான்.. ஏதிரிலோ செல்வா கேஷ்ட ஹவுஸ் வா என்ற வார்த்தையோடு அழைப்பை துண்டித்து இருந்தார் அவனின் மாமன் தாஸ்...

அவன் அழைத்ததை போல் கேஷ்ட் ஹவுஸ்க்கு வந்தான் செல்வா..அவன் உள் நுழையும் முன்பே அவனை கண்டுகொண்ட தாஸ் பொறி தொடங்கி இருந்தான் ..

ஒரு வேலைக்கும் ஆகாத உன்கிட்ட போய் இந்த வேலைய நம்பி ஒப்படச்சேன் பாத்தியா என்ன சொல்லனும்..போ போய் புடவைய கட்டிக்கிட்டு ஓரமா உக்காரு..ஒரு சாதரண பொன்ன கடத்த துப்பு இல்லை து என முகத்தில் காரி உமிழ்ந்தவன் முதல்ல இங்க இருந்து நகரு உன் முஞ்சிய பாத்தாலே ஆத்திரமா வருது என என்ன ஏது என்று கேட்காமல் அனைத்தும் கை மீறிய வெறியில் பொங்கினான் தாஸ்..

அவன் அறைந்து காரி தன் முகத்தில் உமிழ்ந்ததில் ஆத்திரமாக பல்லை கடித்தப்படி கைகள் நடுங்க தன் முகத்தை கரங்களால் மறைத்து அவமானம் கொண்டு நின்றவனை பார்த்த அவன் தாய் நீலிமா தன் பிள்ளையை அவமானம் படுத்தியதில் சிறிதும் அலட்டி கொள்ளாமல் அழகு கலைநிபுணர்களால் திருத்திப்பட்டு வேட்டிய தன் நகங்களை தான் பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தாள்...

அவள் பக்கம் திரும்பிய தாஸ் அக்கா இப்போ என்ன பன்னுறது அந்த செட்டுக்கு இன்னும் விசியம் தெரியாது தெரிய வரதுக்குள்ள ஏதாவது செய்யனும் சொல்லு என்ன செய்ய என கேட்க...

அவள் தன் நகங்களை பார்த்துகொன்டே முடிச்சுருலாம் என கூற....புரியாமல் தன் அக்காவை இமை சுருக்கி பார்த்தவனை கண்டு தன் கனத்த உடலை கஷ்டப்பட்டு மெதுவாக அசைத்து சோபாவில் நன்கு சட்டமாக அமர்ந்து கொண்டு நயவஞ்சகமாக யோசனை கூற அதில் சற்று திருப்தியுற்றவன் கேவலமாக பல்லிலித்து வைத்தான்...

******************
நேரம் தவறாம் தேவாவின் முலமாவது சாந்தியின் முலமாவது தன் அறைக்கு வந்து சேரும் சாப்பாட்டை வாங்கி வைப்பதோடு சரி மற்றபடி ஒரு கவளம் கூட அதில் இருந்து எடுத்து உண்ணாது கொலை பட்டினியாக விரக்தியல் அறையினுள் சுருண்டு இடந்தாள் அஞ்சலி...

கொடுத்த சாப்பாடு அப்படியே மூடி மேஜேயின் ஓரம் அவளை போல் கேட்பாரற்று அப்படியே கிடந்தது..தன்னை எதற்கு கடத்தினார்கள் என்ற கேள்வியே மண்டயை குடைந்ததில் வயிற்றை கிள்ளும் பசி கூட உறைக்கவில்லை அவளுக்கு...

கண்களில் கருப்பு கண்ணாடி அனிந்து கொண்டு உலகம் இருட்டு என கூறுவதை போல் பயத்தினால் அவள் அதர்ஷனை நோக்கி பாய்ச்சிய வார்த்தை சரியாக படாவிட்டாலும் அப்பத்மான வார்த்தையை ஒன்றும் தான் உதிர்க்க வில்லையே என நினைத்த போதும் சில நியாயங்களை மனம் முன்நிறுத்துவதை வலுக்கட்டாயமாக ஓரம் தள்ளி யோசனையில் பசியினோடே உறங்கியும் போனாள் அஞ்சலி...

அதர்ஷன் அலுவலகத்தில் வேலை முடிய கிளம்பி இருந்தான் வேகமாக வீட்டை நோக்கி வீரும் காலை போல் அவனுடன் இனைந்து கொள்ள இருவரும் சேர்ந்தே வீடு திரும்ப ஆயத்தமாகினர்...

வீர் வழக்கம் போல் டிரைவிங் சீட்டில் அமர்ந்து கொள்ள அதர்ஷன் பின்யிருக்கையில் அமர்ந்து கொள்ள கார் வீரின் கை வண்ணத்தில் சீராக வழுக்கி கொண்டு சென்றது வீட்டை நோக்கி....

பின் இருக்கையில் அமர்ந்து இருந்தவன் தன் வீட்டிற்கு திரும்பும் சாலையில் ஒடித்து திருப்ப போனவனை தடுத்து அங்க வேண்டாம் வீர் கேஷ்ட் ஹவுஸ் போ என கூற..

அவனும் அதர்ஷனின் சொல்லிற்கு இனங்க வீட்டிற்க்கு செல்லாது கேஷ்ட் ஹவுஸ்ற்க்கு வண்டியை விட்டு இருந்தான்...

காரை விட்டு இறங்கியவன் தன்னை பார்த்தப்படி தன் முன் நின்ற தம்பிகளை கண்டு கொள்ளாது வேகவேகமாக அவள் அறைக்குள் சென்று இருந்தான்..

அவனின் புது அவதாரத்தை சுவாரஸ்யமாக பார்த்து நின்ற வீர் தேவாவை பார்க்க அவனோ வீரை இடித்து அமைச்சரே கவனித்தீர்களா என தூய தமிழில் கிண்டலாக நீட்டி முழக்கியவனை தொடர்ந்து வீரும் ராகம் இழுத்து கவனித்தோம் கவனித்தோம் என கூறி தங்களுக்குள் கமுக்கமாக இருவரும் நகைத்து கொண்டனர்..

நீயாவது இப்போ தான் ஷாக் ஆகுற எனக்கு இது பழசு என கூறிய வீரை என்னடா சொல்லுற என்று ஆவென பார்த்து கேட்டான் ஏனினில் அஞ்சலியை அதர்ஷன் இதற்கு முன் சந்தித்த விவகாரம் எல்லாம் அவனுக்கு தெரியாது இப்போது கூட அதிசியமாக அவளை கடத்தி வந்ததில் இருந்து அவன் வினோத மாற்றம் வைத்து தான் கிண்டல் செய்து இருந்தான் தேவா...

கோவையில் அதர்ஷன் அஞ்சலியை சந்தித்தது அதன் பிறகு மாலின் லீப்டில் இருவரும் பிகாசோ ஒவியம் போல் நயமாக நின்ற தோற்றம் என மொத்தமாக கூற..நம்ம அண்ணாவா இப்படி என அப்பாவி பையன் அவன் வாய் பிளந்ததை பார்த்த வீர்..ஷாக்கை குறை ஷாக்கை குறை என வாயை முடி விட்டான் சிரிப்புடன்...

அதர்ஷன் அஞ்சலி அறையை தயக்கம் இன்றி ஏதோ கட்டிய மனைவி உறங்கும் போது சர்வ உரிமையுடன் உள் நுழையும் கனவனை போல் திறந்து கொண்டு சென்றவனை வரவேற்ற இருட்டு அறையை விளக்கை போட்டு ஒளிர செய்து பெண்ணவளை தேடி அறை எங்கும் பயணித்த அவன் விழியின் இலக்காக தரையின் ஓரம் சுருண்டு கிடந்தவள் அருகில் சென்றான் அவன்...

சில கனம் மண்டியிட்டு அவள் அருகில் அமர்ந்து அவளை ரசித்தவன் பின் நழுங்கி இருந்த அவள் உடையை விரசம் இல்லாது சரி செய்து விட்டு அந்த தளிர் மேனியாளை சிறிதும் நோகாமல் தூக்கி மெத்தையில் கிடத்திவிட்டு போர்வை போர்த்திவிட்டு அவள் முகம் பார்க்க காலை அவன் அடித்ததின் தடையமாக சிவந்து சற்று வீங்கி இருந்த கன்னதை கண்டவன் இவ என்ன பேசி இருந்தாலும் அடிச்சு இருக்க கூடாது பாவம் வீங்கி போச்சு என அநியாயத்திற்கு கவலை கொண்டவன் மெதுவாக அவள் கன்னம் வருடி விட...

அதில் சிறிதாக இமை சுருக்கி புரண்டு படுத்தவளை தட்டி கொடுத்து போர்வையை இன்னும் நன்றாக போர்த்தி விட்டு தன் காதலின் முதல் அச்சாரமாக அவள் நெற்றியில் முத்தம் வைத்து பின் இன்னும் சற்று
கீழ் இறங்கி தன்னை இரக்கம் இன்றி துண்டாடி விழுங்கும் விழியிலும் முத்தம் வைத்து சிறு சிரிப்புடன் திரும்பியவன் மேஜையில் இருந்த உனவை பார்த்து இன்னும் இவ சாப்பிடலையா என நினைத்தவன் சாப்பாடை எடுத்து கொண்டு சத்தம் வராமல் கதவை சாத்தி கீழே வந்தவன் சாந்தி அக்கா என கத்த அதை தொடர்ந்து வந்த பெண்மனியிடம் அக்கா அந்த பொன்னு காலைல இருந்து சாப்பிடல போல இப்போ தூங்குறா..தூங்கட்டும் எழுப்ப வேண்டாம் கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பாடு குடுங்க என கூறி தன் அறையில் நுழைந்து கொன்டான் அதர்ஷன் வர்மா...

அந்த அக்கா தான் அவனை ஆச்சரியமாக பார்த்தார்...

தொடரும்.......
 
Last edited:

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
64
28
Karur
இவனே அடிப்பணாம் அப்பறம் இவனே கொஞ்சுவணாம் போடடேய்
 
  • Haha
Reactions: Brindha Murugan