• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕11

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
48
87
18
Madurai
அந்த பஞ்சு பொதியை மெத்தையில் கிடத்திவிட்டு அறையை விட்டு அகல மனம் இன்றி சிறிது நேரம் கதவோரம் நின்று பார்த்தவன் பின் சிறு புன்சிரிப்பு இதழில் மிளிர வெளியே வந்தவன் அஞ்சலி எழுந்த உடன் அவளுக்கு உணவு கொடுக்க சாந்தியிடம் கூறி தன் அறைக்கு வந்தான்..

ஏகாந்த நினைவின் சுவடிலோ அல்லது நித்திராதேவிக்கு அவன் மேல் கருணை குன்றியதோ தெரியவில்லை ஏதோ ஓர் காரணத்தில் உறக்கம் தூரம் நின்று போக்கு காட்டி அவனை வாட்டியது சிறிது நொந்து போனான் பாவம்...

துயில் உறிந்த கண்களோடு பஞ்சனையில் குப்புற விழுந்து பழகும் குழந்தையாக மெத்தையில் தட்டாமளை சுற்றிவந்தவன் ஒரு நிலைக்கு மேல் இது சரிபட்டு வராது என எழுந்து அமர்ந்து நெற்றி புருவத்தை நீவி இவளால் தூக்கமே போச்சு கொள்ளுறா ராட்ச்சசி என செல்லமாக அலுத்து கொண்டான் அவன்....

மிதந்து வரும் தென்றல் காற்றில் தன்னவளின் வாசம் உணர்ந்தான் போலும் மெல்ல மெத்தையின் ஹெட் போர்ட் சிலாட்டில் தலை கவிழ்த்தி ஆழ்ந்த மூச்சால் நுறையீரலை நிறைத்து கொண்டான் அஞ்சலி மனதை ரகசிய ஆட்சிபுரியும் கள்வன் அவன்...

அப்படி இப்படி என விடியலின் சுவடை உணர்ந்து எழுந்து கொள்ளும் நேரம் தான் கண் அயர்ந்து போயிருந்தான் பாவம்...

வானில் ஆரஞ்சு பந்து ஒன்று மழலையென தவழ்ந்து வந்து பூவியை ஒளிர வைத்த நேரத்தில் குருவிகள் அனைத்தும் தாம் சேரித்த உணவை தன் குஞ்சுகளுக்கு தன் கீச் குரலால் கதை கூறியபடி ஊட்டி கொண்டு இருந்தது..

அப்போது குருவி தன் கீச் குரலில் கூறிய கதையின் சத்ததில் உறக்கம் கலைந்து எழுந்தாள் அஞ்சலி..

எழுந்து மெத்தையில் அமர்ந்து தன் வாழ்வின் போக்கை அறியாது சில நொடி சிலையாக சமைந்து இருந்தவள் பின் ஒருவாரு தன்னுக்கு தானே தட்டி கொடுத்து கொண்டவள் எழுந்து காலை கடன்களை முடித்து குளித்து விட்டு மற்று உடை இல்லாமல் போனதில் அதே உடையை அனிந்து கொண்டு வந்தவள் அதற்கு மேல் என்ன செய்வது என தெரியாமல் மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து கொண்டு நேரத்தை நெட்டி தள்ள முயன்றவளுக்கு பசி வயிற்றை கிள்ளியது...

ஏனெனில் நேற்றுக்கு முதல் நாள் சாப்பிட்டது அதற்கு பின் பச்சை தண்ணீர் கூட அருந்தாது இருந்ததில் வயிறு அல்சர் நோயாலியை போல் எறிய தொடங்கியது....

நேற்று சாப்பாடு தவறாது தன் அறைக்கு வந்தடைந்த போதும் பல குழப்பங்களில் அடித்து சென்றவளுக்கு கடும் பசி கூட உறைக்கவில்லை என்பதே உண்மை...

ஆனால் இப்போது வயிறு இரக்கம் இன்றி உன் கவலை உன்னோடு எனக்கு சாப்பாடு கொடு என அலறி கூப்பாடுப்போட்டது...

பசிக்கிறது என வெளிப்படையாக கேட்டு வாங்கி உண்ண வேறு கூச்சமாக இருந்ததில் அப்படியே அமர்ந்து இருந்த நேரம் சாந்தி கையில் உணவு தட்டுடன் கதவை தட்டி கொண்டு உள்‌ வந்தவள்...

அவள் வழித்து இருப்பதை பார்த்து எழுந்துட்டிய மா இந்தா சாப்பிடு நேத்து வேற சுத்தமா சாப்பிடல சாப்பிடு என பரிவாக கூற...

அவளோ வாங்க தயங்கி இல்லை பசிக்கலை என கூற..

அதில் அவளை உறுத்து பார்த்து உன் கண்ணே சொல்லுது உனக்கு பசிக்குதுனு தயங்காம சாப்பிடு இந்தா என அவள் கரங்களில் சாப்பாடு தட்டை தினித்து விட்டு தான் இருந்தாள் சங்கோசம் படுவாள் என‌ உணர்ந்து அவ்விடத்தில் இருந்து நகர்ந்து இருந்தாள் சாந்தி....

அவளும் அதற்கு மேல் எதுவும் யோசிக்காமல் வேகவேகமாக தொண்டை அடைக்க சாப்பிட்டு முடித்தாள்...

இரவு அதர்ஷன் அஞ்சலிக்கு உணவு கொடுக்க சொல்லி விட்டு சென்ற பிறகு அவனை சாந்தி ஆச்சிரியமாக பார்த்து வைத்தாள்... ஏனெனில் அவள் இந்த வீட்டிற்கு வந்த நாளில் இருந்து அவன் யாரிடமும் இவ்வளவு அக்கறை கொண்டு யோசித்து செய்ததாக பார்த்ததில்லையே...

வீரிடமும் தேவாவிடமும் பாசம் உண்டு ஆனால் அதனை வெளிப்படையாக அக்கறை கொண்டு கவனித்து பாசம் காண்பித்தது இல்லையே... இவளுக்கு மட்டும் தான் இந்த அன்பு சலுகை முகிழ்ந்து இருந்தது..

காலை விரைவாக சமைத்து முடித்தவள் அதர்ஷன் கூறியபடி அஞ்சலிக்கு சாப்பாடு கொடுக்க அவள் அறைக்கு வந்து இதோ சாப்பிடவும் வைத்தாயிற்று...

சாப்பிட்டு முடித்தவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை...போர் அடித்து எரிச்சலை கிளப்பியதின் இடைய நேற்று தான் அதர்ஷனை நோக்கி விசிறியடித்த வார்த்தை அச்சு பிறழாமல் நியாபகம் வர தான் சற்று அதிகபடியாக பேசி அவனை புன்படுத்தி விட்டோமா என நினைத்தவளுக்கு அன்று கன்னியம் காத்து முகத்தில் இருந்து பார்வையை அகற்றாது அவன் பேசிய விதம் அவளை இப்படி யோசிக்க வைத்து இருந்தது...ஆனால் அவளுக்கே தெரியாமல் அவன் அவளை களவாடி தன்னில் புதைத்து கொண்டதை யார் அவளிடம் கூற...சரி பிறகு மன்னிப்பு கேட்கலாம் என மனதோடு குறித்து வைத்து கொண்டவள் நேரத்தை நெட்டி தள்ள வழி அறியாது பால்கனி பக்கம் சென்று கார்டனை வேடிக்கை பார்த்தபடி நின்றாள்

கார்டனை பார்த்து காலை வேலை ஏகாந்தத்தையும் அந்த பூக்கள் நிறைந்த தோட்டத்தையும் இரசித்து இருந்தவள் விழி பட்டென சந்தோசத்தில் விரிந்து பின் வேகவேகமாக கார்டனை நோக்கி ஓடி இருந்தாள் அங்கே பேசியபடி ஜாகிங் செய்து கொண்டு இருந்த வீர் தேவாவை கண்டு...

மிதமான வேகத்தில் பேசியபடி ஜாகிங் செய்தவர்கள் முன் மூச்சிரைக்க நின்றவளை பார்த்து இருவரின் நடையும் தடைப்பட்டு அவளை பார்த்து சன்ன சிரிப்போடு நின்றனர்..

ஓடி வந்தவளோ வீர் அண்ணா என கண்கள் மின் அழைத்து அவன் முன் நின்றவளை பார்த்து ஏன் இப்படி மூச்சிரைக்க ஒடி வர என கேட்க..

உங்கள அங்க இருந்து பாத்தேனா அதான் ஒடி வந்தேன் என ஆரம்பித்தவள் அதனை தொடர்ந்து சம்மந்தம் இல்லாத கதைகளையும் உள் இழுத்து கதை அளந்ததிற்கு அவனும் தலை அசைத்து கேட்டு கொண்டான் சுவாரஸ்யத்துடன்...

இருவரும் பேச்சின் சுவாரஸ்யத்தில் கூடவே நின்ற தேவா பையனை மறந்து விட்டதில் ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியாமல் குரலை செருமி தன் இருப்பை உணர்த்திய பின்பு தான் அப்படி ஓரு கேரேக்டர் இருப்பதே இருவருக்கும் நினைவு வந்தது....

அஞ்சலி அவனை ஒர் இரு தடவை மட்டுமே பார்த்து இருப்பதால் லேசாக சிரித்து வீர் புறம் திரும்ப..வீர் அவனை அறிமுகம் படுத்தும் முன் முந்தி கொண்ட தேவா ஏன் என்கிட்ட எல்லாம் பேச மாட்டியா அவன் கிட்ட மட்டும் பேசுற என கேட்க ....

ஐயோ இல்ல அண்ணா உங்கள இதுக்கு முன்னாடி பாத்தது இல்லை இல்லையா அதான்..அவனையும் அண்ணா என்ற வார்த்தையில் உருக்கி விட்டு இருந்தாள் அஞ்சலி....

அவனுக்கும் சிறு வயதில் இருந்து ஆசை உன்டே குட்டி தங்கை ஒன்று வேண்டும் என்று ஆனால் அவன் விதி அவனின் பல ஆசையை நிராசையாக்கி அவனை விதியில் எறிந்து விட்டது...ஆனால் இப்போது விதியன் சதிக்கு விதிவிலக்காக கிடைத்த தங்கையின் அண்ணா என்ற வார்த்தையில் பாகாக உருகி வழிந்தான் பாசகார அண்ணன் அவன்

அவனுக்கு அவளின் அப்பாவி தனம்..பார்த்த சில நோடியே ஆனாலும் அழகாக ஒன்றி கொண்டது என அவளை மிகவும் பிடித்து போனது அவனுக்கு...இருவர் அணி இப்போது மூவர் அணியாக மாறி போனது விகல்பம் இன்றி..

வீரை விட துள்ளளோடு நகைச்சுவையாக பேசிய அவன் குனம் அவளின் துடுக்கான குனத்தோடு ஓத்து போனதில் வீரை விட வெகு சீக்கிரமே தேவாவிடம் ஒன்றி இருந்தாள் தன் கவலை மறந்து...

மணி எட்டை தொட்டு விட்ட போதும் கூட அதர்ஷன் இன்னும் எழுந்து இருக்கவில்லை.... இரவு வெகு நேரம் களித்து தூங்கியதின் தாக்கமோ இல்லை இரவின் கனவில் தன் தேவியை அகர்ஷத்து அவள் அழகில் இவன் விழ்ந்து கனவிற்குள் விழித்து இருந்த தாக்கம் நினைவில் தூக்கமாக காலை விடிந்ததை கூட மறந்து தூங்க வைத்து விட்டது போல அவனை...மடி தேடி வந்த பிள்ளை நித்திரா தேவியும் கண்டிப்பு இல்லாது அரவணைத்தில் இந்த முரட்டு தூக்கம் போலும்..

எப்போதும் சீக்கிரமே எழுந்து கொள்ளும் தன் அண்ணன் இன்னும் உறங்கியதில் அவனை எழுப்ப நினைத்தவன் பின் இன்னும் தான் மீட்டிங்கிற்கு நேரம் இருக்கிறதே அதற்குள் வந்து விடுவான் என என்னி அவனை எழுப்பி தொந்தரவு செய்யாது அவன் மட்டும் அலுவலகம் சென்று இருந்தான்... ஆனால் எட்டு மணியையும் தாண்டி தூங்கும் புதிய மாற்றத்தின் அங்கமாக தன் அண்ணனின் செயல் வீருக்கு ஆச்சிரமாக இருந்தது...

அவனுக்கு எங்கே தெரிய போகிறது அவன் தன் மான்குட்டியின் நினைவில் சுகமாக லயித்து இருப்பது..

எல்லோரும் அவர்அவர் வேலைகளில் ஐக்கியமாகி விட மீண்டும் அந்த பெரிய அறையில் தனித்து அடைந்து கொண்டாள் அஞ்சலி..

*************
வீருக்கு தலையே சுற்றியது இன்றைக்கு கவர்மெட் டென்டர் மீட்டிங் ஒன்று உள்ளதை மறந்து இன்னும் வராத தன் அண்ணனை என்னி..நேரம் போக போக அவன் மண்டை சூடு அதிரகரித்ததே அன்றி இன்னும் அதர்ஷன் வந்த பாடு இல்லை...

அவன் இங்கே கலவரமாக நின்று கொண்டு இருக்க அப்போது எதிரே வந்த செல்வா முகத்தில் ஒர் மெத்தன சிரிப்போடு தன் இருக்கையின் அமர்ந்து கொண்டான்....அதை எல்லாம் அலட்சியம் செய்த வீர் தன் அண்ணனை எதிர் நோக்கி காத்திருந்தான்...

இங்கே ஒருவன் படபடப்போடு காத்திருப்பதை உணராது அவனின் பதட்டத்திற்கு காரணகர்த்தாவோ இப்போது தான் சோம்பல் முறித்து எழுந்தான்..

ஏனோ இன்றைய காலை வழக்கத்தை விட புத்துணர்ச்சியாக உள்ளுக்குள் உட்டடை படிந்த நெஞ்சில் பட்டாம் பூச்சி அமர்ந்ததை போல் பரவசம் ஏன் என்று தெரியாத போது இனிய அதிர்வினை சுக அவஸ்தையோடு ரசித்தான் அதர்ஷன் வர்மா...அந்த ஏகாந்தத்தை உள்வாங்கியபடி போனை எடுத்து மணியை பார்க்க அது பத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது..

அதிர்ச்சி எல்லாம் ஆகவில்லை வழக்கம் போல் தன் கடமைகளை எல்லாம் சரிவர பட்டியலிட்டு முடித்தவன் சாவகாசமாக கிளம்பி தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி இருந்தான் தன் அலுவலை பார்க்க...

வீருக்கு தான் எப்போது வருவான் என இருந்தது..அவனை பதட்டத்தை கண்ட செல்வா கோனலாக இதழை வளைத்து என்ன உங்க ஆள் போய் ஓழுச்சுகிடான் போல இன்னும் காணோம் அவ்ளோ பயமா எங்க மேலை என இத்தனை அடி வாங்கிய பின்னும் கூட மெத்தனமாக பேசியவனை அர்ப்ப பார்வை பார்த்து நின்றான் வீர்...

அப்போது காற்றை கிழித்து கொண்டு புழுநி பறக்க தன் பி.எம்.டபல்யு வில் இருந்து அட்டகாசமாக இறங்கி வந்தான் அதர்ஷன் வர்மா...

‌‌‌‌‌‌‌‌தொடரும்‌‌....
 
Last edited: