• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕13

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
48
87
18
Madurai
கூட்டை விட்டு சிறிது சிறிதாக வெளி வரும் நத்தை போல் அஞ்சலி ஒர் அளவிற்க்கு தயக்கம் மறந்து இயல்பாக வீட்டில் வலய வர தொடங்கி இருந்தாள் என்பதை விட வீர் மற்றும் தேவா அவளை பிரயத்தனப்பட்டு இயல்பாகினார்கள் என்பதே உண்மை...

அவர்கள் வீட்டில் இருக்கும் நேரம் அவர்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுபவள் அதர்ஷன் நிழல் அந்த இடத்தில் சிறிதாக பட்டாலும் தலை தெறிக்க ஒடுவதை வழக்கமாக்கிக் கொண்டாள் மங்கையவள்...

என்னதான் இயல்பாக இருந்தாலும் மனதில் அப்பிய பல குழப்பங்களுக்கு விடையின்றி வினாவோடு தொடர்வதில் இன்னும் ஒரு வகை நெருடல் அவளை மொத்தமும் அந்த வீட்டில் ஐக்கியம் ஆக விடாமல் தடுத்து நிறுத்தியது...ஆதலால் எப்போதும் ஒர் எல்லைக்குள்ளேயே தன்னை தேக்கி கொண்டாள் அவள்...

அதர்ஷனின் வருகையை உணரும் மறு நோடி ஒடி ஒளியும் அஞ்சலியை கண்டு முதலில் இருவரும் புரியாமல் விழித்தாளும் போக போக புரிந்தது அதர்ஷனின் தவிப்பான தேடல் அடங்கிய விழியை கண்டு...இருவருக்கும் இவ்விருவரின் உணர்வுகள் புரிந்தாலும் எதுவும் புரியாத பாப்பா போல் வெறும் பார்வையாளர்களாய்... அவர்கள் கையில் பாப்கார்ன் மட்டும் தான் மிஸ்ஸிங் மற்றப்படி சுவாரஸ்யத்துடனே பார்த்து வைத்தனர் நிகழும் காட்சிகளை வீரும் தேவாவும்...

அன்று விடாப்பிடியாக அறைக்குள் நழைந்து அவளை கட்டி அனைத்து அவளின் தவிப்பான முகத்தை பார்த்தது தான் கடைசி அதன் பிறகு அவன் கண்ணில் அவள் சிக்கவே இல்லை ஏதோ ஆவி புகை போல் நாசுக்காக மறைந்து அதர்ஷனை சோதனைக்குளாக்கினாள் பாவையவள்...

தோட்டதின் பின்புறம் பணியாளர்களுக்காக குடில் போன்று சிறிதாக இருந்த போதும் நான்கு பெயர்கள் தங்கும் படி விஸ்தாரமாக அமைக்கப்பட்ட வீடுகளில் ஒன்ற தான் சாந்தியின் வீடும் கூட....

கணவனின் மறைவுக்கு பின் குடும்ப சொந்தங்கள் மொத்தமும் சுமையாக என்னி அவளை உதறி தள்ளிய போது ஆதரவாக பாதுகாப்பு அளித்த அதர்ஷன் மேல் பெரும் அளவு மரியாதை கொண்டு தன் ஒரு வயதே ஆனா பெண் குழந்தையுடன் இவனின் நிழலில் சரண் புகுந்து கொண்டாள் சாந்தி...

அவன் என்ன செய்தாலும் ஆழமாக மறுபரிசீலனை இன்றி நம்பும் ஜீவிகளில் இவளும் ஒருவள்...

அதர்ஷனின் பார்வையில் சிக்காது அவள் ஓளிந்து கொள்வதும் ‌இங்கே தான்...வந்த சில நாட்களில் சாந்தி மற்றும் அஞ்சலியின் இடையே ஒர் இதமான சகோதர உணர்வு இழையோடியதில் இருவருக்கும் சகஜமாக பேசிக்கொள்ள பெரிய பெரிய காரணங்கள் தேவையற்று போனது...

இங்கே குழந்தையிடம் விளையாடுவது அதன் மழலை பேச்சுக்கு போட்டியாக கதை அளந்து அதனுடனே தூங்குவது‌ என இங்கேயே முக்கால்வாசி நேரம் இருந்து கொண்டு சாமர்த்தியமாக அதர்ஷனுடன் கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடர்ந்தால்...

அதர்ஷன் தான் பெரும் அளவில் அவள் தரிசனம் கிடைக்காததில் தவித்து போய் நின்றான்...அவள் அன்று தன்னில் அடங்கி விலகியதில் ஆடவன்‌ உடல் தகித்து ஒன்னும் ஒரு முறையேனும் அதே போல் இறுகிய அனைப்பு வேண்டும் என வேண்டி நின்றதில் மண்டை சூடேறி தன் தாபம் தவிப்பு அனைத்தையும் அஞ்சலி மேல் கோவமாக திருப்பினான் அஞ்சலியின் மனம் கவர் கள்வன் அவன்...

தன் ஆண்மையை போற்றி தன் கடைகண் பார்வைக்காக ஏங்கும் பெண்களின் மத்தியில் இவளில் கண்ணாமூச்சி ஆட்டம் அவனின் ஈகோவை தட்டி எழுப்புவதாய்...வளர்ந்த குழந்தை இவன் அனைத்திற்கும் உரிமை போராட்டம் நடத்தினான்...

அஞ்சலிக்கு இது எதுவும் புரியவில்லை அவள் புரிந்து கொள்ள முனையவும் இல்லை முழு முற்றும் அவன் மேல் பயம் நிலைக்கொண்டு நின்றதில் மற்றதை மறந்தாலோ என்னவோ..

அவளை பொருத்த வரை அவன் தன்னை கவர்ந்து வந்து ஆழ துடிக்கும் இராவணன்..

அன்று இவன் நல்லவனோ என்று கூறிய மனம் தான் இவனின் அதிரடியில் வேறு பரிமாணம் கொண்டு முதலில் நினைத்ததை மறந்து தவறாக யோசிக்க வைத்தது..ஏற்கனவே வெற்றியால் துன்புறுத்த பட்டதால் அனைத்தும் வில்லங்கமாகவே தோன்றியது அவளுக்கு அவள் மேலும் தவறு இல்லையே..

ஏன் கடத்தினான் என்ற காரணம் எல்லாம் தெரியாதவள் விதவிதமான கோனங்களில் யோசித்து அத்தனை கோனங்களிலும் நல்லதை விடுத்து அவளே ஒரு மட்டமான காரணத்தை உருவகம் செய்து கொண்டாள்...அதற்கு தகுந்தாற் போலான அதர்ஷனின் செயல்கள் அவள் என்னங்களை உருப்போட்டது தான் கொடுமை...

குழந்தையுடன் விளையாடிய படி கட்டிலில் தூங்கியவளை தொந்தரவு செய்யாமல் சாந்தியும் குழந்தைக்கு இந்த புறம் உறக்கத்தை தழுவினால்..

நடு ராத்திரியில் கண்விழித்த அஞ்சலி அதன் பின் உறக்கம் வராமல் மெத்தையில் புரண்டு கொண்டு இருக்க..இவள் புரண்டதில் சிறிதாக உறக்கம் களைந்த சாந்தி தூங்கலையா அஞ்சலி என‌ உறக்கத்தினோடே கேட்க...

இல்லை அக்கா தூக்கம் வரல என கூற...அந்த சிறிய கட்டிலில் இடித்து கொண்டு படுத்து இருப்பதால் தான் உறக்கம் வராமல் தவிக்கிறாள் போலும் என நினைத்த சாந்தி...

நீ உன் அறையில் வேணும்னா போய் தூங்கு அஞ்சலி இந்த சின்ன மெத்தை பத்தலை போல...

இல்லை அக்கா என கூற வந்தவள் பின் பேசி இவள் உறக்கத்தை கெடுக்க வேண்டாம் என என்னி தன் அறை நோக்கி சென்றாள்...

சென்று கொண்டு இருந்தவளின் இடையினோடு ஒரு கரம் ஊர்ந்து வயிற்றோடு சேர்த்து இழுத்ததில் அரண்டு கத்த போனவள் வாயை அழுந்த மூடிய கரத்திற்கு சொந்தகாரன் அவன் கத்தாத என செவியோரம் குரலால் தீண்டி தன்னை நோக்கி திருப்பி இருந்தான் அதர்ஷன்...

எப்படியும் இன்று தனக்கு போக்கு காட்டி மதி முகம் மறைத்து ஒடுவாள் என நினைத்தவன் ஆப்பீஸில் இருந்து கிளம்ப மனம் இன்றி எல்லொரும் சென்ற பின்னும் கூட அப்படியே அமர்ந்து இருந்தவன் பின் மணி பனிரெண்டை தொடவும் தான் சலித்து கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்...

தழைந்து சோர்ந்து இருந்த விழியோடு வீட்டினுள் செல்ல போனவன் விழியில் மின்னி வெட்டும் மின்னல் போலான தன்னவள் தீடிர் தரிசனத்தில் உறைந்து அவள் கொலுசின் ஒளியில் தன்னிலை மீண்டு அவளை நெருங்கி இருந்தான் கள்வன் அவன்...

யாரிடம் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி கொண்டு இருந்தாளோ இப்போது அவனிடமே மாட்டி கொண்டு மலங்க மலங்க விழிக்க...அவனோ கள்ள சிரிப்புடன் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்..அவளின் மருண்ட விழி வேறு ஊசியாக தன் உயிரை துளைத்து சுகமாக வாட்டியதில் ஆஆ என நெஞ்சோரம் தேய்த்து கொண்டவனை புரியாது பார்க்க அவனோ அவள் பார்வையிலேயே உச்சம் எய்தியவன் போல் அவளை அனைத்தப்படி உடலை முறுக்கினான்....

இவனின் வினோத செயலில் மேலும் மேலும் திகிலுற்று விலக போனதில் செவ்வரியோடிய விழியோடு அவளை பார்த்தவனுக்கு ரோஷமாக தேக்கி வைத்த கோபம் எல்லாம் எங்கே சென்றதோ...

அவனின் ஒவ்வொரு செயலிலும் பயந்து போகிறவளுக்கு அவனிடம் இருந்து தனக்கு தோன்றிய பாதுகாப்பு உணர்வை உணர தவறியிருந்தது தான் அவலம்...அவன் மெதுவாக தன் மூச்சு காற்று அவள் செவியில் உரச சாப்பிட்டியா என ஆழ்ந்த குரலில் கேட்க..

ம்ம் என பதில் கொடுத்தவள் எனக்கு தூக்கம் வருது நா போட்டா எப்போது இவனிடம் இருந்து தப்பிப்போம் என்ற தவிப்பில் கேட்டவள் பின் காரணமே இல்லாமல் கண்களில் கண்ணீர் தேக்கி வைத்து கொண்டதை கண்டவன் சிறிதாக தன் மோக உணர்ச்சி அறுபட...

ஏன் அழுகுற இப்போ என அதட்ட அந்த அதடலின் போதும் கூட விலகிடாத அவன் அனைப்பில் சிக்குண்டு இருந்தவள் லேசாக விசும்பலை தாங்கிய குரலோடு எனக்கு அருவருப்பா இருக்கு பீளிஸ் விடுங்க என்ன என கூற...

அவளின் கடைசி வாக்கியத்தில் மோக உணர்வு மொத்தமும் அறுந்து வழுக தன் பிடியை பட்டென தளர்த்தி அவளை விடுவித்தவனுக்க நந்தவனத்தில் பசும் புற்களில் கால் புதைய இனிமையாக நடை பயணம் செய்து கொண்டு இருந்தவனை தீடிரென இடுகாடு பாதை உள்ளித்து கொண்டது போல் ஆனது அவன் மனம் அவளின் வார்த்தையில்...

இடிந்து போய் அமர்ந்தவனுக்கு அவள் கூறிய வார்த்தையே மண்டை கூட்டுக்குள் ஏதிர் ஒளித்து குடைய அப்படியே ஹால் சோபாவில் சரிந்த கொண்டான்...


இவ்வாறு நாட்கள் செல்ல இங்கே செல்வாவுக்கு அனைத்திலும் கெடுபிடி எந்த பக்கம் கால் அடி எடுத்து வைத்தாலும் உள் இழுக்கும் புதை மணலாக அதர்ஷன் தோண்டி வைத்து ஆப்பு பல்லை காட்டுவதில் அவனால் கோவம் மட்டுமே பட முடிந்தது..

இதில் அஞ்சலியை வைத்து திட்டம் தீட்டி ஆதாயம் காண நினைத்த செயலும் தரைமட்டமாக போனதில் கிட்டதட்ட பிளாக் மார்கெட்டில் இவனின் சாம்ராஜ்யம் சரியும் நிலை..

அனைத்து முயற்சியும் எடுத்து விட்டான் அவன் ஒரு சிக்கலில் இருந்து விடுபடுவதே குதிரை கொம்பாக இருக்க இதில் அடுத்து அடுத்து அணிவகுத்து நின்ற பிரச்சனையை சமாளிக்க முடியாது மூச்சு திணறி போனான் பாவம்..

சிறிது ஆசுவாச மூச்சு விட்டாலும் சட்டென சாயும் மணல் வீடு போன்ற அவலைநிலை தான் அவனுடையது..

செய்யும் எல்லா தொழிலிலும் கடப்பாரை விட்டு ஆட்டுவது போல் சிறப்பாக புது புது டிசைனில் பிரச்சனையை அளவு எடுத்து சொருகினான் அதர்ஷன் வர்மா..

தன் தாய் கூறிய திட்டமும் பெரிய மாற்றத்தை நிகழ்த வில்லை..அன்று நிகழ்ந்தது இது தான்..

அக்கா இப்போ என்ன பன்ன போறோம் என தாஸ் கேட்க அந்த நயவஞ்சக நரிகா யோசனை தெரியாது ..

இப்போ ஏன் தாஸ் ஒப்பாரி வைக்கிற இப்போ என்ன குடியா மூழ்கி போச்சு என சாதரணமாக கேட்டவளை பார்த்து..

நீ என்ன லூசா உனக்கு புரியுதா இல்லயா அந்த அதர்ஷன் அந்த பொண்ன கட்டம் கட்டி தூக்கிட்டான் அவன் பாதுகாப்பு வளையத்துக்குள்ள போனா மறுபடியும் வாராது இதை இவன் செஞ்சு இருந்தா நமக்கு இந்த நிலமையே வந்து இருக்காது என உஷ்னம் தொனித்த பார்வையோடு பக்கத்தில் நின்ற செல்வாவை பார்த்து கூற...

அப்போ அவனுக்கு விசுவாசமான ஆளை தூக்கு ஆசை காட்டி விசயத்தை புடுங்கி வேலைய முடி..ஆனால் நீ எது செஞ்சாலும் தடயம் இல்லாமல் பாத்து பண்ணு என அவள் கூறியதன்படி அவர்கள் விரித்த வலை தேவாவிற்கு தான்..வீரை இழுத்து கொள்ளலம் தான் ஆனால் அதர்ஷன் மேல் இருக்கும் விசுவாசத்தில் பேசிய நொடியே நாக்கை தூண்டாடி காரியத்தையே கெடுத்து விடுவான் என்பதால் தான் தங்களுக்கு ஏற்ப்ப தேவாவை தேர்ந்தெடுத்தது..

ஆனால் அவர்கள் நினைத்தது போல் அவனை மடக்கி தங்கள் பக்கம் இழுத்து கொள்வது ஒன்றும் அத்தனை கடினமாக இருக்கவில்லை அவர்களுக்கு..‌. நீங்க ம்ம் சொன்னா போதும் நா உங்க பக்கம் என்று ரஜினிமுருகன் படத்தில் வருவது போல் உடனே தாவி விட்டான்..

அவனால் வந்த தகவல்களும் ஒன்றும் பயனுள்ளதாக இல்லை..எதாவது சற்று அழுத்தி கேட்டால் போசுகென காலில் வழுந்து ஐயையோ பாஸ் சாரி பாஸ் அவன் சிக்க மாட்டிக்கிறான் பாஸ் இந்த தடவ மன்னிச்சுருங்க அடுத்த தடவை பக்கா என புரளுபவனை நம்பி தொலைக்க வேண்டிய கட்டாயம் செல்வாவுக்கு ..தாஸ்க்கு ஏனோ இவனை நம்ப முடியவில்லை இருப்பினும் ஆதாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கண்டு கொள்ளவில்லை...

தேவா சும்மா இல்லாமல் தன் வீர சாகசங்களை வீரிடம் கூற இவனுக்கு தான் வயிற்றை கலக்கியது..

வீருக்கு தேவாவும் முக்கியம் அதர்ஷனும் முக்கியம் இரு கண்களில் ஒன்றை குத்திக்கொள் போன்ற இக்கட்டில் நிறுத்தி இருந்தான் தேவா அவனை..

இதுவே தேவாவின் இடத்தில் வேறு ஒருவன் இருந்தால் பிசிறு தட்டாது அவனே முடித்து விட்டு ஜெயில் என்றாலும் தயங்காது சென்று இருப்பான் ஆனால் இப்போது விஷயம் தேவாவை சுற்றியதால் தான் இவனுக்கு இத்தனை கலவரம்...

ஏதோ பிள்ளைக்கு சொல்லி சொல்லி திருத்துவதை போல் இவன் வேதம் படிக்க தேவாவோ துருதுரு செல்ல கண்ணணாக சிரித்து கொண்டே அனைத்து திருட்டு வேலையும் பார்த்து விட்டு போதா குறைக்கு அதை வீரிடம் வேறு கூறி அவனை கொலை நடுங்க வைக்கிறான்..

அதர்ஷனுக்கு இது தெரிந்தாள் என்ற என்னமே அவனின் உடலை நடுங்க செய்தது....

அதர்ஷன் இதனை அறிவானோ???

தொடரும்.....


 
Last edited: