கதிரவன் கிழக்கில் உதித்து அனைவருக்கும் விடியலை வளங்கி உச்சியில் தகதகத்து நின்ற அந்த காலை பொழுதினில் இரும்பாக புடைத்து நின்ற தன் புஜத்தை வில்லாக வளைத்து மடக்கி யோகாசனம் செய்து கொண்டு இருந்தவனின் உடல் சித்திரமும் கைப் பழக்கம் என்பது போல் ஆசனங்களுக்கு தேவையான அளவுகோலின்படி துல்லியமாக வளைந்து கொடுத்தாலும் மனம் அவன் கட்டுக்குள் வராது அஞ்சலியை சுற்றியே வட்டமடித்த அவனை சோதித்தது...
சில நாட்களாக துயில் உறிந்த கண்கள் செவ்வரியோடி சிவந்து மனம் காலை ஏகாந்த சூழலையும் உணராது அவள் கலங்கிய முகத்தை மட்டுமே மனதில் நிலைநிறுத்தி கொண்டவனாய் இறுகி நின்றான் அதர்ஷன் வர்மா...
அருவருப்பா இருக்கு என்ற கூறிய வார்த்தை வண்டாக அவன் மூலையை குடைந்து கொன்றது..அவளின் இத்தகைய வார்த்தை அவனின் விம்பை திரித்தூண்டி கோபமுற செய்தாலும் அதையும் மீறிய நெருடல் விசயத்தின் ஆழம் அறியாமல் தவிப்பதாய்...
அதன் பிறகான நாளில் அவளுக்காக தள்ளியே நின்றான் அதர்ஷன்... நிஜமாகவா என்று கேட்டாள் அவனுக்கே வெளிச்சம் அவன் அப்படிதானே அவனிடமே கூறிகொண்டு இருக்கிறான்...
ஆஸனங்கள் முடிந்த பின் இரு புறமும் இரட்டனகால் போட்டு பத்மாஸனதில் அமர்ந்தவன் மனதிற்கு அமைதி வேண்டினானோ அல்லது இனி அவளை பார்க்கவே கூடாது என மனதை கட்டுபடுத்த நினைத்தானோ ஏதோ ஒன்றை மனதில் உருப்போட்டு கொண்டு கண்களை மூடி தியானம் செய்ய தொடங்கினான் அவன்...
நொடிகள் கூட முற்று பெறாமல் கவனத்தை ஒன்று திரட்ட முடியாது மூடிய கண்களை பட்டென திறந்து மீண்டும் ஆழ மூச்சிழுத்து கவனத்தை நிலைக்குவிக்க முயன்றவனின் முயற்சியை அவனின் செல்ல மான்குட்டி அவன் மனபடலத்தில் தொன்றி கையில் வைத்திருக்கும் முயல் தன் முன்பற்களால் நெஞ்சை சீண்டி அதில் மேல் கவனத்தை ஈர்ப்பதை போல் மனம் முடிவிடமாக அவளிடமே முற்றுப்பெற்று தேங்கி நின்றதில் சலித்து போனான் அவன்....
அதான் பெரிய இவ மாதிரி அருவருப்பா இருக்குனு ஒடி போனேல இப்போ மட்டும் எதுக்கு முன்னாடி வந்து உயிர வாங்குற என மனதில் நிலைகொண்டு இருந்து அவளின் பிம்பத்திடம் குழந்தையாக மல்லுக்கட்டி நின்றவனை கண்ட அவனின் மனசாட்சி அவனை கண்டு நக்கலாக சிரித்து...
நா தான் அன்னைக்கு சொன்ன மாதிரி உன் பாக்காம விலகி தான இருக்கேன் என்ற அவனின் வார்த்தை கேட்டு பொங்கி எழுந்த அவனின் மனசாட்சி அடேய் அடேய் ஏன்டா உருட்டுற சத்தியமா சொல்லு அன்னைக்கு அப்பறம் அவளை நீ பாக்கவே இல்லை அப்பறம் அந்த மாடி படி ஓரம் நின்று பார்கிறது கிட்ச்சன் சைட்ல இருந்து பார்த்தது எல்லாம் என்ன என காரி துப்பாத குறையாக மனம் கேள்வி எழுப்பியதில் அ..அது அதான் உனக்கு தெரியுதுல அப்பறம் எதுக்கு போற்கொடிய தூக்கிட்டு வர பே என தன் மனதிற்கு கொட்டு வைத்து அடக்கியவன் சோர்ந்து போய் அமர்ந்தான்...
இத்தனை நாள் தனிமையில் தகித்து போன இதயத்திற்கு வடிகாலாக சிறு இதம் தேடி பனித்துளியான பெண்ணவளின் அருகாமை வேண்டி அவளை நெருங்க முன்நோக்கி ஒரு அடி வைத்தால் பெண்வளோ கதிரவனின் வெப்பத்தில் இலையோடு மறைந்து கொள்ளும் வெண்துளிப் போல் தரையில் படரும் அவனின் நழலை பார்த்த மாத்திரத்தில் சுவரோடு ஒட்டி மறைந்து கொள்ளவது அவளின் வழக்கமாகியது...
அஞ்சலியை பார்த்த நாளில் இருந்து தனக்குள் நிகழும் தனித்துவமான மெல்லி ஏதோ ஓர் உணர்வு திணறடிப்பதின் விடையை அவளுள் தேட மூழ்க துடிப்பது அவளுக்கு அச்சத்தை தொற்றுவித்து வெற்றியின் தீண்டலை நினைவுப்படுத்தி அதர்ஷனின் தீண்டலை அருவருக்க வைத்தது அவளின் குற்றமோ....
இதில் அவள் தவறும் இல்லயே .ஏற்கனவே இருட்டில் வாழ்ந்து பழகியவனுக்கு மின்னும் வெளிச்சத்தில் ஆடும் நிழல் கூட பயம் கொள்ள தானே செய்யும் அதே நிலை தான் அஞ்சலிக்கும்...
வெற்றியால் உண்டான மன பயம் இன்னும் கூட மனதில் நிலைக்கொண்டு இருப்பதில் இவனின் தடாலடி இன்னும் கூட அவளின் பயத்தை திரிதுண்டியது...
பயத்தில் அவன் கண்களில் வழியும் தேடலும் கூட மோகமாக தோன்றி அவனை விட்டு விலகி நிற்க்க வைத்தது தான் பரிதாபம்...
இருவரின் கண்ணாமூச்சி ஆட்டமும் சிறு கள்ளத்தனத்துடன் துளிர்த்த காதலுக்கு அழகு சேர்ப்பதாய் அழகாக இருவருக்கு இடையே இழையோடியது வலியின் நடுவே தித்திக்கும் தேனாக....
செல்வா எப்படியாவது அஞ்சலியை தன் வலையில் வீழ்த்தும் முனைப்போடு காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொருஎ அடியும் தன்னை உள்ளிழுக்கும் புதைமனலாக இழுத்து மேற்கொண்டு தன்னை பிரச்சனையின் ஆழத்தில் தள்ளுவதாக அமைவதில் மண்டை காய்ந்து போனான்....
அதர்ஷன் கட்டுப்பாட்டில் இருப்பவளை அவ்வளவு சாதரனமாக நெருங்க முடியாது என்பதை அறிய மறந்தானோ செல்வராகவ்...
உலவு பார்க்க அனுப்பிய தன் விசுவாசியும் இன்னும் திரும்பி இருக்கவில்லை..தேவா கொடுக்கும் தகவலும் தன் வீட்டின் தோட்டக்காரன் கூட அறிந்து இருந்த அருத பழய விசயங்கள் தான்...எந்த வகையிலும் சிறு தடையமும் இன்றி ரகசியமாக அவளை வைத்திருந்ததில் அதர்ஷன் மேல் இன்னும் கூட வன்மத்தை வளர்த்து கொண்டு அவனை கொல்லும் வெறியோடு தகித்து நின்றான் அவன்...
எல்லா வழியும் அடைத்தது போலான திக்கற்ற நிலையில் தேவாவை நம்பியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அவன் தேவாவை நம்பிய போதும் பல கோடி தன் கை நழுவம் நிலையில் இருப்பதில் அந்த ஏரிச்சலை ஒன்று திரட்டி தேவாவிடம் காய்ந்தான்..
உனக்கு ஏந்த எழவும் தெரியாதா அப்போ என்ன ம*ர்ல அவனை வேவு பார்த்த என உஷ்னமாக பொங்கியவன் முன் பவ்யமாக நின்று இருந்த தேவா சட்டென பதறி அய்யோ அண்ணா ஏன் கவலை படுறிங்க கொஞ்ச டைம் கொடுங்க என கூறியவனை ஏறிட்டவன் இது தான் கடைசி பாத்துக்கோ என கூறியவன் மேலும் அவனும் பல யோசனை கூறி அனுப்பிவைத்தான்....
பவ்யமாக தலை முடி கூட அடாமல் பய பக்தியோடு மெல்ல நடைந்து சென்றவனை பார்த்த செல்வாவின் இதழில் ஓர் குரூர சிரிப்பு மின்னியது..இவனை வைத்து அதர்ஷனை அடியோடு சாய்க்க என்னமோ யாருக்கு தெரியும்...
அஞ்சலி சஞ்சனா மற்றும் சாந்தி மூவரும் வீட்டின் பின்பக்க தோட்டத்தில் சூரியன் பாதி மறைந்து தன் தாமரை காதலிக்கு ரகசிய அழைப்பு விடுவதை கண்ட தாமரையவள் தன் தலை கவிழ்த்தி நானி தவித்த மாலை பொழுதினை குருவின் இன்னிசையோடு ரசித்து அமர்ந்து இருந்தனர்...
அஞ்சலியும் சாந்தியும் பொதுவாக விசயங்களை விவாதித்து கொண்டு இருக்க குழந்தையோ இருவரின் முகத்தையும் மாறி மாறி பார்ப்பதும் அவர்களுக்கு இனையாக க்கஸ ஆஆஸு என ஏதேதோ மழலை மொழியில் தன் பங்கிற்கு பேசி கொண்டு இருப்பதை பார்த்த அஞ்சலி குழந்தையை கையில் அள்ளி என் தங்க பட்டு என்ன கதை சொல்லுறிங்க ஹான்...
ஹாஹூ வா ஒன்னும் புரியலையே உங்க பாஷை எனக்கு சொல்லி தரிங்கலா என குழந்தையோடு குழந்தையாக விளையடி தன் மூக்கை பிள்ளையின் பிஞ்சு கன்னத்தில் உரசி கிச்கிச் முட்டி குழந்தையோடு சிரித்து விளையாடுவதை பார்த்த சாந்தி...
அவளும் சிரித்து சில கனம் ரசத்தவள் பின் திடிரென வேறு ஏதோ ஒர் வேலை நியாபகம் வந்தவளாக இரு அஞ்சலி பாப்பாவ பாத்துக்கோ நா வரேன் என கூறி அவள் அங்கு இருந்து நகர்ந்து செல்லவும் இருங்க அக்கா நானும் வரேன் என கூறி அவள் பின்னால் செல்வதற்குள் சாந்தி சற்று தள்ளி சென்று இருந்தாள்...
பிள்ளையை கையில் அள்ளி கொண்டு அக்கா என சாந்தி பின் ஒடியவள் தரையில் சிந்தி கிடந்த தண்ணீரை கவனிக்க தவறியிருந்தால் பாவம்..
தண்ணீர் அவள் காலை நழுவ செய்து சறுக்கிய நோடி பிள்ளையை இறுக பற்றி கொண்டு தான் விழ போகிறோம் என கண்களை மூடி பிடிமானம் இன்றி சரிந்தவள் தரையை அடைவதற்கு இரண்டு அடிக்கு முன் ஒரு வலிய கரம் அவள் இடையோடு கரம் நுழைத்து குழைந்தையோடு சேர்த்திழுத்து கொண்டது...
நோடிகள் கடந்த பின்னும் கூட தான் இன்னும் கீழே விழாமல் இருப்பதில் மெதுவாக பயத்தோடு இமை பிரித்து பார்த்தவள் தன் முகத்திற்கு வெகு அருகில் இருந்த அதர்ஷனின் முகம் கண்டு பட்டென எழ போனவள் மீண்டும் தண்ணீர் செய்த சதியில் அவன் மேலேயே பிள்ளையை கையில் இறுக்கியபடி விழுந்து தொலைந்தால் பாவையவள்...
அப்போதுதான் வேலையின் களைப்பில் வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு இன்ஸ்டன்ட் எனர்ஜியாகி போனது அவள் தன் கரத்தில் மடிந்தது...
அவள் தன் மேல் சரிந்ததில் அவனும் பிடிமானம் இன்றி அவளை இடையோடு இறுக்கி மற்றோரு கரத்தை அவள் முதுகுக்கு கொடுத்து சரிந்து இருந்தான்..அவள் கரங்களினுள் அனவாக பதுங்கி இருந்த குழந்தைக்கு இந்த விழும் விளையாட்டு சுவாரஸ்யமாக தோன்றியதோ என்னவோ தன் மொச்சை கொட்டை கண்களை அழகாக சுழற்றி கிளுக்கி சிரித்து அவர்கள் கவனத்தை ஈர்ப்பதாய்...
உடனே துனுக்குற்றவள் அவனிடம் இருந்து விலக பார்க்க அப்போது இருவரின் இதழும் சிக்கிமுக்கி கற்களாக உரசியதில் தன் பாதி உடலை குழந்தையை பாதிக்காது அவள் உடலில் சாய்ந்து உரசிய இதழை மிச்சம் இன்றி தன் வாயில் அதக்கி கொண்டான் கள்வன் அவன்....
அவள் இதழில் சிக்குண்டு மீல முடியாமல் மது குடத்தில் தலைகுப்புற விழுந்த வண்டாக திளைத்து இருந்தான் அவன்..
முதுகில் பதிந்த கரம் எப்போது கீழிறங்கி இடைக்கு வந்ததோ தெரியவில்லை ஆனால் பதிந்த இடத்தில் மென்மையாக வருடி இதழ் வீக்கம் ஆகும் வரை ஒர் இனிய ஒத்தடம்...
அன்று அவனின் தீண்டல் அருவருப்பை தொற்றுவிக்கிறது என கூறியவள் இன்று அவன் கை வளைவில் கதகதப்பாக பதுங்கி அவனுக்கு இசைந்து கொடுத்தது தான் காதலின் விந்தையோ...
கனம் கதுப்பு சிவந்து தன் மேல் கிறக்கம் கொண்டு சுருண்டு இருந்த தாளையவளை பார்க்க தெவிட்டாது அவள் முகத்தை பார்த்தபடியே முத்ததில் மூழ்கி போனான் அவன்...
நிறுத்துங்கடா உங்க ரொமான்ஸ என்பது போல் இத்தனை நேரம் கரங்களில் அழகாக மடங்கி இருந்த குழந்தை வீழ் என சத்தம் எழுப்பியதில் இந்த தடவை எந்த சதியும் தாக்காதவாறு கவனமாக பிரிந்தனர்..
நல்லவேலை தேவாவும் வீரும் இப்போது இந்த ஸ்பாட்டில் மீஸ்ஸானது அவர்கள் உயிருக்கு லாபமாய் போனது இல்லையற்றால் அவர்கள் தான் நெஞ்சை பிடித்துக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்ந்து இருப்பார்கள் நடந்த கூத்தை பார்த்து பிய்ந்து போகும் பிஞ்சு இதயங்கள்...
நிதானமாக எழுந்து நின்றவன் அவளுக்கு கை கொடுத்து உதவும் முன்பே குழந்தையோடு எழுந்து நின்றவள் நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து அந்த இடைத்தை விட்டு மறைந்து இருந்தாள்...
இதழில் படர்ந்த மென்னகையோடு அவள் மறைந்த பின்னான வெற்றிடத்தை சில கனங்கள் பார்த்தவன் பின் இதழ் கடித்து புதிதாக முளைத்த எழுந்து வெட்கத்தோடு தன் தலையில் தட்டி கொண்டு நகர்ந்தான் அதிர்ஷன் வர்மா...
இங்கே அஞ்சலி மூச்சு வாங்க சாந்தியை தேடி பிடித்து குழந்தையை அவள் கையில் கொடுத்து விட்டு அவள் அழைப்பதையும் கிறகித்து கொள்ளாமல் தன் ரூம் வந்தவள் கட்டிலில் கவிழ்ந்தால் தீராத நாணத்தை தலையணையில் மறைப்பதற்காக...
இரவு அதர்ஷன் உறங்கும் முன் தனக்குள் தோன்றிய குறுகுறுப்பில் அவளை காண அவள் அறைக்கு சென்றவன் அதிர்ந்து போய் நின்றான்...
தொடரும்.....

Last edited: