• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕16

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
48
87
18
Madurai
செல்வா கண்களில் குரோதம் மிளிர கையில் மது நிறம்பி இருந்த கோப்பையை விரலால் சுழற்றி எடுத்து ஒரு மிடறு விழுங்கியவனின் விழியில் துருதுருத்து நின்ற பழி உணர்ச்சியை ஆனந்தமாக உள்வாங்கியபடி மூக்கு முட்ட குடித்து போதையில் கவிழ்ந்து இருப்பவன் தன் மருமகன் என்ற என்னம் அற்று சலனம் இல்லாத பார்வையை அவன் மீது பதித்து கோப்பையை காலி செய்தார் தாஸ்...

ஒரு நிலைக்கு மேல் அதிமிஞ்சிய போதையிலும் பழி உணர்ச்சியை சுமந்தவனாக அ..அவ.அவன விட கூடா..கூடாது மாமா என குளறலாக கூறியவனை தீரித்துண்டும் விதமாக உன்னால முடியும்டா சீக்கிரமே அவன முடிப்போம் என கூறிய அவர் ஒன்றும் அவனை போல் சுய நினைவு இழக்கும் அளவுக்கு குடித்து இருக்கவில்லை...அதே நேரம் அளவில்லாமல் வாயில் அடுக்கடுக்காக பாட்டிலை சரித்தவனை போதும் டா என தடுத்து இருக்கவும் இல்லை...

அவனை கண்டித்து திருத்துவதற்கு நேரம் பற்றாமல் போனதோ இல்லை அதற்கு அவசியமற்று பகடையாடுப்படும் பொருளுக்கு சுயம் எதற்கு என்ற என்னமோ அவருக்கே வெளிச்சம் ஆனால் மலையளவு வன்மத்தை அவனுள் விதைத்த நீளிமா மற்று தாஸ்க்கு துளியெனும் அவன் மனதில் ஈரத்தை விதைக்க தவறும் அளவுக்கு அவர்கள் மனதில் ஈரமற்று போனதோ...

தான் பகடையாட படுவதை உணராது நெஞ்சில் விதைத்து விட்ட வன்மத்திற்கு ஏய்துவாக செல்படுபவனுக்கு உண்மை தெரிந்தாள் நல்வழி பதையை அப்போதாவது தேர்ந்தெடுப்பானா என்பது ஐயமே..

தன் சுயம் தப்பிய நிலையில் இருக்கையின் பின் தலை சாய்த்து ஒரு கையில் கோப்பையை தாங்கி முனங்கி கொண்டு இருந்தவன் மேல் வழிய வந்து விழுந்த யுவதி ஒருவள் பேபி என கிறங்கடிககும் குரலில் அழைத்து ஏதோ அவன் காதிற்குள் ஓதி அனைத்து கொள்ள...

அவனும் மது போதையில் கிறங்கிய விழி இப்போது வேறு பரிமாணமான போதையில் மேலும் கிறங்கி தன் மேல் கிடந்தவளை கண்டு இதழின் பக்கவாட்டில் சிரித்தவன் அவளை தள்ளி கொண்டு ஒரு அறையில் புகுந்து இருந்தான் அவன்...

தன் முன்பே சீர் அழிந்து கெட்டு போகும் தன் மருமகனை கோனல் சிரிப்புடன் நோக்கிய தாஸை பொருத்த வரை அவன் தனக்காக செய்யும் செயல்களுக்கு இது எல்லாம் வெகுமானம் அவ்வளவே...

இப்படி குடியும் கூத்துமாக குதுகலித்து இருப்பவனின் குதுகலத்தை களைந்து எடுக்கும் ஸ்பெஷலீஸ்ட் ஒருவன் அவனுக்காக பல டிசைன்களில் ஆப்பை ரெடி செய்து வைத்து விட்டு தன் அம்முவின் அனைப்பில் சுகமாக துயில் கொண்டு இருந்தான்..

ஜன்னலில் இருந்து சிறிதாக விலகி இருந்த திறைசீலையின் வழி ஊடுறுவிய கதிரவன் கண்டிப்பு மிக்க தாயாக தூங்கி இருந்த அஞ்சலியின் முகத்தை தன் கரங்களால் வருடி எழுப்ப முனைந்ததின் முயற்சிக்கு வெற்றியாக கண்கள் கரு மணி உருல மெது மெதுவாக துயில் களைந்தாள் அஞ்சலி...

விழி திறந்ததும் நேற்று மன்டைக்கு ஏறிய போதை தலையில் மத்தளம் வாசித்ததில் வின்வின் என வலி எடுத்தது..

தலையை உலுக்கி கண்களை சிமிட்டி சிமிட்டி முழித்தவள் இரண்டு கையையும் வலித்த தலையை தாங்கியதில் காயம் கொண்ட கரம் வலி தைக்க பட்டென தலையில் இருந்து கரத்தை விலக்கி ஒரு கையால் காயம் கொண்ட கையை தாங்கி ஆஆ அம்மா என்ற முனங்கலுடன் நகர்ந்து மெத்தையில் சாய்ந்து அமர்ந்தவளுக்கு நேற்று கடைசியாக மேஜையில் இருந்த பெப்ஸியை குடித்தது மட்டும் தான் நியாபகம்...

இவள் காயம் கொண்ட தன் கரத்தையே உற்று நோக்கி நேற்றி என்ன நடந்தது என மூளையை அலசி நினைவு கூர் முயன்று கொண்டு இருந்த நேரம் கையில் தேனீருடன் உள் நுழைந்தான் அதர்ஷன்..

இப்போ எப்படி இருக்கு என அவன் அவள் பக்கம் நெருங்கும் முன் நெருங்கிய அவன் கணீர் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவளை...ஏய் ஒன்னும் இல்லை நான் தான் என கடுகடுத்தவனுக்கு தன்னை கண்டு ஏன் இவள் பயம் கொள்கிறாள் என்ற ஆதங்கத்தில் ஆசுவாசப்படுத்தும் வார்த்தையை கூட சிடுசிடுப்பாக உதிர்த்தான்..

அவனை கண்டு சற்று அமைதியானவள் குறுகுறுத்த அவன் பார்வையை ஏதிர்கொள்ள திராணியற்று தலை கவிழ்ந்து இருந்தவள் முன் தேனீர் கோப்பையை நீட்டியவன் இத குடி கொஞ்சம் தலை வலி கேட்கும்..

இல்லை வேண்டாம் என மறுத்தவளை உண்றி பார்த்தவன் அதான சரக்கு அடிச்ச வாய்க்கு டீ இனிக்குமா என காது மடலை தேய்த்து முனங்கியவன் பின் அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து சுதாரித்து நீ குடிக்கிறியானு கேட்கல குடினு சொன்னேன் என கோப்பையை தன்னை நோக்கி நீட்டி நின்றவனிடம்..

வேண்டாம் என மீண்டும் தலை அசைத்தவளை பார்த்து இப்போ நீ குடிக்கிறியா இல்ல நா வேற மாதிரி கொடுக்கவா என அவளை சீண்டி நின்றவனிடம் தீடிரென தலை தூக்கிய துடுக்கு தனத்தின் விளைவால் அவனை நெருங்கி எப்படி மூக்க பிடிச்சு உற்றி விடுவிங்களோ எங்க உத்தி விடுங்க பாப்போம் என்ன கொடுமை பண்ணுறிங்களா எல்லாரும் கடத்தி வேற மாதிரி கொன்னா நீங்க டீ உத்தி கொள்ள..பாக்..பாக்குறிங்களா...என கடைசி வார்த்தை அவன் பார்வையின் திசையை உணர்ந்து சுருதி இறங்கி மியாவ் என பூனை சத்தம் போல் உள் அடங்கி போனது...

விஷம சிரிப்பை கண்களில் தாங்கி கைகளை பின்னிழுக்காமல் இன்னும் தன் புறம் நீட்டி நின்றவனிடம் இருந்து
நா..நா குடிக்குறேன் கொடுங்க என விருட்டென வாங்கியதில் காயம் கொண்ட கரங்கள் வலிக்க கோப்பையை அப்படியே கீழே போட்டு விட்டு ஆஆ அம்மா என கத்தியதில் பாத்துடி அம்மு என விருட்டென ஒரு அடி துரத்தை குறைத்து அவளை நெருக்கியவன்...

அவள் கரங்களை பிடித்து அப்பிடி என்ன அவசரம் குடியா முழ்க போகுது விருட்டென வாங்கி இப்போ பாரு என கட்டு சுற்றி இருந்த கரத்தை மென்மையாக பற்றி வருடி விட்டவன் இரு உக்காரு நா போய் வேற எடுத்துட்டு வரேன் என கூறிவன்..

வேகவேகமாக கீழ் இறங்கி வேறு ஓர் கோப்பையில் தேனீரை நிரப்பி எடுத்து வந்து அவனே பக்குவமாக ஊதி சுடு பாரத்து அவளுக்கு புகட்ட அவளும் அவன் முகத்தில் நிலைத்த பார்வையோடு இதமா தேனீரை உள்ளிழுத்து விழுங்கினால்...

அவளுக்கு மாத்திரை கொடுத்து படுக்க வைத்தவன் கொஞ்ச நேரம் தூங்கு என கூறி அவளை மெத்தையில் சரித்து தலை வருடி கொடுத்து தூங்க வைத்த பின் தான் வெளியேறி இருந்தான் அவன்...

பின் கீழே வந்தவன் சாந்தியிடம் சென்று அக்கா அம்மு ரூம்ல மக் உடஞ்சு போச்சு அத கிளின் பண்ணிருங்க அப்பறம் அவ கையில் அடி பட்டிருக்கு என அவன் கடைசியாக கூறியதில் படபடத்தவள் என்னாச்சு தீடிரென என கேட்க...

நேற்று அவள் குடித்து இருந்ததை தவிரத்து மற்றதை சுருக்கமாக கூறியவன் இப்போ தூங்குறா தூங்கி எழுந்ததும் அவளை குளிக்க வச்சு சாப்பிட மட்டும் வச்சுருங்க என கூறியவனுக்கு தலை அசைத்தவர் நீங்க சாப்பிட்ல என கேட்க...

வேண்டாம் என்ற வார்த்தையோடு முடித்து கொண்டவன் வழக்கம் போல் வீரை அழைத்து கொண்டு தன் அன்றாட பணிகளை கவனிக்க சென்றான் அதர்ஷன் வர்மா...

சிறிது நேரத்திற்கு பின் அதர்ஷன் கூறியதை போல் சாந்தி அவளை சுத்தம் செய்து கொள்ள உதவியதோடு சாப்பாடு கொடுத்து பார்த்து கொண்டாள்...

மாலை சூரியன் காலை முதல் ஆற்றிய பணியில் அயர்ந்து போய் மேகத்திடம் தஞ்சம் அடைய அவனை கானத பூவியவளோ முகம் கருத்து போனதை உலக மக்கள் அவள் வலி புரியாது குதுகலித்த இரவு நேரம் அது...

கீச்சிடும் குருவியினோடு மக்களும் தங்கள் கூட்டுக்குள் ஒடுங்கும் நேரமதில் அதர்ஷனும் வீடு வந்து சேர்ந்து இருந்தான்...

ஒருவரோடு ஒருவர் கலகலத்து பேசாத போதும் அமைதியாக உணவுடன் ஐயக்கியமாகி ஒன்று கூடி இருந்தனர் டைனிங் டேபிளில்...

சாந்தி காலை போல் உணவு எடுத்து சென்று அஞ்சலிக்கு கொடுக்க..அவளோ அக்கா நா கீழ வந்து சாப்பிடுறேனே என தலை சாய்த்து கேட்டவளிடம் சரிடா வா
என கூறிவிட்டு கீழ் சென்றவரின் பின்னோடு கீழே வந்தவள் வீர் மற்றும் தேவாவிற்கு இடையே அமர்ந்து கொண்டாள்...

அவள் தன் அருகில் அமருவாள் என எதிர்பார்ப்போடு இருந்த அதர்ஷனுக்கு அவள் வீர் அருகில் அமர்ந்ததும் சற்று ஏமாற்றத்தில் முகம் கூம்பி போனது சிறு குழந்தை போல்...

சாந்தி அஞ்சலிக்கு இட்லியை குட்டி குட்டியாக பிய்த்து அதில் சாம்பார் ஊற்றி சாப்பிடுவதற்கு ஏய்துவாக ஒரு ஸ்பூன் வைத்து அவளுக்கு கொடுத்தாள்..

ஸ்பூனை சரிவர பிடிக்காமல் உணவு அள்ளி எடுத்து வாய்க்குள் தினிக்கு முன் உணவு மொத்தமும் அவள் மேலேயே சரிய போக அதை பிடிக்கிறேன் என ஸ்பூனை இறுக பற்றியதில் வேதனை தைய்க

ஆஆ என கையை உதறி கொண்டவளை பார்த்த அதர்ஷன் பாத்து என பாய்ந்து வரும் முன் வீர் இட்லியை பிட்டு அஞ்சலி வாய் முன் நீட்டி இருந்தான்....

தன் வாய்க்கு நேர உணவை நீட்டியவனை புரியாது நோக்கியவளை கண்டு இமை உயர்த்தி...ஏன் நா கொடுத்தா வாங்க மாட்டியா அப்போ அண்ணானு சொன்னது எல்லாம் சும்மாவா இப்போ நீ வாங்களேனா என்கிட்ட பேசாத போ.. என குழந்தை போல் வீஞ்சி கொண்டு திரும்ப போனவனின் கரம் பற்றி ஆ என கேட்டு வாங்கி கொள்ள அவனும் சிரிப்புடன் ஊட்ட தொடங்கினான்...

தாயின் மறைவுக்குப் பின் அவரை போல் ஊட்டி தனக்கு என்ற துடிக்கும் அண்ணன் அவனின் அன்பின் அங்கிகாரம் அவள் கண்களில் நீரை திரையிட வைத்தது...

தேவாவும் உடனே அப்போ நா மட்டும் என்ன தக்காளி தொக்கா நானும் ஊட்டுவேன என தாவி கொண்டு வந்தவன் அவள் கண்களை துடைத்து ஊட்டி விட்டான்...

அதர்ஷனுக்கு இவர்களின் பினைப்பு சந்தோஷத்தை கொடுத்தாலும் என் அம்முவிற்கு நான் தானே கொடுப்பேன் என்ற சிறு பிள்ளையான உரிமை கோபத்தில் சற்று முகம் சிடுசிடுத்தான்..


தேவா செல்வாவுக்கு உழவு பார்க்கும் வேலையை தரமாக செய்தான்..

தேவா அன்று கூறிய ஒரு விஷயத்தில் மீண்டும் ஏற்கனவே சரிந்த மணல் கோட்டையை இன்னும் ஏகபோகமாக எழுப்பி வெற்றி அடைய போகும் மகிழ்ச்சியில் தத்தளித்து கொண்டிருந்தான் செல்வராகவ் ...முதலில் சரிந்த மணல் மண்டபம் போல் இதுவும் சரிந்து போகுமோ...

ஆனால் இவர்களின் மோதலில் அநியாயமாக ஒரு பூ கசக்கி எறியப்படும் என்பதில் ஐயம் அற்று போனது விதியின் வழி அது...

தொடரும்....
 
Last edited: