• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕18

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
84
89
18
Madurai
சாளரத்தின் வழியே உறங்கிருந்த அழகியவளிடம் காதல் செய்து கிச்சு கிச்சு முட்டி கதிரவன் செய்த குறும்பினில் குறும் சிரிப்பினால் இதழ் விரிய விழித்து எழுந்தாள் அஞ்சலி...விழித்த வேகத்தில் இன்றேனும் அவன் வந்திருப்பானா என்ற ஏக்கத்தோடு அவன் விரும்பும் கார்கள் அணிவகுத்து நின்ற போர்ட்டிகோவின் நடுவே வேற்று இடமாக இருக்கும் இடத்தை சோர்ந்த விழியோடு பார்த்தவளுக்கு எழுந்த வேகத்தில் விழிகளில் தோக்கி இருந்த துருதுப்பு மங்கி கவலை சூடி கொண்டது....

இன்னைக்கும் வரல என தனக்குள் கூறி கொண்டு இதழ் பிதுக்கி தலை குனிந்தவளின் விழியில் துளிர்த்து விழுந்த ஓரிரு துளி அவளை அறியாது இதயத்தில் துளிர்விட்ட காதலை பறைசாற்றுவதாய்...

நேற்று வரை அவளை மிரட்டும் அரக்கனாய் தோற்றமளித்தவன் இன்று காதல் தேவனாக தோற்றம் காட்டி தேவியவளை ஏங்க விட்டதில் பசலை நோய் கண்ட தலைவி போல் இந்த இரு தினங்களில் உடல் சற்று இளைத்து சோர்ந்து இருந்தாள் அஞ்சலி...

விடையறியா தேடலும் தவிப்பும் நா உள்ள வந்துடேன் டா என காதல் இதய சுவர் அதிர சுவடு பதித்து உள் வந்ததால் காட்டிய அறிகுறியோ...

அனைத்து அறிகுறியையும் இனைத்து பார்த்து காதல் தான் என அறிந்த பேதைக்கு மின் முனைகளை உடலில் அங்காங்கே வைத்து ஒரு நேரத்தில் இயக்கியதை போல் ஒர் சிலிரிப்பு கூடவே இமையோரம் கண்ணீர் தேங்கி நின்றது...

மெதுவாக தன் இடப்பக்க மார்பை வருடி ஏன் விட்டுட்டு போன என இமை மூடி நின்றவள் என்ன நினைத்தாலோ திடிரென இமை திறந்து வேண்டாம் வேண்டாம் என முனுமுனத்து தலையை பற்றி மெத்தையில் சாய்ந்தவளுக்கு ஏதோ ஒன்று நெருடி காதல் பிறந்ததை கொண்டாட விடாமல் அழுத்தி சுதந்திரமாக பறக்கும் காகிதத்தின் மேல் பேப்பர் வெய்ட் வைத்ததை போல் தன் கூட்டில் இருந்து வெளி வர முனைந்தவள் மீண்டும் தன் கட்டிற்குள்ளேயே சுருண்டு கொண்டாள்...

காதல் என்னும் தூரிகையால் வாழ்வை ஒவியம் தீட்ட ஒவியன் கையில் கோலோடு நிற்கும்போது ஒவியத்தை காட்சி படுத்தும் காகிதத்திற்கு வண்ணங்களை ஏற்று கொள்ள தயக்கம் ஏனோ...

இதயத்தை செல்லரிக்க வைக்கும் விஷயத்தின் தாக்கமோ யாதோ காதலை வெளிப்படுத்தவே கூடாது என்ற உறுதியை தொற்றுவித்தது செழித்து நிற்கும் செடியினோடு விளைந்து நின்ற கள்ளிச்செடியாக ஊற்றெடுத்த ஏதோ பெயர் அறியா அச்சம்...

விடப்பிடியாக அச்சததின் காரணிகளை தன்னுள் மறைத்து காதலை வெளிப்படுத்த மறுக்கும் இச்சிறியவளின் திருவாயாய் மலர செய்ய அதர்ஷனால் முடியுமா என்பது ஐயமே பின் இது தீர்வு தான் யாதோ??..

இங்கே கழுத்தை நெரிக்கும் வேலையின் நடுவே முகிலுக்குள் இருந்து எட்டி பார்க்கும் நிலவு போல் தன்னவளின் நினைவு தோன்றி மறைவதில் கிடைக்கும் சிறு இடைவெளையிலும் நிம்மதியற்று மோகம் கொண்டு தவித்து போனான் அதர்ஷன் வர்மா..

அவள் அங்க வளைவில் கர்வம் கொண்டு நின்ற மச்சம் வேறு அவன் நினைவுடுக்குகளில் இருந்து அகல மறுத்து ஆடவனை இன்னும் இன்னும் சோதனைக்குளாக்கி உடனே அவளை பார்க்க வேண்டும் என்ற பரபரப்பை தொற்றுவித்தாலும் அகல முடியாத படிக்கு முதலில் என்னை கவனி என வேலை தன்னுள் சூழட்டி கொண்டதில் தெய்வாதினமாக ஒரிரு நொடி நிலைக்கும் இம்சையோடு தப்பித்தான் பாவம்...

ஒருவழியாக அனைத்து வேலையையும் முடித்து கிளம்பியிருந்தான் ஒடி திரியும் பிள்ளை மீண்டும் தன் தாய் மடியில் சரண்புகுவதாய் தன் தாய் மண் நோக்கி...

பெருமூச்சோடு இயங்கி இருந்த இயந்திர பறவையினுள் அமர்ந்து இருந்தவன் கையில் நிலைக்கொண்டு இருந்தது அஞ்சலியின் மொத்த வாழ்க்கையின் பக்கங்கள்...

டிடெக்டிவ் முலம் அவளை பற்றி மொத்தமாக அறிந்து கொண்டதில் மனம் கொதித்து முஷ்டிகள் இறுகியது...

அவள் அனுபவித்த துன்பங்களை கேட்டறிந்தவனுக்கு நேரங்கள் பல கடந்த பின்னும் கூட இன்னும் உள்ளம் கொதிப்பு அடங்காது தகித்தது ...அவனை குளிர் வைக்கும் உறைபனி அஞ்சலி மட்டுமே அவளும் விலகி இருக்க முனையும் போது இன்னும் தகித்து போவானா இல்லை விலக முனையும் அவளை தன்னுள் அடக்கி துளிர்த்து வேர்விட்ட காதலை சிதைப்பானா என்பது கடவுளின் சித்தம் அன்றோ...ஆனால் அவள் அனுபவித்த வலிகளை குறையாது ஏதிர்பக்கமும் கிடத்துவான் என்பதில் ஐயம் இல்லை...

இப்போது அவளின் வலிகளுக்கு சம்மந்தப்பட்ட யாராவது ஏதிரில் இருந்து இருந்தால் பரமேஸ்வரனாக நெற்றி கண் திறந்து பஸ்பமாக சிதைத்து இருப்பான்...அவர்கள் இப்போதைக்கு இவனிடம் சிக்காது தள்ளி நின்றது யார் செய்த புன்னியமோ...

இவ்வளவு அறிந்திருந்தவனுக்கு அவளின் கொடிய பக்கங்கள் மட்டும் காற்றில் ஐக்கியமாகி பக்கமாக விடுப்பட்டு போகுமா என்ன..

அதையும் அறிந்து இருந்தான்...கேட்ட அனைத்தும் புறையோடிய அவள் மனதின் காயத்தை விளக்கியதில் இப்போதே அவன் மான்குட்டியை நெஞ்சோடு இறுக்கி கொஞ்சல் மொழியால் காயம் கொண்ட இதயத்தை மயிலிறகாய் வருடி ரணம் கறைத்து தன் மனதின் தகிப்பிற்கும் உடனே இதம் தேடும் முனைப்பில் தான் இதோ வேலை முடிந்த கையோடு தன் அம்முவிடம் அடங்கி கொள்ளும் பேராவலோடு இயந்திர பறையில் ஏறி தன் தாய் நாட்டிற்கு பறந்து இருந்தான் அவன்...

அஞ்சலி தேவா வீர் என அனைவரும் உணவு மெஜையில் இரவு உணவிற்காக ஒன்று கூடி உணவோடு ஐக்கியமாகி இருந்தனர்....

கையின் காயம் இன்னும் கூட ஆறாமல் இருப்பதால் தேவே சலிக்காது ஒவ்வொரு முறையும் அவளுக்கு உணவு ஊட்டி விட்ட பின்தான் மற்ற வேலைகளில் ஆழ்வான்...
ஏனோ யாரும் அற்று தனித்து வாழ்ந்தவனுக்கு இச்சிறியவளை பிடித்து போனது ஒன்று அதிசயம் இல்லை ஆனால் உயிரோட்டமான உறவு அமைவது தானே கேள்விக்குறி அது இவளால் சாத்தியப்பட்டதில் சந்தோஷம்...அவளும் அவனோடு உரிமையாக அண்ணா என அழைத்து ஓன்றி கொள்வதில் கூடுதல் மகிழ்ச்சி அதன் விளவில் தான் அவள் ஏங்கும் எதுவாயினும் முடித்திட முனைந்தான் அந்த பாசக்கார அண்ணனவன்...வீரும் தேவாவிற்கு சலைக்காது தாங்கினான் அவளை..

அனைவரும் தன்னை சூழ்ந்து இருந்த போதும் அதர்ஷனின் சுட்டு விழி பார்வையேனும் வேண்டும் என்று அடம்பிடித்து நின்ற மனதை அடக்க தெரியாது அதன்படி இசைந்தாள் பெண்ணவள்...


நடு ஹாலில் டி.வி முன் போடப்பட்ட கனத்த நெகிழி நாற்காலியில் சட்டமாக அமர்ந்து டி.வியில் ஆழ்ந்து இருந்த நேரம் தேவகி தண்ணி வேணும் என அறையில் இருந்த ராஜன் வழுவில்லாத குரலில் அழைத்ததற்கு எதிர்வினை இன்றி அதை நிலையில் அமர்ந்து இருக்க..

அவர் தேவகி தண்ணி வேணும் மா என மறுபடியும் சற்று குரல் உயர்த்தி அழைத்தில் இந்த மனுஷனுக்கு வேற வேலை இல்லை எப்போ பாத்தாலும் தேவகி அதை எடுத்துட்டு வா இதை எடுத்துட்டு வா எதுக்கு எடுத்தாலும் எதையாவது ஏவலேனா இந்த மனுஷனுக்கு தூக்கம் வராது என புலப்பியபடி...தன் கனத்த உடலை சரமப்பட்டு நகர்த்தி எழுந்து ஏனோ தானோ என ஒரு குவளையல் தண்ணீர் அள்ளி சென்றார்...

முகம் கோன மெத்தையில் சரிந்து இருந்தவரின் வாய் அருகே குவளையை வைத்து பருக கொடுக்க அவரோ நடுங்கும் கரங்களால் லேசாக பற்றி வாயில் சரிக்க பாதி நீர் அவர் தாகம் தீர்த்து மீது அவர் சட்டையை ஈரமாக்கியதில் ஏரிச்சல் மண்டியது அவளுக்கு உங்களுக்கு தண்ணி கூட ஒழுங்கா குடிக்க தெரியாதா என அவரை திட்ட இதுவே வாடிக்கையாக நடப்பதில் பெரிதாக அலட்டி கொண்டு மல்லுக்கு நிற்காமல் அவளை கண்டு கொள்ளாது கண்களை மூடி படுத்ததில் மேலும் மேலும் முகழ்ந்த ஆத்திரத்தில் திட்டி கொண்டே சுத்தம் செய்து விட்டு மீண்டும் வெளி வந்து அமர்ந்தார்...

ஒரு சிறிய இடத்தை சுத்தம் செய்ததற்கே சோர்ந்து ஆயாசமாக அமர்ந்தவருக்கு மொத்த கோபமும் அஞ்சலியின் புறம் திரும்பியது...வீடே சுத்தமற்று இருந்ததை பாரத்து ச்சே என சலித்தவருக்கு சிறு வேலையையும் ஏவியே பழகியதில் இப்போது வேலை பார்ப்பதே ஏதோ பூமியை ஒற்றை ஆளை நின்று சுற்றி விடு என கூறியதை போல் மலைத்து போனார்...

அவரின் கோபத்தை தீரித்துண்டும் விதமாக அப்போது தான் கல்லுரியில் இருந்து வந்த திக்ஷா அம்மா சாப்பாடு வைமா எனக்கு பசிக்குது என கூறிகொண்டே ரிமோட்டை தன் கைக்கு மாற்றி கொண்டு மற்றோரு நாற்காலியில் அமர...

அவரோ இன்னைக்கு சமைக்கல டி என கூற...அம்மா காலைல இருந்து ஒரு வாய் சாப்பாடு கூட செய்யாம என்னமா செஞ்சுட்டு இருந்த...

ஏன் பேச மாட்ட வீட்டுல எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியதா இருக்கு இங்க என்ன முன் மாதிரி வேலா வேலைக்கு ஆக்கி போட அந்த கழுதையா இருக்கு...இல்ல நீ தான் ஏதாவது உதவி பண்ணுறிய என கேட்க...

அவ போனா ஆக்கி போட ஆள் இல்லனு உனக்கு தெரியும் அப்பறம் எதுக்கு அவளை சென்னை அனுப்புன என அவளை மீண்டும் அடிமையாக்க வழி தேடியவளுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் என்னம் போலும்...

அவ அங்க போனா தான நம்ம கையில காசு தங்கும் அங்க அவளுக்கு சம்பளம் எவ்வளவுனு தெரிஞ்சும் இப்படி பேசுற...

அதுக்கு அங்க தான் போகனும்னு இல்லையே இங்கே இன்னும் அவ ஒரு வருசம் வேலை பாத்து இதை விட கூட கிடைக்குமே அவளுக்கு எப்படியாது கண்டிக்க ஆள் இல்லாம இஷ்டத்துக்கு சுத்தனும் அதுக்கு இது காரணம் அவ்வளவு தான் இது புரியாம நீயும் இதோ அனுப்பி வச்சுட்ட என்னமோ மா எனக்கு ஒன்னும் சரியா படல போ என கூறியவளுக்கு உண்மையில் அவள் இங்கேயே வேலை பார்த்தால் இப்போது கிடைக்கும் ஊதியத்தை விட அதிகம் கிடைக்குமா என்று எல்லாம் தெரியாது ஆனால் தன் வயதை ஒற்றியவள் வேலைக்கு சென்றதே வயிற்று எரிச்சல் இதில் சென்னையில் வேலை என்பதை ஜீரணித்து கொள்ள முடியாமல் போனதால் தான் இந்த கெடுக்கும் முயற்சி...

கதிரவன் முற்றிலும் மறைந்து நிலவுக்கு வழிவிட்ட இரவு வேலையதில் அனைவரும் தங்கள் அறையில் ஐக்கியமாகினர்...

தன் மடி தவழ்ந்த பிள்ளைகளை பாரபட்சம் இன்றி அரவணைத்த நித்திரா தேவிக்கு அஞ்சலி மீது மட்டும் பாரபட்சம் பார்த்து தள்ளி நிறுத்தியதில் கண்களில் சொட்டு உறக்கம் இன்றி மெத்தையில் கவிழ்ந்து இருந்தாள்‌‌‌...

திடிரென வேதாளம் முதுகின் மேல் ஏறியதை போல் தன் மேல் ஏதோ பாரம் அழுத்தியதில் திருப்ப முயன்வளை திருப்ப விடாது கிடுக்கு புடி போட்டு தழுவிய அந்த உருவம் அவள் கழுத்தடியில் புதைந்து வாசம் உணர்ந்து அவளை திருப்பி அந்த உருவம்..

அவள் கத்த போவதை உணர்ந்து சட்டென இதழில் அழுந்த முத்தமிட்டு இருந்தது..அவள் கண்களை படபடக்க விட்டு அந்த உருவத்தை பார்க்க..பாவம் அது இருட்டில் சாத்தியமற்று போனது தான் பரிதாபம்...

தொடரும்...
 
Last edited:
  • Love
Reactions: Kameswari