• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕2

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
48
87
18
Madurai
பாகம்_2

அவளுக்கு பரிமாரிவிட்டு அருகிலேயே நிற்க்க அதற்கும் எரிந்து விழுந்தாள் திக்ஷா.."என் முஞ்சில என்ன படமா ஒடுது போய் தொல உன்ன பாத்தாலே பத்திகிட்டு வருது பே " என திட்ட அதில் ஊசி பட்டாசுக்கு மிரளும் சின்ன குந்தையாய் அடித்துபிரண்டு தன்னறயில் புகுந்தால் அஞ்சலி....


அறைக்குள் புகுந்தவள் தன் தாய் தந்தை புகைப்படம் முன் நின்று கண்கள் நிறம்பிய வலியுடன் நியாயம் கேட்கும் குழந்தையின் பாவத்துடன் நின்றாள் அந்த பேதை பெண்... தங்கள் குழந்தையின் வலியை உணர்ந்தாலும் தூரம் நின்று பார்க்கும் ஆத்மாவாள் என்ன செய்து விடமுடியும் சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்தனர்....

அவளுக்கு ஏன் தன்னைமட்டும் விட்டு சென்றார்கள் என்ற ஆதங்கம் கண்ணில் கண்ணீரை வார்க்க அதை துடைத்து வனங்கிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்ப செல்லும் முன் சித்தியிடம் கூற போக அவர்"ஊர் மேயாம சீக்கிரம் வந்தா போதும்" என முனுமுனுத்து செல்ல அவளுக்கு ஏன்டா கூறினேன் என்று ஆனது.. விரக்தி புன்னகையுடன் கிளம்பிவிட்டாள்...


யாரோ தன் முந்தானயை இழுப்பது போல் இருக்க திரும்பி பார்த்தாள் அங்கு அழகிய ஒரு வயதுடைய பெண் குழந்தை ஒன்று சிறிய கவுன் அணிந்து இவளை இழுக்க.... அவ்வளவு நேரம் மனதில் இருந்த ஆர்பரிப்பு நீங்கி அந்த பால் வடியும் பிஞ்சு முகத்தை பார்த்தாள் அஞ்சலி... தன் இருபற்கல் தெரிய சிரிக்க..அவளை தூக்கியவள்"தங்க பிள்ள எப்போ எழுந்துச்சு அம்மா எங்க" என கொஞ்சி வினவ அது தன் கரத்தை நீட்டி அம்மா என கூற "அங்க இருக்காங்களா " என இவர்கள் விளையாட அந்த குழந்தையின் தாய் தேன்மொழி வெளிய வந்தார்..."இவ இங்க ஒடி வந்துடாளா நான் அங்க தேடிட்டு இருந்தேன் " என செல்லமாக குழந்தை பின் பக்கத்தில் தட்ட அது மேலும் சிணுங்கி அஞ்சலியிடேமே ஒன்ற.. விடுங்க அக்கா என சொல்லி குழந்தையை குடுத்துவிட்டு அவள் செல்ல எதினிக்க தேனு அவள் கரம் பிடித்து சுற்றிலும் பார்த்து விட்டு "சாப்பிடியா முகமே வாடி கெடக்கு" என கேட்க எனவே அவளுக்கு தான் தெரியுமே அவளின் சித்தியைப் பற்றி அது பேய் என்று... என்னதான் அவர் தன்னிடம் கரிசனமாக இருந்த போதிலும் அவரிடம் கேட்டு வாங்கி உண்ண கூச்சமாக இருந்தது...அவராகவே வற்புறுத்தி உண் வைத்தாளும் அவளுக்கு தான் உதை விழுகும் அடியை கூட தாங்கி விடலாம் ஆனால் நெருப்பை அள்ளி தெளிக்கும் வசவு மொழிகள் மனதை வெகுவாக காயம் கொள்ள செய்யும் என உணர்நதவள் ...


அதை எதையும் காட்டிக்கொள்ளாமல் சாப்பிடேன் கா என கூறி விரைந்து நகர்ந்து செல்ல...அவளை வெறித்து பார்த்த தேனுவுக்கு தான் மனம் கனத்தது அவளும் இந்த வீட்டிற்க்கு குடி வந்ததில் இருந்து அந்த பிள்ளை படும் துன்பத்தை பார்த்து கொன்டுதானே இருக்கிறார்....ஒர் பெருமூச்சை இழுத்து விட்டு இந்த பொன்னுக்கு நல்ல வழிய காட்டு கடவுளே என வேண்டி தன் வேலையை பார்க்க சென்றாள் அவள்..

அஞ்சலி பேருந்திற்காக காத்திருக்க அவளை வெகு நேரம் சோதித்தத பின் தான் அதுவும் வந்தது....ஆனால் அதுவும் ஜன நெரிசலில் அலைமோதி இடைமின்றி பேருந்தே சற்று சாய்ந்து வர இருந்த போதும் இந்த பேருந்தை விட்டால் வேறு வழியும் இருக்க வில்லை இது தான் கடைசி பேருந்து என்னும் பட்டசத்தில் நெருக்கும் கூட்டத்தில் வேறு வழியின்றி ஏறிக்கொண்டாள்....

நிருத்தம் வந்தவுடன் நெரிசலில் இருந்து ஒருவழியாக தன்னை விடுவித்து கொண்டு இறங்கியவளுக்கு... இன்னும் சாப்பிடாதது கூட்ட நெரிசல் என எல்லாம் சேர்ந்து தலை கிருகிருத்தது கால் நிலை கொள்ளாமல் தள்ளாடம் கண்டு நின்றவளால் அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்த வைக்க முடியாத அளவுக்கு சோர்வு வாட்டி எடுத்ததில் அவள் மயங்கி சரிந்தாள்...

மயங்கி சரிய போனவளை பூங்கொத்தாக அலுங்காமல் தாங்கி பிடித்த அந்த வலிய கரத்திற்கு சொந்தமான‌ உருவத்தை அந்த அயர்ச்சியிலும் யார் என பார்க்க முயன்று தோற்றவளாய் அந்த வலி கரங்களினுள் சிறு பொம்மையாக பதுங்கி கொண்டாள்....

************
காலியின் இனிமையினோடு கத்தம் எழுப்பும் புள்ளிங்களுக்கு போட்டியா சலசலத்த அலுவலகம் நொடியில் அமைதியாகி போனது அவன் வரவில் அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று வணக்கம் கூற அவனோ கழுத்துக்கு நோகாமல் சிறு தலை அசைப்புடன் அவர்களை கடந்தான்....

பெண்கள் அவன் கம்பிரத்தில் தங்களை மறந்து ரசித்து இருக்க ஆண்களோ அவனை விட்டு பார்வை அகற்ற முடியாதவாறு தன் ஆலுமையால் அவன் தன் அறைக்குள் நுழையும் வரை மாயக்கட்டுக்குள் ஆழ்த்தி தன் தவிர்த்து எவர் பார்வையையும் திரும்ப விடாது செய்ததில் சிலருக்க பொறாமை சிலருக்கு ரசக்கவைப்பதாய்...

அதை எல்லாம் கண்டுகொள்ளாதவனோ அசராமல் அதர்ஷன் வர்மா என்று தங்க நிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட அந்த பலகை தாங்கிய அறைக்குள் நுழைந்தான்..

அவன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் பின்னே ஒடினான் வீர்...அவன் நடந்து செல்லும் வேகமே பின் இருப்பவனை ஒட வைத்திருக்க சற்று அயர்ந்து போனான் பாவம் அவன்...அவனுக்கு பின்னால் உள் நுழையும் நேரம் சரியாக கைபேசி அழைக்க‌ எடுத்து பேசியவனுக்கு வியர்க்க தொடங்கியது..ஏனினில் விசயம் அப்படி...

அவன் பயத்துடனே அறையை தட்ட "எஸ் கம் இன் " என ஆளுமை நிறைந்த அழைப்பில் அனைத்தும் ஆட்டம் கண்டது அவனுக்கு "அய்யோ பத்மாவதி இன்னைக்கு உன் புள்ள சேதாரம் இல்லாம வந்தா பூமிக்கு இல்ல சாமிக்கு என மனதினுள் புலம்பிக் கொண்டே உள் நுழையவும்...அவன் நிமிர்ந்து பார்க்கவும் சரியாக இருந்தது..அண்ணா அது அது என தயங்க அவனோ விழியை குத்திட்டியாக தீட்டி அவனை கூர்ந்து என்ன என்று வினவ....அதர்ஷனுக்கு குறையாத ஆளுமையுடன் அனைவரையும் கையாளுபவன் அவனின் விழி வீச்சில் வீட்டு பாடம் முடிக்காத பள்ளி மானவன் போல் திரு திருவென விழித்தான்...

அதற்கு மேல் அவனை அதிரவிடாமல் அவனே கூறினான் கோவைல லேபர் பிராபலம் அதான என கேட்க அவனோ அவனின் புத்தி கூர்மையை அறிந்தாலும் ஆச்சிரியம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை..வழக்கம் போல் மனதினுள் மெச்சி கொண்டவன் ஆம் என தலை ஆட்டி.

முதல சின்ன பிராபலமா அரைஸ் ஆகும் போதே மேனேஜர் பிரச்சனை சின்னது தான்னு கண்டுக்காம விட்டது தான் பிரச்சனை ஆயிடுச்சு இத பத்தி என்கிட்ட கூட இன்பார்ம் பண்ணல அதோட சைட் எஃப்பட் தான் இது‌ அப்பறம் முதல கேட்டவுங்க இப்போ ப்ரொட்டெஸ்ட்னு இறங்குனதுனால புரொடக்சன்ஸ் டரபல் ஆகுது என பிரச்சனையை தன் பார்வையின் படி விளக்கி நிமிர்ந்து நின்றான்...

அவனும் சற்று புருவத்தை நீவி யோசித்தவன் சரி கோவைக்கு போக ஏற்பாடு பண்ணுங்க என கூற " எஸ் அண்ணா" என கூறி வெளிய வந்தவனுக்கு அப்போதுதான் மூச்சே சீரானதுப் போல் தோன்றியது..அவனும் தன் வேலையை பார்க்க சென்றான்...

எல்லொரும் தனது வேலைகளில் மூழ்கியிருக்க தடக் தடக் என தனது ஹீல்ஸ் காலனிகள் ஒலியெழுப்பி அந்த அலுவலகத்தில் நுழைந்தாள் நேற்று அடி வாங்கிய அதே பெண் சகானா ...

வெளியே மிடுக்காக இருந்தாலும் உள்ளே உதறல் எடுத்தது அவளுக்கு நேற்று வாங்கியதின் தாக்கம் இன்னும் இருக்கும் இல்லயா....

பெண்கள் அவள் நடை உடை பாவனையில் முகம் சுழித்து தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ள...அவள் அதனை அலட்சியம் செய்து விட்டு "அதர்ஷன் வர்மா" என பெயர் பொறித்த அறையில் நுழைந்தாள்...

தன் அனுமதி இன்றி உள்நுழைந்தவளை ஏறிட்டு பார்க்க நேற்று அடிவாங்கியதின் பலனாக நெற்றியில் பிளாஸ்டர் சகிதம் வந்தவளை அவன் தன் விழியில் விரியம் கூட்டி தீயாக முறைத்திருந்தான்....

அவன் பார்வையில் உள்ளுக்குள் பயப்பந்து உருண்டு அடி வயிற்றை கலங்கடித்த போதும் தனக்கு குடுத்த வேலையை செய்தாள் தனக்கு கிடைக்கும் வெகுமானத்திற்கு ஆசைக் கொண்டு உயிரை விட துனிந்துவிட்டாள்...என்ன தான் பயம் இருந்தாலும் அவன் ஆண்மையிலும் ஆளுமையிலும் தீரா மோகம் அதை தீர்க்கவும் தான் இந்த வேலைக்கு சம்மதம் தெரிவித்ததும் கூட....

அவளிடம் இருந்து பார்வையை திருப்பி தீவிரமாக மடி கணினியில் முல்கியிருந்தவன் காதருகே வந்து குதர்க்கமாக அவனை கிறக்கி தன் வலையில் வீழ்தும் திட்டத்துடன் ஏதோ கூற...அவள் கூறியதை கேட்டவனோ வெறிப்பிடித்தவன் போல் அவளை கீழே தள்ளி நெஞ்சில் கால் வைத்து அழுத்த "பீளிஸ் என்ன விட்டுரு " என கெஞ்ச அவன் "இனி உன்ன பாத்தேன்" என வாக்கியத்தை முழுதாக முடிக்காம் பற்களை விரவி தன் தீவிழியால் பொசுக்கும் முன் வேகமாக பின்னங்கால் பிடரியில் அடிக்க வெளியே ஒடிவந்தவள் தன் காரில் அமர்ந்து யாருக்கோ அழைத்து தன்னாள் முடியாது என கூறி அழைப்பை துண்டித்தவள் இன்னும் கொஞ்ச நேரம் அவன் முன் நின்று இருந்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் சென்று இருக்கும்..

அந்த பக்கம் இதை கேட்ட உருவம் "அதர்ஷாஆஆஆஆ உன்ன விடமாட்டேன் " என தீரா பழி உணர்ச்சியில் முழங்கியது....

தொடரும்.....‌
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
518
150
43
Dindugal
Anjali nilamai rombave pavam pa.
itnha herokitta mattappora ponnu iavathaana. aerkanave kashtappadura, ini ivanum kashtapaduthuvaana. paarthu pathama pannunka.
waiting for next epi
 
  • Like
Reactions: Brindha Murugan

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அட! யார்ரா அது புது கேரக்டர்? 🧐

அதுவும் பழிவாங்கத் துடியாத் துடிக்கிற ஆளு.. வில்லனா இல்ல வில்லியா? 🤨

அஞ்சலிய கீழ விழாம தாங்கினது வர்மாவோ? 🙄

அப்போ கூடிய சீக்கிரமே வர்மா ❤️ அஞ்சலி சந்திப்பு வரும் போலயே.. 🤩

ஒருவேளை அஞ்சலி அவனோட ஆபிஸ்ல வேலை செய்யறாளோ?

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி! 😎


***பதிவு போடுறதுக்கு முன்னாடி ஒரு முறை எழுத்துப்பிழை சரிபார்க்கவும்.
 
  • Like
Reactions: Brindha Murugan

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
48
87
18
Madurai
அட! யார்ரா அது புது கேரக்டர்? 🧐

அதுவும் பழிவாங்கத் துடியாத் துடிக்கிற ஆளு.. வில்லனா இல்ல வில்லியா? 🤨

அஞ்சலிய கீழ விழாம தாங்கினது வர்மாவோ? 🙄

அப்போ கூடிய சீக்கிரமே வர்மா ❤️ அஞ்சலி சந்திப்பு வரும் போலயே.. 🤩

ஒருவேளை அஞ்சலி அவனோட ஆபிஸ்ல வேலை செய்யறாளோ?

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி! 😎


***பதிவு போடுறதுக்கு முன்னாடி ஒரு முறை எழுத்துப்பிழை சரிபார்க்கவும்.
கண்டிப்பா சிஸ்டர் நான் இப்போ தான் எழுத பழகுறேன் அதுனால தான் சின்ன சின்ன மிஸ்டேக்ஸ்...
 
  • Like
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
கண்டிப்பா சிஸ்டர் நான் இப்போ தான் எழுத பழகுறேன் அதுனால தான் சின்ன சின்ன மிஸ்டேக்ஸ்...
Feedback பாசிட்டிவ்வா எடுத்துக்கிட்டதுக்கு சந்தோஷம் 😍

எழுத்துப்பிழை இருந்தா படிக்கிறவங்களுக்கு சுவாரஸ்யம் குறையும் அதனால தான்.
 
  • Like
Reactions: Brindha Murugan

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
48
87
18
Madurai
Feedback பாசிட்டிவ்வா எடுத்துக்கிட்டதுக்கு சந்தோஷம் 😍

எழுத்துப்பிழை இருந்தா படிக்கிறவங்களுக்கு சுவாரஸ்யம் குறையும் அதனால தான்.
Puriyuthu sister kandippa mistake illama poda try pannuren
 

Mayuri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 2, 2024
36
11
8
Bangalore
அருமை 👌
நாயகனும் நாயகியும் ஒரே ட்ராக்ல வந்துட்டாங்க.. 😍
நாயகன் மனசுல அவளுக்கே தெரியாம, அவனைப் பாக்காம ஸ்ட்ராங்கா உட்கார்ந்துட்டா நாயகி! 😎