• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕26

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
48
87
18
Madurai
காலை கதிரவன் தன் அன்னையான‌ நிலாமகளிடம் ஓய்வு எடுக்க கூறி விட்டு‌‌ தன் காதலியான பூமியை பார்க்க துள்ளி குதித்து வந்துவிட்டான் கதிரவன்..பூமி வெட்கத்தில் சிவந்ததில் இவனுக்கும் வெட்கம் வந்து விட்டது போலும் அவனும் மருதாணியாக சிவந்து தன் பொற் கதிர்களால் பூமி தாய்யை மட்டும் கூச செய்யாமல் அனைவரையும் கூச செய்து அன்றைய நாளை தொடங்கி வைத்தான்..


நாட்கள் எந்த ஆர்பாடமும் இன்றி இனிமையாகவே சென்றது...அர்ஷனுக்கும் அஞ்சலிக்கும் நாளுக்கு நாள் காதல் கூடி கொண்டே போனதே தவிர சிறிதும் குறையவில்லை..இப்போது எல்லாம் அவனுக்காக காத்துருப்பது எல்லாம் வாடிக்கையாகி போனது..இருவருக்கும் பேச்சு மற்றும் நீண்ட நெடிய விளக்கம் எல்லாம் தேவையற்றதாய் தோன்றியது..ஆனால் எல்லாம் வேகவேகமாக நடப்பதுதான் அஞ்சலிக்கு சிறிது அச்சுறுத்தியது..இவ்வளவு வேகம் ஒருநாள் சலிப்பு தட்டிவிடும் இல்லையென்றால் தானே உதாசீனம் செய்து விடுவோம் என்ற பயம் தான்..


அதர்ஷன் தேவா வீரிடம் சில விஷயங்கள் கூற அதில் இருவருக்கும் மனம் ஒப்பவில்லை..அண்ணா இது எப்படி சரியா வரும் தப்பா ஆயிடுச்சுனா யாரு என்ன நினைக்கிறாங்கனு யாருக்கு தெரியும் என புரியவைக்க முயல..அவன் தன் முடிவில் உறுதியாக இருந்தான் எனக்கு என் அம்மு மேல நம்பிக்கை இருக்கு அது கண்டிப்பா பொய்யா போகாது என கூற..இருவருக்கும் அதில் மனம் நெகிழ்ந்து போனாலும் சற்று பயமாகவே இருந்தது..


அதர்ஷன் வெளியே கிளம்ப முனையும் போது சாப்பிடலயா சார் என வினவ..எனக்கு டைம் ஆச்சு என போக பட்டென அவன் கை பிடித்து கொஞ்சம் சாப்பிடுங்க காலையில வயிற காயப்போட கூடாது என கூற...வாட்ச்சை பார்த்தவன் சரி என கூற உடனே அவனுக்கு பரிமாற தொடங்கினால்..அவளின் ஒவ்வொரு செயலும் அவன் காயம் கொண்ட இதயத்திற்கு இதம் அளித்தது..அழகான முகனப்புன்கையை இதழின் ஒரம் தவழவிட்ட படி உணவுடன் சேர்த்துக் அவளைவும் பார்வையால் விழுங்க தொடங்கினான்..


அவள் அவனுக்கு பரிமாற அப்போது அங்கே வந்த வீர் அதர்ஷன் கூறியது போல் ஒர் பைலை அவளிடம் கொடுக்க அதர்ஷன் தன்னவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்..இது எதுக்கு அண்ணா என்கிட்ட கொடுக்குறிங்க என கேட்க்க..இல்ல இதுல அண்ணா உன்னைய சைன் போட சொன்னாறு என கூற..உடனே வாங்கி என்ன ஏது என்று எதுவும் படித்து பராக்காம் போட்டு கொடுத்தாள்..அதர்ஷன் கண்ணில் கர்வம் மன்னியது..வீரை நோக்கி என்னவளை நான் அறிவேன் என்னும் அர்த்த பார்வை சிந்தி திரும்பி கொண்டான்...


இவ்வாறு அவளின் அன்பில் திக்குமுக்காடி கொண்டு இருப்பவனை இன்னும் சற்று நேரத்தில் கதற விடுவாள் என்பதை அறியாமல் போனார்கள் இருவரும்..


இங்கே தேவாவுக்கும் அஞ்சனாவுக்கும் அடிக்கடி எதாவது ஒரு மோதல் வந்து கொண்டே இருந்தது..இருவரும் முதலில் சினேகமாக சிரிப்பதி போய் இப்போது பார்த்தாலே முட்டி கொள்ளும் நிலையில் இருந்தனர்.. இவர்களின் இந்த சிறுப் பிள்ளை தனமான சண்டை கூட அழகாகவே இருந்தது..


தேவாவுக்கு அலுவலகத்தில் பெரிய வேலை ஒன்றும் இல்லை..அதர்ஷனுக்கு பாதுகாப்பாக இருப்பவன் அதனுடனே பைல்ஸ் செக் செய்து அதர்ஷனிடம் ஒப்படைப்பான் அவ்வளவே அவனுக்கு வேலை..இதில் பெரும்பாலும் மாட்டி கொள்வது அஞ்சனா தான்..


தேவா உள்நுழைவும் போது வேகவேகமாக வந்த அஞ்சனா அவனை இடித்து கீழே விழப்போக அவளை லாவகமாக ஏந்த போனவனின் கை தெரியாமல் பெண்மையின் மென்மையை தீண்டிவிட அவள் படக்கென அவன் கையில் இருந்து விலகி கண்ணில் வழியும் சிறு கண்ணீருடன் ஒடிவிட்டாள்..


எதிர்பாராமல் நிகழ்ந்த‌ நிகழ்வில் இருவரும் சதம்பித்து நினறனர்.. அவனுக்கு சங்கடமாய் இருந்தது எப்போதும் தனக்கு சரிக்கு சமமாக மல்லுக்கு நிற்பவள் இன்று கண்கள் கலங்கி பார்த்த அந்த ஒற்றை‌ பார்வை அவனை ஏதோ செய்தது..


இங்கே நேராக ரெஸ்ட்ரூம் ஒடி வந்தவளுக்கு கண்களில் கண்ணீர் போல போலவென கொட்டியது..அவன் தெரிந்து செய்யவில்லை தான் அதை அவளும் அறிவாள்.. ஆனால் பெற்ற தாயிடமே காட்ட தயங்கும் மென்மையில் அவன் கை தீண்டியது தான் அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.. ஒருவாறு தன்னை சமன் செய்து கொண்டு அன்றைக்கான பணியை தொடங்கினாள்..தேவாவை அதன் பிறகு பார்ப்பதை தவிர்த்தாள்..தேவா மன்னிப்பு கேட்க எவ்வளவு முயன்றும் அது நடக்கவில்லை...


செல்வா தேவா மற்றும் இன்னும் ஒரு முகம் அறியா நயவஞ்சக நரியும் தந்திரமாக திட்டம் தீட்டியது..அஞ்சலியை எப்படி கண்டு பிடிப்பது என்றுதான் இருவருக்கும் விளங்கவில்லை அது ஏதோ புரியாத புதிர் போல் தோன்றியது ஆனால் இது எதற்கும் தனக்கு சம்மந்தம் இல்லை என்பது போல் கால்களை ஆட்டி அமர்ந்து இருந்தான் தேவா...எங்கே வைத்திருக்கிறான் என்று ஒன்னும் புரியவில்லை என இவர்கள் அல்லாட அவனோ தேனாவட்டாக அமர்ந்து அதுலாம் ஈஸி தான் நீங்க மனசு வச்சா என பொடி வைத்து பேச இருவரும் அவனை புரியாத பார்வை பார்த்தனர் ஏனினில் இதை கண்டறிய சென்றவர்களே திரும்பிவரவில்லை அப்படியே வந்தாலும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்ற பதில் தான் வந்தது..ஆனால் இவன் சர்வ சாதாரணமாக கூறியது தான் குழப்பமாக இருந்தது..அப்போ அன்னைக்கு அஞ்சலி எங்க இருக்கானு தெரியல சொன்ன என வினவ..ஆமா சொன்னேன் அப்போ கிடைக்காத ஒன்னு இப்போ கிடைச்சுயிருக்கு என விவரம் கூற இருவர் கண்ணும் பளபளத்தது..


தேவா சும்மா இல்லாமல் வீரிடம் இது அனைத்தும் கூற அவன் மயங்கியே விட்டான் ஐயா என்பது போல் மயங்கி விட்டான்..இவன் வேற என சலித்து கொண்டு அவனை எழுப்பி விட..அவன் ஏழுந்ததும் பொறிய தொடங்கிவிட்டான்..நீ என்ன பன்னிட்டு இருக்கனு தெரியுதா இது பச்சை துரோகம் இது உன்கிட்ட இருந்து எதிர்பார்கல நீ ஆரம்பத்துல சொன்னது எல்லாம் சும்மா விளையாட்டுக்குனு நினச்சேன்..ஆனா இவ்ளோ வன்மம் நான் எதிர்பார்க்கல என இடைவிடாமல் பொறிய..டேய் கொஞ்சம் நிறுத்து என அவன் ஏதோ கூற மறுபடியும் மயங்கிவிட்டான்..தேவா தான் தலையில் அடித்து கொண்டான் இவன வச்சு என்ன பன்ன என நொந்து கொண்டு அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டான்...


இரவு மணி ஒன்பதை நெருங்க அதர்ஷன் வீட்டுக்கு வந்து விட்டான் எப்போதும் போல் அவன் கண்கள் அஞ்சலியை தேட ஆனால் அவளை காணவில்லை ஒரு வேலை அவள் அறையில் இருப்பாள் என என்னிக்கொன்டு தன்னை சுத்தபடுத்திக் கொள்ள சென்று விட்டான்..மனதில் ஓர் இனம் புரியா தாக்கம் இன்னதென்று பறித்தறிய முடியாமல் தவித்தான் அதர்ஷன்..


தொடரும்...

 
  • Love
Reactions: Kameswari