• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕26

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
84
89
18
Madurai
பூமி கதிரவனை தேடி அளைந்து முகம் கருத்து இருந்ததின் தாக்கமாக பூவி எங்கும்‌ படர்ந்து இருந்த கருமை கதிரவன் வந்தாலே ஆகும் என்ற பூமியின் பிடிவாதத்தை அப்பட்டமாக காட்டியது...

பூமியின் பிடிவாதத்தினாலோ அல்லது தன் வரவே அண்டகளை ஒளிறச்செய்யும் என்பதை உணர்ந்து தன் கடமையாற்ற வந்தானோ தெரியாது...

தவறாமல் கடமையாற்ற வந்தவனின் பொற்கரத்தால் ஒளிப்பெற்று மிளிர்ந்த பூவியவளின் தோற்றம் கதிரவனையும் நானமுற செய்ததோ பொற்கதிரிகளில் மருதாணி நிறத்தின் சாயல் கொண்டு ஆரஞ்சு நிறமாக ஜொலித்து நின்றான் கதிரவன்...


இவ்வாறு கவிஞனின் பார்வைக்கு கவியாகவும் மாற்றவர்களின் பார்வைக்கு எப்போதும் போலான விடியலாகவும் அன்றைய நாள் அமோகமாக தொடங்கியிருந்தது...


ஒவ்வொரு நாட்களும் தன்னுள் சுவாரசியத்தை பொதித்து கொண்டு விடிளை வளங்குவதில் இங்கு ஒரு ஜோடி காதல் கிளிகள் பார்வையிலேயே செல்லமாக சீண்டி கொள்வதும் பார்வையிலேயே குட்டியாக ஊடல்‌ நடத்திவிட்டு பார்வையிலேயே அனைத்து ஆறுதல் படுத்தும் வித்தகளை எல்லாம் பயின்று கொண்டுயிருந்ததில் அடுத்த நாள் என்ன வித்தையை கற்று கொடுக்குமோ என்ற ஆரவம் கொண்டு அவர்களே அடுத்த அடுத்த நாட்களை வறவேற்க்க காதிருப்பது வளக்கமாகியதில் நாட்களின் போக்கு மற்றவர்களுக்கு செவிங் கம் போல் இழுத்து அடித்தாலும் இவர்களுக்கு 24 மணி நேரம் போதவே இல்லை என்பதே உண்மை...

காதல் இருவரினுளும் தழுப்பியதில் சில விஷயங்களை விருப்பியே செய்தாலும் சாமளிக்க வேண்டி முன்னிருத்தபடும் பசிலை தனமான காரங்கள் எல்லாம் இங்கே தேவையற்று போனதோடு மௌனத்தின் மொழியை பார்வையே விளக்கிவிட வார்த்தைகளுக்கும் பெரும்பாலும் தேவைற்று போனபோதும் புது காதலர்களாய் தோள் உரச அமர்ந்து கொண்டு கைப்பற்றி இனிய விஷயங்களோடும் செல்ல ஏக்கங்களை காதோடு முனுமுனுத்து அவளை வெட்கத்தில் சிவக்க வைத்து கேட்ட விஷயங்களை ஒன்றும் பாதியுமாக பெற்ற கொள்ளும் ஆசை காதலோடு அரும்புவிட்ட போதும் ஏனோ அதை உறுகாயாய் தொட்டு கொண்டு பார்வையோடு நிறுத்தி கொண்ட மாயம் யாதோ...


எல்லாமே சரியாக தண்டவளாத்தில் பயணிக்கும் ரயிலாக அடுத்து அடுத்து நகழ்ந்த போதும் சில விஷயங்கள் அடுத்து நகர்ந்து போக பாதையின்றி தடைப்பட்டு நிற்பதாக இருவரின் நெஞ்சோடு நெருடிய போதும் இவ்வளவு நெருங்கிய பின்னும் மெல்லிய திறையாக அவர்களின் இடையே விரிந்து இருக்கும் படலத்தின் சாராம்சத்தை உணர தவறியது விதியின் செயலோ....

அஞ்சலிக்கு ஏனோ நெஞ்சோடு ஊடுறுவிய பயம் பல நேரங்களில் சந்தோஷத்தின் ஓங்கிய ஆதிக்கத்தில் அமிழ்ந்து போவதும் பின் பயமே ஓங்கி நிற்பதில் துவண்டு போதுமாக இருப்பவளுக்கு பாயத்தின் அம்சங்களை விரித்து பார்த்து தீர்வு காண தெரியாமல் போனதில் அனைத்தும் வேகவேகமாக நகர்ந்து செல்வதின் தாக்கம் தான் இந்த பாயம் என அவளே ஒன்றை யூகித்து கொண்டு தனக்கு தானே ஆறுதல் கூறி கொண்ட போதும் துரும்பான நெருடல் மனதோடு ஊடுறுவதை தடுக்க முடியாமல் தவித்து போனாள் பாவையவள்...


அஞ்சலி துவண்டு விழும் நேரம் அவளுக்கு பற்றுகோளாக எவறின் இடையூரும் இன்றி தானே முன் நிற்க வேண்டும் என என்னிய அதர்ஷன் ஆழ்ந்த யோசனைக்கு பின் ஒரு முடிவு எடுத்தவனாக அதனை செயலாற்றும் பணியில் இறங்கி இருந்தான் அவன்...

அதனை செயலாற்றும் முதல் கட்டமாக தேவா வீருடன் பகிர்ந்து கொண்டவன் அவர்களின் ஆலோசனைகளையோ கருத்துக்களையோ எதிர்பார்த்துருக்கவில்லை என்பதை விட அவர்களின் கருத்துக்களை முன்பே யூகித்தவன் அவர்களின் கருத்துக்களை எல்லாம்‌ புறம் தள்ளி விட்டு கடைமையை செய் என கட்டளையிட்டிருந்தான் அதர்ஷன் வர்மா...

அவன் முடிவில் நிலையாக நின்றவனின் பிடிவாதம்‌ தளராது என்பதை உணர்ந்து இருந்தாலும் ஒருவேலை இவனின் கோட்டில் இருந்து அஞ்சலியின் அசை கனவுகள் வேறுப்பட்டு இருந்தால் அதனால் பாதிப்படைய போது இருவரும் தானே பாரபட்சம் இன்றி அதர்ஷனும் வேண்டும் அஞ்சலியும் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இவனின் இந்த முடிவு சக்கலாக அமைந்து இருவரில் ஒருவர் என்று மட்டுமே என்று தேர்வு செய்ய வைக்கும் சூழல் அமையுமோ என நெஞ்சோடு பரவிய பயத்தில்
அண்ணா இது எப்படி சரியா வரும் தப்பா ஆயிடுச்சுனா என்ன பண்ணுறது அண்ணா..யாரு என்ன நினைக்கிறாங்கனு யாருக்கு தெரியும் கொஞ்சம் இதை பத்தி அஞ்சலிக்கிட்டையும் என வார்த்தையை முடிக்காது இழுத்தவனின் தோள் தட்டி...

நீ பயப்புடுற மாதிரி எதுவும் நடக்காது எனக்கு என் அம்மு மேல முழுசா நம்பிகை இருக்க என்றவனின் அழுத்தம் திருத்தமான சொல்லுக்கு பின் இருவருக்கும் மறுப்பை தவிர்த்து சரி என தலை அசைப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை..


மனதில் பரவிய அச்சத்தை மீறி அதர்ஷன் அஞ்சலியின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்ந்து கொண்டவர்கள் மனம் நெழ்ந்து போனது மறுக்க முடியாத உண்மை தான்...

அனிவகுத்து நின்ற அழுவல் அதர்ஷனை துரிதப்படுத்தியதில் காலை உணவையும் தவிர்த்து ஒட வேண்டிய கட்டாயத்தோடு வேகவேகமாக படியில் இருந்து இறங்கி வந்தவன் வாசலை அடையும் அவன் கரங்களை பற்றி தடுத்திருந்தாள் அஞ்சலி...

தன் கையை பிடித்த கரங்களின் சொந்தகாரி யார் என்பதை ஸ்பரிசத்திலேயே உணர்ந்து கொண்டவன் மீசையினுள் ஒளிந்த சிரிப்போடு திரும்பி உருவம் உயர்த்தி என்ன வேணும் என்பது போல் பார்த்து நின்றவனின் பார்வையில் தடுமாறியவள் பட்டென தலையை தாழ்ந்து கொண்டவளுக்கு அவனின் கையை பிடிக்கும் போது வராத தடுமாற்றம் அவனின் விழி வீச்சில் தடுமாற்றம் நாலாபுறமும் அனைக்கட்டி நானம் கொள்ள செய்ததில் டையிங் டெபில் நோக்கி கைகாட்டி சா..சாப்பிடமா போ..போறிங்க என இரண்டு வார்த்தையை நான்கு ஐந்து வார்த்தை போல் இழுத்து கேள்வியாக பார்த்தவளின் பாவம் மேற்கொண்டு அவனை சிரிக்க தூண்டிய போதும் நாவிடுக்கில் கமுக்கமாக மறைத்து கொண்டு அவளை சீண்டும் பொருட்டு ஹான் என்னது என்றவனிடம்...

காலையில பிரேக்பாஷ்ட்ட மட்டும் ஸ்கிப் பண்ணவே கூடாது வயிறு பிரச்சனை வரும் என்றவள் அவன் நக்கலை உணராது அவனுக்கு புரியவில்லையோ என்ற என்னதில் தன் தயக்கத்தை மறைத்து நீட்டி கூறியவளை கண்டு இப்போது தாரளமாகவே இதழை விரித்தவன் வாட்ச்சை திருப்பி பார்த்து விட்டு டைம் இல்லையே என்றவனிடம்..

பரவாயில்லை இரண்டு வாய் மட்டும் பீளிஸ் என கண்கள் சுருக்கி கெஞ்சியவளின் பாவனை அவனை மறுப்பின்றி தலை அசைக்க வைத்தது..

அவன் தலை அசைத்த மறுநொடி நேரத்தை விரயமாக்காது தட்டு வைத்து கொஞ்சமாக பரிமாறி பக்கத்திலேயே நின்று கொண்டு கட்டிய மனைவி போல் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என கூறியே அவனை வியிறார உண்ண வைத்து கொண்டியிருந்தவளை பார்வையால் விழுங்கியவனுக்கு தொண்டைக்குள் இறங்கும் சாப்பாட்டின் அளவும் நகறகும் நேரமும் அப்போதைக்கு அவன் மூளையின் கட்டகடைசி பக்கத்தில் சொருகி கொண்டது..‌


அதர்ஷனின் பின்னோடு ஒடி வந்த வீரையும் விட்டு வைக்காது உணவு பரிமறியவள் இருவரையும் அனைக்கட்டி சாப்பிட வைத்த பின் திருப்தியாக அந்த இடத்தை விட்டு நகரும் முன் அஞ்சலி ஒரு நிமிஷம் என தடுத்த வீர் அதர்ஷனை ஓர் பார்வை பார்த்துவிட்டு ஒரு பைலை அவள் கையில் தினித்திருந்தான்...

இது எதுக்கு அண்ணா என் கையில கொடுக்குறிங்க...

இதுலை இருக்க பேப்பர்ஸ்ல உன்கிட்ட ஸைன் வாங்க சொல்லி அண்ணா சொன்னாரு அதான் என்று அவன் தொடங்கிய வார்த்தையை முடித்து வைக்கவும் அதர்ஷன் புறம் தன் பார்வையை திருப்பிருந்தாள் அவள்..

சாப்பிட்டு அப்போது தான் கை கழுவி வந்தவன் அஞ்சலி கையில் பைலோடு தன்னை பார்த்திருப்பதை பார்த்தவன் இமை மூடி திறந்து தலை அசைக்கவும் மறுப்பேச்சின்றி கையெழுத்திட்டு வீரிடம் நீட்டியதை பார்த்த அதர்ஷனோ தன்னவள் இவள் என்று கர்வத்தோடு பார்த்து வைக்க வீரோ ஆச்சிரியமாக பார்த்து வைத்தான்...

உணவருந்த வைத்து வயிற்றை நிறத்தவள் அவன் கர்வம் கொள்ளும்படியான செயல் செய்து மனதை இதமாக வருடி நிறைய செய்திருந்ததில் ஓர் மோகன புன்னகையை இதழில் வழியவிட்டு குறும்பு அவிழுப்பு கண்களோடு அவளை பார்த்து அழகாக கண் சிமிட்டி விடைப்பெற்று தன்னை இழுத்து கொள்ளும் அழுவலை கவனிக்க சென்றான் அதர்ஷன் வர்மா...


காலையில் சிரிப்பு ததும்ப செல்பவனின் மனநிலையை மாலையில் முற்றிலும் மாற்றி அமைத்து பிதியில் நிறுத்துவாள் என்பதை அறியாதவன் சிரிப்பினோடே விடைப்பெற்றான்..



ஏனோ அன்று சிக்னலின் பக்கத்தில் நின்று மோதி கொண்டதில் இருந்து தேவாவுக்கும் அஞ்சனாவுக்கும் மொதிக்கொள்வதே வழக்கமாகி போனது எங்கேனும் பார்த்தாள் தெரிந்தவர்கள் என்ற முறைப்படி சாதாரன ஒரிரு வார்த்தையும் சினேக சிரிப்பினோடும் நகர்ந்த காலங்கள் போய் இப்போது எல்லாம் முறைத்த பார்வையும் தோள்பட்டையில் தாடை இடிக்க சிலுப்பி கொண்டு செல்வதும் வழக்கமாகி இருந்தது..



அதர்ஷனுக்கு எப்போதும் பாதுகாவலனாக அவனின் நிழல் போல் அவனை சுற்றிய பத்து பதினைந்து அடிக்குள் நிற்பவனின் முதன்மை வேலை அதர்ஷனை பாதுக்காப்பதே என்ற விஷயம் அப்பிஸில் தெரிந்திருக்கவில்லை...

வீரைப்போல் அலுவலக வேலையை கவனித்து கொள்வதில் அத்தனை நாட்டம் இல்லாதவனுக்கு காவலன் பணி மீது தான் அதிக நாட்டம் ஆனால் காவலன் பதவியில் தான் பணி அமர்ந்தால் அதர்ஷனை விலகும் நிலை வருமே என அதை விரும்பாதவன் அதர்ஷனின் நிழலாக அமர்ந்துவிட்டான் அதன்படி அலுவலகத்தை பொருத்த வரை ஆப்பீஸ் பாயாக இருப்பவன் அந்த முறையில் அனைவருக்கும் வேலையில் சிறிதாக உதவி புரிபவனை காபி கொண்டு வாங்க ஜெராக்ஸ் எடுத்து கொடுங்க கொஞ்சம் இந்த பைல்ஸை வீர் சார் கிட்ட வச்சுருங்க என வேலையாக சொல்லியே அவனை குடைச்சல் கொடுக்கும் அஞ்சனாவை பார்த்தாலே முறைத்து கொண்டு திரிபவன் இப்போழுது நன்றாகவே முறைத்து கொண்டு போவது தவிர்க்க முடியாத வழக்கமாகி போனது...

எதாரத்தமாக தேவா வீரின் அறையில் இருந்து திறந்து கொண்டு வெளிவர முனைந்த அதே சமயம் திறந்து கொண்டு உள்நுழை போன அஞ்சனாவே முந்தி கொண்டு அந்த பக்கமாக தேவாக இழுத்ததில் தடுமாறி விழப்போனவள் விழுந்து விடாது டக்கென எட்டி படித்ததில் அவன் கரங்கள் தெரியாமல் பெண்மையின் மென்மையில் அழுந்த தீண்டிவிட்டதில் ஒரு நொடி இருவரும் சதம்பித்து விட்டபோதும் பட்டென விலகி கொண்டு நின்றனர்...

எப்போதும் தனக்கு சரிக்கு சமமாக சிலிர்த்து கொண்டு சண்டைக்கு நிற்பவள் இப்போது கண்கள் கலங்க தன்னை ஏறிட்டு பார்த்த ஒற்றை பார்வை அவன் மனதை பாதிப்பிற்குள்ளாக்கி வலிக்க செய்தது...






இங்கே நேராக ரெஸ்ட்ரூமிற்கு ஒடி அஞ்சனா தன் கண்களில் கசிந்த கண்ணீரை துடைத்து கொண்டபோதும் மேலும் பெருகிய கண்ணீரோடு நின்றவளுக்கு ஏனோ அவன் தெரிந்து செய்யவில்லை என்பதை அறிந்து கொண்ட போதும் நடந்த சம்பவத்தை ஜிரனித்து கொள்ளவே முடியவில்லை....ஒரு வயதுக்கு மேல் பெற்றவளிடம் கூட அவசிய நேரங்களில் காட்ட தயங்கும் இடத்தை ஒரு அண்ணிய ஆடவன் தீண்டியதில் உள்ளுற பரவிய அச்சம் கண்ணீராக உருமாறி வழிந்து கன்னத்தை நனைத்தது...

ஒரு நிலைக்கு மேல் தன்ன சமன் செய்து கொண்டு வேலையை தொடர்ந்தவள் மன்னிப்பு கோர வந்த தேவாவை நாசுக்காக தவிர்த்து சற்று முன்னதாகவே வீட்டிற்கு கிளம்பியிருந்தாள் அஞ்சனா...


செல்வா தேவா மற்றும் இன்னும் ஒரு முகம் அறியா நயவஞ்சக நரியும் கூட்டாக அமர்ந்து அதர்ஷனையும் அஞ்சலியியையும் தரைமட்டமாக்க தந்திரமாக தீட்டம் தீட்ட தொடங்கி இருந்தனர்...

அதர்ஷன் மேல் மட்டுமே குறியாக இருந்தவன் இப்போது அஞ்சலியை பகடையாக மாற்றி அதர்ஷனை வீழ்த்தும் தீட்டத்தின் முதல் படிக்கே முட்டுகட்டையாக அஞ்சலியை அதர்ஷன் எங்கு பாதுகாப்பாக வைத்திருக்கிறான் என்பது புதிராக இருப்பதில் ஏக கடுப்பும் வன்மமும் அவர்களுக்கு...


அவர்களின் பேச்சில் கலந்து கொள்ளாது தேனாவட்டாக அமர்ந்து இருந்த தேவாவின் பக்கம் திரும்பிய செல்வா அவனை முறைத்ததில் அசட்டு தனமாக தலை அசைத்து சாரி பாஸ் என்றவன் பின்ன நேரகா அமர்ந்து கொண்டவன் பாஸ் ஏன் குழப்பம் எல்லாம் ஈஸி தான் பாஸ் நீங்க மனசு வச்சா என பொடி வைத்து பேசியவனை மற்ற இருவரும் புரியாத பார்வை பார்த்தனர்....

இத்தனை நாள் புதிராக மண்டைக்குள் உசி ஏற்றும் குடைச்சலோடு அவளை கண்டறிய குழம்பியவர்களுள் இவனும் ஒருவன் தானே ஆனால் இப்போது அவன் தேனாவட்டாக முடியும் என்பதில் மிஞ்சிய குழப்பத்தோடு பார்த்து வைத்தனர் அவ்விருவர்...


அப்போ அன்னைக்கு அஞ்சலி எங்க இருக்கானு தெரியல சொன்ன

ஆமா சொன்னேன் அப்போ கிடைக்காத ஒன்னு இப்போ கிடைச்சுயிருக்கு என்றவன் மேலும் கூறி விபரத்தை கேட்ட இருவரின் கண்களும் வன்மத்தில் பளபளத்தது..


இங்கு நிகழ்ந்த உரையாடல்களை வீர தீர சாகசமாக எழுத்து பிறலாமல் வீரிடம் ஒப்பித்து வைத்ததில் பாவம் பிஞ்சு மனம் படைத்த வீரின் நெஞ்சம் பஞ்சு பறக்க டப் வெடித்து சில நேரம் வேலை நிறுத்தம் செய்ததில் மயங்கி சரிந்திருந்தான்...


மயங்கியவனை சலித்து கொண்டு தண்ணீர் தெளித்து தெளியவைத்து அமர்த்திய தேவா பேய் அறைந்ததை போல் அமர்ந்திருந்தவனை வேகமாக உலுக்கியதில் சுயம் மீண்டவன் அதன் பின் திறந்த வாயை மூடிக்கொள்ள பல நிமிடங்கள் தேவைப்பட்டது...

நீ என்ன பன்னிட்டு இருக்கனு புரிச்சு தான் பண்ணுறியா இல்ல புத்தி மழுங்கி போச்சா உனக்கு... இது சரி இல்லை தேவா இது பச்சை துரோகம் இத்தோட விட்டுரு...இவ்வளவு வன்மம் உனக்குள் வர அளவுக்கு அப்பிடி யாரும் எதுவும் பண்ணலையே அப்பறம் ஏன் நீ இப்படி ஆகிட்ட..மஹூம் இனி நீ இப்படி பண்ண நா அனுமதிக்க போறது இல்லை எல்லா உண்மையையும் அண்ணாகிட்ட சொல்லுறேன் என இடைவிடாது பொறுமியவனை கண்டு தலையில் அடித்து கொண்டவன்..

டேய் போதும் கொஞ்சம் நிறுத்து என்று கூறி அவனின் பேச்சை இடைவெட்டி நிறுத்தியவன் அடுத்து கூறி செய்தியில் பாவம் இரண்டாவது முறையாக நெஞ்சு வெடிக்க மயங்கி போயிருந்த வீரை பார்த்து தலையில் அடித்து கொண்டவன் டேய் மயக்கம் தெளிஞ்ச அப்பறம் ரூம்ல போய் படு சரியா என்றவன் அவன் அறைக்கு சென்று அடைந்திருந்தான்...




இரவு மணி ஒன்பதை நெருங்க வீட்டை வந்தடைந்த அதர்ஷன் கண்கள் வழக்கம் போல் அஞ்சலியை தேடி நின்ற இடத்தில் இருந்தே வீட்டை அலசியும் அவள் தென்படாததில் ஒருவேலை அவள் அறையில் இருப்பாள் என நினைத்து கொண்டு தன் அறையில் புகுந்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு அஞ்சலியின் தரிசனத்தை வேண்டிய மனதின் கட்டுப்பாட்டிற்கு இனங்க வந்து ஹாலில் அமர்ந்து பல நேரங்கள் கடந்த பின்னும் தனக்கு தரிசனம் அளிக்காது போக்கு காட்டியவளை என்னி ஓர் இனம் புரியா தாக்கம் நெஞ்சோடு பரவியதில் காரணம் இன்றி தவித்தான் அதர்ஷன்..


தொடரும்...
 
Last edited:
  • Love
Reactions: Kameswari