• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕27

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
84
89
18
Madurai
அதீத சொர்வோடு வீட்டை வந்தடைந்தவனின் கண்கள் வழக்க செயலாக அஞ்சலியை தேடி... நின்ற இடத்தில் இருந்தே வீட்டை அலசியவனின் கண்களுக்கு சிக்காது போன பாவையின் முகத்தை காண மனதில் ஆரவம் தழும்பினாலும் அதீத சோர்வில் உடல் சற்று புத்துணர்ச்சியை தேடியது...

ஒரு குட்டி‌ குலியல் கொஞ்சம் தன்னை புத்துணர்ச்சி அடைய செய்யும் என்று நினைத்தவன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டு அலுப்பு தீர குளித்து முடித்த பின் கண்கள் சொக்கி தூக்கத்திற்கு செல்ல துடித்த போதும் மனம் அஞ்சலியின் தரிசனம் காணது காரியம் ஆகாது என்பதை போல் இமையின் நடுவே ஆணியை நிறுத்தி வைத்தது போல் ஏனோ சொக்கி கொண்டு வந்த கண்களில் பொட்டளவும் உறக்கம் தழுவாது போனதில் மனதின் கட்டுப்பாட்டிற்கு இனங்க அஞ்சலியின் தரிசனம் தேடி ஹாலில் வந்து அமர்ந்திருந்தான் அவன்...

நேரங்கள் பல நகர்ந்த‌ பின்னும் கூட இன்னும் தன் பூ முகம் காட்டாது இருந்தவளின் செயல் சாதரனமாக தோன்றாது அன்றி ஏதோ விபரிதம் என்னும்படி அவன் உள் மனம் உணர்த்தியதில் காரணம் இன்றி தவித்து போனான் அதர்ஷன் வர்மா...

அஞ்சலியின் அறைக்கு செல்வதில் தயக்கம் எல்லாம் இல்லை அவனுக்கு கட்டிய கனவன் போல் சாதரனமாக அவள் அறையில் நுழைந்து கொண்ட நாட்களும் உண்டே ஆனால் அவளாக கீழிறங்கி வரும் போது எதர்ச்சியாக அவள் பார்வை வட்டத்திற்குள் அடங்கும் அதர்ஷனின் முகத்தை கண்டதும் ஆனந்ததில் விரிந்த கண்களோடும் இலவச இனைப்பாக தேகத்தில் ஊடுறும் நானத்தில் சாதரன உடல் மொழி தடுமாற மெதுவாக நடந்து வருபவளின் அத்தனை அசைவுகளையும் சினுங்கும் மனிகளை போல் ஒன்றினைத்து மனதோடு கொர்த்து கொண்டு அதன் சினுங்களில் சிலிர்த்து போகும் அவனின் டேஷ்ட் கொஞ்சம் அனைவரில் இருந்து வேறுப்பட்டது தான்...

இவ்வாறு ஒரு தரிசனம் வேண்டித்தானே யாரும் அற்ற ஹாலில் தனியாக கத்தி கொண்டிருந்த தொலைக்காட்ச்சிக்கு துனையாக துனைசேர்ந்து கொண்டது...ஆனால் நேரங்கள் கடந்தும் கானாத அவள் முகத்தை தேடி மனதோடு ஆரவம் உந்தினாலோ அல்லது செல்ல திட்டுகள் தொன்றிலோ அது இயல்பு வரிசையில் இடம்பிடிக்கும் ஆனால் நெஞ்சோடு பரவும் இந்த பதற்றமும் காய்ந்த இலைகளில் காலை பதிக்கும் போது சரசரக்கும் படியான அங்களாய்ப்பும் எதற்கு என மனம் உணர்த்திய செய்தியை பிரித்து பார்த்து பொருள் உணர பொறுமையின்றி அஞ்சலியின் அறையை அடைந்திருந்தான்...

ஆட்கள் எவறும் இன்றி உயிற்ற பொருளோடு தன்னை வரவேற்ற காலி அறையை கண்டு புருவம் சுருங்கியவனின் நெஞ்சோடு பெருகி வழிந்த சஞ்சலங்களில் இதயக்கூட்டின் உள்ளே எதோ கட்டமைப்பின் விதி மாறி உருகுலைந்து போன உணர்வு...

மூளை அடுத்து அவளை தேடும் இடங்களை பட்டியலிட்டு தேட அவனை துரிதப்படுத்த மனமோ பச்சிளம் பிள்ளையாக அஞ்சலி மடியின் கதகதப்பில் சோர்வையும் இதயத்தில் படலமாய் அப்பிகிடந்த சஞ்சலங்களை ஏறிந்து விட்டு ஒடுங்கி கொள்ள பரபரத்தது..



கால்கள் அதன் பாட்டிற்கு மூளையின் கட்டுப்பாட்டிற்கு இனங்க அவுட் ஹவுஸில் அமைந்திருந்த சாந்தியின்‌ வீடு மற்றும்‌ இருட்டை முதன்மையாக கொண்ட போதும் நிலவின்‌ துனை நாடியதில் கொஞ்சமாக‌ வெளிச்சம் கொண்டிருந்த தோட்டத்து பக்கதிலும் அவளை தேடி அளைந்தவனுக்கு அவள் எங்குமே தென்படாததில் தலையை பிய்த்து கொள்ளாத குறையாக தவித்து போனான்...

அளைப்புறும்‌ நெஞ்சுக்கு இதமாக‌ அவளை இறுக்கி தழுவி இதம் தேட அள்ளாடி நின்றவனின் கண்ணாட்டியோ அவனுக்கு இதம் அளிக்க மறுத்து இதய தாளத்தை எகிற வைத்து எங்கோ மறைந்திருப்பதாய்...

அவளை எங்கும் காணததில் நெஞ்சோடு வழுத்து போன நெருடல் அஞ்சலி என்ற அவளின் பெயரை மட்டும் சீகரமாக எழுப்பி சிந்தையை மறைத்ததில் அடுத்து என்ன என யோசிக்கும் திறனை இழந்து ஹால் ஷோப்பாவில் அமர்ந்திருந்தான் அவன்...

சில மணித்துளிகள் பனித்துளியாக கறைந்து விட்ட போதும் நிலை மாறாது அமர்திருந்தவனை தன் அறையில் தண்ணீர் இல்லாததில் வெளியே எடுக்க வந்த வீர் அங்கு ஷோப்பாவில் வினோத பாவத்தோடு இருந்தவனை நெருங்கி அண்ணா என்னாச்சு ஏன் இந்த நேரம் இங்க உக்காந்து இருக்கீங்க என்றவனின் கேள்வியில் சற்றும் தெளிந்தவன் அவனை பார்த்து என் அம்மு எங்க வீர் என்றவனை வினோதமாக பார்த்தவன்..

அவ அவளோட ரூம்ல தான் இருப்பா அண்ணா என்ற அவன் கூறியதற்கு செவி சாய்க்காதவன் போல் நிலை மாறாது இருப்பவனை பார்த்து ஏதோ தோன்ற புருவம் சுருக்கி யோசித்தவனுக்கு உள்ளுற கிளம்பிய பதற்றத்தில் வேகமாக அஞ்சலி அறையை அடைந்து அவளை பார்க்க குறுகுறுத்து நின்றவனின் பரபரப்பு தோல்வியில் முடிந்ததில் நேராக தேவாவின் அறையை அடைந்து அவன் கழுத்தை இறுக்க சட்டையை பிடித்திருந்தான்...

வீர் தன் சட்டையை இறுக்கி கொண்டு கோப முகமாக நிற்பதை கண்டு என்னாச்சு ஏன் நைட் நேரம் இங்க வந்து இப்படி வியர்டா பிஹேவ் பண்ணுற என்றவன் தன் சட்டையை இறுக்கிய அவன் கரங்களை தளர்த்த முயல அவனோ இன்னும் இறுக்கி அஞ்சலி காணோம் டா அவ எங்க என்று கேள்யாக உறுமியவனை புரியாது பார்த்தவன் அவ அவளோட ரூம்ல தான இருப்பா என்றவனை முறைத்து அவளை எங்கையும் மறைச்சு வச்சுருக்கியா சொல்லி தொல என்றவனை பைத்தியமா இவன் என்பது போல் பார்த்து வைத்தவன் ஏற்கனவே அவனிடம் தன் தீட்டம் அனைத்தையும் விளக்கிய பின் இவனின் இத்தகைய கேள்வி பசிலை தனமாக தொன்றியதோடு சிறு கோபத்தையும் முகிழ செய்ததது...


தேவாவிற்கும் பதட்டம் தொற்றி கொள்ளமால் இல்லை ஆனால் நிமிடத்திற்கு ஒரு முறை தன்னை சந்தேக கண்களோடு வட்டமடிக்கும் வீரின் விழிகளை கண்டு சுறுசுறுவென கோவம் வந்தாலும் அதை வெளிக்காட்ட இது நேரம் இல்லை என வீருடன் சேர்ந்து அவளை தேடிக்கொண்டிருந்தான் அவன்...

வீட்டை அலசி தேடியவர்கள் எவர் கண்களுக்கும் சிக்காத பாவையவளை நினைத்து எல்லொரும் பதற்றம் கொண்டார்கள் என்றால் அதர்ஷனோ உருகுலைந்து அமர்ந்திருந்தான்.. தன் பாதுகாப்பின் வட்டத்திற்குள் அடங்கி போகும் அஞ்சலியை சிறு துரும்பும் தீண்ட முடியாது என மார்த்தட்டி மமதையில் திரிந்த ஆண்மையில் கர்வத்தை அடியோடு சரிப்பதாய் இந்த நிகழ்வு...

வீட்டை சுற்றி பணி அமர்த்தி இருந்த காட்ஸை அழைத்த வீர் மற்றும் தேவ் விசாரித்ததை தொடர்ந்து அவர்கள் நாங்கள் யாரும் அவளை பார்க்கவில்லை என்ற கூறிய தொனி பவ்வியமாக இருந்த போதும் அதனை கேட்ட ஒருவனுக்கோ அனல் குமிழோடு போங்கி வரும் பாலைப்போல் சுருக்கென உச்சிமண்டையை தொட்ட கோபத்தோடு சினமாக நின்றவன்... உங்களை என்ன புடுங்குறதுக்கா வேலைக்கு வச்சுருக்கேன் அவ எங்க இருக்கானு கூட தெரியாத அளவுக்கு அப்பிடி என்ன ம**ல வேலை பாத்திங்க என அரிமாவாக கர்ஜித்து நின்றவனின் கோலம் அனைவரையும் அச்சம் கொள்ள செய்தாலும் அவர்களுக்கு தெரியாது என்பது தானே உண்மை...




இறுகிய பாறையாக தாடையோடு முகம் இறுக நின்றவனின் மனமோ அதற்கு எதிர்பதமாக கை காலை உதைத்து அழும் குழந்தையாக அஞ்சலியின் மதி முகத்தை காணும் கனத்திற்கு வேதனையோடு காத்திருப்பதாய் உணர்ந்த வானமும் அவன் வேதனையில் வருந்தி மழை துளியால் புமியை நனைப்பதாய்...


வீட்டை சுற்றி இருந்த கேமராக்காளயும் விடாது சோதித்து பார்த்ததிலும் திருப்திகரமான சின்ன விடயமும் கிடைக்காததில் கிட்டத்தட்ட மூவரும் மடிந்து சரியும் நிலை....அதர்ஷனுக்கு அஞ்சலி எத்தனை முக்கியமோ அதே போல தானே வீருக்கும் தேவாவிற்கு குட்டி தங்கையாக நெஞ்சில் குடிகொண்டிருந்த இளவரசியை காணததில் அவர்களும் சுணங்கி தான் போனார்கள்...



வெளியே வானம் முழு மூச்சாக தெரித்து விழும் மழை துளிகளை தொட்டாக்களாக பூமியை நோக்கி எய்தி ஊடல் கொண்டிருந்த சலசலப்பு சத்தத்தை கேட்டப்படி ஷோப்பாவின் பின் பக்கமாக தலை சாய்த்து அமர்ந்த அதர்ஷன் எங்க போன அம்மு என வார்தைகளையே பஞ்சு பொதியை போல் கையாண்டு உள்ளுக்குள் முனுமுனுத்து கொண்டவன்...


தீடிரென தலை நிமிர்த்தி அஞ்சலியின் அறையை வெறித்தவனின் மூளைக்குள் மின்னல் வெட்டியதை போல் ஏதோ தொண்ற ச்சே இதை எப்படி மறந்தேன் என தலையில் அடித்து கொண்டவன் அதற்கு மேல் பொறுமை இல்லாது அரக்க பறக்க அஞ்சியின் அறையில் அமைந்திருந்த பால்கனியை அடைந்திருந்தவன் இதுவரை பார்த்திறாது பொருளை வேகவேகமாக பிறிப்பதை போல் பால்கனியை திறந்தவன் அங்கு அவளை கண்ட அடுத்த கனம் மற்றவைகளை மறந்து அவளை இறுக்கி அனைத்து கொண்டு அவள் கழுத்தோரம் சரிந்தவனின் கண்களில் இருந்து இத்தனை நேரம் அனுபவித்த வேதனையின் தாக்கமாக கண்ணீர் பொள பொளவென கொட்டியது...

தீடிரென ஓட்டம் எடுத்தவனின் செயல் தேவா‌ மற்றும் வீருக்கு புரியாது போனாலும் அவனை தொடர்ந்து பின் சென்றவர்கள் கண்டது பல்கனியில் அஞ்சலியை இறுக்க அனைத்து கொண்டு அமர்ந்திருக்கும் அதர்ஷனை தான்...

இருவருக்கும் அவளை பார்த்த நிம்மதியில் இதயத்தின் சுவரை அப்பி கடந்த பதற்றம் கவலை எல்லாம் நீங்கி இருந்தது...

இத்தனை நேரம் அஞ்சலியை காணாது தவித்த அதர்ஷனின் நிலையே தாங்கள் இருவரும் வந்த அரவம் அறிந்த பிறகும் அவளை பிரியாது அவளினுள் அடங்கி இருப்பது என் உணர்ந்த இருவரும் அவர்களுக்கு தொந்தரவு அளிக்காது தனிமை வழங்கி சென்றிருந்தனர்...

அஞ்சலி கிடைத்த பின் தேவாவை கனிவாக பார்த்த வீர் சாரி டா ஏதோ பயத்துல அப்படி நடந்துக்கிடேன் நீ என்கிட்ட எல்லாம் சொன்ன அப்புறமும் பதட்டத்துல அத எல்லாம் யோசிக்காம என்னேன்னவோ பண்ணிடேன் சாரி என அவனை நெருங்கி அனைத்து விடுவித்து தன் அறைக்கு சென்று அடைந்தவனயே அவன் தலை மறையும் வரை பார்த்திருந்த தேவாவும் தன் அறைக்கு சென்றிருந்தான்...

தன் அனைப்பிற்குள் மெல்லிய நடுக்கத்தில் தேகம் குலுங்கியவளை சற்று பதற்றம் குறைந்த பின் தான் கவனித்திருந்தான் அதர்ஷன்...

சட்டென அவளை தன்னில் இருந்து பிரித்து குளிரில் வெடவெடத்து போய் கண்கள் சொருகி அரை மயக்கத்தில் இருந்தவளை உலுக்கி கன்னம் தட்டி கண்ணா இங்க பாரு டா என்றவனை சொக்கிய விழியால் ஏறிட்டவள் கு..குளிருது என மெல்ல முங்கியதை தெளிவாக உள் வாங்கி கொண்டவன் நொடியும் தாமதிக்காது அவளை தன் கரத்தில் பூங்கொத்தாக அள்ளி கொண்டு மெத்தையை நெருங்கி அவளை அதில் கிடத்தியவன் மறக்காது பால்கனியை அடைத்திருந்தான்..

இரவு விரைவாகவே தலைவலிக்குது என சாந்தியிடம் காரணம் கூறி இரவு உணவையும் மறுத்து தன் அறையில் வந்து ஒடுங்கி கொண்டவளை சாந்தியும் தொந்தரவு அளிக்க விருப்பாது விட்டிருந்தாள்..

தன் அறையின் மெத்தையில் சரிந்தவளுக்கு ஏதோ மனம் நிலை இல்லாமல் தவித்ததில் சற்று அமைதி வேண்டி பால்கனிக்கு சென்று வானத்தில் மையம் கொண்டிருந்த நிலாவை வெறித்திருந்த சமயம் கதவு தவறுதாலாக ஆட்டோ லாகாகி விட்டதில் திரும்பி தன் அறைக்கு செல்ல முயன்று தொற்றவளாக கதவை தட்டி கத்தியும் பாரத்தவளின் சத்தம் கனமான கண்ணாடி கதவை தொலைக்காது உள்ளையே அடங்கி போன நேரம் தானா வானம் பூவியிடம் ஊடல் கொள்ள வேண்டும்...


கொட்டி தீர்த்த மழையின் குளிரில் அப்படியே வெளியே செல்ல வழியின்றி நடுங்கி போய் அமர்ந்து விட்டாள்...

அவளை மெத்தையில் கிடத்தியவன் விருவிருவென எந்த தயக்கமும் இன்றி அவள் ஈர உடையை களைந்து போட்டவன் தூண்டால் உடலை போர்த்தி அவளை மார்போடு முடிந்த அளவு இறுக்கமாக அதக்கி கொண்டு படுத்த பின்பும் கூட உடல் நடுங்கியவளை என்ன செய்வது என புரியாமல் தவித்தவனுக்கு கொட்டும் மழையில் அவளை ஹாஸ்பிடல் கூட அழைத்து செல்ல முடியாத நிலையை என்னி நொந்து போனான்...

கனமான போர்வையை அவள் உடலில் சுற்றி அனவாக தன்னில் அனைத்து கொண்ட போதும் நேரம் ஆக ஆக ஜன்னி கண்டவள் போல் உடல் துள்ள போர்வைக்குள் நடுங்கியவளை எழும்பு முறிய இறுக்கி அனைத்து கதகதப்பு கொடுக்க முயன்ற முயற்ச்சியும் தொல்வியில் முடிய வேறு வழி இன்றி அந்த வழியை கையில் எடுக்க வேண்டிய நிர்பந்ததில் அதை கையாண்டிருந்தான்...


தன் உடல் சுட்டை முழுவதும் அவளுள் கிடத்தும் முயர்ச்சிக்கு முன் மெல்ல அரை கண் போட்டு கொண்டு தேகம் உதர தன்னை பார்த்தவளினஅ செவியோரம் குனிந்து பூவை நோக விடாது மெல்ல வருடி செல்லும் தென்றலை போலான மெல்லிய குரலில் ஏதோ கிசுகிசுத்து அவள் முகம் பார்த்து வலிச்சா பொறுத்ததுக்க அம்மு பீளிஸ் என்றவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டவள் போல் தலை அசைத்து தன் சம்மதத்தை தந்ததில் பெண்ணவள் மறைத்த ரகசிய பெலையை தன் சாவிக்கொண்டு திறந்து இதமாக இனைத்தவனின் செயலில் அவள் கண்ணோரம் கசிந்த நீரை முத்தமிட்டு தொடைத்தவன் சாரி டா சாரி என காதோடு முனுமுனுத்து மன்னிப்பு கேட்டதெல்லாம் தனி கதையாக அனிவகுத்து நின்றது...

அவளுள் இதமாக கலந்து தன் உடல் சுட்டை கிடத்தி உடலின் வெப்பத்தை மேம்படுத்த செய்து குளிரை குறைத்தவன் மருத்துவம் முடிந்து உடல் தெரிய நோயாலியின் அரவனைப்பை வேண்டிய மருத்தவன் அவளை விலக விடாது பதமாக அனைத்து அவள் மார்பில் அடங்கி கொஞ்ச நேரத்திற்கு முன் தொலைந்த தூக்கத்தை துனை சேர்த்து கொண்டு நித்திரையில் ஆழ்ந்திருந்தவன் அவளையும் ஆழ்த்தியிருந்தான்...



இரவு முழுவதும் பூமிக்கும் வானத்திற்குமான ஊடலில் பூவி எங்கும் நிரம்பி தேங்கி போயிருந்த நீரை உரிந்து கொள்ளும் தாகத்துடன் மேற்கு பக்கம் உதித்திருந்தான் கதிரவன்...

எப்போதும் எழும் நேரத்தை விட சற்று தாமதமாக விழித்து கொண்ட பெண்ணவளுக்கு உடலை உலுக்கி போட்டது போல் அத்தனை சோர்வு அதில் விழிப்பு தட்டிய பின்னும் எழுந்து கொள்ளும் என்னம் இன்றி லேசாக அசைந்து திரும்பி படுத்தவளின் முயர்ச்சி ஏதோ பாரம் அழுத்தியதில் தடைப்பட்டு போனது...

பாரம் அழுத்தும் இடத்தை குனிந்து பார்த்தவளின் முகம் குங்குமம் கொட்டும் அளவிற்கு வெட்கத்தில் சிவந்து அயர்ச்சியை மீறி மலர்ந்து போனது...

நூல் மறைக்காத அவள் வயிற்றில் தலையை அழுத்தி மூச்சு காற்று அவள் நாபியில் இறங்கி சிலிர்புற்றும் விதாமாக உறங்கியவனின் தூயிலை களைக்க விரும்பாது அவன் முகத்தை பார்த்திருந்தவளுக்கு நேற்றைய நினைவு நெஞ்சம் என்னும் கறையை முட்டி சிலிப்புற செய்தது...

அரை மயக்க நிலையில் எதற்கும் எதிர்வினையோ சம்மதித்து உருகும் நிலையிலோ அவள் இல்லாத போதும் நடக்கும் விடயங்களை மூளை கிரகித்து கொண்டிருந்ததின் தாக்கம் இப்போது அவளை பெண்மையின் இயல்பான கூச்சம் மறந்து மோக வளைக்குள் ஆழ்த்தி தன் கண்ணன் மேல் மையல் கொள்ள வைத்தது...


நேற்று அவன் தனக்காக தவித்து நின்றதிலேயே மனமுருகி அவன் பால் சரிந்து விட்ட பெண்மை அவன் சம்மதம் கேட்டு தன்னில் இதமாக இனைந்து நோவு போக்கி அரவனைத்து கொண்டதில் மனதில் கூக்குரலிட்ட பெண்ணியம் கூட மடிந்து அழிந்து போனதோடு பெண்மை மிச்சம் இன்றி அவனில் சரணாகதி அடைந்திருந்தது...

தன் பெண்மையை வாரி சூரிட்டி கொண்டு தூங்கியவனை பார்த்தவளுக்கு அவன் மேல் சிறு விருத்தமும் தொன்றாது செல்ல சினுங்கலும் வெட்கமும் மட்டுமே மிஞ்சி இருப்பதாய்...

தூக்கத்தினோடு தன்னை வீசிகரித்தவனின் கன்னதை மெல்ல வருடி மீசையை முறுக்கி விட்டவள் என் செல்ல பொறுக்கி டா நீ என்ற அவள் செல்லமாக அவனை கொஞ்சியதை தொடர்ந்து கண்களை மூடியப்படியே யாரு டி பொறுக்கி என்றவன் மெத்தையில் சரிந்து அவளை தன் மீது சரித்து கொண்டு சொல்லு டி யார் பொறுக்கி என்று அவள் கண்களை உறுத்து பார்த்தவனின் தீடிர் செயலையோடு கேள்வியையும் எதிர்பாராதவள் மலங்க மலங்க விழித்திருந்தாள்...



தொடரும்....
 
Last edited:
  • Love
Reactions: Kameswari