• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕4

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
48
87
18
Madurai
பாகம்-4

அலையின் விசைக்கேற்ப்ப இழுத்து செல்லும் இலையை போல் நாட்கள் அவர்களின் வேலையின் இழுப்பிற்கு நாட்கள் நில்லாமால் ஓடி இருந்தது இதோ அதர்ஷன் கோவையில் இருந்து வந்து இரண்டு மாதத்திற்க்கு மேல் ஆகிவிட்டு இருந்தது...

அன்றைக்கு எல்லா வேலையும் முடித்துவிட்டு மறு நாள் இதயத்தின் ஒரம் முளைத்த சுவாரஸ்யத்தில் விளைவாள் ஏன் என்றே தெரியாமல் அடிக்கடி அந்த பேருந்து நிறுத்தத்தை ஓட்டிய சாலையில் சென்று வந்தவனுக்கு அவளை பார்க்க ஓர் குறுகுறுப்பு ஆனால் அவன் தேவதையோ தவம் போதவில்லை என்பதை போல் தரிசனம் தராமல் போக்கு காட்டியதில் சற்று மனம் சுணங்கிய போதும் அன்றைக்கு அவளை கரங்களை ஏந்திய ஸ்பரிசமே இன்னும் விரல்களோடு மையம் கொண்டு தித்திப்பதாய்...

கோவையில் இருந்து சென்னைக்கு திரும்பியவனை வேலை தன்னுள்ளே சுழட்டிக்கொண்ட போதும் இளைப்பாறுதல்காக இமை மூடும் சிறு கனங்களிலும் இமைக்குள் நுழைந்து இம்சித்தவளில் ஆட்டம் தாங்காமல் பாவம் ஆடவன் தான் நொந்து போனன்..இவை அனைத்தையும் சாமர்த்தியமாக தன்னுள் ஒளித்து கொண்டு மற்றவர்கள் முன் சிரிப்பு மறந்த முசடாகவே வலம் வந்தான் கள்வன் அவன்...

அதுவும் இல்லாமல் இது அவனின் டிரிம் ப்ராஜெக்ட் என்பதால் முழுமூச்சாக வேலையிலில் விருப்பியே ஆழ்ந்து இருந்தவனுக்கு மெல்ல முகம் காட்டி மறையும் அந்த பௌர்ணமியின் நினைவும் வராமல் இல்லை...

அவன் என்னதான் எல்லா தொழிற்துறையிலும் Av mall, hotel என கால் பதித்தாலும் அவனது லட்சியம் கட்டிடத்தொழில் நீங்கா தடம் பதிப்பதுதானே ....

என்னதான் அவள் நினைவுகள் மின்னும் நட்சத்திரமாக அடிக்கடி மனதுக்குள் வெட்டி சென்றாலும் அதை பெரிது படுத்தாமல் கடந்து செல்ல நினைக்க... காலமோ இவர்களை சேர்க்கும் நேரத்திற்கு‌ அனைத்து திட்டங்களையும் தீட்டி வைத்து காத்திருந்தது..

இங்கே இவளுக்கும் அடி உதையினோடு மேலும் மேலும் இதயத்தால் ரணப்பட்டு பல்லை கடித்து கொண்டு காலத்தை நெட்டி தள்ளி கொண்டு இருந்தாள் பேதையவள்..சித்தப்பாவும் இப்பொழுது உதவும் நிலையில் இல்லாமல் போக அது இன்னும் சித்தியின் கொடுமைக்கு வித்திட்டது..அவருக்கும் அவளின் நிலையை நினைத்து மனதில் புலுங்கி கொள்வதை தவிர வேறு வழியற்று போனதில் தன்மேலேயே கோவமே மிஞ்சியது....

சித்தப்பா ராஜனுக்கு அஞ்சலி என்றால் அவள் குழந்தையாக இருந்த போது இருந்தே
கொள்ளை பிரியம் அவளின் மேல்..

அஞ்சலி அப்பா ரஞ்சனும் இவரும் நெருங்கிய தோழமையினோடு நன்றாக பழகி வந்தனர்...அதனால் தான் தன் தங்கை போல் பாவித்த தேவகிக்கு ராஜனை பேசி முடிக்க நினைத்தவர்...தன் என்னத்தை தன் மாமனாரிடமும் பகிர்ந்து கொள்ள அவரும் தன் மாப்பிள்ளையின் மேல் பூரன நம்பிக்கை கொண்டு இருந்தவர் மறுபரிசீலனை இன்றி உங்களுக்கு சரினு பட்டா பண்ணுங்க மாப்பிள என உடனே தன் சம்மதத்தை தெரிவித்து விட அதில் மகிழ்ச்சி அடைந்தவர் தேவகிடயும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாம் என கூற...அவருக்கும் அதுவே சரி என பட தன் பெண்ணிடம் சம்மதம் கேட்க தேவகியும் பல கனவுகளோடு சம்மதம் தெரிவித்ததில் அடுத்து அடுத்த விஷயம் தடல் புடலாக ஆரம்பித்து சுமூகமாக முடிந்தது..ரஞ்சனே முடித்து‌ வைத்தார்..

ராஜனுக்கு சொந்தம் எல்லாம் யாரும் இல்லை சுயம்பாக தானே சொந்த உழைப்பில் சிறு சிறு வேலை பார்த்து சாதரணமாக படித்து முடிந்து இருந்தார்.. அதன் பின் தான் ரஞ்சனின் கன்பெனியில் சேர்ந்ததும் கூட முதலில் தொழில் வட்டத்திற்குளேயே இருந்த உறவு ராஜனின் நேர்மையிலும் கோடி ரூபாய் கொடுத்தாலும் யார் பக்கமும் சாயாத அவரின் குனத்திலும் ஈர்க்க பட்டு மேலும் மேலும் நெருங்கி ஆழ்ந்த நட்பாக மாறி இறுகிய உறவு ஆனது...

திருமணத்திற்கு பின் முழுமனதுடன் ராஜனுக்கு சில சியார்ஸை அவருக்கு எழுதி கொடுக்கு ராஜனோ அதை முழு முற்றாக மறுத்ததில் மாமனாருக்கு மனம் குளிர்ந்து போனாலும் தேவகிக்கு இந்த செயல் புகைச்சலை கிளப்பியது அவர் இவரை திருமண செய்ய சம்மதித்ததே ரஞ்சன் முலம் வரும் சொத்திற்காக தானே..

அவர்களுக்கு திருமணம் ஆனப்போது அப்போது அஞ்சலி ஒரு வயது குழந்தை..பார்க்க பார்பி டால் போல் புசுபுசுவென கன்னத்தோடு கொலுக்கு மோலுக்கு என போஷாக்காக இரட்டை குதிரை வால் குடுமி என இருந்தவளை அவருக்கு மிகவும் பிடிக்கும்...அவளுக்கும் சித்தப்பா என்றால் தாய் தந்தைக்கு பின் அவரை தான் ரொம்ப பிடிக்கும்..

அஞ்சலி இப்போது பல்லை கடித்து கொண்டு கொடுமைகளையும் இவர்களில் சுடு சொற்களையும் தாங்கிக்கொண்டு இந்த வீட்டில் காலத்தை நெட்டி தள்ளுவதை அவருக்காக தான்...

அவள் பெற்றோரை இழந்த நிற்கதியாக நின்ற போது தன் பள்ளையாக பார்த்து கொண்டவரின் முன் அவளின் சித்தியின் கொடுமை மறைமுகமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல் நிகழ்ந்து கொண்டு இருந்தது...இதில் தேவகிக்கு எங்கோ தீடிரென சொந்ததில் தம்பி என்று முழைத்து வந்தவனின் குனமும் அத்தனை உவப்பாக இல்லை அத்தனை கெட்ட பழக்கத்தையும் உள்ளடக்கி நாராசமாக பல்லிலிக்கும் ஓநாய் அது..

அவன் வேறு வேறு விதமாக பெண்ணவளை நுதனமாக கொடுமை செய்ததில் மேலும் மேலும் அவளுக்கு வாழ்க்கையின் மேல் விரக்தியே மிஞ்சியது...அவனின் நோக்கத்தையும் பட்டும் படாமல் அறிந்து இருந்த தேவகியும் பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை யாருடைய பள்ளையோ என்ற அலட்சியம் போலும்...

இதில் அனைத்திலும் பாதுகாப்பாக வெயிலின் நீர் வற்றிய குட்டையில் சிறு பள்ளத்தில் தங்கிய துளி நீர் போல் துளியாக சித்தப்பாவினால் கொண்ட இதத்திலும் மனல் அள்ளி இறைத்ததை போல்அவர் தொழிற்சாலையில் வேலை செய்யும் போது முதுகு தண்டுவடத்தில் அடி பட்டு கால்கள் செயல் இழந்து போக...எழுந்து நிற்க்கவே சங்கடமாய் போக படுக்கையிலேயே வாழ்கையை கடத்த வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்ப்பட்டதில் யாருக்கு எப்படியோ அஞ்சலிக்கு வாழ்வே சூனியமாய் போனது...

அதில் அவரின் வேலையும் பரிப்போனது...தேவகி எல்லா வன்மத்தோடு இதையும் குவித்து உன்னால தான் இப்படி என அஞ்சலியவே தூற்றினார்...

அப்போது இருந்து மறைமுகமாக இத்தனை நாள் தொடர்ந்த வதைகள் இப்போது வெளிப்படையாகவே சர்வ உரிமையுடன் தடா இன்றி அரங்கேறியது.... அது காலப்போக்கில் அவளுக்கும் இந்த வதைகள் பழகி விட்டாலும் மனம் ரணப்பட்டு சிதையாமல் இல்ல...

ஆனால் எப்படியோ அத்தனை இடர் பாட்டிற்க்கு நடுவிலும் சித்தப்பாவின் உதவியுடன் interior designing முடித்து இருந்தாள் அது ஒன்று தான் அவளுக்கு துளி இதயம் கொடுக்கும் தேன் துளி...

எப்போதும் போல் தனக்காகவே வீட்டில் குவிந்து கிடக்கும் வேலைகளை முடித்துவிட்டு சித்தியிடம் இருந்து தப்பித்து அலுவலகம் வந்து சேர்ந்தாள் அஞ்சலி...

அவள் வருகைகாவே காத்திருந்தவள் போல் அவள் தோழி ஷிவானி" ஏன்டி இவ்வளவு லேட் மேனேஜர் உன்ன தேடினாரு சீக்கிரம் போ "என வந்ததும் வராததுமாக அவளை விரட்டினாள்...அவளும் சிறிதும் இளைப்பாறுதல் இன்றி தவித்த உடல் சிறு இளைப்பாறுதலுக்கு கெஞ்சியதற்கு செவி சாய்க்க நேரம் இன்றி படபடவென மேனேஜர் என்ற பதாகை தாங்கிய அறையினுள்
அனுமதி கேட்டு உள் நுழைய நிமிர்ந்து பார்த்தவர் சிறு தலையசைப்புடன் அவளை வரவேற்று அவள் முன் ஓர் கவரை நீட்டி "நீங்க பன்ன இன்டீரியர் SM construction க்கு ரொம்ப புடிச்சிருக்கதால உங்கள SM constructionல இருந்து ஹயர் பன்னுறாங்க சோ அவுங்க செய்யப்போர பரொஜெக்ட்ல நீங்க தான் இன்டீரியர் டிசைன் பன்ன போரிங்க..உங்களுக்கு ஒர்க்ஸ் சென்னைல தான் இருக்கும்... என அவர் கூற..

அவளோ இதை கேட்ட உடன் சிறு மகிழ்ச்சி கொண்டாளும் மனதோரம் சித்தியை நினைத்து மருகியவள் ஆனா என்னால சென்னை போக முடியாதே என‌ கூற..அவரோ விசைபலகையில் தன் விரல்களை நர்தனம் ஆட விட்டப்படி பேசியவர் அவள் கூறியதில் விழுக்கென நிமிர்ந்து தடுமாறும் குரலில் இல்ல இது அக்செப்ட் பண்ணி தான் ஆகணும் இல்லனா நீங்க இதுக்கு மேல வேலைய பத்தி நினைக்க முடியாது என சரியா அவளுக்கு செக் வைத்து அதற்கு அவளை பதில் பேச விடாது இன்னும் சில விஷயங்கள் பேசிவிட்டு" யு மே மூவ் நௌ" என அவர் அவரது வேலைகளை பார்க்க தொடங்கினார்.....அவளும் தனக்கு முன் வைத்த கவரை எடுத்து கொண்டு தேங்க் யூ என விடைப்பெற்று தன் அறையில் இருந்து வெளியேறியவளை கண்டு பெருமூச்சு எறிந்தது தனக்கு கொடுத்த வேலையை சரியாக முடித்து விட்ட ஆஸ்வாசமோ..

அவரிடம் பேசிவிட்டு குழப்பமான மன நிலையில் தனது கேபினில் சென்று அமர்ந்தவளின் பக்கத்து கேபினில் அமர்ந்து வேலை பார்த்துக் கொன்டிருந்த ஷிவானி.... தன் அருகில் முகத்தில் குழப்ப ரேகைகள் படற அமர்ந்து இருந்தவளை உன்றி கவனித்தவள் பின் அவள் குழப்பத்தை தீர்க்க எண்ணி மெல் அவள் தோள் பற்றி "என்னடி என்னாச்சு ஏன் குழப்பமா இருக்க" என வினவ அவள் மேனேஜர் தன்னிடம் கூறிய அனைத்தையும் கூற உடனே அஞ்சலியை தாவி கட்டிக்கொண்டவளுக்கு அத்தனை மகிழ்ச்சி ஏனினில் இனி தன் தோழி பாதுகாப்பாக மற்றும் நிம்மதியாக இருப்பாளே என...

இதுக்கு என்ன யோசனை வேண்டியது இருக்கு நீ கண்டிப்பா போற அவ்வளவு தான்..

புரியாம பேசாத ஷிவி நா போய்ட்டா சித்தப்பாவ யாரு பாத்துப்பா ..‌

நீ தான் லூசு மாதிரி பேசுற அவர பாத்க்க உங்க சித்தி இருக்காங்க ஆனா உன்ன என ஆயாசமாக இதழ் குவித்து ஆழ்ந்த மூச்சேறிந்து கூறியவள் பின் இதில வேற எப்படா உன் மேல பாயலாம்னு திரியிர அந்த வெற்றி நினச்சாலே உனக்கு எப்படியோ எனக்கு பயமா இருக்கு..என உண்மையான அன்புடன்‌‌ அவள் நிலை நினைத்து வருந்தியவள்
பீளிஸ் நீ தயவு செஞ்சு சென்னை போ அஞ்சு..

அவள் பாசத்தில் வென்பனியாக கசிந்துருகியவள் இதழில் கடையோரம் சின்னதாக சிரித்தவள் பின் மீண்டும் முகம் சுணங்கி இல்ல அதுக்கு சித்திட எப்பிடி பர்மிஷ்ன் வாங்க..

அவள் கேட்டதில் இத்தனை நேரம் அவளுக்காக கலங்கிய முகத்தை பட்டென மலர்த்தி அப்போ நீ போறியா என அவள் கண்கள் மின்ன கேட்க..

ம்ம் போறேன் என கூற ..அதைபத்தி நீ கவலைப்படாத நா செல்லுற மாதிரி சொல்லு என அவள் கூற...இதுலாம் சிரியா வருமா...

உனக்கு தான் உங்க சித்திய பத்தி தெரியல இது கண்டிப்பா ஒர்க் ஆகும் இந்த ஷிவானி ஒரு விஷயம் சொல்லி நடக்காம போனதா சரித்திரமே இல்ல காலர் இல்லாத சட்டையை தூக்கி விடுவதை போல் இழுத்து விட்டு பெருமை பட்டு கொண்டவளின் தோள் தட்டி சின்ன சிரிப்புடன் ஆமா சொல்லிக்கிட்டாங்க என‌ குறும்பு செய்தவளை‌ செல்லமாக முறைக்க..

சும்மாடி உன்ன போய் கின்டல் பண்ணுவேனா கோவிச்சுகாத என முறைத்தவளை‌ சமாதானம் செய்தவள் பின் ஆழ்ந்த மூச்சு இழுத்து விட்டு ஏதோ போ எல்லாம் நீ சொன்ன மாதிரி நடந்தா சரி என கூறிவளின் கைகளை பற்றி எல்லாம் நல்லபடியா நடக்கும் ஆனா நீ கண்டிப்பா சென்னை போய்று இங்க இருக்க வேண்டாம் என கூறிவள் அதன் பின் தன் வேலையில் மூழ்கி போக அஞ்சலியும் யோசனைகளை புறம் தள்ளி வேலையில் மூழ்கினால்..

பாவம் அவளுக்கே தெரியாமல் அஞ்சலியின் வாழ்வின் வரும் பெறும் சிக்கல்களுக்கு வித்திட்டு இருந்ததை அவள் அறியாமல் போனால்...

மாலை 5 மணியாக அனைவருக்கும் பணி முடிந்து கிளம்பு நேரம் அது...
ஷிவானி நேரத்தை உணர்ந்து மிஞ்சிய வேலையை படபடவென முடித்து விட்டு கிளம்பும் நேரம் அஞ்சலியையும் வாடி போலாம் என அழைக்க அவளும் நேரத்தை உணர்ந்து கொண்டவள் அவளோடே கிளம்பி இருந்தாள்...

இருவரும் கதையலந்துக் கொண்டே பஸ் ஏறி இருவரின் வீட்டிற்கான மைய புல்லியில் நின்று விடைப்பெறும் நேரம் ஷிவானி அஞ்சலியிடம் உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துடேன் என் பிரின்ட் ஒருத்தவுங்களோட அக்கா சென்னைல தான் ரூம் எடுத்து தங்கிருகாங்க அவுங்கட பேசிடேன் நீ அங்க போனா அவுங்க கூட தங்கிக்கோ வேற இடம் தேட வேண்டாம் சரியா...என அவள் கூற...அஞ்சலிக்கு சட்டேன நன்றி பெருக்கில் கண்களில் நீர் கோர்த்தது ரொம்ப தேங்ஸ் ஷிவி என கூற....அவளுக்கும் கண்களில் இருந்து ஓரிரு கண்ணீர் துளிகள் சிந்தின போதும் அவள் அறியாமல் துடைத்துக் கொன்டு...அடி வாங்க போற பாரு யாராவது பிரின்ட்க்கு தேங்க்ஸ் சொல்லுவாங்களா என அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டப்படி கடிந்து கொண்டவள்.. நீ எப்பவும் சந்தோஷமா இருக்கனும் என மனம் நிறைந்த வார்த்தையை உதிர்த்து.. சரி வீடு வந்துருச்சு நான் கிளம்புரேன் உன் சித்திட நான் சொன்ன மாதிரி பேசு சரியா என பல அறிவுரையுடன் விடைப்பெற்றாள்..

அந்த நிமிடம் தான் தான் அதிர்ஷ்டசாலி என தோன்ற வைத்தது ஷிவானியிடம் இருந்து கிடைத்த அரவணைப்பில்

இவள் வீட்டிற்கு வர வாசலில் தன் 32 பற்களையும் காட்டி நின்றிருந்தான் வெற்றி... மகிழ்ச்சியுடன் வந்தவள் முகம் சட்டென வெளிரி மனதினுள் திகில் கவ்வ அவனை தாண்டி உள்ளே படபடத்த இதயத்துடன் வீட்டிற்குள் செல்ல முயன்ற நேரம் அவள் கைகளைப் பிடித்திருந்தவனை கண்டு‌ மேற்கொண்டு நெஞ்சு கூட்டில் பயம் கவ்வ...உடைந்த சொற்களாக மா..மா மா.மா பீளிஸ் விடுங்க என அவனிடம் கெஞ்ச...அவனோ அவளின் கெஞ்சலை சட்டை செய்யாது தன் கண்கள் முன் தங்கசிலைப் போல் நின்றவளின் மேல் வக்ரமாக பதித்து பெண்ணவள் உடலை தன் பார்வையாள் ஊடுறுவியப்படி... அவளை அனைக்க முயன்ற நேரம் அஞ்சலி அங்க என்ன பண்ணுற இங்க வா என பெரும் சத்தத்துடன் ஆபத்பாடவனாக வந்து காப்பாற்றி இருந்தாள் பக்கத்து வீட்டு பெண் தேன்மொழி..அவள் அழைத்த சத்தத்தில் அவளை உதறிதள்ளிவிட்டு சென்று இருந்தது..
அந்த மனித உருவில் இருக்கும் பிணந்தின்னிக் கழுகு....

தொடரும்.........
 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அஞ்சலிய நெனச்சா ரொம்ப பாவமா இருக்கு ☹️

வீர் நம்பர் அவகிட்ட இல்லையா? அண்ணனும் தங்கையும் அவ்ளோ நல்லா ஒருத்தர் பத்தி ஒருத்தர் பேசிகிட்டவங்க மொபைல் நம்பர் வாங்கிக்கலையோ?🙄

இந்த வெற்றி கூடிய சீக்கிரமே அடி வாங்கப் போறான்னு நெனைக்கிறேன்🤨

அந்த ஏதோ தில்லாலங்கடி வேலை பண்றான் போலத் தெரியுதே? 🤔

நீங்க சொல்றத பாத்தா அஞ்சலிக்கு சென்னைல ஏதோ பெரிய ஆபத்து காத்திருக்கும் போல இருக்கே? 🧐

அதுல இருந்து அதர்ஷன் & வீர் தான் காப்பாத்துவாங்களோ? 🤔

அடுத்த எபிக்கு வெயிட்டிங்டா 🤩
 
  • Like
Reactions: Brindha Murugan

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி 💚💚💚💚💚💚💚சீக்கிரம் அஞ்சலிக்கு இந்த கொடுமையில் இருந்து விடிவு காலம் கிடைக்கட்டும் 😊😊😊😊
 

Mayuri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 2, 2024
36
11
8
Bangalore
பாவம் அஞ்சலி 😢