• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕58

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
90
146
33
Madurai
கோவிலுக்கு செல்லும் போது விடாது தொனதொனத்து கொண்டு வந்தவளின் வாய் இப்போது கம் வைத்து ஒட்டினார் போல் சந்தோஷத்தில் ஒட்டி கொள்ள கண்கள் மட்டும் விடாது அவனையே ஆழமாக உள்வாங்கி கொண்டிருந்தது...

மிதமான வேகத்தோடு சாலையில் வழுக்கி சென்ற காரினுள் இருவரின் மூச்சோடு மௌனம் மட்டுமே ஆக்ரமித்ததாய் அமைதியா இருந்த இடத்தில் தன்னை பார்வையால் விழுங்கியவளின் இடையை லேசாக சீண்டி அவளை தள்ளவிட்டவன்...

புரவத்தை உள்ளாசமாக வளைத்ததோடு இதழில் கடையோர சிரிப்பு மின்ன என்னடி போகும் போது அத்தனை கேள்வி கேட்ட இப்போ என்ன அமைதியா வர அப்பப்பா கெஞ்ச நஞ்ச கேள்வியா கேட்ட எங்க போறோம் ஏன் வேகமா போறோம் அங்க என்ன சர்பிரைஸ்னுலா விடாம கேட்டவ இப்போ என்ன பொம்மை மாதிரி அமைதியா இருக்க...

அவன் பேசியதை சிரிப்போடு உள்வாங்கியவள் அவன் முடிக்கவும் அவன் இதழில் ஒற்றை விரல் வைத்து ரொம்ப சந்தோஷமா இருக்கேன் இப்போ எதுவும் பேசாதீங்க வெறும் என்னோட பார்வைக்கு பதில் பார்வை மட்டுமே போதும் என்றவள் பேச்சுக்கு தான் தடை விதித்திருந்தாளே தவறி விஷம பார்வைகளுக்கு கூட தாரளமாக அனுமதி தான் கொடுத்திருந்தாள்...

அவள் பார்வையில் அத்தனை கரம் கூத்தாடியது இவன் என்னவன் என்று...

சராசரி பெண்ணின் அதிக படியான ஆசையே கணவன் தன் மனம் அறிந்து தனக்கு அனைத்திலும் துணை நிற்க வேண்டும் என்பதோடு சிறு சிறு வியஷத்தில் தன் முடிவே முற்றும் என இல்லாவிடினும் தன்னோடு கலந்துரையாடி அதன் இடையில் நிகழும் செல்ல சண்டையும் கொஞ்சலும் பெற வேண்டு என்பது தானே கூடவே தான் ஆசைப்பட்ட சிறு சிறு பொருட்களை கனவனிடம் இருந்து பெற்று கொள்வதுதானே என்றிருக்கையில்லை பலர் செய்த பெரும் தவத்தின் வரமாய் அவள் கை சேர்ந்தவன் அவள் விழி அசைவிலேயே அனைத்தையும் அறிந்து செய்து முடித்திருந்தான் அவளனவன்...

தொடரும் அவள் விழுங்கும் பார்வையில் எத்தனை நேரம் தான் ஆண்மை தாங்கி கொள்ளும்..ஒரு கட்டத்தில் முடியாமல் காது மடல் சிவக்க வெட்கம் கொண்டவன் மெல்ல அவள் புறம் திரும்பி அம்மு போதுமே டா என்று கெஞ்சி நின்றவனின் பாவம் ஒரே நேரத்தில் சந்திரனையும் சூரியனையும் காட்டும் வானமாய் கம்பீரத்தின் இடையே தென்பட்ட சிறு குழந்தை தனமாக..

அவனிடம் சில நேரம் மட்டுமே அரிதாக வெளிப்படும் இந்த சினுங்கலையும் வெட்கத்தையும் பார்க்கும் எந்த பெண்ணும் பெண்ணியத்தை மறந்து அவன் பாதம் சரண் அடைய துடிக்குமோ என எண்ணும் அவளவிற்கு அத்தனை வசீகரம் ஆனால் அதற்கு எல்லாம் தேவையே இல்லை என்பது போல் அரிதாக முளைக்கும் சில பாவங்களுமே கூட ஏற்கனவே அவன் அம்முவுக்கே சொந்தமாகி போனதே...


மெல்ல அவள் மடி மிது தலை சாய்த்து கொண்டவள் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தபடி பயணத்தை மேற்கொள்ள அவன் தான் சிறிதாக பயந்து போனான் ஏய் பாத்துடி வசம் இல்லாம கண்ட மேணிக்கு படுக்குற வயிறு இப்போ தான் சரி ஆச்சுனு நியாபகம் இல்லை என அதட்டிய போதும் தன் மடி வீழ்ந்த ரோஜா சேடியை அரவனைத்து கொள்ள தவரவில்லை அவன்..


சந்தோஷங்கள் கூட மனதை இத்தனை அழுத்தும் என இப்போது தான் காண்கிறாள்....பேச வேண்டாம் என வார்த்தைகளுக்கு தடை வித்தவள் அவள் தான் என்றாலும் உள்ளத்தில் தொன்றிய குறுகுறுப்பு அவளை அழுக சொல்கிறது பைத்தியத்தனமாக அவனிடம் உளறவும் சொல்கிறதே அதன் இடையே இந்த மௌனமும் பிடித்ததில் உணர்ச்சி குவியலாக ஏதோ ஓர் பெயரிட முடியா உணர்ச்சியில் கட்டுண்டு கிடந்தாள் அவள்...

அவன் வயிற்றை கட்டி கொண்டு மனம் பட்டியலிட்ட உணர்ச்சி வெளிப்பாட்டை மீற தோன்றாது அதன் போக்கில் சென்றவளாய் கண்ணீர் சந்தியருந்தாள்..

அவள் கண்ணீர் அவன் சட்டையை ஈரமாக்கியதில் பதறி வேகமாக காரை ஒரம் கட்டியவன் தன் மடியில் கடந்தவளை அப்படியே அள்ளி தூக்கி தன் மடியில் அமர்த்தி கொண்டவன் என்னடா கண்ணா ஏன் அழுகுற என்றதும் கூட கொஞ்ச துளிகளை கண்களில் இருந்து வழிய விட்டவள்...

ஏன் ஆது உங்களுக்கு என் மேல இவ்வளவு லவ் மூச்சு முட்டுத்து நீங்க பண்ணதுக்கு எல்லாம் எப்படி ரியாக்ட் பண்ணுறதுனே தெரியலை கூடவே பயமாவும் இருக்கு என்றவளின் கன்னம் தாங்கி என்னடி பயம் உனக்கு...

தெரியலை கூடை கூடையா சந்தோஷத்தை என் மேல கொட்டுறீங்க அதை என்னால சுமக்க முடியலை மாமா சாதரணமா சித்திக்கிட்ட திட்டு வாங்கிட்டு மாடு மாதிரி வேலை பாத்துக்கிட்டுனு அந்த கொடுமைய கூட இஸியா சுமந்துட்டேன் ஆனால் இது முடியலை அதான் பயம் எங்கே கொட்டிய சந்தோஷத்தை எல்லாம் சூரியன் வாரிக்கொண்ட மழை நீராக காணமல் போகுமோ என அர்த்தமற்று பயந்தவளை இறுக்கி அனைத்து கொண்டான்...


ஏன்மா நீ என்னால தாங்க முடியாத சுகமான சுமையை என் முதுகுல ஏத்தலையா அதை நான் சுமக்கலையா சொல்லு என்றவன் மேலும் தொடர்ச்சியாக தெகட்ட தெகட்ட அன்பை கொடுத்த உன் குனத்துக்கு முன்னாடி இதுலாம் ஒன்னுமே இல்லைமா...


கண்டிப்பா நீ என் வாழ்கைல வராம போயிருந்தா ஒன்னுமே இல்லா போயிருக்கும்னுலா நா சொல்ல மாட்டேன் எல்லாமே காலத்தோட சூழற்ச்சில நகரந்திருக்கும் அது கூடவே நானும் நதியோட விசைக்கு அடிச்சுகிட்டு போற இலை மாதிரி அது பாதைக்கு என் வாழ்க்கையோட அர்த்தம் தெரியாமல் போயிருப்பேன்..

அப்படி இருந்த அர்த்தம் இல்லாத என் வாழ்க்கைக்கு வந்த அர்த்தம் தான் நீ அப்படியே போயிருந்தா எப்படி தேங்கி நன்னுட மாட்டேன்ங்குறது எத்தனை உண்மையோ அதே மாதிரி நா முழுமையும் அடைஞ்சுருக்க மாட்டேன்ங்குறது தான் உண்மை...

அப்படி பாத்த என்ன முழுமை அடைய வச்ச தேவதைக்கு நா ஏதாவது பண்ணனும்ல என அவள் கன்னத்தை பற்றி இருந்த தன் கரங்களை இன்னும் நெருக்கி அழுத்தி பிடித்து கண்டித்து நெற்றி முட்டினான்...

அவனின் வார்த்தையில் தண்ணீரில் கரைத்த பஞ்சுமிட்டாய் நிறத்தை மட்டும் தேக்கி வட்டு உருவமாய் மறைந்து கொள்வதை போல் பயம் எங்கோ ஒடி சென்று அதல பாதாளத்தில் சரிந்திருக்க அங்கு காதல் மட்டும் பளிச்சுட்டு மின்னியது...

தன் மடியில் அமர்ந்தவளின் முகத்தில் குமரிக்கான முதிர்ச்சி கால் விகிதமாகவும் குழந்தை தனம் மீதியாகவும் இருப்பதிலேயே கிறங்கி தவிப்பவன் இப்போது அதில் நவரசங்கலையும் காட்டி அபிநனயம் பிடிப்பதில் மனம் மொத்தமும் அவள் மடி சாய்ந்து போனது...

அம்மு பேச மட்டும் தான கூட மற்றது எல்லாம் பண்ணலாம் தான என கல்மிஷமாக கேட்டவனின் சொற்களின் அர்த்தம் புரிய வேகமாக அவன் நெஞ்சில் புதைந்த படி ஆமொதிப்பாக தலை அசைத்தவளை பார்த்து நீளமாக சிரித்தவன் மறு கனம் அவள் தாடையை பிடித்து உயர்த்தி அவள் இதழை கவ்வியிருந்தான் கள்ளனவன்...


தன் மன்னவன் கை இடையிலும் இதழிலும் செய்த ஜாலத்தில் அவளும் மாற்றதை மறந்து அவனுடன் ஒன்றி போயிருந்தாள்...


முத்தம் நொடியை கடந்து நிமிடங்களை தொட்ட போதும் இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமல் யுத்தத்திற்கு காற்புள்ளியிட்டு முத்ததில் லயித்து இருந்தனர்..

எத்தனை நேரம் லயித்திருந்தனரோ தெரியவில்லை முத்தத்தின் இடையே இடஞ்சலாய் கேட்ட வேகமாக கடந்து சென்ற ஒரு காரில் சத்ததில் தான் சுயம் மீண்டும் சுற்றத்தையும் உணர்ந்திருந்தனர்...


இதழை பிரித்து கொண்ட பின்னும் பட்டும் படாமல் பென்மையின் மென்மையான அங்கத்தில் புதைந்து போன ஆணானின் தேகம் விலகி கொள்ள மறுத்திற்கு சமாதனமாக பல குட்டி குட்டி முத்தங்கள் இட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தான் அந்த அபலை பயன்...

சமாதானத்திற்கு நெற்றி முத்தமும் கன்னத்தில் பதிக்கும் முத்தமுமே போதுமே ஆனால் இங்கே அதை காரணமாக கொண்டு முத்தம் எல்லாம் அவளின் இதழ் நோக்கியே பாய்ந்தது...

ஒருவரின் ஒருவர் நெற்றி முட்டி பெரிய பெரிய மூச்சுக்கலை இழுத்து விட்டு தங்களை சமன் செய்து விலகிய போதும் விழி எனக்கு என்டே இல்லடா என தேகமும் இதழும் பிரிந்த கொண்ட பின்னும் பார்வை யுத்தம் முடியா போறாக தொடந்து கொண்டு தான் இருந்தது...


மீண்டும் கடந்து சென்ற இன்னோரு காரின் சத்ததில் இது இனி சரி வராது என எண்ணியவன் அலேக்காக தூக்கி கொண்டது போலவே தூக்கி பக்கத்து சீட்டில் அமர வைத்து விட்டு காரை எடுக்க தயாரானான்...


அம்மு பீளிஸ் டி என்ன டெச் பண்ணாத அப்படி மட்டும் பண்ண ஐ வில் டிவோர் யூ ஹியர் இட்சேல்ப் என்றதும் அவள் வெட்கத்தில் குனந்து கொண்டதை சாமர்த்தியமாக கொஞ்சம் தள்ளி நின்று ரசித்தபடி பயணத்தை மீண்டும் தொடர்ந்தான்...


தொடர்ந்த பயணம் சிறிது நேரத்தில் முற்று பெற்றதாய் ஓர் பெரிய கேட் அமைக்க பட்டிருந்த ஓர் பெரிய மதில் சுவர் சூழ்ந்த பங்களாவின் முன் நின்றதை அடுத்து இறங்கி கொண்டவர்கள் முன் தெரிந்த அந்த பிரம்மாண்ட வீட்டை குழப்பமாக பார்த்த அஞ்சி ஆது இது யாரு வீடு நம்ம ஏன் இங்க வந்துருக்கோம் என்றவளின் கையை அழுத்தி பிடித்து கொண்டவன் நம்ம வீடு தான் டி என்றவனை பார்த்து...

அப்போ அந்த வீடு என்றவளிடம் அதுவும் நம்மளோடது தான் அது கொஞ்சம் அதிகமான இயற்கை காட்ச்சியோடு என் மன அமைதிக்காக கட்டுன அவுட் ஹவுஸ் டி அது இப்போ பொண்டாட்டி நீ இருக்கும் போது எனக்கு இறக்கை கொஞ்சமா போதும் அதான் இங்க என்றவனின் நீளமான விளக்கத்தை கேட்டு சிறிதாக சிரித்து கொண்டவள் வீட்டின் வெளிப்பக்கத்தை மெல்ல ரசிக்க தொடங்கினாள்...

அங்கும் இங்கும் பார்வையை பதித்தபடி நின்றிருந்த அஞ்சலியின் சிந்தையை களைப்பதாய் அஞ்சலி பொருமையா ரசிச்சுக்கோ இது எல்லாம் உன்னோடது தான இப்போ வா நல்ல நேரம் முடியுறதுக்குள்ள உள்ள போகலாம் அதர்ஷன் தம்பி பக்கத்துல நில்லு என்று சாந்தி கூறவும் மகிழ்ச்சியாகவே அவன் பக்கத்தில் நின்று கொண்டவளை அடுத்து இருவருக்கும் சேர்த்தே ஆழம் சுற்றி முடித்தாள் அவள்...


சாந்தி நகர்ந்து கொண்ட பின் அவள் பின் நின்றிருந்த படையில் இருந்த இளம் வயது பெண்கள் எல்லாம் அதர்ஷனை பிடித்து கொண்டு எங்க பிரண்டை கட்டிக்கிட்ட நீங்க எங்களுக்கு அண்ணா தானே அப்போ காசை வெட்டிட்டு உள்ள போங்க என சட்டமாக தன் முன் நின்ற நன்கு பெண்களை பார்த்து சிரித்தவன் என் அம்முவை என்கிட்ட கொடுத்த உங்களுக்கு நிறையாவே செய்யலாமே என்றவனை பார்த்து...

பேச்சு தான் வருதே தவிர காசு இன்னும் கைக்கு வரலையே என்ற ஷிவானி தன் ஆத்துக்காரை களாய்த்தற்கு அஞ்சலியிடம் இருந்து செல்ல முறைப்பையும் வாங்கி கொண்டாள்...


ஆத்தா நீ முறைச்சாலும் முறைக்கலாட்டியும் இது எங்க உரிமை அப்படி எல்லாம் விட்டு கொடுத்துட முடியாது என்றவள் அக்கா என்ன எல்லாரும் அமைதியா இருக்கீங்க உங்களுக்கும் பங்கு வேணும்ல அப்போ எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்வும் மற்ற மூன்று பெண்களும் அவளோடு சேர்ந்து ஆமா சாமி போட்டனர்...

அவர்களின் அட்டகாசத்தை ரசித்திருந்தாலும் ஓரக்கண்ணால் முறைத்தப்படியே நின்றிருந்த அஞ்சலியை பார்த்தாலும் காசு வாங்கிய பின்னறே களைந்து சென்றவர்கள் அவளின் முறைப்பை கண்டு கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடதக்கது...

அஞ்சலி அதர்ஷன் இருவரும் ஒருசேர வலது காலை வைத்து உள் நுழைந்ததை அடுத்து சிறுவர் பட்டாளம் அடுத்ததாக பெயரியர்களாகிய ராஜன் தேவகி ரிதன்யாவின் தாய் தந்தை ஷிவானியின் தாய் மற்றும் மற்றும் அஞ்சனாவின் தாய் அண்ணன் மற்றும் ஆலத்தை வெளியே உற்றி விட்டு வந்த சாந்தியை தொடர்ந்து அங்கு பங்கெடுத்து கொண்ட சண்முகவேலன் உட்பட அனைவரும் அடுத்தடுத்த பட்டாளமாக உள் நுழைந்து அந்த வீட்டை மகிழ்ச்சியால் நிறைத்தனர்...


உள்ளே நுழைந்ததை அடுத்து அடுத்த அடுத்த சடங்குகளை நிறைவேற்றவதின் முதல் கட்டமாக விளக்கேற்றி கடவுளின் முன் மண்டியிட்டு வேண்டி கொள்ள கூறிய தேவகியின் அறிவுறை படி அஞ்சலி குனியவும் அவளை தடுத்த அதர்ஷன் அம்மு முடிஞ்சா பண்ணு இல்லைனா சும்மா நின்னு தொட்டு கும்பிட போதும் என்றவனை பார்த்து அவள் பதில் அளிக்க வரும் முன்...

என்ன அண்ணா உங்களுக்கு தங்கச்சியாகிய நாங்க நான்கு பெரும் நாத்தனார் கொடுமை பண்ண ரெடியா இருக்கோம் நீங்க என்னடான எங்களோட முதல் சதி திட்டத்திலையே மண் அள்ளி போடுற மாதிரி உங்க பொண்டாட்டியை காப்பாத்துனா எப்படி என்ற ரிதன்யாவை நக்கலாக பார்த்தவன் அப்படியா என இமை உயிர்த்தி...

மேடமும் கொஞ்ச நாள்ல இந்த வீட்டுக்குத்தான் வருவிங்கல எனவும் சற்று தடுமாற்றத்தோடு ஆ..ஆஆமா அதுக்கு என்ன இப்போ என இழுத்தவளை பார்த்து...

உன் புருஷன்காரன் என் பொண்டாட்டிக்கு அண்ணா தான அப்போ நாங்களும் நாத்தனார் கொடுமை பண்ணலாம் இல்லையா என்று அவன் கூறவும் அஞ்சலி என்ன இன்னும் நின்னுக்கிட்டு இருக்க சீக்கிரம் தொட்டு கும்பிட்டுட்டு வா அடுத்த அடுத்த வேலை இருக்குல என்று பல்ட்டி அடித்தவளை பார்த்து ஆத்தி நல்ல வேலை நம்ம வாயை கொடுத்து மாட்டிக்கலை என அஞ்சனா பெருமூச்சு விட்டு கொள்ள மற்ற ரெண்டு பெண்களோ இவளை நம்பனது தப்பா போச்சு நம்மலே களத்துல இறங்கிற்கனும் என செல்லமாக சலித்து கொண்டனர்...

கேலியோடு தொடர்ந்த முதல் சடங்கை அடுத்த தொடர்ந்த எல்லா சடங்கிலும் கேலிக்கு பஞ்சம் இல்லாமலேயே சென்றது...

பால் பழம் உண்ணும் போதும் பெண்களோடு அவர்களின் இனைகளும் சேர்ந்து கொண்டு களைக்க அங்க சிரிப்பலை இன்னும் பெருகியது....

எல்லாம் சிறு சிறு சடங்குகளையும் முடித்து வைத்த பெரியவர்கள் கையோடு புது மணத்தம்பதியை பிரித்து வேவ்வேறு அறையில் ஒய்வெடுக்க கூறி அனுப்பிவிட்டு மற்ற வேலைகளில் ஒருவர் இன்னோருவருடன் கலகலத்தபடி பெண்கள் கூட்டம் ஒரு பக்கம் ஒதுங்கி கொள்ள அதே போல் ஆண்கள் கூட்டமும் ஊர் கதை உலக கதையை கலகலத்தப்படி ஒரு பக்கம் ஒதுங்கி கொண்டனர்....


வீடே நிறைந்து இருந்தது...எங்கும் சொந்தம் சூழ நந்தவனம் போல் காட்சி அழித்தது...


அறைக்கு வந்து தன் மெத்தையில் சாய்ந்த அதர்ஷனுக்கு உலகமே தன் உள்ளங்களில் தவழும்படியான பிர்மை தொன்றி அவனை ஆனந்த கூத்தாட வைத்தது...


அந்த சந்தோஷத்திலேயே கண்களை மூடியவனுக்கு தானாக அன்று அஞ்சலி வீட்டிற்கு சென்ற நிகழ்வு மனக்கண்ணில் திரைப்பட காட்சியாக விரிந்து அதை மீண்டும் நினைவுக்கூற செய்தது...


என்னதான் அஞ்சலி அனுதினமும் அதர்ஷனையே பிரதானம் என அவனை ஒன்றி கொண்டே திரிந்த போதிலும்...

மற்றவர்களை போல் தனக்கும் நிறைய உறவுகள் வேண்டும் என நினைத்ததை அதர்ஷனும் அறிந்தே இருந்தான்...

அதர்ஷனிடம் வெளிப்படையாக இவ அனைத்தையும் கூறி இருக்கலாம் தான் ஆனால் சித்தக்கு தன் மேல் நல்ல அபிமானம் இல்லாத போது நாளை தனக்காக அவர்கள் வாசல் தேடி செல்லும் அதர்ஷனை அவர்கள் வார்தையால் காயப்படுத்தினாலோ அல்லது முகத்தில் அடித்தாற் போல் நடந்து கொண்டாளோ அதில் பெரும் அளவு காயம் பட போவது அவனை காட்டிலும் அவள் தானே என்று உணர்ந்தவள் இந்த ஆகைகளை மனதோடு புதிந்து கொண்டாள்...


தொழில் துறையின் ஜாம்பவானாக திகழும் அதிர்ஷன் கண்களால் கணக்கிடும் வித்தையை சரிவர அறிந்திடாத அஞ்சலி அவனிடம் இருந்து இதை மறைத்து விட்டதாகவே எண்ணியிருந்தாள்...



அவளின் கண் அசைவில் பதியை அறிந்தவன் தூக்கத்தின் இடையே எழுந்த உளறலில் மீதி பாதியை அறிந்து‌ கொண்டவன் இதோ கோவையில் நடக்கும் போர்ட் மீட்டிங்கை காரணமாக வைத்து அவள் வீட்டுக்கு சென்றான்....


தேவகி தன் பெண் படும் துன்பத்திலும் ராஜனின் ஒதுக்கதிலும் திருந்தியவர் கிட்டதட்ட பழையதை நினைத்து நொடிந்து போயிருந்தார்...


எல்லாவற்றையும் உணர்ந்த கொண்ட பின் திருந்திவிட்டாலும் செய்த தவறு நெருஞ்சி முள் போல் மனதை நெருடி கொன்று தீர்த்ததும் உண்மை...


மரகதம் போலான சிவப்பு நிறத்தில் ஜோலித்த கதிரவன் தன் ஆதிக்கத்தை மேல் குறைத்து கொண்டு மக்களை மென்மையாக தழுவிய மாலை பொழுதினில்...


நடுத்தர வர்கத்தினர் வசிக்கும் அந்த பகுதியிக்கு சற்றும் பொருந்தி போகாத தன் உயர்தர ஆடி காரை வழுக்கி கொண்டு வந்து நிறுத்தியவன் அதில் இருந்து ஷ்டைலாக இறங்கி வெளி நின்று எந்த வீடு என பார்வையால் அலசினான் அந்த அடுக்கிய திப்பட்டி பெட்டிகள் போலான மொத்த விட்டையும்...

சுற்றிலும் மக்கள் அவனை வேடிக்கை பார்த்தை சாதரன சிரிப்போடு கடந்து விட்டான்...


அலசி பிடித்தவன் நேராக சென்று அஞ்சலி வீட்டு முன் நின்று அழைப்பு மணியை அடித்த ஒரிரு நிமிடத்தில் வந்து கதவை திறந்த தேவகி அவனை அடையாளம் காண முடியாது தலை சாய்த்து மெல்ல யார் நீங்க என்றவருக்கு அங்கு நிழவிய சூழலுக்கு பொறுந்தாமல் நின்றிருந்த அதர்ஷன் தவறான வீட்டை வந்து அடைந்ததாய் தான் நினைத்தார்...


அவர் கனிப்பை பொயாக்குவதாய் நா அஞ்சலியோ ஹஸ்பன்ட் இப்போ உள்ள வரலாமா என்றவனை பார்த்து ஒன்னும் புரியாமல் திருதிருவென விழித்தாலும் அவன் உள் வர வழி விட்டு ஒதுங்கி கொண்டார் அவர்...


தேவகியில் சத்ததில் ராஜனும் தன் சக்கர நாற்காலியை தள்ளி கொண்டு ஹாலுக்கு வந்திருந்தார்...


ராஜன் அவனை அடையாளம் காண முடியாமல் தடுமாறினாலும் உபச்சாரமாக அவனை பார்த்தே உக்காருங்க தம்பி என்றவர் பின் யாரு நீங்க என்றதும்..

நா சுத்தி வளச்சு பேச விரும்பல நேரா சொல்லுறேன் என அஞ்சலியை தான் கடத்தியதில் இருந்து இப்போது வரை அனைத்தையும் மறைக்காமல் கூறியிருந்தான்...


அஞ்சலிக்கு அடி பட்டதையும் சேர்த்தே அவன் கூறியதில் பதறியவர்கள் அஞ்சுக்கு என்னாச்சு எனவும் அவர்களை சாமாதனப்படுத்துவதாய்...டென்ஷன் ஆகாதிங்க ஒன்னும் இல்ல இப்போ நல்லா இருக்கா என்று அவன் கூறவும் தான் சிறிது ஆசுவாசம் பட்டனர் இருவரும்...


எல்லாம் சரி தம்பி இப்போ நீங்க இங்க வந்த விஷயத்தை இன்னும் நீங்க சொன்ன மாதிரி இல்லையே என நாசுக்காக ராஜன் அவன் வாயை கிளற முயன்றதை உணர்ந்து லேசாக சிரித்தவன் வந்த விஷயத்தை தவிர்க்க அவனும் விரும்ப மாட்டானே..

அஞ்சலிக்கு உங்க எல்லாரொடையும் இருக்கனும் ஆசை படுறா ஆனால் இவுங்க என்ன சொல்லுவாங்கனு தான் இதுவரை அந்த ஏக்கத்த என்கிட்ட கூட சொல்லலை என தேவகியை புறம் கை நீட்டி அவனை குறிப்பிட்டவன் மேலும் தொடரும் முன்..

தேவகி உடனே என்ன மன்னிச்சுருங்க என கை கூப்பி குனிந்து கொண்டவரை ஒரு ஆழ பார்வை பார்த்தவன்..பிசிறு இல்லாது எனக்கு தெரியும் நீங்க முன்னாடி மாதிரி இல்லனு என்றவன் மேலும் தொடர்ந்தான்..

ஆனால் இன்னோரு தடவை இந்த மாதிரி எதாவது பண்ணனும் நினைச்சா கூட என்னோட கடுமையான பக்கத்த பார்க்க வேண்டியது வரும் நா சொல்லுறதை நீங்க என்ன மாதிரி எடுத்துக்கிட்டாலும் எனக்கு கவலை இல்லை என அமர்தலாக எச்சரிக்கை விடுத்தவனை பார்த்து...


செஞ்ச பாவமே தலையை முட்டுது காலை இடிக்குது இதுக்கு மேலை அந்த குழந்தைக்கு பாவம் பண்ணி இன்னும் என்ன நானே அசிங்க படுத்திக்க விரும்பலை கண்டிப்பா இனி அப்படி பண்ண மாட்டேன் நீங்க நம்பலாம் என்றவரின் கண்களில் பொய் தெரியவில்லை என்றாலும் சான்ஸ் எடுக்க விரும்பாதவன் மீண்டும் கடுமையாகவே கண்டித்திருந்தான்..


அவரை கண்டித்தவனின் பாவம் கரடுமுரடாக மென்மை மொத்தமும் தன்னவளுக்கே சொந்தம் என்பதை நிறுபிப்பதாய் வார்த்தையும் இறுகியே வந்ததது...


ராஜன் அவனின் தெளிவான பேச்சு மற்றும் அளுமையிலும் அவன் பக்கம் பெரிதும் ஈர்க்க பட்டார்...


அதன் பின் பொதுவாக பேசிவிட்டு தன் அம்முவுக்கு தான் வைத்திர்கும் சர்ப்ரைஸ் மற்றும் ஏற்கெனவே தன்னவளுக்கே தெரியாமல் நடந்த ரெஜிஸ்டர் மேரேஜ் என அனைத்தையும் மறைக்கும் அவசியம் இன்றி கூறி முடித்தவன் தானே வந்து உங்களை அஞ்சலியிடம் அழைத்து செல்வதாகவும் கூறி அப்போதைக்கு அங்கிருந்து விடைப்பெற்று கொண்டு சென்றவன் மீண்டும் தன் பணியில் ஆழ்ந்து போனான்...


தன் மனக்கண்ணில் விரிந்த அனைத்தையும் அசைப்போட்டபடி நினைத்து கொண்டவன் நினைவலையின் பெருந்து நிறுத்ததை வந்து அடைந்த பின்னும் அப்படியே அமர்ந்து இருந்தான்...

தன்னவள் அருகில் இருந்தே பழகியவனுக்கு இப்போது தனிமையில் இருப்பது சற்று எறிச்சலாகவும் கடுப்பாகவும் இருந்தது...


பெரியவர்களோ அவர்களுக்கு இரவு சடங்கு நடக்கும் வரை பிரித்து வைத்தவர்கள் பின் அதற்கு மேல் அவனை வதைத்து அவன் கொடுக்கும் செல்ல தண்டனை தாங்கும் அளவிற்கு வலிமை இல்லாத பெயவர்கள் அஞ்சலியை எளிமையாக அலங்கரித்து அவன் அறைக்கு அனுப்ப தயார்படுத்தினர்...

இதில் அஞ்சனா மற்றும் ரிதன்யா வேறு அவளை சீண்டி சிவக்க வைத்து வெட்கத்தையே ஒன்பனையாய் பூசி இன்னும் அழகுக்கு அழகு சேர்த்து அவன் அறையில் விட்டு கலண்டு கொள்ளும் நொடி வரை அவர்கள் கேலியில் பன் மடங்கு சிவந்து புரித்து போனாள் அவள்..

என்னதான் இதன் முன் அவனிடம் ஒட்டி கொண்டே திரிந்தாலும் இப்போது புது பெண்ணிற்கே உரிய அச்சமோ என்னவோ இன்று நாக்கும் காலும் வெகுவாக ரோலாகி அவளை அவஸ்தை படுத்தியது....

தலையை நிமிர்த்த முடியாத நாணத்தோடு முகம் சிவந்து மெல்ல அடி மேல் அடி வைத்து உள் நுழைந்தவளை பார்த்து அவன் தான் மூர்ச்சையாகி போயிருந்தான்...

மெல்லிய புடவையும் நெற்றியில் எப்போதும் போலவே பொட்டு வைத்திருந்தவளின் பொட்டிற்கு மேல் பெரியவர்கள் ஆசிர்வத்து அவளை அனுப்பி வைத்ததின் அடையாளமாய் கீற்றாக தீருணிர் பளபளத்தது...

மெதுவாக அவளை நெருங்கி நூலிலை தூரத்தில் விலகி நின்றவன் மெதுவாக தன் மூச்சு காற்றால் அவளை சிலிர்க்க வைத்து சிரித்து தொலைத்து அவளை வெகுவாக சோதித்தான்...

இதில் அவள் முகத்தையே வேறு கண்ணேடுக்காமல் பார்த்து வைக்கவும் மேனி முழுவதும் சிவந்தவள் அந்த வெட்கத்தை மறைக்க அவன் மார்பிலேயே புதைந்தும் போனாள்...


அவளை தன்னுடன் நன்கு இறுக்கி கொண்டுசன்னமான குரலில் தப்பு பண்ணலாமா என‌ காதோரம் கிசுகிசுத்ததில் மொத்தமும் தன் வசம் இழந்து தான் போனாள் பாவையவள்...

அவன் பாதத்தில் ஏறி எக்கி அவன் இதழில் முத்தமிட்டு தன் சம்மதத்தை தெரிவித்தாள் அவனின் அம்மு....

அதில் உள்ளாசமாக தகித்தவன் தன் உயரத்திற்கு எக்கியும் உயரம் பற்றாமல் குதிக்காத குறையாக எக்கி நின்று தன் இதழ் கலந்தவளின் இடையில் கை கொடுத்து தன் முகத்தருகே தூக்கி கொண்டவன் அவளின் முத்தத்தோடு அவளையும் தனதாக்கி கொள்ளும் முயற்ச்சியில் முழு மூச்சாக்கா இறங்க தொடங்கினான்

மெது மெதுவா பெண்ணவளில் மொத்த அழகிலும் விரும்பியே செத்து பிழைத்து பெண்மையின் அடி ஆழம் வரை தன் தடம் பதித்து...பாவை அவளையும் மயக்கி அடுத்து அடுத்த கூடலுக்கு ஆச்சாரம் இட்டு சிறப்பாக முடித்தும் வைத்திந்தான்‌அக்கள்வன்....

இத்தனை நாள் உணர்ச்சி அடங்காமல் கொந்தலிக்கவில்லை என்றாலும் காரணத்தோடு கடலுக்கு அடியில் மடங்கி கொள்ளும் பெரிய அலை இன்று புயலாக வெடித்து சிதறுவதை போல் அவனின் உணர்ச்சியை தட்டி எழுப்ப செய்ய ரஅவனவளின் நுனி விரலின் ஸ்பரிசம் போதுமே ஆனால் அதையும் தாண்டி கிடைத்த அவளாகவே எல்லாவற்றையும் தனக்காக வாரவழங்கிய பின்னும் பிரமச்சரியம் காக்கும் மூடன் இல்லையே அவன் அதனால் அவள் விருப்பத்தோடே தன்னவளை தன்னுள் சுழட்டி கொண்டவனின் கட்டவிழ்ந்து போன உணர்வுகளும் இனை சேர்ந்து அவனின் தகிப்பை குறையாது கூட்டி விட்டது...

நலவும் இவர்களில் சங்கமத்தில் கூச்சம் கொண்டு தன் முகில் காதலனுக்குள் ஒளிந்து கொண்டாள்....

தொடரும்...
 
Last edited:
  • Like
Reactions: Maheswari