• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕8

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
84
89
18
Madurai
வேலைக்கு செல்ல வேண்டி காலை விரைவாக தூயில் களைந்து எழுந்து கொண்ட அஞ்சலி அன்னையிடம் பாடம் ஒப்பிக்கு பிள்ளையாக லீப்டில் மாட்டி கொண்ட நிகழ்வை ஏதோ வரலாற்று சரித்திரம் போல் நீட்டி வளைத்து கூறியதை கேட்ட அஞ்சனா தான் அயர்ந்து போனாள்...

அவள் கூறும் அனைத்திற்கும் தலையை ஆட்டி ஆட்டி கழுத்தே லேசாக சைடு வாங்கியது போல் ஆனது அவளுக்கு...இத்தனை நாள் தன் பேச்சை கேட்கவோ ரசித்து உள்வாங்கி கொள்ளவும் ஆள் இல்லாததில் வலுக்கட்டாயமாக தனக்குள் அடங்கி போன குறும்புதனம் இப்போது அஞ்சனா முன் இலகுவாக வெளிப்பட்டது உணர்ந்து கொண்ட பாதுகாப்பான உறவு முறையில்....

ஆனால் எப்போதும் இல்லாத இந்த தோனதோன பேச்சு பாதுகாப்பை உணர்ந்ததால் மட்டும் தானா இல்லை வேறோன்றை மறைக்க வம்படியாக மாட்டி கொண்ட முகமூடியா என்பது அவளுக்கே வெளிச்சம்..

ஏனோ நடந்த அத்தனையும் வார்த்தை பிறழாமல் ஒப்பித்தவள் தன்னை ஒருவன் முத்தமிட்டதை மட்டும் மறந்தும் கூறியிருக்கவில்லை அஞ்சலி ஒரு வேலை காதலின் முதல் அடியாக கள்ளம் புகுந்து கொண்டதோ இல்லை மறந்து போனாலோ அல்லது அப்படி ஒரு காட்ச்சி அவள் நினைவில் பதியவே இல்லையா என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்தது ரகசியம் அவை...

அஞ்சலி முன் சலித்தது போல் பாவம் காட்டினாலும் அவளுக்கும் பிடித்தே இருந்தது..குடும்பதை பிரிந்து தனித்து இருப்பவர்களுக்கு நட்பு வட்டாரம் மட்டும் தானே ஆறுதல்..அதுவும் நட்பு வட்டம் பெரியதாக இல்லாத பட்சத்தில் கிடைத்த ஒரே தொழியாகவும் தங்கையாகவும் அஞ்சலி அதுவும் இவள் குழந்தை போல் தன்னையே சுற்றி வந்து இம்சை செய்து செல்லம் கொஞ்சுபவளை எப்படி பிடிக்காமல் போகும்

நேற்று மாலிற்க்கு சென்று வந்தவள் ஊரில் இருந்து பயனம் செய்து வந்த களைப்பு மற்றும் உணவு உண்ட அயர்ச்சி என வந்ததும் அஞ்சனா சமைத்து வைத்திருந்த உணவை பெயருக்கு கொறித்து விட்டு தூங்கியவள் தான் அதன் பின் அஞ்சனா வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அரவம் கூட உணராது அடித்து போட்டது போல் தூங்கியவளை அவளும் தொந்தரவு செய்ய விரும்பாது எழுப்பவில்லை...வெகு நாட்கள் கழித்து நித்திரா தேவி ஆதரவாக மாடியில் தாங்கி தாலாட்டியதில் அயர்ந்து உறங்கி இருந்தவள் கதிரவனின் வரவை அவனின் இளம் வெப்ப கதிர்களை தன் முகத்தில் உணர்ந்து பின் தான் தூயில் களைந்தாள் பாவையவள்...

அப்போது ஆரம்பித்து இன்னும் விடாது கதை அளந்து கொண்டு இருந்தவளுக்கு ம்ம் கொட்டி கொண்டே இருவருக்கும் சிம்பிளாக பிரேக்பாஸ்ட் மற்றும் லன்ச் தயாரித்து தனி தனி டப்பாவில் அடைத்து வைத்து சுற்றி இருந்த வேலைகளையும் அஞ்சலியின் உதவியுடன் செய்து முடித்து திரும்பிய பின்னும் கூட விடாது தொடர்ந்த அவள் பேச்சில் பெருமூச்சு விட்டவளை கண்டு கொள்ளாது சிறு விஷயத்தையும் பத்தியாக ஒப்பித்தவளை பார்த்து...

உனக்கு இந்த வாய் வலிக்குமா வலிக்காத அது முதல்ல வாய் தானா ஏதோ ரப்பர் பேன்ட் மாதிரி அது பாட்டுக்கு வேலை செய்து என கூற..

அதில் மூக்கை சுறுக்கி அவளை முறைத்தவள் நா ஒன்னும் ரொம்ப பேசலயே ஏதோ லைட்டா பேசறேன் அதுக்கு இது வாயானு கேக்குறிங்க என சண்டைக்கு வரிந்து கட்டி கொண்டு வந்தவளை பாவமாக பார்த்து வைத்தாள் அஞ்சனா...

பீளிஸ் அஞ்சுமா எங்க அம்மாக்கு நா கடைசி புள்ள இன்னும் கொஞ்ச நாள் உன் தயவுல வாழ்ந்துட்டு போறேனே விடேன் என கை எடுத்து கும்பிட்டவளை கண்டு சிரித்தவள்...

அவள் தோள் தட்டி சரி விடுங்க பயப்பிடாதிங்க நைட் பாத்துக்குலாம் என சாதரணமாக கூறி சென்றவளை அஞ்சனா தான் திகைத்து பார்த்தாள் அப்போ இன்னும் முடியலையா...இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு என எப்போதோ மயங்கி சரிந்து இருந்தாள் பாவம்...

ஒருவாறு கிண்டலும் கேலியுமாக இருவரும் தங்களை எதிர் நோக்கி நின்ற அலுவலை பார்க்க சென்றனர்...அஞ்சனாவின் அலுவலகத்திற்கு முன்பு தான் அஞ்சலியின் அலுவலகம் என்பதால் அவளே அவளை ஆப்பீஸில் நேரம் தவறாமல் விட்டு விட்டு தன் ஆப்பீஸ் நோக்கி சிட்டாக பறந்து இருந்தாள் அஞ்சனா...

அஞ்சலி ரிசேப்ஷனில் தன் அப்பாயன்மென்ட் ஆடரை காட்டி எம்.டியை பார்க்க வேண்டும் என கூற..ரிசேப்ஷனில் இருந்த பெண்ணும் புன்னகை முகமாக அவளை எதிர்கொண்டு அதனை வாங்கி பார்த்தவள் பின் அவளிடம் இன்னும் கொஞ்சம் நேரத்தில் எம்.டி வந்துருவாறு வெயிட் பன்னுங்க என கூறி அவளை காத்திருக்க வைத்தாள்..

அவளும் சிறு புன்னகையுடன் அவள் காட்டிய இருக்கையில் அமர்ந்து காத்து கொண்டு இருக்க சற்று நேரத்தில் அவள் கூறியிருந்தது போலவே அந்த கம்பேனியின் எம்.டி வேக எட்டுக்கலுடன் ஆபிஸீனுள் நுழைந்ததை கண்ட அந்த ரிசப்ஷனில் இருந்த பெண் அவனிடம் அஞ்சலியை அனுப்பவா என கேட்க..அந்த பக்கமும் வர சொல்லுங்க என கூறியதில் அஞ்சியை எம்.டியின் அறைக்கு அனுப்பி வைத்தாள் அவள்..


அஞ்சலி அனுமதி கோரி கதவை தட்டி அனுமதி பெற்று உள்நுழைந்தவள் கடையோர சன்ன சிரிப்புடன்
குட் மார்னிங் சார் என காலை வணக்கத்துடன் அவன்‌ முன் நிற்க்க...

அவளின் வணக்கத்தை தலை அசைப்புடன் ஏற்று கொண்டவன் உக்காருங்க என கூறி அவளிடம் இருந்து அப்பாயன்மென்ட் ஆடரை வாங்கி பார்த்து கையொப்பம் இட்டவன்..பின் நிமிர்ந்து அவளை பார்த்து மிஸ் அஞ்சலி ரைட் என கேட்க...

அதற்கு அவளின் தலை அசைப்பை தொடர்ந்து அவன் அவளிடம் நாங்க உங்களை எதுக்கு ஹயர் பண்ணியிருக்கோம்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன் உங்களோட வர்க் எப்பயும் எங்க கிளைன்டோட டிசையரை உங்க வர்கால செடிஸ்பை பண்ணுவிங்கனு நம்புறேன் என அவன் கூறியதற்கு கண்டிப்பா சார் என கூறியவளை பார்த்து..

யூ கோ அஹெட் வித் வர்க் என கூறி மேனேஜரை தன் கேபினுக்கு அழைத்து இவுங்க நியூ ஜாய்ன் ஹெல்ப் பன்னுங்க அப்பறம் அவுங்களுக்கு எலோட் பண்ண கேபின் காட்டிருங்க என அத்தோடு தன் பேச்சை முடித்து கொண்டவன்..யூ போத் மே லீவ் நௌ என தன் பணியை தொடர்ந்தான் செல்வராகவன்...


அவன் வார்த்தையை தொடர்ந்து வெளியேறிய இருவரையும் பார்த்தவன் பின் மேனேஜர் பின்னோடு சென்ற அஞ்சலியை பார்த்தவனின் இதழில் ஓர் மர்ம புன்னகை..


மேனேஜர் அவளுக்கு அனைத்தையும் விளக்கி விட்டு அவள் வேலை செய்வதற்கு ஏய்துவாக அனைத்தையும் அமைத்து கொடுத்து வேலை செய்ய வேண்டிய பிராஜெக்ட்டையும் விளக்கியர் பின் ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க என கூற நகர்ந்து விட அஞ்சலியும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையில் தன்னை ஆழ்த்தி கொண்டாள் சிரத்தையாக..


************
அதர்ஷன் தன் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்த போது அனுமதி பெற்று உள் நுழைந்தான் வீர்..
உள்ளே வந்தவன் சில கோப்புகளை அதர்ஷன் முன் வைத்துவிட்டு அவன் அறிந்த தகவலை கூறி அவன் முகத்தை ஆராயா அவனோ முகத்தில் மாற்றங்கள் அற்று வீரை பார்த்தவன்...

உனக்கு எப்படி தெரியும் என கேட்க அவனும் தான் எப்படி அறிந்து கொண்டேன் என்பதை விவரித்து கூற..

அதனை கேட்டு கோனலாக இதழ் வளைத்த அதர்ஷன் வீருக்கு சில கட்டளைகளை பிறப்பித்தவன் பத்திரமா பண்ணு என கூறியவன் பின் தேவா எங்க என கேட்க...

இப்போ அவன் ஓகே அண்ணா என கூறியவனுக்கு தலை அசைத்தவன் சரி போ என கூறியவன் மீண்டும் தன் வேலையில் கவனமானான் அதர்ஷன் வர்மா...


தேவா ஒர் விசுவாசமான காவல்காரன் அதர்ஷனுக்கு...அவன் மேல் துரும்பு படும் முன்னமே துரும்பை கிளப்பியவனை அடியோடு சரிக்கு ஆஸ்தான் விசுவாசி அவன் என்ற போதும் இவனும் அதர்ஷனுக்கு இன்னோரு தம்பி தான்...

குடும்பம் மொத்ததையும் ஓர் விபத்தில் இழந்த அந்த பதிநான்கு வயது சிறுவன் மனம் கடிவாளம் இன்றி அழைந்து குறுக்கு வழி தேடி அழைந்தோடி தறிகெட்டு போகும் நேரம் அதர்ஷன் தான் அவனை நேர்வழி படுத்தி‌ அவன் விரும்பிய கல்வி மற்றும் பயிற்று கல்வியை கற்று கொடுத்து யாரின் உதவியும் இன்றி தன்னை செதுக்கி கொள்ள அவனையே உளியாக மாற்றியதில் அவன் செய்யும் சிறு கைமாறுதான் அவனுக்கு எப்போதும் அரணக இருப்பது...

வீர் யுக்கியால் வீழ்த்துவான் என்றால் தேவா களத்தில் இறங்கி அனைவரையும் அடித்து வீழ்த்துவான்...ஆனால் இருவருக்கும் சாதுர்யமாக சிக்கலை அவிழ்பதில் கிள்ளாடி அதர்ஷனின் காற்று இவர்களுக்கும் வீசும் இல்லையா

தேவாவிற்கு டிரெக்கிங் என்றால் மிகவும் பிடித்தம் எல்லா நாளும் அதர்ஷன் மறுத்தாலும் மைக்கல் மதன காமராஜன் படத்தில் வரும் பீம் பாய் போல் எப்போதும் பின்னோடே அரணாக வருபவன் அதர்ஷன் வெளி நாடுகள் பயன் மேற்கொள்ளம் போது மட்டும் அவன் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு மலைக்கு மலை தாவ சென்று விடுவான்..

இப்போதும் அதே போல தான் மரத்தில் ஏறுகிறேன் மலையில் தாவுகிறேன் என சென்றவன் மலையில் இருந்து சரிந்து பலத்த அடியுடன் திரும்பி இருந்தான் அப்போதும் தன் கடமையில் இருந்து தவறாது சிலரை எப்போதும் அதர்ஷனுக்கு பாதுகாப்பாக வைத்து விட்டு தான் வீட்டில் இருக்கிறான்...மொத்ததில் எப்போதும் துருதுருவென திரியும் ரௌடி பேபி இவன்...


************
விஷயம் அதர்ஷனின் காதிற்கு சென்று அடையும் முன் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும் என பரபரத்து நின்றான் செல்வராகவன் ஏனினில் இனி அவனால் பின் வாங்கவும் முடியாது அதற்காக பகிரங்கமாக செய்யவும் முடியாது அது அப்பட்டமாக அனைவருக்கும் அவன் முகத்திரையை கிழித்து படம் பிடித்து காட்டி விடும் அவனின் சுயரூபத்தை என்பதால் மெதுவாக அனைத்தையும் திட்டமிட்டு செய்தான் கரணம் தப்பினால் மரணம் என்னும் நிலை தான் இவனுக்கு இருந்தும் ஆசை விடவில்லையே..


ஆனால் யாருக்கு தெரியவே கூடாது என பார்த்து பார்த்து அனைத்தையும் செய்தானோ அவனுக்கு தெரியாமல் இருந்ததா என்றால் ஐயம் தான் பாவம்..


**************
மாலை மணி ஆரை தொட கீச்சிட்டு தங்கள் கூட்டை நோக்கி பறந்து செல்லும் பறவைகளாக தம்தம் இல்லம் நோக்கி கிளம்பி இருந்தனர் மனித இனங்கள்..

அஞ்சலியும் தன் அன்றைய பணியை முடித்து பைல் செய்து மேனேஜர் டேபிளில் சப்மிட்‌ செய்து விட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து அஞ்சனாவுக்காக காத்திருந்தாள்...அவளும் காலை கூறி இருந்தது போல மறவாமல் அஞ்சலியை அழைத்து கொண்டு இருவருமாக தங்களின் இல்லம் நோக்கி சென்றனர்...


வழிநெடுக வழக்கம் போல் கதை அளந்து கொண்டே வந்த அஞ்சலி திடிரென ஏதோ யோசனையில் அமைதியாகியதை சைட் மிரர் வழியே கண்ட அஞ்சனா என்னாச்சுடி எப்பையும் பட்டாசு மாதிரி படபடனு பொறியுவ இப்போ என்ன திடிர்னு அமைதியா வர என வினவ...

ஹான் என நிகழ் உலகிற்கு வந்தவள் ஒன்னும் இல்லை சட்டுனு ஒரு யோசனை அதான் யோசிச்சுட்டு இருந்தேன்...

அப்படி என்ன யோசனை...

அது என ராகம் இழுத்தவளை டக்கென தடுத்த அஞ்சனா வேண்டாம் தாயி அப்பறம் அதுக்கு தனியா நீ ஒரு கதை சொல்லுவ எதுக்கு விடு நா வேற இதயம் பலவீனமானவ என சீரியஸாக முகத்தை வைத்து கிண்டல் செய்ததில் தான்‌ ரொம்ப தொல்லை செய்கிறோம் போல என வருந்திய அஞ்சலி முகம் சுருக்கி நா உங்கள ரொம்ப தொல்லை பண்ணுறேனா என கேட்க

அவளோ முகபாவம் மாற்றாது ம்ம் தொல்லைனு சொல்ல முடியாது ஆனா அப்படித்தான் என மிரரில் அவளை பார்த்து சின்ன சிரிப்புடன் கூற..

தன்னிடம் விளையாடுகிறாள் என கண்டு கொண்ட அஞ்சலி நா அப்படி தான் பண்ணுவேன் நீங்க தாங்கி தான் ஆகனும் என உரிமையாக சண்டையிட்டு வழிநெடுக அமர்க்களம் செய்தபடி வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்...


வீட்டிற்கு வந்ததும் அவர்அவர் அறைக்கு சென்று ஃப்ரெஷ் அப் ஆகி வந்தனர் அஞ்சனா அஞ்சலியை தொல்லை என்று கூறியதில் செல்ல கோவம் கொண்டு பேச மாட்டேன் போங்க என கூறியவளை பார்த்து பார்ப்போம் இன்னும் எவ்வளவு நேரம்னு என சத்தமாகவே அவளிடம் கூற அவளோ திருப்பி கொண்டாள்...சிறிது நேரம் திருப்பிக்கொன்டே திரிந்தவள் வயிறு பசி எடுக்க அவளே பேசிவிட்டால் இல்லை இல்லை சரண்டராகி விட்டாள் என்பது தான் சரியாக இருக்கும்...

அக்கா என்ன சாப்பாடு எனக்கு பசிக்குது என கேட்க..

யாரோ என்கிட்ட பேச மாட்டேன்னு திருப்பிட்டு போனாங்க என கேட்க..

ஹிஹி என தன் முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டி இளித்து வைத்தவள் அந்த மானஸ்தி ஒடி போய்டா அவ கிடக்கிறா நீங்க சொல்லுங்க என்ன சாப்பாடு

வாலு வாய் வாய் என செல்லமாக அவள் கன்னதை தட்டி அவளிடம் வம்பளந்து கொண்டே செய்து வைத்து இருந்து தோசையை அவளுக்கு கொடுத்து தானும் சாப்பிட்டாள்...இவ்வாறே அன்றைய நாள் இருவருக்கும் இனிமையாகவே கழிந்து இருந்தது...


இருவரும் வேவ்வேறு அறையில் தூங்க சென்று சிறிது நேரத்தில் நித்திரா தேவியிடம் தஞ்சம் புகுந்து தூயில் கொண்டு இருந்த நேரம் கொள்ளைப் புறத்தில் இருந்து சுவர் எறி குதித்து வந்த ஒரு உருவம்..சத்தம் இல்லாமல் பூனை நடையிட்டு அஞ்சலியின் அறையில் நுழைந்து தூக்கத்தில் ஆழ்ந்து இருந்தவள் மூக்கில் மயக்கம் மருந்து வைத்து அழுத்தி அவளை தூக்கி கொண்டு அதே போல் சத்தம் வராமல் வந்த வழியே சென்று இருந்தது அந்த உருவம்.......


தொடரும்.......
 

Anusha Senthil

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
75
18
18
Coimbatore
வெரி நைஸ் எபி ப்ப்பா
ஃபாண்ட் சைஸ் மட்டும் கொஞ்சம் பெருசு பண்ணுங்க
 
  • Like
Reactions: Brindha Murugan

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
105
43
Theni
கதை நல்லா போகுது மா
கொஞ்சம் ரெகுலர் எபி கொடுங்க, அப்போதான் கன்டினியூட்டி மிஸ் ஆகாது
 
  • Like
Reactions: Brindha Murugan

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
84
89
18
Madurai
கதை நல்லா போகுது மா
கொஞ்சம் ரெகுலர் எபி கொடுங்க, அப்போதான் கன்டினியூட்டி மிஸ் ஆகாது
Okk akka kandippa
 

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
112
30
28
Trichy
விருவிரப்பா போகுது, பாதில நிறுத்திடாதீங்க. அண்ட் கொஞ்சம் ஃபான்ட் சைஸ் பெருசு பண்ணுங்க
 
  • Like
Reactions: Brindha Murugan

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
417
100
43
Tirupur
சூப்பரா போகுதுடா 👌

அட யாருடா அது அதர்னோட மான்குட்டிய தூக்கினது?
ஒருவேளை அதர்ஷனோட பிளானா??? 🤔
 
  • Like
Reactions: Brindha Murugan

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
84
89
18
Madurai
விருவிரப்பா போகுது, பாதில நிறுத்திடாதீங்க. அண்ட் கொஞ்சம் ஃபான்ட் சைஸ் பெருசு பண்ணுங்க
Padhila nirutha matten yenna naa konjam somberi ud mattum appo appo lateaa varum adha mattum periya manadu panni manichuu
 

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
84
89
18
Madurai
சூப்பரா போகுதுடா 👌

அட யாருடா அது அதர்னோட மான்குட்டிய தூக்கினது?
ஒருவேளை அதர்ஷனோட பிளானா??? 🤔
Oruvelai irukkumo