• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕9

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
48
87
18
Madurai
நலாமகள் தன் பூவி தோழியிடம் பிரியாவிடை பெற்று தன் முகிலவனிடம் தஞ்சம் பெற்று கொண்ட நேரம் கதிரவன் பூவியை ஒளிர செய்யும் கடமையை தனதாக்கி கொண்டு தன் கதிர்களை பாரில் பரிப்பி அன்றய நாளை பல திருப்பங்களோடு தொடங்கி வைத்திருந்தான் அவன்....

இன்னும் கண் மலராது தூங்கிய பெண்ணவளை தாமரை என எண்ணினான் போலும் கதிரவன் தன் கதிர்களால் அவள் முகத்தை திண்டி தன் வரவை உணர்த்தியதில் அயர்ந்து உறங்கிய மங்கையவள் துயில் களைய மெதுவாக கண்விழித்தாள் அஞ்சலி...

துயில் களைந்த பின்னும் கூட‌ எழுந்து கொள் மனம்‌ இன்றி பஞ்சனையில் புரண்டவளுக்கு சட்டென ஏதோ வித்தியாசமான உணர்வு உந்தி தள்ளியதில் உறக்கம் மொத்ததையும் சடுதில் மூட்டைகட்டி விட்டு எழுந்து அமர்ந்தவள் குனிந்து தன் உடயை பார்க்க அதுவோ நேற்று தூங்க செல்லும் முன் அனிந்து இருந்த உடை அல்லாது வேறு உடை தன் உடலை தழுவி இருந்ததில் சற்று அதிர்ந்தவள் அப்போது தான் தான் இருக்கும் அறையை சுற்றி பார்த்தாள்....

அடம்பரம் மினுங்கிய நுட்பமான கட்டுமானம் கொண்ட அந்த பிரம்மாண்ட அறை அவளை கவராது அச்சுறுத்தி பயம் கொள்ள செய்தது... இது என்ன இடம் ஒருவேளை தான் தான் கனவு காண்கிறோமோ என நினைத்தவள் அச்சத்தோடு அறையை சுற்றி பார்வையை சூழலவிட்டவள் பின் மீண்டும் குனிந்து தன்னை பார்த்தவள் நாசியில் அனுமதி இன்றி நிறைத்த அன்று உணர்ந்த அதே ஆண் மனமதில் தன்னை மறந்து லயித்து பின் திடுக்கிட்டு மீண்டவள் தன் கண்களை கசக்கி கொண்டு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கிறகித்து கொள்ள முடியாதவளாய் எதுவும் புரியாமல் பார்வையை சுழலவிட்டு அமர்ந்து இருந்த நேரம்...

கதை திறந்து கொண்டு யாரோ வரும் அரவம் கேட்டு நெஞ்சு கூடு அதிர பட்டென எழுந்து நின்றவள் யா..யாரு என குரல் கரகரக்க கேட்டதற்கு தொடர்ந்து உள் நுழைந்த அதர்ஷனை கண்டு பயந்து இரண்டடி பின் வைத்தவளுக்கு அப்போது தான் தான் கடத்தப்பட்டு இருக்கிறோம் என்பதே சிந்தையில் உரைத்தது அதில் மேலும் மிரண்டவள் தன்னை பார்வையால் துளைத்து முதுகு வழி வெளிவருவது போலான அவன் கூர் பார்வையில் அச்சத்தை மீறிய குறுகுறுப்பு உடலில் பரவுவதை அவளால் தடுக்க முடியவில்லை....

அவனோ அவளை தலை முதல் பாதம் வரை கீழ்கண் பார்வையால் அவளை களவாடி அவனுக்கே தெரியாமல் காதலுக்கு பதியம் போட்டு கொண்டுவன் பார்வை கிஞ்சித்துக்கும் அவளை விட்டு அகல மாட்டேன் என சண்டி தனம் செய்து அவனின் பேச்சை கேளாது அதன் வேலையை தொடர்ந்து கொண்டு இருக்க சம்மந்தப்பட்டவளோ தலையை பூமிக்குள் புதைத்து விடுபவள் போல் குனிந்து இருந்தாள்...

பிரயத்தனப்பட்டு நியாயம் கேட்க என்னி தலையை நிமிர்த்தி எ..என்ன என கேட்க வந்தவள் அவனின் விழி வீச்சில் அதற்கு மேல் வார்த்தை காற்றோடு ஐக்கியம் ஆகியதில் பேச்சற்று மீண்டும் குனிந்து கொண்டவளுக்கு திடிரென அன்று லீப்டில் நடந்த காட்சி மனத்திரையில் அழையா விருந்தாளியாக விரிந்ததில் திகிடுக்கட்டு சம்மந்தமே இல்லாமல் இதழை கடித்து வெட்கம் பட்டு கொண்டாள்....

அவளின் பாவனையை சொட்டு விடாது அள்ளி எடுத்து தன் மனப்பெட்டகத்தில் செமித்தவன் வந்த காரியத்தை மறந்து இருந்தான்...

கடத்தியவனிடம் எதற்கு சம்மந்தமே இல்லாம் இப்படி வினோதமான உணர்வு முகிழ்கிறது என்ற சாரம்சம் எல்லாம் அவள் புத்திக்கு உறைக்கவில்லை..இப்போது மூளையை குடைந்த கேள்வி எல்லாம் இவன் ஏன் தன்னை கடத்தி இருக்கிறான் என்பது தான் ஆனால் அதை கேட்கவும் முடியாமல் தத்தளத்தவள் இன்னும் கூட தலையை நிமிர்த்திய பாடு இல்லை...

ஹைவேயில் தடையின்றி வேகமேடுத்து பயனிக்கும் வாகனம் போல் சிறுதுளி கள்ள பார்வையோடு அவள் உச்சியில் பறக்கும் ஓரிரு முடியில் இருந்து இன்ச் இன்ச்சாக ஒன்றையும் விடாது உள்வாங்கி வந்தவனின் பயணம் அவள் தலை கவிழ்த்தி இருந்ததில் வழியில் முட்டுகட்டையாக தடைப்பட்டு கொண்டதில் பெரிதும் கவலை பட்டு கொண்டவன் குரலை செரும..

அதில் இன்னும் இரண்டடி பின்நோக்கி வைத்து யா..யா..யாரு நீ எ..எதுக்கு எ..என்ன எதுக்கு கடத்..துன என அவன் விழி வீச்சில் இருந்து தப்பிக்க என்னி திக்கி திணறி வேள்வியை முன்வைத்தவளை பார்த்தவன்..

அவள் தன்னை ஒருமையில் அழைத்தது மனதோரம் குளிர்ந்த நீர் துளியாக இதயத்தை நனைத்து இதம் அளித்தாலும் அதை சிறிதும் வெளிக்காட்டி கொள்ளாமல் ஏய் என்ன நீ நான்னு மரியாதை இல்லாம பேசுற என கடுமை முகம் காட்டி சரசம் இழுத்தவனின் உள்நோக்கம் புரியாது பயந்தவள் கண்ணில் கண்ணீர் திரையிட்டு போனது அந்த மெல்லியாளுக்கு

பிறகு தன்னை திடப்படுத்தி கொண்டவள் பயத்தில் வார்த்தையை சிதற விட்டு இருந்தாள் ஏ..ஏன் இப்படி பொ..பொறுக்கி மாதிரி மிரட்டி பயமுறுத்துரீங்க என்ன வித்துட்டு போறது தான உங்க நோக்கம் அதுக்கு தான என் மிரட்டி அடிப்பனிய வைக்க பாக்குறிங்க என அவள் வார்த்தையை முடிக்கும் முன் தன் ஐவிரலையும் அவள் கன்னத்தில் பதித்து இருந்தான் அதர்ஷன் வர்மா..

இத்தனை நேரம் இதயத்தில் பரவி இருந்த குளிர்ச்சாரலில் இப்போது அமில நெடியாக வந்து வழுந்த அவள் வார்த்தையில் கண் மண் தெரியாமல் கோவம் கொண்டு அறைந்து இருந்தான்..

இதழை பிதுக்கி பிஞ்சு கன்னம் தக்காளிப்பழம் போல் சிவந்து கண்ணீரோடு விசும்பி கொண்டு அழுதவளை பார்த்து மனம் கசந்தவன் சட்டென அறையை விட்டு வெளியேறி இருந்தான்...

மெதுவாக அவளை சுற்றி இருக்கும் ஆபத்தை அவளுக்கு விளக்கி அவள் பயந்துவிடாத படி பேசி நிலையை புரியவைக்க தான் வாந்தான் ஆனால் அதற்குள் நிலையே மாறி போனதில் முதலில் மகிழ்ந்தவன் பின் மகிழ்ந்ததற்கும் சேர்த்து சோகத்தை சுமந்து வாட்டமாக வெளியேறி இருந்தான் மான்குட்டியின் அரக்கன் அவன்...

வெளியே வந்தவன் நேரே வீரிடம் வந்து கிளம்பலாம் என்ற வார்த்தையோடு முகம் கடுகடுக்க முன்றி சென்று காரில் அமர்ந்தவனின் முகம் காட்டிய காட்டமான‌ பாவத்தில் அவனும் கேள்விகள் இன்றி வண்டியை கிளப்பி இருந்தான்..

வண்டி நகறும் முன் வீரிடம் நிறுத்த கூறியவன் காரில் அமர்ந்தபடியே சாந்தி அக்கா என குரல் கொடுத்ததை தொடர்ந்து வெளியே வந்த பெண்மனியிடம் அவளுக்கு சாப்பாடு குடுங்கு என‌ கூறியவன் பின் கிளம்பும் நேரம் நானும் வரேன் என வந்து நின்ற தேவாவை மறுத்து நீ கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வா என கூறியவனை எதிர்த்து இல்லை அண்ணா என பேச வந்தவனை தன் பார்வையால் அட்க்கி பேச விடாது செய்தவன் கிளம்பி இருந்தான் தன் அலுவலகத்திற்கு...


அவன் தன்னை அறைந்து விட்டு சென்றதில் அழுதப்படி அமர்ந்து இருந்தவள் தன்னை ஏன் கடத்தினான் என்ற கேள்வி தொக்கிய மனதுடன் சோர்ந்து அமர்ந்து இருந்தவளுக்கு தன் மேலேயே கழிவிரக்கம் பிறந்தது தன் நிலையை என்னி..

அப்போது அதர்ஷன் சொல்லுக்கு இனங்க கையில் சாப்பாடு தட்டுடன் அவள் அறைக்கு வெளியே நின்று கொண்டு கதவை தட்டினான் தேவா...கதவு தட்டும் சத்ததில் மிரண்டு எங்கு சென்றவன் திரும்பவும் வந்து அடிப்பானோ என அச்சம் கொண்டு கதவை திறக்காமல் கதவையே பார்த்தப்படி அமர்ந்து இருக்க...

மீண்டும் கேட்ட கதவு தட்டும் சத்ததில் வேறு வழி இன்றி மெல்ல கதவை திறந்து ஏதிரில் நின்ற புதிய ஆடவனை மிரட்ச்சி விழியால் எதிர் கொண்டவளை பார்தது லேசாக சிரித்தவன் நீ இன்னும் சாப்பிடலேல அதான் சாப்பாடு கொண்டு வந்தேன் சாப்பிடு என பரிவாக கூறி தான் கொண்டு வந்த தட்டை அவளிடம் நீட்ட..

அவளும் மறுத்தலிக்காது தலையை ஆட்டி வாங்கி கொண்டாள்..அவன் சென்றதும் கதவை அடைத்து விட்டு சாப்பிட‌ தோன்றாமல் மேஜை மேல் சாப்பாட்டை அப்படியே வைத்து விட்டு தரையிலேயே சுருண்டு படுத்து கொண்டாள் தன் வாழ்கை பயனிக்கும் திசை தெரியாதவளாய்...

*****************
காலை எழுந்ததில் இருந்து அஞ்சலியை தேடி தேடி சலித்துவிட்டாள் அஞ்சனா...

காலை எழுந்து வெளியே வந்தவள் அஞ்சலியை காணாது அவள் அறையை பார்க்க அதுவோ திறந்து இருக்கவே உள் செல்ல போனவள் பின் சரி அசந்து தூங்குகிறாள் போலும் என நினைத்து அவளை தொல்லை செய்யாது அவளே வரட்டும் என நினைத்து மற்ற வேலையில் எடுப்பட்டாள்..

அவள் சமைத்து முடித்து குளித்து வந்த பின்னும் கூட இன்னும் வெளிவாரதவளை என்னி இன்னுமா தூங்குறா இவ என்று நினைத்தவள் அஞ்சலி என சத்தம் கொடுத்தபடி அறையை திறந்து கொண்டு அவளை எழுப்ப என்னி உள் சென்றவளை வெற்று அறையே வரவேற்றது...சரி குளியலரையில் இருப்பால் என குளியல் அறையை கதவை தட்டும் சமயம் தான் கவனித்தாள் அதுவும் வெளியில் இருந்து பூட்டி இருந்தது..

அவள் எங்குமே இல்லாததில் பதற்றம் தொற்றி கொள்ள விறுவிறுவென வீடு முழுக்க தேட எங்கேயும் அவள் இருப்பதாக தெரியவில்லை ..

எந்த யோசனையும் பிடிப்படாமல் எங்கு சென்றால் என்ற பதைபதைப்போடு தெடியவளுக்கு பயமாக இருந்தது இப்போது தான் அவள் சித்தியின் கொடுமையில் இருந்து தப்பித்து இங்கு நிம்மதியாக இருந்தாள் அந்த நிம்மதியும் அழிந்தது போல் இப்போது புதிதாக ஏதாவது சிக்கலில் மாட்டி கொண்டாளா என ஒரு‌ மனம் அடித்து கொள்ள மறு மனமோ ஒருவேலை இங்கு தெரிந்தவர்கள் யார் வீட்டிற்காவது சென்று இருப்பாளோ என கேள்வி எழுப்பி அலைப்பாய்ந்த மனதை சமன் செய்ய முயன்றது..

அப்படி தெரிந்தவர்கள் வீட்டிற்கு சென்றாலும் ஏன் தன்னிடம் சொல்லவில்லை...அன்றைக்கு ஷிவானி கூறும் போது கூட இந்த ஊரில் அவளுக்கு யாரையும் தெரியாது பத்திரமா பாத்துகொங்க என கூறினாளே என அவளே கேள்வியும் கேட்டு விடையும் அளித்து கொண்டு பயந்துவள் தான் தான் அவளை கவனம் இன்றி தொலைத்து விட்டோம் என தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டாள்...


அப்போது அவளுக்கு பக்கத்தில் கேட்ட காலடி சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவள் தனக்கு முன் நின்ற அந்த புதிய ஆடவனை கண்டு திடுக்கிட்டு எழுந்து நின்று யாரு நீ வீட்டுக்குள் வந்து நிக்கிற என அவனிடம் எகிறி கொண்டு சென்றவளிடம்...

அவன் பொறுமையாக மேடம் கொஞ்சம் பொறுமையா இருங்க நா சொல்லுறத கேளுங்க ...

நீ சொல்லுறத நா ஏன் கேட்கனும் என்ன வீட்டுல இருக்க பொருளை திருட புது டெக்னிக்கா வீடுக்கு வந்து பேசுற மாதிரி பேசி ஆட்டய போடலாம்னு பாக்குறியா என அவள் காட்டு கத்து கத்தியதில் பொறுமையை இழந்தவன் ஏய் என சப்தமிட அதில் தன்னாள் வாயை மூடி கொண்டவளை பார்த்து..

ம்ம் குட் என்ன கொஞ்சம் பேச விடுங்க அப்பறம் கத்துங்க என கூறியவன் தன்னை பற்றியும் மற்ற சில விஷயங்களையும் தெளிவாக விளக்கி கூறி பயப்பிடாதிங்க என கூற

அஞ்சனா தான் அந்த முகம் அறியா ஆடவன் கூறிய செய்தியில் ஆடி போய் நின்று இருந்தாள்...அவள் காதுகளால் கேட்ட ஒவ்வொரு விஷயங்களையும் சுத்தமாக நம்ப முடியவில்லை அதற்காக நம்பாமல் இருக்கவும் முடியவில்லை...

அவன் கூறியதை கேட்டு இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் பேவென அவனையே பார்க்க அவனோ நா வரேன் என சென்று விட்டு இருந்தான்...

அவன் சொல்லிவிட்டு சென்ற விஷயங்கள் அவளை அச்சுறுத்தினாலும் தன் உடன் பிறவா தங்கை இப்போது பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற என்னமே அவளை சற்று நிம்மதி கொண்டு ஆஸ்வாசப்படுத்தியது...

வந்து இரு நாட்களே ஆனாலும் தன்னுடன் கதை அளந்து பின்னாடியே குழந்தைப் போல் சுற்றி திரிந்தவளை காணாது திருப்பியும் அந்த பத்துக்கு பத்து வீட்டில் தனித்து விடப்பட்டாள் அஞ்சனா...

**************
இன்னும் தன் ஆசை கோட்டையை பன்மடங்கு பெரியதாக தன் மனதில் வடிவமைத்து கொண்டு இருந்தான் செல்வா...ஏற்கனவே அது சரிந்தது தெரியாமல்...

இந்த டீலிங்கில் அவனுக்கு வரும் பணத்தை என்னி குதூகலத்து இருந்தவன் சில விஷயங்களை கவனிக்காமல் சென்றது தான் அதர்ஷனின்‌ வெற்றியோ...

பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும் என்ற பழமொழிக்கு சரியான எடுத்து காட்டு இவன் என்பதில் ஐயம் இல்லாது போனது..

இவன் ஹால் சோபாவில் அமர்ந்து கனவு கோட்டையை பலமாக கட்டி வெள்ளையடித்து கொண்டு இருந்தபோது....லெடிஸ் க்ளப்புக்கு அப்போதுதான் சென்று விட்டு வந்த அவன் தாய் நீலிமா என்ன அந்த அதர்ஷனை சறுச்சுட்ட போல என வன்மமாக வினவ...

கிட்டதட்ட மாம் இனி அவன அடிக்கிறது மட்டும் தான் வேலை இந்த வேலை முடியட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு என சிரிக்க.... கூடவே அந்த தாய் வேடத்தில் இருந்த நரியும் சிரிப்பது போல் ஓலம் இட்டது அதன் கண்ணில் தான் எத்தனை வெறிசெல்லும்

தொடரும்.....​

 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
518
150
43
Dindugal
ஸூப்பர் சிஸ்,
ஃபான்ட் சைஸ் பெருசு பண்ணி போடுங்க சிஸ்
 
  • Like
Reactions: Brindha Murugan